என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும்.
    திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இதுவே உலர் திராட்சை எனப்படுகிறது. உலர் திராட்சையில் உள்ள சத்துக்களை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்…

    திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

    விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

    ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.

    மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன.
    சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு, உடல் சூடு குறையும். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.
    சுரைக்காயில் பல்வேறு மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது. அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    1. சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு, உடல் சூடு குறையும்.

    2. சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்.

    3. சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

    4. அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.

    5. கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.

    6. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

    7. வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

    8. சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும்,வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.

    9. மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.

    10. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.
    பெண்கள் மொபைல் போன்களை பயன்படுத்துவதில் சில வழிமுறைகளும், பண்பாடுகளும் உள்ளன. அவற்றை அறிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் அனைவருக்கும் பயன் கிடைக்கும்.
    பெண்கள் மொபைல் போன்களை பயன்படுத்துவதில் சில வழிமுறைகளும், பண்பாடுகளும் உள்ளன. அவற்றை அறிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் அனைவருக்கும் பயன் கிடைக்கும்.

    மொபைல் போனில் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டியவை

    தகவல் பரிமாற்றத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனமான தொலைபேசிகளின் நவீன வளர்ச்சி தான் மொபைல் போன். ஆனால் இன்று அவை, மனிதர்களின் உடல் உறுப்புகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. ஒருவருடன் ஒருவர் பேசுவதற்கு என்ற நிலைமாறி பல்வேறு தகவல் தொடர்பு பணிகளையும் செய்யும் வசதி கொண்டதாக மொபைல் போன்கள் மாறிவிட்டன. அதேநேரத்தில் இந்த மொபைல் போன்களை பயன்படுத்துவதில் சில வழிமுறைகளும், பண்பாடுகளும் உள்ளன. அவற்றை அறிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் அனைவருக்கும் பயன்கிடைக்கும். இதோ அந்த சில பண்பாட்டு வழிமுறைகள்:

    மொபைல் போனின் அழைப்பு மணியின் அளவை குறைவாகவே வைத்திருங்கள். சிலர் அதிக சத்தமாக அழைப்பு மணியின் அளவை வைத்திருப்பார்கள். அதனால் அது திடீரென்று அலறும் போது அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடையும் நிலை ஏற்படும்.

    பொது இடங்களில் இருக்கும் போது போனின் அழைப்பு மணி ஒலித்தால் உடனே அதற்கு பதில் கொடுங்கள். அல்லது அழைப்பு மணியை நிறுத்துங்கள். தொடர்ந்து அழைப்பு மணியை ஒலிக்க விட்டால் அது மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

    அதுபோல குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்துள்ள செய்தியை தெரிவிக்கும் பீப் ஒலியை நீண்ட நேரம் ஒலிக்கும் வகையில் அமைக்க வேண்டாம். ஒரு முறை பீப் ஒலி வரும் வகையில் அமைப்பதே சிறந்தது.

    பொது இடங்களில் இருக்கும் போது உங்கள் குரலை உயர்த்தி மொபைல் போனில் பேச வேண்டாம். இது மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். மேலும் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்கும் நிலையும் ஏற்படும்.

    பொது இடங்களில் இருக்கும் போது மொபைல் போனில் விளையாட வேண்டாம். அப்படி விளையாடும்போது ஒலி அளவை குறைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் பொது இடங்களில் மற்றவர்களின் அனுமதி இல்லாமல் அவர்களை புகைப்படம் எடுக்க கூடாது.

    பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகள், விமானப்பயணங்கள் போன்ற இடங்களில் உங்கள் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து வைக்க வேண்டும். அதுபோல சினிமா அரங்கம் மற்றும் விழாக்களின் போது மொபைல் போனில் அழைப்பு வந்தால் அங்கிருந்து வெளியே சென்று பேசுங்கள்.

    பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு மொபைல் போன் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தடை உள்ள இடங்களுக்கு மொபைல் போன் கொண்டுசெல்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை கொண்டு செல்லவேண்டிய சூழ்நிலை இருந்தால் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து வைக்க வேண்டும். 
    ‘சன்ஸ்கிரீனை எப்படி பயன்படுத்தவேண்டும்? அதனை பயன்படுத்தாவிட்டால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?’ என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ‘‘பெண்களுக்கு அழகில் அவ்வப்போது ஏற்படும் எதிர்பார்ப்புகள் பற்றியும், பெண்களிடையே அதிகரிக்கும் அழகுப் பிரச் சினைகள் பற்றியும், எங்கள் அழகுக் கலை மையத்தின் மூலமாக அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்வோம். அதில் தற்போது பெண்களிடையே சரும பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இப்போது புறஊதாகதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதும், சீதோஷ்ண நிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசு பெருகிக்கொண்டிருப்பதும், அதற்கான முக்கிய காரணங்கள் என்பது புரிந்தது.

    பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவேண்டும் என்றால், ‘சன்ஸ் கிரீன்’ கிரீமை பயன்படுத்தி பாதுகாப்பு தேடிக்கொள்ளவேண்டும். அது பற்றி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முதல் கின்னஸ் சாதனையை மேற்கொண்டோம். அதில் என் முன்னிலையில் ஒரே நேரத்தில் 2441 பெண்கள் கலந்துகொண்டு சன்ஸ்கிரீன் கிரீமை தங்கள் கைகளில் தேய்த்து, இந்த சாதனையை உருவாக்கினோம். இதன் மூலம் 2014-ம் ஆண்டு அமெரிக்காவில் 1822 பேர் கலந்துகொண்ட பழைய சாதனையை முறியடித்துள்ளோம்’’ என்று முதல் கின்னஸ் சாதனையை பற்றி விளக்கினார், பிரபா ரெட்டி.

