என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்க சோப்பு, பவுடர், கிரீம் போன்றவற்றை தூரமாக வைத்துவிட்டு இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு குளியல் பொடி தயாரித்து பயன்படுத்துங்கள்.
    முகத்தையும், சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. சோப்பு, பவுடர், கிரீம் போன்றவற்றை தூரமாக வைத்துவிட்டு இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு குளியல் பொடி தயாரித்து பயன்படுத்துங்கள்.

    தேவையான பொருள்கள் :

    சோம்பு - 100 கிராம்,
    கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்,
    வெட்டிவேர் - 200 கிராம்,
    அகில் கட்டை - 200 கிராம்,
    சந்தனத்தூள் - 300 கிராம்
    கார்போக அரிசி - 200 கிராம்
    தும்மராஷ்டம் - 200 கிராம்
    எலுமிச்சை தோல் - 200 கிராம்,
    கோரைக்கிழங்கு - 200 கிராம்
    கோஷ்டம் - 200 கிராம்,
    ஏலரிசி - 200 கிராம்,
    பாசிப்பயிறு - அரை கிலோ,
    மகிழம் பூ பொடி - 200 கிராம்.

    மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. இவைகளை வாங்கி தனித்தனியாக காயவைத்து அரைத்து காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளவும். பின் தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உங்கள் சருமம் எவ்வித பிரச்சனைகள் இன்றி அழகாக இருக்கும்.
    பெரரெட் தோசை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சத்து நிறைந்த வரகு அரிசி சேர்த்து பெசரெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிறுபயறு - 1 கப்
    வரகு - அரை கப்
    இஞ்சி - சிறிய துண்டு,
    பச்சை மிளகாய் - 3.

    அலங்கரிக்க :

    பெரிய வெங்காயம்,
    கொத்தமல்லித் தழை

    வரகு அரிசி வெங்காய பெசரெட்

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பயறு, வரகு அரிசி இரண்டையும் நன்றாக கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    பின்பு சிறிது உப்பு சேர்த்து கலந்து தோசைக்கல்லில் மெல்லியதாக வார்த்து அதனை சுற்றி வெங்காயம், கொத்த மல்லித் தழை தூவவும். ஒருபுறம் வெந்ததும் மெதுவாக திருப்பி போட்டு வேகவைக்கவும்.

    இதோ சுவையான, ஆரோக்கியம் நிறைந்த வரகு அரிசி வெங்காய பெசரெட் தயாராகிவிட்டது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளில் ஆட்டிசத்தைத் தடுக்க கர்ப்பிணி பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவரை தவறாமல் பார்வையிடுவதோடு உங்கள் மருந்துகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
    குழந்தைகளில் ஆட்டிசத்தைத் தடுக்க கர்ப்பிணி பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவரை தவறாமல் பார்வையிடுவதோடு உங்கள் மருந்துகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்வது அவசியம். இது உங்கள் உடலிலும் குழந்தையின் உடலிலும் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் கண்காணிக்க உதவும். கர்ப்ப காலத்தில் நீங்கள் உருவாக்கும் பழக்கங்கள், இறுதியில் உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என்பதால் இது ஒரு முக்கியமான நேரம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    Harvard School of Public Health நடத்திய ஆய்வில் தாயின் மூன்றாவது மூன்று (Third trimester) மாதங்களில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் உருவாகும் ஆபத்து இரட்டிப்பாகிறது. அவர் அந்த நேரத்தில் அதிக மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறார். ஆனால் இதற்கு காரணமான குறிப்பிட்ட மாசுபடுத்தி எது என்பது இன்னும் குறிப்பிடப்படவில்லை. எனவே மாசுபாட்டின் அளவு அதிகமாக இருக்கும்போது வீட்டுக்குள் இருப்பது அல்லது உட்புற பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடுவது நிச்சயமாக உதவும்.

