என் மலர்
ஆரோக்கியம்
பெண் என்பவள் இயற்கையாகவே பிறருக்கு கொடுக்க கூடியவள். அன்பு, பாசம், நேசம், கருணை போன்ற அவளின் இயற்கை குணங்கள் அவளை கொண்டாட கொண்டாட பெரும் ஊற்றெடுக்கும்.
“உயிரைக் காக்கும்; உயிரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே
என்றார் பாரதியார்.
உங்களில் சிலருக்கு தோன்றலாம், “பெண்கள் நன்றாக முன்னேறி விட்டார்களே?” “எல்லா துறையிலும் சிறந்து விளங்குகிறார்களே” என்று. ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா?
வேர்ல்ட் எகனாமிக் போரம் என்ற சர்வதேச குழு ஒன்று சமீபத்தில் ஏறத்தாழ 149 நாடுகளில் ஒரு கருத்து கணிப்பு எடுத்தது. ஆண், பெண் என்று இருபாலரிடமும் பெண்களுக்கு படிக்கும் வாய்ப்பு; கல்வி பெற்ற பெண்களின் விகிதம்; பெண்களின் வேலை வாய்ப்பு; அரசியலில் பெண்கள் என்று வெவ்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் கிடைத்த புள்ளி விவரங்கள் தலைசுற்ற வைக்கின்றன.
பாலின சமத்துவம் எனப்படும் ஆண், பெண் இருபாலரும் ஒரு சமநிலை அடைய உலக அளவில் இன்னும் 108 வருடங்கள் ஆகும் என்கிறது இந்த ஆய்வு. பின்லாந்து போன்ற ஒருசில நாடுகளில் தான் இந்த இடைவெளி மிக குறைவாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் இந்த இடைவெளி மிக அதிகம் என்பது தான் நிதர்சனமான உண்மை.
அதிலும் அரசியலில் பெண்கள் இருப்பது மிக மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. பல இடங்களில் பல துறைகளில் பெண்களால் இன்னும் ஊடுருவ இயலவில்லை தான்.
இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் கண்டிஷனிங் ஆப் த மைண்ட் தான். சிறு வயது முதல் நாம் எதைக்கேட்டு, பார்த்து வளருகிறோமோ அது நம்மை அறியாமல் நம்முடைய யோசிக்கும் முறை ஆகிறது. பெண்கள் மிருதுவானவர்கள், அவர்களுக்கு எப்போதும் ஒரு துணை வேண்டும். யாரையாவது சார்ந்திருப்பவள், பண விஷயங்கள் புரியாது... இன்னும் பலபல உள்ளன. அனைத்தையும் பட்டியலிட இயலாது.
இவ்வாறாக சிறு வயது முதலே இது ஆண்கள் செய்யும் வேலை, அது பெண்கள் செய்யும் வேலை என்ற விதையை, பாகுபாட்டை விதைக்கிறோம். இது வளர்ந்து பெரிதாகும் போதும் தொடர்கிறது. வேலைக்கு செல்லும் மனைவியுடன், அம்மாவுடன் சேர்ந்து பாத்திரம் எல்லாம் துலக்க வேண்டாம். கடைசியாக “சாப்பிட்டியா?” என்று எப்போது கேட்டோம் என்று யோசித்துப் பாருங்கள். எவ்வாளவோ மாறியிருக்கிறோம் என்றாலும் இன்னும் பார்வையும் கோணமும் நிறைய மாற வேண்டும்.
அண்மையில் எங்கள் கல்லூரியில் “மாதரே ஜி 20” என்ற நிகழ்ச்சி ஒன்றை மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தினோம். அதில் பல்வேறு துறையைச் சார்ந்த 22 பெண்களுக்கு அவர்களின் சாதனைக்காக விருது வழங்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரின் கதையும் அவ்வளவு ஊக்கம் தருவதாக இருந்தது. இதில் மனிஷா என்ற 23 வயதே நிரம்பிய பெண் கருணையின் மறு உருவம் எனச் சொல்லலாம். இவருடைய பவுண்டேஷன் மூலமாக தெருவில் வசிக்கும் ஆதரவற்ற முதியோருக்கு வைத்தியம் பார்த்து, முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பணியைச் செய்கிறார். இந்த இளம் வயதில் இத்தனை சகிப்புத்தன்மை, பொறுமை, நிதானம், அமைதி தன்னநலமற்ற தன்மை, இதையெல்லாம் எப்படி பெற்றார் என்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான்.
அதேபோல மகாபலிபுரத்தை சேர்ந்த கமலி என்ற பெண். இவர் தாய் ஒரு சிங்கிள் மதர். கமலி சிறு வயதில் ஸ்கேட்டிங்கில் ஆர்வம் காட்ட பலத்த எதிர்ப்பிற்கு இடையில் ஆதரித்திருக்கிறார் கமலியின் தாய். 11 வயது நிரம்பிய அந்த குழந்தை ஸ்கேட்டிங் மட்டுமின்றி கடல் சர்பிங்கிலும் சர்வதேச அளவில் சாதித்துக் கொண்டிருக்கிறது. அந்த தாய் அன்று மேடையில் பேசியது என் காதில் இன்னும் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். அவள் ஆசைப்படுவதை செய்ய உற்சாகப்படுத்துங்கள். உங்கள் விருப்பத்தை திணித்து அவர்களின் வளர்ச்சியை தடுக்காதீர்கள் என்று மிக அழகாக பேசினார்.
