என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    வெயில் காலத்தில் சருமத்தில் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனைக்கு இயற்கை வைத்தியம்
    கோடை காலம் வந்தாலே அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை வியர்க்குரு தான். இந்த வியர்க்குரு வந்தால் உடல் முழுவதும் அலர்ஜி போல் வந்து புண்களாக மாறிவிடும். வியர்குருவை நீக்க நாம் அனைவரும் விதவிதமான பவுடர் வகைகளை பயன்படுத்துவோம். இனி அதை தவிர்த்து விட்டு எளிமையாக வீட்டில் உள்ளதை வைத்து வியர்குருவை போக்க சில வழிமுறைகளை இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

    கற்றாழை ஜெல் அனைத்து சரும பிரச்சனைக்கும் தீர்வு தருகிறது. சரும பிரச்சனையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வெயில் காலத்தில் ஏற்படும் வியர்குருவிற்கும் சிறந்ததாக விளங்குகிறது. கற்றாழையில் இருக்கும் ஜெல்லை வியர்க்குரு ஏற்பட்டு இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்த பின்னர் நன்றாக குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் கண்டிப்பாக இந்த வியர்க்குரு போன்ற பிரச்சனை உடனடியாக நீங்கும்.

    பெரும்பாலானோருக்கு வெயில் காலம் வந்தாலே வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனை இயல்பாகவே வந்துவிடும். இதற்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்னவென்றால் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டி தாங்க. இந்த ஐஸ் கட்டிகளை வியர்க்குரு உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்க்குரு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

    சந்தன பவுடரை பன்னிருடன் கலந்து வியர்க்குரு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு தடவ வேண்டும். நன்றாக தடவிய பிறகு சிறிது நேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் வியர்க்குரு தொல்லை அறவே இருக்காது.

    வியர்க்குருவை தடுக்க வெள்ளரிக்காயை நறுக்கி அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு அரைத்து வைத்த வெள்ளரிக்காய் விழுதை வியர்க்குரு உள்ள இடங்களில் 2 அல்லது 3 மணிநேரம் தடவி நன்றாக காயவைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு நீங்கி விடும்.
    வயிற்றில் புண் இருப்பவர்களுக்கு இந்த கஞ்சி மிகவும் நல்லது. இன்று சத்தான சுவையான இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புத்தம் புது அரிசி - ஒரு கப்
    நெய் - சிறிதளவு
    தேங்காய்ப்பால் (ஒரே பாலாக எடுக்கவும்) - 3 கப்
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
    உப்பு - ஒரு சிட்டிகை.

    கஞ்சி

    செய்முறை:

    அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து 4 கப் நீர் சேர்த்து உப்பு, நெய் கலந்து குக்கரில் வேகவிட்டு 4 விசில் வந்ததும் இறக்கவும்.

    இதை சூட்டுடன் இருக்கு போதே நன்கு மசித்து தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மருத்துவமனைக்கே அதிக அளவில் பணம் செலவு செய்யாமல், இயற்கை முறையில் உங்களது உடலை பார்த்துக் கொண்டால் மிக விரைவில் தானாகவே உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    தற்போதைய வாழ்க்கை முறையில் குழந்தையின்மைப் பிரச்சனை பலருக்கும் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக தற்போதைய வாழ்கை முறையும், உணவு பழக்கவழக்கம் முறையும் இருந்து வருகிறது. திருமணமாகி ஒன்று அல்லது இரண்டு வருடங்களிலேயே, குழந்தை இல்லையே என கவலைப்பட தேவை இல்லை.

    அவ்வாறு இருந்தால், மருத்துவரிடம் சென்று இருவரும் தங்களது உடல் நிலையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. மனதில் எந்த கவலையும் வைத்துக் கொள்ளாமல் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது மிகச் சிறந்தது ஆகும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் கொஞ்ச நாட்களுக்கு இறைச்சியை தவிர்ப்பது நல்லதாகும். மீன், முட்டை, கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.

    குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் ஒரு போதும் புகை, மது உள்ளிட்ட போதை பழக்க வழக்கங்களை ஒருபோதும் செய்யவே கூடாது. ஆண்கள் தினசரி இரண்டு வேளை உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்ததாகும். அதுவும் குறிப்பாக, அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் நபர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    தானிய வகைகள் அதிகம் எடுத்துக் கொள்வது சிறந்ததாகும். பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை போன்றவற்றை தினமும் எடுத்துக்கொண்டால் விரைவில் பலன் கிடைக்கும். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்த்து அதிக நேரம் உறங்குவது சிறந்ததாகும். மருத்துவமனைக்கே அதிக அளவில் பணம் செலவு செய்யாமல், இயற்கை முறையில் உங்களது உடலை பார்த்துக் கொண்டால் மிக விரைவில் தானாகவே உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 
    ஆக்கப் பூர்வமான எண்ணங்களை அதிகப்படுத்துதலே வெற்றிக்கான வழியாகும். எதை நம் ஆழ்மனம் எண்ணுகிறதோ அதையே நம் செயல்களும் பிரதிபலிக்கின்றன.
    நாம் வாழ்க்கையில், இரண்டு வகையான மனிதர்களை சந்தித்திருப்போம். ஒரு பிரிவினர், தங்களுக்கு கிடைத்த சாதாரண வெற்றியைக்கூட கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். மற்றொரு பிரிவினரோ, கடுமையான முயற்சியால் கிடைத்த வெற்றியைக்கூட கொண்டாட மாட்டார்கள். மாறாக, இதைவிட கூடுதலாக கிடைத்திருக்கலாமே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள்.

    இதைத்தான், ‘மகிழ்ச்சி, துக்கம் இரண்டும் கிடைக்கும் வெற்றி தருணங்களில் இல்லை; அது, நம் மனநிலையில் இருக்கிறது’ என்கிறார்கள் அறிஞர்கள். சுருக்கமாக, நமக்கு திருப்தியை தருவது நல்ல எண்ணங்கள்தான். இதனால் எதிர்மறையான எண்ணங்களை குறைத்து நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். எது நடந்தாலும் ‘எல்லாம் நன்மைக்கே’ என கருத வேண்டும்.

    உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது. இறுக்கமான மனிதர்களாகவும், எந்திர கதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.

    நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. இந்த எண்ணங்கள் நமக்கானதாக மட்டுமே இல்லாமல் பிறரைச் சார்ந்தும் அமைகிறது. பிறரின் எண்ணங்களுக்காகவே பயந்து வாழும் மனிதர்கள் ஒரு வகை. அடுத்தவர் முன் தன் மேதாவி தனத்தை காட்டும் மனிதர்கள் மற்றொரு வகை. ஆக இவை எல்லாவற்றிலும் அடங்கியிருப்பது எண்ணங்களே. எண்ணங்களுக்கு வலிமை உண்டு. அதனால் தான் எண்ணம் போல வாழ்வு என்றும், எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதும் இந்த பிரபஞ்ச வாழ்வில் வலிமை வாய்ந்த வார்த்தைகளாகவே கூறப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த எண்ணங்களை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதிலேயே வாழ்வின் சூட்சுமம் அடங்கி உள்ளது. பூ கொடுக்க வரும் பெண்மணியிடம் ‘பூ வேண்டாம்’ என்று சொல்வதை விரும்ப மாட்டார். நாளை வாங்கி கொள்கிறேன் என்று சொல்ல வேண்டும். இதுவே நேர்மறை எண்ணம். என்னால் முடியாது என்று எண்ணும் எண்ணம் எதிர்மறையான எண்ணமாக உருமாற்றமடைகிறது. பெரும்பாலான மனிதர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதும் இத்தகைய எதிர் மறை எண்ணங்களே. துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதும் இதனால் தான்.

    உனக்குள்ளே எல்லா ஆற்றல்களும் அடங்கியுள்ளது. நீ உன்னை வலிமை வாய்ந்தவன் என்று எண்ணினால் வலிமை படைத்தவனாகவே ஆகிறாய். இது வீரத் துறவியின் வார்த்தைகள். மனிதனின் எண்ணம் நம்பிக்கையாக வேர் விடும் போது அசாதாரண சக்தி பெறுகிறது. நேர்மறை எண்ணங்கள் : ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்வதற்கு முன் அன்றைய நாளில் நடந்த நல்லவற்றை பட்டியலிடுங்கள்.

