என் மலர்
ஆரோக்கியம்
‘கணவனும்- மனைவியும் தங்களுக்குள் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. அவர்களுக்குள் முதலில் சாதாரணமாக ஆரம்பிக்கும் விவாதம் பின்பு கடுமையானதாக மாறி அவர்களுக்குள் பிரிவை உருவாக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது’ என்கிறார்கள், மனநல ஆலோசகர்கள்.
‘கணவனும்- மனைவியும் தங்களுக்குள் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. அவர்களுக்குள் முதலில் சாதாரணமாக ஆரம்பிக்கும் விவாதம் பின்பு கடுமையானதாக மாறி அவர்களுக்குள் பிரிவை உருவாக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது’ என்கிறார்கள், மனநல ஆலோசகர்கள். கடுமையான விவாதங்களைப் பற்றியும், அதனால் உருவாகும் பின்விளைவுகள் குறித்தும் அவர்கள் விளக்குகிறார்கள்!
* விவாதம் எல்லைமீறினால் குடும்ப ரகசியம் காற்றில் பறக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். அதனால் குடும்ப வாழ்க்கையில் விவாதத்தை குறைத்துக்கொள்வது நல்லது. தேவையற்ற விவாதங்கள் சின்ன விஷயங்களைகூட பெரிதாக்கி திசை திருப்பிவிட்டுவிடும்.
* விவாதம் கடுமையாகும்போது கோபம் தோன்றும். அது தேவையற்ற வார்த்தை பிரயோகத்திற்கு வழிவகுக்கும். அத்தகைய வார்த்தைகள் தம்பதிகளிடையே ஆறாத வடுவை உருவாக்கிவிடும்.
* தம்பதிகளில் சிலர் விவாதத்தை தங்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் சக்தியாக கருதுகிறார்கள். ஆனால் அது ஒரு கத்தியைப் போன்றது. வீண் சண்டையை வளர்த்து மனவருத்தத்தை உருவாக்கிவிடும்.
* இணையிடம் முக்கியமான விஷயம் குறித்து பேச நினைப்பவர்கள், முதலில் அதற்கான சூழ்நிலைக்காக காத்திருக்கவேண்டும். எரிச்சலான மனநிலையில் இருக்கும்போது ஆரம்பிக்கும் பேச்சுவார்த்தை பெரும்பாலும் மோதலில் தான் முடியும்.
* ஒருவர் எரிச்சலாக பேசினாலும் அவர் பேசுவதை முழுமையாக காதுகொடுத்து கேளுங்கள். அப்போதுதான் நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்ற மனநிலைக்கு அவர் வருவார்.
* தம்பதிகள் தங்கள் வாதத்திறமையை வெளிக்காண்பிக்க நினைக்கக்கூடாது. ஒருவர் கருத்தில் நியாயம் இருந்தால் அதை புரிந்துகொண்டு ஆமோதிக்கவேண்டும். பேச்சுவார்த்தை சுமுகமான முடிவுக்கு வர சாத்தியமில்லை என்பதை உணர்ந்தால் உடனே பேச்சை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
* பேச்சு, விவாதமாகிவிட்டால் வார்த்தைகளில் மிகுந்த கவனம்காட்டுங்கள். விவாதத்தை தேவையில்லாமல் வளரவிடாதீர்கள்.
* உங்கள் கருத்தையும், அதில் இருக்கும் நியாயத்தையும் உங்கள் இணை புரிந்துகொள்ளாதபோது கொஞ்சம் அமைதி காப்பதே சிறந்தது. உங்களுடைய கருத்து அவமதிக்கப்பட்டால், அந்த மன வருத்தத்தில் தேவையற்ற வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. தனது கருத்து என்றாவது ஒருநாள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு பிரச்சினையை பக்குவமாக கையாண்டால் உங்கள் கருத்துகள் இணையை சிந்திக்கவைக்கும்.
* தனக்குதான் எல்லாம் தெரியும். தன் கருத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவ்வளவுதான் என்பதுபோல் ஒருபோதும் ஆணவத்தோடு நடந்துகொள்ளா தீர்கள். தனது இணையும் அவர் அளவுக்கு விஷய ஞானம் உள்ளவர்தான் என்பதை எப்போதும் மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.
மேற்கண்ட தகவல்களை தெரிவிக்கும் மனநல நிபுணர்கள் “கணவன்-மனைவி இருவருமே ஒருவர் சொல்வதற்கு இன்னொருவர் ஆமாம் போடவேண்டும் என்று எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமான விஷயமல்ல. சிந்திக்கவே தெரியாதவர்கள்தான் அப்படி ஆமாம் போடுவார்கள். அதனால் குடும்பம் நன்றாக செயல்பட இருவருக்கும் இடையே ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறவேண்டியது அவசியம்” என்று சொல்கிறார்கள்.
