என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதிகளில் வீடு-மனை வாங்க முடிவு செய்தவர்கள் பத்திரப் பதிவுக்கு முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான சில விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.
    புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதிகளில் வீடு-மனை வாங்க முடிவு செய்தவர்கள் பத்திரப் பதிவுக்கு முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான சில விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

    ‘லீகல் ஒப்பீனியன்’

    சம்பந்தப்பட்ட வீடு-மனை சம்பந்தமான அனைத்து வகை ஆவணங்களையும் ஒரு வழக்கறிஞரிடம் காட்டி அவற்றின் மீது சட்ட ஆலோசனைகளை பெற வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்பு அங்கீகாரம்

    மனைப்பிரிவிற்கு நகர் மன்றம் ஒப்புதல் வழங்கிய தீர்மானம் நகர் ஊரமைப்பு இயக்குநர் அல்லது மண்டல துணை இயக்குநர் அவர்களின் தொழில்நுட்ப ஒப்புதல் ஆணையை பத்திஇரத்தின் ஒரு பகுதியாக குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும்.

    மூலப் பத்திர நகல்கள்

    அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் பல மனைகள் விற்கப்படும் நிலையில் நிலத்தின் உரிமையாளர் எல்லோருக்கும் மூலப்பத்திர அசலைக் கொடுக்க இயலாது. எனவே சம்பந்தப்பட்ட பத்திரங்கள் அனைத்திற்கும் நகல் கேட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

    தூர்ந்த கிணறு கவனம்

    வாங்க உத்தேசித்துள்ள மனைப்பிரிவு அமைந்துள்ள பகுதியில் ஏதாவது பழைய கிணறு அலது போர்வெல் தூர்ந்த நிலையில் இருந்து அவை மூடப்பட்டிருக்கலாம். வாங்க உத்தேசம் செய்யப்பட்ட மனையில் அவ்வாறு மூடப்பட்ட கிணறு அல்லது போர்வெல் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அலுவலகம் பற்றிய தகவல்கள்

    வீட்டு மனை அமைந்துள்ள பகுதியின் ஊராட்சி பேரூராட்சி நகராட்சி ஆகியவற்றின் அலுவலக முகவரியை தெரிந்து வைத்திருப்பது அவசியம். மேலும் உள்ளாட்சி மன்ற தலைவர் வட்டாட்சியர் அலுவலகம் கிராம நிர்வாக அலுவலர் துணை நில அளவையாளர் (De-puty Surv-ey-or) நகர அளவையாளர் ( Town Surv-ey-or) சார் பதிவு அலுவலகம் ஆகியவை பற்றிய தகவல்களையும் அறிந்து வைத்திருப்பது அவசியம்.
    கொரோனாவை தடுக்கவோ, குணப்படுத்தவோ எந்த மருந்தும் இல்லை. முதியவர்கள் கொரோனா தொற்றிலிருந்து எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.
    கொரோனா உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான உயிரை பலி வாங்கிக்கொண்டு இருக்கிறது. இது முதியோர்களை அதிகம் தாக்குகிறது. பாதிக்கப்பட்ட 70 சதவிகிதத்தினர் 60 வயதைக் கடந்தவர்களே. இதற்கு முக்கிய காரணம், முதியவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பது தான். முதுமையில் ஏற்படும் நீரிழிவு நோய், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரகம் பாதிப்பு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. மேலும் நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளினாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புண்டு. உதாரணம்: ஸ்டீராய்டு, புற்றுநோய்க்கான மருந்துகள். சத்துணவு குறைவும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஒரு காரணமாகும்.

    இந்நோய்க்கு என்று குறிப்பிடும்படியான அறிகுறிகள் ஏதுமில்லை. ஆரம்பத்தில் உடல் வலி, சோர்வு, தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் ஒரு சில நாட்கள் இருக்கும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து லேசான காய்ச்சலும் தொண்டை வலியும் ஏற்படும், பசி குறையும். சுமார் ஒரு வாரத்திற்கு பின்பு தொண்டை வலி அதிகரிக்கும். உடல் சோர்வு மிகவும் அதிகரிக்கும். இந்த சமயத்தில்தான் காய்ச்சல் அதிகரித்து குளிரும் ஏற்படும். சிலருக்கு பசி குறையும். வயிற்றுப்போக்கும் ஏற்படும். இதற்கு அடுத்தகட்டமாக மூச்சுத்திணறல் ஏற்படும். நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்படும்போது வென்டிலேட்டர் பொருத்தி சிகிச்சை தரப்படும்.

    கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் சராசரி வயது 78 ஆக உள்ளது. இறந்த முதியவர்களில் 83 சதவீதம் பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் இருந்துள்ளது.

    இந்நோயைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ எந்த மருந்தும் இல்லை. முதியவர்கள் கொரோனா தொற்றிலிருந்து எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது:

    * ஊரடங்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவசியமில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். நிறைய பேர் கூடும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் தவிர்க்கலாம். அவசியம் போக வேண்டும் என்றால் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    * கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு போகக் கூடாது. எங்கு இருந்தாலும், சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

    * வெளியே போய்விட்டு வீட்டிற்குள் வந்தவுடன் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

    * முதியவர்கள் தங்கள் பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி பேசுவதையும், முத்தமிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    * கை குலுக்குவதை தவிர்க்கலாம். மற்றவர்களிடம் பேசும்போது மூன்று அடி தூரம் விலகி நின்றே பேய் வேண்டும்.

    * வெளி உணவுகள், குளிர்ச்சியான பழ பானங்கள், குளிர் சாதனப்பெட்டியில் வைத்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    * அசைவ உணவை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் முழுமையாக சுத்தப்படுத்தி புதிதாக இருக்க வேண்டும்.

    * தற்போது வெயில் காலம் ஆரம்பித்து விட்டதால் முதியோர்கள் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். மிதமான சூட்டில் அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும்.

    * முதுமையின் காரணமாக தாக உணர்ச்சி சிறிது குறைந்தே இருக்கும். இதனால் முதியோர்கள் போதுமான தண்ணீர் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீரானது அவசியம் பருக வேண்டும். இதயநோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் பருக வேண்டும்.

    * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, கொட்டை வகைகள், பாகற்காய், தேன், காளான், பூண்டு, இஞ்சி, தயிர், மிளகு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * பிராணாயாமம், தியானம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

    * தினமும் சிறிது உடற்பயிற்சி செய்வது அவசியம். முக்கியமாக பக்கவாதம், உதறுவாதம் என்கிற பார்க்கின்சன்ஸ் நோய் மற்றும் மூட்டு நோய் உள்ளவர்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    * தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அரை மணி நேரம் உடலில் வெயில் படுமாறு உட்கார வேண்டும். இதன்மூலம் வைட்டமின் டி சத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக: சைவ உணவுகளில் பால், தயிர், வெண்ணெய், பாலாடைக் கட்டி மற்றும் பால் அதிகமாக எடுத்துக் கொள்ளவும். சிறுதானிய வகைகளை (ராகி, கம்பு, சோளம், வரகு, தினை) உணவில் சற்று சேர்த்துக் கொள்ளலாம். மீன், மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், காளான் முதலியவற்றை முடிந்தளவிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * நீரிழிவு நோய் உள்ளவர்கள், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

    * கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை போன்ற அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை தள்ளிப்போட வேண்டும்.

