என் மலர்
ஆரோக்கியம்
அறிவையும், புத்துணர்ச்சி தரும் புதிய சிந்தனையையும் வளர்க்கும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை இன்றைய தலைமுறையினரிடம் ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைக்கு நம் சமூகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லை. பெற்றோர் புத்தகங்களை வாசிக்கும்போது, குழந்தைகளின் ஆரோக்கியமான மனவளர்ச்சிக்கான சாத்தியங்கள் கூடுகின்றன. நாம் சாப்பிட, தூங்க நேரம் ஒதுக்குவது போலவே புத்தக வாசிப்பிற்கும் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நேரங்களில் படித்தே தீருவது என்று உறுதி எடுத்துகொள்ளுங்கள். காலையில் அன்றைய செய்தித்தாள்கள் பார்ப்பதுபோல காலை , மதியம் மற்றும் இரவு உணவு உண்ணும் நேரங்களில் படிக்க முயற்சி செய்யுங்கள். இதுவே கிட்டத்தட்ட ஒரு நாளில் ஒரு மணிநேர வாசிப்பாக ஆகிவிடும். இது ஒரு நல்ல தொடக்கமாக மட்டுமே இருக்கும். இதற்கு மேலும் நீங்கள் நேரம் ஒதுக்கலாம்.
கிட்டத்தட்ட எல்லாருக்குமே தங்கள் வாழ்க்கை, தங்கள் வேலை, தங்கள் குடும்பம் என்ற கவலைகளும் அக்கறைகளும் ஆர்வங்களும் தங்களைச் சுற்றியே அமைகின்றன. இவற்றில் எதுவுமே சமூகத்தின் தொடர்பு இல்லாமல் தனித்து இயங்குவதில்லை. ஆனால், பொதுவாக யாருமே இதை ஆழமாக உணர்வதில்லை. இதனாலேயே பல நடைமுறை சிக்கல்கள் அவரவர் வாழ்க்கையில் தோன்றுகின்றன. இப்படி தோன்றும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சரிவர கையாள வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் தங்களை மீறி, தங்களுடைய குறுகிய உலகத்தை தாண்டி பார்க்க வேண்டும். இப்படி பார்க்க உதவுவதுதான் வாசிப்பு பழக்கம். இது மிக குறுகிய நோக்கம் என்றாலும் பயனுள்ளது. ஆனால், இதைவிட முக்கியமான உந்துதல் வாசிப்புக்கு பின்னால் செயல்படுகிறது.
இலக்கியத்தை வாசிப்பது மட்டும் வாசிப்பு என்று பரவலாக மக்கள் நினைக்கிறார்கள். வாசிப்பு எந்த துறையை சார்ந்தும் இருக்கலாம். தன் தொழில் தொடர்பாக வாசிப்பதை நாம் வாசிப்பு என்று கொள்ள முடியாது. பல துறை புத்தகங்களையும் வாசிக்கும் போதுதான் ஒருவருடைய வாசிப்பு வளமானது என்று நாம் கூறலாம். இலக்கியம் ஒரு பகுதிதான். வரலாறு, பொதுமக்களுக்கான அறிவியல், வாழ்க்கை வரலாறு, அரசியல், இசை என்று வாசிப்பு பல துறைகளையும் உள்ளடக்கியிருக்கும்போதுதான் நம் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது.
ஒவ்வொரு புத்தகத்தின் மூலமும் உணர்வுகள், மொழி, பண்பாட்டு அடையாளங்கள், உலக நடப்பு என்று பல விஷயங்கள் நமக்குள் பாய்ந்த வண்ணம் இருக்கின்றன. வாசிப்பு என்பது புத்தகங்களை ஒரு முறை வாசிப்பது மட்டுமல்ல, மிக முக்கியமான புத்தகங்களை நாம் அடிக்கடி வாசிக்க வேண்டும். ஒவ்வொரு முக்கியமான புத்தகமும் நம்முடன் நெருங்கிவந்து நம் வாழ்க்கையின் கணங்களை வளமாக்க செய்வதை உணர்வது அற்புத அனுபவம்.
நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் என்பார்கள். இந்த நண்பனை உயிர் நண்பனாக ஏற்றுக்கொண்டவர்கள், புகழ் உச்சியில் அமர்ந்திருக்கிறார்கள். பலர் சாதனையாளராகவும், சிலர் புரட்சியாளராகவும் மாறியிருக்கிறார்கள். ‘அடிமைகளின் சூரியன்’ எனப் போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன், புத்தகங்கள் படித்தே உயர்ந்தவர். அவர் தச்சுத் தொழிலாளியின் மகனாக பிறந்து, புத்தக படிப்பினால் தேசம் புகழ திகழ்ந்தார். ‘ஜார்ஜ் வாஷிங்டன் வரலாறு’ என்ற புத்தகத்தை இரவல் வாங்கி படித்தவருக்கு அமெரிக்காவின் குடியரசு தலைவராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட, அதுவே அமெரிக்க வரலாறாக மாறியது. லண்டன் நூலகத்தில், இருபது ஆண்டுகள், அரிய நூல்களை படித்து ஆய்வு செய்த காரல்மார்க்ஸ், உலகின் பொதுவுடைமை தந்தையாக உயர்ந்தார்.
