என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கீரி, பாம்பு போல தம்பதிகள் சிலர் முட்டி மோதிக்கொள்கிறார்கள். அவர்களை நாட்டாமைகளாக மாறிய மாமனார்-மாமியார் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    குடும்பம் என்பது ஒரு தேர் போன்றது. இந்த தேரில் ஒரு சக்கரம் கணவனாவும், மற்றொரு சக்கரம் மனைவியாகவும் இருக்கிறார்கள். கணவன்-மனைவி என்ற 2 சக்கரங்களும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்தால் மட்டுமே வாழ்க்கை சக்கரம் லட்சிய பாதையை அடையும். 2 சக்கரங்களும் வேறு வேறு திசை நோக்கி பயணித்தால் தேர் இருக்கும் இடத்தில் இருந்து இம்மி அளவு கூட நகர முடியாது. மாறாக கவிழும் சூழ்நிலை தான் ஏற்படும். இந்தநிலையில் நின்று கொண்டுதான் இப்போது சிலர் தவிக்கிறார்கள்.

    கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். எந்திரமயமான வாழ்க்கை சூழலில் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு எப்போதும் அவசரம், அவசரமாக வேலைக்கு கிளம்புபவர்கள் ஊரடங்கு தங்களுக்கு கிடைத்த வரமாக கருதி, குடும்பத்தினரோடு உற்சாகமாக உறவாடி வருகிறார்கள். ஆனால் சிலரோ ஊரடங்கு எப்போது முடியும், வீட்டு சிறையில் இருந்து பீனிக்ஸ் பறவைப்போல எப்போது உயிர்த்தெழலாம் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

    ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஆரம்பக்கட்டத்தில் சில தம்பதியினர் திருமணமான முதல் சில ஆண்டுகளில் இருப்பதைப்போன்று இறக்கை கட்டி பறந்தார்கள். சமையல் வேலை, துணி துவைத்தல், வீடுகளை சுத்தம் செய்தல் என பல்வேறு வேலைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர். ஆனாலும் இந்த மகிழ்ச்சி ஊரடங்கின் முதல் பாதியிலேயே சிலருக்கு முடிந்தது. ஆனால் வேறு சிலருக்கு ஊரடங்கின் 2-ம் பாதியில் நிறைவடைந்துவிட்டது.

    சேர்த்து வைத்திருந்த பணம் கரைய, கரைய பாசமும் கரைந்துவிட்டது. வெயில் பட்ட பின்னர் கரையும் ஐஸ்கிரீம் போல உருகிவிட்டது. ஒரு வகையான சலிப்பு காரணமாக கீரியும், பாம்பும் போல எடுத்ததற்கெல்லாம் இப்போது சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். முகம் பார்த்து பேசுவதை தவிர்த்து, ஒதுங்கி செல்கிறார்கள்.

    நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, அவர்களுக்கு எல்லை இல்லாத துன்பத்தை வாரி இறைத்திருக்கிறது. சில வீடுகளில் குடும்ப தலைவிகளும், குடும்ப தலைவர்களும் முட்டி, மோதி வருகிறார்கள். பாதிக்கப்படும் பெண்கள், கணவன் மீது போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்து வருகிறார்கள். இதனுடைய விளைவாகத்தான் பெண்களை தாக்குபவர்கள் மீது உரிய புகார் கொடுத்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல மனைவிகளால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், சொந்த வீட்டிலேயே உணவுக்காக கை ஏந்தும் நிலை இருப்பதாகவும் கூறி பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். இதேபோல புகார் தெரிவிக்கும் படலம் இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது. அதாவது சில பெண்கள், போலீசாரிடமும், தங்களுடைய தாய் வீட்டிலும், மாமனார், மாமியாரிடமும் கணவன் மீது புகார்களை அள்ளி தெளித்து வருகிறார்கள்.