    கர்ப்பிணிப் பெண் தினமும் 500 முதல் 800 மி.கி. வரை ஃபோலிக் அமிலத்தை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை பரிந்துரைக்கிறது. கர்ப்ப காலத்தில் குறைந்த அளவு ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்வது, குழந்தைக்கு ஆட்டிசம் உருவாக வழிவகுக்கும் என்கிறது ஆராய்ச்சி. எனவே மருத்துவர் பரிந்துரைப்படி சரியான அளவு ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இரண்டு முதல் ஐந்து வருட இடைவெளியில் அடுத்த கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு ஆட்டிசம் உருவாகும் வாய்ப்பு மிகக் குறைவு. முதல் கர்ப்பத்திற்குப் பிறகு அடுத்த 12 மாதங்களுக்குள் கருத்தரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆட்டிசம் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் அதிகம். அதிக வயதில் கருத்தரிக்கும் பெற்றோரின் குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படும் அபாயமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஒரு குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

    கர்ப்ப காலத்தில் தாயின் உணவுமுறை, பழக்கவழக்கம், உடல்நிலை மற்றும் மனநிலை போன்ற அனைத்தும் சரியாக இருப்பது அவசியம். துரிதவகை உணவுகள், உடல் நலத்திற்கு தீங்கு உண்டாக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதும் குழந்தைக்கு பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் இவற்றை தவிர்ப்பது அவசியம். 
    உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின் வேலையை இன்னும் சுலபமாக்குகின்றன. பாஸ்வேர்டு திருட்டு தொடர்பாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் மூலம் இதை உணரலாம். இணைய அமைப்பில் உள்ள ஓட்டைகளில் நுழையும் சாமர்த்தியம் ஹேக்கர்களுக்கு கைகொடுத்தாலும், உண்மையில் பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான அடிப்படை விழிப்புணர்வு இல்லாமலிருப்பது, அப்படியே விழிப்புணர்வு இருந்தாலும் அதை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டும் இணையவாசிகளின் போக்கே ஹேக்கர்களுக்கு அனுகூலமாக அமைந்து விடுகிறது.

    உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வழக்கமான பதங்களைப் பயன்படுத்த வேண்டாம், அகராதி சொற்கள் வேண்டாம், குறைந்தது எட்டு எழுத்துக்களாவது இருக்க வேண்டும் என நல்ல பாஸ்வேர்டுக்கான முக்கிய அம்சங்களையும் எடுத்துக்கூறி வருகின்றனர். பலரும் இவற்றை அறிந்திருப்பதில்லை. அப்படியே அறிந்திருந்தாலும், தங்கள் பாஸ்வேர்டுகளை வலுவாக்கி கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். அதைவிட மோசமாக, ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி பாஸ்வேர்டு தேவை எனும் அறிவுரையை காற்றில் பறக்க விட்டு, ஒரே பாஸ்வேர்டை எல்லா சேவைகளிலும் பயன்படுத்தும் வழக்கமும் பலருக்கு இருக்கிறது.

    இப்படி பாஸ்வேர்டு சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வல்லுனர்களும், ஆய்வாளர்களும் ஓயாமல் உழைத்து, புதிய தீர்வுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து, பாஸ்வேர்டு வலுவானதா? என பரிசோதித்து சொல்லும் புதிய சேவை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

    இணையவாசிகள் தாங்கள் உருவாக்க விரும்பும் பாஸ்வேர்டை இந்த சேவைக்கான தளத்தில் ‘டைப்’ செய்தால், அது எந்த அளவு வலுவானது என்று உணர்த்தப்படுகிறது. இந்த வகை சேவை ஒன்றும் புதிதல்லதான். பாஸ்வேர்டு வலுவானதா என்பதைக் கண்டறிந்து சொல்லும் இந்த வகை சேவை ‘பாஸ்வேர்டு மீட்டர்’ எனக் குறிப்பிடப்படுகின்றது. இதற்கென தனியே இணையதளங்களும் இருக்கின்றன. இவ்வளவு ஏன், கூகுள் உள்ளிட்ட இணைய சேவைகள் இது போன்ற பாஸ்வேர்டு மீட்டரை தங்கள் பாஸ்வேர்டு உருவாக்க பக்கத்திலேயே ஒருங்கிணைத்துள்ளன. புதிய பாஸ்வேர்ட்டை தட்டச்சு செய்யும் போதே, அது எந்த அளவு வலுவானது என உணர்த்தப்படுகின்றன.