காஞ்சீபுரத்தில் இருந்து, முதுகலை பட்டதாரியான ஓர் இளைஞன், சென்னை நோக்கி சென்றான். முடிவில் தமிழகத்தின் முதல்வராக திரும்பினான் என்று பேரறிஞர் அண்ணாவை புகழ்வார்கள். அவர், சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள பெரும்பாலான புத்தகங்களை படித்தவர். நூலகம் திறக்கும்பொழுது உள்ளே நுழைபவர், இரவில் அது மூடப்படும்பொழுது தான் வெளியே வருவாராம். அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டபோதும், அவர் அரிதான நூல் ஒன்றை படித்து கொண்டிருந்தார்.
அந்த நூல் முழுவதையும் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையையே ஒரு நாள் ஒத்திவைக்கும்படி மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இது, வாசிப்பின் மேல் வைத்த அவரின் நேசிப்பை உணர்த்துகிறது. இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, “நான் மறைந்தபின் உடல் மீது மலர் மாலைகளை வைக்கவேண்டாம், என் மடி மீது புத்தகங்களை பரப்புங்கள்” என்று கேட்டுக் கொண்டார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விஞ்ஞானி மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள் மட்டுமல்லாது அனைத்து விதமான நூல்களையும் படிக்க ஆர்வம் காட்டியவர். இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் விதமாக பல புத்தகங்களை எழுதி இருக்கிறார்.
கல்வி அறிவை போதிக்கும் பள்ளி ஆசானுக்கு அடுத்த இடத்தில் இருப்பவை புத்தகங்கள். வாழ்க்கையில் சிகரம் தொட்ட சாதனையாளர்களின் வரலாறு மட்டும் புத்தகங்களாக பதிவாகவில்லை. அவர்கள் அந்த நிலையை எட்ட கைகொடுத்தவை புத்தகங்களாகவே இருக்கின்றன. இவ்வளவு சிறப்பு மிக்க புத்தகங்கள் சமீபகாலமாக ஒதுக்கப்படுவதாக ஒரு சர்வே கூறுகிறது. ஏனெனில் இன்றைய இளைஞர்களிடம் புத்தக வாசிப்பே குறைந்துவிட்டதாக மற்றொரு சர்வே தெரிவிக்கிறது. விரல் நுனியில் அனைத்து தகவல்களையும் சொடுக்கும் கணினி உலகம், புத்தகங்களையும் கையடக்கமாக கொண்டுவந்து விட்டதால் இப்போது அதில் தான் நிறைய பேர் வாசிக்கிறார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அறிவையும், புத்துணர்ச்சி தரும் புதிய சிந்தனையையும் வளர்க்கும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை இன்றைய தலைமுறையினரிடம் ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மணிகண்டன், 9-ம் வகுப்பு,
அரசு உயர்நிலைப்பள்ளி,
அளவிடங்கான், சிவகங்கை.

தொடர்ந்து அதிக நேரம் மின்னணுத் திரைகளை பார்த்து வருவதால், பார்வைத் திறன் குன்றுவது, தற்காலிக பார்வைக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் இன்றைய சூழலில், அவர்கள் செல்பேசி, கணினி, தொலைக்காட்சி என்று மின்னணுத் திரைகள் முன் கழிக்கும் நேரம் அதிகரித்து வருகிறது.
இதனால், இந்தத் திரைகளில் இருந்து வெளியாகும் அதிசக்தி நீல ஒளி அலைகளின் தாக்கம் கண்களில் அதிகரிக்கும் அபாயமும் கூடியிருக்கிறது.
இதனால், பார்வைத்திறன் பாதிப்பு மட்டுமின்றி, மெலடோனின் சுரப்புக் குறைவால் சீரான தூக்கத்திலும் சீர்குலைவு ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து, மன அழுத்தம், கவனக்குறைபாடு பிரச்சினை போன்றவை உண்டாகின்றன.
மருத்துவ ஆய்வாளர்களின் கருத்துப்படி, 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு பாதுகாப்பான மின்னணுத் திரை நேரம் 2 மணி நேரம்தான். ஆனால் இன்று பலரும் இதைப் போல பல மடங்கு நேரத்தை மின்னணு ஒளித்திரைகள் முன் கழிக்கின்றனர்.
