என் மலர்
ஆரோக்கியம்
சிறுதானியங்களில் கம்பு உடலுக்கு மிகவும் நல்லது. இன்று கம்பு ரவையை வைத்து சூப்பரான சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு ரவை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
வரமிளகாய் - 2
இஞ்சி - சிறிது
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கம்பு ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
பின் அதில் பொருங்காயத்தூளை தூவி வரமிளகாயை கிள்ளிப் போட்டு இஞ்சியை தட்டிப் போட்டு ஒரு முறை கிளற வேண்டும்.
அடுத்து அதில் வெங்காயம், கேரட் துருவல் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் கேரட் துருவல் நன்றாக வதங்கியதும் பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் கொதித்ததும் அதில் கம்பு ரவையை சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைக்கவும்.
பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல் தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கிவிட வேண்டும்.
இப்போது சுவையான கம்பு ரவை உப்புமா ரெடி!!!

இதனை புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்களே வீட்டில் உள்ள அறைகளில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை முன்கூட்டியே ஆராயுங்கள். அந்த பொருளின் வண்ணத்துக்கு ஏற்ப வண்ணங்களை தேர்வு செய்யலாம்.
ஒரு காலத்தில் ஒரே நாளில் வீட்டுக்கு வெள்ளை அடித்துவிடுவார்கள். பெரும்பாலும் சுண்ணாம்பு பூச்சாக இருக்கும் என்பதால் அதற்கு ஒரு நாளே போதுமானதாக இருந்தது. இப்போது அப்படியல்ல. ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு வண்ணம் பூசுகிறார்கள்.
எனவே வண்ணம் பூசுவதற்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதை முதலிலேயே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். ஒரே நாளில் முழு வீட்டுக்கும் வண்ணம் பூச போகிறோமா, தவணை விட்டு அறை அறையாக வண்ணம் பூசப்போகிறோமா என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
பெண்களே வீட்டில் உள்ள அறைகளில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை முன்கூட்டியே ஆராயுங்கள். அந்த பொருளின் வண்ணத்துக்கு ஏற்ப வண்ணங்களை தேர்வு செய்யலாம். இதுதொடர்பாக இணையதளத்தில் பயனுள்ள தகவல்கள் கிடைக்கின்றன. மேலும் சந்தையில் கிடைக்கும் பெயிண்ட் குறித்தும் விசாரியுங்கள். அளவு, தரம், வண்ண பொருத்தம் ஆகிய ஆலோசனைகள் சந்தையில் கிடைக்கும்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தால் வீட்டின் உள்பகுதியை பற்றி மட்டும் யோசித்தால் போதுமானது. தனி வீடாக இருந்தால் வெளிப்புறத்துக்கு வண்ணம் பூசுவது குறித்தும், மழை, வெயிலில் தாங்கும் அளவுக்கு வண்ணம் பூசுவது பற்றி திட்டமிடுவதும் நல்லது. சுவர்களை அளந்தால் எவ்வளவு பெயிண்ட் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே அறியலாம். சிலர் பெயிண்ட்டை அதிகமாக வாங்கிவிட்டு அதை வீணாக்கிவிடுவார்கள். இதை தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடலாம். சுவரின் மேற்பரப்பு எந்த இயல்பில் உள்ளது என்பதை பொறுத்தும் பெயிண்டின் அளவும், வகையும் மாறுபடும். ஒரு வேளை ஏற்கனவே இருந்த வண்ணத்தையே மீண்டும் அடிக்க விரும்பினால், குறைவான அளவு பெயிண்ட்தான் தேவைப்படும்.
பெயிண்ட் அடிக்கப்போகும் சுவரில் ஏற்கனவே வெளிர் நிறத்தில் வண்ணம் பூசியிருந்தால், குறைவான அளவு பெயிண்ட்டே தேவைப்படும். அடர் நிறமாக இருந்து, புதிய வண்ணம் பூச விரும்பினால், புதிய பெயிண்ட்டை இரண்டு முறை பூச வேண்டியிருக்கும். வண்ணம் பூச தொழிலாளர்களை அழைத்தால், வண்ணம் பூசுவதற்கு தேவைப்படும் எல்லா பொருட்களையும் கொண்டு வந்துவிடுவார்கள்.
ஒரு வேளை நீங்களே பெயிண்ட் அடிக்க முடிவு செய்தால், வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பது நல்லது. ஏணி, பெயிண்ட்டையும் பிரைமரையும் கலக்க காலி டப்பாக்கள், சுவர்கள் மற்றும் மேற்கூரையை சுத்தப்படுத்த உப்புத்தாள், தரையில் சிந்தும் பெயிண்ட் துளிகளை துடைக்க துணி, தரமான பிரஷ், ரோலர்கள், ஸ்ப்ரே கன் ஆகியவை வேண்டும். வண்ணம் பூசுவதற்கு முன்பு சுவரை உப்புத்தாள் கொண்டு தேய்க்க வேண்டும். பலரும் இப்படி செய்யமாட்டார்கள். பழைய வண்ணத்தை முழுமையாக அகற்றினால்தான் புதிய வண்ணம் பூசும்போது நன்றாகச் சுவரில் ஒட்டும்.