    உங்கள் பாஸ்வேர்டு பலவீனமானது, அதை மேலும் வலுவாக்க முயற்சி செய்யுங்கள் எனும் செய்தியை தெரிவிப்பதே பாஸ்வேர்டு மீட்டரின் நோக்கம். ஆனால் இந்த மீட்டர்கள் எல்லாவற்றுக்குமே ஒரு பொதுவான பலவீனம் உண்டு. இவை பாஸ்வேர்டுகள் பலவீனமானவை என்று சொல்கின்றனவே தவிர, வலுவான பாஸ்வேர்டுகளை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவது இல்லை. ஒரு பாஸ்வேர்டை உருவாக்கும் போது அது, வலுவானதா என சோதித்துப் பார்ப்பது நல்லதுதான். ஆனால் அது நோஞ்சான் பாஸ்வேர்டு என்று தெரிந்தால், பயில்வான் பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி என்று தெரிய வேண்டும் அல்லவா? இந்தக் குறையை போக்கும் வகையில் கார்னகி மெலான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கிய புதிய பாஸ்வேர்டு மீட்டர் சேவை அமைந்துள்ளது. இந்தச் சேவை, புதிய பாஸ்வேர்டு வலுவானதா என்பதை உணர்த்துவதோடு, அதற்கான காரணங்களையும் புரிய வைக்கிறது. அதோடு பாஸ்வேர்டை வலுவாக்குவதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது.
    ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு செல்போன் வழியாக அவர்களது குடும்ப டாக்டர்கள் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். கட்டணத்தை கூட கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
    கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லாமல் வேறு எந்த காரணத்துக்காகவும் பொதுமக்கள் வெளியே நடமாடக்கூடாது என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வீட்டின் வளாகம் மற்றும் மொட்டை மாடிகளில் நடைப்பயிற்சி மற்றும் தேவையான உடற்பயிற்சிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரிய பெரிய ஆஸ்பத்திரிகள் தவிர சாதாரண கிளினிக்குகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் தங்களது வழக்கமான உடல்நல பரிசோதனைகள் செய்யக்கூட முடியவில்லை. குறிப்பாக உடல் எடை குறைப்புக்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறவர்கள், டாக்டர்கள் ஆலோசனையின்றி தவிக்கிறார்கள். இதனால் தங்கள் உடல்நலம் குன்றிவிடுமோ? என்று மக்கள் அஞ்சுகிறார்கள். எனவே தங்களது வழக்கமான குடும்ப டாக்டர்களின் உதவியை மக்கள் நாட தொடங்கியுள்ளார்கள்.

    மக்கள் வீடுகளில் இருக்கும் சமயங்களில் உடலநலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் கை மருத்துவம் செய்யவேண்டாம் என்றும், டாக்டர்கள் உதவியை நாடுமாறும் அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. அதை கடைபிடித்து மக்கள் தங்கள் குடும்ப டாக்டர்களை செல்போனில் தொடர்புகொள்கிறார்கள். மக்களின் மனநிலையையும், சூழ்நிலையையும் உணர்ந்துகொண்டு டாக்டர்களும் செல்போன் வழியாக தேவையான அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் வீடியோ கால் வழியாகவும் உடல்நலம் குறித்த அறிவுரைகளையும் டாக்டர்கள் வழங்குகிறார்கள்.

    தேவையான மருந்து, மாத்திரைகள் குறித்த விவரங்களையும் ‘வாட்ஸ்-அப்’பில் டாக்டர்கள் அனுப்பி வைக்கிறார்கள். மேலும் உடற்பயிற்சி முறைகள், உணவு உட்கொள்ளும் முறைகள் குறித்த தேவையான அறிவுரைகளையும் மக்களுக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்துவிடுகிறார்கள். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் அடிக்கடி தங்கள் டாக்டர்களை உதவியை நாடி தேவையான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்று விடுகிறார்கள்.

    இவ்வாறு, இதற்கென தனியாக நேரம் ஒதுக்கி வேண்டிய ஆலோசனைகளை டாக்டர்கள் வழங்கி வருவதை பார்க்க முடிகிறது. இதற்கான கட்டணத்தை (கன்சல்டேஷன் பீஸ்) சிலர் ஆன்லைனில் அனுப்ப முன்வந்தாலும் டாக்டர்கள் அதனை மறுத்துவிடுகிறார்கள். சில டாக்டர்கள் “நீங்கள் கட்டணம் செலுத்த விரும்பினால் கொரோனா தொற்று நடவடிக்கைக்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வையுங்கள். அது போதும்” என்று பெருந்தன்மையாக கூறுகிறார்கள்.
    ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை எனில், சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்ற குழந்தை எனில், வாய் கொப்பளித்து துப்புவதைக் கற்று கொடுங்கள்.
    ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் கொடுத்தப் பின்னரும் ஈரத்துணியால் வாய், ஈறு, நாக்கு ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

    பற்கள் ஒன்று, இரண்டு முளைத்த குழந்தைகள் என்றால், மிகவும் சாஃப்டான பிரஷ் வாங்கி மிதமாக பற்களை சுத்தம் செய்யவும். சர்குலர் மோஷனாக குழந்தையின் பல்லை சுத்தம் செய்யுங்கள்.

