search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heat Rash"

    வெயில் காலத்தில் வியர்க்குரு வந்துவிட்டால் எரிச்சலாலும், அரிப்பாலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதிக்குள்ளாவர். இதனைப் போக்க என்ன வழிகள் உள்ளது என்று பார்க்கலாம்.
    வெயில் தாக்கத்தால் அதிகம் வியர்வை வழிவதால் அல்லது சூரியனின் வெப்பத்தின் தாக்கத்தால் சருமத்தில் வியர்க்குரு வரும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலும், முகத்தின் நெற்றி, முதுகு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தான் வியர்க்குரு உருவாகும். வியர்க்குரு வந்துவிட்டால் எரிச்சலாலும், அரிப்பாலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதிக்குள்ளாவர். இதனைப் போக்க என்ன வழிகள் உள்ளது.

    மூலிகையின் நற்குணங்கள் கொண்ட சோப்புகளை உபயோகித்து தினமும் இரண்டு வேளைக் குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். இவ்வாறு செய்வதால் வியர்க்குரு வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும்.

    வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு அந்தத் துண்டுகளை வியர்க்குரு உள்ள இடங்களில் பூசி 10 அல்லது 15 நிமிடங்கள் நன்றாக தேய்த்தெடுத்தால் வியர்க்குரு இரண்டு நாட்களில் மறைந்துவிடும்.

    சோற்றுக் கற்றாழையை நடுவில் கீறி இரண்டாக வெட்டினால் உள்ளே ஜெல்லி போன்று இருக்கும். அந்த பசையை எடுத்து கழுத்து, முக, முதுகு ஆகிய பகுதிகளில் பூசி 15 நிமிடத்திற்குப் பிறகு கழுவினால், அதன் குளுமையை உடனே உணர முடியும். இதனால் அரிப்புகள் குறையும்.

    சாமந்திப் பூவின் சாறு சரும பிரச்சனைகளுக்கு உகந்தது. சாமந்திப் பூவை அம்மியில் அல்லது கைகளினால் நசுக்கிப் பிழிந்தால், அதிலிருந்து சாறு வெளிவரும். அந்தச் சாற்றை வியர்குருவின் மேல் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து நன்றாகக் கழுவினால் வந்த இடம் தெரியாமல் சரும பிரச்சனைகள் அனைத்தும் மறைந்து போகும். இதனை இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்ய வேண்டும்.

    ×