    நான் எல்லா வகையிலும் முன்பை விட சிறந்து வருவதை உணர்கிறேன் என்று மனதிற்குள் கூறிக் கொள்ளும் போது அந்த எண்ணங்கள் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை உணர முடியும். அதே போன்றே இன்று புதிதாய் பிறந்தோம் என்னும் எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொண்டு இந்த நாள் என் வெற்றிக்கான நாளாகும் என்ற நல்ல சிந்தனையை மனதில் உருவேற்றிக் கொள்ள வேண்டும். எனவே தான் நமக்கான நல்ல எண்ணங்களை நாமே தான் உருவாக்கிட வேண்டும். நம்மை ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவை நம்மிடம் உள்ள எண்ணங்களே.

    ஆக்கப் பூர்வமான எண்ணங்களை அதிகப்படுத்துதலே வெற்றிக்கான வழியாகும். எதை நம் ஆழ்மனம் எண்ணுகிறதோ அதையே நம் செயல்களும் பிரதிபலிக்கின்றன. சபாஷ் நல்லா பண்ற, அசத்தல், பிரமாதம், ஆகா அருமை... இது போன்ற வார்த்தைகள். எல்லாம் மற்றவர்களிடமிருந்து வர வேண்டும் என்று எதிர்பார்க்காமல் நம்மிடமிருந்து நமக்காக வர வேண்டும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்தலும், எதையும் இலகுவாக கடந்து விடும்பக்குவமும் வந்து விட்டாலே வாழ்க்கையை அழகாக வாழ்ந்திடலாம். நல்ல எண்ணங்களால் வாழ்வை வசந்தமாக்கலாம்.

    சிவராஜன், 11-ம் வகுப்பு,

    எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளி,

    மல்லாங்கிணறு, விருதுநகர்.
    தினமும் இரண்டரை டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் தேவையற்ற கொழுப்பு உடலில் தங்காது. இதய நோய் பாதிப்பும் குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    உடல் பருமன், இதய ஆரோக்கியம், நீண்ட ஆயுள் ஆகிய மூன்றுக்கும் ஆரஞ்சு ஜூஸ் அவசியமானது. தினமும் இரண்டரை டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் தேவையற்ற கொழுப்பு உடலில் தங்காது. இதய நோய் பாதிப்பும் குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜர்னல் ஆப் லிப்பிட் ஆய்வறிக்கையில் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நோபி லிடின் எனும் மூலக்கூறுகள் உடல் பருமனை குறைக்கும் தன்மை கொண்டவை. பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுக்கவும் செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எலிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டன. அவை உடல் பருமனை தூண்டும் என்பது அதன் மூலம் உறுதிபடுத்தப்பட்டது. இன்னொரு பிரிவை சேர்ந்த எலிகளுக்கு ஆரஞ்சு பழத்தில் உள்ளடங்கி இருக்கும் நோபிலிடின் வழங்கப்பட்டது. ஆய்வின் முடிவில் நோபில்டின் உட்கொண்ட எலிகளின் உடல் மெலிந்து போயிருந்தது தெரியவந்தது. அவற்றின் உடலில் உள்ள இரத்த த்தில் கொழுப்பின் அளவு குறைந்திருப்பதும், இன்சுலின் அளவு கட்டுக்குள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இருப்பினும் நோபிலிடின் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிய கூடுதல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

    எலிகள் மற்றும் மனிதனின் உடல் அமைப்பு முறை ஒரே மாதிரியாக இருந்தாலும் முழுமையான ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு முழு அளவில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்கள். எனினும் ஆரஞ்சு ஜூஸ் பருகுவது உடல் பருமன் பிரச்சினைக்கு தீர்வை தரும் என்பதை உறுதிபடுத்தி இருக்கிறார்கள்.
    சகிப்பு தன்மை என்பது ஒவ்வொருவரது மனதிலும் இருந்து எழும் வாழ்வியல் நெறி சகிப்பு தன்மையை மறந்த நாடுகள் மண்ணாசையால் ஆயுதம் ஏந்தி அமைதியை தொலைத்திருக்கின்றன.
    பல்வேறு சாதி, மதம், இனம் கலாசாரம் என பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதோடு அதனை போற்றுவதும் தான் சகிப்பு தன்மை நான், நானாக இருப்பதும், நீ நீயாக இருப்பதும், அதே நேரத்தில் ஒருவரை ஒருவர் அங்கீகரிப்பதும், ஏற்றுக்கொள்வதே சகிப்புத்தன்மையின் அடையாளம். பன்முகத்தன்மை என்பது ஜனநாயகத்தை ஏற்று கொள்வது ஆகும். ஒற்றைப்பண்பை வலியுறுத்துவது வன்முறை என்பது நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென்னின் கருத்து. சகிப்புத்தன்மை என்பது பலவீனத்தின் அறிகுறியல்ல. பலத்தின் அடையாளம்.

