என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    வெயில் காலத்தில் உங்கள் வீட்டிலேயே முகத்தை அழகு படுத்த ஏராளமான அழகு குறிப்பு பொருட்கள் உள்ளன. அவை உங்கள் கருப்பான முகத்தை மறைத்து அழகாகவும், பளிச் சென்றும் காட்டும்.
    வெயில் காலங்களில்  நம் சரும நிறம் சற்று மங்களாகவே காணப்படுவது வழக்கம் தான். இன்னும் சிலருக்கு  முகத்தில் வந்த முகப்பருக்கள் அப்படியே கருப்பாக மாறி விடும். பலருக்கு முகத்தில் தோல் சுருக்கம் ஏற்படும், முகம் வறண்டும் காணப்படும். இதற்கு உங்கள் வீட்டிலேயே முகத்தை அழகு படுத்த ஏராளமான அழகு குறிப்பு பொருட்கள் உள்ளன. அவை உங்கள் கருப்பான  முகத்தை மறைத்து அழகாகவும், பளிச் சென்றும் காட்டும்.

    தக்காளி, தர்பூசணி மற்றும்  ஆப்பிள் ஆகியவற்றின் உட்பகுதியை எடுத்துக்கொள்ளவும். இவை மூன்றையும் அரைத்து  பேஸ்ட் போல தயாரித்துக் கொள்ளலாம். முகத்தில் போட்டுகொண்டு 15 நிமிடம் அப்படியே வைத்துக்   கொள்ளலாம். சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினீர்கள் என்றால் முகம் இளமையாகவும், குளு குளு வென்றும் இருக்கும்.

    கொட்டை  நீங்கிய பேரிட்சை மற்றும்  உலர்ந்த திராட்சை எடுத்துக்கொண்டு  அவற்றை ஒரு நாள் முழுவதும் வெண்ணீரில்  ஊற வைக்க வேண்டும். பின்பு பப்பாளி உட்பகுதியை  எடுத்துக்கொண்டு, ஊற வைத்த பழக்கூழுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இதை  உங்கள்  முகத்தில் பேஸ் மாஸ்க்  போல நீங்கள் பூசிக் கொள்ளலாம் . காய்ந்த பின்பு முகத்தை கழுவிக் கொள்ளலாம். இப்படி  வாரம் இரண்டு முறை செய்தால் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, பளபளப்பாக முகம் ஜொலிக்கும்.

    தேங்காய்  பால் உங்களுக்கு தேவையான எடுத்துக்கொண்டு, அதில் பாதி அளவு கடலை மாவு கலந்து கொள்ளலாம். இவை இரண்டையும் நீங்கள் பேஸ்ட்  போல் தயாரித்து கொள்ளலாம். முகத்தில் பூசிக்கொண்டு அந்த பேஸ்ட் காயும் வரை காத்திருக்கவும். பின்பு தண்ணீர்கொண்டு கழுவிக்கொள்ளலாம். இதேபோல் வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால்  முகத்தில் மாசுக்கள், கருப்பு வண்ணம் நீங்கிவிடும்.

    அடுத்ததாக  இளநீர் எடுத்துக்கொள்ளலாம். இளநீரில் உள்ள  வழுக்கை போன்ற பகுதியை எடுத்துக் கொள்ளவும். பின்பு அதில் இளநீர் தண்ணீர்  சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்த பேஸ்டை முகம் மற்றும் கரும்புள்ளைகள் இருக்கும்  இடத்தில் தடவிக் கொள்ளலாம். தினமும் இதே போல் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள முகத்தில்  உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிச்சென்று மின்னும்.  
    கர்ப்ப காலத்தில் இளநீர் குடித்தால், சில பெண்களுக்கு அது சூட்டை கிளப்பிவிடும். இதனால் பலருக்கும் கர்ப்ப காலத்தில் பெண்கள் இளநீரைக் குடிக்கலாமா என்ற சந்தேகம் மனதில் எழும்.
    இளநீர் மிகவும் குளிர்ச்சியானது. இதனை கர்ப்ப காலத்தில் குடித்தால், சில பெண்களுக்கு அது சூட்டை கிளப்பிவிடும். இதனால் பலருக்கும் கர்ப்ப காலத்தில் பெண்கள் இளநீரைக் குடிக்கலாமா என்ற சந்தேகம் மனதில் எழும். ஆனால் இளநீர் கர்ப்பிணிகளுக்கான மிகவும் அற்புதமான பானம்.

    ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக குடிக்கக்கூடாது. எப்போதுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை மறவாதீர்கள். இளநீர் கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

    இளநீரில் கொழுப்புக்கள் இல்லை மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே ஏற்கனவே உடல் பருமனுடன் இருக்கும் கர்ப்பிணிகள் இளநீரைக் குடித்தால், எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இளநீர் வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை தான் பாதுகாக்கும்.