    மேற்கண்ட வழிமுறைகளை முதியோர் தவறாமல் கடைபிடித்தால் கொரோனா வைரஸ் நோய் முதியவர்களிடம் நெருங்கவே முடியாது!

    டாக்டர் வ.செ.நடராசன்

    முதியோர் நல மருத்துவர், புரவலர்,

    இந்திய முதியோர் நல மருத்துவக் கழகம்
    உண்மையில் மனதிற்குப் பிடித்தவர்கள் செய்யும் விருப்பமில்லாத செயல்களோ அல்லது சொல்லும் சொற்களோதான் அதிகம் புண்படுத்தும் என்று புலம்பாதவர்களே இல்லை எனலாம்.
    உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களால் உங்கள் மனம் புண்படுமா?

    உண்மையில் மனதிற்குப் பிடித்தவர்கள் செய்யும் விருப்பமில்லாத செயல்களோ அல்லது சொல்லும் சொற்களோதான் அதிகம் புண்படுத்தும் என்று புலம்பாதவர்களே இல்லை எனலாம்.

    அதிகம் பரிச்சயமில்லாதவர்களின் செயல்களைக் கூட எளிதாகக் கடந்து விடும் மனம், பிரியமானவர்கள் தவறாக ஏதேனும் செய்தாலோ அல்லது சொன்னாலோ அதைப் பற்றியே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டு நிம்மதி இழந்து தவிக்கும்.

    அதிலும் அவர்கள் சொல்லோ, செயலோ, உங்கள் தன்மானத்தை தாக்கக் கூடியது என்றால் அவ்வளவுதான் அவர்களுக்கு சுளீரென்று பதிலடி தர வேண்டும் எனத் துடிக்கும்.

    ஆனால் இவை, பிரச்சினைகளை பெரிதாக்குமே தவிர ஒரு போதும் பிரச்சினைக்கு தீர்வு தராது. சின்ன சின்ன தவறுகள் செய்வது மனித இயல்பு. நம்மை அவமானப்படுத்த வேண்டுமென்றோ, வருத்தப்படுத்த வேண்டுமென்றோ அப்படி நடந்திருக்க மாட்டார்கள். ஏதோ போகிற போக்கில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். எல்லாம் சரியாகி விடும் என அதைக் கடந்து செல்லும் பெருந்தன்மையே மனதிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும்.

    நீங்கள் அறிவீர்களா.. நம் ஒவ்வொருவர் மனதிலுமே ‘auto correction’செயலி இருக்கிறது. அது, நம்மை அறியாமல் ஏதாவது தவறாக நடந்து விட்டால், தானாகவே அப்படி சொல்லி இருக்கக் கூடாது, இப்படி செய்திருக்கக் கூடாது என மனதில் தோன்றி, தான் செய்த தவறுக்கு வருந்தி அதை சரி செய்து கொள்ள முயலும்.  எனவே, யாராவது ஏதாவது தவறிழைத்து விட்டால் அவரது ‘auto correction’ அவரை திருத்துவதற்கு சற்று அவகாசம் கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு அதற்கேற்ப கொஞ்ச நேரம் கண்டு கொள்ளாத மாதிரி இருந்தால் போதும்.

    இப்போது இவர்கள் சொல்வதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் இது தொடர்ந்து விடக் கூடும் என எண்ணி நீ இப்படி சொன்னாய் இது என்னை வருத்துகிறது என்று பாய்ண்ட் பண்ணி சொல்லிக் காட்டாதீர்கள். அப்படிச் சொல்லிக் காட்டினால்தானே, அவர்கள் தவறை உணர்ந்து நம்மிடம் அதற்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி குறிப்பிடும் போது தன்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்கிறார்கள் என்று தான் அவர்களுக்கு தோன்றும்,

    தவிர, இப்போது எடுத்து சொல்லுமளவுக்கு அப்படி என்ன தவறு செய்து விட்டேன். இது போல் நீ ஒன்றுமே செய்ததில்லையா என்று உங்களிடமிருக்கும் ஏதாவது ஒரு தவறை அவர்களும் எடுத்து சொல்ல முற்படுவார்கள். அதாவது, இயல்பாக அவர்களே மாற்றி இருக்கக் கூடிய ஒன்றை, தவறு என்று கருதிய ஒன்றை, நீங்கள் சுட்டிக் காட்டுவதால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறில்லை என்று அவர்களது ஈகோவை மாற்றி எண்ண வைத்து விடும். அல்லது நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக அப்போதைக்கு வருத்தம் தெரிவித்தாலும் தான் மாற்றிக் கொள்வதாக முன் வந்து சொன்னாலும் அவர்கள் மனதில் இந்த சம்பவம் பதிந்து விடும். அதனால், அது அவர்களை முன்பு போல் இயல்பாக இருக்க விடாது. தான் சொல்ல வேண்டியதை சொல்ல முடியாத தடுமாற்றத்தை ஏற்படுத்தி விடும். அதனால் இருவருக்குமிடையே சகஜ நிலை இல்லாத இறுக்கம் ஏற்பட்டு விடும்.

    இப்படி ஏற்படும் சிறு விரிசல்கள் சரியான முறையில் கவனிக்கப்பட்டு பரஸ்பரம் புரிந்து சரி செய்யப்படவில்லை எனில் அது இருவரின் தன்மானத்தையும் பாதித்து இருவருக்குமிடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விடக் கூடும். அதே நேரம்.. கோபமோ, வருத்தமோ, சங்கடமோ எழும் போது வயிற்றுக்குள் என்னவோ சுழன்று நெருப்பு கங்காக வார்த்தைகள் கிளர்ந்து எழத் துடிக்கும் போது, அப்படியே மூச்சை ‘ஹா..” என்ற சத்தத்தோடு வெளியே விடுங்கள். பின் மெல்ல அப்படியே மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு உங்களை நிதானப்படுத்துங்கள். அப்படிச் செய்யும் போது, அந்த நேரத்தில் அந்த சூழலை, உங்கள் வார்த்தைகளை நீங்கள் நிறுத்தி வைக்கிறீர்கள்.