    சகிப்பின்மையால் மொழி, மத, இன, சிறுபான்மையினர், இடம் பெயருவோர், அகதிகள் வெளிநாட்டுக்குடியேறிகள் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பாதித்து வருவதை காண்கிறோம். சகிப்பின்மை அமைதிக்கும், மக்களாட்சிக்கும் பெரும் இடையூறாக இருப்பதுடன் சமூக மேம்பாட்டுக்கும் தடையாக உள்ளது.

    அமெரிக்காவின் பூவகுடிகள் கொன்று குவிக்கப்பட்டதும், ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டதும், கருப்பர்களை வெள்ளையர்கள் அடக்கியாண்டதும் இலங்கையில் சிங்களர் தமிழர்களை படுகொலை செய்ததும் இன அடிப்படையிலான சகிப்பின்மைக்கு உதாரணம்.

    மொழி அடிப்படையில் தமிழர்கள் சகிப்பு தன்மை மிக்கவர்கள். தமிழக முதல் அமைச்சர்கள் பட்டியலை பார்த்தாலே அது விளங்கக்கூடும். “பொறுத்தார் பூமி ஆள்வார்“. “அகழ்வாரை தாங்கும் நிலம்“ போன்ற வார்த்தைகளை நம்முள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் பதியம் போட்டு வருபவர்கள் நம் முன்னோர்கள். எங்கு சகிப்பு தன்மை இல்லையோ; அங்கு ஜனநாயகம் வளராது.

    புத்தர், மகாவீரர் போன்ற ஞானிகளைத் தந்த நம் நாட்டுக்கு சகிப்புத்தன்மை என்ற நெறியை உலக அளவில் எடுத்து செல்லும் தகுதியும் கடமையும் உண்டு. சகிப்பின்மையால் ஏற்பட்ட பல ஆண்டுகால வெறுப்பை போக்குவதற்காக காந்திஜி அளவிற்கு இந்திய வரலாற்றில் வேறு எவரும் முயற்சி செய்ததாக தெரியவில்லை. வெறுப்பதும், கொந்தளிப்பதும் ஒன்றும் அத்தனை கடினமல்ல. ஆனால் உண்மையிலேயே அதற்கப்பால் செல்வதும், நேசிப்பதும், அத்தனை கடினமல்ல. அதை காந்திஜி செய்தார்.

    சகிப்பு தன்மை என்பது ஒவ்வொருவரது மனதிலும் இருந்து எழும் வாழ்வியல் நெறி சகிப்பு தன்மையை மறந்த நாடுகள் மண்ணாசையால் ஆயுதம் ஏந்தி அமைதியை தொலைத்திருக்கின்றன. மத, இன, சாதி, கலாச்சார ரீதியான சகிப்புத்தன்மையானது உயிர்களை பலிவாங்குவதம், அகதிகளை உருவாக்குவதுமாக இருக்கிறது. அவல ஓலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. ஒதுக்கலும், ஒடுக்குதலும் சகிப்பு தன்மையின் அடையாளம். அதை ஒதுக்குவோம்.

    வாழ்க்கையின் அடிப்படை உணர்ச்சிகளான அன்பு, நட்பு, ஈதல், சான்றாண்மை உள்ளிட்ட பண்புகளுடன் கல்வியறிவும் பெற்று சகிப்பு தன்மையுடன் வாழ முடிவெடுப்போம். எப்போது சகிப்புத்தன்மையை மேற்கொள்கிறோமோ, அப்போதே வியக்கத்தக்க வகையிலான வாழ்க்கையை நோக்கி நாம் பயணிக்க தொடங்கி விடுவோம். ஏனெனில், சகிப்புத் தன்மையே மானுடத்தின் மேன்மை.

    “சகிப்பு தன்மை என்பது பலவீனத்தின் அறிகுறியல்ல;

    பலத்தின் அடையாளம்.“
    கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் பச்சிளம் குழந்தையை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
    முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை நாம் நன்கு உணர்வோம். பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து உணர்ந்து அவர்களுக்கு ஏற்றதை செய்ய முற்பட வேண்டும்.