    கர்ப்ப காலத்தில் உடலில் எலக்டோலைட்டுகளை சமநிலையுடன் வைத்து, குமட்டல், சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கினால் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க உதவும். இளநீரில் உள்ள முக்கிய எலக்ட்ரோலைட்டுகள் தசைகளின் செயல்பாட்டிற்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும் உதவும்.

    கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் இளநீரில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இப்பிரச்சனைகளைத் தடுக்கும்.

    இளநீரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இது கர்ப்ப காலத்தில் பெண்களின் நோயெதிர்ப்பு சக்தியின் அளவை அதிகரிக்க உதவும். இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது. இது வைரஸ்களை எதிர்த்துப் போராடும் சக்தி வாய்ந்த மோனோலாரினை உற்பத்தி செய்து, நோய்த்தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

    இளநீரில் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருப்பதால், கர்ப்பிணிகள் இளநீரைக் குடித்தால், கர்ப்ப கால சர்க்கரை நோய் வரும் அபாயம் குறையும்.

    இளநீர் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வைப் போக்கி, உடலில் ஆற்றலை அதிகரிக்கும். மேலும் இளநீர் சரும செல்களுக்கு ஊட்டமளித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை ஊக்குவித்து, ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வருவதைத் தடுக்கும்.

    இளநீரை கர்ப்பிணிகள் குடித்தால், பனிக்குட நீரின் அளவு அதிகரித்து, கருப்பையில் வளரும் கருவின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக கடைசி மூன்று மாத காலத்தில் பெண்கள் குடித்தால், இந்த நன்மை கிடைக்கும்.
    சிவப்பு அவல், நட்ஸ் சேர்த்து செய்யும் இந்த சாலட் மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுத்தம் செய்த சிவப்பு அவல் - ஒரு கப்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - ஒன்று,
    பச்சை மிளகாய் - ஒன்று
    வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி -தேவையான அளவு
    கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    நெய் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

    சிவப்பு அவல் - நட்ஸ் சாலட்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் நெய்விட்டு வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

    அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பிறகு இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

    பிறகு அவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.

    மேலே கொத்தமல்லித்தழை, வறுத்த நட்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கிப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ஒவ்வாமை வருவது தற்போது அதிகரித்து உள்ளது. தூசு, மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது.
    ஒவ்வாமை என்ற வார்த்தையை சொன்னாலே, உடனடியாக, தோலில் தடிப்புத் தடிப்பாக வருவது தான், நம் நினைவிற்கு வரும். வெறும், 5 முதல் 10 சதவீதம் மட்டுமே தோலில் தடிப்பாக தோன்றும். அடிக்கடி சளி பிடிப்பது, மூக்கடைப்பு, தும்மல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, கண்கள் சிவப்பது, மாத்திரைகள், உணவால் ஏற்படுவது என்று ஒவ்வாமை பாதிப்புகளை நிறையப் பார்க்கிறோம்.

    குழந்தைகளுக்கு ஒவ்வாமை வருவது தற்போது அதிகரித்து உள்ளது. தாய்ப்பாலில் இருந்து வேறு உணவிற்கு மாற தொடங்கும் ஆறு மாதங்களில் இருந்து, உணவு ஒவ்வாமை வருகிறது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜியானது, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.

    ஒரு குழந்தைக்கு, பால் ஒவ்வாமை என்றால், பால் குடித்த, 24 மணி நேரத்திற்குள் முகம், கை, கால் வீங்கி விடும். எத்தனை முறை பால் குடித்தாலும், குடித்த, 24 மணி நேரத்திற்குள் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் வர வேண்டும். அப்போது தான், அந்த குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று சொல்ல முடியும். பால் குடித்தவுடன், ஒவ்வாமைக்கான அறிகுறிகள் இருந்தது. ஆனால், அடுத்த நாள் வரவில்லை என்றால், அது பாலால் ஏற்பட்ட பிரச்சினை இல்லை. வேறு காரணங்களால் இருக்கலாம்.

    குறிப்பிட்ட உணவால் ஒவ்வாமை என்றால், எத்தனை முறை அந்தப் பொருளை சாப்பிட்டாலும், ஒவ்வொரு முறையும் அதே பாதிப்பு வர வேண்டும். குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பிரச்சினை வருகிறது என்ற சந்தேகம் இருந்தால், அதை உறுதி செய்து கொள்ள, நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. 20 நிமிடங்களிலேயே எந்த உணவால் ஒவ்வாமை வருகிறது என்பதை கண்டுபிடித்து விட முடியும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவை தெரிந்து, தவிர்ப்பது பாதுகாப்பான வழி. உலகம் முழுவதிலும் இதைத் தான் பின்பற்றகின்றனர்.