    அதாவது நின்று நிதானித்து, உங்களுடைய முழு கவனத்தையும் அந்த தருணத்தில் நிறுத்தி வையுங்கள். அப்படிச் செய்யவில்லை என்றால், உங்கள் மனம், அன்றும் இப்படித்தான் செய்தார்கள் என விறுவிறுவென கடந்த காலத்திற்குள் இறங்கி, என்றோ நடந்த விஷயங்களைக் கிளறி எடுத்து, முந்தைய பைலை புரட்ட ஆரம்பித்து விடும். அதற்கு இடம் கொடுக்காமல் அலைபாயத்துடிக்கும் மனதை அப்படியே அந்தக் கணத்தில் நிறுத்துங்கள். அது போல் இதை தட்டிக் கேட்காமல் விட்டால் நாளை இது இப்படி நடக்கக் கூடும் என சிறு விஷயத்தையும் பூதாகரமாக்கும் எண்ணங்களையும் தடுத்து நிறுத்துங்கள்.

    எதற்காக இதை பெரிதாக எடுத்து என் மனம் வருத்தப் படுகிறது, அவர்களின் செயலுக்கு நான் பதிலடி கொடுப்பது அவரின் அன்பை விட எனக்கு முக்கியமானதா?! என்னுடைய நிம்மதியை விட, மகிழ்ச்சியை விட அது எனக்கு அவசியமானது தானா என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். பெரும்பாலும், தான் சொன்னால் மற்றவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில்தான் தனக்கான அன்பும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்று மனித மனம் தவறாக ஒன்றை தனக்கென வரையறுத்துக் கொள்கிறது. தான் ஒன்றை சொல்லி தனக்கு வேண்டிய உறவு அதை ஏற்றுக் கொள்ள முடியாத சூழலில் அவர்கள் தன்னை மதிக்கவில்லை, தான் அவர்களுக்கு முக்கியமில்லை, என என்னென்னவோ கற்பனைகள் செய்து கொண்டு மருகுகிறது. அதுவே உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது.

    பொதுவாக, எல்லா உறவுகளையும் உரசச் செய்யும் ஒரு வார்த்தை ‘தேவை என்பதுதான். அதாவது, எனக்கு இது தேவை, எனக்கு அது தேவை, நீ இப்படி இருக்க வேண்டும் என தான் விரும்பக் கூடியவரை தன்னுடையவர் என்று கருதக் கூடிய நேரம், தான் விரும்புவது போல் அவர்கள் இருக்க வேண்டும் என இழுத்து சென்று விடுகிறது.
    ஆனால் அவர்கள் அப்படி இருக்க முடிவது என்பது அவர்களுக்கு உங்கள் மேல் இருக்கும் அன்பையும் மதிப்பையும் மட்டும் சார்ந்த விஷயம் அல்ல. அது அவர்களின் உடல் மற்றும் உள்ளச் சூழல்களையும் சார்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    நீங்கள் ஒன்றை எதிர்பார்த்து அதை அவர்கள் செய்யாத போது அவர்கள் மேல் கோபம் வருகிறது. அது அந்த உறவே விடுபடுமளவு இழுத்து செல்கிறது. அதற்கு பதில் அவர்கள் மேல் உங்களுக்கு எழும் அந்த எதிர்பார்ப்பை விட்டுவிட்டால் உறவு என்னாளும் நிலைத்து நீடிக்கும்.

    அது போல் நீங்கள் ஒன்றை எதிர்பார்த்து அதை மற்றவர் செய்யவில்லை என்றால் உங்களை வருத்தும் ஒரு விஷயம், செய்தால் அவரை வருத்தக்கூடும் என்பதை உணர்ந்து கொண்டால் அங்கு பிரச்சினைகள் எழாத பரஸ்பர புரிதல் இருக்கும்.

    மகிழ்ச்சி என்பது உங்களுக்கு வேண்டியது கிடைப்பதில் மட்டுமல்ல உங்களுக்கு வேண்டியதை, வேண்டியவரின் மனநிலை புரிந்து விட்டுக் கொடுப்பதிலும் இருக்கிறது என்பதை உங்கள் ஆழ்மனதில் பதிய வைத்து விட்டீர்கள் என்றால், உங்கள் மனமே எந்த சூழலிலும் தனக்கான வரையறையை  வகுத்துக் கொள்ளும். மற்றவர்களை அவர்கள் இயல்பு மாறாமலேயே ஏற்றுக் கொள்ளும். உறவு நிலைக்கும். மகிழ்ச்சி மலரும்.

    www.facebook.com/fajilaazad.dr
    Email:fajila@hotmil.com
    முகத்தில் எண்ணெய் பசை நீங்கி பொலிவு பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அழகுராணிதான்!
    உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொளுத்தும் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்துவிடும்..எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்

    வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் இதை தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற  வேண்டும்.

    தக்காளி பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

    பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

    எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக இருக்கும்.

    எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும். வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.

    எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

    பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

    முகத்தில் எண்ணெய் பசை நீங்கி பொலிவு பெற மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அழகுராணிதான்!
    'பார்ட்டி', 'ட்ரீட்' என அதிகம் கொழுப்பு சத்து நிறைந்த உணவு சாப்பிட்டவர்கள், அடுத்த நாள் அதை பேலன்ஸ் செய்வதற்கு, இந்த சத்து நிறைந்த எளிய உணவை சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய வெள்ளரி, தக்காளி, வெங்காயம் - தலா ஒரு கப்,
    பொடியாக நறுக்கிய கேரட், குடைமிளகாய் - தலா ஒரு கப்,
    முளைகட்டிய பாசிப்பயறு - ஒரு கப்,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    நியூட்ரிஷியன் வெஜிடபிள் சாலட்

    செய்முறை:

    கொடுத்துள்ள எல்லா காய்கறிகளையும் அகலமான பாத்திரத்தில் போட்டு, முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பிறகு, மிளகுத்தூள், கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து பரிமாறவும்.
    உள்ளாடை அணிவதால் ஆரோக்கியம் எந்த விதத்திலும் மேம்படாது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
    பெண்களின் உள்ளாடை குறிப்பாக பிரா அணிவதால் ஏதேனும் நண்மை உள்ளதா என்று ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் 15 ஆண்டுகள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

    உள்ளாடை என்பது வழக்கமாக நாம் அணியும் ஆடையைப் போன்று இல்லை... அது நம் இனப்பெருக்க உறுப்புக்களின் பாதுகாப்பு கவசங்கள் என்றுதான் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். உண்மையில், உள்ளாடை அணிவதால் ஆரோக்கியம் எந்த விதத்திலும் மேம்படாது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

    பெண்களின் உள்ளாடை குறிப்பாக பிரா அணிவதால் ஏதேனும் நண்மை உள்ளதா என்று ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் 15 ஆண்டுகள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

    * அவரது ஆய்வின்படி, பிரா அணிவதன் மூலம் பெண்களின் மார்பகங்களுக்கு கூடுதல் நன்மை எதுவும் கிடைப்பதில்லை. இதற்கு மாறாக தீய விளைவுகள் தான் ஏற்படுகின்றன.