    பழுப்பு அல்லது வெள்ளை நிற புள்ளிகள் ஏதேனும் வாயில் வந்தால் பல் மருத்துவரிடம் குழந்தையை காண்பிக்கவும்.

    குழந்தையின் வாய் துர்நாற்றம், பற்சொத்தை இருந்தாலும் கட்டாயம் மருத்துவரிடம் காண்பிக்கவும்.

    0-1 வயது வரை குழந்தைக்கு இனிப்பு பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டாம்.

    1-3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, முடிந்தவரை சாக்லேட், கேண்டி போன்றவற்றைக் கொடுக்காமல் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வெல்லம், பனங்கற்கண்டு, பனை சர்க்கரை தரலாம்.

    பல் முளைக்கும் குழந்தைகளுக்கு, டீத்திங் பொம்மைகள் வாங்கித் தரலாம். ஃபிங்கர் ஃபுட்ஸ் செய்து கொடுக்கலாம்.

    ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை எனில், சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்ற குழந்தை எனில், வாய் கொப்பளித்து துப்புவதைக் கற்று கொடுங்கள்.

    குழந்தைகளுக்கு எப்போதுமே பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது. அதிக அளவு பேஸ்ட் தேவையில்லை.

    பல் தேய்த்த பிறகு வாயை நன்றாகத் தண்ணீரால் கழுவி, கொப்பளித்துத் துப்ப வேண்டும் என அறிவுறுத்துங்கள்.

    காலை, இரவு என இரண்டு வேளையும் பல் துலக்க கற்றுக் கொடுக்கவும்.

    ஒவ்வொரு முறை எந்த உணவு சாப்பிட்ட பின்பும், வாய் கொப்பளித்து துப்பும் பழக்கத்தை குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.
    டயட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் இந்த செலரி சட்னி ஆரோக்கியமானது.இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    செலரி கீரை - அரை கட்டு,
    நறுக்கிய கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    பூண்டுப் பல் - 2,
    தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு,
    பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செலரி சட்னி

    செய்முறை:

    வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பூண்டு, செலரி, கொத்தமல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இறக்கவும்.

    இதனுடன் தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை, உப்பு, சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் கலந்து பரிமாறவும்.

    சத்தான செலரி சட்னி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கனவு இல்லத்தை எவ்வளவு சிரத்தை எடுத்து கட்டுகிறோமோ? அதே அளவு அதனை வீட்டை வெறும் கட்டிடமாக பார்க்காமல் கனவு கட்டி எழுப்பிய கோட்டையாக என்றும் நினைத்து பராமரித்து வந்தால் வீடு பொலிவை இழக்காமல் அழகாக தோற்றமளிக்கும். கவனம் செலுத்த வேண்டும்.
    கனவு இல்லத்தை எவ்வளவு சிரத்தை எடுத்து கட்டுகிறோமோ? அதே அளவு அதனை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் வீடு எப்போ தும் புதுபொலிவுடன் காட்சி தரும். வீடு பராமரிப்பு ஒரு கலையாகவே கருதப்படுகிறது. வீட்டை பராமரிப்பதற்கு அதனை தூய்மையாக வைத்தி ருப்பதே முதன்மையான விஷயமாக இருக்க முடியும். பொதுவாக வீட்டில் உள்ள அறைகளை அடிக்கடி பெருக்கி வந்தாலே குப்பைகள் சேருவது குறைந்து சுத்தமாக காட்சி அளிக்க தொடங்கிவிடும்.

    அதேபோல் வாரம் ஒரு முறையாவது வீட்டை கழுவி வருவதும் சிறப்பானதாக அமையும். சில பெண்கள் வெள்ளிக்கிழமை உள்ளிட்ட விசேஷ நாட்களிலும், மாத பிறப்பையொட்டியும் வீட்டின் தரையை கழுவி சுத்தம் செய் வார்கள். வெள்ளை நிற வினி கர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்தால் வீடு தூய்மை யாக மாறுவதுடன் பளபளப் பாகவும் காட்சி தரும்.

