என் மலர்
ஆரோக்கியம்
எக்ஸ்-ரே பரிசோதனைக்கு நேரம், காலம் எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். முடிந்தவரை எக்ஸ்-ரே எடுக்கப்படும் உடல் பகுதியில் ஆடைகளை களைந்துவிட வேண்டும்.
மருத்துவப் பரிசோதனைகள் வரிசையில் எக்ஸ் கதிர்களின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான திருப்புமுனை. ஜெர்மனி விஞ்ஞானி ரான்ட்ஜென் இக்கதிர்களை எதேச்சையாகத்தான் கண்டுபிடித்தார். மின்காந்த கதிர்களுக்கு படியும் தன்மை இருப்பதால், இவற்றை ஒரு திட ஊடகத்தில் படியவைக்க முயன்றார்.
ஒரு சமயம் போட்டோ தகட்டின் மீது கைவிரல்களை வைத்திருந்த தன் மனைவியின் கை மீது இந்தக் கதிர்களைச் செலுத்தினார். அப்போது, அந்தத் தகட்டில் அவருடைய மனைவியின் கைவிரல் எலும்புகளும் அவர் அணிந்திருந்த மோதிரமும் தெரிந்தன. இதிலிருந்து எலும்பு போன்ற கடினமான பொருட்களின் வழியே எக்ஸ் கதிர்கள் ஊடுருவுவது இல்லை, உறிஞ்சப்படுகின்றன என்பது புலனாயிற்று. இதன் பலனால் இந்தப் பொருட்களின் பிம்பங்கள் போட்டோ தகட்டில் நிழல்களாக விழுகின்றன என்பதும், அதேவேளையில் மெல்லிய திசுக்களின் வழியே இவை ஊடுருவிச் சென்றுவிடுவதால், இத்திசுக்கள் போட்டோ தகட்டில் தெரிவதில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இந்த அறிவியல்தான் எக்ஸ்ரே பரிசோதனைக்கு அடிப்படை ஆனது.
எக்ஸ்ரே எடுப்பதற்குச் சாதாரண எக்ஸ்ரே, டிஜிட்டல் எக்ஸ்ரே எனப் பல்வேறு எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எக்ஸ் கதிர்களை உருவாக்கித் தரும் கருவிதான் அடிப்படையானது. இதிலிருந்துதான் பொத்தானை அழுத்தியதும் எக்ஸ் கதிர்கள் வெளிப்படுகின்றன. பயனாளியை நிற்கவைத்தோ, படுக்கவைத்தோ எக்ஸ்ரே எடுப்பது நடைமுறை.
முதலில் எந்த உறுப்புக்கு எந்த நிலையிலிருந்து எக்ஸ்ரே எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்து கொள்கிறார்கள். பிறகு, அவருடைய உடல் பகுதிக்கு எவ்வளவு எக்ஸ் கதிர்கள் தேவை என்பதையும் கணக்கிட்டு கொள்கிறார்கள். பின்னர் அதே அளவுக்கு இந்தக் கதிர்களை ஒரு குழாய் மூலம் செலுத்துகிறார்கள். அதற்கு முன் பயனாளியின் எதிர்ப்புறம் எக்ஸ் கதிர்களைப் படியச்செய்யும் தட்டு பொருத்தப்படும். அதற்குள் எக்ஸ்ரே பிலிம் இருக்கும். செலுத்தப்படுகிற எக்ஸ் கதிர்கள் பயனாளியின் உடலுக்குள் புகுந்து பிலிமில் படியும்.
அந்த பிலிமை வெளியில் எடுத்து போட்டோ பிலிமை கழுவுவதுபோல் இரு வேறுபட்ட வேதி கரைசல்களில் கழுவுகிறார்கள். அதைக் காய வைத்தபின் பார்த்தால், அதில் உடல் பகுதிகள் தெரியும். மருத்துவருக்கு இயல்பான எக்ஸ்ரேயில் உடல் பகுதிகள் எப்படி இருக்கும் என்பது தெரியுமல்லவா? அந்த மருத்துவ அறிவின் அடிப்படையில், எக்ஸ்ரே படத்தில் தெரிகிற உடல் பகுதிகளின் அசாதாரண வடிவமைப்பை ஒப்பிட்டுப் பார்த்து நோயைக் கணிக்கிறார்கள்.