சுவர்களில் விரிசல் இருந்தால் வண்ணம்பூசுவதற்கு முன்பே அதை சரிசெய்துவிடுங்கள். சுவர் மற்றும் மேற்கூரைகளுக்கு வண்ணம் பூசிய பின், கதவு, ஜன்னல்களுக்கு வண்ணம் பூசலாம்.

மஞ்சள், சமையல் மட்டுமின்றி மருத்துவத்திலும் பயன்பாட்டில் இருக்கிறது. கிருமி நாசினியாகவும், நோய் எதிர்ப்பு ஊக்கியாகவும் செயல்படுகிறது.
வீட்டில் முதலுதவி பெட்டி இருப்பது அவசியமானது. அது சின்னச்சின்ன காயங்களுக்கு மருந்தாகி நமது பதற்றத்தை குறைக்க உதவும். வீட்டின் சமையல் அறையில் இடம்பெற்றிருக்கும் பொருட்களையே முதலுதவிக்கு பயன்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.
மஞ்சள், சமையல் மட்டுமின்றி மருத்துவத்திலும் பயன்பாட்டில் இருக்கிறது. கிருமி நாசினியாகவும், நோய் எதிர்ப்பு ஊக்கியாகவும் செயல்படுகிறது. அது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக் கிறது. மஞ்சளில் உள்ளடங்கி இருக்கும் மூலப்பொருட்கள் விரைவாக காயங் களை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கின்றன. சிறிய வெட்டு காயங்களுக்கு மஞ்சளை பயன் படுத்தலாம். இரத்த கசிவை நிறுத்தவும், நோய் தொற்றுவை தடுக்கவும் மஞ்சள் தூளை உபயோகிக்கலாம். வெட்டு காயங்கள் மீது மஞ்சள் தூளை நேரடியாகவே தடவலாம். மஞ்சள் தூளை தண்ணீர் அல்லது கடுகு எண்ணெய்யில் கலந்தும் தடவலாம்.
நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாயு தொந்தரவு போன்ற பாதிப்புகளுக்கு பேக்கிங் சோடா நிவாரணமளிக்கும். உடனடி நிவாரணம் அளித்து உடலில் அமிலத்தன்மையை சீராக்கும் ஆற்றல் பேக்கிங் சோடாவுக்கு உண்டு. சிறிதளவு பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து குடித்தால் போது மானது.
சரும எரிச்சல் பிரச்சினைக்கு ஆப்பிள் வினிகரை உபயோகிக்கலாம். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் வினிகரை தண்ணீரில் கலந்து கை, கால்களை கழுவலாம். அது சரும எரிச்சலுக்கு நிவாரணம் தரும்.
பூச்சி கடித்தலுக்கு பூண்டுவை பயன்படுத்தலாம். அது ஆன்டி பயாடிக் பண்புகளை கொண்டுள்ளது. நமைச்சல், அரிப்பை போக்கி விரைவாக நிவாரணம் அளிக்கும். பூண்டு சாறு எடுத்து பூச்சி கடித்த இடத்தில் பூசினால் நிவாரணம் கிடைக்கும்.

கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? என்று யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசை அழிக்க எந்த மருந்துகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், மக்களே கொரோனா நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உணவு பழக்க வழக்கத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? என்று யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது. நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக இயற்கை பானம் தயாரித்து குடிக்கலாம். இந்த பானம் தயாரிப்பது மிகவும் எளிமையானது.
அரை துண்டு நாட்டு நெல்லிக்காய், கால் துண்டு தோல் நீக்கிய இஞ்சி, 20 துளசி இலைகள், கால்துண்டு எலுமிச்சை, கால் ஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை சாறு எடுத்து 250 மில்லி தண்ணீரில் கலந்து பருக வேண்டும். பெரியவர்களுக்கு 250 மில்லியும், சிறியவர்களுக்கு 100 மில்லியும் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 வேளைகள் குடிக்கலாம்.
இதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூடான பானம் தயாரித்து குடிக்கலாம். 10 துளசி இலைகள், கால் டீ ஸ்பூன் மிளகு, அரை டீ ஸ்பூன் அதிமதுரம், கால் டீ ஸ்பூன் மஞ்சள் பவுடர் ஆகியவற்றை 250 மில்லி தண்ணீரில் கலந்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த தண்ணீர் வற்றி 50 மில்லி அளவுக்கு மாறிய பிறகு குடிக்க வேண்டும். பெரியவர்கள் 50 மில்லியும், சிறியவர்கள் 20 மில்லியும் குடிக்கலாம். ஒரு நாளைக்கு 2 வேளை பருகலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
இதுதவிர தினமும் 30 நிமிடங்கள் யோகாசனம், பிரணாயாமம் மற்றும் தியானம் செய்ய வேண்டும். காலை, மாலை நேரங்களில் சிறிதளவு உப்பு கலந்த மிதமான வெந்நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். மிதமான சூடான பாலில் சிறிதளவு மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும். தினமும் காலை 10 மணிக்கு முன்பாகவும், மாலை 4 மணிக்கு பிறகும் 10 முதல் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்க வேண்டும். கீரை, காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடலாம். சமையலில் ரசம் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
பொறிக்கப்பட்ட உணவுகள், மைதா மாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் தவிர்க்கப்பட வேண்டும். நொச்சி, ஓமம், கற்பூரவள்ளி ஆகியவற்றில் ஏதாவது ஒரு இலையை போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம்.
