என் மலர்
ஆரோக்கியம்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். பருவகால நோய் பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். நோய் பாதிப்புக்கு இடம் கொடுக்காமல் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் ஊட்டச்சத்துக்களுக்கும் முக்கிய பங்கு இருக்கின்றன. வைட்டமின்கள் ஏ, பி, சி, டி மற்றும் ஈ, மற்றும் இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவை. அவற்றின் செயல்பாடுகளை அறிவோம்.
வைட்டமின் ஏ: சருமம், சுவாசக்குழாய் மற்றும் குடலில் உள்ள உயிரணுக்களின் கட்டமைப்பை பராமரிக்கும் பணியை மேற்கொள்கிறது. நோய் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்ப்பதற்கும் உதவுகிறது. மீன், முட்டையின் மஞ்சள் கரு, பாலாடைக்கட்டி, நட்ஸ் வகைகள், விதைகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் வைட்டமின் ஏ காணப்படுகிறது. மேலும் காய்கறிகளில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. அதனை சாப்பிடும்போது வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்துவிடும். பச்சை காய்கறிகளிலும், மஞ்சள், பூசணி, கேரட் போன்றவற்றிலும் பீட்டா கரோட்டின் காணப்படுகிறது.
வைட்டமின் பி: பி6, பி9, பி12 போன்றவை நோய்கிருமிகளை விரட்டி அடிப்பதில் முக்கிய பங்குவகிப்பவை. பருப்புவகைகள், பச்சை இலை காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள், மீன், கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி போன்றவற்றில் பி6 அதிகம் நிரம்பியிருக்கிறது. பி12 வைட்டமின்கள் முட்டை, பால் பொருட்கள், சோயா பால் போன்றவற்றில் நிறைந்துள்ளன.
வைட்டமின் சி மற்றும் ஈ: இவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து சரும செல்களை பாதுகாக்க உதவுகின்றன. நியூரோபில்ஸ், லிம்போசைட்டுகள் மற்றும் பாகோசைட்டுகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சிறப்பு செல்கள் உருவாக்கத்திலும் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி, கிவி, பிராக்கோலி, தக்காளி, குடை மிளகாய் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. நட்ஸ்கள், பச்சை இலை காய்கறிகள் மற்றும் காய்கறி எண்ணெய்களில் வைட்டமின் ஈ அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் டி: நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கும் உயிரணுக்களின் இயக்கத்திற்கு வைட்டமின் டி தூண்டுகோலாக விளங்குகிறது. நோய் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும் உதவுகிறது. உடலுக்கு தேவையான வைட்டமின் டி அளவை சூரிய ஒளி மூலம் பெறலாம். எனினும் மீன், முட்டை, வெண்ணெய், பால் வகைகளில் வைட்டமின் டி அதிகம் நிரம்பியிருக்கிறது. சுவாசம் சார்ந்த நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க வைட்டமின் டி அவசியமானது என்பதை ஆய்வுகளும் நிரூபித்துள்ளன.
நோய் எதிர்ப்பு தன்மைகொண்ட செல்களின் வளர்ச்சிக்கு இரும்பு, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்றவை இன்றியமையாதது. நோய்க்கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு செல்களை வலுப்படுத்தும் தன்மை இரும்பு சத்துக்கு இருக்கிறது. ஆட்டிறைச்சி, கோழி, மீன்களில் இரும்பு சத்து காணப்படுகிறது. சிப்பிகள், பிற கடல் உணவுகள், இறைச்சி வகைகள், உலர்ந்த பீன்ஸ் மற்றும் நட்ஸ் ஆகியவற்றில் துத்தநாகம் காணப்படுகிறது. காளான்களில் செலினியம் மிகுந்திருக்கிறது.

கற்களின் சூடு மெல்லிய அளவில் பரவுவதால், தோல்கள் ரிலாக்ஸாகின்றன. இதனால் கவலையான மனநிலை முற்றிலுமாக மாறி, புத்துணர்ச்சி கிடைக்கிறது.
மன அழுத்தத்தை முற்றிலுமாக நீக்க உதவும் என்பதே ஃபுட் (பாதம்) மசாஜின் சிறப்பு. இந்த மசாஜின் ஆதாரமே கால்கள்தான். ஏனெனில், உடல் உறுப்புகளுக்கான நரம்பு மண்டலம், இரு கால் பாதங்களில்தான் அமைந்திருக்கிறது. பெண்கள், கால்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமென அதிகம் விரும்புவர். , புட் மசாஜ் செய்யும் கால்கள், சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்போது மசாஜின் பயனை முழுமையாகப் பெறமுடியும். இந்த மசாஜ் முறை மிகவும் எளியது என்பதால், பெண்கள் இதைப் பெரிதும் விரும்புகின்றனர்.