அப்புறம் சுபானு என்ற 16 வயது நிரம்பிய குழந்தை 250 தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். யோகாவில் ஐந்து முறை கின்னஸ் சாதனை செய்திருக்கிறார். மூன்று முறை உலக சாதனை செய்திருக்கிறார். பேச்சில் அவ்வளவு முதிர்ச்சி. கலையில் அவ்வளவு தேர்ச்சி.
பல இடர்களுக்கு இடையே சாதிக்கும் பெண்களுக்கு ஒரு சமூகம் என்ன செய்யலாம்? முடிந்தால் ஒரு கை கொடுத்து உதவலாம். இல்லையேல் தோள் தட்டி உற்சாகப்படுத்தலாம். அவர்களை பற்றி பிறரிடம் உயர்வாக பேசி கொண்டாடலாம். அதற்கெல்லாம் மனது இல்லையென்றால் ஒரு புன்னகை பூக்கலாம். அதற்கும் இஷ்டமில்லை என்றால் அவரை பற்றி புறம் பேசாமல் புண்படுத்தாமல், குறை கூறாமல் அமைதியாகவாது இருக்கலாம்.
பெண் பிள்ளைகளை குறைந்த பட்சம் முதுநிலை உயர்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். கல்விதான் அறியாமையின் முதல் எதிரி. எந்த குடும்பத்தில் பெண்கள் அதிகம் படித்திருக்கிறார்களோ அந்தக் குடும்பம் குழப்பமின்றி செழிப்பாக திகழும். எனவே முதலில் அவர்களுக்கான மிக பெரிய சொத்தான, பிரிக்க இயலாத சொத்தான கல்வியை புகட்டுவோம்.
படித்தபின் பொருளாதார சுதந்திரம் பெற வழிவகுக்கும் வேலையை தேடிக் கொண்டு சற்றே தன்னம்பிக்கை பெறட்டும். பின்னர் மணமுடிக்கலாம். கல்வியும் பொருளாதார சுதந்திரமும் தான் ஓர் பெண்ணிற்கு பயமின்றி பயணிக்க உதவும் ஊன்றுகோல். இந்த பாலின சமத்துவ நிலையை அடைய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து சிறு அளவில், முதலில் நம் வீட்டில், நம் தெருவில் ஆரம்பிக்க வேண்டும். நான் ஒருவன் மாறினால் உலகம் மாறிவிடுமா? என்று எண்ணாதீர்கள்.
ஒரு கதை சொல்லுகிறேன்... ஒரு கடற்கரை ஓரம் ஒரு குட்டி பையன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது ஓரு பெரிய அலை ஆயிரக்கணக்கான மீன்களை கரையில் தள்ளிவிட்டு செல்கிறது. மீன்கள் நீர் இன்றி துடிக்கின்றன. அதை பார்த்த சிறுவன் ஒவ்வொரு மீனாக எடுத்து கடலுக்குள் சேர்க்கிறான். அந்த பக்கம் வந்த முதியவர் கேட்டார். டேய் பையா இங்கே ஆயிரம் மீன் தவிக்கிறது. உன் குட்டி கையால் நீ பத்து மீனைக்கூட காப்பாற்ற முடியாது. இதை எதற்குச் செய்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டார். அந்த குழந்தை பட்டென்று சொன்னது, “நான் காப்பாற்றும் அந்த பத்து மீனுக்கு அது வாழ்வா? சாவா? என்ற வித்தியாசம் தானே தாத்தா” என்றது.
அப்படித்தான் நாம் ஒவ்வொருவரும் ஒரு சமூகப் பிரச்சினை, ஒரு மாற்றம் தேவைப்படுகிறது என்றால் அதைப் பற்றி அலசி பேசுகிறோம். அதிகார வர்க்கத்தை சாடுகிறோம். பிறகு அதை கடந்து யாராவது பார்த்து கொள்வார்கள், அது நம் வேலையில்லை என்று எண்ணி மறந்துவிடுகிறோம். மாற்றம் வேண்டுமெனில் அதை நீங்களும் நானும் தான் கொண்டு வரவேண்டும். நாம் எல்லாரும் சேர்ந்து தான் ஒரு சமூகம் ஆகிறோம். மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனும் எடுக்க வேண்டிய கூட்டு முயற்சி.
ஆக பெண்கள் மேலும் மேன்மையடைய என்ன செய்யலாம்? பெண்களை கொண்டாடுங்கள். உங்கள் தாயை மனைவியை, சகோதரியை, தோழியை, மகளை கொண்டாடுங்கள். எதை நாம் அதிகம் கொண்டாடுகிறோமோ அது வீரியம் பெறுகிறது. பெண் என்பவள் இயற்கையாகவே பிறருக்கு கொடுக்க கூடியவள். அன்பு, பாசம், நேசம், கருணை போன்ற அவளின் இயற்கை குணங்கள் அவளை கொண்டாட கொண்டாட பெரும் ஊற்றெடுக்கும். உலகம் மிக அழகான இடமாக மாறும்.
மனிதனுள் ஆண் என்ன? பெண் என்ன? வாருங்கள் பெண்மையை போற்றிக் கொண்டாட.