எக்ஸ்ரே பரிசோதனைக்கு நேரம், காலம் எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். முடிந்தவரை எக்ஸ்ரே எடுக்கப்படும் உடல் பகுதியில் ஆடைகளை களைந்துவிட வேண்டும். மோதிரம், வளையல், கழுத்து நகைகள், கைக்கெடிகாரம், ஊக்கு, பொத்தான், கண்ணாடி போன்றவற்றை கழற்றிவிட வேண்டும். காசு, சாவி, ஏ.டி.எம். கார்டு, உலோகப் பொருட்கள் போன்றவற்றை வெளியில் எடுத்துவிட வேண்டும். நெஞ்சுப் பகுதியை எக்ஸ்ரே எடுக்கும்போது மட்டும் பயனாளி மூச்சை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டு, எக்ஸ்ரே எடுப்பவர் சொல்லும்வரை மூச்சை வெளியில் விடாமல் அடக்கிக்கொள்ள வேண்டும்.

வெள்ளை சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்து, வாரம் மூன்று முறை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.
வெப்பத்தின் காரணமாக புற ஊதாக்கதிர் வீச்சுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்களின் உதடுகள் பொலிவிழந்து நிறம் மாறத்தொடங்கும். ஒருசில சமையல் பொருட்களை பயன்படுத்தியே உதடுகளை இயல்பான நிறத்திற்கு கொண்டுவந்துவிடலாம். உதடுகளில் உள்ள இறந்த செல்களை அப்புறப்படுத்துவதற்கு வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தலாம். வெள்ளை சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்து, வாரம் மூன்று முறை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.
உதட்டில் படர்ந்திருக்கும் கருமையை போக்குவதில் தேனுக்கும் முக்கிய பங்களிப்பு இருக்கிறது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு தினமும் உதட்டில் தேன் தடவிவரலாம். சில வாரங்களிலேயே நல்ல பலன் கிடைக்கும். உதடும் மிருதுவாகி விடும். எலுமிச்சை சாறையும் உதடுகளில் தடவியும் மசாஜ் செய்து வரலாம். அது உதட்டு கருமையை விரட்டி அடிக்கும் தன்மை கொண்டது.
எலுமிச்சை சாறை இரவில் சிறிது நேரம் உதட்டில் தடவி மசாஜ் செய்துவிட்டு நீரில் கழுவி விட வேண்டும். பீட்ரூட்டை சாறு எடுத்தும் உதட்டில் தடவி வரலாம். அடிக்கடி அதனை தடவி வந்தால் கருமை நிறம் மறையத்தொடங்கிவிடும். ஐஸ் கட்டிகளையும் பயன்படுத்தலாம்.
உதடு வறட்சி, உதடு வெடிப்பு போன்ற பிரச்சினைக்கு ஐஸ்கட்டிகள் நிவாரணம் தரும். அவை உதட்டில் ஈரப்பதத்தை தக்கவைத்து உதடு பொலிவுக்கு வித்திடும். ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி பழங்களை மசித்து அதனுடன் தேன் மற்றும் கற்றாழை ஜூஸ் சேர்த்து உதட்டில் தடவிவிட்டு, ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஆலிவ் ஆயிலும் உதட்டு பொலிவுக்கு உதவும்.

பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.
தேவையானவை:
வறுத்த பச்சை பயறு - ஒரு கப்,
பொடித்த வெல்லம் - முக்கால் கப்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 10,
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வறுத்த பச்சை பயறை போட்டு தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அத்துடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் உதிர்த்து வைக்கவும்.
அடி கனமான வாணலியில் வெல்லத்தூளைப் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
வெல்லம் நன்றாகக் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
வெல்லக்கரைசலை வடிகட்டி, மீண்டும் வாணலியில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். ஒரு கம்பி பாகு பதம் வந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள பச்சை பயறு மாவு சேர்த்துக் கிளறவும்.
மாவு, பாகோடு சேர்ந்து, நன்றாகக் கெட்டியானவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.
நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை இதனுடன் கலந்தால்... சத்தான, சுவையான பச்சை பயறு புட்டு ரெடி.

குடும்பத்தில் இருக்கும்போது தங்கள் தேவைக்கான செலவை கேட்டுப் பெற முடியாமலும், கேட்டும் கிடைக்காமலும் வாழும் பெண்கள் அதிகம்.