    * பெண்கள் பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும்? என்பதற்கு இந்த ஆய்வில், 18-35 வயதுக்குட்பட்ட பிரா அணியாமல் வாழ்ந்து வரும் பெண்களிடமிருந்து சில தகவல்களை பெற்றுள்ளார்.  அதன்படி, இவர்களுக்கு மார்பக பகுதியில் இயற்கையாக வளரக் கூடிய திசுக்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, அவர்கள் மார்பகத்திற்கு ஆரோக்கிய நன்மைகள் விளைவித்துள்ளன என அவர் கூறியுள்ளார்.

    * தினமும் பிரா அணிபவர்களை கேட்டபோது, அவர்களுக்கு பிரா அணிவதனால் அதன் இறுக்கம் காரணத்தால், இயற்கையாக வளரும் அந்த திசுக்களின் வளர்ச்சி தடைப்பட்டு, மார்பகத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

    இதனால், பிரா அணிவதால் மேலும், மார்பகங்கள் தொங்கும் நிலையை தான் அடையும் என்றும் ரௌலியன் கூறியுள்ளார்.
    குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு மிக அதிகமாகவே தேவையாகிறது. குறிப்பாக பெண் குழந்தையின் வளர்ப்பில் அன்னைக்கு நல்ல விழிப்புணர்வும், தெளிவான மனநிலையும் மிகமிக அவசியம்.
    குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. கலாச்சார சீர்கேடுகள் வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு மிக அதிகமாகவே தேவையாகிறது. குறிப்பாக பெண் குழந்தையின் வளர்ப்பில் அன்னைக்கு நல்ல விழிப்புணர்வும், தெளிவான மனநிலையும் மிகமிக அவசியம். அப்படி இல்லாதவர்களின் நிலைமை என்ன ஆகும் என்பதற்கு இது போன்ற சம்பவங்களே ஆதாரம்.

    பதினைந்தாம் வயதில் அடியெடுத்து வைக்கும் அழகிய இளம் மொட்டு பொன்மணி. பெயருக்கு ஏற்றவாறு கரும்பொன்னாக பளபளவென மின்னுபவள். அது என்னவோ இந்த பெண் குழந்தைகளுக்கு பெரிய மனுசி ஆனவுடனே ஒரு தனி தோரணையும், பெருமையும் வந்து விடுகின்றன. அப்பா லாரி ஓட்டும் தொழில் என்பதால் பெரும்பாலும் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வரமுடியும். அம்மா, கலைச்செல்வி காட்டு வேலைக்குச் செல்பவள். காலை 9 மணிக்கு மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக் குச் சென்று விட்டு மாலை ஆறு மணிக்குதான் வீடு வந்து சேருவாள்.

    ஒரே செல்லப்பெண் என்பதால் அதிகமாகவே செல்லம் கொடுத்து சக்திக்கு மீறி வேண்டியதையெல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்த்தார்கள். படிப்பில் அதிக ஆர்வம் இல்லாவிட்டாலும் அந்த வயதிற்கே உரிய அழகுணர்வு அவளிடம் சற்று அதிக மாகவே இருந்தது. விளம்பரங்களில் பார்க்கும் அத்தனை அழகுப் பொருட்களையும் வாங்கத் துடிப்பாள். அப்பாவிடம் ஒன்று, அம்மாவிடம் ஒன்று என்று கொஞ்சிப் பேசியே சாதிப்பவள், ஒரு கட்டத்தில் பொய் காரணங்கள் சொல்லி பணம் வாங்கி செலவு செய்யவும் தீய நட்புகள் மூலம் பழகியிருந்தாள். கலைச்செல்வி ஒரு விவரமான தாயாக விழிப்புணர்வுடன் இருந்திருந்தால் வெளித்தோற்றத்திற்கு அளவிற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த முதல் மாற்றத்திலேயே கிள்ளி எறிந்திருப்பாள். இப்படி ஒரு அசம்பாவிதத்தில் போய் முடிய விட்டிருக்கமாட்டாள்.

    எதற்கெடுத்தாலும் அவளுடைய சக தோழிகளை ஒப்பிட்டு,போட்டி போட்டுக்கொண்டு அழகுபடுத்திக் கொள்ளத் துடிப்பாள் பொன்மணி. நட்பு வட்டத்தில் தான் மட்டுமே முன்னணியில் இருக்கவேண்டும் என்ற தற்பெருமை தலைதூக்கியதால் மகளிடம் ஏற்பட்ட அந்த பலவிதமான மாற்றங்களைக்கூட கவனிக்காமல் விட்டுவிட்டாள் கலைச்செல்வி. ஒருவேளை அதை சரியாகக் கையாண்டிருந்தால், பொன்மணி பள்ளிக்கும் ஒழுங்காகச் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதையும் அறிந்து கண்டித்து திருத்தியிருக்கலாம்.

    இன்றைய சமூக-கலாச்சார சூழல் மிகப்பெரிய வேகத்தில் மாற்றத்தை அடைந்து வரும் நிலையில் அவரவர் குடும்பத்திற்கான தனிப்பட்ட இயக்கவியல் பின்னணியில் எத்தகைய மாற்றங்களை சந்திக்க நேரலாம் என்ற விழிப்புணர்வு ஒவ்வொரு தாய்க்கும் மிக அவசியம். கலைச்செல்வி மகளிடம் ஏற்பட்டுள்ள எந்த மாற்றத்தையும் கவனிக்காமல், அவள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்துவிட்டு தான் உண்டு தன் வேலையுண்டு என்று மெத்தனமாக இருந்ததன் பலனை நன்றாகவேஅனுபவித்துவிட்டாள். பதின்மக்கால நினைவுகள்எல்லோருக்கும் கடைசிவரை நீங்காமல் இருப்பது.

    கண்ணாடியின் முன் நின்று முன்னும், பின்னும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்த என்னை,அருகிலிருந்த என் அம்மாவின் குரல் சற்றே கண்டிப்பு கலந்த புன்னகையுடன், “பன்னிக்குட்டி கூட பருவத்தில் அழகாய்த்தான் இருக்கும். இதெல்லாம் நிரந்தரம் இல்லை. போய் ஒழுங்கா படிச்சு பொழைக்கிற வழியைப் பாரு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னது இன்றும் என் உள்ளத்தில் ஆழப்பதிந்துதான் இருக்கிறது!ஆனாலும் அந்தப் பருவத்தில் இதுபோன்ற பொன் மொழிகள் வசை மொழிகளாகத்தான் அந்த நேர உற்சாகத்தை பொசுக்கி விடக்கூடும். பல நேரங்களில் மன அழுத்தங்களைக்கூட ஏற்படுத்தலாம். ஆனாலும் இது போன்ற அழுத்தங்கள் நம் மன வலிமையைக் கூட்டும் அருமருந்து என்கிறது தற்கால உயிரியல் ஆய்வுகள்.

    நம் கலாச்சாரம் இதை போகிறபோக்கில் புரிய வைத்துக்கொண்டிருக்க, சமீபத்திய ஆய்வுகள் இதை உளவியல், உயிரியல் கோட்பாடுகள் மூலமாக நிரூபித்துள்ளன. மிகச்சிறிய அளவில் இதுபோன்று அளிக்கப்படும் அழுத்தங்கள் நம் மன வலிமையைக் கூட்டுகின்றனவாம்!