தொடர்புக்கு: director@kveg.in
insta: dr.meenakshiannamalai

கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும்.
கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே குழந்தைகளை இம்மாதிரியான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். சரி இந்த பதிவில் கோடைகாலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
* பிறந்த இரண்டு மாத குழந்தையாக இருந்தால் தண்ணீர் அதிகமாக கொடுக்கலாம், குழந்தை தண்ணீர் அதிகம் அருந்தவில்லை என்றால் உலர்திராட்சியை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.
* தினமும் குழந்தையை ஒரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.
* அதேபோல் குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.
* குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
* மேலும் குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், எனவே இதனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.
* குழந்தைக்கு வேர்க்குரு வந்துவிட்டால் உடனே வேர்க்குரு பவுடரை பயன்படுத்துவதற்கு பதில், சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.
* குழந்தைகளுக்கு வேர்க்குருடன் சிவப்பு தடிப்புகள் ஏற்படும் அதற்கு சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.
* குழந்தைக்கு வேர்க்குரு குறைய இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்யங்கள், பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள் இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு குறைய ஆரம்பிக்கும்.
* குழந்தைக்கு வேர்க்குரு மிகவும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும் அதன் காரணமாக குழந்தைகள் அழுக ஆரம்பித்துவிடுவார்கள், அந்த சமயத்தில் வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.
* சாதம் வடித்த கஞ்சி குழந்தையின் வேர்க்குரு பிரச்சனையை சரி செய்ய ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டிவிடவும். இதனால் வேர்க்குரு விரைவில் சரியாகும்.

முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வயதான காலத்தில் வீடுகளில் இருக்கும் அவர்களை தேடிச்சென்று செவிலியர்கள் பராமரிக்கின்றனர். இதனால் முதியோர்களுக்கு அவர்கள், வளர்ப்பு மகள்களாகவே விளங்குகின்றனர். அவர்களின் தியாகம் அந்த முதியோரது குடும்பத்துக்கே நம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த வகையில் முதியோர் பராமரிப்பில் ஈடுபடும் செவிலியர்கள் முதியோர்கள் பராமரிப்பு பற்றி கூறியதாவது:-
வயதானவர்கள் சமுதாயத்தில் கிடைக்கும் சுகாதார சேவைகளை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். நோய் மற்றும் நோயினால் இயலாதன்மை, இயற்கையான ஒன்று, வறுமை, மற்றும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலை ஆகியவை தடைகளாக இருந்து அவர்களை வாட்டும். அந்த தடைகளை செவிலியர்கள் தான் அறிந்து அவற்றை அகற்ற வேண்டும். முதியோர்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை தினமும் மூன்று தடவை பயன்படுத்தலாம். தினமும் குறைந்தது ஒரு துண்டு பழமாவது சாப்பிடவேண்டும். இதில் அதிக அளவு நார்சத்து அடங்கியுள்ளது.
குறைந்தது ஒருநாளைக்கு மூன்று தடவையாவது காய்கறிகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். ஏதாவது குடிக்க வேண்டும் என்று விரும்பினால் மிதமான சூடு உள்ள பால் ஒரு டம்ளர் அருந்தலாம். தூங்கும் அறைகள் அமைதியாகவும், நல்ல காற்றோட்டத்துடன் இருக்கவேண்டும்.சரியான வாய் பராமரிப்பு நல்ல உடல் நலத்தையும் நல்ல தோற்றத்தையும் கொடுக்கும். தினமும் காலையிலும், சாப்பிட்டதற்கு பின்னும், படுக்கைக்கு முன்பும் வாயை உப்புநீரினால் கொப்பளிப்பது சிறந்தது. பாதத்தில் பிரச்சினைகள் பொதுவாக வயதானவர்களுக்கு காணப்படும்.
நீண்ட நாள் கடுமையான உழைப்பு, பொருத்தாத காலணிகளை அணிவது, பாதங்களுக்கு குறைவான இரத்த ஓட்டம், சரியாக வெட்டப்படாத விரல் நகங்கள் மற்றும் சில நோய்கள் காரணமாக ஏற்படலாம்.குளிர்ச்சியான நிலையில் நீண்ட நேரம் இருத்தல், காலணிகளால் பாதத்தில், அழுத்தம், தற்போது அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள வீட்டில் இரு....விலகி இரு என்பதோடு சத்தான ஆகாரங்களை சாப்பிடு என்பதில் முதியவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற பல்வேறு விஷயங்களை செவிலியர்கள் தங்களது முதியோர் மருத்துவ பராமரிப்பு சேவைப்பணியில் கடைபிடிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

உங்கள் சரும ஆரோக்கியம் பாழாகாமல் சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட வேண்டுமா? அப்படியானால் இந்த பேஸ் பேக்குகளை போடலாம்.
உங்கள் சரும ஆரோக்கியம் பாழாகாமல் சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட வேண்டுமா? அப்படியானால் இந்த பேஸ் பேக்குகளை போடலாம், இதன் மூலம் சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரித்துக் காட்ட முடியும். அதோடு சருமமும் மென்மையாக பட்டுப் போன்று பொலிவோடு காட்சியளிக்கும்.