    ‘சன்ஸ்கிரீனை எப்படி பயன்படுத்தவேண்டும்? அதனை பயன்படுத்தாவிட்டால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?’ என்று அவரிடம் கேட்டபோது..

    ‘‘புறஊதாகதிர்களில் இருந்து உடலை பாதுகாக்காவிட்டால் சருமம் பொலிவிழக்கும். பல்வேறு விதமான ஒவ்வாமைகள் சருமத்தில் உருவாகும். மிக அரிதாக சரும புற்றுநோய்கூட வரலாம். அதனால் முடிந்த அளவு சருமத்தை நாம் பாதுகாக்கவேண்டும். ‘எஸ்.பி.எப்’ என்பது அதன் பாதுகாப்புத்தன்மையின் அளவீடாகும். தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் எஸ்.பி.எப் - 30 என்ற அளவீட்டுத் தரம் பொருத்தமானதாக இருக்கும். நமது உடலில் ஆடை மறைக்காத பகுதிகளான முகம், கைகளுக்கு இது அவசியம். வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக இதை பூசிக்கொண்டால் நமது சருமத்திற்கு பாதுகாப்பு கவசம் போன்று செயல்படும்’’ என்று விளக்கினார்.

    அதே நாளில் இவர் படைத்த இரண்டாவது கின்னஸ் சாதனை `லாங்கெஸ்ட் ஸ்கின் கேர் லெசன்’ என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு சீனாவில் 1767 அழகுக்கலை நிபுணர்கள் கலந்துகொண்டு உருவாக்கிய முந்தைய சாதனையை இவரது தலைமையில் ஒருங்கிணைந்த 2338 பெண் அழகுக்கலை நிபுணர்கள் முறியடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு கின்னஸ் சாதனைகளையும் பிரபா ரெட்டி ‘வீகேர்’ நிறுவனத்தின் சார்பில் உருவாக்கியுள்ளார்.

    ‘‘சரும பராமரிப்பு என்பது உலக அளவில் அடிக்கடி புதுமைகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் துறையாகும். நவீன கண்டுபிடிப்புகளும் அதில் தோன்றிக்கொண்டிருக்கின்றன. அவைகளை தென்னிந்தியாவில் உள்ள அழகுக் கலை நிபுணர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் விதத்தில் இந்த சாதனையை உருவாக்க திட்டமிட்டோம். உச்சி முதல் பாதம் வரையுள்ள மொத்த சரும பாதுகாப்பிற்கும் பயனுள்ள விஷயமாக இதை நடத்தியிருக்கிறோம். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் அழகுக்கலை நிபுணர்களை ஒரே அரங்கில் கூட்டுவதுதான் எங்களுக்கு சவாலாக இருந்தது. ஆடி மாதத்தில் பொதுவாக திருமணங்கள் இல்லாததால், இத்தனை பேரையும் ஒரே இடத்தில் சேர்க்க முடிந்தது. இந்த கின்னஸ் சாதனைக்காக நான் அரை மணி நேரம் தொடர்ந்து பேசினாலே போதுமானதாக இருந்தது. ஆனால் நான் முக்கால் மணிநேரம் தொடர்ச்சியாக விளக்கமளித்தேன். இரண்டு கின்னஸ் சாதனைகளையும் உடனேயே அங்கீகரித்து சான்றிதழை வழங்கிவிட்டார்கள்’’ என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார், பிரபா ரெட்டி.

    செங்கல்பட்டு அருகில் உள்ள தச்சூர் என்ற கிராமத்தை சேர்ந்த இவர், ஆசிரியை பயிற்சி முடித்து 7 ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்திருக்கிறார். பின்பு கணவரின் ஒத்துழைப்போடு அழகுக்கலை துறைக்கு வந்து, வெளிநாடுகளுக்கு சென்று நவீன விஞ்ஞான முறையிலான பயிற்சிகளை பெற்றுள்ளார். பின்பு சென்னையில் அதற்கான மையத்தை தொடங்கி பயிற்சி கொடுத்து ஏராளமான பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறார்.

    ‘‘எனது பெற்றோர் லூர்துராஜ் - ராஜம். நான் பிறந்து வளர்ந்த தச்சூர் குக்கிராமத் தில் எனது மாமா ராஜ் ஓரிகண்டிதான் அங்கு முதல் பட்டதாரி. எங்கள் பூர்வீகம் ஆந்திரா. கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பம் என்பதால், என்னை தொடர்ந்து படிக்கவைத்தார்கள். நான் எங்கள் கிராமத்தில் இருந்து தினமும் பஸ்சில் 30 கி.மீ. தூரம் பயணித்து, பள்ளிக்கு சென்று படித்தேன். நான் ஆசிரியையாக வேண்டும் என்று அம்மா விரும்பியதால், அதற்கான பயிற்சியையும் முடித்தேன். 20 வயது முதல் புதுச்சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றினேன்.