அதனால், நம்மையும் அறியாமல், நாம் மின்னணுத் திரைகளை அதிக நேரம் உற்றுப் பார்க்கிறோம், கண் ஈரப்பதத்தைக் காக்கும் கண் சிமிட்டல் அளவு குறைகிறது. அதனால் கண்களில் உறுத்தலும், வலியும் ஏற்படுகின்றன. விழித்திரை பாதிப்புக்கு உள்ளாகிறது.
தொடர்ந்து அதிக நேரம் மின்னணுத் திரைகளை பார்த்து வருவதால், பார்வைத் திறன் குன்றுவது, தற்காலிக பார்வைக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
சரி, பணிக்காக அதிக நேரம் கணினித் திரையைப் பார்க்க வேண்டியிருப்பவர்கள் என்ன செய்வது?
இதோ, சில டிப்ஸ்...
கூடியமட்டும், அடிக்கடி கண் சிமிட்டுவதை கவனமாக வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அப்போதுதான் கண் வறட்சியைத் தவிர்க்க முடியும்.
20 நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வையை டிஜிட்டல் திரையில் இருந்து விலக்கி, சுமார் 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை 20 நொடிகள் பார்க்க வேண்டும்.
கணினியில் பணிபுரிவதற்கு உரிய கண்ணாடியை அணியலாம். இதைப் பயன்படுத்தும்போது, ஒளித்திரையானது நம் கண்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறைவதை உணரலாம்.
உங்கள் மின்னணுத் திரையின் வெளிச்சத்தை சரியான அளவுக்கு அமைத்துக்கொள்ளலாம். சூழல் வெளிச்சத்தை விட, நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனத்தின் வெளிச்சம் அதிகமாக இருக்கக்கூடாது.
மின்னணுத் திரைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் அதிக நேரத்தைச் செலவழிப்பது, உடல் நலத்துடன், நம் மனநலத்தையும் பாதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அது, ஒருவித பதற்றம், மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறதாம்.
ஆக, நம் உடல் நலம், மன நலம் கருதி, கணினி, செல்பேசி, தொலைக்காட்சியில் செலவழிக்கும் நேரத்தை முடிந்த அளவு குறைத்துக்கொள்வோம்.

சிலருக்கு கர்ப்பப்பையில் தீர்க்க முடியாத கோளாறுகள் இருந்துகொண்டிருக்கும். அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைவது கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் (Uterus transplantation).
“மனித இனத்தின் உற்பத்தி மையமாகவும், தாய்மையின் சின்னமாகவும் விளங்குவது, கர்ப்பப்பை! ஆனால் சில பெண்கள் கர்ப்பப்பை இல்லாமலே பிறக்கிறார்கள். சிலருக்கு கர்ப்பப்பை இருந்தாலும், முழு வளர்ச்சி பெறுவதில்லை. வேறு சிலருக்கு கர்ப்பப்பையில் தீர்க்க முடியாத கோளாறுகள் இருந்துகொண்டிருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகளை கொண்டவர்கள், திருமணமாகி கணவரோடு தாம்பத்ய உறவு வைத்துக்கொண்டிருந்தாலும் குழந்தையின்மையால் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைவது கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் (Uterus transplantation).
இதயம், ஈரல், கிட்னி போன்றவைகளை தானம் பெற்று உடலில் இணைப்பதுபோல் இப்போது கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. இது குழந்தையின்மைக்கான நவீன மருத்துவத்தில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது. ஏன்என்றால் சோதனைக்குழாயில் கருவை உருவாக்கினாலும் அது குழந்தையாக வளர கர்ப்பப்பை தேவைப்படுகிறது. கர்ப்பப்பைக்கு மாற்றாக எதுவுமே இல்லை என்பதால், கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் மருத்துவத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
கர்ப்பப்பை இல்லாதவர்கள் அல்லது முழு தகுதிக்கூடிய கர்ப்பப்பை அமைந்திருக்காதவர்களில் ஒரு பகுதியினர் வாடகைத்தாய் முறையை விரும்புகிறார்கள். அந்த பெண், தனது கர்ப்பப்பைக்கு பதிலாக, இன்னொரு பெண்ணின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுத்துக்கொள்கிறார். தனது கணவரது உயிரணு, தனது கருமுட்டை இரண்டையும் பரிசோதனை குழாய் முறையில் இணைத்து கருவாக்கி, வாடகைத்தாயின் கர்ப்பப்பைக்குள் அதை செலுத்தி, வளர்த்து பிரசவிக்கிறார்.