    இது தவிர, தூசு, மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது. மூக்கடைப்பு, தும்மல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் அடிக்கடி வருகிறது, அலர்ஜியால் ஏற்பட்ட பாதிப்பு என்று தெரியாமலேயே சிகிச்சை எடுப்பர். இது ஏதோ வெளிப்புறத்தில் காற்று மாசு அதிகம்; அதனால், வருகிறது என்று நினைக்கிறோம். ஆனால், வீட்டிற்குள்ளேயே இருக்கும் பிரச்சினை இது.

    வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள், வளர்ப்பு பிராணிகளின் ரோமம், கரப்பான் பூச்சியால் வரும் அலர்ஜி என வீட்டுக்குள்ளும் பல்வேறு காரணங்கள் உள்ளன. இதை பரிசோதித்து அறியவும் வசதிகள் உள்ளன.
    குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள் 181, 1091, 122 போன்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    உயிர்க்கொல்லி நோயான கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தி ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் முடங்கி கிடக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் தன்னலம் பேணி, குடும்பத்தையும் காத்து, நாட்டை நலமாய் இருக்க உதவவேண்டிய இந்த வேளையில், குடும்ப சண்டைகளும், பெண்களுக்கான வன்முறைகளும் ஆங்காங்கே நடப்பதாக செய்திகளிலும், அரசாங்க உதவி எண்கள் 181 பெண்கள் உதவி மையம், 1091 காவல்துறை பெண்கள் உதவி மையம், 122 பெண்கள் உதவி எண் மற்றும் பேரிடர் தீர்வு உதவி மையங்கள் மூலமும் மாநில மகளிர் ஆணையம், சமூக நல வாரிய உதவி மையம் மூலமாகவும் அறிய வருகிறது. இது வருந்தத்தக்க போக்காகும்.

    தமிழக அரசின் சமூக நலத்துறை, குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு உடனடி தேவைகளான தொலைபேசி மூலம் ஆற்றுப்படுத்துதல், மருத்துவ உதவி, குறுகிய கால தங்கும் வசதி, உணவு போன்ற அத்தியாவசிய தேவை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றினை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. குடும்ப வன்முறையில் பார்க்கப்படும் பெண்கள், உடனடியாக பெண்கள் உதவி எண் 181, காவல் துறை உதவி எண் 1091 மற்றும் 122 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் பாதுகாப்பு அலுவலர்கள், குடும்ப நல ஆலோசகர்கள் ஆகியோரால் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக நலத்துறை மூலம் செயல்படும் சேவை இல்லங்கள், ஒருங்கிணைந்த சேவை மையம், இடைக்கால தங்கும் இல்லங்கள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் ஸ்வதார் இல்லங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவதுடன், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, இலவச சட்ட உதவி, மன நல ஆலோசனை ஆகியவை வழங்கப்படும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை தங்கள் குழந்தைகளுடன் அங்கேயே தங்கலாம்.

    பெண்களது கண்ணியம் மற்றும் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் எனவும், குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தயங்காமல் பெண்கள் உதவி எண்களான 181, 1091, 122, மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் அருகாமையில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களை உடனடியாக தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    உடலின் சீரான வளர்ச்சிக்கு புரதச்சத்துதான் மிகவும் உதவுகிறது. உடலில் செல்கள் உருவாவதற்கும், அவை வளர்ச்சி அடைவதற்கும் புரதச்சத்து அத்தியாவசியம்.
    குழந்தையானாலும் சரி, இளம்பருவத்தில் இருந்தாலும் சரி வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி இருந்தால் தான், நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தம். பலர் இயற்கையாகவே ஒல்லியாக இருப்பதைக் காணலாம். குண்டாக இருப்பவர்கள் உடல் இளைக்க விரும்புவதைப்போலவே ஒல்லியாக இருப்பவர்கள் சதைப்பிடிப்போடு இருக்க மாட்டோமா? என ஏங்குகிறார்கள்.

    பொதுவாக உடல்வாகு என்பது அவரவர் பரம்பரையைப் பொறுத்தது. அப்பா, அம்மா ஒல்லியாக இருந்தால் அவர்களின் வாரிசுகளும் ஒல்லியாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு. இப்படி பரம்பரை காரணமாக ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆகவே, இவர்கள் உடல் ஒல்லியாக உள்ளதே என்று கவலைப்பட அவசியமே இல்லை.

