search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சிவப்பு அவல் - நட்ஸ் சாலட்
    X
    சிவப்பு அவல் - நட்ஸ் சாலட்

    சிவப்பு அவல் - நட்ஸ் சாலட்

    சிவப்பு அவல், நட்ஸ் சேர்த்து செய்யும் இந்த சாலட் மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுத்தம் செய்த சிவப்பு அவல் - ஒரு கப்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - ஒன்று,
    பச்சை மிளகாய் - ஒன்று
    வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி -தேவையான அளவு
    கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    நெய் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

    சிவப்பு அவல் - நட்ஸ் சாலட்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் நெய்விட்டு வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

    அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பிறகு இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

    பிறகு அவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.

    மேலே கொத்தமல்லித்தழை, வறுத்த நட்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கிப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×