இந்த முறையில் பெரும்பாலானவர்கள் திருப்தியடைந்துவிடுகிறார்கள். திருப்தியடையாமல் தன் கர்ப்பப்பை மூலமே தனது குழந்தை வளரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் ‘கர்ப்பப்பை மாற்று ஆபரேஷனை’ தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்த ஆபரேஷனுக்கான ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் பல வருடங்களாக நடந்துகொண்டிருந்தன. கடந்த நூற்றாண்டின் இறுதியில்தான் இதில் நம்பிக்கையை உருவாக்கும் ஒளிக்கீற்றுகள் உருவாகின. முதலில் இந்த மாற்று ஆபரேஷனை சில பிராணிகளிடம் செய்தார்கள். அது வெற்றிகரமாக அமைந்தது.
அதை தொடர்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் போட்டிபோட்டு பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று ஆபரேஷனை செய்ய நேரடியாக களத்தில் இறங்கின. 2002-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் ஒரு பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பையை தானமாக பெற்று தேவைப்பட்ட இன்னொரு பெண்ணுக்கு பொருத்தினார்கள். புரட்சிகரமான இந்த ஆபரேஷனில் திடீர் பின்னடைவு ஒன்று 79-வது நாள் ஏற்பட்டது. இன்பெக்ஷன் மூலமான தவிர்க்க முடியாத காரணத்தால், இணைக்கப்பட்ட கர்ப்பப்பை மீண்டும் எடுத்து மாற்ற வேண்டிய நிர்பந்தம் உருவானது. அதனால் அது தோல்வி அடைந்த முயற்சியாக கருதப்பட்டது.
அந்த தோல்விக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதாவது 46 வயதான பெண்ணிடம் இருந்து எடுத்து, 26 வயதான பெண்ணுக்கு பொருத்தினார்கள். இந்த 20 வயது இடைவெளி தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது.
அடுத்து, குறைபாடுகளை களைந்து இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து கொண்ட தாய்மார்கள் அரங்கேற்றியது, சுவீடன். 2011-ல் அங்கு முதல் கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் நடந்தது. 2014-ல் மாற்று கர்ப்பப்பை மூலம் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு ஆங்காங்கே சில நாடுகள் இந்த ஆபரேஷனில் வெற்றி கண்டிருக்கின்றன. இன்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட 15 குழந்தைகள் கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் வாயிலாக பிறந்திருப்பதாக தெரியவருகிறது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கூடுமானவரை வெளியில் செல்லாமல் இருப்பதுதான் சருமத்துக்கு நாம் தருகின்ற பாதுகாப்பு.
தமிழகத்தில் பருவ நிலை மாற்றத்தால் வழக்கமாக பெய்யும் பருவ மழையும் சரியாக பெய்யவில்லை. இதனால் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் ஒரு புறம் இருந்தால் அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் சரும நோய்கள் மற்றொரு புறம் பாடுபடுத்த தொடங்கி விடுகிறது. வெயிலில் வெளியே சென்றால் உடலில் அதிக அளவு வியர்வை வெளியேறும்.
இதனால் வியர்வையில் இருந்து ஒரு விதமான துர்நாற்றம் வீசும். உடலில் வேர்க்குரு கட்டிகள் அரிப்பு அழுக்கு தேமல் போன்றவை ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் சின்னம்மை வருவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் சூரிய கதிர்கள் நேரடியாக உடல் மீது தாக்கினால் தோல்கள் கருப்பாக மாறிவிடும். வெயிலால் ஏற்படும் பாதிப்புகள் குறைய தண்ணீர் மற்றும் ஜூஸ் வகையை அதிகமாக குடிக்க வேண்டும்.
உணவில் அதிகமாக காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீன் சாப்பிடலாம். முடிந்தவரை மெல்லிய பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது. இதனால் வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்க முடியும். கோடைகாலத்தில் பெரியவர்களைவிட குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போது துணியால் மூடி அழைத்து செல்ல வேண்டும். இதனால் சூரிய வெப்பத்தின் நேரடி தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும். அதே போல வீட்டில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஆடைகளை போடக்கூடாது. சருமத்துக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் அதிக நேரம் அலைகிறவர்களுக்கு சருமம் கருப்பாகி விடுவதை கவனித்திருப்பீர்கள். இதற்கு காரணம் சூரிய கதிர்கள் அதிக வெப்பத்துடன் நேரடியாக சருமத்தை தாக்கும்போது அதிலுள்ள ‘பி’ வகை புறஊதா கதிர்கள் சருமத்தின் செல்களிலுள்ள டி.என்.ஏ.க்களை அழிக்கின்றன.