    சத்துக் குறைவு காரணமாக உடல் ஒல்லியாக இருப்பவர்கள் தான் நம்மிடம் அதிகம். வறுமையோடு போராடும் ஏழைகளுக்கு தினமும் பால், பழம், முட்டை, மீன், இறைச்சி போன்ற சத்துள்ள உணவுகள் கிடைப்பது அரிது. இதனால், சத்து குறைவு நோய்கள் இவர்களை எளிதில் ஆக்கிரமித்துக் கொள்ளும். இது போன்ற பிரச்சினை காரணமாகவும் சிலர் ஒல்லியாக இருப்பார்கள்.

    எந்த நேரமும் சாக்லெட், மிட்டாய், பிஸ்கட், சூயிங்கம், அரிசி என்று எதையாவது ஒன்றை வாயில் மென்று கொண்டே இருப்பார்கள். பசிக்கிற நேரத்தில் இதுபோன்று தின்பண்டங்களை தின்று வயிற்றை நிரப்பிக்கொள்வதால், அவர்களுக்கு தேவைப்படுகிற சத்துள்ள காய்கறி, கீரை, பழம் போன்ற உணவுகளை சாப்பிடுவது குறைந்துவிடும். இந்த மாதிரியான உணவுப் பழக்கம் நாளடைவில் உடல் மெலிவுக்குக் காரணமாகிவிடும்.

    நன்றாக உடல் வளர்ச்சியோடு இருக்கும் ஒருவர் திடீரென்று மெலிய ஆரம்பித்தால், அதற்கு உடலில் தோன்றியுள்ள நோய்தான் காரணமாக இருக்கமுடியும். குறிப்பாக காச நோய், நீரிழிவு நோய், கல்லீரல் நோய், சவலை நோய், சிறுநீரக நோய், மன நோய், குடல் புழுக்கள், அஜீரணம் என்று பெரிய பட்டியலே போடலாம். ஒல்லியாக உள்ளவர்கள் முதலில் அதற்கான சரியான காரணத்தை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சராசரி உடல் வாகை பெறமுடியும். உடல் வளர்ச்சி சரியாக இருக்க வேண்டுமானால், சரியான கலோரி அளவுள்ள உணவைச் சாப்பிட வேண்டியது முக்கியம். இதற்கு ஓர் உணவியல் நிபுணரிடம் ஆலோசித்து உங்களுக்கு தேவையான கலோரியை கணக்கிடுங்கள். பொதுவாக, நாள் ஒன்றுக்கு ஆணுக்கு 2,200 கலோரியும், பெண்ணுக்கு 1,800 கலோரியும் தேவை. ஒல்லியாக இருப்பவர்கள் 1000 கலோரியை தருகிற அளவுக்கு உணவை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

    உடலின் சீரான வளர்ச்சிக்கு புரதச்சத்துதான் மிகவும் உதவுகிறது. உடலில் செல்கள் உருவாவதற்கும், அவை வளர்ச்சி அடைவதற்கும் புரதச்சத்து அத்தியாவசியம். தசைகள் வலுவடைவதற்கும், பொலிவு பெறுவதற்கும் புரத உணவு மிக அவசியம். உடலில் ஏற்படும் காயங்களும் புண்களும் விரைவில் குணமாவதற்கு புரதம் இருந்தால்தான் முடியும். உடலில் ஹார்மோன்கள், என்சைம்கள், செரிமான நீர்கள் போன்றவை சீராகச் சுரப்பதற்கும் புரதம் தேவை.

    வயது, வேலையின் தன்மை, உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றை பொறுத்து ஒருவருக்கு நாளொன்றுக்கு 50-லிருந்து 75 கிராம்வரை புரதம் தேவைப்படும்.
    கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அன்றாட செயல்பாடுகளில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது பலவழிகளில் கிருமி தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது.
    கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அன்றாட செயல்பாடுகளில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது பலவழிகளில் கிருமி தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது. அப்படி கொரோனா வைரஸ் கிருமிகள் இல்லாவிட்டாலும், மற்ற கிருமிகள் படர்ந்திருக்கக்கூடும். அந்த பகுதிகள் முறையான கிருமிநாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தப்படுகிறதா? கடையில் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கூடுமானவரை கையுறை அணிந்து பொருட்களை எடுப்பது நல்லது.

    பொருட்கள் வாங்குவதற்கு நகரும் வண்டியையோ, கூடையையோ உபயோகிப்பதற்கு முன்பும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏற்கனவே வண்டி, கூடையை நிறைய பேர் உபயோகப்படுத்தி இருப்பார்கள். அதில் எந்த வகையான கிருமிகள் படந்திருக்கும் என்பது தெரியாது. அதனால் கைப்பிடி பகுதிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தபிறகு உபயோகிப்பது நல்லது.