    சிறுவயதில் இருந்தே எனக்கு அழகுணர்ச்சி அதிகம். எனது மாமா மதன்கேப்ரியல் பிலிம் டெக்னாலஜி படித்துவிட்டு சென்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புத்துறையின் தலைவராக பணிபுரிந்தார். அவர்தான் எனக்கு நன்றாக உடைஅணிந்து அழகை பேணும் நேர்த்தியை கற்றுத்தந்தார். நான் 15 வயது வரை எனது தாத்தா பிரான்சிஸ் ஓரிகண்டியிடம் வளர்ந்தேன். நான் இன்று வெற்றிகரமான பெண்ணாக இருக்கவும், தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாக வலம்வரவும் தாத்தாவின் வளர்ப்புமுறைதான் காரணம். அவர் எப்போதும் என்னிடம், ‘நீ எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் சாதனைபடைக்கவேண்டும். சமூக அக்கறையோடு நிறைய பேருக்கு வேலைகொடுக்கவேண்டும்’ என்று சொல்வார்.

    நான் எப்போதுமே எதற்குமே பயப்படுவதில்லை. ‘உன்னை அச்சுறுத்தும் விதத்தில் யார் நடந்துகொண்டாலும் தட்டிக்கேள். உனது பாதுகாப்பிற்கு தாக்கவும் தயங்காதே’ என்று, துணிச்சல்கொடுத் தும் என்னை வளர்த்தார். நானும் வம்பு செய்தவர்களை அடித்துவிட்டு, என் தாத்தாவிடம் போய் சொல்வேன். பிரச்சினைகளை சமாளிக்கும் விதத்தையும் அவர் எனக்கு கற்றுத்தந்தார். பிரச்சினைகள்தான் பெண்களிடம் இருக்கும் திறமைகளையும், ஆற்றல் களையும் வெளிக்கொண்டு வரும். பிரச்சினைகள்தான் என்னை வளர்த்தது, வளப்படுத்தியது. அதனால் பிரச்சினைகளுக்கு பயந்து பெண்கள் ஒருபோதும் பின்வாங்கக்கூடாது’' என்று கூறும், பிரபா ரெட்டிக்கு 19 வயதில் திருமணம் நடந்திருக்கிறது. கணவர் ஆசிரியர் ஆரோக்கியசாமி. இந்த தம்பதியின் ஒரே மகள் பிரீத்தி மார்ட்டினா.

    ‘‘பெண்கள் தாயான பின்பு அவர்களது குணாதிசயங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். நான் தாயான பின்பு என் மகளால் எனக்குள் நிறைய மாற்றங்கள் உருவாகின. நான் ரொம்ப அமைதியான பெண்ணாக ஆகிவிட்டேன். நானும் என் மகளும் தோழிகள்போல் பழகுவோம். மகளை பெற்ற அம்மாக் களுக்கு நான் சொல்லும் விஷயம் என்னவென்றால், `உங்கள் மகளுக்கு நீங்கள் தோழியாகிவிடுங்கள். அதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றங்கள் உருவாகும்’ என்பதுதான். எனது மகள் டாக்டருக்கு படித்து, அறுவைசிகிச்சை துறையில் மேற்படிப்பும் கற்றிருக்கிறார்’’ என்று கூறும் பிரபா ரெட்டி அழகுக் கலைத்துறையில் தனது 27 வயதில் காலடி எடுத்துவைத்திருக் கிறார். இந்த துறையில் இவரது சேவைகளை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று முனைவர் பட்டம் வழங்கி கவுரவித் துள்ளது.

    ‘‘எனது கணவரின் வழிகாட்டுதலோடு நான் அழகுக்கலைத் துறைக்கு வந்தேன். ஆனால் அப்போது இந்த துறை அவ்வளவு நவீனமாகவும், மேம்பட்டதாகவும் இல்லை. அதனால் சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்று நவீன அழகுக்கலை பயிற்சிகளை பெற்றேன். அதற்கு நிறைய பணம் தேவைப்பட்டது. எனது திருமண சீராக பெற்றோர் வழங்கிய நகைகளை விற்று நான் அழகுக்கலை கல்வி பயின்றேன். அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கினேன்.

    அழகுக் கலையில் நான் கற்றவைகளில் ‘டிரைகாலஜி’ எனப்படும் முடிகளை பற்றிய விஞ்ஞானபூர்வமான கல்வி மிக முக்கியமானது. ஆஸ்திரேலியாவில் அதை கற்றேன். நாம் தாய் வயிற்றில் கருவாக இருக்கும்போதே நமக்கு முடி வளரத் தொடங்கிவிடுகிறது. அது கெரட்டின் என்ற புரோட்டீனால் உருவானது. ஒவ்வொரு முடியும் மூன்று முதல் நான்கு வருடங்கள் வளர்ந்து, ஓய்ந்து, பின்பு உதிரும். அடுத்து அதே இடத்தில் மீண்டும் முடி வளரும். மயிர்க்கால்களின் ஆரோக்கியம்தான் முடியின் ஆரோக்கியம்.

    மயிர்க்கால்களை பலப்படுத்த புரத சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ளவேண்டும். தரமான எண்ணெய்யையும், மூலிகைப் பொருட்களையும் கூந்தலுக்கு பயன்படுத்தவேண்டும். போதுமான அளவு தூக்கம், ஓய்வு, அமைதி நிறைந்த வாழ்க்கையும், மாசு இல்லா சுற்றுப்புற சூழலும் கூந்தல் வளர்ச்சிக்கு முக்கியம். தண்ணீரும் போதுமான அளவு பருகவேண்டும்.