பொறுப்பான இல்லத்தரசியாக வீட்டின் வரவு செலவுத் திட்டங்களை நீங்கள் தயார் செய்திருப்பீர்கள். சொந்த வீடு மற்றும் இ.எம்.ஐ., வீட்டுக்குத் தேவையான பொருட்கள், புதிய வாகனம் வாங்கலாமா? பிள்ளைகளின் கல்விச் செலவு போன்றவை அனைத்தும் உங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும். ஆனால் பட்ஜெட்டில் உங்கள் தேவைக்கென சிறு தொகையையாவது ஒதுக்கியிருக்கிறீர்களா?
வேலைக்குச் செல்லும் பெண் என்றால் உங்களால் ஒரு தொகையை கேட்டுப் பெற முடியலாம். ஆனால் இல்லத்தரசியாக இருப்பவர்களுக்கு ஒரு தொகையை செலவுக்காக ஒதுக்கினால் பல குடும்பங்களில் பூகம்பங்கள் வெடிக்கும். ஆனால் பெண்ணுக்கென்று அவசியமான செலவுகள் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட கணவன்மார்கள் வெகுசிலரே. உங்களுக்கான அவசிய செலவை கணவரிடம் கேட்டுப்பெறுவதும், அதற்கான செலவை பட்ஜெட்டில் சேர்ப்பதும் உங்கள் உரிமையும், கடமையுமாகும்.
டெல்லி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது உங்கள் நினைவில் இருக்கலாம். ‘பிரிந்து வாழும் மனைவிக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.3500 வழங்க முடியாது’ என்று கணவர் ஒருவர் முறையீடு செய்தபோது, அவரது வழக்கை தள்ளுபடி செய்து ‘அந்தத் தொகை குறைவானதுதான், கண்டிப்பாக அதை வழங்கியாக வேண்டும்’ என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கணவரை பிரிந்து வாழும் பெண்கள் கூட, ஜீவனாம்சமாக தங்கள் உரிமையை கேட்டுப் பெற முடியும். ஆனால் குடும்பத்தில் இருக்கும்போது தங்கள் தேவைக்கான செலவை கேட்டுப் பெற முடியாமலும், கேட்டும் கிடைக்காமலும் வாழும் பெண்கள் அதிகம்.
வீட்டில் இல்லத்தரசியாக இருக்கும் பெண்களுக்கு என்ன செலவு வரப்போகிறது? என்று ஆண்கள் மேலோட்டமாக கேள்வி கேட்டுவிடுவது உண்டு. அது ஆடம்பர செலவு என்று கணவர் வீட்டாரும் குறைகூற வாய்ப்பு உண்டு.

ஆனால் பெண்களுக்கேயான பிரச்சினைகள் நிறைய உள்ளன. பருவகால பிரச்சினைகள், நோய்கள், மாதவிடாய் கால சிக்கல்கள், உடல் எடை தொந்தரவு, பிரத்யேக உணவுகளுக்கான தேவை, சரும பிரச்சினை, பிள்ளைப் பேறுக்காக காத்திருந்தால் அதற்கான சிறப்பு கவனிப்புக்கான செலவுகள், வேலைக்குச் சென்று வந்தால் பயணச் செலவு, உடைகளை பராமரிப்பதற்கான செலவு, திடீர் விருந்தினரை உபசரிப்பதற்கான அவசர கையிருப்பு என பெண்களுக்கான செலவுகள் நீண்டு கொண்டே செல்லும். மேலும், வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தாலோ, மகள்கள் பெரியவர்களாக இருந்தாலோ இந்தச் செலவு இன்னும் இரட்டிப்பாகும். வேலைக்குச் செல்லும் பெண்களால்தான், தங்களுக்கு பணம் தேவை என்பதை வற்புறுத்தி பெற முடிகிறது. மற்றவர்கள் போராடி பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை.
சராசரி மாத சம்பளம் பெறுபவர்கள் வீட்டில்தான் இந்த நிலைமை என்பதில்லை. ஆண்கள் அதிகம் சம்பாதிக்கும் வீடுகளில் கூட பெண்ணின் செலவை உதாசீனப் படுத்துவது உண்டு. “வீட்டிலேயே சாப்பாடு கிடைக்கிறது, வெளியே கூட்டிச் சென்று வருகிறோம். இதற்குமேல் உங்களுக்கு என்ன தனிச் செலவு?” என்று கேள்வி எழுப்புவது வாடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் பெண்களின் செலவுப் பட்டியலை பொறுமையாக கேட்கும் எண்ணம் கூட இருக்காது. அதற்குள் கடிந்து கொண்டே “நிறைய காசை வீணாக்காதே” என்றுகூறி சொற்ப தொகையை நீட்டி, பெண்களின் வாயை அடைத்துவிடுவார்கள். ஆனால் தேவைக்கு அதிகமாக காசு கொடுக்காத அவர்கள், மாதக் கடைசியில், கையிருப்பு காலியானதும் மனைவிகளை தாஜா செய்து, “ஏதாவது மிச்சம்பிடிச்சு வச்சிருக்கியா?” என்று கேட்பதுதான் வேடிக்கை.