இந்த முறைகளை தொடர்ச்சியாக பின்பற்றி வருவதன் மூலம் கொரோனா வைரசில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கோடை காலத்தில் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாப்பதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சில பழ வகைகளை பற்றி இங்கு காண்போம்.

1. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் ஆப்பிளின் பங்களிப்பு மகத்தானது. சருமம் உலர்ந்து போவதை தடுத்து பளபளப்பை தக்க வைப்பதற்கும் ஆப்பிள் சாப்பிட்டு வர வேண்டும்.
2. பப்பாளி பழத்தை சாப்பிட்டு வருவதும், ஆரோக்கிய சருமத்திற்கு அத்தியாவசியமானதாகும்.
3. ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சளித் தொல்லையையும், காய்ச்சலையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. சருமத்திற்கும் ஏற்றது. இதனை பழமாகவோ, ஜூசாகவோ பருகி வரலாம்.
4. வாழைப்பழம், சருமத்தில் ஈரப் பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டது. உலர்ந்த சருமத்தை புதுப்பித்து, நீர்ச்சத்தை பராமரிக்கவும் செய்கிறது. குளிர்காலத்தில் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் சருமத்தில் நெகிழ்வு தன்மையை தக்கவைக்க முடியும்.
5. இளமை தோற்றத்தை தக்க வைக்கும் மாதுளை குளிர்காலத்தில் சரும ஜொலிப்புக்கும் துணை புரிகிறது. தோல் சுருக்கங்களை போக்கவும், வயதான தோற்றத்தை தவிர்க்கவும் குளிர்காலத்தில் தவறாமல் மாதுளை சாப்பிட வேண்டும்.
6. குளிர்காலத்தில் சருமத்தின் தோழனாக திராட்சை விளங்குகிறது. இதுவும் தோல் சுருக்கங்கள், வயதான தோற்றத்தை தடுக்க உதவுகிறது. புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
7. கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ, சி, லிகோபீன், கரோட்டின் போன்ற சத்துக்கள் உள்ளன. இதுவும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்துகிறது. இதிலிருக்கும் வைட்டமின் கே, முகப்பரு, சரும எரிச்சல், சருமத்தில் ஏற்படும் சிவப்புத்திட்டு போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

ஆறு மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தை, மற்ற குழந்தைகளைக் காட்டிலும் புத்திக்கூர்மையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே ஊட்டப்பட வேண்டும் என்றும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரைக்கும் தாய்ப்பாலுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களும் தரப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஒரு கணக்கெடுப்பின்படி 20.6 விழுக்காடு குழந்தைகளுக்கு மட்டுமே ஆறு மாதங்கள் வரைக்கும் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது என்றும் ஓராண்டு வரைக்கும் தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 14 விழுக்காடாகும் என்றும் 9 விழுக்காடு குழந்தைகள் மட்டுமே இரண்டு ஆண்டுகள் வரைக்கும் தாய்ப்பால் அருந்துகின்றன என்றும் தெரிய வந்துள்ளது.
கிராமப்புற தாய்மார்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் அதிகமானோர் அலுவலக வேலைக்குச் செல்கின்றனர். அரசு வேலையை செய்பவர்களைப் போல் அல்லாமல் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு மாதம் கிடைப்பதே அரிதாக உள்ளது. அதற்குப் பின்னர் அவர்கள் பணிக்குத் திரும்பியாகவேண்டும். இதுபோன்ற சூழ்நிலை நகர்ப்புற பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவதை கைவிட்டுவிட காரணமாகிறது.
ஆறு மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தை, மற்ற குழந்தைகளைக் காட்டிலும் புத்திக்கூர்மையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. தாய்ப்பாலில் மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பலபடித்தான பாலிபூரிதமல்லாத கொழுப்பு அமிலங்கள் நீண்ட சங்கிலியாக காணப்படுகின்றன. இது ஊட்டச்சத்து நிறைந்ததுமாகும். ஆகவே, தாய்ப்பாலருந்தும் குழந்தைகள் புத்திக்கூர்மையுடன் விளங்குகின்றனர்.
தாய்ப்பால் ஊட்டுவதால், குழந்தை வீட்டில் மற்றவர்களைக் காட்டிலும் தாயிடம் அதிக நெருக்கமாக இருக்கும். வேறு யாருடனும் குழந்தைக்கு உடல்ரீதியான நெருக்கம் அதிக அளவில் இருப்பதில்லை. ஆகவே, தாய்ப்பால் அறிவுடன் அன்பையும் சேர்த்தே குழந்தைக்கு ஊட்டுகிறது.
பாலூட்டும் தாய், ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து வேளை குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். அப்படி பாலூட்டவில்லையென்றால், பால் கட்டுவதால் அதிக வலி ஏற்படும்.
கடந்த 2015ம் ஆண்டு தமிழக அரசு பயணம் மேற்கொள்ளும் தாய்மார்களுக்கு உதவும் நோக்கில் பேருந்து நிலையங்களில் தாய்ப்பாலூட்டுவதற்கு பிரத்யேக அறைகளை ஒதுக்கியது.