    முடி உதிர்தலையும், மண்டை ஓட்டின் தன்மையையும் பார்த்து உடலில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு நோய்களை கண்டு பிடித்துவிடலாம். அதனால் முடிஉதிர்தலை பெண்கள் சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இன்று முடி உதிர்கிறது என்றால், இரண்டு மாதங்களுக்கு முன்பே அதற்கான பிரச்சினை உடலில் உருவாகியிருக்கும். ரத்தசோகை, தைராய்டு, நீரிழிவு, பி.சி.ஓ.டி. போன்ற ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகவும் முடிஉதிர்தல் இருக்கக் கூடும். அதனால் முடி அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்தும் தன்மைகொண்டது. ஆகவே அதனை விஞ்ஞானமுறையில் நன்றாக பராமரிக்கவேண்டும். கூந்தல் மற்றும் சரும பராமரிப்பில் பெண்கள் விழிப்போடு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற கின்னஸ் சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கிறோம். அழகு பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கையை தரும்..’’ என்கிறார் அழகுக்கலை நிபுணர், முனைவர் பிரபா ரெட்டி.

    அழகு, பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கையை தரட்டும்!
    தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் இந்த பச்சைப்பயறு பூண்டு துவையல். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப்பயறு - அரை கப்,
    பூண்டு - ஒரு பல்,
    இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
    தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 5,
    புளி - கோலி அளவு,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    பச்சைப்பயறு

    செய்முறை:

    வெறும் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

    பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துக் கொள்ளவும்.

    ஆறியபின், பயறு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

    சத்தான பச்சைப்பயறு பூண்டு துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பசியின்மை, உடல் சோர்வு, அடிக்கடி காய்ச்சல், உடலில் வலி, வீக்கம் ஏற்படும். குழந்தைகள், மாணவர்களுக்கு இந்த விதமான அறிகுறிகள் உடலில் ஏற்பட்டால் அடுத்து மூட்டுவலி வரப்போகின்றது என்று அர்த்தம்.
    அந்த காலத்தில் 80 வயது ஆனவுடன் தான், வயதாகிவிட்டது, மூட்டுக்கள் தேய்ந்து விட்டது, மூட்டுவலி உள்ளது, உட்கார முடியவில்லை, உட்கார்ந்தால் எழ முடிய வில்லை என்று கூறுவார்கள். ஆனால் இன்று 8 வயதிலேயே மூட்டுவலி உள்ளது என்று சிறியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனைகள் செய்து அறுவை சிகிச்சை வரை செய்யும் அவல நிலையைக் காண்கிறோம்.

    உடலில் உள்ள எந்த ஒரு மூட்டிலும் ஏற்படுவது மூட்டுவலி. நாம் பொதுவாக முழங்கால் மூட்டில் ஏற்படுகின்ற வலியை தான் மூட்டுவலி என்று கூறுகிறோம். நமது உடலில் உள்ள அசையும் மூட்டுக்களில் மிகப் பெரியது முழங்கால் மூட்டு.

    முதலில் மூட்டு வலியின் வகையை பற்றி தெரிந்து கொள்வோம்.

    1) குழந்தைகளுக்கு வரும் மூட்டு வலி. இதில் ரிக்கட்ஸ் நோய், போலியோ இருவகை உள்ளது.

    ரிக்கட்ஸ் மூட்டுவலி:- ரிக் கட்ஸ் வரக் காரணம் மனித உடலுக்குத் தேவை யான சூரிய வெளிச் சம் கிடைக்காதது தான். இன்று எல்லாக் குடும் பங்களும் பெரிய பெரிய அப்பார்ட்மென்ட்ஸ்சில் சொகு சாக குளிர்சாதன அறையில் வசிக்கின்றனர். அலுவலகம் செல்ல, குழந்தைகளைப் பள்ளிக்கு கூட்டி செல்ல ஏ.சி கார். படிக்கும் பள்ளிகளிலும் இன்று ஏ.சி வந்து விட்டது.

    சிறு குழந்தைகளுக்கு பேண்ட், சர்ட், ஷூ, டை, இறுக்கமான உடை, வீட்டிற்குள்ளும் சூரிய வெளிச்ச கதிர் படுவதில்லை. வெளியிலும்படுவதில்லை. ல்போனும், இன்டர்நெட்டும் பார்க்ககூட நேரமில்லை, இதில் சூரியனை யார் பார்ப்பது என்ற நிலையில் வாழ்வதால் குழந்தைகளின் மூட்டுக்களில் சூரிய ஒளி படாததால் மூட்டில் உள்ள சைனோவியல் என்ற மூட்டுச் சுரப்பி படலம் ஒழுங்காக சுரக்காமல் சிறுவர்களுக்கு மூட்டுவலி வருகின்றது. மேலும் உடலுக்குத் தேவையான கால்சியம் பற்றாக்குறை, வைட்டமின்--டி பற்றாக்குறையால் ரிக்கட்ஸ் என்ற மூட்டுவலி குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.

    இந்த மூட்டுவலி வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்;

    பசியின்மை, உடல் சோர்வு, அடிக்கடி காய்ச்சல், உடலில் வலி, வீக்கம் ஏற்படும். குழந்தைகள், மாணவர்களுக்கு இந்த விதமான அறிகுறிகள் உடலில் ஏற்பட்டால் அடுத்து மூட்டுவலி வரப்போகின்றது என்று அர்த்தம்.

    போலியோ:- போலியோ வைரஸ் என்ற கிருமி தாக்குவதால் முதுகுத்தண்டிலுள்ள நரம்புகளை பாதிக்கச் செய்கின்றது. அதனால் கைகள், கால்கள் வலுவிழந்து விடுகின்றது, மூட்டு வலி வருகின்றது.