    ஓர்மிசிசு என்பது கடந்த 20-- ஆண்டுகளில் மிக விரிவான முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு உயிரியல் கோட்பாடு என்றாலும், உளவியல் சார்ந்த சவால்களை எதிர்கொள்ள பெரிதும் பயன்படும் என்பதை நிரூபித்துள்ளனர். இதன் மூலக்கூறுகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை பயன்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

    ஆம், பெற்றோர் கொடுக்கும் சிறிய அளவிலான தண்டனைகள் மன அழுத்தம் அல்லது துன்பம் ஏற்படுத்தக்கூடியதன்று. மாறாக அவர்களின் மன வலிமையை அதிகரிக்கும் ஊக்க சக்தியே தவிர உயிராக நினைக்கும் குழந்தைகளை வதைக்கும் செயல் அல்ல என்கிறது அந்த ஆய்வுகள். அவை அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்ற அக்கறைதான் என்பதை பெற்றோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பதற்கு எந்தத் தயக்கமும் காட்ட வேண்டியதில்லை.

    முன்பெல்லாம் பேருந்துகளில் செல்லும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்று கருதி அவர்களை பேருந்தின் முன்புறம், ஓட்டுநர் பார்வையில் இருக்குமாறு உட்கார வைப்பார்கள். ஆனால் சிலர் செய்யும் தவறுகள், வேலியே பயிரை மேயும் கதைகளாகிவிடுவதால் தற்போது அப்படி முன்புறம் அமர அறிவுறுத்தப்படுவதில்லை. சமூகத்தில் இதுபோன்று பாதுகாப்பு குறைவாக இருக்கும்போது பெற்றோரின் பொறுப்பு இரட்டிப்பாகிறது. அதுவும் பொன்மணியின் தந்தை போல தினமும் வீட்டிற்கு வர முடியாத பணியில் இருக்கும்போது அந்த தாயின் பொறுப்பு இன்னும் பன்மடங்காகிறது என்பதை கலைச்செல்வி சற்றும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இது சமூகத்தைச் சீர்குலைக்க அலையும் சில தீய சக்திகளுக்கு சாதகமாகிவிட்டது.

    பொதுவாகவே இந்த வயதுக் குழந்தைகள் தன்னை யாராவது அழகு என்று சொல்லிவிட்டால் அப்படியே அந்த போதைக்கு அடிமையாகி விடுவதுண்டு. வீட்டில் கட்டுப்பாடு  இல்லாத குழந்தைகள் அந்த மயக்கத்தில் விவரம் அறியாது பெரும் பிரச்சனையில் சென்று மாட்டிக் கொள்வதுண்டு. இது போன்ற குழந்தைகளே அதிகமாக கயவர்களால் கவரப்படுகிறார்கள். இப்படித்தான் பொன் மணியையும் உசுப்பேற்றிவிட்டு ஒரு பையனை காதலிக்க வைத்திருக்கிறார்கள்.  அந்த வெகுளிப் பெண்ணும் எந்த விவரமும் புரியாமல் அவர்கள் இழுப்பிற்கெல்லாம் வளைந்து  கொடுத் திருக்கிறாள். மகளின் இந்த அபாயகரமான மாற்றத்தைக் கூட அறிந்து கொள்ள முடியாத பேதையாக இருந்த அந்த தாயை என்ன சொல்வது!

    வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய கலைச்செல்வி வெளித் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டு மகளை அழைத்து தண்ணீர் கொண்டு வரும்படி கேட்டாள். ஒரு சத்தமும் இல்லாததால் மீண்டும் 2, 3 மூன்று முறை அழைத்துவிட்டு உள்ளே ஒருவேளை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாளோ என்று சத்தமிட்டவாறே உள்ளே சென்றவள், ஒரு கணம் அதிர்ந்து பின் வீரிட்டது அந்தத் தெருவையே கூட்டிவிட்டது.

    ஆம், அந்த பிஞ்சுக் குழந்தை மின் விசிறியில் தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. மயங்கிச் சரிந்தவள் வாழ்க்கை அப்படியே முடங்கித்தான் போனது. மகளுக்கு என்ன நேர்ந்தது என்றே அவளுக்குப் புரியவில்லை. காலையில் வேலைக்குச் செல்லும்போது கூட பள்ளி விடுமுறை என்றும் சிநேகிதிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கப் போவதாகத்தானே சொன்னாள், அதற்குள் என்ன நடந்திருக்கும், கணவன் அன்பு மகளின் நிலையைக் கண்டால் தன்னை அடித்தேக் கொன்றுவிடுவானே என்றும் அஞ்சி நடுங்கி சுருண்டுக் கிடந்தாள்.

    தானாக மேலே ஏறி தூக்கு மாட்டிக் கொள்ளும் அளவிற்கு உயரமானவளும் இல்லை, கீழே நாற்காலி ஏதும் போடப்படவும் இல்லை. இது எல்லோருக்கும் புரிந்தாலும் யாரும் அதைப்பற்றி பேசவும் தயாராக இல்லை. அதற்குப் பிறகு யார் யாரோ என்னென்னமோ கதையும், காரணமும் சொல்லிக்கொண்டிருந்தாலும், பெற்றோருக்கு மட்டுமே ஈடுசெய்ய முடியாத இழப்பு அது. கலைச்செல்வி அதற்குப் பிறகு மீண்டு வரவேயில்லை. வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும் அதனால் எந்த பலனும் இல்லை. கணவனின் வெறுப்பிற்கும் ஆளானாள்.

    ஒரு தாயாக, கணவனும் அதிக நேரம் வெளியில் இருக்கும் நிலையில் மகளுடன் ஒரு நெருக்கமான உறவை உருவாக்கியிருந்தால்அந்த பருவத்திற்கே உரிய அவளுடையமாற்றங்களை உணர்ந்திருக்கலாம். அல்ப ஆயுளில் போய்ச் சேராமல் உயிரையும் காப்பாற்றியிருக்கலாம். சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததன் விளைவு வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது.

    இந்தப்பருவம் குழந்தைகளுக்கும் ஏற்படுத்தும் மாற்றம், அதில் பிரச்சனைகள் வந்தால் அதன் பாதிப்பு, பின் விளைவுகள் என அனைத்தையும் குழந்தைக்கு முன்கூட்டியே, சமயம் அறிந்து புரிய வைத்திருக்க வேண்டியது ஒரு தாயின் தலையாயக் கடமை என்பதை உணர வேண்டும். மகளுடைய பொழுதுபோக்குகள், எண்ணங்கள், விருப்பத் தேர்வுகள், விருப்பக் காட்சிகள், பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் கவனித்திருந்தால் அவள் எப்படிப்பட்டவர்களுடன் பழகிக்கொண்டிருக்கிறாள் என்று அறிந்திருக்கலாம்.