உடல் சோர்வை நீக்கும் முதன்மையான மசாஜ் இது. ஆற்றிலிருந்து எடுத்து வரப்படும் கூழாங்கற்கள்தான் இந்த மசாஜுக்கு ஏற்றவை. இதற்கு, பெரும்பாலும் கறுப்பு நிற கற்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. மசாஜுக்கு ஏற்ப வட்டம், நீள் வட்டம், உருளை என கற்களின் வடிவம் மாறும். ஒவ்வொருமுறையும் அந்தக் கற்களை நீரில் போட்டு சூடுபடுத்தி, மசாஜுக்குப் பயன்படுத்துகின்றனர்.
ஆண்களைவிட பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவரவர்களின் தாங்கும் தன்மைக்கு ஏற்ப கற்களின் சூடு வித்தியாசப்படுகிறது. கற்களின் சூடு மெல்லிய அளவில் பரவுவதால், தோல்கள் ரிலாக்ஸாகின்றன. இதனால் கவலையான மனநிலை முற்றிலுமாக மாறி, புத்துணர்ச்சி கிடைக்கிறது. நேரடியாக கற்களின் சூட்டைத் தாங்க முடியாதவர்களுக்கு, துணிகளைச்சுற்றி சூட்டை உடலுக்குள் செலுத்துவது ஏற்றதாகவும், ஆண்களைவிட பெண்களுக்கே இந்த முறை பொருத்தமானதாகவும் இருக்கிறது.
ஆண்களைவிட பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவரவர்களின் தாங்கும் தன்மைக்கு ஏற்ப ஸ்டோன் மசாஜுக்கு பயன்படுத்தும் கற்களின் சூடு வித்தியாசப்படுகிறது.

ஆண்களே கவனமாக இருங்கள். கொரோனா வைரஸ் பாதித்த பின்னர் சிகிச்சையில் இன்னும் கவனமாக இருக்க வேண்டியதிருக்கிறது.
அது என்னவென்றே தெரியவில்லை. கொரோனா வைரசுக்கு ஆண்கள் உயிர்வாழவே பிடிப்பதில்லை. உண்மைதான்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குவதில் ஆண் என்றும், பெண் என்றும் பாகுபாடு பார்ப்பதில்லை. இரு பாலரையும் சமமாகத்தான் தாக்குகிறது.
ஆனால் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதும், அதிக உயிரிழப்பை சந்திப்பதும் ஆண் இனம்தான் என்று ஒரு ஆய்வு முடிவு சொல்கிறது.
வயதான ஆண்கள்தான் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குகிறபோது, அதிலும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுடன், கொரோனாவும் அழையா விருந்தாளியாக வந்து தாக்குகிறபோது ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற நேரிடுகிறது.
அவர்களில் ஏற்படுகிற உயிர்ப்பலியும் அதிகமாகத்தான் இருக்கிறது.
இந்த உண்மையை ஒரு ஆய்வுக்கு பின்னர் விஞ்ஞானிகளே போட்டு உடைத்திருக்கிறார்கள்.
சீனாவின் பீஜிங் நகரில் உள்ள டாங்ரன் ஆஸ்பத்திரியை சேர்ந்த விஞ்ஞானி ஜின் குய் யாங் உள்ளிட்டவர்கள்தான் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஜின் குய் யாங் சொல்வது என்ன?
“கடந்த ஜனவரி மாதமே, கொரோனா வைரஸ் பாதிப்பில் பெண்களை விட ஆண்களே அதிகமாக உயிரிழக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது எங்களுக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது. உண்மையிலேயே கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குகிறபோது பெண்களை விட ஆண்கள்தான் அதிகளவில் இறக்கிறார்களா? என்பதே அந்த கேள்வி.
ஆனால் யாருமே கொரோனா வைரஸ் தாக்கி ஏற்படுகிற இறப்பில் பாலின வேறுபாடுகளை அளவிடவில்லை. எனவே நாங்கள் ஆராய தொடங்கினோம்.
இதில் இன்னும் எங்களுக்கு புரியாத புதிராக இருப்பது, எதற்காக இந்த வைரசால் ஒரு சிலர் மட்டும் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பதுதான்.
அதே நேரத்தில் எங்கள் ஆய்வில் நாங்கள் கண்டறிந்தது, வயதான ஆண்கள் அதிலும் குறிப்பாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் இருந்து வருகிற ஆண்கள், கொரோனா வைரஸ் தாக்குகிறபோது கூடுதல் கவனம் வேண்டும் என்பதுதான்.
நானும் எனது குழுவினரும் கொரோனா வைரஸ் தாக்கிய பல ஆண்களையும், பெண்களையும் ஆராய்ந்து வந்தோம். நாங்கள் சிகிச்சை அளித்த 43 நோயாளிகளையே கவனித்து வந்தோம். அது மட்டுமல்ல, ஏற்கனவே தயாராக இருந்த 1,056 கொரோனா நோயாளிகள் பற்றிய தரவுகளையும் ஆராய்ந்தோம்.