* அரிசி மாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் உட்பொருட்கள் சருமத்தை பிரகாசமாகவும், பொலிவோடும், மென்மையாக்கவும் செய்யும். பால் சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, வறட்சியடையாமல் தடுக்க உதவும்.
அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
பால் -2-3 டேபிள் ஸ்பூன்
ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
* உருளைக்கிழங்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. அதே சமயம் இதில் ப்ளீச்சிங் பண்புகளும் அடங்கியுள்ளது. எனவே இதைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று பொலிவோடு காணப்படும்.
உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, உருளைக்கிழங்கு சாற்றினை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வர ஒரே வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக இந்த செயலை செய்த பின், மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள். ஏனேனில் இச்செயலால் சருமம் வறட்சி அடைய வாய்ப்புள்ளது.
* ஓட்ஸில் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்க உதவும் உட்பொருட்கள் நிரம்பியுள்ளது. மேலும் இதில் உள்ள பண்புகள் சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரித்து, சருமத்தை பொலிவோடும் பிரகாசமாகவும் காட்டும்.
ஓட்ஸ் - 3 டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 2-3 டேபிள் ஸ்பூன்
ஓட்ஸை நன்றாக பொடித்து அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை செய்ய நல்ல பலனைக் காணலாம்.
* தயிர் சருமத்தில் உள்ள அனைத்து விதமான அழுக்குகளையும் நீக்கி, பொலிவான மற்றும் சுத்தமான சருமத்தைப் பெற உதவியாக இருக்கும். தேன் சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுத்து, சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்கும்.
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவுங்கள். பின்பு 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் வேண்டுமானாலும் செய்யலாம். இதனால் சரும நிறம் வேகமாக மேம்பட்டு காணப்படும்.

நிஜ வாழ்க்கையில் வெண்ணிற ஆடை உடுத்திய தேவதைகள் செவிலியர்கள் தான். முதுமை கொண்ட பெற்றோரை கைத்தாங்க மறுக்கும் பிள்ளைகள் மத்தியில், அன்பாய் அரவணைக்கும் அதிசயம்.
சினிமாக்களில் தேவதைகளை வெள்ளை நிற உடையில் பார்த்திருப்போம். ஆனால் நிஜ வாழ்க்கையில் வெண்ணிற ஆடை உடுத்திய தேவதைகள் செவிலியர்கள் தான். முதுமை கொண்ட பெற்றோரை கைத்தாங்க மறுக்கும் பிள்ளைகள் மத்தியில், அன்பாய் அரவணைக்கும் அதிசயம்.
அதிசயத்தின் ஆணி வேர் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் பிரான்சிஸ் தம்பதியரின் பெண் குழந்தையான பிளாரன்ஸ் நைட்டிங்கேல். இவர் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக செவிலியர் பணியை தேர்வு செய்து அதை சேவையாக கருதியவர். அப்பணியில் அர்ப்பணிப்புடன் முழுமையாக தன்னை ஈடுபடுத்தியவர். அவரது பிறந்த தினமான மே-12 உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலத்தில் ‘நர்சிங்‘ என்று அழைக்கப்படும் வார்த்தை ‘நியுடிரிசியா’ என்ற லத்தீன் சொல்லில் இருந்து வந்ததாகும். இதற்கு உணவு மற்றும் மருந்து வகைகளை அன்புடன் நமக்கு ஊட்டி ஊக்கப்படுத்துபவர் என்று பொருள்.
ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் துறையைச் சேர்ந்த டொரத்தி சதர்லாண்ட் என்பவர் 1953-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதியை செவிலியர் தினமாக பிரகடனப்படுத்த வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோள் அப்போது நிராகரிக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் மே-12 செவிலியர் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சேவையை பாராட்டி, அந்நாட்டு அரசு அவருக்கு ‘ஆர்டர் ஆப் மெரிட்’ என்ற உயரிய விருது வழங்கியது. இவ்விருதை பெற்ற முதல் பெண்மணியும் இவரே. ‘கை விளக்கு ஏந்திய காரிகை’ என்றும் மக்களால் பாராட்டப்பட்டார்.
1853-ம் ஆண்டு அவருடைய 33 வயதில் ரஷ்யா, துருக்கி மீது படையெடுத்தது. அப்போது துருக்கிக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்சு படைகள் சென்றன. அந்த போரின்போது இந்த படைகள் காலரா, மலேரியாவால் பாதிக்கப்பட்டு, சுகாதாரமற்ற இடத்தில் யாருமே உள்ளே நுழைய முடியாத அளவில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர். அப்போது நைட்டிங்கேல், அந்த வீரர்களுக்கு சேவை செய்தார். தன்னலமற்ற இந்த மகத்தான சேவையை உலகமே பாராட்டியது.
நர்சு தொழிலுக்கு மதிப்புமிக்க ஒரு உன்னதமான இடத்தைப் பெற்றுத் தந்த நைட்டிங்கேலை நினைவுகூரும் வகையில் உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மருத்துவமனைகளில் வேலைபார்க்கும் நர்சுகளுக்கு, டாக்டர்களும், நோயாளிகளும் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள்.