    இதேபோல சில ஆண்கள் தங்களுடைய மனைவியின் பெற்றோரிடமும் புகார்களை கூறி வருகிறார்கள். பரஸ்பரம் தெரிவிக்கும் இந்த புகார்களை போலீசார் தீர்த்து வைத்து வருகிறார்கள். இதேபோல தம்பதியர்களின் மாமனார்-மாமியார்களும் புகார்களை சமரசம் செய்து, தீர்ப்பு வழங்கும் நாட்டாமைகளை மாறிவருகிறார்கள். தப்பு செய்தவர்களை கண்டித்தும் வருகிறார்கள். இருந்தபோதிலும் சில தம்பதிகளிடம் இன்னும் புகைச்சல் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இதனால் ஊரடங்கு நிறைவடைந்ததும், தொடர்ந்து மன உளைச்சலில் இருக்கும் சில தம்பதியினருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கவேண்டும் என்று மனநல டாக்டர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஊரடங்கு தினக்கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தில் மட்டுமின்றி, குடும்ப உறவுக்கும் சில தருணங்களில் உலை வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.
    இயற்கை உணவு முறையினையும், இயற்கையோடு இணைந்த பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பவர்கள் மூலம் உடல்நலத்தை பாதுகாக்க முடியும்.
    மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவு. மக்கள் உண்ணும் உணவும் உணவு பழக்க வழக்கமே அவர்களது உடல்நலத்தை தீர்மானிக்கின்றன. இயற்கை உணவு முறையினையும், இயற்கையோடு இணைந்த பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பவர்கள் மூலம் உடல்நலத்தை பாதுகாக்க முடியும்.

    உணவு உடலுக்கு வலிமையைத் தருவது, வளர்ச்சியளிப்பது. உடலையும் உயிரையும் வளர்க்கும் அமுதமாகும். பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பது உலகறிந்த உண்மை. எனவே தான் பசியின் கொடுமையைப் பசிப்பிணி என்னும் பாவி என்றது மணிமேகலைக் காப்பியம். இப்பிணிக்கு மருந்து உணவே. ஆதலால் தான் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனப் புறநானூறும் மணிமேகலையும் கூறுகின்றன.

    திருவள்ளுவர்

    திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். உண்ட உணவு செரித்த பின்னரே மீண்டும் உண்ண வேண்டுமென தமிழ் மருத்துவம் கூறுகிறது. முன் உண்டது செரித்தது கண்டு உண்பார்க்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது.

    “மருந்தென வேண்டாமாம் யார் கைக்கு அருந்தியது

    அற்றது போற்றி உணின்“

    என்பது திருவள்ளுவர் வாக்கு. அன்றாடச் சமையலில் சேர்ப்பனவற்றுள் மஞ்சள் நெஞ்சிலுள்ள சளியை நீக்கும். கொத்தமல்லி பித்தத்தை போக்கும், ஜீரகம் வயிற்று சூட்டைத் தணிக்கும், மிளகு தொண்டைக் கட்டைத் தொலைக்கும். பூண்டு வலியை அகற்றி வயிற்றுப் பெருமலை நீக்கிப் பசியை மிகுக்கும். வெங்காயம் குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும். இஞ்சி பித்தத்தை ஒடுக்கும். தேங்காய் நீர் கோவையை நீக்கும். கறிவேப்பிலை உணவு விருப்பை உண்டாக்கும். நல்லெண்ணெய் கண் குளிர்ச்சியும், அறிவுத் தெளிவையும் உண்டாக்கும். சீரகம், பூண்டு கலந்த நீர் சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை அதிகரிக்கும்.

    தவிர்க்க வேண்டியவை

    நோய்க்கு முதல் காரணம் உப்பு. இதனை குறைவாக சேர்த்தல் வேண்டும். ஊறுகாய், அப்பளம், கருவாடு, வறுத்த உருளைக்கிழங்கு சீவல், வாழைக்காய் சீவல், புளித்த மோர், கொழுப்பு நிறைந்த இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, இனிப்புக் கட்டி ஆகியவற்றை நீக்குதல் வேண்டும். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை ஒதுக்குதல் நல்லது.