    கடைகளில் சமூக இடைவெளியை கடைப் பிடித்து பொருட்களை எடுத்தாலும் மற்றவர்கள் பொருட்களை எடுப்பதற்கு அருகே வந்தால் விலகி சென்றுவிடுவது நல்லது. தெரிந்தோ, தெரியாமலோ அவர்களின் உடல் பாகங்கள் உராய்ந்துவிட்டால் கிருமிகள் கடத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆதலால் எப்போதும் ஆறு அடி தூரம் விலகி நிற்பதுதான் பாதுகாப்பானது. காய்கறிகள், பழங்கள் வாங்கி வந்தால் உடனே தண்ணீரில் அலசி சுத்தம் செய்துவிடுங்கள்.

    அதுபோல் கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், கவர்களில் அடைக்கப்பட்டிருக்கும் பொருட்களையும் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் கிருமிகள் படர்ந்திருக்கக்கூடும். அந்த பொருட்களை நிறைய பேர் எடுத்து பார்த்திருப்பார்கள். வீட்டுக்கு வந்ததும் அவற்றை நன்றாகக் கழுவி, துடைத்து வைக்க வேண்டும். காகிதங்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பொருட்களை வாங்கி வந்தாலும் அவற்றை பிரித்தெடுத்து சுத்தம் செய்துவிடுங்கள். கடைக்கு பொருட்கள் வாங்க செல்வதற்கு உபயோகிக்கும் பையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

    அவற்றிலும் கிருமிகள் பரவி இருக்கக்கூடும். கடையில் கூட்டத்தை தவிர்ப்பதற்கு காலைவேளையில் செல்வதுதான் நல்லது. பொருட்கள் வாங்குவதற்கு பணப்பரிவர்த்தனையிலும் கவனமாக இருக்க வேண்டும். ரூபாய் நோட்டுகளிலும் கிருமிகள் படர்ந்திருக்கலாம் என்பதால் டெபிட் கார்டு, கிரிடிட் கார்டுகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது. தினமும் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். மூன்று, நான்கு நாட்களுக்கோ அல்லது ஒரு வாரத்திற்கோ தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிவிடுவது நல்லது. அடிக்கடி வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்துவிடலாம்.
    குழந்தை வயதுக்கு ஏற்ப அவர்களின் தனிப்பட்ட மற்றும் சில காரணங்களை பொறுத்து ஒரு குழந்தைக்கு தேவைப்படும் தூக்கத்தின் அளவு மாறுபடுகிறது.
    குழந்தை வயதுக்கு ஏற்ப அவர்களின் தனிப்பட்ட மற்றும் சில காரணங்களை பொறுத்து ஒரு குழந்தைக்கு தேவைப்படும் தூக்கத்தின் அளவு மாறுபடுகிறது.

    பிறந்த குழந்தை எவ்வளவு நேரம் தூங்கும்

    1-4 வாரம் ஆன குழந்தையின் தூங்கும் நேரமானது 15 முதல் 18 மணி நேரம் வரை நீடிக்கும். பிறந்த குழந்தையின் உட்புற உயிரியல் கடிகாரம் அல்லது சர்காடியன் ரிதம் இல்லாதால் தூங்கும் நேரமானது பகல்நேரம் மற்றும் இரவுநேரம் சுழற்ச்சிகளுடன் தொடர்பில் இருப்பதில்லை. உண்மையில் பிறந்த குழந்தை தூங்கும் நேரம் ஒரு குறிப்பான நேரமே இருக்காது.

    1-4 மாதம் ஆன குழந்தையின் தூங்கும் நேரம்:

    1-4 மாதங்கள் ஆன குழந்தை தூங்கும் நேரம் நாள் ஒன்றுக்கு 14-15 மணி நேரம் வரை இருக்கும்.  இந்த மாத குழந்தைகளின் தூங்கும் நேரமானதுஒரு வடிவத்திற்கு வந்திருப்பதை நீங்கள் உணர்விர்கள். 1-4 மாதம் ஆன குழந்தையின் நீண்ட தூக்கமானது 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும்.

    4-12 மாதம் குழந்தை தூங்கும் நேரம்:

    4-12 மாதம் ஆன குழந்தையின் தூங்கும் நேரமானது 15 மணி நேரம் இருப்பது மிகவும் சிறந்தது. 11 மாதம்  வரை உள்ள குழந்தை, தூங்கும் நேரமானது 12 மணி நேரம் தான் இருக்கும். உண்மையாக இந்த மாத குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தூக்கம் என்பது மிகவும் அவசியம். பொதுவாக இந்த மாதக் குழந்தையின் தூக்கமானது நாள் ஒன்றுக்கு மூன்று சிறுதூக்கம் தொடர்ந்து ஆறு மாதம் வரை இருக்கும். எனவே அந்த நேரத்தில் அவர்கள் இரவில் தூங்குவதற்கு உடல் திறன் கொண்டிருப்பார்கள்.