    ஏற்படும். குழந்தைகள், மாணவர்களுக்கு இந்த விதமான அறிகுறிகள் உடலில் ஏற்பட்டால் அடுத்து மூட்டுவலி வரப்போகின்றது என்று அர்த்தம். 
    ஆண்களை விட பெண்களுக்குத்தான் இரும்பு சத்து அதிகம் தேவைப்படுகிறது. பெண்கள் சாப்பிடும் உணவில் இரும்புசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.
    உடலுக்கு மிகவும் அவசியமான தாதுக்களில் ஒன்றாக இரும்புச்சத்து இருக்கிறது. உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்த சிவப்பணுக்களை கொண்டு செல்வதற்கும் உதவுகிறது. மேலும் ஆற்றலை உற்பத்தி செய்யவும், செல்களின் சுவாசத்தை எளிதாக்கவும் துணைபுரிகிறது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் இரும்பு சத்து அதிகம் தேவைப்படுகிறது. பருவ வயதை எட்டிய பெண்ணுக்கு தினமும் 18 மில்லி கிராம் இரும்பு சத்து தேவையாக இருக்கிறது.

    கர்ப்பகாலத்தில் இரும்பு சத்தின் தேவை 27 மில்லி கிராமாக அதிகரிக்கிறது. ஆனால் ஆணுக்கோ ஒரு நாளைக்கு 8 மில்லி கிராம் இரும்பு சத்துவே போதுமானது. ஆண்களை ஒப்பிடும்போது கர்ப்பகாலத்தில் மூன்று மடங்கு அதிகம் தேவைப்படுகிறது. அதனால் பெண்கள் சாப்பிடும் உணவில் இரும்புசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். மாதவிடாய் சுழற்சியும், கர்ப்பமும்தான் இரும்பு சத்தின் தேவைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.

    இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா கூறுகையில், “மாதவிடாய் சுழற்சி காரணமாக பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரத்தத்தை இழக்க வேண்டியிருக்கிறது. கர்ப்ப காலமும் இரும்பு சத்தின் தேவையை அதிகரிக்க செய்துவிடுகிறது. கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு ரத்தத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. அதனை நிவர்த்தி செய்வதற்கு இரும்பு சத்து துணை புரிகிறது. பிரசவத்தின்போது எதிர்கொள்ளும் ரத்த இழப்பை ஈடு செய்ய இரும்பு சத்து தேவைப்படுகிறது. மாதவிடாய் காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரத்த இழப்பு உண்டாகும். அது உடலில் ஒட்டுமொத்த இரும்பு உள்ளடக்கத்தை பாதிக்கும். ரத்தத்தை மீண்டும் நிரப்புவதற்கு இரும்பு சத்து அதிகமாக தேவைப்படும். அதனால் பெண்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எப்போதும் அதிகமாக உட்கொள்ள வேண்டும்” என்கிறார்.

    கர்ப்ப காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் உறவு பாலமாக விளங்கும் நஞ்சுக்கொடியை உருவாக்குவதற்கு இரும்பு சத்து உதவுகிறது. கருவில் இருக்கும்போதும், பிறந்த பிறகு ஆறு மாதங்கள் வரையும் அதன் வளர்ச்சியில் இரும்பு சத்து முக்கிய பங்கு வகிக்கும். உடலில் இரும்பு சத்து குறையும்போது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவும் குறைய தொடங்கும். அதன் காரணமாக ரத்தசோகை ஏற்படக்கூடும். உடல் சோர்வும் உண்டாகும். பச்சை இலை காய்கறிகள், முட்டை, உலர்ந்த பழங்கள், நட்ஸ்கள், தானியங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ், மீன் உள்ளிட்ட இரும்பு சத்து அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆண்களை காட்டிலும் பெண்கள் இரும்பு சத்தை விரைவாக இழந்துவிடுவார்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
    ஊரடங்கு நீடித்துக்கொண்டு இருக்கிற இந்த நேரத்தில் அனைவரும் மணிக்கணக்கில் இடைவிடாமல் தொடர்ந்து கம்ப்யூட்டர்களையும், டி.வி.க்களையும் அதிகநேரம் பார்க்கிறார்கள். இது அவர்களது கண்களுக்கு சோர்வையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தி பல்வேறு கண் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
    ஊரடங்கு நீடித்துக்கொண்டு இருக்கிற இந்த நேரத்தில் மாணவர்களும், தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்களும் மணிக்கணக்கில் இடைவிடாமல் தொடர்ந்து கம்ப்யூட்டர்களையும், செல்போன்களையும், டி.வி.க்களையும் அதிகநேரம் பார்க்கிறார்கள். இது அவர்களது கண்களுக்கு சோர்வையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தி பல்வேறு கண் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

    தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்ப்பதால் கண் நலிசோர்வு ஏற்படும். இத்துடன், தலைவலி, கழுத்து, தோள்பட்டை அல்லது முதுகு வலிகள் மற்றும் ஒட்டுமொத்த சோர்வுடன், தூக்கப்பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். கம்ப்யூட்டர் மூலம் வேலை செய்யும்போது, கண்கள் எப்போதும், எல்லா சமயங்களிலும் ‘போக்கஸ்’ மற்றும் ‘ரீபோக்கஸ்’ செய்ய வேண்டும். கண்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கக்கூடிய மற்றும் மாறிக்கொண்டிருக்கக்கூடிய படங்களுக்கு, உருவங்களுக்கு, பிம்பங்களுக்கு ‘ரீஆக்ட்’ செய்யக்கூடும். இதன் விளைவாக கண் தசைகளில் நிறைய சோர்வு விளைவிக்கக்கூடும்.