    உணவை விரைவாக விழுங்கக் கூடாது. நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும். அப்போதுதான் வாயில் உள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும். உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும் அது செரிக்காது. குடலும் தன் செரிமான ஆற்றலை இழந்துவிடும். காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து சாப்பிட வேண்டும்.

    தண்ணீரும் மருந்து

    “ நீரின்றி அமையாது உலகு“ என்பது திருவள்ளுவர் கருத்து. எல்லா வகையான உணவு பொருள்களும் விளைவதற்கு காரணமாக அமைவது நீர். உண்ட உணவு குருதியுடன் கலப்பதற்கு குருதி தூய்மை அடைவதற்கும் உடலிலுள்ள கழிவுப்பொருள்கள் வெளியேறுவதற்கும் நீர் இன்றியமையாதது. மனிதன் நாளொன்றுக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    உடல் நலனை விரும்புவோர் முறையான உணவு பழக்கத்தை மேற்கொண்டால் நெடுநாள் நலமாக வாழலாம். உண்பதற்காக வாழாமல் வாழ்வதற்காக உண்டால் மருந்து என்பதே உடலுக்குத் தேவை இல்லை.
    இரத்தம் ஏன் சிவப்பாக உள்ளது தெரியுமா? இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு இரத்தத்திலுள்ள பொருள்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
    ஒரு மனிதனின் உடலில் சுமார் 3 முதல் 4 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. திறப்பில்லாத தமனி, சிரை தந்துகிகளின் வழியாக இரத்தம் உடல் முழுவதும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது. உலகிலுள்ள எல்லாப் பகுதிகளிலும் வாழும் ஆண்கள், பெண்களின் உடலில் ஓடுவது சிவப்பு நிற ரத்தமே.

    இரத்தத்தின் நிறத்திற்கும் தோலின் நிறத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இரத்தம் ஏன் சிவப்பாக உள்ளது தெரியுமா? இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு இரத்தத்திலுள்ள பொருள்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரத்தத்தில் பிளாஸ்மா, இரத்த வெள்ளைஅணுக்கள், இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில் பாதியளவுக்கு மேல் பிளாஸ்மா நிரம்பி உள்ளது. இது மஞ்சள் நிறமுள்ள தடித்த திரவமாகும். இதில் புரதம், ஆன்டிபாடி, பைபிரி னோஜின், மாவுப் பொருள், கொழுப்பு, உப்புகள் முதலானவை உள்ளன.

    உடல் வளர புரதமும், விஷக்கிருமிகளை கொல்லவும், அவற்றின் விஷ நீரின் வீரியத்தைக் குறைக்க ஆன்டிபாடியும் வெட்டுக் காயத்திலிருந்து வரும் இரத்தத்தை நிறுத்த பைபிரினோஜினும் உதவுகின்றன. இரத்த வெள்ளைஅணுக்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவும், பருமனில் பெரியதாகவும் உள்ளன. இவை சுமார் 0.001 மி.மீ. பருமன் உள்ளன. 700 இரத்த சிவப்பணுவிற்கு ஒரு வெள்ளையணு வீதம் உள்ளன. இவை உடலில் நுழைந்து நோய் உண்டாக்கும் கிருமிகளை அழித்து உடலை நோய்த் தாக்குதலில் இருந்து காப்பாற்றி பாதுகாக்கின்றன.

    இரத்த சிவப்பணு ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இவை தட்டுப் போன்று வட்டமாக இருபுறமும் குழியாக உட்கரு இன்றி உள்ளன. இவை சுமார் 0.008 மி.மீ. பருமனுள்ளவை. பிராண வாயுவை நுரையீரல்களிலிருந்து உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனுள் சிவப்பு நிற ஹீமோகுளோபின் துகள்கள் நிறைந்துள்ளன. இவை சிவப்பாக இருப்பதுடன் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன. இத்துகள்கள் இரும்பையும் புரதத்தையும் கொண்டுள்ளன.