    கதவுகளை மாதம் ஒரு முறை யாவது சுத்தம் செய்துவிட வேண்டும். ஜன்னல்களில் தூசி படிய வாய்ப்பு உள்ளதால் அதனை அடிக்கடி துடைத்து வருவது தூய்மையோடு உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். அதுபோல திரைச் சீலைகள், குஷன் கவர், சோபா கவர், மெத்தை கவர் போன்ற வற்றை மாதம் ஒருமுறையாவது சலவை செய்துவிட வேண்டும். இது வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தை தரும். குளி யல் அறைகளை சுத்தம் செய் யும்போது கரப்பான் பூச்சிக் கொல்லி, எறும்புக்கொல்லி களை பயன்படுத்தி சுத்தம் செய்தால் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். அதேபோல் வீட்டை அலங்கரிக்கும் அலங் கார பொருட்களையும் அடிக் கடி துடைத்து சுத்தப்படுத்தி னால் அவைகள் கண்கவர் அழகில் எப்போதும் காட்சி அளிக்கும். எப்போதுமே பொருட்களை எடுத்து பயன் படுத்திய பின்னர் அவற்றை மீண்டும் அதற்குரிய இடத்தில் திரும்ப வைக்கும் பழக்கம் வரவேண்டும். சிலர் பொருட் களை எடுத்து பயன்படுத்திய பின்னர் வேலை முடிந்துவிட் டது என்ற எண்ணத்தில் அப்படியே ஏதாவது ஒரு இடத்தில் போட்டுவிடுவார் கள்.

    அப்படி செய்தால் பொருட் கள் அங்கும், இங்குமாக ஒழுங் கற்று கிடக்கும். அது அறையை பார்ப்பதற்கு அலங்கோலமாக இருப்பதுபேல் தோன்ற வைக் கும். அதனால் எந்த பொருட் களையும் ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும். மேலும் அறையின் எந்த இடத்தில் வைத்தால் எடுப்பாக இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு அலங்கரித்தால் அறை அற்புதமாக காட்சி அளிக்கும். அதேபோல் அறை சுவற்றில் உள்ள சிலாப்புகளில் ஏராளமான பொருட்களை போட்டு வைத்துவிடுவார்கள். அதை அடிக்கடி எடுத்து உப யோகப்படுத்தினால் பரவா யில்லை. ஆனால் அப்படியே நீண்ட நாட்கள் போட்டுவிட் டால் பொருட்கள் தூசிபடிந்து பொலிவை இழக்க தொடங் கிவிடும். ஆகையால் வாரத் திலோ அல்லது மாதத்திலோ ஒரு முறையாவது எடுத்து சுத்தம் செய்துவிட வேண் டும். அலமாரிகள், சமையல் அறை யில் பொருட்கள் வைக்கும் இடங்கள் போன்றவற்றையும் தூசு தட்டிவிட வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட்டுவிட்டால் குப்பைகள் சேர்ந்துவிடும். எப்படியும் நாம்தான் சுத்தம் செய்யப்போகிறோம் என்பதை மனதில் கொண்டு அவ்வப் போது சுத்தம் செய்து வந்தால் குப்பை சேராது. அதுபோல் சுவர்களில் வெடிப்பு, கீறல் ஏற்பட்டால் அதனை உட னுக்குடன் சரிசெய்து விட வேண்டும்.

    அது தவிர குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் வீட்டுக்கு வர்ணம் பூசிவர வேண்டும். அது வீட்டுக்கு அழகை கூட்டுவதுடன், பராமரிப்பு பணியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

    வீட்டை வெறும் கட்டிடமாக பார்க்காமல் கனவு கட்டி எழுப்பிய கோட்டையாக என்றும் நினைத்து பராமரித்து வந்தால் வீடு பொலிவை இழக்காமல் அழகாக தோற்றமளிக்கும்.
    வைட்டமின்-டி சத்து குறைபாடு கொண்டவர்களின் உயிரை அதிக அளவில் கொரோனா வைரஸ் காவு வாங்கியிருப்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    லண்டன்:

    கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிரை வேகமாக குடித்து வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த ஒரு பக்கம் மருத்துவ விஞ்ஞானிகள் தடுப்பூசி மற்றும் குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    இன்னொருபுறம், கொரோனா எப்படிப்பட்டவர்களை தாக்குகிறது? என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மாற்றி உயிரிழப்பை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த விரிவான ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத முதியவர்கள் உயிரை கொரோனா வைரஸ் எளிதில் தனக்கு இரையாக்கிக்கொள்கிறது, என்பது தொடக்கத்திலேயே கண்டறியப்பட்ட உண்மை.

    2 வாரங்களுக்கு முன்பு 120 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவர்களில் 5-ல் ஒருவர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழக்கிறார் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்தது.