அந்த அழிவை ஈடுகட்டுவதற்காக சருமத்துக்கு கருப்பு நிறம் தருகின்ற மெலனின் நிறமிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால் சருமம் கருத்துவிடுகிறது. சருமம் தன்னைத்தானே சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக எடுத்துக்கொள்கிற தற்காப்பு நடவடிக்கை என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். சருமம் கருப்பாவதை தடுக்கக் கடுமையான வெயிலில் தொடர்ந்து 2 மணி நேஇஇரத்துக்கு மேல் அலையக் கூடாது. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கூடுமானவரை வெளியில் செல்லாமல் இருப்பதுதான் சருமத்துக்கு நாம் தருகின்ற பாதுகாப்பு.

பெர்ரி ஜூஸ் பாக்டீரியா உள்ளிட்ட நோய் தொற்றுகளை விரட்டவும் உதவும். இன்று இந்த ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் - 2 கப்
தயிர் - 1 கப்
ஸ்டாபெர்ரி பழம் - 100 கிராம்

செய்முறை
ஸ்டாபெர்ரி மற்றும் புளூபெர்ரி பழங்களை நன்றாக சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.
மிக்சியில் பாலையும், தயிரையும் ஊற்றி ஓடவிட்டு அதில் ஸ்டாபெர்ரி மற்றும் புளூபெர்ரி பழங்களை கொட்டி விழுதாக அரைத்து பருகலாம்.
இது பாக்டீரியா உள்ளிட்ட நோய் தொற்றுகளை விரட்டவும் உதவும்.
பால் - 2 கப்
தயிர் - 1 கப்
ஸ்டாபெர்ரி பழம் - 100 கிராம்
புளூபெர்ரி பழம் -100 கிராம்

செய்முறை
ஸ்டாபெர்ரி மற்றும் புளூபெர்ரி பழங்களை நன்றாக சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.
மிக்சியில் பாலையும், தயிரையும் ஊற்றி ஓடவிட்டு அதில் ஸ்டாபெர்ரி மற்றும் புளூபெர்ரி பழங்களை கொட்டி விழுதாக அரைத்து பருகலாம்.
இது பாக்டீரியா உள்ளிட்ட நோய் தொற்றுகளை விரட்டவும் உதவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆன்லைன் மூலம் கேம் விளையாடுவது, கேரம் விளையாடுவது, திரைப்படங்கள் பார்ப்பது, சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக கடந்த ஒரு மாத காலக்கட்டத்தில் பல மடங்கு கூடியுள்ளது.
ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வீட்டில் பலர் தொலைக்காட்சி பார்ப்பதிலும், ஸ்மார்ட் போன்களில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதிலும், சிலர் வீட்டிலேயே கணினியில் அலுவலக வேலைகளை பார்ப்பதிலும் நேரத்தை கழிக்கின்றனர். இதனால் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதில் ஆன்லைன் மூலம் கேம் விளையாடுவது, கேரம் விளையாடுவது, திரைப்படங்கள் பார்ப்பது, சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக கடந்த ஒரு மாத காலக்கட்டத்தில் பல மடங்கு கூடியுள்ளது.
முன்னணி செல்போன் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜி.பி., 1.5 ஜி.பி., 2 ஜி.பி. என இணைய சலுகைகளை அள்ளி வழங்கி வருகின்றன. செல்போன்களில் இருந்து கணினிக்கும் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.
இணையம் பயன்பாடு அதிகரிப்பால் அதன் வேகம் முன்பு போல் இல்லாமல் இந்த ஊரடங்கு காலத்தில் குறைவாகவே உள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையம் பயன்படுத்துவதால் அதன் வேகம் ஒரே சீராக இருப்பதில்லை. சற்று விட்டு, விட்டு சிக்னல் கிடைக்கிறது. இதனால் ஸ்மார்ட் போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்வது, இ-மெயில்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாக பயனாளர்கள் குறை கூறுகின்றனர்.
பணிநிமித்தமாக அலுவலகம் செல்லும் போது, வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் மட்டுமே செல்போன் பயன்படுத்தினர். ஆனால் தற்போது அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாலும், அதில் பலர் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பதாலும் இணையத்தின் வேகம் வெகுவாக குறைகிறது. இதனை சீராக்க செல்போன் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எந்நேரமும் படிப்பு, படிப்பு என்று இல்லாமல் அவ்வப்போது குடும்பத்தில் உள்ளவர்களுடன் விளையாடி மகிழுங்கள். ஒவ்வொரு விளையாட்டும் அறிவு பூர்வமானது தான்.