    பெண்ணின் ஒரு கியூபிக் மி.மீ. ரத்தத்தில் சுமார் 4.5 மில்லியன் இரத்தச் சிவப்பணுக்கள் உள்ளன. இரத்த சிவப்பணுக்கள் குறைந்தால் அனீமியா நோய் தோன்ற வாய்ப்புள்ளது. சிவப்பணு சுமார் 4 மாதங்கள் ஆயுள் கொண்டவை. இவை எலும்பு மஜ்ஜையில் தோன்றி மண்ணீரலில் அழிகின்றன.

    இரத்தத்தட்டுகள் மிகச்சிறியவை 0.002 மி.மீ. பருமனுள்ளவை. ஒரு கியூபிக் மி.மீ. இரத்தத்தில் சுமார் ஒன்றரை லட்சம் முதல் 4 லட்சம் இரத்தத் தட்டுக்கள் உள்ளன. இரத்தம் உறைதலுக்கு இத்தட்டுக்கள் முக்கியமானவை. இரத்த தானத்தால் உடல் புத்துணர்வு பெறுகிறது. மேலும் மாரடைப்பு உள்பட பல பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.
    தொடக்கத்தில் கொண்டாட்டமாகவும், பொழுதுபோக்காகவும் இருந்த ‘டிக்-டாக்’, இப்போது விபரீதமாக உருவெடுத்து நிற்பதுதான் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
    இளம் தலைமுறையை முழுமையாக வளைத்துப் போட்டிருக்கிறது ‘டிக்-டாக்’ செயலி.

    சமூக ஊடகங்களை திறந்தாலே, வரிசை கட்டி நிற்கின்றன, வீடியோக்கள். ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் விதவிதமாக வீடியோக்களை பதிவு செய்கிறார்கள். தொடக்கத்தில் கொண்டாட்டமாகவும், பொழுதுபோக்காகவும் இருந்த ‘டிக்-டாக்’, இப்போது விபரீதமாக உருவெடுத்து நிற்பதுதான் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. பயனுள்ள தகவல்களையும், மற்றவர்களுடன் சொல்லி சிரித்து, மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயங்களை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால், பலர் பொது வெளியில் பகிரக்கூடாத பல விஷயங்களை வெளியிடுகிறார்கள். காரணம், மற்றவர்களின் பார்வை தன் மீது இருக்கவேண்டும் என்ற எண்ணம்தான்.

    பாராட்டுகளுக்கு அடிமைப்பட்டு கிடப்பதால் தங்களது எல்லை எது என்பதை மறந்து விடுகின்றனர். குறிப்பாக சில பெண்கள் காலப்போக்கில் கணவன், பிள்ளை என குடும்பத்தை மறந்து டிக்-டாக் மட்டுமே கதி என கிடப்பது வேதனையானது..

    டிக்-டாக்கில் வீடியோ போடுவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? சினிமா, தொலைக்காட்சி துறைகளில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு இது பயனளிக்கலாம். அந்த தேடலே இல்லாத பெண்கள் ஏன் வீடியோக்கள் பதிவிடவேண்டும்?

    தற்காலிக சந்தோஷத்துக்காக, முகம் தெரியாதவர்களின் பாராட்டுக்கு ஆசைப்பட்டு அதை செய்கிறார்கள் என்பதுதான் வேதனை. தன் மீதான கவனத்தை தக்க வைப்பதற்காக சில நேரங்களில் வரம்பை மீறிவிடுகிறார்கள் இது போன்ற செயலிகளை பயன்படுத்தி வீடியோக்கள் பதிவிடும் போது உடனடி அங்கீகாரம் கிடைக்கிறது. பிறர் நம்மை அங்கீகரிக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்பது மனிதர்களிடையே பொதுவாக காணப்படும் ஓர் எதிர்பார்ப்புதான். தங்களது திறமைகளை வெளி உலகுக்கு காட்ட இது ஒரு நல்ல தளமாக இருக்கிறது. அதேநேரம், ஒருமுறை பாராட்டு கிடைத்தால் அதை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் உண்டாகிவிடும். அதனால் அன்றாடப்பணிகளில் எந்த தடையும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் எந்த பிரச்னையும் ஏற்படாது. ஆனால், சிலர் அதற்கு அடிமையாகி முழுநேரத்தையும் அதிலேயே செலவழிக்கின்றனர்.