    ஒரு டிஜிட்டல் திரையை தொடர்ந்து பார்க்கும்போது, இயல்பாக கண் சிமிட்ட தவறுகிறோம். இது கண்களை உலரச்செய்து, பார்வையை மங்கச்செய்கிறது.

    கண் பிரச்சினைகளை குறைக்க...

    கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அளவுக்கு அதிக வெளிச்சம் அல்லது குறைவான வெளிச்சம், கண் பிரச்சினைகளை விளைவிக்கிறது. வெளிச்ச நிலை, எழுத்துருவின் அளவு, ‘மானிட்டர்’ வைக்கப்பட்டிருக்கும் உயரம் மற்றும் திரையில் இருந்து அமர்ந்திருக்கும் தூரம் உள்பட கம்ப்யூட்டர் திரை அமைப்புகளை சவுகரியமாக வாசிப்பதற்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

    டிஜிட்டல் திரைகளை பயன்படுத்தும்போது உரிய காலஅளவுகளில் இடைவேளைகளை எடுத்துக்கொள்ளவும். 20-20-20 விதியை பயன்படுத்தவும். அதாவது 20 அடி தூரத்திலுள்ள இடத்தை, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 நொடிகள் பார்க்க வேண்டும். வழக்கமான வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்கள் செய்வது, கண் பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். ஆரோக்கியமான உணவு முறையானது வயதுடன் தொடர்புடைய கண் பிரச்சினைகளை குறைக்கக்கூடும். தவறாமல் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் கண்களுக்கு ஆக்சிஜன் செல்லும் அளவை அதிகரிக்கும். நச்சுக்களை அகற்ற உதவும்.

    நீண்ட நேரம் டி.வி. பார்ப்பது, பொதுவாக கம்ப்யூட்டரை பார்ப்பதால் ஏற்படும் நோய் பாதிப்பு அறிகுறியை உருவாக்காது, எனினும், அதை பார்ப்பதற்காக நீங்கள் அமர்ந்திருக்கும் தூரத்தை இது சார்ந்திருக்கும். டி.வி.க்கு மிக நெருக்கமாக அமர்ந்து பார்ப்பது கண் அழுத்தத்தையும், கழுத்தில் வலியுடன் கூடிய அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

    கண்களை ஈரப்பதம் உள்ளதாகவும், புத்துணர்வு உள்ளதாகவும் வைத்திருப்பதற்கு கண்களை மூடி திறக்கின்ற வழக்கத்தை பின்பற்றவும். ஆரோக்கியமான கண்களுக்கு, கண்களை மசாஜ் செய்வது ஒரு நிவாரணமாக கருதப்படுகிறது. கைகளில் சூடு ஏறுகின்ற வரை நன்றாக தேய்த்து, கண்களுக்கு மேலே மிருதுவாக அழுத்தவும். ஒரு இயற்கையான வழிமுறையில் கண் தசைகளை தளர்வாக்குவதற்கு இது உதவும்.

    சிறு உடற்பயிற்சி

    பார்வைத்திறன் மோசமாகி விடாமல் பாதுகாக்க உதவும் என்பதால், வீடுகளுக்கு வெளிப்புறத்தில் காற்றோட்டமுள்ள இடங்களில் அதிக நேரம் செலவிடுவது முக்கியமாகும். கட்டிடங்களுக்கு உள்ளேயே நேரத்தை செலவிடுவது கிட்டப்பார்வை ஏற்படும் இடரை அதிகரிக்கக்கூடும். கம்ப்யூட்டர் பயன்பாட்டோடு தொடர்புடைய தலைவலி, கழுத்து, முதுகு மற்றும் தோள்பட்டை வலி ஏற்படும் இடரை குறைப்பதற்கு, குறைந்தது ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை திரையை பார்ப்பதில் இருந்து விலகி செல்லவும். எழுந்து நடக்கவும், கைகள், கால்கள், கழுத்து மற்றும் தோள்பட்டையை நீட்டி, மடக்கி சிறு உடற்பயிற்சிகள் செய்வது அழுத்தத்தையும், தசை களைப்பையும் குறைக்க உதவும்.

    ஆகவே, எந்த வகையான டிஜிட்டல் திரையாக இருப்பினும், நீண்டநேரம் பார்ப்பதையும், ஒரு கையளவு நீள தூரத்திற்கும் குறைவான இடத்திலிருந்து பார்ப்பதையும் தவிர்ப்பது நல்லது. குறித்த காலஅளவுகளில் கண் பரிசோதனைகள் செய்துகொள்வது, கண் பிரச்சினைகளுக்கான இடரில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். கண் பரிசோதனையின்போது, உங்களது தினசரி கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்த உண்மையான தகவலை டாக்டரிடம் தெரிவிக்கவும்.

    கண் ஆரோக்கியம் மீது சரியான அக்கறை காட்டுவது பார்வைத்திறன் பிரச்சினைகளை குறைக்கும். குறித்த கால அளவுகளில் டாக்டரை சந்தித்து, கண் பரிசோதனை செய்து கொள்வது முறையான பார்வைத்திறன் நீடிப்பதை உறுதிசெய்யும். டாக்டரால் பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளை தவறாது செயல்படுத்துவது கண் பிரச்சினைகளை முற்றிலுமாக குறைப்பதற்கு நிச்சயம் உதவும்.