பல பேருந்து நிலையங்களில் இவை சரியாக பயன்படுத்தப்டாமல் உள்ளன. சில பேருந்து நிலையங்களில் இவை 12 மணி நேரம் மட்டுமே திறந்துள்ளன. பேருந்து நிலையங்களில் இரவும் பகலும் பேருந்துகள் வந்து சென்று கொண்டிருப்பதால் அறைகள் முழு நேரமும் திறந்திருந்தால்தான் பயனளிக்கும். பல பேருந்து நிலையங்களில் இந்த அறைகள் சரியாக பராமரிக்க்ப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அநேக தாய்மார்கள் இந்த அறைகளில் போதுமான மறைவிடங்கள் இல்லை என்றும் கண்காணிப்பு காமிரா போன்றவை இருக்கக்கூடும் என்று பல்வேறு தயக்கங்களினால் பயன்படுத்தாமல் உள்ளனர்.

கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயத்தை யார் யார் எவ்வளவு குடிக்கலாம்? என்பது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் தனம் விளக்கியுள்ளார்.
கோவை:
நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தநிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீரை பொதுமக்கள் குடிக்கலாம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது.
இதனால் பொதுமக்கள் மத்தியில் நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீருக்கு அமோக வரவேற்பு பெற்று உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பலர் நாட்டு மருந்துகடைகள் மற்றும் மருந்து கடைகளுக்கு சென்று நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் மூலிகைகளை வாங்கி, கசாயமாக வீட்டிலேயே தயாரிக்க நினைக்கிறார்கள். ஆனால் நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீரை தயாரிக்கும் முறை மற்றும் யார் யாருக்கு எவ்வளவு? குடிக்க வேண்டும் என்பது குறித்து தெரியாமல் தவிக்கிறார்கள்.
இவர்களின் தவிப்பை போக்கும் வகையில் நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீரை யார் யார் எவ்வளவு குடிக்கலாம்? எவ்வாறு தயாரிக்கலாம் என்பது குறித்து கோவை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் தனம் கூறியதாவது:-
கபம் என்றால் சளி. சுரம் என்றால் காய்ச்சல். அதாவது சளி, காய்ச்சலை அகற்றுவதுதான் கபசுர குடிநீர் என்பதாகும். இந்த கபசுரத்தில் சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த்தோல், ஆடாதொடா இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறு தேக்கு, நிலவேம்புக்சமூலம், வட்டத்திருப்பி வேர் (பாடக்கிழங்கு), முத்தக்காசு (கோரைக்கிழங்கு) ஆகிய 15 வகையான அரிய வகை மூலிகைகளை கொண்டு சித்த மருத்துவ முறைப்படி கபசுர குடிநீர் தயாரிக்கப்படுகிறது.
கபசுர குடிநீர் தயாரிக்கும் முறையானது முதலில் கபசுர குடிநீர் சூரணத்தை ஒரு தேக்கரண்டி (5 கிராம்) வீதம் எடுத்துக்கொண்டு 200 மில்லி அளவு தண்ணீரில் இந்த குடிநீர் சூரணத்தை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் நான்கில் ஒரு பங்காக வரும் வரை (அதாவது 50 மில்லி) காய்ச்சி வடிகட்ட வேண்டும். வடிகட்டிய கசாயத்தை தினமும் 2 அல்லது 3 வேளைகள் குடிக்கலாம்.
இந்த கபசுர குடிநீரை 1 முதல் 5 வயது வரை உள்ளவர்கள் 5 மில்லி, 5 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 10 மில்லி, 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 முதல் 50 மில்லி வரை மட்டுமே குடிக்க வேண்டும்.
வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. ஏதேனும் நோய் இருந்தால் டாக்டரின் ஆலோசனைப்படி உணவு உண்ணுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ அருந்தலாம். வாரத்துக்கு 3 நாட்கள் அதாவது ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிக்கலாம். மேலும் சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவேண்டும்.
குடிநீரை அப்போதைக்கு அப்போது மட்டும் புதிதாக செய்து பயன்படுத்தவேண்டும். குடிநீரை 3 மணி நேரத்துக்கு பின் பயன்படுத்தக்கூடாது. 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், டைபாய்டு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் குடிக்க கூடாது. அத்துடன் கர்ப்பிணிகள் முதல் 3 மாதங்களுக்கு குடிக்காமல் இருப்பது நல்லது. வயிற்றில் புண் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. நாள்பட்ட நோய் உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே குடிக்கவேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குடிநீர்தான் இந்த கபசுர குடிநீராகும். எனவே இந்த கபசுர குடிநீரை மேற்கண்ட முறைகளை பின்பற்றி குடிக்கலாம்.
நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் முறை?
நிலவேம்பு குடிநீர் பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும். நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பை மட்டும் காய்ச்சி குடிப்பதல்ல. நிலவேம்பு, மிளகு, சுக்கு, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், விலாமிச்சைவேர், சந்தனம், பற்படாகம், பேய்ப்புடல் ஆகிய 9 மூலிகைகள் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கப்பட்ட பொடி தான் நிலவேம்பு கசாயம் என அழைக்கப்படுகிறது.
2 தேக்கரண்டி நிலவேம்பு பொடியை 400 மில்லி தண்ணீரில் கலந்து 150 மில்லி அளவுக்கு சுண்ட காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும், 5 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு 5 மில்லியும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 முதல் 40 மில்லி வழங்க வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் குடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

காலையில் ஒரு கோப்பை ஓட்ஸ் கஞ்சி குடிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். இன்று ஓட்ஸ், கோதுமை ரவை சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1/2 கப்
கோதுமை ரவை - 1/4 கப்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
பால் - 1 1/2 கப்
உப்பு - சிறிதளவு

செய்முறை:
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், ஓட்ஸ் சேர்த்து 3-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வறுக்க வேண்டும்.