    திருமணமான பெண்கள் இது போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தக் கூடாது என்பது சரியல்ல. தம்பதிகளிடையே போதிய புரிதல் இருந்தால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. தங்களுக்கான எல்லைகளை இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுக்கலாம். எல்லா விஷயத்திலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. எனவே சரியாகக் கையாண்டால் எந்த பிரச்சினையும் இல்லை.
    தலை முடி உதிர்வு, வழுக்கை, சொட்டை, இளநரை, செம்பட்டை புழுவெட்டு என்று பலவகைகளில் நமக்கு தொல்லைதரும். இந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் கைவசம் தீர்வுகள் இயற்றை வைத்திய முறையில் இருக்கின்றன.
    ஆண், பெண் இருவருக்கும் தலைமுடி (hair fall) பிரச்சனைகள் வேற பலவிதமாக நமக்கு தொல்லையை தருகின்றது. தலை முடி உதிர்வு, வழுக்கை, சொட்டை, இளநரை, செம்பட்டை புழுவெட்டு என்று பலவகைகளில் நமக்கு தொல்லைதரும். இந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் கைவசம் தீர்வுகள் இயற்றை வைத்திய முறையில் இருக்கின்றன.

    * வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

    * கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

    * வெந்தயம்  பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

    * கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, தலைக்கு தடவி வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் முடி நன்றாக வளரும்.

    * நெல்லிக்கனியை தினமும் உணவில் சேர்த்து வர இளநரை பிரச்சனை சரியாகும்.

    * ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

    * அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து, கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

    * மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

    * தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் நரை மாறிவிடும்.

    * கறிவேப்பிலையை நன்றாக அரைத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தடவி வர முடி நன்றாக வளரும். கேரட் மற்றும் எலுமிச்சை பழசாறு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி தடவி வந்தாலும் முடி நன்றாக வளரும்.

    * நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
    முளைக்கட்டிய தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முளைக்கட்டிய தானியங்கள், காய்கறிகள் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முளைக்கட்டிய கொள்ளு, பச்சை பயிறு, கொண்டைக்கடலை,பட்டாணி -    2 கப்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி
    லெட்யூஸ் -  சிறியது ஒன்று
    கொத்தமல்லி தழை -     சிறிதளவு
    வெள்ளரிக்காய் - 1
    மாங்காய் - 1
    கேரட் - 2
    எலுமிச்சம்பழம் - 1
    உப்பு -    தேவைக்கேற்ப

    முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட்

    செய்முறை

    முளைக்கட்டிய தானியங்களை குக்கரில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, மாங்காய், வெள்ளரிக்காய் லெட்யூஸ்,கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்

    ஒரு பாத்திரத்த்ல வேகவைத்த தானியங்களுடன் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து கிளறவும்.

    அத்துடன் உப்பு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்

    சூப்பரான முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட்  ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கர்ப்பிணிகள் பப்பாளி பழங்களைத் தொடவே கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் இன்று பல கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழத்தில் நிறைந்த ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு அதை எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
    கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பம் தரிக்கப் போகும் பெண்களின் வாழ்வில் இந்த விசயம் கண்டிப்பாக நடந்திருக்கும். ‘எதை வேண்டுமானால் சாப்பிடு பப்பாளி பழத்தை மட்டும் சாப்பிட்டு விடாதே! குழந்தைக்கு ஆகவே ஆகாது.’ என்ற பயமுறுத்தும் வார்த்தைகளைக் கர்ப்பிணிப் பெண்கள் கடந்திருக்காமல் இருக்கவே முடியாது.