கோடை காலம். வெயில் கொளுத்தி வருகிறது. கொரோனா தாக்கம் இல்லாமல் இருந்திருந்தால் பள்ளி விடுமுறை நாளில் இந்நேரம் மாணவ செல்வங்களாகிய நீங்கள் கடல் உள்ள இடங்களுக்கு சென்று கடல் அலையில் கால் நனைத்தும், குளித்தும் மகிழ்ந்து இருப்பீர்கள். என்ன செய்வது. இந்த ஆண்டு கொரோனா உலக மக்களை பாடாய் படுத்தி விட்டது. இதனால், எங்கு பார்த்தாலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் வெளியில் வரவே தடை. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வர நேரிட்டாலும் பல வித சட்டதிட்டங்கள். இதனால், தாய்-தந்தையரின், தாத்தா மற்றும் உறவினர்களின் கரங்களை பற்றிக் கொண்டு எங்கும் செல்ல முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. ஒருநாள் ஊரடங்கு என்றாலே நம்மால், வீட்டிற்குள் இருக்க முடியாது. ஊரடங்கு முடியும் நேரமான 6 மணி எப்ப வரும் என்று காத்துக் கிடப்போம். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது மாதக்கணக்கில் ஊரடங்கு.
இதனால், வீடுகளுக்குள் நாள் கணக்கில் முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு நேரம் தான் தொலைக்காட்சிகளை பார்ப்பது. இந்த நாட்களை எப்படி கடப்பது?. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்னும் நடைபெறவில்லை. கண்டிப்பாக நடக்கும் என்று அரசு அறிவித்து உள்ளது. ஆகவே, அந்த வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அருமையான வாய்ப்பு. வீட்டில் இருந்த படியே பாடங்களை படிக்கலாம்.
தெரியாததை தாய்-தந்தையரிடமோ அல்லது சகோதர-சகோதரியிடமோ கேட்டு தெரிந்து கொள்ளலாம். படித்தது மனதில் நிற்கவில்லை என்றால் எழுதி, எழுதி பாருங்கள். மனதில் பதிந்து விடும். பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்தவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்?, எந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம் என்று வீட்டில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு எழுத உள்ளவர்கள் அதற்காக தயார் ஆகலாம்.
அதற்காக எந்நேரமும் படிப்பு, படிப்பு என்று இல்லாமல் அவ்வப்போது குடும்பத்தில் உள்ளவர்களுடன் விளையாடி மகிழுங்கள். ஒவ்வொரு விளையாட்டும் அறிவு பூர்வமானது தான். சிறுவர்களுக்கு, விளையாட்டு தெம்பு தருகிறது. அன்பும், ஆரோக்கியமும் கொடுக்கிறது. பொறுமையும், பெருமையும் சேர்த்து தருகிறது. ஆகவே, அவரவர் மனநிலை, சக்தி, சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வீட்டில் பொழுதை கழியுங்கள் ஊரடங்கு முடியும் வரை.

முதியோர் வயதான காரணத்தால் பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம், இதய கோளாறு, மன அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
முதியவர்கள் பெரும்பாலும் பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல் மற்றும் ஞாபக மறதியால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர்.
வயதான காரணத்தால் பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம், இதய கோளாறு, மன அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற பிரச்சினைகளால் கடந்த 5 ஆண்டுகளாக முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர். அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்துவிடுகிறது. அவர்களுக்கு 4, 5 நோய்கள் ஒன்றாக வருகின்றன. அவர்களை கவனிப்பது என்பது குழந்தையை கவனிப்பது போன்றது. அதே மாதிரி தான் சிகிச்சை அளிப்பதும். முதியவர்களுக்கு நோயின் தன்மையை பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 100 வயது முதியவருக்குக்கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவ கல்லூரியில் நடைபெறும் பயிற்சி பட்டறையில் முதியோர்களுக்கு ஏற்படும் பக்கவாதம், நினைவாற்றல் குறைவு, மூளை அறிவுத்திறன் குறித்தும், அடிக்கடி கீழே விழும் முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் பல்வேறு ஆய்வுகள் செய்யப்படுகின்றன. முதியோர் மருத்துவ மாநாட்டில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
வெளிநாடுகளில் முதியோருக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சை முறைகள், அதை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் பற்றி தற்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

உடலில் தேவையற்ற முடிகளை நீக்க பலரும் வீட்டிலேயே வேக்ஸிங் செய்துகொள்கின்றனர். எனவே செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்ன என்று பார்க்கலாம்.
உடலில் தேவையற்ற முடிகளை நீக்க பலரும் வீட்டிலேயே வேக்ஸிங் செய்துகொள்கின்றனர். ஒருவகையில் இதுவும் ஆபத்தான விஷயம்தான். எனவே செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்ன என்று பார்க்கலாம்.
செய்ய வேண்டியவை :
வேக்ஸிங் கிரீம், லோஷன், ஸ்ட்ரிப் என வாங்கினால் அவற்றின் பின்குறிப்புகளை படித்துவிட்டு உங்கள் சருமத்திற்கு ஏற்ப வாங்குங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள
பின்குறிப்புகளை முறையாகப் பின்பற்றுங்கள்.