    குழந்தைப் பராமரிப்பு என்றதும் இது மகளிருக்கான பகுதி நமக்கெதுக்கு என்று நினைத்துவிட வேண்டாம். குழந்தைப் பராமரிப்பைப் பொறுத்தவரையில், தாயை விட அதிக அக்கறை எடுத்து கவனிக்கும் தந்தைகளும் இல்லாமல் இல்லை!

    இந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகள் இதோ:

    * வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.

    * வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குழந்தை மருத்துவரின் அனுமதி பெற்று, பால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வப்போது கொடுக்கலாம்.

    * குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.

    * ஒரே இடத்தில் படுத்து‌க்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இட‌ம்மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.
    ராகி அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ராகி அவல் வைத்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ராகி அவல் - 1 கப்
    தூளாக்கிய வெல்லம் - 1 கப்
    முந்திரி பருப்பு - 5 (நறுக்கிக்கொள்ளவும்)
    தேங்காய் துருவல் - கால் கப்
    ஏலக்காய் - 3 (தூளாக்கவும்)

    ராகி அவல் புட்டு

    செய்முறை:

    ராகி அவலை கொதிக்கும் நீரில் கொட்டி ஐந்து நிமிடம் ஊறவைத்து நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

    பிறகு அதனை இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும்.

    அகன்ற தட்டில் வேகவைத்த ராகி அவலை கொட்டி அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

    அவை மீது முந்திரி பருப்பை தூவி பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொத்தமல்லி இலையை நன்றாக பசை போல அரைத்து அதனுடன் கற்றாழைச்சாறு சேர்த்து தோல் மீது போட்டு வர தோலில் ஏற்படும் சுருக்கம், தோலில் உண்டாகும் தழும்பு குணமாகும்.
    புதிய கொத்தமல்லி இலையை நன்றாக பசை போல அரைத்து அதனுடன் கற்றாழைச்சாறு சேர்த்து தோல் மீது போட்டு வர தோலில் ஏற்படும் சுருக்கம், தோலில் உண்டாகும் தழும்பு குணமாகும்.

    கொத்தமல்லி இலையுடன் எலுமிச்சைபழச்சாறு விட்டு நன்றாக பசைபோல் அரைத்து இதை முகத்தில் உண்டாகும் கரும்புள்ளி, பருக்கள் இவைகளின் மீது தினந்தோறும் போட்டுவர அவைகள் மறையும்.

    கொத்தமல்லி இலையை பால் விட்டு நன்றாக பசைப்போல் அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து முகத்தில் தடவி வர முகப்பொலிவுடன் இருக்கும் மேனி பொலிவாகும்.

    கொத்தமல்லி இலையுடன் பாலாடைக்கட்டி சேர்த்து அதில் அரிசி மாவு தேவையான அளவு கலந்து நன்றாக அரைத்து ஒன்றுச்சேர்த்து பசையை முகத்தில் தடவி வர முகத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள், மங்கு, முகத்தில் உண்டாகும் சிறுசிறு துளைகள் ஆகியவை மறையும்.

    கொத்தமல்லி இலையுடன் தக்காளிச்சாறு, எலுமிச்சை பழச்சாறு, முல்தானிமட்டி பவுடர் இவைகளை ஒன்று சேர்த்து பசையாக்கி முகத்தில் அல்லது கை கால்களில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ள முகம் மற்றும் தோல் பொலிவுடன் இருக்கும்.

    கொத்தமல்லி இலையுடன் முட்டை வெண்கரு மற்றும் ஓட்ஸ்பவுடர் சேர்த்து பசையாக்கி முகத்தில் தடவி வர முகச்சுரசுரப்பு, முகத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள் மறையும்.
    கர்ப்பிணிகளை கொரோனா வைரஸ் குறிவைப்பது ஏன்? என்பது குறித்து மதுரை சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரையில் இதுவரை 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 பேர் கர்ப்பிணிகள்.

    தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. எனவே கொரோனாவில் இருந்து கர்ப்பிணிகள் எவ்வாறு தங்களை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    500 பேருக்கு பரிசோதனை

    மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மதுரை மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகள் அனைவருக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது பிரசவ தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரு வாரத்திற்கு முன்பு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவர்களுக்கு பாதிப்பு ஏதேனும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் மாத இறுதியில் இருந்து அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இந்த கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 59 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ரத்த பரிசோதனை, எச்.ஐ.வி. பரிசோதனை போன்று கொரோனா தொடர்பான பரிசோதனையும் செய்யப்படுகிறது. அதன்படி இதுவரை புறநகர் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

    கர்ப்பிணிகள் வெளியே செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதுபோல் கர்ப்பிணிகள் இருக்கும் வீட்டில் மற்ற நபர்களும் வெளியே சென்று வரும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் நோய் தொற்று அவர்களை விரைவில் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு வரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதாவது காலை முதல் மதியம் 12 மணி வரை மற்ற நோயாளிகள் அதிக அளவில் வருவார்கள். எனவே மற்ற நோயாளிகளிடமிருந்து கர்ப்பிணிகளுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க மதியத்திற்கு மேல் கர்ப்பிணிகளை சிகிச்சைக்கு வரவைக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் குறித்தும் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறையின் மூலம் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அறிவுறுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் கர்ப்பிணிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கடைபிடிக்கும்பட்சத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

    தனிமைப்படுத்தவும்

    கர்ப்பிணிகள் இருக்கும் வீடுகளில் உள்ள மற்ற நபர்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே சென்று வந்தால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். அதுபோல் வீட்டிலுள்ள குழந்தைகளையும் கவனிக்க வேண்டும். குழந்தைகள் வெளியே சென்று விளையாடி விட்டு வரும்போதும் அதன்மூலம் நோய்த்தொற்று கர்ப்பிணிகளுக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பிணிகள் வீட்டில் இருக்கும் போது தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. ஆரோக்கியமான உணவுகள், பழங்களை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    நமக்கு தூக்கம் நல்ல ஆழ்தூக்கமாக இல்லாது இருந்தால் காலையில் 8 மணி வரை தூங்கிய பிறகும் நான் சோர்வாகவே இருக்கின்றேன் என்று சொல்லுவோம் ஆக நம் ஆழ் தூக்கத்தினை பாதிக்கும் காரணங்களை அறிந்து நிவர்த்தி செய்து கொள்வோம்.
    நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப் பற்றி நீ சத்தமாக குறட்டை விடுகிறாய், ரொம்பவும் பிரண்டு பிரண்டு படுக்கின்றாய் என சொன்னால் மட்டுமே தெரியும். நமக்கு தூக்கம் நல்ல ஆழ்தூக்கமாக இல்லாது இருந்தால் காலையில் 8 மணி வரை தூங்கிய பிறகும் நான் சோர்வாகவே இருக்கின்றேன் என்று சொல்லுவோம் ஆக நம் ஆழ் தூக்கத்தினை பாதிக்கும் காரணங்களை அறிந்து நிவர்த்தி செய்து கொள்வோம்.

    * தூங்கி எழுந்த பிறகு தலை வலி (அ) வறண்ட தொண்டை ஆகிய தொந்தரவு இருக்கின்றதா? 4.5 சதவீதம் ஆண்களும், 2.8 சதவீதம் பெண்களும் 30-60 வயதில் இரவில் தூங்கும் பொ-ழுது மவுனமாகவோ சத்தமாகவோ குறட்டை விடுகின்றனர். மூக்கின் பாதை குறுகியதாலும் அடைபாட்டினாலும் இது ஏற்படுகின்றது. இவ்வாறு இருப்பவர்கள் இரவு படுக்கப் போகும் முன் வெது வெதுப்பான நீரில் குளித்தால் இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