பின்னர் கோதுமை ரவையை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வறுக்க வேண்டும்.
பின்பு அதில் பால் உப்பு, மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசிலானது போனதும், அதனை ஒரு பௌலில் ஊற்றி பருகவும்.

சூப்பரான ஓட்ஸ் - கோதுமை ரவை கஞ்சி ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் ஏதேனும் ஒன்றை படிக்கவும், எழுதவும் தெரிந்திருந்தால் போதும், பள்ளிக்கூடம் செல்லாதவர்கள்கூட 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதலாம். இதற்கு என்.ஐ.ஓ.எஸ். கல்வி முறை வாய்ப்பளிக்கிறது. அதுபற்றி விளக்கும் கட்டுரை இதோ..

என்.ஐ.ஓ.எஸ். கல்வி முறை
என்.ஐ.ஓ.எஸ். என்பது, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் திறந்தவெளி கல்விமுறை திட்டம். இதில் வீட்டில் இருந்தே கல்வி பயிலலாம். தினந்தோறும் பள்ளிக்கு செல்லவேண்டிய கட்டாயம் இல்லை. புரியாத பாடங்களை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக, ஒரு வருடத்திற்கு சில வகுப்புகள் (அதிகபட்சமாக 15 வகுப்புகள்) மட்டுமே, அருகில் இருக்கும் பள்ளிகளில் நடத்தப்படும். அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி
இதில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லை. ஏதேனும் ஒரு மொழியை பேசவும், எழுதவும் தெரிந்திருந்தால் போதும். இந்த கல்வித்திட்டத்தின் வழியே 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம். 9-ம் வகுப்பு வரை படித்தவராக இருந்தாலும் சரி, மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவராக இருந்தாலும் சரி.. என்.ஐ.ஓ.எஸ். கல்வித் திட்டத்தின் கீழ் படிக்கலாம். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம்.
இதில் எப்படி இணைவது?
www.nios.ac.in என்ற இணையதளம் வழியே உள்நுழைந்து, மாணவர்களுக்கான கணக்கைத் தொடங்கி, வீட்டு முகவரி ஆவணம், ஆதார் எண் விவரம், டி.சி. (இருக்கும் பட்சத்தில்), பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். உங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டால், ரூ.2100 கட்டணத்தை (புத்தகம் செலவு உட்பட) செலுத்த வேண்டும். அதன்பிறகு புத்தகங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒரு வருடத்தில், ஜூலை மற்றும் செப்டம்பர் என இருமுறை அட்மிஷனும், அதற்கு தகுந்தாற்போல இருவேறு காலக்கட்டங்களில் தேர்வுகளும் நடத்தப்படும். விண்ணப்பம், தேர்வு நுழைவுச்சீட்டு, மதிப்பெண் பட்டியல் என அனைத்தும் இணையதளத்திலேயே கிடைப்பதால், அலைச்சல் மிச்சம்.
இதன் சிறப்பு என்ன?
இது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையானது. நமக்கு பிடித்த பாடத்தை நாமே தேர்ந்தெடுத்து படிக்கும் வசதி இந்தக் கல்வி முறையில் இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்தும், பொதுவாக அறியப்படும் 10-ம் வகுப்பு பாடங்கள். ஆனால் என்.ஐ. ஓ.எஸ். கல்வி முறையில் ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. ஒரு வருடத்திற்கு இருமுறை தேர்வுகள் நடத்தப்பட்டாலும், அதை பயன்படுத்த முடியாதவர்கள் சிறப்பு கட்டணம் செலுத்தி, எப்போது வேண்டுமானாலும் தேர்வு எழுதும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
10-ம் வகுப்பு பாடங்கள்
தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, சமஸ்கிருதம், அரபி என நீளும் மொழிப்பாடங்களில் நமக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். அதிகபட்சமாக இரண்டு மொழிப்பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கும் வாய்ப்பும் உண்டு. அதேசமயம், கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல், பொருளாதாரம், தொழில் படிப்புகள், வீட்டு அறிவியல், சைகாலஜி, இந்திய கலாசாரம் மற்றும் பெருமைகள், அக்கவுண்டன்சி, பெயிண்டிங், டேட்டா எண்ட்ரி செயல்பாடுகள், ஹிந்துஸ்தானி மியூசிக், கர்னாட்டிக் மியூசிக் என கல்லூரி மாணவர்களே வியந்துபோகும் வகையில் பல்சுவையான பாடத்திட்டங்கள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
12-ம் வகுப்பு பாடங்கள்
12-ம் வகுப்பில் மொழிப்பாடங்களோடு கணிதம், இயற்பியல், வரலாறு, புவியியல், பொலிட்டிக்கல் சயின்ஸ், பொருளாதாரம், வீட்டு அறிவியல், சோசியாலஜி, பெயிண்டிங், மாஸ் கம்யூனிகேஷன், சுற்றுலா, சட்ட படிப்பு, நூலக அறிவியல், ராணுவ வரலாறு, ராணுவ படிப்புகள், குழந்தை பராமறிப்பு... என 12-ம் வகுப்பு பாடத்திட்டமும் அசத்துகிறது.