நிச்சயம் வீட்டுப் பட்ஜெட்டில் பெண்களுக்குத் தனியாக ஒரு தொகை ஒதுக்கப்பட வேண்டும். அதை கணவருக்கு விளக்க வேண்டியது அவசியம். வீட்டின் சாப்பாட்டு செலவு, வாடகை, வாகனங்களுக்கான பராமரிப்பு, வீட்டிற்கான இ.எம்.ஐ., பிள்ளைகளின் படிப்புச் செலவு, பயணச் செலவு என எல்லாவற்றையும் பட்டியலிடுவதுபோல, கணவருக்கான செலவுத் தொகையாக கொஞ்சம் ஒதுக்குவதுபோல உங்களுக்கும், உங்கள் பெண் குழந்தைகளுக்கும் கொஞ்சம் தொகையை ஒதுக்குங்கள். குறைந்தபட்சம் ஆடம்பர அலங்காரச் செலவுக்கு இல்லாவிட்டாலும், அடிப்படைத் தேவைகளுக்காவது கண்டிப்பாக நிதி ஒதுக்குங்கள். வருவாயில் குறைந்தது 10 சதவீதத்தை அதற்காக ஒதுக்கலாம். செலவுக்கு மட்டுமல்ல, சேமிப்பிற்கும் மாதந்தோறும் பணம் ஒதுக்குங்கள்.

நெருங்கிய உறவு திருமணங்களையும் தவிர்க்க வேண்டும். நெருங்கிய சொந்தத்தில் முடிக்கப்படும் திருமணத்தினால் ஏற்படும் நோய்கள் என்னென்ன என்று அறிந்து கொள்ளலாம்.
அண்மை காலமாக நிறைய விவாகரத்துகள் ஏற்படுகின்றன. அதுவும் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படையாகக் கூறாமல், உண்மையை மறைத்து திருமணம் நடத்தி வைத்தால் விவாகரத்து ஏற்படத்தான் செய்யும்.
திருமணத்துக்கு முன்பாக மதம், சாதி, உட்பிரிவு, குடும்ப கவுரவம், வயது, படிப்பு, வேலை, சம்பளம், நிறம், அழகு, உயரம் என பலவற்றையும் பார்க்கிறார்கள். இவற்றில் சில சரியில்லை என்றால் நிராகரிக்கிறார்கள். அதேபோல மணமகன், மணமகளின் உடல்நல, மனநலப் பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படுமா? என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, தேவையற்ற சிக்கல்களை தடுக்கும். இதுபற்றி நேரடியாகப் பேசிவிட்டால் பிரச்சினை இல்லை.
உறவு விட்டுப்போகக் கூடாது, சொத்து போகக் கூடாது என்று நடத்தப்படும் நெருங்கிய உறவு திருமணங்களையும் தவிர்க்க வேண்டும். நெருங்கிய சொந்தத்தில் முடிக்கப்படும் திருமணத்தினால் ஏற்படும் நோய்கள் என்னென்ன தெரியுமா?
தலசீமியா, சிஸ்டிக் பைப்ரோஸிஸ், டவுன் சிண்ட்ரோம், பெருமூளை வாதம் (சிபி), காதுகேளாமை, பார்வைக் குறைபாடு போன்றவை முக்கியமானவை. இந்தப் பாதிப்பு உள்ள குடும்பத்தினர் ஆரம்பத்திலேயே மரபணு பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். அதைத் தேவையற்ற ஒன்றாக பார்க்க வேண்டியதில்லை.
இப்படிப் பல்வேறு காரணங்களுக்காக திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம். இன்றைக்கு இது விநோதமாகவும் அதிசயமாகவும் தெரியலாம். ஆனால், ஆரோக்கியமான குடும்பம் உருவாவதற்கும், விவாகரத்தை தடுப்பதற்கும், வருங்காலச் சந்ததியினரை பிறவி நோய்களிலிருந்து காப்பதற்கும் திருமணத்துக்கு முந்தைய மருத்துவ பரிசோதனைகள் பெரிதும் உதவும், என்கிறார்கள், மருத்துவம் மற்றும் சட்டத்துறை வல்லுனர்கள்.