    சர்வதேச அளவில் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் நம் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதும், இணையக் குற்றங்கள்27,248, பாலியல் வன்முறைகள் 2,039 என்ற எண்ணிக்கைகளிலும் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ( ஆகஸ்டு 2019 முதல் பிப்ரவரி 5, 2020 வரை மட்டும் 33,152 புகார்கள் வந்துள்ளன).
    இன்றைய கலாச்சார மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை சமூகப் பின்னணியில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம். சமூகம் சார்ந்த புதிய வாழ்க்கை முறைகள், நவீனகலாச்சாரம், சில தளங்களின் மதிப்பீடுகள் போன்றவைகள் ஆராயப்படவேண்டும். இதுபோன்ற ஆய்வுகள் மூலமே சமூக ஒழுங்கு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை ஊக்குவிக்கத் தகுந்த சட்டங்களை உருவாக்க இயலும்.

    சமூகத்தை சீராகக் கொண்டு செல்வதற்கு சமூகக் கட்டுப்பாடுகள் அவசியம்.  இந்த ஆய்வுகள் மூலமே அறியாமையை ஒழிக்கவும், மறைக்கப்படும் சிக்கல்களை வெளிக்கொண்டுவரவும் இயலும். அறிவியல் அடிப்படையிலான தகவல்களைக் கொண்ட, புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தும் இந்த ஆய்வின் முடிவுகள் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் அமையும் என்பதிலும் ஐயமில்லை. இதனால் சமூக வளர்ச்சியும், வாழ்க்கைத் தரத்தில் மேம்பாடும் சாத்தியமாகிறது.
    தொடருவோம்...
    கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
    கொரோனா-

    இந்த வார்த்தைதான் இன்றைக்கு உலகமெங்கும் அதிகளவில் உச்சரிக்கப்படுகிற ஒரு வார்த்தையாக அமைந்து இருக்கிறது.

    சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதியன்று இந்த வைரஸ் தென்பட்டது. இந்த 5 மாத காலகட்டத்தில் உலகின் 187 நாடுகளிலும், பிரதேசங்களிலும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது இந்த வைரஸ். அதுமட்டுமல்ல, உலகமெங்கும் இந்த வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தை தாண்டியது. இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ், 2 லட்சத்து 95 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோரை நம் கண்ணுக்குத் தெரிய கொன்று விட்டது.

    கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு முடிவு கட்ட மருந்து கண்டுபிடிக்கவும், வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கவும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து என உலகின் முன்னணி நாடுகள் பலவற்றின் விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடங்களில் இரவு-பகல் பாராமல் மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

    இதற்கு மத்தியில் கொரோனா வைரஸ் எப்படி இப்படி லட்சக்கணக்கானோரை கொன்று குவிக்கிறது என்பது பற்றியும்கூட ஆராய்ச்சி நடந்து இருக்கிறது.

    இந்த ஆராய்ச்சியை நடத்தி முடித்திருப்பவர்கள் சீனாவின் ஜூன்யி மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆவார்கள்.

    இந்த ஆராய்ச்சி, ‘பிரண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்’ என்ற மருத்துவ இதழில் விளக்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக ஆராய்ச்சி விஞ்ஞானிகள், எப்படி இந்த வைரஸ் படிப்படியாக காற்றுப்பாதைகளை பாதிக்கிறது, உள் உயிரணுக்களை எவ்வாறு பெருக்குகிறது என்பது பற்றியெல்லாம் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

    அதன் முக்கிய அம்சங்கள் இவை:-

    * முதலில், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அதிகப்படியான செயல்பாடுகள் மூலம்தான் கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்கிறது.

    * சார்ஸ் மற்றும் மெர்ஸ் தொற்றுக்கு பிறகு என்ன நடந்ததோ, அதே போன்றுதான் கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னரும், நோய்த்தொற்று கடுமையான நிலையில் சைட்டோகைன் புயல் சின்ட்ரம் ஏற்படும் நிலை உள்ளது.

    * அதிரடியாக அதிகரித்த சைட்டோகைன்கள், லிம்போசைட்டுகள் மற்றும் நியூட்ரோபில்ஸ் போன்ற நோய் எதிர்ப்பு உயிரணுக்களை அதிகளவில் ஈர்க்கின்றன. இப்படி ஈர்க்கிறபோது, இந்த நோய் எதிர்ப்பு அணுக்கள், நுரையீரல் திசுக்களில் ஊடுருவி, அதனால் நுரையீரலில் காயத்தை ஏற்படுத்துகின்றன.

    * இறுதியில் சைட்டோகைன்கள் அதிகளவில் காய்ச்சல், ரத்த நாளங்களின் அதிகப்படியான கசிவு, உடலுக்குள் ரத்த உறைவு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து போகிறது. சுவாசக்காற்று (ஆக்சிஜன்) பற்றாக்குறை உண்டாகிறது. ரத்தத்தில் அதிகப்படியான அமிலத்தன்மை ஏற்படுகிறது. நுரையீரலில் திரவங்களையும் உருவாக்குகிறது.

    * வெள்ளை ரத்த அணுக்கள் ஆரோக்கியமற்ற திசுக்களை தாக்கவும், அழிக்கவும் தவறாக வழி நடத்தப்படுகின்றன. இது நுரையீரல், இதயம், கல்லீரல், குடல், சிறுநீரகம், பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் செயலிழப்புக்கு வழிநடத்துகிறது.

    இப்படி பல்லுறுப்புகள் செயலிழப்பு (மோட்ஸ்) நுரையீரலை மோசமாக்கி மூட வைக்கிறது. இந்த மோசமான நிலைதான், அக்கியூட் ரெஸ்பிரேட்டரி டிஸ்டிரஸ் சின்ட்ரம் (சுவாசக்குழாய் நோய்)என்று அழைக்கப்படுகிறது. இது ஹைலீன் சவ்வு உருவாவதால் நடக்கிறது. ஹைலீன் சவ்வு என்பது புரதங்கள் மற்றும் இறந்த அணுக்களின் குப்பைகளால் ஆனவை. முடிவில் இது நுரையீரலில் படிந்து, நுரையீரலானது ஆக்சிஜனை உறிஞ்சுவதை கடினமாக்கி விடுகிறது.

    * ஆக, கொரோனா வைரஸ் தாக்குவதின் காரணமாக நேரிடுகிற பெரும்பாலான இறப்புகள் சுவாச கோளாறு காரணமாகத்தான் ஏற்படுகின்றன.

    கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்துவதற்கு என்று சிகிச்சை இல்லாத நிலையில் என்னதான் தீர்வு?