தேர்வு மற்றும் மதிப்பெண்
பள்ளிகளில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடம் வகையில், ‘டியூட்டர் மார்க் அசைன்மெண்ட்' (டி.எம்.ஏ.) என்பது கொடுக்கப்படும். இதை சரிவர முடித்து, தேர்விற்கு முன் சமர்ப்பித்தால், 30 மதிப்பெண் வழங்கப்படும். எழுத்து தேர்வில் கிடைக்கும் மதிப்பெண், 70 மதிப்பெண்களுக்கு கன்வெர்ட் செய்யப்பட்டு, மொத்த மதிப்பெண் வழங்கப்படும். அதாவது ‘டி.எம்.ஏ. + எழுத்து தேர்வு = மொத்த மதிப்பெண்' என்ற அடிப்படையில் தேர்வு முடிவுகள் வரும். பெயிண்டிங் போன்ற பாடங்களுக்கு செய்முறை தேர்வுகளும் (வரைந்து காட்டுதல்) நடத்தப்படும்.
யார், யாருக்கு பொருந்தும்?
பிசியாக இருக்கும் குட்டி சினிமா பிரபலங்கள், இளம் விளையாட்டு வீரர்கள் போன்றவர்களே இந்த கல்வித்திட்டத்தை அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் பெற்றோரின் வழிகாட்டுதலோடு, வீட்டிலேயே சுயமாக தேடி படிக்கும் ஆர்வமுடைய குழந்தைகளும் இந்த கல்வித்திட்டத்தின் கீழ் கல்வி பயிலலாம். பாடத்திணிப்பு இன்றி, விரும்பிய பாடங்களை தேர்ந்தெடுத்து படிப்பதினாலும், மனப்பாடம் குறையும். கல்வி அறிவு வளரும்.
அங்கீகாரம் உண்டா?
ரெகுலர் பள்ளியில் படித்த மாணவனுக்கு கிடைக்கும் எல்லா உயர்கல்வி வாய்ப்புகளும், என்.ஐ.ஓ.எஸ். மாணவனுக்கு கிடைக்கும். 72 நாடுகள் இந்த கல்விமுறை அங்கீகரித்துள்ளன.

அபார்ட்மெண்ட் வாங்கும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சரியான கட்டுமான நிறுவனத்தை தேர்ந்தெடுத்து நமக்கான வீட்டை வாங்கியாக வேண்டும்.
அபார்ட்மெண்ட் வாங்கும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வீடு வாங்க தயாராகும்போது பல கட்டுமான நிறுவனங்கள் கண்ணில் படும். இதில் இருந்து ஒரு சரியான கட்டுமான நிறுவனத்தை தேர்ந்தெடுத்து நமக்கான வீட்டை வாங்கியாக வேண்டும்.
இந்த விஷயத்தில் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சில நேரம் பொய்யான வாக்குறுதிகளை நம்பிவிடுகிறோம். போலி ஆவணங்கள் உதவியுடன் பிரச்சினைக்குரிய இடங்களை உங்களிடம் விற்றுவிடலாம். வில்லங்கமான இடங்களில் வீட்டை கட்டிவிட்டு அதை உங்கள் தலையில் கட்டிவிடவும் முயற்சி நடக்கலாம். சுதாரிப்பாக இல்லை என்றால் நமது பணம் அவ்வளவுதான். வீட்டை வாங்கிய பின்னர் ஆவணங்கள் பொய்யானவை என்று தெரியும்போது வீட்டை கட்டி தந்தவர் காணாமல் போய்விடுவார். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தகுந்த சட்ட உதவி பெற்று ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். சில நேரம் குறிப்பிட்ட காலத்தில் முடித்து தந்துவிடுவோம் என்று தேதி குறிப்பிட்டு ஒப்பந்தம் போட்ட நிலையிலும் சொன்னபடி வீட்டை முடித்துத் தராமல் இழுத்தடிப்பார்கள்.
அதே போல் வீட்டின் வரைபடத்தில் இருக்கும் வசதிகளில் சிலவற்றைச் செய்யாமலே விட்டுவிடுவார்கள். உதாரணமாக சமையலறையில் பொருட்களை வைக்க தேவையான அலமாரிகளை செய்துதருவதாக உறுதி அளித்திருப்பார்கள்.
ஆனால் வீடு முடிவடைந்த பின்னர் இந்த வேலை முடிக்கப்படாமல் இருக்கும். கேட்டால் கண்டிப்பாக முடித்துத் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் வேலை நடக்கவே நடக்காது. மேலும் நல்ல தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு போன்றவற்றுக்கான அனுமதி பெறும் விஷயமும் கவனத்தில்கொள்ள வேண்டியவை. இவற்றை எல்லாம் நன்கு செய்து தரும் நிறுவனமாக பார்த்து, வீடு அமைய உள்ள இடத்தையும் நேரிடையாகச் சென்று பார்த்து, நமக்கு முழு திருப்தி ஏற்பட்ட பின்னரே வீடு தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வது நல்லது. வீடு முக்கியம் தான், ஆனால் அதைவிட முக்கியம் குடியேறும்போது அது குடைச்சல் தராமல் இருக்க வேண்டும் என்பதும். எனவே இதையும் நினைவில் கொள்ளுங்கள்.

