search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ‘டிக்-டாக்’ தரும் வேதனை
    X
    ‘டிக்-டாக்’ தரும் வேதனை

    ‘டிக்-டாக்’ உண்டாக்கும் விபரீதம்

    தொடக்கத்தில் கொண்டாட்டமாகவும், பொழுதுபோக்காகவும் இருந்த ‘டிக்-டாக்’, இப்போது விபரீதமாக உருவெடுத்து நிற்பதுதான் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
    இளம் தலைமுறையை முழுமையாக வளைத்துப் போட்டிருக்கிறது ‘டிக்-டாக்’ செயலி.

    சமூக ஊடகங்களை திறந்தாலே, வரிசை கட்டி நிற்கின்றன, வீடியோக்கள். ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் விதவிதமாக வீடியோக்களை பதிவு செய்கிறார்கள். தொடக்கத்தில் கொண்டாட்டமாகவும், பொழுதுபோக்காகவும் இருந்த ‘டிக்-டாக்’, இப்போது விபரீதமாக உருவெடுத்து நிற்பதுதான் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. பயனுள்ள தகவல்களையும், மற்றவர்களுடன் சொல்லி சிரித்து, மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயங்களை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால், பலர் பொது வெளியில் பகிரக்கூடாத பல விஷயங்களை வெளியிடுகிறார்கள். காரணம், மற்றவர்களின் பார்வை தன் மீது இருக்கவேண்டும் என்ற எண்ணம்தான்.

    பாராட்டுகளுக்கு அடிமைப்பட்டு கிடப்பதால் தங்களது எல்லை எது என்பதை மறந்து விடுகின்றனர். குறிப்பாக சில பெண்கள் காலப்போக்கில் கணவன், பிள்ளை என குடும்பத்தை மறந்து டிக்-டாக் மட்டுமே கதி என கிடப்பது வேதனையானது..

    டிக்-டாக்கில் வீடியோ போடுவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? சினிமா, தொலைக்காட்சி துறைகளில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு இது பயனளிக்கலாம். அந்த தேடலே இல்லாத பெண்கள் ஏன் வீடியோக்கள் பதிவிடவேண்டும்?

    தற்காலிக சந்தோஷத்துக்காக, முகம் தெரியாதவர்களின் பாராட்டுக்கு ஆசைப்பட்டு அதை செய்கிறார்கள் என்பதுதான் வேதனை. தன் மீதான கவனத்தை தக்க வைப்பதற்காக சில நேரங்களில் வரம்பை மீறிவிடுகிறார்கள் இது போன்ற செயலிகளை பயன்படுத்தி வீடியோக்கள் பதிவிடும் போது உடனடி அங்கீகாரம் கிடைக்கிறது. பிறர் நம்மை அங்கீகரிக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்பது மனிதர்களிடையே பொதுவாக காணப்படும் ஓர் எதிர்பார்ப்புதான். தங்களது திறமைகளை வெளி உலகுக்கு காட்ட இது ஒரு நல்ல தளமாக இருக்கிறது. அதேநேரம், ஒருமுறை பாராட்டு கிடைத்தால் அதை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் உண்டாகிவிடும். அதனால் அன்றாடப்பணிகளில் எந்த தடையும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் எந்த பிரச்னையும் ஏற்படாது. ஆனால், சிலர் அதற்கு அடிமையாகி முழுநேரத்தையும் அதிலேயே செலவழிக்கின்றனர்.

    திருமணமான பெண்கள் இது போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தக் கூடாது என்பது சரியல்ல. தம்பதிகளிடையே போதிய புரிதல் இருந்தால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. தங்களுக்கான எல்லைகளை இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுக்கலாம். எல்லா விஷயத்திலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. எனவே சரியாகக் கையாண்டால் எந்த பிரச்சினையும் இல்லை.
    Next Story
    ×