    இந்த நிலையில், இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் ராணி எலிசபெத் ஆஸ்பத்திரி பவுண்டேசன் டிரஸ்ட் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து 20 ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எந்த குறைபாடு காரணமாக இறந்தார்கள்? என்பதை ஒப்பீடு செய்து அண்மையில் ஓர் ஆய்வை நடத்தினர்.

    இதன் தொடக்க நிலை ஆய்வின் முடிவில் பெரும்பாலானவர்கள், வைட்டமின்-டி சத்து குறைபாட்டால் கொரோனா வைரசிடம் உயிரை பறிகொடுத்திருப்பது, தெரிய வந்துள்ளது.

    இடைத்தொடர்ந்து வைட்டமின்-டி சத்து கிடைக்கும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

    இது குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறுகையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வைட்டமின்-டி சத்து கூடுதலாக கிடைத்தால் அவர்கள் வேகமாக குணம் அடைவதற்கு வாய்ப்பு அதிகம். ஏனென்றால் இந்த சத்து குறைபாடு காரணமாகத்தான் இவர்களை கொரோனா எளிதாக தாக்கி உள்ளது. இறந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைட்டமின்-டி மிகவும் குறைவாக கொண்டிருந்தவர்கள்தான்” என்றனர்.

    சரி, வைட்டமின்-டி சத்து எவற்றில் இருந்து அதிகம் கிடைக்கிறது?

    * இயற்கையாகவே சூரிய ஒளி மூலம் வைட்டமின்-டி மனிதர்களுக்கு நிறைய கிடைக்கிறது.

    * மீன்களில் சூரை, காலா, கானாங் கெழுத்தி, சங்கரா ஆகியவற்றில் வைட்டமின்-டி உள்ளது. குறிப்பாக காலாவில் அதிகம்.

    * ஆரஞ்சு பழச்சாறு, தானிய வகைகள், சோயா பால், பாலாடைக்கட்டி, காளான், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றிலும் வைட்டமின்-டி தாராளமாக கிடைக்கிறது.

    கொரோனாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது, அவ்வப்போது சோப்பால் கை கழுவது போன்றவற்றுடன் வைட்டமின்-டியும் நல்ல ஆயுதமாகத்தான் தெரிகிறது!
    சமைக்கும்போது அடுப்பில் இருந்து வெளியாகும் புகை, குழம்பு கொதிக்கும்போது வெளியாகும் நீராவி போன்றவை கண்களில் படுவதாலும் எரிச்சல் உண்டாகலாம்.
    நாம் புழங்கும் இடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது சமையலறை. அதை, ‘ஒரு குட்டி தொழிற்சாலை’ என்று சொல்லலாம். கொதிக்கும் கலன்கள், எண்ணெய்களின் பயன்பாடு, கத்தி, முள்கரண்டி போன்ற கூர்மையான பொருட்கள் என அங்கே உள்ளவற்றை சரியாக கையாளாவிட்டால் கண்கள் பாதிக்கப்படலாம். சமையலறை உபகரணங்களால் கண்ணில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தால், தண்ணீர்விட்டு கழுவக் கூடாது. சுத்தமான துணியால் முகத்தை லேசாக மூடி, உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

    பாத்திரங்களை சுத்தப்படுத்தும் பொருட்கள் கண்களில்பட்டால் உடனே கண்களைக் கழுவ வேண்டும். இதை முதலுதவியாக செய்துவிட்டு, பிறகு கண் டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். மிளகுத்தூள், மசாலாத்தூள் போன்ற காரம் அதிகம் உள்ள மசாலா பொடிகளை பாத்திரத்தில் கொட்டும்போது அவை காற்றில் பறந்து கண்களில் படுவதாலோ, அவற்றை பயன்படுத்திவிட்டு அதே கைகளால் கண்களை தொடுவதாலோ கண்களில் எரிச்சல் உண்டாகும்.

    எனவே, இந்த பொடிகள் காற்றில் பறக்காத வண்ணம் பாத்திரத்தின் வாய்ப்பகுதிக்கு அருகே வைத்து கொட்ட வேண்டும். இந்த பொடிகளை பயன்படுத்தியதும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

    தாளிக்கும்போதும், காய்கறிகளை வதக்கும்போதும் கண்களில் தெறிக்கலாம். எனவே, மிக நெருக்கமாக நிற்கக் கூடாது. அல்லது, நீளமான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. வெங்காயத்திலுள்ள ‘ஆலினேஸ்’ என்ற நொதி, நறுக்கும்போது சல்பினிக் அமிலமாக மாறுகிறது. எரிச்சல் கொடுக்கும் தன்மைகொண்ட இந்த அமிலம், காற்றில் ஆவியாகி கண்களில் படுவதால் கண்ணீர் வருகிறது. வெங்காயத்தை நறுக்குவதற்கு முன் குளிர்ந்த நீரில் போட்டுவைக்கலாம். அல்லது பத்து நிமிடங்களுக்கு ப்ரீஸரில் வைத்து நறுக்கினால் கண் எரிச்சல் ஏற்படுவது குறையும்.