    மேலும் இவர்கள் நிமிர்ந்து படுக்காமல் பக்கவாட்டில் படுத்தால் நன்கு உறங்க முடியும். அதிக எடை கூடியவர்கள் எடையினை குறைத்து கொள்வது நல்லது. ஹார்மோன் மாறுதல்கள், மது இவையும் தசைகளை தளர்த்தி மூக்கு வழிபாதை தடுப்பினை ஏற்படுத்தும், ஆகவே ஹார்மோன் சிகிச்சை மதுவினைத் தவிர்த்தல் ஆகியவைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    * பகலில் ஏதோ ஒரு படபடத்த விதமாகவே இருக்கின்றதால் இதற்கும் இரவு சரியான தூக்கமின்மை ஒரு காரணமாக இருக்கலாம். தூக்கம், லேசான தூக்கம், ஆழ்ந்த தூக்கம், கனவு என 90 நிமிடங்கள் ஒரு சுற்றாக வருகின்றது. கெட்ட கனவுகள் ஒருவரின் மன உளைச்சலாலும் ஏற்படுகின்றன. யாரிடமும் எதையும் சொல்லாது மனதிலேயே புழுங்கும் பொழுதும், பகலில் இப்பிரச்சினைகளுக்கான தீர்வினை காணாத பொழுதும் அவை கெட்ட கனவாக இரவில் வெளிப்படுவதாக மனநல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    நமக்கு நல்ல கனவுகள் வந்தாலும் கெட்ட கனவுகளே மனதில் நின்று அச்சுறுத்துகின்றன. ஆகவே, மனஉளைச்சல், பிரச்சினைகளை நம்பகமானவர்களோடு பகிர்ந்து கொள்வது இரவில் நல்ல தூக்கத்தினை தரும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    * சிலருக்கு திடீரென தூக்கத்தில் விழிக்கும் பொழுது கை, கால் அசைக்க முடியாதது போன்ற ஓர் உணர்வு சில நொடிகள் இருக்கும். 40 சதவீதம் மக்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது இதை அனுபவிக்கின்றார்கள். மனஉளைச்சல், படபடப்பு, விபத்துக்குள்ளான அதிர்ச்சி இப்படி பல காரணங்களை இதற்கு கூறலாம். பொதுவில் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு அதிக உணவு, காபி, மது இவைகளை கண்டிப்பாக தவிர்க்கும்படி அறிவுறுத்துகின்றனர். மன நல மருத்துவர் உதவியும் சிலருக்கு தேவைப்படுகின்றது.

    * சிலருக்கு தூக்கத்தில் ஆடைகள் நனையும் அளவு வியர்த்துக் கொட்டும். பொதுவில் தூங்கும் பொழுது நமது உடலின் உஷ்ண நிலை ஒரிரு டிகிரி இறங்குவது இயல்பு.உங்கள் உடலில் உள் உஷ்ணம் கூடுதலாக இருந்தால்.

    * காற்றோட்டமான அறை, மெல்லிய பருத்தி ஆடைகள், பருத்தி போர்வை போன்றவை உதவும். மேலும் இரவில் மசாலா உணவுகள் விருந்து போன்றவற்றினை தவிர்த்துவிட வேண்டும்.

    * பல் கடித்தல்
    * தூக்கத்தில் நடத்தல்
    * தூக்கத்தில் பேசுதல்

    இவை அனைத்திற்குமே மருத்துவ உதவி பெறுதல் நல்லது.

    உங்கள் உடல் உங்களைப் பற்றி சொல்பவை என்ன?

    * முறையான நிலையில் நிற்காமல் கோணல், மானலாக நிற்பதும், தறையை பார்த்தபடியே நிற்பதும் ஒருவர் சோர்வாக கவலையாக இருப்பதனைக் குறிக்கும்.
    * தலைவலி என்றால் முதலில் உடலில் நீர் சத்து குறைந்துள்ளதா, கண்ணுக்கு அதிக ஸ்ட்ரெயின் அல்லது கோணல் மாணலாக அமர்வது நிற்பது, படுப்பது போன்றவை கூட காரணமாக இருக்கலாம்.

    * சோர்ந்து தொய்வாக நடந்தால் நீங்கள் சக்தியற்று இருப்பதனையும் மனம் ஈடுபடாமல் இருப்பதனையும் சொல்கின்றது. வயிறு சரியின்மை, மன உளைச்சல் முதலில் வயிறு சரியின்மையில்தான் காண்பிக்கும். படபடப்பு இருந்தால் வயிற்றுப் போக்கு கூட இருக்கும். வயிறு சரியின்மைக்கு ஜீரணக் கோளாறு உள்பட மற்ற மருத்துவ காரணங்களும் உள்ளது.

    * உள்ளங்கையில் வியர்வை அதிக சூடு, மன உளைச்சல் போன்றவை காரணமாக இருக்கலாம்.

    * இரு கைகளையும் விரல்களை மடித்து பந்து போல் இருப்பது குழப்பம், படபடப்பு இருப்பதனை உணர்த்துகின்றது.