கோவிட்-19-க்கு காரணமான கொரோனா வைரஸ், 2003-ம் ஆண்டு தோன்றிய சார்ஸ் வைரஸ் போன்றதுதான். இரண்டுமே ‘ஏசிஇ2’ என்ற புரதத்தைத்தான் கொண்டுள்ளன.
524 சார்ஸ் நோயாளிகள் பற்றிய தரவுகளையும் ஆராய்ந்தோம்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கிய நோயாளிகளில், வயதானவர்கள் ஏற்கனவே பிரச்சினைகளை கொண்டிருந்தபோது, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் இருந்தது. அவர்கள் மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கியோரில் ஆண், பெண் சம வயதினராக, சம எண்ணிக்கையில் இருந்தபோதும், ஆண்களுக்குதான் வைரஸ் தாக்கம் அதிகளவில் இருந்தது.
மிகப்பெரிய கோவிட்-19 நோயாளிகளின் தரவுகளை ஆராய்ந்தோம். அதில் இறந்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள்தான். இதன் அர்த்தம், பெண்களை விட ஆண்களின் இறப்புவீதம் 2½ மடங்கு அதிகம்.
வயதைப் பொருட்படுத்தாமல், மோசமான நோயின் தீவிர தன்மைக்கு ஆணாக இருப்பது ஆபத்துக் காரணியாக அமைந்துள்ளது.
2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தாக்கியோரின் தரவுகள், பெண்களை விட அதிகளவில் ஆண்களே இறந்திருப்பதை காட்டின.
சார்ஸ் மற்றும் கொரோனாவின் கோவிட்-19 வைரஸ்களில் உள்ள ‘ஏசிஇ2’ புரதத்தின் அளவுகள், ஆண்களிடம் அதிகமாக இருக்கிறது. பெண்களிடம் குறைவாக இருக்கிறது.
அது மட்டுமல்ல, இதய நோய், நீரிழிவு நோய்த்தாக்கம் கொண்ட நோயாளிகளிடமும் இந்த புரதம் அதிகளவில் இருக்கிறது.
இருப்பினும்கூட, கொரோனா வைரஸ் தொற்று நோய் பெண்களை விட ஆண்களை அதிகளவில் எதனால் பாதிக்கிறது என்பதை கண்டறிய இன்னும் கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. தற்போது நாங்கள் நடத்தி இருப்பது ஒரு சிறிய அளவிலானதுதான்.
இதில் கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களே அதிகளவில் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது தெளிவு. இது ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புதான். எனவேதான் கொரோனா வைரஸ் பாதித்த ஆண்கள், அதிலும் வயதான ஆண்கள் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் என்கிறோம்”.
இப்படி சொல்கிறார் விஞ்ஞானி ஜின் குய் யாங்.
ஆண்களே கவனமாக இருங்கள். கொரோனா வைரஸ் பாதித்த பின்னர் சிகிச்சையில் இன்னும் கவனமாக இருக்க வேண்டியதிருக்கிறது. உயிரிழக்கும் ஆபத்தும், பெண்களை விட உங்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. எனவே கொரோனா வைரஸ் உங்களை அழையாத விருந்தாளிகளாக தேடி வர வைத்து விடாமல் எச்சரிக்கையாக இருங்கள். அதுதான் இப்போது நல்லது!

பெண்களில் சிலர் முறையற்ற மாதவிடாயினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு முளைகட்டிய வெந்தயம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
மாதவிடாய் :

மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிதலைவலிஎரிச்சல்கோபம் போன்ற உணர்வுகளையும் குறைக்க கூடும். மெனோபாஸ் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக அமைந்திடும். பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அதே வேளையில் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.
டெலிவரி :
எல்லா கர்பிணிப்பெண்களுக்கும் டெலிவரி குறித்த பயம் நிறையவே இருக்கும். வெந்தயத்தில் இருக்கும் யுட்ரைன் டெலிவரி எளிதாக்குகிறது. அதே நேரத்தில் வலியை குறைக்கும் என்று அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது.
ஏதேனும் அலர்ஜி இருந்தால் மருத்துவ ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளலாம்.
தாய்ப்பால் :
முளக்கட்டிய வெந்தயத்தில் galactagogou என்ற சத்து இருக்கிறது. இவை பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுக்கிற பெண்கள் தினமும் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டில் இருக்கும் சிறிவர், பெரியோர்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கொள்ளு லட்டு செய்து கொடுக்கலாம். இன்று அதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு - ஒரு கிண்ணம்
வெல்லம் - முக்கால் கிண்ணம்
நெய் - சிறிதளவு.