    இந்த வயது குழந்தையின் தூக்கத்தின் உயிரியல் தாளங்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளதால், வழக்கமாக கால இடைவெளிகளை தூங்குவது பொதுவாக இந்த காலத்தின் பிற்பகுதியில் நிகழ்கிறது. குழந்தையின் காலை சிற்றுண்டிக்கு பிறகு சிறுதூக்கம் பொதுவாக 9 மணியில் இருந்து 1 மணிநேரம் வரை இருக்கும். குழந்தையின் மதிய சிறுதூக்கம் 2 மணிக்கு தொடர்ந்து 1 அல்லது 2 மணி நேரம் வரை நிகழும். பிற்பகல் பிற்பகுதியில் சிறுதூக்கமானது 3 முதல் 5 மணி நேரம் வரை நிகழும், இந்த இடைவெளி நேரமானது வேறுபடும்.

    1-3 வயது ஆன குழந்தை தூங்கும் நேரம்:

    இந்த வயது குழந்தைகளுக்கு 14 மணி நேரம் தூக்கம் போதுமானது. இந்த வயது குழந்தைகள் காலை அல்லது மாலை வேளை சிறுதூக்கத்தை இழப்பார்கள். நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே பகலில் தூங்குவார். இந்த வயது குழந்தைக்கு 14 மணி நேரம் தூக்கம் தேவைப்படும் போது அவை வழக்கமாக 10 மணி நேரம் மட்டுமே கிடைக்கும். எனவே நாள் ஒன்றுக்கு ஒரு குட்டிதூக்கம் தேவைப்படும். அதுவும் ஒன்று முதல் மூன்றரை மணி நேரம் வரை இருக்கலாம். இவர்களின் இரவு தூங்கும் நேரமானது 7 மணி முதல் 9 மணிக்குள் தூங்கி, காலை 6 மணி முதல் 8 மணிக்குள் எழுந்திருப்பார்கள்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பேஸ் பேக்கை வாரத்தில் இரண்டு முறை போட்டு வந்தால் வெயிலினால் சருமத்தில் ஏற்பட்ட கருமை படிப்படியாக மறைந்து வெள்ளையாக மாறுவதை தாங்களே உணருவீர்கள்.
    சாதாரணமாக நாம் வெயிலில் எங்காவது வெளியே சென்று வந்தாலே போதும் சருமம் மிகவும் கருமையாக மாறிவிடும், இதனால் சருமம் எண்ணெய் பசையுடன் காணப்படும் இந்த பிரச்சனை சரியாக இதை ட்ரை பண்ணுங்கள்.

    அதாவது ஒரு சுத்தமான பவுலில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பேக் போல் தயார் செய்து கொள்ளவும்.

    இவற்றை சருமத்தை நன்றாக கழுவிய பின், அப்ளை செய்யுங்கள் பின் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    இவற்றை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர வெயிலினால் ஏற்படும் முக கருமை நீங்கி, முகம் வெள்ளையாக மாற உதவி செய்யும்.

    இதை வாரத்தில் இரண்டு முறை ட்ரை செய்து பாருங்கள் நிச்சயம் முகம் படிப்படியாக கருமை மறைந்து வெள்ளையாக  மாறுவதை தாங்களே உணருவீர்கள். இது முழுக்க முழுக்க இயற்கை அழகு குறிப்பு என்பதால் சருமத்திற்கு எந்த ஒரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. எனவே தயக்கம் இல்லாமல் இந்த ஃபேஸ் போக்கினை ட்ரை செய்யலாம்.

    இந்த சுண்டல் வெயிலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாகும். இன்று இந்த சுண்டல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொள்ளு - 1 கப்
    பச்சை பயறு - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    தேங்காய் துருவில் - விரும்பிய அளவு

    தாளிக்க

    எண்ணெய் - அரை டீஸ்பூன்
    கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - 3

    கொள்ளு பச்சைப் பயறு சுண்டல்

    செய்முறை

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொள்ளுவையும், பச்சைப் பயறையும் இரவே ஊறவையுங்கள். இல்லையென்றால் காலையில் ஊறவைத்தால் மாலையில் செய்யலாம். இரண்டையும் குக்கரில் வேகவைத்துத் தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள்.

    சுண்டலைச் சேர்த்து, உப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

    அடுத்து  அதில் எலுமிச்சைச் சாறு பிழிந்துகொள்ளலாம்.