    முறையான உறக்கம், யோகா, உடற்பயிற்சிக்கு இவைகள் தரும் பலன் கொஞ்ச நஞ்சமல்ல. ஆகவே அவைகளை விடாது செய்யுங்கள். எல்லா வேலைகளும் உங்கள் தலையில் என்றால் ஸ்ட்ரெஸ்தான். ஆகவே மென்மையாக உறுதியாக நோ சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். சிறு சிறு மாற்றங்கள் நல்ல பலனைத் தரும். எனவே முறையாய் அதனை கடை பிடிக்க வேண்டும்.

    குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறோம் என்றால் சில வழிமுறைகளை பின்பற்றலாம். இதனால் குழந்தைக்கு வெயிலினால் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாத்து கொள்ளலாம்.
    சாதாரணமா சூரியக்கதிர்களிடமிருந்து நம்மை காத்துகொள்ளவே பெரும் பாடுபடுகிறோம். இதுல குழந்தைகளை வெயில்ல வெளில அழைச்சிட்டு போறோம் என்றால் சொல்லவே வேண்டாம் கண்டிப்பா குழந்தையைத்தான் அதிகமா இந்த சூரியக்கதிர்கள் தாக்கும். எனவே குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறோம் என்றால் சில வழிமுறைகளை பின்பற்றலாம். இதனால் குழந்தைக்கு வெயிலினால் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாத்து கொள்ளலாம்.

    பொதுவாக இது அன்னவருக்குமே சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். நாம் வெளில செல்கிறோம் என்றால் கண்டிப்பா ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்து செல்வது மிகவும் அவசியம். அதுவும் குழந்தைகளை அழைத்து கொண்டு செல்கிறோம் என்றால் கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்வது மிகவும் நல்லது.

    ஏனென்றால் வெயில் காலத்தில் வெளியே செல்கிறோம் என்றால் வெயிலின் தாக்குதலால் உடலில் இருக்கும் நீர்சத்தை குறைத்து உடலை வறட்சியடைய வழிவகுக்கிறது. எனவே குழந்தையை வெளியே அழைத்து செல்லும் பொது கண்டிப்பாக ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்லுங்கள். குழந்தையின் ஆரோக்கியத்தை காக்கக்கூடிய மற்றும் குழந்தையின் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய பழச்சாறினை தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும்.

    குழந்தை வெயிலில் வெளியே சென்று வந்தால் ஒரு கிளாஸ் ஜூஸ் தரலாம். இவ்வாறு தருவதனால் குழந்தையின் உடல் வெப்பத்தை கண்டிப்பாக தணிக்க உதவும்.

    வெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதுதான் சன் ஸ்ட்ரோக் வருவதற்குக் காரணம். இதைத் தடுக்க, வாரத்துக்கு இரண்டு முறை நல்லெண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும். வெயில் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் உச்சந்தலை சூடேறும். அதனால், தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியம்.

    குழந்தையை வெயில்காலத்தில் வெளில அழைச்சிட்டு போறோம் என்றால் எரிச்சலுட்டகூடிய எந்த ஆடையையும் அணிவதை இன்றுடன் தவிர்த்து கொள்ளவும். அதற்கு பதிலாக காட்டன் ஆடைகளை அணிவிப்பது மிகவும் நம்மையாகும். வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்

    வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு வெள்ளை, சந்தனம், பேபி பிங்க், பேபி ப்ளு போன்ற நிறங்களில் ஆடையை அணிவியுங்கள். இந்த நிறங்கள் வெயிலை உடலுக்குள் புகட்டாது. கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகளை கோடைக் காலம் முடியும் வரை தவிர்ப்பது மிகவும் நல்லது.

    விளையாடி விட்டு சோர்வாக வரும் குழந்தைக்கு ஈரத்துணியால் துடைத்து விடவும் அல்லது சின்ன டப்பில் தண்ணீர் நிரப்பி குழந்தையின் பாதம் நனையும் படி நிக்க வையுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் உடலின் வெப்பம் மெல்ல மெல்ல குறையும்.

    குழந்தைக்கும் வேர்க்கும் என்பதால் குழந்தை இருக்கும் இடத்தில் மிதமான காற்று சுழற்சி இருக்கவேண்டும். குறிப்பாக குழந்தையின் முகத்திற்கு நேராக காத்தாடியை வேகமாக சுத்தவிடக்கூடாது ஏன்னென்றால் குழந்தை சுவாசிக்க மிகவும் சிரமப்படும். இதன் காரணமாக குழந்தைக்கு மூச்சுதிணறல்  ஏற்படும்.
    ×