கோடை வெயில் நம்மை சுட்டெரித்து கொண்டிருக்கிறது.வெயிலின் தாக்கத்தால் காமாலை, அம்மைநோய், கண்நோய்கள், சிறுநீரகப்பாதை தொற்று நோய்கள், தோல் நோய்கள் வெப்ப அதிர்ச்சி தாக்குதல் முதலியன பொதுவாக உருவாகும்.
கோடை வெயில் நம்மை சுட்டெரித்து கொண்டிருக்கிறது.வெயிலின் தாக்கத்தால் காமாலை அம்மைநோய் கண்நோய்கள் சிறுநீரகப்பாதை தொற்று நோய்கள்தோல் நோய்கள் வெப்ப அதிர்ச்சி தாக்குதல் முதலியன பொதுவாக உருவாகும். கோடைகாலத்தில் காமாலை நோய் உடலில் ரத்தத்தில் பித்த நிறமி அதிகம் கலப்பதால் ஏற்படும். மது பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் ஏற்படும். ஆகையால் மதுவினை தவிர்ப்பது நல்லது. கல்லீரலை குளிர்ச்சியாக்க கரிசாலைகீரையினை கோடைகாலம் முழுவதும் எடுத்துக்கொள்ளலாம். கீழாநெல்லி முழு செடியினையும் அரைத்து காலை வெறும் வயிற்றில் மோருடன் எடுத்துக்கொள்ளலாம். நெருஞ்சில்முள் கல்லீரல் சிறுநீரகம் ஆகிய இரண்டு உறுப்பிற்கும் நல்லது. ஆகையால் அதனை வெயில் தாக்கம் அதிகம் உள்ள காலங்களில் நீரில் கொதிக்கவைத்து எடுத்துக் கொள்ளலாம்.
நம் உடலின் கண்கள் பித்தத்தின் உறுப்புகள். பித்த காலமாகிய கோடைகாலத்தில் கண்கள் பாதிக்கப்படுவது எளிது. கண்களை குளிர்ச்சியாக்க உள்ளங்கால்களில் இரவில் நல்ல எண்ணெய் தடவி விடலாம். கண் வலிக்கு சீரகத்தை பாலில் பொட்டலம் கட்டி வேக வைத்து கண்ணுக்கு ஒற்றடம் இடலாம். ரோஜாப்பூ இதழ்களை நீரில் ஊறவைத்து அந்த நீரில் கண்களை கழுவிவர கண்ணிற்கு குளிர்ச்சி தரும். பித்தத்தை குறைக்கும் எலுமிச்சை மாதுளை நார்த்தை பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
அதிக வெயிலை தொடர்ந்து நடுவே மழை பெய்து குளிர்ச்சியாக்கும்போது தட்டம்மை சின்னம்மை நோய்கள் பரவும். அம்மை நோய் வராமல் தடுக்க தாழம்பூ மணப்பாகினை எடுத்துக்கொள்ளலாம். அம்மை நோய் வந்தவர்களை தனிமைப்படுத்துதல் பரவாமல் தடுக்கும். வந்தவர்களுக்கு வேப்பிலையுடன் அதிமதுரம் சேர்த்து வெறும் வயிற்றில் மோருடன் தரலாம். வேப்பிலை பித்தத்தையும் குறைக்கும் வைரஸ் கிருமியின் வீரியத்தையும் குறைக்கும்.
சிறுநீரகப்பாதை நோய்களான கல்லடைப்பு அதில் தொற்று கிருமிகள் சிறுநீர் எரிச்சல் முதலிய குறிகுணங்கள் வெயில் காலத்தில் அதிகம். நாம் குடிக்கும் நீரானது தோலில் இழக்கப்படுவதால் சிறுநீரகத்தில் வறட்சி ஏற்பட்டு மேற்கூறிய குறிகுணங்கள் ஏற்படும். அவரவர் உடல் எடைக்கு ஏற்றார்போல நீரினை பருக வேண்டும். நீர் எரிச்சல் உள்ளவர்கள் வெள்ளரி விதை முலாம் பழ விதை தர்ப்பூசணி விதை இவற்றை சேர்த்து நீரிலிட்டு காய்ச்சி அருந்தலாம். முள்ளங்கியோடு அதன் கீரையும் உணவில் சேர்க்கலாம். கல்லடைப்புக்கு நெருஞ்சில் முள் சிறுபீளை இவற்றை குடிநீரிலிட்டு பருகலாம். சிறுநீரகத் தொற்றுக்கு மூக்கிரட்டை கீரையை நீரிலிட்டு காய்ச்சி வெள்ளரி விதை பொடி சேர்த்து குடிக்கலாம்.
தோல் ஒவ்வாமை வெயில் காலங்களில் பொதுவாக ஏற்படும் ஒன்று. வெயிலில் அலைந்து பணி செய்பவர்கள் முழு சட்டை அணிதல் நல்லது. லேசான காற்றோட்டம் மிக்க ஆடைகளை குழந்தைகளுக்கு உடுத்துவது நல்லது. சூரியனின் புற ஊதா கதிர்வீச்சு அதிகம் இருக்கும் என்பதால் வியர்க்குரு ஒவ்வாமை அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே தோல் நோய் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். அவர்கள் கோடைகாலத்தில் பருத்தி உடைகளை அணிவது சிறந்தது. தோல் வறட்சி வராமல் தடுக்க வெட்டிவேர் சேர்ந்த குளியல் பொடியினை வாங்கி பயன்படுத்தலாம். நீண்ட நேரம் குளியலை தவிர்த்து குளித்து முடித்த பின் ஈரப்பதத்தை தக்க வைக்க களிம்புகளை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் பாதாம் எண்ணெய் ஆமணக்கு எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் இவற்றில் ஒன்றை பயன்படுத்தலாம்.