வேக்ஸிங் செய்யும் முன் முடி உள்ள இடத்தை எண்ணெய், பிசுபிசுப்பு, அழுக்குகள் இல்லாமல் சுத்தம் செய்துவிட்டு தொடங்குங்கள். அதேபோல் வேக்ஸிங் செய்த பிறகு மாய்ஸ்சரைஸர் அப்ளை செய்வதை மறவாதீர்கள். இது எரிச்சலைக் கட்டுப்படுத்துத்துவதோடு, ஈரப்பதம் அளிக்கும்.
வேக்சிங் செய்யும் முன் ஸ்கிரப்பிங் அல்லது மசாஜ் செய்தால் முடியின் வேர்கள் சிலிர்த்து இரத்த ஓட்டம் இருக்கும். இதனால் எளிமையாக முடிகளை நீக்கிவிடலாம்.வலியும் இருக்காது.
எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு முடி எளிதில் வெளியேறாது. அவர்கள் வேக்ஸிங் ஸ்ட்ரிப் பயன்படுத்தினால் அந்த இடத்தில் பவுடர் தேய்த்துவிட்டு செய்தால் எண்ணெய் இருக்காது.
வேக்ஸிங் செய்யும் போது பொறுமை மிக அவசியம். ஒரு இடத்தில் அமர்ந்து நேரம் ஒதுக்கி பொறுமையாக செய்ய வேண்டும்.
செய்யக் கூடாதவை :
மிகவும் சிறிய அதாவது 1/4 இஞ்ச் கொண்ட முடிகளை வேக்ஸிங் மூலம் அகற்ற முயற்சிக்காதீர். இது கடுமையான வலியை ஏற்படுத்தும்.
வேக்ஸிங் கிரீம், லோஷனை பயன்படுத்தும்போது அதன் வெப்பநிலை எவ்வாறு உள்ளது என டெஸ்ட் செய்துவிட்டு முழுவதும் அப்ளை செய்யவும். கடுமையான எரிச்சல்,
வெப்பநிலை சருமத்தை பொசுக்கிவிடும். சரும நிறத்தை மாற்றிவிடும்.
புண், காயங்கள் இருந்தால் வேக்ஸிங் செய்வதை தவிருங்கள்.

குழந்தைக்கு எந்த நிலையிலிருந்து (பொசிஷன்) தாய்ப்பால் கொடுக்க வசதியாக இருக்கிறது என்பதை பரிசோதித்து உறுதி செய்துகொள்ளவும்.
உலகிலேயே கலப்படம் செய்ய முடியாத ஓர் உணவு உண்டென்றால் அது தாய்ப்பால் தான். ஒரு குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவும் அதுதான். குழந்தை பிறப்புக்கு பிறகு, சில நாட்கள் மார்பகங்கள் பாலை சுரப்பதில்லை சீம்பாலைத்தான் சுரக்கின்றன. மஞ்சள் நிறத்தில் இருக்கும் இதை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என சில முதியவர்கள் கூறுவார்கள். அதனால் முதல் மூன்று நாட்களுக்குத் தாய்ப்பால் புகட்டக்கூடாது என்றும் கூறுவதும் உண்டு. ஆனால், இது பெரும் தவறு. குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தும், நோய் எதிர்ப்பு ஊக்கிகளும், சீம்பாலில் அதிகம் இருப்பதால் அதைக் கட்டாயம் புகட்ட வேண்டும்.
தாய்ப்பால் ஊட்டும் முதல் சில மாதங்களுக்கு இரவு, பகல் என இரண்டு வேளைகளிலும் நல்ல உள்ளாடையை தாய்மார்கள் அணிய வேண்டும். காற்று முழுமையாகச் சென்றுவர, நைலானைவிட பருத்தியில் ஆன உள்ளாடையே சிறந்தது. குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் அணிவதற்கு என்றே தயாரிக்கப்பட்ட பிரத்தியேகமான உள்ளாடையை அணிவதும் நல்லது.