கொரோனா தாக்கத்தால் மக்கள் அனைவரும் பயத்தில் வீடுகளுக்குள்ளே முடங்கிய நிலையில், குடும்ப உறவுகளை மறந்து, தூக்கம் தொலைத்து கொரோனாவுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள். அவர்களின் கடின உழைப்பு, இருளில் தவிக்கும் மக்களுக்கு கலங்கரை விளக்கம் எனலாம். அவர்களின் சேவையை இந்நாளில் நினைவு கூர்ந்து அனைவரும் வாழ்த்துகளை தெரிவிப்போம்.

மாதவிடாய் காலம் முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் போது நேர்மறையான, எதிர்மறையான எண்ணங்கள் தலைதூக்கும். அதேவேளையில் மாதவிடாய் நிற்கும்போது ஒருசில நன்மைகளும் ஏற்படத்தான் செய்கின்றன.
45 வயது முதல் 50 வயதை கடந்த பெண்கள் மாதவிடாய் காலம் முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அப்போது மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிடாய் நிறுத்தம், உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நேர்மறையான, எதிர்மறையான எண்ணங்களும் தலைதூக்கும். அதேவேளையில் மாதவிடாய் நிற்கும்போது ஒருசில நன்மைகளும் ஏற்படத்தான் செய்கின்றன.
* மாதவிடாய் காலத்தில் பெரும்பாலான பெண்கள் ஹார்மோன் சார்ந்த தலைவலியை சுமந்து கொண்டிருப்பார்கள். ஏனெனில் மாதவிடாய் சுழற்சியின்போது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் சமநிலையற்று இருக்கும். அது தலைவலியை தூண்டிவிட்டுவிடும். 70 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் மாதவிடாயுடன் தொடர்புடைய ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் சுரப்பது குறைந்துவிடும். அதனால் தலைவலி பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
* மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பு கால்வலி, தலைவலி, பசி, எரிச்சல் போன்ற உடல் ரீதியான மாற்றங்களை அனுபவிப்பார்கள். சிலர் எளிதில் உணர்ச்சி வசப்படவும் செய்வார்கள். ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு இதுபோன்ற அறிகுறிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்காது. அன்றாட வேலைகளை நிம்மதியுடன் செய்யத்தொடங்குவார்கள்.
* மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கால் அவதிப்பட நேரிடும். அந்த சமயத்தில் வழக்கமான வேலைகளை செய்ய முடியாமல் சிரமப்படுவார்கள். வெளி இடங்களுக்கு செல்ல முடியாமலும் அவதிப்படுவார்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியாலும் நிறைய பேர் கஷ்டங்களை அனுபவிப்பார்கள். இத்தகைய துயரங்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் நிவாரணம் அளிக்கும்.
* மாதவிடாய் காலத்தில் உடலில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் இருக்கும் என்பதால் சிலருக்கு கர்ப்பப்பை கட்டிகள் உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது. மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் கர்ப்பப்பை பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் முடியும்.
* மாதவிடாய் நிற்கும்போது உடலில் பெரிய அளவில் மாற்றங்கள் நேரும். சிரமங்களையும் எதிர்கொள்ள நேரும்.
* மாதவிடாய் நின்றபிறகு உடல் ஆரோக்கியம் சீராக இருக்க சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். காபின் அதிகம் கலந்த பானங்களை பருகக்கூடாது.
* கொழுப்பு குறைவான உணவுகளை சாப்பிட வேண்டும். எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்கு கால்சியம், வைட்டமின் டி சத்து கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.

சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள எளிய முறையில் வீட்டிலேயே லெமன் சோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை காய் - 1
எலுமிச்சை பழம் - 2
சர்க்கரை - ஒரு கப்
தண்ணீர் - ஒரு கப்
எலுமிச்சை தோல் துருவல் - ஒரு டீஸ்பூன்
சோடா வாட்டர் - தேவைக்கேற்ப.

செய்முறை:
சர்க்கரை, எலுமிச்சை தோல் துருவல், தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும் (சர்க்கரை கரைந்தும் ஒரு நிமிடம் வரை கொதிக்கவிடவும்). பிறகு ஆறவைக்கவும்.
எலுமிச்சை பழம், காய் ஆகியவற்றில் சாறு எடுத்து கொட்டை இல்லாமல் ஆறிய பாகுடன் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
தேவைப்படும்போது ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ்கட்டிகளைப் போட்டு ஒரு பங்கு எலுமிச்சைச் சாறும் இரண்டு பங்கு சோடாவும் ஊற்றிப் பருகவும்.

அருமையான லெமன் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எண்ணங்களை தவறவிடாமல், சிந்தனைகளை சிதறவிடாமல் எடுத்து வைக்கும், ஒவ்வொர அடியும் குழப்பமற்றது என்று உணர்ந்து எதையும் நல்ல வழியில் ஏற்றுக்கொண்டு துணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே...!
அன்று தொடங்கி இன்றும் இவள் மனதில் பல எண்ணங்கள், பல யோசனைகளுடன் அன்றாட வாழ்வை நகர்த்துகிறாள். இவள் பொழுதுகளை கண்காணிக்கவும் யாருமில்லை, கலந்து பேசவும் எவருமில்லை, கஷ்டங்களையே கருவூலமாய் கொண்டு காலங்களை கடக்கிறாள். இன்றும் கண்கள் கலங்கி நிற்கின்றன. பாறைகளாக நினைக்கும் ஒவ்வொரு கற்களும் சிப்பி கல்லாகிறது இவள் வாழ்வில். செதுக்கப்பட்ட ஒவ்வொரு நொடிகளும் வலியும் வேதனையுமே நிறைந்து வழிந்தன.
