search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தையின்மை
    X
    குழந்தையின்மை

    குழந்தையின்மை - காரணங்களும் தீர்வும்

    குழந்தையின்மை பிரச்சனைக்கு தற்போது பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்ப்படி சரியான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
    குழந்தையின்மை பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனையாக உருமாறி வருகிறது. வாழ்க்கைமுறை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளில் இதுவும் ஒன்று. ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமும் தகுந்த சிகிக்சைகளின் மூலமும் குழந்தையின்மைக்கு தீர்வு காணலாம்.

    பரபரப்பான மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால் பெண்களுக்கு ஹார்மோன்கள் சீரற்று சுரக்க ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகி ஓழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. கருமுட்டை வளர்ச்சி பாதிக்கப்படுவதால் கருவுறுதல் நிகழ்வது சிரமாகிறது. தைராய்டு சுரப்பி சரியாக இயங்கவில்லை என்றாலும் பெண்களின் கருமுட்டை வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள் சரியாக சுரக்காது.

    உடல்பருமன் அதிகமான உடல் எடை, ஒழுங்கற்ற உணவுமுறை, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை போன்ற காரணங்களும் கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்தும். மது அருந்துதல் புகை பிடித்தல் பழக்கம் இருந்தாலும் குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும்.

    குழந்தையின்மை பிரச்சனைக்கு தற்போது பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்ப்படி சரியான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

    அன்றாக வாழ்வில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதாலும், குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

    தினமும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளில் குறைந்தது இரண்டு வகைப்பழங்கள், இரண்டு வகை காய்கள், ஒரு வகை கீரை, தேவையான அளவு புரதம், வாரம் இரண்டு முறை அசைவ உணவு என உணவு முறையை மாற்றி அமைக்க வேண்டும். தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

    தினசரி ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி, மெல்லோட்டம், யோகா, மிதிவண்டி பயிற்சி, நீச்சல் பயிற்சி என ஏதேனும் ஒரு பயிற்சியை செய்யலாம். இதன் மூலம் உடல் எடை குறையும். ஹார்மோன்கள் சீராக சுரக்க ஆரம்பிக்கும்.

    ஒரு நாளுக்கு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்த தூக்கம் அவசியமானது. இது மனதை அமைதியாகவும், உடலை தளர்வாகவும் வைக்க உதவும்.

    சீரற்ற ஹார்மோன் சுரப்பை ஏற்படுத்துவதில் மன அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. தியான பயிற்சி மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
    Next Story
    ×