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை :
வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு கொள்ளுவை போட்டு இளம்பதமாக வறுத்து எடுத்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்
பிறகு நீரை நன்கு வடித்து… பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து சாப்பிடக் கொடுக்கவும்.
சுவையான கொள்ளு லட்டு தயார்.
கொள்ளு - ஒரு கிண்ணம்
வெல்லம் - முக்கால் கிண்ணம்
நெய் - சிறிதளவு.
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கிண்ணம்

செய்முறை :
வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு கொள்ளுவை போட்டு இளம்பதமாக வறுத்து எடுத்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்
பிறகு நீரை நன்கு வடித்து… பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து சாப்பிடக் கொடுக்கவும்.
சுவையான கொள்ளு லட்டு தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஊரடங்கு காரணமாக கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு கிடப்பதால், குழந்தைகள் இதுவரை விரும்பி சாப்பிட்ட நொறுக்குத்தீனி வகைகள் கிடைக்காததால் பாரம்பரிய தின்பண்டங்களை சுவைக்க தொடங்கியுள்ளனர்.
இந்தக்கால குழந்தைகள் சாப்பாட்டைவிட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்கு தீனிகளை அதிகம் விரும்பி சாப்பிட்டனர். அதிலும் பீசா, பர்க்கர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், சாக்லெட்டுகள் என்றால் கேட்கவே வேண்டாம். எந்த பல்பொருள் அங்காடிக்கு சென்றாலும் அங்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இதுபோன்ற நொறுக்குத்தீனி வகைகள்தான் பிரதானமாக இருக்கும்.
இதுபோன்றவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எவ்வளவோ கூறினாலும் அதை குழந்தைகளும் கேட்பதில்லை. பெற்றோரும் வாங்குவதை நிறுத்தவில்லை.அப்படிப்பட்ட நிலையை கொரோனா வந்து அடியோடு மாற்றிவிட்டது. ஆம்! கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் இதுபோன்ற நொறுக்குத்தீனிகள் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை.
இதையடுத்து வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக சுண்டல், வடை போன்ற பாரம்பரிய திண்பண்டங்களை பெரியவர்கள் செய்து கொடுக்க தொடங்கியுள்ளனர். சில பெண்கள் யூ-டியூப் வீடியோக்களை பார்த்து இதுமாதிரி பலகாரங்களை செய்து தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள்.ஆரம்பத்தில் இவற்றின் மீது அதிக நாட்டம் கொள்ளாத குழந்தைகளும் தற்போது இந்த திண்பண்டங்களை விரும்பி சுவைக்க தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் கடந்த ஒரு மாதத்தில் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதில் பல நமது வாழ்வாதாரத்தையே பாதிக்கக்கூடியவை. இருந்தபோதும் இதுபோன்ற ஒருசில நல்ல மாற்றத்தையும் கொடுத்துள்ளது என்று குடும்பத்தலைவி ஒருவர் கூறினார்.

உலகம் இன்று எவ்வளவோ முன்னேற்றங்களை கண்டுவிட்ட போதும் பெண்ணுரிமைக்கு எதிரான சில பிற்போக்குத்தனங்கள் அரங்கேறி வருவதையும் பார்க்கிறோம்.
1921 மார்ச் 8, பெண்களின் சுதந்திர சிறகுகளை பிணைத்திருந்த கட்டுப்பாடுகள் எனும் விலங்குகள் பலவற்றை நொறுக்கிய மகிழ்ச்சியை கொண்டாட முன்வந்த முதல் நாள். அன்று முதல் ஆண்டுதோறும் மார்ச் 8 உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
உலகம் இன்று எவ்வளவோ முன்னேற்றங்களை கண்டுவிட்ட போதும் பெண்ணுரிமைக்கு எதிரான சில பிற்போக்குத்தனங்கள் அரங்கேறி வருவதையும் பார்க்கிறோம். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா மட்டத்திலும் பெண்ணடிமைத்தனம் வெவ்வேறு வடிவங்களில் தன் கோரமுகத்தை காட்டிக்கொண்டே தான் இருக்கிறது.
தாய்வழி சமூக கூறுகளை கொண்ட சமூகங்கள் அனைத்தும் பெண்ணுரிமையையும், பெண்களுக்கான சுதந்திரத்தையும் இயல்பாகவே வழங்கி வந்துள்ளன. இந்திய சமூகங்களில் பெரும்பாலானவை தாய்வழி சமூக மரபு கொண்டவையே. குடும்பத்தில் பல முக்கிய பொறுப்புகளை பெண்களிடமே வழங்குவது, வீட்டின் மூத்த பெண்ணின் பெயரை சொல்லி சந்ததியினரை அடையாளப்படுத்தி கொள்வது உள்ளிட்டவையே தாய்வழி மரபு. பழங்குடி இனத்தவரிடம் இன்று வரை இந்த மரபு மாறாமல் நிற்கிறது.