    சத்தான சுவையான கொள்ளு பச்சைப் பயறு சுண்டல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் மன நல குறைபாடுகளோடு பிறப்பதற்கு மருத்துவ அறிவியல் ஆய்வாளர்களால் பிரதானமான காரணமாக கூறப்படுவது, நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளும் நடைமுறை தான் என்கின்றனர்.
    ஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் மன நல குறைபாடுகளோடு பிறப்பதற்கு மற்றும் மருத்துவ அறிவியல் ஆய்வாளர்களால் கூறப்படுவது பிரதானமான காரணமாக கூறப்படுவது, நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளும் நடைமுறை தான் என்கின்றனர். நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்கின்ற ஆண், பெண்களுக்கு எந்த ஒரு உடல், மன நல குறைபாடுகள் இல்லை என்றாலும், அவர்கள் தங்களிடம் இருக்கிற தங்கள் மூதாதையர்களின் மரபணுக்களை தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு கடத்துவதால், அந்த மூதாதையர்களுக்கு இருந்த உடல், மன நல குறைபாடுகள் இப்போது பிறக்கின்ற குழந்தைக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்பது மருத்துவ உலகின் கருத்தாக இருக்கிறது.

    பெண்கள் முதன் முதலில் கர்ப்பம் தரித்த காலம் முதல் குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் இந்த ஊட்டச்சத்துகள் தான் வயிற்றில் வளருகின்ற தங்களின் குழந்தைகளின் உடல்நலத்திற்கு அடிப்படையாக அமைகிறது. சத்து இல்லாத, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் வகையிலான உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் அது கருவில் வளரும் குழந்தையின் உடலில் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

    அனைத்து மனிதர்களுக்கும் ரத்த அழுத்தம் அவர்களின் வயதிற்கு ஏற்ப இருக்கும். பெண்கள் கர்ப்பமடைந்த பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு சராசரியான அளவிற்கு சற்று கூடுதலாக இருப்பது இயல்பானது தான். ஆனால் ஒரு சில பெண்களுக்கு அதீத ரத்த அழுத்தம் கர்ப்ப காலத்தில் ஏற்படுவதால், அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடுகளை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

    நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதிலும், அந்த உணவில் இருக்கின்ற நச்சு தன்மைகளை அழித்து உடலுக்கு தேவையான சத்துகளை பிரித்து தரும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரல் நச்சு தன்மையால் பாதிக்கப்பட்டு, அழற்சி உண்டாகி மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. கர்பிணிகளுக்கு இந்நோய் ஏற்பட்டால் வயிற்றில் வளரும்குழந்தைகளை உடற்குறைபாடு கொண்ட குழந்தைகளாக பிறக்க செய்து விடும் சூழல் ஏற்படுகிறது.

    ஒரு தாயின் வயிற்றில் 10 மாத காலம் இருந்து பின்பு பிறக்கின்ற குழந்தை உடல் ரீதியான முழுமையான வளர்ச்சியை பெற்றிருக்கும். இத்தகைய குழந்தை பிறப்பு ஒரு முழுமையான கர்ப்ப கால பிறப்பாக கருதப்படுகிறது. 10 மாதத்திற்கும் முன்பாகவே குழந்தை பிறக்கின்ற நிலையை குறை பிரசவம் என்கின்றனர். இப்படி குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன. இந்த குறைபிரசவமாக குழந்தை பிறப்பதால் முழுமையான உடல் வளர்ச்சி பெறாமல் அங்க குறைபாடு உள்ள குழந்தையாக பிறக்கின்ற நிலையை அதிகரிக்கிறது.

    10 மாத காலம் கருவில் குழந்தை சுமக்கும் பெண்கள், தங்கள் வயிற்றில் வளருகின்ற குழந்தையின் நிலையை அடிக்கடி மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு வயிற்றில் வளரும் குழந்தையின் உடலை கருக்கொடி சுற்றிக்கொள்வது, குழந்தையின் தலை திரும்பாமல் இருப்பது போன்றவை குழந்தை உடற்குறைபாடு கொண்டு பிறக்கின்ற நிலையை ஏற்படுத்திவிடுகிறது.