கணவன்- மனைவி இடையே எழும் விவாதங்கள் பற்றி, அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் ‘மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கிடையே அதிக விவாதம் நடப்பதில்லை. பிரிந்துவாழும் தம்பதிகளில் பெரும்பாலானவர்களின் பிரிவிற்கு வீண்விவாதம்தான் காரணமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது.

தினமும் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவதுதான் நல்லது. மார்கபங்களின் வடிவத்தை சீராக பராமரிக்க இது உதவும்.
உடற்பயிற்சி செய்யும்போது உடலுக்கு பொருத்தமான ஆடையை அணிய வேண்டும். தளர்வான, இறுக்கமான உள்ளாடைகளை அணிவது உடற்பயிற்சிக்கு இடையூறாக அமையும். அதோடு ஆரோக்கியத்தையும் பல வழிகளில் பாதிக்கவைத்துவிடும். தினமும் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் உள்ளாடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொருத்தமற்ற பிரா அணிவது மார்பகங்களின் வடிவத்தையும், தோற்றத்தையும் பாதிக்கும். மார்பகங்கள் தளர்வடைவது, வலி ஏற்படுவது போன்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். உடற்பயிற்சி செய்வதற்கென்றே பிரத்யேக பிராக்கள் இருக்கின்றன. அத்தகைய ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிவதன் அவசியம் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பார்ப்போம்.
தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவதுதான் நல்லது. மார்கபங்களின் வடிவத்தை சீராக பராமரிக்க இது உதவும். கடினமான உடற்பயிற்சிகளை செய்யும்போது மார்பக தசைகள் விரிவடைவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த சமயத்தில் பொருத்தமற்ற பிரா அணிவது மார்பகத்தில் வலியை அதிகப்படுத்தும். ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது இத்தகைய பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
ஜூம்பா, ஜாக்கிங், நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் போன்ற உடல் இயக்க செயல்பாடுகளின் போது மார்பகங்களின் இயக்கம் அதிகரிக்கும். அசவுகரிய மாகவும் இருக்கும். அப்போது ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது மார்பகங்களின் இயக்கத்தை சீராக்கும்.
உடற்பயிற்சியின்போது உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளிப்படும். சருமத்திற்கு போதுமான காற்றோட்டம் கிடைப்பதற்கும் இடையூறு ஏற்படும். ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது உடலில் இருந்து வியர்வையை வெளியேற்ற உதவும். காற்றோட்டத்திற்கு ஏற்ப சருமத்தை குளிர்ச்சியாகவும், வறட்சியாகவும் வைத்திருக்க உதவும்.
உடல் இயக்க செயல்பாடுகளின்போது மார்பக திசுக்கள் பாதிப்புக்குள்ளாகும். பெரும்பாலும் மார்பக வலி பிரச்சினையை ஏற்படுத்தும். ஆதலால் உடற்பயிற்சி செய்யும்போது வலியை குறைப்பதற்கு ஸ்போர்ட்ஸ் பிரா அணிவதுதான் நல்லது. அவை வழக்கமான பிராக்களை போல் மார்பகங்களை இறுக்குவதில்லை. அணிவதற்கு சவுகரியமாக இருக்கும்.
வழக்கமான பிராக்களில் இருக்கும் எலாஸ்டிக், ஹூக்குகள் ரத்த ஓட்டத்திற்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழலில் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ரத்த ஓட்டத்திற்கும் உதவும். எந்த அசவுகரியமும் இல்லாமல் நீண்ட நேரம் அணியலாம்.
ஸ்போர்ட்ஸ் பிரா வாங்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வதும் அவசியம். மார்பகத்திற்கு ஏற்ற சரியான கப் அளவு கொண்ட ஸ்போர்ட்ஸ் பிராவை தேர்ந்தெடுப்பது முக்கியமானது.
ஸ்போர்ட்ஸ் பிராவை தேர்ந்தெடுக்கும்போது அதன் பட்டைகளை சரிபார்க்க வேண்டும். இறுக்கமாகவும், மெல்லியதாகவும் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும். கடினமான உடற்பயிற்சிகளுக்கு பரந்த பட்டையுடன் கூடிய பிராவை தேர்ந்தெடுக்கவேண்டும். நடைப்பயிற்சி அல்லது யோகா போன்ற செயல்களுக்கு, சாதாரண ஸ்போர்ட்ஸ் பிராவை வாங்கலாம்.

குழந்தைகளும் வயதானவர்களும் சாப்பிடலாம். சத்தானது. வெந்தயம் சேர்ப்பதால் வயிற்றுக்குக் குளிர்ச்சி. முடக்கத்தான் கீரை, மூட்டு வலி, முழங்கால் வலிகளை நீக்கும். சீறுநீர் தடையின்றி வெளியேறும். எலும்புக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும்.