    சமைக்கும்போது அடுப்பில் இருந்து வெளியாகும் புகை, குழம்பு கொதிக்கும்போது வெளியாகும் நீராவி போன்றவை கண்களில் படுவதாலும் எரிச்சல் உண்டாகலாம். எனவே, புகை வெளியேறும்விதமாக ‘எக்சாஸ்ட் பேன்’ அமைக்க வேண்டும். அல்லது, சமையலறை காற்றோட்டமாக இருக்குமாறு ஜன்னல்கள் இருக்க வேண்டும். கண்களில் அடிபட்டாலோ அல்லது கண்கள் சிவந்து போனாலோ சிலர் மருந்துக்கடையில் ஏதாவது சொட்டு மருந்தை வாங்கிப் பயன்படுத்துவார்கள். அது ஆபத்து.

    கண்களில் தீக்காயம்பட்டால் மஞ்சள்தூள், களிம்பு, பேனா மை போன்றவற்றை போடக் கூடாது. அவற்றை பயன்படுத்தினால் காயத்தின் தீவிரத்தை சரியாக தெரிந்துகொள்ள முடியாது. மேலும் அவற்றை சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்படும். தொற்றும் ஏற்படக்கூடும்.

    கண்களில் எண்ணெய் விடுவது, தாய்ப்பால் விடுவது போன்ற சுய மருத்துவத்தையும் செய்யக் கூடாது. முக்கியமாக கண்களில் வலி, எரிச்சல், சிவந்துபோவது, கண்களை திறந்து வைத்திருக்க முடியாதது, தொடர்ச்சியான உறுத்தல், இமைகளில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண் டாக்டரை அணுகி பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    பள்ளிக்கு செல்லும் சிறுமிகளிடம் இது அதிகமாக பரவும். பேன் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தால், நமக்கும் பேன் வரும் வாய்ப்பு அதிகம்.
    பேன் தலையில் உருவாகும் ஒரு சிறிய பூச்சி. இது தலையிலும், முடி இருக்கும் கண் புருவத்திலும், கண் இமையிலும்கூட வரலாம். நெருக்கமான தொடர்பு மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது பரவும். இதனுடைய சிறிய முட்டை பார்ப்பதற்கு பொடுகு போல இருக்கும். இதனுடைய முட்டை இரண்டு வாரங்களுக்கு உயிர் வாழும். பேன் 30 நாட்கள் வரை உயிர் வாழும்.

    பள்ளிக்கு செல்லும் சிறுமிகளிடம் இது அதிகமாக பரவும். பேன் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தால், நமக்கும் பேன் வரும் வாய்ப்பு அதிகம். அவர்கள் உடுத்தும் உடைகளை உடுத்தினாலோ, அவர்களின் படுக்கையில் படுத்தாலோ பேன் வரும் வாய்ப்பு உண்டு.

    இது பெரிய மருத்துவ பிரச்சினையல்ல. தலையில் பேன் இருப்பதால் ஒருவர் சுத்தமற்றவர் என்றோ, சுகாதாரம் இல்லாதவர் என்றோ அர்த்தமில்லை. தலையில் அரிப்பு, சிறிதாக சிவந்த நிறத்தில் உருண்டு காணப்படுகிற கட்டிகள், சில நேரத்தில் சொறிந்தால் நீர் வருதல் போன்றவை பேனால் பாதிக்கப்பட்டவருக்கு காணப்படலாம். பேன் தொல்லை இருப்பவரின் முடியின் வேரில் வெள்ளை நிறத்தில் உருண்டு காணப்படும். நல்ல வெளிச்சத்தில் இதை பார்க்கலாம். நெருக்கமான கண்களை கொண்ட பேன்சீப்பை வைத்து, கூந்தலை சீவிக்கொள்ளலாம்.