பல நாள் தூங்காமல் பெற்ற விடியல் போல் ஒருநாள் வாழ்க்கையை திருப்பும் தருணமாய் உணர்ந்தாள். தன்மேல் குற்றமும், பிழையும் இருப்பதை எண்ணி அல்ல, தன்னை அவமதித்த அவர்களின் உள்ளத்திலே அழுக்காறுகளும், பிழைகளும், தவறான கண்ணோட்டமும் இருக்கிறது என்று.
அன்று அவள் உறுதி கொண்டாள். தன்னை செதுக்கியவர்கள் முன் சிற்பமாய் திகழ வேண்டும் என்று, அவர்கள் ஏறெடுத்து பார்க்கும் அளவிற்கு உயரவேண்டும் என்று. இனிவரும் நாட்களில் தன் கஷ்டங்களை கருதிகொள்வதையும் தாண்டி தன் பெற்றோர் படும் கஷ்டங்களை, கருத்தில் கொண்டு வாழ ஆரம்பித்தாள். ஒவ்வொரு நாளும் தன் வளர்ச்சி எண்ணியே நொடிகளை நகர்த்தினாள். தன் தடங்களை பல இடங்களில் பதிக்க தொடங்கிளான்.
இன்று இவள் மலர்ந்து மணம் வீசுகிறாள். இதற்கு பெற்றோரின் வியர்வை துளிகளே காரணம். நம் வாழ்க்கையை மாற்றும் ஒவ்வொரு வழியும் பல வலிகளிலே அமைந்துள்ளன. அதை காண ஆரம்பித்தாலே எந்த ஊக்குவிப்பும் தேவை யில்லை. ஆயிரம் இன்னல்கள் இவள் அறிந்திருந்தாலும், மிளிரும் ஒவ்வொர தருணத்தையே கணக்கில் கொண்டாள். விழுவது என்றும் வீழ்வதற்கல்ல என்று திறமர்ய் சிந்திப்பாள். எதுவும் புதிதாக தோன்றாது, இருப்பதை தெளிவாக உணர்ந்தலே போதுமானது. எண்ணங்களை தவறவிடாமல், சிந்தனைகளை சிதறவிடாமல் எடுத்து வைக்கும், ஒவ்வொர அடியும் குழப்பமற்றது என்று உணர்ந்து எதையும் நல்ல வழியில் ஏற்றுக்கொண்டு துணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே...!

இளைஞர்கள் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்திட ஆக்க சக்தியினை பயன்படுத்துவதை விடுத்து வன்முறையை கையில் எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள்.
இளைஞர்கள் தங்களின் தனித்தன்மையை காட்டிட ஆக்க வழி விடுத்து வன்முறை செயல்களை மேற்கொள்கிறார்கள். தன்னை ஒத்த இளைஞனையோ, சக மனிதரையோ, காயப்படுத்துவதும், அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் மற்றவர் தன்னை பார்த்து அச்சப்படுவதுமே உண்மையான ஹீரோயிசம் என நம்புகிறார்கள். கல்லூரி படிப்பை முடித்த உடன் வேலைக்கு செல்ல வேண்டிய இளைஞர்கள் சமூகம் வன்முறைச் செயல்களால் பெரிதும் பாதிப்பு அடைகிறது. மனித நேயம் குறைந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு நேரத்திலும் புதிதாய் சந்திக்கும் மனிதனை ஒரு பொருட்டாக நினைப்பது கிடையாது. சுயநலம், சுயவருவாய், தனித்த பொழுதுபோக்கு, கேளிக்கை, உல்லாசம் இதற்கு தடையாக வரும் சக மனிதனையும், வன்முறைச் செயல்களால் தாக்கக்கூடிய கொடிய மனப்போக்கு வளர்ந்து கொண்டே வருகிறது.
1950 முதல் 1980 வரை ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை அரசு தொடங்கியது. இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இது வாழ்வில் அச்சமற்றும் நீண்ட நாட்களுக்கு பயன்தரக்கூடியதும் பயமற்ற பொருளாதார வரவுகளையும் கொடுத்தது. இதனால் இளைஞர்கள் ஒரு நிரந்தரமான வாழ்வியல் நிலைகளை உணர்ந்தார்கள்.
இன்று தனியார் மய கொள்கைகள் மெல்ல தலை எடுக்கத் தொடங்கிய பிறகு தான் பதுக்கல், ஊழல், கருப்புப்பணம் என்பது உருவாகத் தொடங்கியது.
தனியார் சந்தைகள் விவசாயிகள் உற்பத்தியைக் கூடத் தீர்மானித்தார்கள். இதன் காரணமாய் இடைத்தரகர்கள் பெருகினார்கள். உழைக்காமல் வருவாயை ஈட்டிடும் தனியார் முதலாளிகளின் கை ஓங்கியதால் இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை, வயதுக்கு ஏற்ற வாழ்க்கை கிடைக்காமல் போனது. இதன் காரணமாய் இளைஞர்கள் மனதில் குறுக்கு வழியில் ஆதாயம் பெறக்கூடிய எண்ணம் தோன்றியது. கடின உழைப்பின் மீதுள்ள நம்பிக்கை முற்றிலும் கைவிட்டுப் போனது. குறுக்கு வழியில் உயர்வதே வாழ்வில் புத்திசாலித்தனம் என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது.