குழந்தையின்மை பிரச்சனைக்கு தற்போது பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்ப்படி சரியான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
குழந்தையின்மை பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனையாக உருமாறி வருகிறது. வாழ்க்கைமுறை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளில் இதுவும் ஒன்று. ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமும் தகுந்த சிகிக்சைகளின் மூலமும் குழந்தையின்மைக்கு தீர்வு காணலாம்.
பரபரப்பான மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால் பெண்களுக்கு ஹார்மோன்கள் சீரற்று சுரக்க ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகி ஓழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. கருமுட்டை வளர்ச்சி பாதிக்கப்படுவதால் கருவுறுதல் நிகழ்வது சிரமாகிறது. தைராய்டு சுரப்பி சரியாக இயங்கவில்லை என்றாலும் பெண்களின் கருமுட்டை வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள் சரியாக சுரக்காது.
உடல்பருமன் அதிகமான உடல் எடை, ஒழுங்கற்ற உணவுமுறை, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை போன்ற காரணங்களும் கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்தும். மது அருந்துதல் புகை பிடித்தல் பழக்கம் இருந்தாலும் குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும்.
குழந்தையின்மை பிரச்சனைக்கு தற்போது பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்ப்படி சரியான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
அன்றாக வாழ்வில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதாலும், குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
தினமும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளில் குறைந்தது இரண்டு வகைப்பழங்கள், இரண்டு வகை காய்கள், ஒரு வகை கீரை, தேவையான அளவு புரதம், வாரம் இரண்டு முறை அசைவ உணவு என உணவு முறையை மாற்றி அமைக்க வேண்டும். தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
தினசரி ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி, மெல்லோட்டம், யோகா, மிதிவண்டி பயிற்சி, நீச்சல் பயிற்சி என ஏதேனும் ஒரு பயிற்சியை செய்யலாம். இதன் மூலம் உடல் எடை குறையும். ஹார்மோன்கள் சீராக சுரக்க ஆரம்பிக்கும்.
ஒரு நாளுக்கு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்த தூக்கம் அவசியமானது. இது மனதை அமைதியாகவும், உடலை தளர்வாகவும் வைக்க உதவும்.
சீரற்ற ஹார்மோன் சுரப்பை ஏற்படுத்துவதில் மன அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. தியான பயிற்சி மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.

எளிமையான முறையில் செலவே இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே வளையல் ஸ்டாண்ட் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பழைய செய்தித்தாள் - 1
கத்திக்கோல் - 1
தண்ணீர் புகாத பசை - 1
அட்டை உருளை - 1
கத்தி - 1
நீளமான குச்சிகள் - தேவைக்கேற்ப
செய்முறை
1. செய்தித்தாளை கத்திரித்து ஒரு தாளை மட்டும் தனியாக எடுக்கவும்.
2. அதை நான்கு பகுதியாக அழுத்தி மடிக்கவும்.
3. நான்கு துண்டுகளையும் தனித்தனியாக வெட்டிக்கொள்ளவும்..
4. வெட்டிய துண்டுத்தாளின் ஒரு ஓரத்தில் படத்தில் காட்டியவாறு ஒரு நீளமாக குச்சியை வைத்து சுருட்டவும். சுருட்டும் போது இடையிடையே சிறிது பசை தடவவும்.
5. குச்சியுடன் சேர்த்து சுருட்டிய பின்பு குச்சியை வெளியே எடுத்து விடவும்.
6. இவ்வாறு தேவைக்கேற்ப செய்தித்தாள் குழல்களை சுருட்டி வைத்து கொள்ளவும்.
7. சுருடடி வைத்திருக்கும் செய்தித்தாளை குழல்களை அட்டை உருளையின் அடிப்பகுதியில் படத்தில் காட்டியுள்ளவாறு சுற்றிக்கொள்ளவும்.
8. சுற்றும் போது பசைத்தடவவும்
9. தொடர்ந்து 4 செய்தித்தாள் குழல்களை உருளையின் அடியில் ஒட்டவும்.
10 அட்டை உருளையின் தேவையான இடங்களில் துளை இடுவதற்காக பென்சிலால் குறித்து கொள்ளவும்.