விதவை மறுமணம், பெண்களுக்கான சமூக, பொருளாதார, சமய உரிமைகளை வழங்குவது வரை ஆதியிலிருந்து ஒரே நிலைப்பாடு கொண்ட இனத்தவரும் உள்ளனர். குழந்தைகளுக்கு முதல்முறையாக முடி இறக்கும் போது தாய்மாமன் மடிக்கு பதிலாக குடும்பத்தில் உயிருடன் உள்ள மூத்த பெண்ணின் மடியில் குழந்தையை அமர்த்தி முடி இறக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. இப்படி, பெண்ணுரிமை தொடர்பாக நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.

இரவிலும் வெயிலின் வெப்பம் அனலாக வீட்டுக்குள் இறங்குகிறது. செயற்கையாக ஏ.சி. இயக்கி வெப்பத்தை தவிர்க்கலாம். ஆனால் இயற்கையாக இதை எதிர்கொள்ளலாம்.
கோடைக்காலம் வந்துவிட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் கடுமையாக வாட்டி வதைக்கிறது.
இரவிலும் வெயிலின் வெப்பம் அனலாக வீட்டுக்குள் இறங்குகிறது. செயற்கையாக ஏ.சி. இயக்கி வெப்பத்தை தவிர்க்கலாம். ஆனால் இயற்கையாக இதை எதிர்கொள்ளலாம்.
எப்படி எனக் கேட்கிறீர்களா?
பெரும்பாலும் வீட்டுக்குள் காற்று வந்து போக வழிசெய்ய வேண்டும். அப்படிச் செய்தால் வீட்டுக்கு உள்ளே உள்ள வெப்பத்தை காற்று குளிர்விக்கும். மேலும் ஜன்னல்களில் மூங்கில் திரைகளைப் பொருத்தி அதன் மீது லேசாக தண்ணீர் தெளித்தால் அது காற்றை குளிர்வித்து வீட்டுக்குள் அனுப்பும். வீட்டுக்கு இயற்கையான குளுமை கிடைக்கும்.
தேவையில்லாமல் மின்சாதனங்களை இயக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவை வெளிவிடும் வெப்பமும் வீட்டுக்குள் தான் இருக்கும். இவை எல்லாவற்றையும் விட மொட்டை மாடியில், சுவரில் செடிகள் வளர்க்கலாம். அது வீட்டுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் கூடுதல் குளிர்ச்சியை தரும்.
தோட்டம் வைக்க இடம் இல்லையே என்ற கவலையே வேண்டாம். வீட்டு சுவர்களிலேயே செடி, கொடிகளை படரவிட்டு வளர்க்கலாம். சுவர்களில் மணி பிளாண்ட் போன்ற செடிகளை தொங்கவிட்டு வளர்க்கலாம். பசுமை சுவர் தாவர முறைக்கு மேலை நாடுகளில் மிகுந்த வரவேற்பு உண்டு. இப்போது நம் நாட்டிலும் வரவேற்பு கூடியிருக்கிறது.
சுவர்களில் மட்டுமல்ல, முழு அடுக்கு மாடியிலும்கூட இப்படி விதவிதமான செடிகளை வளர்க்கலாம். வீட்டுத் தூண்களில் அலங்கார கொடிகளை படரவிடலாம். வெப்பத்தின் தாக்கத்தை உணர முடியாத அளவுக்கு பசுமை கலந்த சூழலை இது உருவாக்கும்.
----------------------

கருமை நிறத்திற்கு மாறிய உதடுகளை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்.
உதடுகள் நாளுக்குநாள் கருமையாவதாக நினைக்கிறீர்களா? மிருதுவான தன்மையையும், இளஞ்சிவப்பு நிறத்தையும் இழந்துவிட்டதாக கருதுகிறீர்களா? ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம், சுகாதார பிரச்சினைகள் தான் இதற்கு காரணம். மேலும் புற ஊதாக்கதிர் வீச்சுகள், அழகுசாதனப் பொருட்கள் பயன்பாடு, உதடுகள் உலர்தல் போன்றவையும் பொதுவான காரணங்களாகும். கருமை நிறத்திற்கு மாறிய உதடுகளை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்.
* மஞ்சளில் இருக்கும் குர்குமின், சருமத்திற்கு இயற்கையான நிறத்தை வழங்கும். அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை அதே அளவு ரோஸ் வாட்டரில் கலந்து கொள்ள வேண்டும். முதலில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து உதட்டில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது உதட்டில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும். பின்பு மஞ்சள் பேஸ்டை உதட்டில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவிவிடலாம். இதுபோல் தினமும் இரண்டு முறை செய்யுங்கள்.