இளைஞர்கள் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்திட ஆக்க சக்தியினை பயன்படுத்துவதை விடுத்து வன்முறையை கையில் எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். தன்னை ஒத்த இளைஞனை தாக்கி காயப்படுத்துவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் மற்றவர் தன்னைப் பார்த்து அச்சப்படுவதுமே உண்மையான ஹீரோயிசம் என்று எண்ணிக் கொண்டு செயல்படும் இளைஞர் பலர் குற்றச் சம்பவங்களில் மாட்டிக் கொண்டு தங்கள் வாழ்க்கையே இழக்கிறார்கள். பல இளைஞர்களுக்கு தாங்கள் ஈடுபடும் வன்முறை செயல்களுக்கு கிடைக்கும் தண்டனை எவை, இதன் விளைவால் ஏற்படக்கூடிய குடும்ப மற்றும் சுற்றுப்புற உறவுகளின் பாதிப்பு எவை என்பதை அறியாமேலேயே குற்றச்செயல்களில் ஈடுபட்டும் மாட்டிக்கொள்கிறார்கள்.
இன்றைய இளைஞர்களிடையே பரவும் வன்முறை கலாசாரம் அவர்களின் வாழ்வை பாதிக்கிறது. அறியாமையும் ஒவ்வொரு குற்றத்திற்கு என்ன விதமான தண்டனை என்பதனை அறியாத அலட்சியப்போக்கும் எதிர்காலத்தின் மீதுள்ள நம்பிக்கை வறட்சி போன்றவையே பெரிதும் இன்றைய இளைஞர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடக் காரணமாக அமைகிறது. எனவே இளைஞர்களை வன்முறையில் ஈடுபட வைப்பது அவர்களின் மனோநிலை மற்றும் அவர்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளே ஆகும். இளைஞர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு போதுமான அளவுக்கு சட்டம் பற்றியும் குற்றங்களுக்கு கிடைக்கும் தண்டனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. வெற்றியாளர்கள் தொடர் உழைப்பும் இடைவிடாத முயற்சியால் தான் உருவாகிறார்கள் என்பதை உணர்த்தும் கடமை கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கடமையாகும்.
முனைவர் பெ.வைரமூர்த்தி,
இணைப் பேராசிரியர்,
அரசு கலைக் கல்லூரி, குளித்தலை.

தர்ப்பூசணியின் உள்புறம் சிவப்பு நிறத்தில் அழகாக காட்சியளிக்கும். அவை அடர்சிவப்பு நிறமாக தோற்றமளிப்பதற்காக ரசாயன பொடிகள் தூவப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.
கோடை காலத்தின் ஆரோக்கியமான பழமாக தர்ப்பூசணி கருதப்படுகிறது. தர்ப்பூசணியில் 92 சதவீதம் நீரும், 6 சதவீதம் சர்க்கரையும், பிற ஊட்டச்சத்துக்களும் நிரம்பி இருக்கின்றன. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் நிறைய பேர் விரும்பி சாப்பிடுகிறார்கள். தர்ப்பூசணியின் உள்புறம் சிவப்பு நிறத்தில் அழகாக காட்சியளிக்கும். அவை அடர்சிவப்பு நிறமாக தோற்றமளிப்பதற்காக ரசாயன பொடிகள் தூவப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. அதைவிட மோசமான நிகழ்வாக தர்ப்பூசணி பழங்கள் வேகமாக வளர்வதற்காக ஆக்ஸிடோஸின் கலந்த ரசாயனம் உட்செலுத்தப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. அவ்வாறு உட்செலுத்தப்பட்ட தர்ப்பூசணிகளில் நைட்ரேட், குரோமேட், மெத்தனால் மஞ்சள், கார்பைடு, ஆக்ஸிடாஸின் போன்ற ரசாயனங்கள் கலந்திருக்கலாம்.
மேலும் தர்பூசணி விரைவாக வளர நைட்ரஜன் பல முறை பயன்படுத்தப்படுகிறது. அது உடலுக்குள் சென்றால் பாதிப்பு அதிகமாகும். தர்ப்பூசணியில் கலக்கப்படும் மெத்தனால் மஞ்சள், புற்றுநோய் உண்டாக்கும் அபாயம் கொண்டது. குரோமேட், உடலில் ரத்த இழப்பை ஏற்படுத்தக்கூடியது. மூளை செல்கள் சேதமடைவதற்கும், கண் பார்வை திறன் பாதிப்புக்குள்ளாவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ரசாயன சாயம் கலந்த தர்ப்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலி ஏற்படும்.
