search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    செலவே இல்லாமல் வளையல் ஸ்டாண்ட் செய்யலாம் வாங்க..
    X
    செலவே இல்லாமல் வளையல் ஸ்டாண்ட் செய்யலாம் வாங்க..

    செலவே இல்லாமல் வளையல் ஸ்டாண்ட் செய்யலாம் வாங்க..

    எளிமையான முறையில் செலவே இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே வளையல் ஸ்டாண்ட் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பழைய செய்தித்தாள் - 1
    கத்திக்கோல் - 1
    தண்ணீர் புகாத பசை - 1
    அட்டை உருளை - 1
    கத்தி - 1
    நீளமான குச்சிகள் - தேவைக்கேற்ப

    செய்முறை

    1. செய்தித்தாளை கத்திரித்து ஒரு தாளை மட்டும் தனியாக எடுக்கவும்.

    2. அதை நான்கு பகுதியாக அழுத்தி மடிக்கவும்.

    3. நான்கு துண்டுகளையும் தனித்தனியாக வெட்டிக்கொள்ளவும்..

    4. வெட்டிய துண்டுத்தாளின் ஒரு ஓரத்தில் படத்தில் காட்டியவாறு ஒரு நீளமாக குச்சியை வைத்து சுருட்டவும். சுருட்டும் போது இடையிடையே சிறிது பசை தடவவும்.

    5. குச்சியுடன் சேர்த்து சுருட்டிய பின்பு குச்சியை வெளியே எடுத்து விடவும்.

    6. இவ்வாறு தேவைக்கேற்ப செய்தித்தாள் குழல்களை சுருட்டி வைத்து கொள்ளவும்.

    7. சுருடடி வைத்திருக்கும் செய்தித்தாளை குழல்களை அட்டை உருளையின் அடிப்பகுதியில் படத்தில் காட்டியுள்ளவாறு சுற்றிக்கொள்ளவும்.

    8. சுற்றும் போது பசைத்தடவவும்

    9. தொடர்ந்து 4 செய்தித்தாள் குழல்களை உருளையின் அடியில் ஒட்டவும்.

    10 அட்டை உருளையின் தேவையான இடங்களில் துளை இடுவதற்காக பென்சிலால் குறித்து கொள்ளவும்.

    11. குறித்துக்கொண்ட இடத்தில் துளையிட்டு வெட்டிக்கொள்ளவும். பின்பு நீளவாக்கில் சுருட்டிய 5 செய்தித்தாள் குழல்களை ஒன்றாக சேர்த்து ஒட்டவும். அதன் அடியில் தண்ணீர் புகாத பசையை தடவவும்.

    12. பசைத்தடவிய செய்தித்தாள் குழல்களை அட்டை உருளையில் ஏற்படுத்திய துளையில் படத்தில் காட்டியுள்ளவாறு சொருகி வெளியே வராதவாறு பசைக்கொண்டு நன்றாக ஒட்டவும்.

    13. அட்டை உருளையில் உள்ள எல்லா துளைகளிலும் மேற்கூறிபடியே பின்பற்றவும்.

    14. பின்பு அட்டை உருளை முழுவதும் சிறுசிறு செய்தித்தாள் குழல்களை சுருட்டி ஒட்டி விடவும். இதற்கு பதிலாக வண்ணக் காகிதங்களையும் பயன்படுத்தலாம்.

    இப்பொழுது உங்களுக்கான வளையல் ஸ்டாண்ட் தயார்.
    Next Story
    ×