11. குறித்துக்கொண்ட இடத்தில் துளையிட்டு வெட்டிக்கொள்ளவும். பின்பு நீளவாக்கில் சுருட்டிய 5 செய்தித்தாள் குழல்களை ஒன்றாக சேர்த்து ஒட்டவும். அதன் அடியில் தண்ணீர் புகாத பசையை தடவவும்.
12. பசைத்தடவிய செய்தித்தாள் குழல்களை அட்டை உருளையில் ஏற்படுத்திய துளையில் படத்தில் காட்டியுள்ளவாறு சொருகி வெளியே வராதவாறு பசைக்கொண்டு நன்றாக ஒட்டவும்.
13. அட்டை உருளையில் உள்ள எல்லா துளைகளிலும் மேற்கூறிபடியே பின்பற்றவும்.
14. பின்பு அட்டை உருளை முழுவதும் சிறுசிறு செய்தித்தாள் குழல்களை சுருட்டி ஒட்டி விடவும். இதற்கு பதிலாக வண்ணக் காகிதங்களையும் பயன்படுத்தலாம்.
இப்பொழுது உங்களுக்கான வளையல் ஸ்டாண்ட் தயார்.

பெட்ரூமில் செய்யக் கூடிய இந்த மாற்றமும் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை அளிக்கலாம். இரவு நிம்மதியான தூக்கத்திற்கு இந்த 10 வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.
இரவுத் தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. ஆனால் அது இன்றைக்கு பலருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு விஷயமாகிவிட்டது. இதற்கு வாழ்க்கை முறை ஒரு காரணமாக இருந்தாலும், நம் சுற்றுச்சூழலும் ஒரு விதத்தில் காரணமாக இருக்கலாம். எனவே நீங்கள் தூங்கும் படுக்கை அறையை சற்று சுத்தமாக வைத்துக்கொள்ள முயலுங்கள். இந்த மாற்றமும் உங்களுக்கு தூக்கத்தை அளிக்கலாம். எனவே எப்படி படுக்கை அறையை அலங்கரிப்பது என்று பார்க்கலாம்.
1. மாலை பொழுதில் இருந்தே நீல விளக்குகளின் பயன்பாட்டை குறைத்து விடுங்கள்
2. பகலில்அறைக்குள் வெளிச்சம் பிரகாசமாக இருப்பதை உறுதிப்படுத்திடுங்கள்.
3. மாலைக்கு பிறகு காபின் கலந்த பானங்களை பருகாதீர்கள்.
4. ஒழுங்கற்ற தூக்கம் அல்லது பகல் நேர தூக்கத்தை தவிருங்கள்.
5, இரவில் மது அருந்தும் பழக்கத்தை தவிருங்கள்
6. இரவில் காலதாமதமாக சாப்பிடாதீர்கள்.
7. உடல் குளிர்ச்சியடையும் வரை நன்றாக குளியுங்கள்.
8. படுக்கை, தலையாணை, மெத்தை போன்றவை தூங்குவதற்கு சவுகரியமாக இருக்க வேண்டும்.
9. தினமும தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். ஆனால் தூங்குவதற்கு முன்பு உடற்பயிற்சியை தவிருங்கள்.
10. தூங்க செல்வதற்கு முன்பு தண்ணீர் உள்பட திரவ உணவுகளை சாப்பிடாதீர்கள்.

சோளத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள், உடல் எடையை அதிகரிப்பதற்கு பதிலாக, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். நாள் முழுவதும் உடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்க வேண்டுமானால், ஸ்நாக்ஸாக சோளத்தை சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்
கார்ன் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 1/2 கப்
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
பிரட் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை
ப.மிளகாய், குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
கார்னை கொஞ்சம் கரகரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
அரைத்த கார்னை ஒரு பாத்திரத்தில் போடு அதனுடன் உருளைகிளைக்கிழங்கு, வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் இஞ்சி - பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, உப்பு, பிரட் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின், கையில் எண்ணெய் தடவி எடுத்து வைத்துள்ள மாவு கலவையினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்துள்ள கட்லெட்களை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான சத்தான கார்ன் உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.

90 முறை தோற்றாலும், ஏதேனும் ஒருமுறை நிச்சயமாக வெற்றி இலக்கை அடைய முடியும் என்ற துணிச்சலான நம்பிக்கை உங்களிடம் இருக்கும் வரை, நீங்கள் பயணம் செய்யும் பாதையில் முட்கள் நிறைந்திருந்தாலும் பொருட்படுத்தாமல் முன்னேறுவீர்கள்.