    நவீன மருத்துவத்தில் லோ‌‌ஷன், ‌ஷாம்புகள் உண்டு. இன்னும் வீரியமுள்ள மருந்துகளை டாக்டர் சில நேரம் பரிந்துரைக்கலாம். மருந்தை தேய்த்து பத்து நிமிடம் காத்திருக்க வேண்டும். பின்பு தலையை நன்றாக கழுவவேண்டும். பேன் வந்தவரின் துணிகளை கொதிக்கவைத்த நீரில் முக்கி சுத்தப்படுத்த வேண்டும். தொப்பி, தலை துவட்டும் துண்டு, தலையணை உறை ஆகியவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது.

    ஆயுர்வேத மருத்துவத்தில் தைலம் உள்ளது. இதை தலையில் தேய்த்து குளித்தால் பேன் தொல்லை குறையும். சீத்தாப்பழ விதைகளை காயவைத்து பொடி செய்து சிறிதளவு எடுத்து சீயக்காயில் கலந்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் ஈறு, பேன் தொல்லை குறையும். வசம்பை தண்ணீர்விட்டு அரைத்து தலையில் நன்றாக தேய்த்து ஊறவைக்க வேண்டும். பிறகு, தண்ணீரில் தலை முடியை நன்றாக அலசினால் பேன் தொல்லை குறையும். துளசி இலையை மை போல் அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால், பேன்கள் செத்து உதிர்ந்துவிடும். கூந்தலும் நன்றாக வளரும்.

    50 கிராம் வேப்பம்பூவை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை தலையில் நன்றாக தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து குளித்தால், பேன் தொல்லை குறையும். வால் மிளகை ஊறவைத்து பால் விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்க, பேன் தொல்லை குறையும்.

    வேப்பிலை தூள் அரை டீஸ்பூன், கடுக்காய்த்தூள் அரை டீஸ்பூன், வெந்தயத்தூள் 2 டீஸ்பூன், பயத்தமாவு 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 1 டீஸ்பூன் ஆகியவற்றுடன் வெந்நீரை கலந்து தலையில் பூசிக்கொண்டு, பத்து நிமிடம் கழித்து அலசி குளித்தால் பேன் தொல்லை குறையும்.
    நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ உங்கள் அன்றாட பழக்க வழக்கங்களில் சிலவற்றை மாற்றி கொள்வதன் மூலம் நடத்தி காட்டலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.
    அதிகாலை 4 மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு முத்திரை, யோகா, உடற்பயிற்சி செய்யுங்கள்.

    அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று போக இடம் வேண்டும்.

    மிதமான உணவு எடுங்கள். கீரை, பழவகைகள், காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

    மாதுளம் பழம், கொய்யாபழம் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். அதிக காரம், மைதாவினால் ஆன உணவு தவிர்க்கவும். தெருவில் விற்கும் சுத்தமில்லாத பண்டங்கள் வாங்கி உண்ணாதீர்கள்.

    சாப்பிடும் முன் கைகளை நன்கு கழுவுங்கள். வெளியில் சென்று வீடு திரும்பினால் வீட்டிற்குள் நுழையுமுன் கை, கால் முகத்தை தண்ணீரில் சுத்தம் செய்து விட்டு வீட்டிற்குள் செல்லுங்கள்.

    காலை, மாலை இருவேளை குளிக்கலாம்.

    வாரம் ஒருநாள் 6 மிளகு நன்கு நுணுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் சுட வைத்து அதில் போட்டு குடிக்கவும்.

    15- நாட்களுக்கு ஒருமுறை காலை வேப்பங்கொழுந்து இலை பத்து (அ) பதினைந்து மென்று சாப்பிட்டு தண்ணீர் குடிக்கவும்.

    வீட்டில் குளியல் அறை, கழிவறைகளை சுத்தமாக வைக்கவும். படுக்கும் தலையனை உறை, போர்வை வாரம் ஒருமுறை துவைத்து சுத்தமாக வைக்கவும்.

    ஹோட்டலில் சாப்பிடும் பொழுது வெந்நீர் கேட்டு குடிக்கவும்.

    வாரம் ஒரு நாள் ஒரு வேளை அரைமுறி தேங்காய் மட்டும் உணவாக எடுக்கவும். நான் இன்று ஆரோக்கியமாக உள்ளேன். நாளையும் ஆரோக்கி யமாக இருப்பேன்.

    ஒவ்வொரு நாளும் என் ஆரோக்கியம் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்று ஆழ் மனதில் அடிக்கடி கூறுங்கள்.

    தினமும் காலை, மாலை நிமிர்ந்து கண்களை மூடி 15 நிமிடங்கள் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கவனித்து தியானியுங்கள். எந்த வைரஸ்சும், கிருமியும் உங்களை அண்டாது.
    ×