உடல் வெப்பநிலை 105 டிகிரியை தாண்டும்போது வெப்ப அதிர்ச்சி தாக்குதல் ஏற்படும். இதனால் உடல் சோம்பல் தலை சுற்றல் மயக்கம் படபடப்பு மூச்சு சுவாசம் அதிகரித்தல் மன குழப்பம் உடல் உள் உறுப்புகள் சேதாரம் சுய நினைவை இழத்தல் போன்ற தீவிர குறிகுணங்கள் உண்டாகும். இதனை தடுக்க நீர் அதிகம் குடித்தல் இருமுறை குளித்தல் வியர்வை வெளிப்படும் படியான தளர்வான ஆடைகளை அணிதல் அவசியம்.
குளிர்பானங்களில் நிறமூட்டவும் சுவைகளுக்காகவும் சேர்க்கப்படும் பல வேதிப்பொருட்கள் புற்று நோய் தூண்டும் காரணிகளாக உள்ளன. அதில் உள்ள இனிப்பு சத்தும் அமில சத்தும் கார்பன் டை ஆக்சைடு மெல்ல மெல்ல நம் பல்லீறு குடல் பகுதியினை அரிக்கும் தன்மை உடையது. இதனால் பின் நாட்களில் வயிற்று புண் நீரிழிவு உடல் பருமன் எலும்பு தேய்மானம் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். சில குளிர்பானங்களில் கிருமிகள் சேராமல் பாதுகாக்க சேர்க்கப்படும் உப்பு சத்துகளால் புற்றுநோயினை உண்டாக்கும் அபாய நிலை உள்ளது. மேலும் குளிர்ப்பதன பெட்டிகளில் உணவு பொருட்களை பதப்படுத்தி வைத்து பயன்படுத்துவது உடலுக்கு கேடு தரும். ஆகையால் இயற்கையான முறைகளில் பழங்களையும் குளிர்ச்சி தரும் காய்களையும் உணவு வகைகளையும் எடுத்துக்கொண்டு இயற்கையான முறையில் வாழ்ந்தால் கோடை வெயிலின் தாக்கம் மட்டுமல்லாமல் பல்வேறு நோய் நிலைகளின் தாக்கமும் இல்லாமல் நெடுநாள் வாழலாம் என்பதில் ஐயமில்லை.
சோ.தில்லைவாணன்
அரசு சித்த மருத்துவர் பேரணாம்பட்டு.

இரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கல் (baby constipation) பிரச்சனை வருவதற்கு மூல காரணம் உடல் உஷ்ணம் மற்றும் வறட்சியின் காரணமாகவே ஏற்படுகிறது.
பிறந்த குழந்தை இரண்டு நாட்கள் வரை சரியாக மலம் கழிக்கவில்லை என்றால் குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது என அர்த்தம். இரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கல் (baby constipation) பிரச்சனை வருவதற்கு மூல காரணம் உடல் உஷ்ணம் மற்றும் வறட்சியின் காரணமாகவே ஏற்படுகிறது. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த பிரச்சனை இருந்தாலும் குழந்தைக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
உங்கள் குழந்தைக்கு கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளின்படி தண்ணீரின் சரியான அளவை கொண்டு சேர்க்கவேண்டும். தாய்ப்பாலூட்டும் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுவது அரிதுதான்.இருப்பினும், தாய்ப்பால் எளிதாக செரிமானம் ஆகக்கூடிய காரணத்தினால் குழந்தை அடிக்கடி மலம் கழிக்கக்கூடும்.
இரண்டு மாத குழந்தை உடல் வறட்சியின் காரணமாக கூட மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். எனவே தினமும் தேவையான அளவு ஆறிய வெந்நீரை கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு தினமும் ஒரு முறையாவது குழந்தையின் உச்சி தலையில் ஒரு துளி எண்ணெய் வைத்திவிட வேண்டும். ஏனென்றால் குழந்தையின் உடல் உஷ்ணத்தினால் கூட இந்த பிரச்சனை ஏற்படலாம்.
குழந்தைக்கு உலர்திராட்சையை நீரில் ஊறவைத்து ஒரு சங்களவு குழந்தைக்கு தினமும் கொடுத்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
மேல் கூறிய மூன்று முறைகளை செய்தும் குழந்தைக்கு இந்த பிரச்சனை சரியாகவில்லை என்றால். தாய் தினமும் இஞ்சி நீர் குடித்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
வசம்பு குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனைக்கு (baby constipation) சிறந்த மருந்தாக விளங்குகிறது.
எனவே வசம்பை அடுப்பில் எரித்து அவற்றை உரசுமக்கல்லில் நன்றாக உரசி ஒரு சங்களவு தாய்ப்பாலில் இந்த வசம்பை கலந்து குழந்தைக்கு, வாரத்தில் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
இருப்பினும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே போனால் கண்டிப்பாக குழந்தைக்கு குடல் சம்மந்தமான பிரச்சனை இருக்கின்றது என்று அர்த்தம். எனவே குழந்தையை கண்டிப்பாக குழந்தை நல மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.