வெற்றிக்கான படிக்கல்தான் தோல்வி. தோல்வியின்போது கிடைக்கும் அனுபவமும், படிப்பினையும் நம்மை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும். ஒவ்வொருவரும் தோல்வியை தாழ்வு மனப்பான்மையுடன் அணுகுவதில்தான் சிக்கல் ஏற்படுகிறது. அதை அனுபவமாக கொண்டு செயல்பட்டால் வெற்றி வாசலில் காத்திருக்கும்.
தினந்தோறும் மனதில் என்னால் முடியும் என்ற மந்திரச்சொல்லை சொல்லிக்கொண்டே இருங்கள். நம்பிக்கை ஒரு நாளும் பொய்யாக்காது. தன்னம்பிக்கை மிகுந்தவராக உங்களை வெளிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் எண்ணம் போல் எல்லாம் அமையும்.
பலம் மற்றும் பலவீனத்தை சீர் தூக்கி பார்த்து ஒரு செயலில் இறங்க வேண்டும். இறங்கிய பின்னர் என்னால் முடியுமா? என்ற சந்தேகம் எழக்கூடாது.
நீங்கள் எந்த வார்த்தையை அடிக்கடி சொல்கிறீர்களோ? அது ஒரு நாள் உண்மையாகும். எனவே வெற்றி அடைவேன் எனும் வார்த்தையை அடிக்கடி கூறிகொண்டு இருங்கள். அவநம்பிக்கை தாழ்வு மனப்பான்மை இரண்டையும் மனதில் இருந்து தூக்கி எறியுங்கள். நம்மை விட அறிவு குறைந்த ஜீவராசிகள் கூட அவற்றின் சக்திக்கு ஏற்ப திறமையாக செயல்படுகின்றன.
சுற்றியுள்ளவர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். ஏளனப்படுத்தலாம். நம்மால் முடியாதா? இவர்கள் சொல்வது போல் அனைத்தும் நடந்து விடுமோ? என மனதுக்குள் எழும் எதிர்மறை எண்ண திரைகளை நிறுத்த வேண்டும். எதையும் நேர்மறையாக நினைக்கும் போது தான் உங்களது ஆற்றல் மிகப்பெரிதாக உருவெடுத்து வெற்றி இலக்கை அடைவதற்கான வழியை காட்டும். நம்பிக்கை விதையை விதைத்து விடாமுயற்சியுடன் அதை வளர்த்து வாருங்கள்.
சூழ்நிலைகளை நிதானத்தோடு பகுத்தாய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் போது தான் இலக்குகளை எந்த தங்கு தடையுமின்றி அடைய முடியும்.
எப்படியும் வாழலாம் என்ற வரைமுறையற்ற வாழ்க்கையை விடுத்து இப்படித்தான் வாழ வேண்டும்என்ற குறிக்கோளோடு வாழும் போது தான் வெற்றி என்பது நம்மை நெருங்கி வரும்.
யாரையும் உங்களை விட குறைவாக எடைபோடக்கூடாது. அது உங்கள் வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் வரை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். 90 முறை தோற்றாலும், ஏதேனும் ஒருமுறை நிச்சயமாக வெற்றி இலக்கை அடைய முடியும் என்ற துணிச்சலான நம்பிக்கை உங்களிடம் இருக்கும் வரை, நீங்கள் பயணம் செய்யும் பாதையில் முட்கள் நிறைந்திருந்தாலும் பொருட்படுத்தாமல் முன்னேறுவீர்கள்.
மனதில் நேர்மறை எண்ணங்களை கொண்டு செயல்படுங்கள். நினைத்தது நிறைவேறும். எண்ணம் போல்தான் வாழ்க்கை.

குழந்தைகள் வாசிப்பதிலோ, எழுதுவதிலோ ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால் ஒளிரும் திரைகள் முன்பு சிறிது நேரத்தை செலவிட வைக்கலாம் என்கிறது ஆய்வு.
வாசிப்பு மற்றும் எழுதும் பழக்கத்தை குழந்தைகள் ஆர்வமாக தொடர்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் சில பெற்றோர் போதிய அக்கறை காண்பிப்பதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தாங்களாகவே வாசிக்க, எழுத பழகிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு ஆரம்பகட்டத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.