    இதற்கு என்ன காரணம்? ஏன் பப்பாளி பழங்களைப் பற்றி இப்படி ஒரு செய்தி பரவத் தொடங்கியது என்று பார்க்கலாமா? இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பப்பாளி பழங்களைச் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்று நம்பப்பட்டது தான்.

    கர்ப்பிணிகள் பப்பாளி பழங்களைத் தொடவே கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் இன்று பல கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழத்தில் நிறைந்த ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு அதை எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். கனிந்த பப்பாளி பழங்கள் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட உகந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. நன்கு கனியாத பப்பாளி பழங்கள் சாப்பிட ஏற்றதில்லை. இந்த வகை காய் வெட்டான பழங்கள் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    கண்மூடித்தனமாக நாம் பப்பாளி பழங்களைக் கர்ப்பத்திற்கு எதிரானவையாகக் கருதக்கூடாது. உண்மையில் நன்கு கனிந்த பப்பாளி பழங்களைக் கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் பல நல்ல பலன்களை அடையலாம். அதே சமயம் சற்றுப் பச்சை தன்மையோடு சரியாகக் கனியாத பதத்தில் இருக்கும் பப்பாளி பழங்களை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளவே கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    கனிந்த பப்பாளி பழங்களில் விட்டமின் ஏ, விட்டமின் பி, கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவைகள்.

    உண்மையில் நம் நாட்டில் குழந்தை இறப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணமே ஊட்டச்சத்துக் குறைபாடுதான்! அந்த வகையில் கனிந்த பப்பாளி பழங்கள் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளைத் தருகின்றன. அதனால் பழைய கட்டுப்பாடுகளையே நம்பிக் கொண்டு நல்ல சத்தான உணவைத் தவிர்ப்பது உகந்ததல்ல.

    ச்சை தன்மை கொண்ட பப்பாளிகளைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் சரியாகப் பழுக்காத பப்பாளிகளில் பெப்சின் காணப்படும். இந்தப் பெப்சின் கர்ப்பிணிப் பெண்களுக்கு பொதுவாக உணவின் மீது ஏற்படும் ஒவ்வாமையை மேலும் அதிகரிக்கச் செய்து விடும். இதனால் அவர்களுக்கு வாந்தி ஏற்படலாம். அதனால் சரியாகப் பழுக்காத பப்பாளிகளைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டாம்.

    இந்த பெப்சின் கர்ப்பப்பையின் தோலை தாக்கும் தன்மை கொண்டது. அதனால் கருப்பையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விடும்.குழந்தைக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். இந்த பெப்சின் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் தன்மை கொண்டது. அதிக அளவு பெப்சியில் உடலில் சேரும் பொழுது குழந்தையின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
    ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் பாடம் கற்றுத்தருகின்றனர்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

    1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மட்டும் நடைபெற வேண்டி உள்ளது. அதேபோல பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு தேர்வும் நடைபெறாமல் உள்ளது.

    இந்த நிலையில் சில தனியார் பள்ளி நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்த தொடங்கி உள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டையிலும் சில தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்து வருகின்றனர்.

    புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வருகிற கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை தற்போது நடத்த தொடங்கி உள்ளனர். இதற்காக தனியாக ஒரு செயலியை உருவாக்கி உள்ளனர். அந்த செயலியை மாணவ-மாணவிகள் தங்களது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர்.