* உதடுகள் வறட்சியாகவோ, கடின தன்மையுடனோ இருந்தால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இது ஈரப்பதத்தை தக்கவைக்கும். தேன், சர்க்கரை கொண்டு உதட்டை சுத்தப்படுத்தியப்பின்பு தேங்காய் எண்ணெய் தடவலாம். தினமும் இரண்டு முறை செய்துவந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
* இளஞ்சிவப்பு நிற உதடு கொண்டிருந்தவர்கள் மீண்டும் உதட்டு நிறத்தை மீட்டெடுக்க மாதுளை பழத்தை உபயோகிக்கலாம். ஒரு டீஸ்பூன் மாதுளை பழச்சாறுடன் அதே அளவு பீட்ரூட் சாற்றை கலந்து உதட்டில் தினமும் 2 முறை தடவி வர வேண்டும்.
* கற்றாழை இயற்கையாகவே தோல் நிறமிகளை அகற்றும் தன்மை கொண்டது. கற்றாழை ஜெல்லை எடுத்து உதட்டில் தடவி, உலர்ந்ததும் கழுவி விடலாம். இதை தினமும் இரண்டு, மூன்று முறை செய்து வரலாம்.
* எலுமிச்சை பழம் இயற்கையாகவே சருமத்தை சுத்தப்படுத்தும். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் உதட்டை கழுவிவிடலாம்.

மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை, தொடர்ந்து இருக்கும் அடி வயிற்றுவலி மாதவிடாய் ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்பே தாங்க முடியாத வயிற்று வலி போன்ற அறிகுறிகள் மூலம் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உணரலாம்.
வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள இந்திரா நர்சிங் ஹோமில் ஒரு புதிய மருத்துவ பிரிவாக மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பிரிவு சிறப்பு மருத்துவரான டாக்டர் லதா லட்சுமி என்பவரால் கண்காணிக்கப்படுகிறது.
இங்கு கர்ப்பிணிகளுக்கு பிரசவ பிரிவு புதிதாக தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து விதமான நார்மல் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் பிரசவம் பார்க்கப்படுகிறது. சிசேரியன் வசதியும் உண்டு. மேலும் வலியில்லா பிரசவமும் பார்க்கப்படுகிறது.
கர்ப்பப்பை கட்டிகள்:
(Fibroid uterus) கர்ப்பப்பையின் உட்பகுதியிலோ நடுப்பகுதியிலோ அல்லது வெளிப்புற பகுதியிலோ கட்டி ஏற்படலாம். மாதந்தோறும் அதிக ரத்தபோக்கு, வலி, குழந்தையின்மை, அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவு, அடிவயிற்றுவலி, அடிவயிற்றில் இருக்கம் கட்டியை உணர்தல், கட்டியின் அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய சிறுநீரக பிரச்சினைகள் ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம். 50 சதவீதம் கட்டிகள் எவ்வித அறிகுறியுமின்றி இருக்கலாம். பரிசோதனை செய்து ஸ்கேன் மூலமும் இக்கட்டியை கண்டறியலாம்.
Adenomyosis: கர்ப்பப்பையின் உள்ளே இருக்கக்கூடிய endometrial glands என்று அழைக்கக்கூடிய சுரப்பிகள் கர்ப்பபை உள்ளே இல்லாமல் வெளியில் இருந்தால் இப்பிரச்சினை உண்டாகும்.
Endometriosis: கர்ப்பப்பையின் உள்ளே இருக்கக்கூடிய endometrial glands என்று அழைக்கப்படும் சுரப்பிகள் கர்ப்பப்பை உள்ளே இல்லாமல் வெளியில் இருந்தால் இப்பிரச்சினை உண்டாகும்.
இதன் அறிகுறிகள்:
மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை, தொடர்ந்து இருக்கும் அடி வயிற்றுவலி மாதவிடாய் ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்பே தாங்க முடியாத வயிற்று வலி போன்ற அறிகுறிகள் மூலம் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உணரலாம். இவ்வலி மாதவிடாய் ஆரம்பிக்கும் வரையோ அல்லது முடியும் வரையோ நீடிக்கலாம்.
சினை முட்டை கட்டிகள்:
சிறு எலுமிச்சை பழம் அளவில் இருந்து பூசணி அளவில் இக்கட்டிகள் இருக்கலாம். 70 சதவீத கட்டிகள் கேன்சர் இல்லாத கட்டிகளாகவும், 30 சதவீதம் கேன்சர் கட்டிகளாகவும் இருக்கலாம். கேன்சர் இல்லாத 8 கிலோ கட்டியை இம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளோம். கேன்சர் கட்டிகளாக இருப்பின் எடை குறைதல், பசி குறைதல், வயிற்றில் நீர் சேருதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இடம் மாறி கருத்தரித்தல்:
சில நேரங்களில் கர்ப்பப்பையில் கர்ப்பம் தங்காமல் கருப்பை வெளியில் கருமுட்டை குழாயில் கருத்தரிக்கலாம். இவ்வகை கர்ப்பத்தினால் அதிக வயிற்றுவலியுடன் மயக்கம் மற்றும் கருமுட்டை குழாய் வெடித்தால், வயிற்றுக்குள் ரத்த கசிவால் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். எனவே கர்ப்பம் என அறிந்த பின் ஸ்கேன் மூலம் கண்டறிதல் மிக அவசியம்.