இல்லாவிட்டால் பின்னாளில் அறிவாற்றல் குறைபாட்டை ஏற்படுத்திவிடும். குழந்தைகள் வாசிப்பதிலோ, எழுதுவதிலோ ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால் ஒளிரும் திரைகள் முன்பு சிறிது நேரத்தை செலவிட வைக்கலாம் என்கிறது ஆய்வு.
டி.வி. முன்பு நேரத்தை செலவிடும்போது கவனம் முழுவதும் ஓரிடத்தில் குவிக்கப்படும். அதன் மூலம் குழந்தைகளின் அறிவாற்றல் திறன் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது குறித்து ஆய்வை மேற்கொண்ட வெஸ்டர்ன் நார்வே பல்கலைக்கழக பேராசிரியர் கோரன் சோடர்லண்ட் குறிப்பிடுகையில், ‘‘வாசிப்பதில் தடுமாற்றம், எழுதுவதில் சிரமம் கொண்ட குழந்தைகளை பள்ளியிலோ, வீட்டிலோ டி.வி. திரை முன்பு அமர செய்யலாம்.
அதில் வெளிப்படும் காட்சியும், சத்தமும் அவர்களின் பிரச்சினையை சரிப்படுத்த உதவும், அறிவாற்றல் திறனை அதிகரிக்கக்கூடும் என்பதை கண்டறிந்திருக்கிறோம். எனினும் கூடுதல் ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது’’ என்கிறார்.

குழந்தைகள் வளர தொடங்கியதும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். அவற்றுள் பார்வை திறனுக்கு வலு சேர்க்கும் உணவுகளும் இடம்பெற வேண்டும்.
கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் கேம்கள் விளையாடுவதுதான் பெரும்பாலான குழந்தைகளின் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. அவற்றுடன் அதிக நேரம் செலவிடுவது உடல் நலன், மன நலனுக்கு மட்டுமல்ல கண்களுக்கும் கேடானவை.
சிறுவயது முதலே கண்பார்வை திறனை சரியான முறையில் மேம்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தையின் பார்வை திறனை பெற்றோர் கண்காணித்து வருவது அவசியமானது. அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்பத்தில் சிறிய அளவில் தென்படும் பார்வை குறைபாட்டு பிரச்சினைக்கு கண்ணாடி அணிய கூச்சப்பட்டு மங்கலான பார்வையை நிரந்தரமாக பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
குழந்தை பிறந்ததுமே அதன் பார்வை திறனை மேம்படுத்துவதற்கான விஷயங்களை செய்ய தொடங்கிவிட வேண்டும். ஒரு போதும் குழந்தையின் அறைக்குள் பிரகாசமான விளக்குகளை தொங்கவிடக்கூடாது. குழந்தையின் முகத்திற்கு நேராகவும் விளக்குகளை எரியவிடக்கூடாது. செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்களை அதன் அருகில் வைத்து பயன்படுத்தக்கூடாது. 5 முதல் 8 மாத குழந்தை களாக இருந்தால் தொட்டிலில் பொம்மை மற்றும் கண்கவர் உருவங்களை தொங்கவிடலாம். அது குழந்தையின் பார்வை திறனை மேம்படுத்த உதவும். அவ்வப்போது வெளி இடங்களுக்கும் குழந்தையை தூக்கி செல்ல வேண்டும். அப்போது தன்னை சுற்றி இருக்கும் பொருட்களை கூர்ந்து கவனிப்பார்கள். அதுவும் அவர்களின் பார்வை திறனை மெருகேற்ற உதவும்.
குழந்தைகள் வளர தொடங்கியதும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். அவற்றுள் பார்வை திறனுக்கு வலு சேர்க்கும் உணவுகளும் இடம்பெற வேண்டும். பச்சை காய்கறிகளை அதிகமாக கொடுக்க வேண்டும். அதில் இருக்கும் ஜியாசாந்தின், லூடின், துத்தநாகம் போன்றவை கண்புரை அபாயத்தை குறைக்க உதவும். முட்டையின் மஞ்சள் கருவிலும் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன. சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மிகுதியாக காணப்படுகிறது. அவையும் கண்புரையில் இருந்து பாதுகாக்கும். பாதாம் பருப்பில் வைட்டமின் இ நிறைந்திருக்கிறது. உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளில் பாதி தேவையை இதுவே பூர்த்தி செய்துவிடும். அதனால் பாதாமை தவறாமல் சாப்பிட்டு வருவது நல்லது.