    டாக்டர் எஸ்.சவுந்தரி, தலைவர்- மருத்துவ சேவைகள், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை.
    தொடைப்பகுதி கருப்பாக இருப்பது பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான அழகு பிரச்சினைகளில் ஒன்றாகும். கருப்பாக இருக்கும் அந்த பகுதியை ஒளிரச் செய்ய உதவும் அழகு குறிப்புகளை பார்க்கலாம்.
    அந்தரங்க பகுதிக்கு அருகில் இருக்கும் தொடைப்பகுதி கருப்பாக இருப்பது பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான அழகு பிரச்சினைகளில் ஒன்றாகும்.  தோல் உராய்வு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு முதல் உடல் பருமன் வரை உள் தொடைப்பகுதி கருப்பாக காட்சியளிப்பதற்கு பல காரணிகள் உள்ளன.

    இருக்காமான உள்ளாடைகளால் அந்த பகுதியில் எரிச்சலையும் சேர்த்து பெறுகிறார்கள். மார்டன் ஆடைகளை அணியும் நபர்களுக்கு இது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும். நீங்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டு சில தீர்வுகளைத் தேடுகிறீர்களானால், கருப்பாக இருக்கும் அந்த பகுதியை ஒளிரச் செய்ய உதவும் அழகு குறிப்புகள் பட்டியலை நாங்கள் இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்.

    உங்கள் அந்தரங்க உள் தொடைகளை ஒளிரச் செய்ய நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் இங்கே காணலாம்.  நிறமியைக் கையாள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று எலுமிச்சைசாறு ஆகும். ஏனெனில் இதில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. இது சேதமடைந்த தோல் செல்களை சரிசெய்ய உதவுகிறது.

    தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றை கலந்து 10-15 நிமிடங்கள் இந்த கலவையை உங்கள் உள் தொடைகளில் தடவவும்.  தோல்கள் ஒன்றோடொன்று உராய்வதன் மூலம், உள் தொடை கருமையாக மாறுகிறது. நீங்கள் சமையல் சோடா மற்றும் தண்ணீரின் கலவையை முயற்சி செய்யலாம். இது சருமத்தில் உள்ள கருமையை வெளியேற்ற உதவும். இதை தொடையில் தடவி 10-15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும்.

    இருப்பினும், பேக்கிங் சோடா சில தோல் வகைகளில் கடுமையானதாக இருப்பதால் எச்சரிக்கையாக இதை கையாள வேண்டும்.கற்றாழை ஜெல் உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யலாம். கற்றாழை உங்களுக்கு அதிக சரும பாதுகாப்பை அளிக்கிறது. கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி அதை ஊற விடவும்.  ஜெல் அலோயினுடன் ஏற்றப்படுகிறது. இது சருமத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது. அதிகபட்ச நன்மைகளுக்கு, கற்றாழையை தவறாமல் பயன்படுத்தவும்.

    உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் வெட்டிய ஒரு சிறு உருளைக்கிழங்கு துண்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி மசாஜ் செய்யவும். நீங்கள் அதை 10 நிமிடங்கள் தேய்க்கலாம். உருளைக்கிழங்கில் கேடகோலேஸ் உள்ளது. இது தோல் அமைப்பில் இருக்கும் கருமையை வெளியேற்ற உதவுகிறது.
    நீங்கள் உங்கள் குழந்தையின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதே அவர்களின் மீது நீங்கள் காட்டும் அன்பை அவர்களுக்கு உணரச் செய்யும் எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
    நீங்கள் உங்களுடைய குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலு ங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குழந்தைக்கும் இடையே இருக்கும் தலைமுறை இடைவெளியை குறைக்க உதவும்.

    உங்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். அதுவே உங்களையும், உங்களுடைய குழந்தையையும் இணைக்க உதவும் மிகக் சிறந்த வழியாகும். வேகமாக வளர்ந்து வரும் மற்றும் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில் நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு தலை முறையை எவ்வாறு கூலாக சமாளிப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

    குழந்தை குழந்தையாகவே இருக்க வேண்டும். அதுவே மிகவும் முக்கியம். அவர்களுடைய குழந்தைத்தனத்தை ரசியுங்கள். அவர்களை சீக்கிரம் பெரியவர்களாக தூண்டாதீர்கள். இழந்த இளம் பருவத்தை மீண்டும் பெற இயலாது என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.

    பொதுவாக, நீங்கள் உங்கள் குழந்தையின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதே அவர்களின் மீது நீங்கள் காட்டும் அன்பை அவர்களுக்கு உணரச் செய்யும் எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானது. இதை இப்போதே நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, உங்கள் குழந்தையின் மீது உண்மையான அன்பு செலுத்துங்கள்.

    உங்கள் குழந்தைக்கு கற்பிக்கும் போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் விஷயங்களை அனுபவித்து ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் குட்டி தேவதையைப் போன்ற ஊர்ந்து போவதாகட்டும் அல்லது ஒரு பிடித்த பாடலை பாடுவதாகட்டும்.

    அதை எப்பொழுதும் அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளிக்கொணருங்கள்.  உங்களுடைய குழந்தை உங்களால் இந்த உலகிற்கு வந்தது என்னும் உண்மையை புரிந்து கொள்ளுங்கள். அதே சமயம் நீங்கள் அவர்கள் செய்யும் எல்லா செயலையும் உங்கள் வழிக்கு கொண்டு வர முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

    நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் அவர்களின் அனைத்து காரியங்களிலும் துணை புரியுங்கள். அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு உள்ளது என்பதை தெரிவியுங்கள். உங்களின் நிறை வேறாத கனவுகளை உங்களுடைய குழந்தையின் மீது சுமத்தி அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க முயற்சி செய்யாதீர்கள்.