    நோய் அறிகுறிகளை எதிர்த்து போராடுவதும், உறுப்புகளின் செயல்பட்டை தீவிரமாக பராமரிப்பதும்தான் வழி. இதன்மூலம் மட்டுமே இறப்பு வீதத்தை குறைக்க வேண்டும். உதாரணமாக ரத்தத்தை வடிகட்டுவதற்கு ஒரு செயற்கை கல்லீரல் சுத்திகரிப்பு அமைப்பு அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்யலாம். நுரையீரல் செயல்பாட்டை மாற்றுவதற்கு, சுவாச குழாயில் ஒரு குழாயை செருகி காற்று செல்வதற்கு வழி ஏற்படுத்தலாம். மூக்கில் ஒரு குழாய் வழியாக சூடான மற்றும் ஈரப்பதமான ஆக்சிஜனை செலுத்தலாம்.

    இவைதான் ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாக இருக்கிறது.

    ஆனால் இப்படி கடினமான, சவாலான பாதைகளை கடந்து செல்வதை விட, நம் முன் தற்காப்பு கவசங்கள் இருக்கின்றன. முக கவசம், தனிமனித இடைவெளிகளை தவறாமல் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுதல் என்னும் அந்த கவசங்களை பயன்படுத்தினால், கொரோனா என்ற எதிரி நம்மை அண்ட விடாமல் தடுக்கலாம். இதைத் தவிர வேறு நிவாரணம் இல்லை!
    நம்முடைய இயற்கைக்கு மீறிய செய்கையால், நமது சிறுநீரகம் சற்று செயலிழக்கும் நிலையில் முழித்துக்கொள்ளுங்கள். விழித்து எழுந்து எளிமையான யோகாசனத்தின் மூலமும், உணவு உண்ணும் முறை மூலமும் மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும்.
    மனித உடல் உறுப்புகள் அனைத்துமே மிக முக்கியமானவை. அதில் சிறுநீரகம் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
    சிறுநீரகங்கள் வயிற்று பின்புறம் முதுகெலும்பின் இரு பக்கங்களிலும் 2 செ.மீ. நீளத்தில் 6 செ.மீ அகலத்தில் 3 செ.மீ. தடிமானத்தில் இருக்கின்றன.

    சிறுநீரகத்தின் வேலை: ஒரு மில்லியன் சிறுநீரக முடிச்சுகள் (நெப்ரான்கள்) நமது உடலில் உள்ளன. இந்த நெப்ரான்கள் இரத்தத்திலிருந்து சிறுநீரை வடிகட்டி சிறுநீர்ப்பைக்கு அனுப்பிக் கொண்டேயிருப்பது தான் இதன் வேலையாகும்.

    பொதுவாக நாளை நாம் என்ன வேலை செய்யப் போகின்றோம் என்று திட்டமிட்டு அதன்படி செயல்படுவது வழக்கம். நாளை நமது வேலை என்ன என்று குத்துமதிப்பாக நமக்கு தெரியும். ஆனால் சிறுநீரகத்திலுள்ள நெப்ரான்களுக்கு அன்று என்ன வேலை வரப்போகின்றது என்று கூடத்தெரியாது. நாம் எப்படி சாப்பிடுகின்றோம்! அப்பா கேட்கவே வேண்டாம். காலை டிபன் வயிறு முழுக்க, அது ஜீரணமாகுமுன் ஸநாக்ஸ் வேறு பின் மதியம் பின் நொறுக்குத் தீனி, மாலை வடை, பஜ்ஜி, டீ, இரவு முழுக்க கட்டு கட்டி விடுகின்றோம். இவ்வாறு அதிகப்படியான உணவுகளைச் சாப்பிடுவதால் அதிக கழிவுகள் சேர்கின்றன. அவற்றை வெளியேற்ற நெப்ரான்கள் ஓவர் டைம் வேலை பார்க்கின்றது.

    தாயின் வயிற்றில் கரு உண்டான மூன்றாவது மாதத்திலிருந்து அந்த மனிதன் வளர்ந்து சாகும் வரை நம் உடலில் ஓய்வின்றி வேலை பார்ப்பது சிறுநீரகம். இந்த ஆரம்பநிலை சிறுநீர் நெப்ரான்களின் வழியே பொட்டாசியம், பாஸ்பேட், அமோனியா போன்ற தாதுப் பொருட்கள் தண்ணீருடன் கலந்து சிறுநீர்ப் பையில் சேருகின்றன. இப்படிபட்ட சிறுநீரகம் செயல் இழதால் உடலில் கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றும்.

    சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்

    * அடிக்கடி காய்ச்சல் வரும்.
    * கை, கால் வீக்கம் ஏற்படும்.
    * பசியின்மை, வயிறு உப்புசம்
    * இருமல், சளி, மூச்சுத்திணறல்
    * தோல் வியாதி
    * வயிற்றுப் போக்கு
    * மன சோர்வு
    * பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி மாற்றங்கள்
    * தசைப் பிடிப்பு
    * இரத்த சோகை

    மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உங்கள் உடலில் இருந்தால், சிறுநீரகம் ஒழுங்காக இயங்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    சிறுநீரக செயலிழப்பிற்கு முக்கிய காரணங்கள்

    * அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால்
    * சிகரெட், பீடி, மது பழக்கத்தால், தவறான உணவு முறை, பசித்தால் மட்டும் புசிக்காமல் ருசிக்காக நேரம் தவறி உணவு உட்கொள்வதால்
    * உயர்ந்த இரத்த அழுத்தம்
    * மன உளைச்சல், மன அழுத்தம், கோபம்
    * அளவுக்கு அதிகமாக போகத்தில் ஈடுபடுதல்

    நம்முடைய இயற்கைக்கு மீறிய செய்கையால், நமது சிறுநீரகம் சற்று செயலிழக்கும் நிலையில் முழித்துக்கொள்ளுங்கள். விழித்து எழுந்து எளிமையான யோகாசனத்தின் மூலமும், உணவு உண்ணும் முறை மூலமும் மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும்.
    தாம்பத்தியம் மற்றும் வயகரா மாத்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வயகரா மாத்திரை பரிந்துரைக்கப்படும்.
    ஆண்களுக்கு இருப்பதை போன்று பெண்களுக்கான வயகராவான பில்பென்சரின் ஆகஸ்ட் மாதம் 2015_ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்களுக்கான வயகரா அவர்களின் மேற்கொள்ளும் உடலுறவில் விறைப்பு பிரச்சினையை குணப்படுத்தி நீண்ட நேரம் உறவில் ஈடுபட உதவும். ஆனால் பெண்களுக்கான வயகரா வேறுமாதிரி வேலை செய்யும். இது பிங்க் நிறத்தில் சிறிய அளவிலான மாத்திரையாக இருக்கும்.

    உடலுறவு மற்றும் வயகரா மாத்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வயகரா மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரையை மதுவுடன் சேர்த்து உட்கொள்ளக் கூடாது.அப்படி செய்தல் உங்கள் இரத்த அழுத்தம் கீழ்நிலைக்கு சென்று உயிரே போய் விடும்.