    ஆன்லைன் மூலம் அந்த செயலி வழியாக தினமும் ஆசிரியர் ஒருவர் வீட்டில் இருந்தபடி பாடம் நடத்துகிறார். ஒரே நேரத்தில் 60 முதல் 70 மாணவர்கள் வீட்டில் இருந்தபடி பாடம் கற்றுக்கொள்கின்றனர். மாணவர்களின் செல்போன் திரையில் ஆசிரியரின் முகம் தெரிகிறது. மேலும் அவர் கூறுவதை மாணவர்கள் கேட்டு குறிப்பெடுத்துக்கொள்கின்றனர். மேலும் சந்தேகங்கள் இருந்தால் மாணவ-மாணவிகள் கேள்வி கேட்கின்ற னர். தினமும் ஒரு மணி நேரம் இந்த வகுப்பு நடைபெறுவதாக பள்ளி வட்டாரத்தில் தெரிவித்தனர்.

    பள்ளிகள் திறக்கப்படும் தேதி எப்போது? என தெரியாத நிலையில் தனியார் பள்ளிகள் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது போன்ற செயலியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறையை தொடங்கி விட்டனர். புதுக்கோட்டை மட்டுமின்றி, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தருகின்றனர்.

    அரசு பள்ளிகளில் உள்ள நிலை குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் தொடர்பு கொண்டு செல்போனில் அவ்வப்போது பேசி வருகின்றனர். மாணவர்களை தினமும் படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தி வருகின்றனர். பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையதளம் தனியாக தொடங்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் தற்போது வரத்தொடங்கி உள்ளன. இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை’ என்றார்.
    ரூபாய் நோட்டுகள், முகக் கவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரசின் ஆயுள் குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
    கொரோனா வைரஸ் பீதி காரணமாக, பலரும் பிறரிடம் இருந்து ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கே தயங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், ரூபாய் நோட்டுகள், முகக் கவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரசின் ஆயுள் குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

    மக்கள் தற்போது அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் டிஷ்யூ பேப்பர், முகக் கவசம், ரூபாய் நோட்டுகள் ஆகியவை உள்ளன.

    இவற்றில், முகக் கவசத்தில் கொரோனா வைரஸ் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர், பிளாஸ்டிக் பொருட்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழும் என ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிரபல மருத்துவ இதழான ‘தி லான்செட்’டில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

    அதேசமயம், வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் அல்லது சோப்பை உபயோகித்து கொரோனா வைரசை கொன்றுவிடலாம் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    அச்சடிக்கப்பட்ட காகிதம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் மூன்று மணி நேரத்துக்கும் குறைவாகவே உயிர்வாழ முடியும் என்றும், மரப்பலகை, துணிகளில் இரண்டு நாட்கள் வரை உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாகவும் லியோ பூன் லிட்மன், மாலிக் பெரிரிஸ் என்ற இரு விஞ்ஞானிகள் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    அழுவதற்கு தடை போடுவதால், வலியை போக்கும் கண்ணீரின் வாசலை அடைத்துவிடுகின்றனர். அழாமல் இருந்தால் சோகம் மனதுக்குள்ளேயே தேங்கிவிடும்.
    பெரும்பாலும் ஆண்கள் அழக்கூடாது என்று விலக்கு உண்டு. பெண்களும் அவ்வப்போது அழுகையில் இருந்து விலக்கப்படுகிறார்கள். அவர்களிடம் அழுவது பலவீனம் என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. இது தவறான கருத்து. அழுவதற்கு தடை போடுவதால், வலியை போக்கும் கண்ணீரின் வாசலை அடைத்துவிடுகின்றனர். அழாமல் இருந்தால் சோகம் மனதுக்குள்ளேயே தேங்கிவிடும்.

    நமது அணுகுமுறை வீட்டிற்குள் ஒரு மாதிரியும், வெளியே வேறு மாதிரியும் இருக்கும். பொது இடங்களில் நிற்கும்போது அழுகையை முடிந்த அளவு தவிர்த்துவிடலாம். ஆனால் வீட்டிற்குள் அழும் சுதந்திரத்தை பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும்.