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 3 கப்,
முழு உளுந்து - அரை கப்,
வெந்தயம் - ஒரு கைப்பிடி,
முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) - 2 கப்,
வாழை இலை - 1,
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

செய்முறை:
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்துவைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும்.
இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை இடலையாக (அகலமாக) கொஞ்சம் தடிமனாக ஊற்றி மூடிவைத்து ஆவியில் வேகவிடவும்.
இட்லி அரிசி - 3 கப்,
முழு உளுந்து - அரை கப்,
வெந்தயம் - ஒரு கைப்பிடி,
முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) - 2 கப்,
வாழை இலை - 1,
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்துவைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும்.
இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை இடலையாக (அகலமாக) கொஞ்சம் தடிமனாக ஊற்றி மூடிவைத்து ஆவியில் வேகவிடவும்.
10 நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்... சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் வாழை இலை இட்லி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கல்வியை இப்போது ஆன்லைனில் கற்க அதிக பணம் செலவாகாது. வீட்டில் இருந்தே படிக்கலாம் என்பன போன்ற சவுகரியங்கள் இருந்தாலும், இந்த ஆன்லைன் கல்வியில் சில பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
கொரோனாவால் கோடிக்கணக்கான மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. யுனஸ்கோவின் அறிக்கை, உலகம் முழுக்க 150 கோடி பேரின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது. அதில் 30 கோடி பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வீடுகளிலே உட்கார்ந்து பொழுதைப் போக்குவதைவிட, ஏதாவது ஒரு விதத்தில் புதிய கல்வியை ஆன்லைன் வழியாக கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். பிரபலமான கல்வி நிலையங்களில் நேரடியாக சென்று கல்வி கற்கும்போது பயணம், தங்குமிடம், கட்டணம் போன்றவைகளுக்காக அதிக பணம் செலவு செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அத்தகைய கல்வியை இப்போது ஆன்லைனில் கற்க அதிக பணம் செலவாகாது. வீட்டில் இருந்தே படிக்கலாம் என்பன போன்ற சவுகரியங்கள் இருந்தாலும், இந்த ஆன்லைன் கல்வியில் சில பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆன்லைன் வழியாக கல்வி கற்க விரும்புகிறவர்கள் முதலில் வீட்டில் அதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்யவேண்டும். அந்த இடத்தில் தேவையான சவுகரியங்கள் இருப் பது அவசியம். இதற்கென்று தனி அறை இருந்தால் நல்லது. அந்த அறை சத்தமின்றி நிசப்தமாக இருக்கவேண்டும்.
உலகம் முழுக்க பல நாடுகளில் ஆன்லைன் கோர்ஸ்கள் இருந்தாலும், பொதுவாக அதனை மூன்று வகையாக பிரித்துவிடலாம்.
ஒன்று: ஒரு வாரம் முதல் 4 மாதங்கள் வரையிலான கால அளவைக்கொண்டது. அதில் இடம் பெறும் ஓப்பன்கோர்ஸ்களை ஆயிரக்கணக்கானவர்கள் கற்பதுண்டு. இதனை கற்று முடித்த பின்பு ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை கொடுத்தால் சான்றிதழும் வழங்குவார்கள். ஆனால் வேலை தரும் பல்வேறு நிறுவனங்கள் இத்தகைய சான்றிதழ்களை அங்கீகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு: இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் பாடங்கள் நடத்துகின்றன. கல்லூரிகளில் சேர்ந்து படிப்பது போன்ற டிகிரி, டிப்ளமோக்களை இதிலும் கற்கலாம். ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு, பாடம் நடத்துதல், பரீட்சை வைத்தல், திறனாய்வு செய்தல் போன்றவை இதில் இடம்பெறும். கட்டணமும் வசூலிப்பார்கள். இந்த பட்டங்கள் அங்கீகாரத்திற்குரியது. ஆனால் எல்லா தொழில்நிறுவனங்களும் இதனை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்வதற்கில்லை.
மூன்று: சில தொழில் நிறுவனங்களும், தொழிற்பயிற்சி அமைப்புகளும் ஆன்லைன் சான்றிதழ் வகுப்புகள் நடத்துகின்றன. அதில் சிறப்பாக பயிற்சி பெறுபவர்களை அந்த நிறுவனங்களே வேலைக்கு சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
உலகம் முழுக்க தற்போது ஆன் லைன் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் உங்களுக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். நீங்கள் கேள்விப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் உள்ள சிறந்த பாடங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. இதில் சேர்ந்து படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கட்டணம் அதிகமாக இருக்கக்கூடும்.