அடி இறங்குதல்: (vaginal prolapse)
அடி இறங்குதல் என்பது குழந்தை பிறப்புறுப்பு வழியாக கர்ப்பப்பை இறங்குதல் மற்றும் மூத்திரப்பை, மலக்குடல் இறங்குதல் ஆகும். இதன் அறிகுறிகள் பெண்ணின் பிறப்புறுப்பில் கட்டி போன்று இருத்தல் மற்றும் மூத்திரகோளாறுகள் வெள்ளைப்படுதல் ஆகும்.
மகளிருக்கான சிறப்பு பரிசோதனை:
1.பேப் ஸ்மியர் என்பது கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோயை முன்பாக அறிந்து கொள்ள செய்யப்படும் பரிசோதனை ஆகும். 2.எண்டோ மெட்ரியல் பையாப்சி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் திசுக்களுக்கான சிறப்பு பரிசோதனை.
3.கால் போஸ்கோ தபி என்பது கர்ப்பப்பை வாய்பகுதியை கண் கூடாக பரிசோதனை செய்தல் ஆகும்.
4.சர்வைக்கல் பையாப்சி என்பது கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோய் கண்டறிதலுக்கான பரிசோதனை ஆகும்.

கேழ்வரகு தோசை, கம்பு தோசை போன்ற தோசை வகைகளுக்கு இந்தச் சின்ன வெங்காய கொத்தமல்லி துவையல் அற்புதமாக இருக்கும். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 12,
கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கவும்.
பின்னர் அதில் உறித்த சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும்.
வேக வைத்தவற்றை நன்கு ஆறவிடவும்.
மிக்ஸி ஜாரில் கல் உப்பு, வேகவைத்த வெங்காய கலவையை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதைச் சிறிய கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.
சத்தான சுவையான சின்ன வெங்காய கொத்தமல்லி துவையல் ரெடி.
குறிப்பு: சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாயைச் சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் துவையலாக அரைக்கும்போது வெங்காயத்தில் உள்ள நெடி குறைந்து சுவையாக இருக்கும்.
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 12,
கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கவும்.
பின்னர் அதில் உறித்த சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும்.
வேக வைத்தவற்றை நன்கு ஆறவிடவும்.
மிக்ஸி ஜாரில் கல் உப்பு, வேகவைத்த வெங்காய கலவையை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதைச் சிறிய கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.
சத்தான சுவையான சின்ன வெங்காய கொத்தமல்லி துவையல் ரெடி.
குறிப்பு: சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாயைச் சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் துவையலாக அரைக்கும்போது வெங்காயத்தில் உள்ள நெடி குறைந்து சுவையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில், தொடர் பணிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவது எப்படி? என்று மனநல டாக்டர் சிவசைலம் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளன. இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுகாதாரத்துறை, போலீஸ் துறை, வருவாய்த்துறையினர் தொடர் பணிகளால் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த மன அழுத்தம் பொது இடத்தில் வெளிப்படும் சூழல் உருவாகி வருகிறது. இதே போன்று வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மன அழுத்தத்தை எப்படி கண்டறிவது, அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அதற்கு தீர்வு என்ன? என்பது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த மனநல டாக்டர் எஸ்.சிவசைலம் விளக்கம் அளித்து உள்ளார்.
அவர் கூறியதாவது:-
கொரோனா பேரிடரில் உலகம் முழுவதும் சுமார் 400 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நமது அன்றாட வாழ்க்கையில் இருந்து முடங்கி போய் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோம். ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகள் பல்வேறு மனஉளவியல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் ஒருபுதுவித சூழல் ஏற்பட்டு உள்ளது. நான்கு சுவருக்குள் நாம் வாழ்கிறோம். நமது நண்பர்கள், உறவினர்களை நேரில் காணமுடியவில்லை. நாளை என்ன நடக்க போகிறது? என்ற அச்சம் நம்மை ஆட்கொள்கிறது. நமது பெரும்பான்மையான நேரத்தை தற்போது சமூகவலைதளங்களில் செலவிடுகிறோம். அதில் வருகிற தகவல்கள் பெரும்பாலும், உறுதிபடுத்தப்படாத தன்மை கொண்டவை. பொய்யாக பரப்பப்படும் அந்த தகவல்களை நாம் உள்வாங்கி கொள்கிறோம். அதனால் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களால் நமக்கு மனபதற்றம் ஏற்படுகிறது.