    அவர்கள் விருப்பம் எது என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். ஆனால், குழந்தைகள் உங்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளைப் பெற உங்களிடம் வருவதை கண்டிப்பாக உறுதி செய்து கொள்ளுங்கள். பெற்றோராகிய நீங்கள் குழந்தைகளின் முன் கெட்ட வார்த்தைகள் மற்றும் அசிங்கமான சண்டை போட வேண்டாம். ஏனெனில் குழந்தையின் கிரகிப்புத் திறன் என்பது மிகவும் அபாரமானது.
    வயதானவர் முதல் குழந்தைகள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்தக் கஞ்சியைத் தரலாம். இன்று இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருடகள் :

    சிவப்பு அவல் - ஒரு கப்
    பொட்டுக்கடலை - கால் கப்
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
    பால் - 3 கப் துருவிய
    வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்.

    சிவப்பு அவல் பால் கஞ்சி

    செய்முறை:

    அவல், பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும்.

    அடி கனமான கடாயில் பால் ஊற்றி நன்றாக காய்ச்சவும்.

    பிறகு தீயைக் குறைத்து பொடித்த அவல், பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

    இறக்கும் சமயத்தில் துருவிய வெல்லம் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

    சத்தான சிவப்பு அவல் பால் கஞ்சி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரசவத்திற்கு பின், நிறைய பெண்கள் சொல்லும் பிரச்சனை என்ன வென்றால், அது பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது தான்.
    சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர், எந்த ஒரு தடையுமின்றி மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறும். ஆனால் சிலருக்கு பிரசவத்திற்கு பின் ஆறு மாதம் ஆகியும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுகிறதோ, அப்போது அவர்கள் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளோமோ என்று நினைப்பார்கள். அவ்வாறு நினைக்க வேண்டாம்.

    ஏனெனில் பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் சுழற்சி அனைவருக்குமே ஒரே மாதிரி ஏற்படும் என்பதில்லை. அது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். இப்போது எதற்கு அந்த மாதிரியான தாமதம் ஏற்படுகிறது என்று பார்ப்போமா!

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படும். ஏனெனில் குழந்தைக்கு அதிக அளவில் பால் கொடுப்பதால், உடல் நிலையானது பழைய நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும்.  ஏனெனில் புரோலாக்டின் என்னும் தாய்ப்பாலை சுரக்கும் ஹார் மோனானது அண்ட விடுப்பினால், மாதவிடாய் நடைபெறுவதை குறைக்கிறது.

    இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சில பெண்கள் தாய்ப்பால் கொடுத்தாலும், மாதவிடாய் முறையாக நடைபெறும். சிலருக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் வரை கூட தாமதம் ஆகும். நிறைய ஆய்வுகளில் போதிய உடல் எடை இல்லாமல் இருந்தாலோ அல்லது பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரித்தாலோ, மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஆகும் என்று கண்டறியப் பட்டுள்ளது.

    மேலும் உடலில் போதிய ஊட்டசத்துக்கள் இல்லா விட்டாலும், இந்த பிரச்சனை ஏற்படும். எனவே பிரசவத் திற்கு பின் நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுகளை உண்டால் தான் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்க முடியும். எனவே காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவதோடு, உடல் எடை அதிகரிக்காமல் இருக்க பிரசவத்திற்கு பின் செய்ய வேண்டிய உடற் பயிற்சிகளை செய்து வர வேண்டும். இதனால் மாதவிடாய் சுழற்சியை சரியாக நடைபெற வைக்க முடியும்.

    பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சரியான நேரத்திலோ அல்லது சில மாதங்கள் வரையிலோ மாதவிடாய் சுழற்சியானது தடைபடும். ஏனெனில் தாய்ப்பாலை சுரக்கும் புரோலாக்டின் ஹார்மோனானது, பிரசவத்திற்கு பின் நடைபெறும் மாதவிடாய் சுழற்சியை தாமதமாக்கும். சொல்லப்போனால் பொதுவாகவே அண்டவிடுப்பு சுழற்சி மாதவிடாய் சுழற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அண்டவிடுப்பு சுழற்சியானது சரியாக நடைபெறா விட்டால், மாதவிடாய் சுழற்சியும் சரியாக நடைபெறாது.

    அதிலும் சில சமயம் பிரவத்திற்கு பின் இரத்த வடிதல் ஏற்படும். இவை முற்றிலும் வித்தியாச மானது. இதை மாதவிடாய் சுழற்சி என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் சிலருக்கு பிரசவத்திற்கு பின், ஒரு வாரம் அல்லது மாதம் வரை இரத்தம் வடியும். ஆகவே பிரசவத்திற்கு பின் ஒரு வருடம் ஆன பின்பும் மாதவிடாய் சுழற்சி நடைபெறா விட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அவ்வாறு மருத்துவரை அணுகி ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நடைபெற்றால், பின் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

    சொல்ல ப்போனால், மாதவிடாய் சுழற்சி தாமதமானால், அதற்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு, நன்கு ஆரோக்கி யமான உணவுகளை சாப்பிட்டாலே சரி செய்து விடலாம்.
    ×