    10 மாத காலம் கழிந்ததும் பிரசவ வலி எடுத்து, குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தில் வயிற்றில் இருந்து வெளிவரும் குழந்தையின் தலைக்கு பதிலாக கால் முதலில் வெளியே வருவது, பிரசவ காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் எலும்பு முறிவு போன்ற காரணங்கள் குழந்தை ஊனமாக பிறக்கின்ற நிலையை உண்டாக்குகிறது. மேற்கூறிய பிரச்சனைகளை தவிர்ப்பதன் மூலமும், பேறு காலத்தில் அனுபவம் வாய்ந்த மருத்துவரின் ஆலோசனை பெறுவதன் மூலமும் குழந்தை உடல் மன நல குறைபாடுகள் இல்லாமல் பிறக்க செய்ய முடியும்.
    குடியிருப்புகளில் உருவாகும் நெருப்பு பாதிப்புகளில் பெரும்பாலானவை சமையலறையில் ஏற்படுவதாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் இல்லத்தரசிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.
    சமையல் அறையில் மின்சாரம் மின் உபகரணங்கள் கூர்மையான பொருட்கள் எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் ஆகியவை அன்றாடம் பயன்படுத்தப்படுகின்றன. நெருப்பினால் உண்டாகும் பாதிப்புகள் கவனக்குறைவு மற்றும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது ஆகிய காரணங்களால் ஏற்படுகின்றன. குடியிருப்புகளில் உருவாகும் நெருப்பு பாதிப்புகளில் பெரும்பாலானவை சமையலறையில் ஏற்படுவதாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் இல்லத்தரசிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

    . காற்றோட்டமான தரைமட்ட பகுதியில் நிமிர்ந்த நிலையிலேயே எப்போதும் சிலிண்டர் வைக்கப்படவேண்டும். சிலிண்டர் மட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் கியாஸ் அடுப்பு இருக்க வேண்டும். ‘கியாஸ் டியூப்பில்’ விரிசல்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வது அவசியம். பயன்படுத்தாத சமயங்களில் சிலிண்டர் ‘நாப்’ மூடிய நிலையில் இருக்கவேண்டும்.

    . பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைப்பதை தவிர்ப்பது அவசியம். அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு கியாஸ் கசிவு இருக்கும் பட்சத்தில் பெரும் பாதிப்பாக உருவாகலாம்.

    . காற்றை விட கியாஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நிலையில் அது தரைமட்ட அளவில் பரவி நிற்கும். கியாஸ் கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தால் அறையில் உள்ள சுவிட்சுகளை பயன்படுத்தாமல் ஜன்னல் கதவுகளை நன்றாக திறந்து வைத்து காற்றோட்டத்தை ஏற்படுத்தி கியாஸ் வெளியேறும்படி செய்ய வேண்டும்.

    . கியாஸ் கசிவை கண்டறிந்து எச்சரிக்கை எழுப்பும் கருவியை (Gas Leak Detectors) பொருத்திக்கொள்வது பல வகைகளில் பாதுகாப்பானது.

    . சமையலறையில் கூர்மையான பல கருவிகள் சமையலறை மேடையில் உள்ள நிலையில் குழந்தைகள் அவற்றால் காயம் அடையும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் குழந்தைகளை சமையலறைக்குள் அனுமதிப்பது கூடாது.

    . சமையலறையில் கால்களை மூடும் வகையில் செருப்புகள் அணிந்து கொள்வது பாதுகாப்பானது. அதன் மூலம் தவறுதலாக கத்தி போன்ற கூர்மையான கருவிகள் கீழே விழுவதால் கால்களில் ஏற்படும் காயங்கள் தவிர்க்கப்படும்.

    . சமையலறையில் நீண்ட கைகள் கொண்ட தொளதொளப்பான ஆடைகள் அணியக் கூடாது. அவ்வகை துணிகளில் எளிதில் நெருப்பு பற்றும் வாய்ப்பு கொண்டவை. மேலும் சிந்தெடிக் வகை ஆடைகளும் பாதுகாப்பானதாக இருக்காது. காரணம் எதிர்பாராத விதமாக நெருப்பு பட்டால் உடலுடன் அவை ஒட்டிக்கொள்ளும்.

    . ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சமையலறையில் உள்ள மின்சார இணைப்புகளை சரிபார்த்துக்கொள்வது நல்லது.

    . சிறிய அளவில் உருவான தீ விபத்துக்களின்போது பயன்படுத்த ‘பயர் பிளாங்கெட்’ (Fire blanket) மற்றும் தீ அணைப்பான் (fire extinguisher) ஆகியவற்றை வீடுகளில் வைத்திருப்பது பாதுகாப்பானது.

    . உடைந்த மின்சார சுவிட்சுகளை தொட்டு விடாமல் அவற்றை உடனடியாக மாற்றி விட வேண்டும்.

    . மின் சாதனங்கள் அல்லது மின்சார வயர்களில் எதிர்பாராத நிலையில் தீப்பிடித்துக் கொண்டால் தண்ணீரை ஊற்றுவது தவறானது. மெயின் சுவிட்சை உடனடியாக அணைத்து விட்டு தீயணைப்பான் மூலம் நெருப்பை அணைப்பதே பாதுகாப்பானது.

    . நெருப்பை உணர்ந்து அதனை ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவியை (Automatic Fire Detection And Alarm System) பொருத்திக்கொள்வது பாதுகாப்புக்கு ஏற்றதாக அமையும்.
    ×