மாம்பழங்கள், வாழைப்பழங்களை போல தர்ப்பூசணியை வேகமாக பழுக்க வைப்பதற்கு கார்பைட் தூள் பயன்படுத்தும் நிகழ்வும் சில இடங்களில் நடக்கிறது. தர்ப்பூசணியை வெட்டுவதற்கு முன்பு நன்றாக நீரில் கழுவுவது அவசியமானது. தர்ப்பூசணி மிகவும் அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் ஊசி மூலம் உட்செலுத்தப்பட்ட ரசாயனங்கள் காரணமாக இருக்கலாம். அத்தகைய பழங்களை வெட்டும்போது வழக்கத்தை விட சிவப்பாக காணப்படும். சிறிது நேரத்திற்கு பிறகு அதில் இருக்கும் ரசாயனம் காரணமாக தசைப்பகுதி பாதிப்புக்குள்ளாகும்.
மறுநாள் பார்த்தால் அழுகிபோய் இருக்கும். அல்லது நுரை போல் நீர் வெளியேறும். இந்த அறிகுறிகளை கொண்டே தர்ப்பூசணியில் ரசாயனம் கலந்திருப்பதை கண்டறிந்துவிடலாம். தர்ப்பூசணியை வெட்டிய பிறகு அதன் நடுவில் துளைகளோ, விரிசலோ தென்பட்டால் அதுவும் ரசாயனம் உட்செலுத்தப்பட்டதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இயற்கையாகவே பழுத்த பழத்தில் அதிக துளைகள், கீறல்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தர்ப்பூசணி பழங்களை சில வாரங்கள் சேமித்துவைத்தாலும் கெட்டுப்போகாது. அதனால் கடைகளில் வாங்கும் தர்ப்பூசணி பழங்களை இரண்டு, மூன்று நாட்களுக்கு பிறகு சாப்பிடுவது நல்லது. தர்ப்பூசணியை வெட்டும்போது மேற்பரப்பில் இருந்து ஏதேனும் நுரையோ, நீரோ வெளியேறினால் அது ரசாயனம் கலக்கப்பட்டது என்பதை கண்டறிந்துவிடலாம்.

குழந்தைகளைத்தான் கொசுக்கள் எளிதில் கடிக்கும். மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களையும் பரப்பிவிடும். அதில் மலேரியாதான் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
கொசுக்களால் பரவும் முக்கிய நோயாக மலேரியா அமைந் திருக்கிறது. மற்ற வயதினரை ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகளைத்தான் கொசுக்கள் எளிதில் கடிக்கும். மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களையும் பரப்பிவிடும். அதில் மலேரியாதான் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மலேரியா நோய்க்கான அறிகுறிகள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வேறுபடும். அதனை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
* வெப்பமான காலநிலைதான் மலேரியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கும். எரிச்சல், பசியின்மை, தூங்குவதில் சிக்கல் போன்றவை மலேரியா காய்ச்சலுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். சளி, காய்ச்சல் இரண்டாம் கட்ட அறிகுறிகளாகும். காய்ச்சலின்போது குழந்தைகள் வேகமாக சுவாசிக்க ஆரம்பிப்பார்கள். ஓரிரு நாட்கள் உடல் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும். சில சமயங்களில் திடீரென்று 105 டிகிரிக்கும் மேல் செல்லும்.
* காய்ச்சல் குறையும்போது உடல் வெப்பநிலை இயல்புக்கு திரும்ப தொடங்கும். அப்போது வியர்வையும் வெளிப்படும்.
* வியர்வை, காய்ச்சல், குளிர்த்தன்மை போன்ற அறிகுறிகள் இரண்டு மூன்று நாட்களாக மாறி மாறி தொடர்ந்து கொண்டிருந்தால் அது மலேரியா தொற்று பரவுவதற்கான அறிகுறியாகும்.
* குமட்டல், தலைவலி, தசைவலி, முதுகுவலி போன்றவை மலேரியா காய்ச்சலுக்கான பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன. மலேரியா வைரஸ் குழந்தைகளின் மூளை மற்றும் சிறுநீரகத்தையும் பாதிக்கும். மூளையில் அதன் தாக்கம் அதிகரிக்கும்போது ஞாபகத்திறன் பாதிப்புக்குள்ளாகும். சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும்போது குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் அளவு குறையும். இத்தகைய அறிகுறி கள் தென்பட்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. சரியான சமயத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் தாக்கத்தில் இருந்து எளிதாக விடுபட்டுவிடலாம். குழந்தைகள் வெளியே செல்லும்போது கொசுக்களை விரட்டும் கிரீம், லோஷன்களை கை, கால்களில் தடவுவது பாதுகாப்பானது. வீட்டிலும் கொசு விரட்டியை உபயோகியுங்கள்.

சிகரெட் பழக்கம் ஆண்-பெண் இருவருக்குமே பாதிப்பை ஏற்படுத்தினாலும், பெண்களுக்கு சற்று கூடுதலாக பாதிப்பை உண்டாக்குகிறது.
கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்
சிகரெட் புகைப்பதற்கு பெண்கள் பல காரணங்களை கூறினாலும், அது அவர்களின் கர்ப்பக்காலத்தில் பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. சில பெண்களுக்கு குழந்தை பாக்கியமும் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. மேலும் எடை குறைவான குழந்தை, பிரசவத்தில் சிக்கல் என அடுக்கடுக்கான காரணங்களை, மருத்துவர்கள் அடுக்கிக்கொண்டே செல்கிறார்கள்.
மார்பக புற்றுநோய்
அதேபோல, புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும் மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
இதுபோக நுரையீரல் பாதிப்பு, சுவாச கோளாறு, வாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.