search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப காலத்தில் இளநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
    X
    கர்ப்ப காலத்தில் இளநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

    கர்ப்ப காலத்தில் இளநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

    கர்ப்ப காலத்தில் இளநீர் குடித்தால், சில பெண்களுக்கு அது சூட்டை கிளப்பிவிடும். இதனால் பலருக்கும் கர்ப்ப காலத்தில் பெண்கள் இளநீரைக் குடிக்கலாமா என்ற சந்தேகம் மனதில் எழும்.
    இளநீர் மிகவும் குளிர்ச்சியானது. இதனை கர்ப்ப காலத்தில் குடித்தால், சில பெண்களுக்கு அது சூட்டை கிளப்பிவிடும். இதனால் பலருக்கும் கர்ப்ப காலத்தில் பெண்கள் இளநீரைக் குடிக்கலாமா என்ற சந்தேகம் மனதில் எழும். ஆனால் இளநீர் கர்ப்பிணிகளுக்கான மிகவும் அற்புதமான பானம்.

    ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக குடிக்கக்கூடாது. எப்போதுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை மறவாதீர்கள். இளநீர் கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

    இளநீரில் கொழுப்புக்கள் இல்லை மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே ஏற்கனவே உடல் பருமனுடன் இருக்கும் கர்ப்பிணிகள் இளநீரைக் குடித்தால், எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இளநீர் வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை தான் பாதுகாக்கும்.

    கர்ப்ப காலத்தில் உடலில் எலக்டோலைட்டுகளை சமநிலையுடன் வைத்து, குமட்டல், சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கினால் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க உதவும். இளநீரில் உள்ள முக்கிய எலக்ட்ரோலைட்டுகள் தசைகளின் செயல்பாட்டிற்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும் உதவும்.

    கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் இளநீரில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இப்பிரச்சனைகளைத் தடுக்கும்.

    இளநீரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இது கர்ப்ப காலத்தில் பெண்களின் நோயெதிர்ப்பு சக்தியின் அளவை அதிகரிக்க உதவும். இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது. இது வைரஸ்களை எதிர்த்துப் போராடும் சக்தி வாய்ந்த மோனோலாரினை உற்பத்தி செய்து, நோய்த்தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

    இளநீரில் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருப்பதால், கர்ப்பிணிகள் இளநீரைக் குடித்தால், கர்ப்ப கால சர்க்கரை நோய் வரும் அபாயம் குறையும்.

    இளநீர் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வைப் போக்கி, உடலில் ஆற்றலை அதிகரிக்கும். மேலும் இளநீர் சரும செல்களுக்கு ஊட்டமளித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை ஊக்குவித்து, ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வருவதைத் தடுக்கும்.

    இளநீரை கர்ப்பிணிகள் குடித்தால், பனிக்குட நீரின் அளவு அதிகரித்து, கருப்பையில் வளரும் கருவின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக கடைசி மூன்று மாத காலத்தில் பெண்கள் குடித்தால், இந்த நன்மை கிடைக்கும்.
    Next Story
    ×