இதனால் நம்மை சுற்றி யாராவது இருமினாலோ, தும்மினாலோ நமக்கு கொரோனா வந்து விடுமோ? என்ற பயம் ஏற்படும். ஒரு சிலர் நமக்கு இந்த நோய் இருக்கிறது என்று தீர்மானமாக ஆழ்மனதில் உருவாகி, நாம் இறந்த பிறகு குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கவலைப்படுவார்கள். கைகளை கழுவி சுத்தமாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை கூறுகிறது. வேறு சிலர் தங்கள் கையில் நோய் கிருமி ஒட்டிக்கொண்டதாக எண்ணிக் கொண்டே கையை பலமுறை சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள்.
நமது அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. வீட்டிலேயே இருப்பதால் இரவு தூக்கம் சரியாக வருவது இல்லை. தேவையற்ற எரிச்சல், கோபம் ஏற்படுகிறது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் தாய்மார்கள் மிகுந்த மனஅழுத்தம் அடைகிறார்கள். காலையில் இருந்து இரவு வரை அவர்களுக்கு தேவையான உணவு சமைப்பதில் இருந்து, அவர்களை கவனித்துக் கொள்வது வரை மனரீதியான நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.
மருத்துவத்துறை, போலீஸ் துறை, வருவாய்த்துறை, தூய்மை பணியாளர்கள் நிலை மிகவும் பரிதாபம். இந்த கடுமையான கோடை வெப்பம் ஒருபுறம், இரவு பகலாக தொடர் பணிகளால் ஏற்படும் மன அழுத்தம் மறுபுறம். இதற்கிடையே, அவர்கள் சரியான ஓய்வு, நல்ல உணவு இல்லாமல் மிகுந்த மன அழுத்தம் அடைகிறார்கள்.
இந்த மன அழுத்தத்தின் உச்சகட்டத்தில் நமக்கு வாழ்க்கையின் மீதே ஒரு வித சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. நமக்கு ஆதரவாக, துணை யாரும் இல்லை என்ற எண்ணம் நம்மை வருத்தமடைய செய்கிறது.
தவிர்ப்பது எப்படி?
இத்தகைய மன அழுத்தத்தை தவிர்க்க நாம் இன்றைய சூழ்நிலையை நன்றாக புரிந்து கொள்வது அவசியம். இந்த நெருக்கடியான தருணத்தை நாம் சிறிது காலம் அனுபவித்துதான் தீரவேண்டும் என்பதை உணர வேண்டும். இது தற்காலிக நெருக்கடி. இது கடந்து விடும் என்று நமது மனதை திடப்படுத்தி கொள்ள வேண்டும். நமது தாங்கும் மனசக்தியை அதிகப்படுத்திக் கொள்வது அவசியம். இதைப்பற்றிய சிந்தனையை விடுத்து நமது குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவது, தியானம், மூச்சுப்பயிற்சி, யோகாசனங்கள் செய்யலாம். உடற்பயிற்சிகள் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.
தொலைக்காட்சியில் நல்ல பாடல்கள், திரைப்படங்கள், நகைச்சுவை காட்சிகளை ரசிக்கலாம். சமூக வலைதளங்களில் கொரோனா செய்திகளை தவிர்க்கலாம். உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ள கொரோனா தொற்று நோயில் இருந்து 80 சதவீதம் நோயாளிகள் குணமடைகிறார்கள் என்ற நம்பிக்கையூட்டும் தகவலை எடுத்துக் கொள்ளலாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம். கொரோனா பரவலில் பணிபுரியும் அரசு துறையினர் தினமும் காலை பணிக்கு செல்லும் முன்பு சிறிது தியான பயிற்சி செய்யலாம். மனதை அமைதிபடுத்தும் வேலைகளில் ஈடுபடுவதால் பணியில் மன நெருக்கடி குறையும். பாதுகாப்பு விஷயத்தில் முழு கவனமாக இருக்க வேண்டும். ஆனால் மன பதற்றம் அடைய வேண்டாம்.
பணி முடித்து வீடு திரும்பியவுடன் நன்றாக குளித்து, சுத்தம் செய்து ஆடைகளை துவைத்து வெயிலில் உலர்த்த வேண்டும். சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை அதிக அளவில் பருகுவது அவசியம். இரவு நல்ல உறக்கம், ஓய்வு, மன அமைதியுடன் இருந்தால் நமது பணியில் சிறந்து விளங்குவதுடன், கொரோனா பேரிடரில் இருந்து இந்த சமூகத்தை நாம் காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு கூறி உள்ளார்.