    சோகத்தை மனதிற்குள் போட்டு பூட்டிவைக்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கக்கூடாது. அது வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கிவிடும். அழுது தீர்த்து அந்த சோகத்தை வெளியேற்றிவிட்டால், உடலுக்கு புது உற்சாகம் கிடைத்துவிடும்.

    பெண்கள் படிக்கவும், வேலை பார்க்கவும் வீட்டைவிட்டு வெளியே வந்துவிடுகிறார்கள். அவர்களது வாழ்க்கையில் ஒரு பகுதி ஹாஸ்டலில் கழிந்து போகிறது. வீடு என்றால் அம்மாவின் தோளில் சாய்ந்து அழுது அதை தீர்த்துவிடலாம். ஆனால் படிக்கும் இடத்திலோ, பணியாற்றும் இடத்திலோ சோகத்தை வெளிப்படுத்த முடியாமல் அடக்கிவைத்து, மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிடுகிறார்கள். சமூகத்தில் மன அழுத்தம் அதிகரித்துப்போவதற்கு காரணம், அவர்கள் அழுவதற்கு மறந்து போனதுதான்.

    பள்ளிக்கு- கல்லூரிக்கு செல்லும் மகள்களாக இருந்தாலும், அவர்களிடம் மனந்திறந்து பேச வேண்டும். அதன் மூலம் கவலைக்குரிய விஷயங்கள் இருந்தால் சொல்லிவிடுவார்கள். மகள்கள் மன இறுக்கத்தோடு இருக்கும்போது, அவர்களை தோள் சாய்த்து கூந்தலை கோதிவிட்டு, “எது நடந்தாலும் நான் உனக்கு ஆதரவாக இருப்பேன். எதற்கும் கவலைப் படாதே!” என்று கூறினால், அடுத்த நிமிடமே அழுது தீர்த்து மனதில் இருக்கும் அனைத்தையும் சொல்லி முடித்துவிடுவார்கள். மகளின் மனதில் இருக்கும் பாரம் இறங்கிவிடும். தாயின் மனதுக்கும் நிம்மதி கிடைத்துவிடும்.
    முகத்தில் பருக்களை அகற்றிய பின் அதன் தழும்புகள் போகாமல் அப்படியே இருக்கும். அவை கரும்புள்ளிகளாக மாறி முக அழகைக் கெடுத்துவிடும். இதை போக்க இந்த வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள்.
    முகத்தில் பருக்களை அகற்றிய பின் அதன் தழும்புகள் போகாமல் அப்படியே இருக்கும். அவை கரும்புள்ளிகளாக மாறி முக அழகைக் கெடுத்துவிடும். இதை போக்க இந்த வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள்.

    ரோஸ் வாட்டர் : முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு ரோஸ் வாட்டரை பஞ்சில் முக்கி அதை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

    தக்காளி : தக்காளி சாறை பஞ்சில் முக்கி பருக்கள் உள்ள இடங்களில் தேய்க்கலாம்.

    எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறு பிழிந்து பஞ்சில் முக்கி முகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் தேய்க்கலாம்.

    விட்டமின் E oil : விட்டமின் E ஆயில் கேப்சியூல் மெடிக்கல் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ தழும்புகள் நீங்கும்.

    உருளைக்கிழங்கு சாறு : உருளைக்கிழங்கு சாறை பஞ்சில் முக்கி முகத்தில் தேய்க்கலாம்.
    கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி சேர்த்து செய்யும் இந்த இட்லி சத்து நிறைந்தது. இன்று இந்த இட்லியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு - 2 கப்
    கம்பு - 2 கப்
    குதிரைவாலி - 1 கப்
    உளுந்து - 1 கப்
    உப்பு - சுவைக்கேற்ப

    3 வகை சிறுதானிய இட்லி

    செய்முறை:

    கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி அரிசி மூன்றையும் நன்றாக கழுவி 6 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

    உளுந்தை தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    இரண்டையும் தனித்தனியாக அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.

    அரைத்த 2 மணிநேரத்தில் இட்லி ஊற்றலாம். சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×