குழந்தைக்கு எந்த நிலையிலிருந்து (பொசிஷன்) தாய்ப்பால் கொடுக்க வசதியாக இருக்கிறது என்பதை பரிசோதித்து உறுதி செய்துகொள்ளவும். குழந்தையை மடியில் படுக்க வைத்துப் பாலூட்டுவதை வசதியாக கருதினால், குழந்தையின் தலை உயரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தை எப்போதெல்லாம் தாய்ப்பால் அருந்த விரும்புகிறதோ, அப்போதெல்லாம் பால் புகட்டுவது நல்லது. தொடக்கத்தில் அடிக்கடி இப்படி இருக்கக்கூடும். முதல் சில வாரங்களில் இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் கேட்கக்கூடும். பால் ஊட்டுவதற்காக தூக்கக் கலக்கத்துடன் குழந்தையை எழுப்ப வேண்டியிருக்கும். அதேநேரம் குழந்தை அழுதால், பசிக்குத்தான் அழுகிறது என்று நினைக்கக்கூடாது. வயிற்று வலி, சிறுநீர்-மலம் வெளியேறிய உள்ளாடை ஆகியவற்றாலும் கூட அழலாம். எதற்காக அழுகிறது என்பதை தாய்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
எத்தனை நேரம் பாலூட்ட வேண்டும் என்பதை குழந்தையே தீர்மானிக்கட்டும். குழந்தை போதுமான அளவு பால் அருந்துகிறது என்பதை உறுதிப்படுத்தும் வழி, அதன் எடை அதிகரிப்பது தான். குழந்தையை மருத்துவரிடம் கூட்டிச் செல்லும்போது, ஒவ்வொரு முறையும் எடை பார்க்கவும். ஒரு குழந்தைக்கு பாலூட்டுவதற்கான நல்ல அட்டவணை, 24 மணி நேரத்தில் ஆறு முறை பாலூட்டுவதுதான். அதற்கு குறைவாக இருந்தால் குழந்தைக்கு பசியின்மை இருக்கிறது என்று அர்த்தம்.
குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவ்வப்போது காற்றையும் சேர்த்துக் கொள்ளும். எனவே. பால் அருந்திய பிறகு, குழந்தையை தோளில் போட்டு முதுகின் மீது லேசாகத் தட்டிவிட்டாலோ அல்லது மடியில் குழந்தையை நிமிர்த்தி உட்கார வைத்துப் பிடித்துக்கொண்டாலோ, குழந்தைக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் காற்று வெளியேறிவிடும். தாய்ப்பால் தான் குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவு. இதில் ஒப்பிட இயலாத பல பண்புகள் உள்ளன. அது குழந்தைக்கு முற்றிலும் பாதுகாப்பானது. தீங்கு செய்யும் பாக்டீரியாக்களும் மற்றக் கிருமிகளும் அதில் சேரவே முடியாது.

டயட்டில் இருப்பவர்கள் மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் மரவள்ளிக்கிழங்கு, ஓட்ஸ், வெஜிடபிள் சேர்த்து கட்லெட் செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ
ஓட்ஸ் - 100 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம்
புதினா - ஒரு கப்
கேரட் - ஒன்று
பீன்ஸ் - 10
பச்சைப் பட்டாணி - 50 கிராம்
பிரெட் தூள் - ஒரு கப்
எண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெங்காயம், பீன்ஸ், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துகொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
பச்சைப் பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் துருவிய கேரட், வேக வைத்த பட்டாணி, பொடியாக நறுக்கிய பீன்ஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், வேக வைத்து துருவிய மரவள்ளிக்கிழங்கு, புதினா சேர்த்து வதக்கி இறக்கவும்.
ஆறியதும் வறுத்து பொடித்த ஓட்ஸ் சேர்த்து நன்கு பிசையவும்.
தேவையான வடிவில் கட்லெட்டுகளாகத் தட்டி, பிரெட் தூளில் புரட்டி வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டை போட்டு சுற்றி எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.
சூப்பரான சத்தான .மரவள்ளிக்கிழங்கு ஓட்ஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.

வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக பள்ளிக்கல்வி துறை சார்பில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களை இணையவழியில் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இதன் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு முன்னதாகவே அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் வீட்டில் முடங்கி இருக்கும் மாணவர்கள் பயனுள்ளபடி நேரத்தை செலவிடும் வகையில், தனியார் கல்வி நிறுவனங்கள் இணையவழி கல்வியை ஊக்கப்படுத்தி வருகின்றன. வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகின்றன. மாணவர்களும் இணைய வழி கல்வியை ஆர்வமுடன் கற்கின்றனர்.
அந்த வரிசையில் தற்போது தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையும் இணையவழி கல்வி மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் முறையை வழங்க முன்வந்து இருக்கின்றனர். இதற்காக elearning.tnschools.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கின்றனர்.
அதில் உள்ளே நுழைந்ததும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடங்கள் தமிழ், ஆங்கிலத்தில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அதை மாணவர்கள் தேர்வு செய்து பார்க்கலாம்.
அதுமட்டுமில்லாமல், நீட் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு என்றும் தனிப்பிரிவு இந்த இணையதளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இணையதளத்தில் இருந்து கல்வி தொலைக்காட்சிக்கும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே இதில் சென்றும் கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் யூ-டியூப் வாயிலாக பார்க்கலாம்.
இந்த இணையதளத்தை மாணவர்களை பார்க்க சொல்லி பெற்றோர் அறிவுறுத்த வேண்டும் என்றும், ஆசிரியர்களும் இதன் மூலம் பயன்பெறலாம் என்றும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.