    இந்த வயகராவை பெண்கள் எப்போதும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக உட்கொள்ள வேண்டும். இதனுடைய பலன் ஏதும் தெரியவில்லை என்றால் உட்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆண்கள் வயகரா அவர்களின் ஆணுறுப்பின் மீது செயல்படுவது போல இல்லாமல் இது பெண்களின்  பிறப்புறுப்பை காட்டிலும் அவர்களின் மூளையின் மீது செயல்பட்டு உறவில் அதிக நாட்டத்தை ஏற்படுத்தும். இது மூளையில் செயல்பட்டு மனஅழுத்தத்தை போக்குவதுடன் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன்களான டோபமைன் போன்றவற்றை சுரக்க வைக்கிறது.

    தாம்பத்தியத்தில் திருப்தி இருக்கும்  பெண்களுக்கு இது தேவையில்லை. அதே போல  கல்லீரல் பிரச்சினைகள், நரம்பு மண்டல பிரச்சினைக்காக வேறு மருந்துகளை எடுத்து கொள்பவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்தக் கூடாது. ஆண்கள் வயகரா பொதுவாக உடனடியாக வேலை செய்யும், ஆனால் பெண்கள் வயகரா அப்படியில்லை, இதை நீங்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது வேலை செய்ய தொடங்க ஒரு மாதமாவது தேவைப்படும். சில பெண்களுக்கு எட்டு வாரங்கள் கூட ஆகலாம்.

    இது ஆண்கள் வயகரா செயல்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.  ஆண்களின் பயன்படுத்தும் வயகரா விறைப்பு பிரச்சினையை குணப்படுத்தி அவர்களை நன்றாக செயல்பட வைக்கும். பெண்கள் பயன்படுத்தக் கூடிய இந்தவகையான வயகராவோ பாலியல் ஆசை இல்லாத பெண்களுக்கு பாலியல் ஆசையை பெருக்கி அவர்களின் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை சுரக்கவைத்து  செக்ஸ் ஆசையை தூண்டி விடுகின்றது.

    நாம் பயன்படுத்துவதில் பக்க விளைவுகள் இல்லாத பொருட்கள் என்று எதுவும் கிடையாது. அதே போன்று இந்த வயகரா மாத்திரையால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதை பயன் படுத்தும் பெண்களுக்கு தலைவலி, தூக்கமின்மை, சோர்வு, மயக்கம்  போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.பெண்கள் பயன்படுத்தக்கூடிய இந்த வகையான வயகராவில் மேலும் சில குறைபாடுகளும் உள்ளது. இந்த வயகரா மாத்திரைகளை கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்ளும்போதும், மது அருந்தும்போதும் பெண்கள் உட்கொள்ளக் கூடாது .
    கேரட் எண்ணெய், வறண்ட சேதமடைந்த கூந்தலுக்கு ஒரு இயற்கையான புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் இதில் பல வித நன்மைகளும் உள்ளன.
    கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் சத்து தலை முடிக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. தற்போது பல இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பிரச்சனை, முடி சேதமும் அதனால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனையும் தான். இந்த கேரட் எண்ணெய் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.

    இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடியின் அடர்த்தியையும் உறுதிப்படுத்துகிறது. வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு ஷாம்பு தேய்த்து குளிப்பதற்கு முன்னால் கேரட் எண்ணெயை நன்றாக தலையில் தேய்த்து ஊறவைத்து பிறகு குளித்தால் முடி ஸ்மூத்தாக இருக்கும்.

    அழகான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசையா? அதனுடன் சேர்த்து உங்கள் சருமமும் பொலிவாக இருக்க வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் கேரட் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். இந்த கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் நீங்கள் இளமையாகவும் தோன்ற முடியும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஏன் நீங்களே தயாரிக்க வேண்டும்?

    கேரட் எண்ணெய், வறண்ட சேதமடைந்த கூந்தலுக்கு ஒரு இயற்கையான புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் இதில் பல வித நன்மைகளும் உள்ளன. கேரட் எண்ணெயில் வைட்டமின் ஈ, வைடமின் ஏ, பீட்டா கரோடின் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், புண் போன்றவை மறைகின்றது. இந்த பல்வேறு ஊட்டச்சத்துகள் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்கிறது, பல்வேறு சரும பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது.

    கேரட் எண்ணெய் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் உடலுக்குக் கிடைக்கிறது. கூந்தல் மற்றும் சருமத்திற்கு சிறந்த முறையில் பலன் அளிக்க உதவுகிறது. குளிர் காலத்தில் மற்றும் மழைக் காலங்களில் சருமம் வறண்டு இருப்பதால், கேரட் எண்ணெய் பயன்படுத்தி சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கலாம். தயாரிக்கும் முறை குறிப்பாக பாத வெடிப்புகள் மற்றும் தோல் உரிவது போன்றவை மழைக் காலங்களில் அடிக்கடி ஏற்படும் பாதிப்பாகும். இதனைப் போக்க கேரட் எண்ணெய் சிறந்த முறையில் உதவுகிறது.

    கேரட் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

    தேவையான பொருட்கள் :


    கேரட் அல்லது ஆர்கானிக் கேரட் - 2 அல்லது 3.
    ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் .

    செய்முறை:

    கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். . துருவிய கேரட்டை ஒரு பேன் அல்லது கிராக் பாட்டில் போடவும். . உங்களுக்கு விருப்பமான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும். . கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு எண்ணெயை ஊற்றவும். . இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும். . நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும். . அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு ஆற விடவும். . அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊறட்டும். . ஆறியவுடன், ஒரு வடிகட்டி பயன்படுத்தி எண்ணெய்யை வடிகட்டிக் கொள்ளவும். . பிறகு அதனை ஒரு கண்ணாடி குடுவையில் ஊற்றி வைக்கவும்.

    இப்படி தயாரிக்கும் கேரட் எண்ணெய் கூந்தலுக்கு பல அற்புதங்களை செய்கிறது. தலைக்கு ஷாம்பூ தேய்த்து குளிப்பதற்கு முன்னால் இந்த எண்ணெய்யை தலையில் தடவிக் கொள்ளலாம். இப்படி செய்வதால் உங்கள் கூந்தல் எண்ணெய்யை உறிஞ்சி, தலை முடிக்கு ஈரப்பதம் அளித்து, அழகாக்குகிறது. இந்த கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோடின் போன்றவை சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து, உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையை சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது முடி உதிர்வைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
    வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க அடிக்கடி நெல்லிக்காயை உணவில் சேர்த்து கொள்ளலாம். நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
    தேவையான பொருட்கள் :

    முழு நெல்லிக்காய் - 20,
    கெட்டித் தயிர் - அரை கப்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    கீறிய பச்சை மிளகாய் - 2,
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    நெல்லிக்காய்

    செய்முறை:

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தைப் போட்டு வறுத்து, நெல்லிக்காய், மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு வதக்கவும்.

    விரலால் லேசாக அமுங்கும் பதம் வரும்போது, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.

    சிறிது ஆறியதும் தயிர் சேர்த்துப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×