நீங்கள் ஏற்கனவே ஏதாவது ஒரு துறைசார்ந்த கல்வியை நேரடியாக கற்றிருப்பீர்கள். அதில் கூடுதலாக கற்றுக்கொள்ளும் விதத்தில் சில ஆன்லைன் கோர்ஸ்கள் நடக்கும். கம்ப்யூட்டர், குவாலிட்டி மேனேஜ்மென்ட், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட்ஸ் போன்றவைகளில் அவர்கள் சான்றிதழ் கல்வியை வழங்குவார்கள். அந்த துறை சார்ந்து வேலை தேட விரும்புகிறவர்களுக்கு இந்த சான்றிதழ்கள் கைகொடுக்கும்.
ஏராளமான நிறுவனங்கள் இலவசமாகவே ஆன்லைன் சான்றிதழ் கல்வியை வழங்குகிறார்கள். அதில் சிறந்ததை தேர்ந்தெடுத்து கற்கலாம். ஆனால் கோர்ஸ் முடிந்து சான்றிதழை கேட்கும்போது அதற்கு கட்டணம் வசூலிப்பார்கள். அதை கவனத்தில் கொண்டு படிப்பை தேர்ந்தெடுங்கள். பணம்கொடுத்து கற்க முன்வரும்போது, அந்த கோர்ஸ் பற்றிய ‘ரிவீவ்வை’ படித்துப்பார்த்து முடிவெடுங்கள்.

பெயரளவுக்கு ஏதோ ஒரு பொட்டை வைக்கும் நிலையில் இன்றைய பெண்கள் இல்லை. தங்கள் அந்தஸ்து, முகம், சரும நிறம், அணிந்திருக்கும் உடைக்கு ஏற்ற விதத்தில் பொட்டுகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
பொட்டு, முகத்திற்கு முழு அழகைத் தருகிறது. எவ்வளவு சிறப்பாக ‘மேக்கப்’ போட்டிருந்தாலும், விலை உயர்ந்த புடவையை உடுத்தியிருந்தாலும், ஆபரணங்களை அடுக்கி அணிந்திருந்தாலும் நெற்றியில் ஒரு பொட்டு வைக்காவிட்டால், அனேகமானவர்களுக்கு அழகில் முழு திருப்தி தோன்றுவதில்லை.
இந்திய பெண்கள் பெரும்பாலும் பொட்டுவைத்த முகத்தோடுதான் காணப்படுகிறார்கள். அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் பொட்டுவைக்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பதால், அதை பார்க்கும் வெளிநாட்டு பெண்கள் ‘பொட்டின் தத்துவம் என்ன?’ என்ற கேள்வியை அவர்களிடம் எழுப்புவார்கள். அதற்கு விளக்கம் சொல்ல தெரிந்துவைத்திருக்கவேண்டியதிருக்கும். தற்போது வெளிநாட்டு பெண்களும் பொட்டின் அழகை போற்றத் தொடங்கிவிட்டதால், இந்தியாவிற்கு வந்தால் அவர்களும் பொட்டு வைத்த முகத்தோடு வலம்வருவது உண்டு.
முன்பு சாந்துப்பொட்டு, சந்தனப்பொட்டு, சிந்தூரம் போன்ற சில வகைகளே வழக்கத்தில் இருந்தன. தற்போது காலமாற்றத்திற்கு ஏற்ப பொட்டுகளும் விதவிதமான வடிவங்களில் வெளிவருகின்றன. விலை மதிப்புள்ள ஆபரணங்களுக்கு நிகராக இப்போது ஆபரண பொட்டுகளும் தயாரிக்கிறார்கள். பல வண்ணங்களில், வடிவங்களில் அவை தயார்செய்யப்படுகின்றன. பலவித கற்களையும், முத்துக்களையும் அதில் பதிக்கிறார்கள். சிற்ப வேலைப்பாடு கொண்ட பொட்டுகளும், தங்கமுலாம் பூசப்பட்ட பொட்டுகளும் அவைகளில் குறிப்பிடத்தக்கதாகும்.
பெயரளவுக்கு ஏதோ ஒரு பொட்டை வைக்கும் நிலையில் இன்றைய பெண்கள் இல்லை. தங்கள் அந்தஸ்து, முகம், சரும நிறம், அணிந்திருக்கும் உடைக்கு ஏற்ற விதத்தில் பொட்டுகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
பொட்டு தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. முக்கியமாக முகத்தின் அமைப்பை கருத்தில்கொண்டு அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதத்தில் பொட்டு அமையவேண்டும். புருவத்தை நன்றாக சீவி அழகுபடுத்திவிட்டுதான் பொட்டை ஒட்டவேண்டும். இயல்பான பொட்டுகளே முகத்திற்கு கூடுதல் அழகு தரும்.
சிலருக்கு பொட்டு அலர்ஜியை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்களும் இப்போது கவலைப்படவேண்டியதில்லை. ஐலைனரும், ஐபென்சிலும் இப்போது பல நிறங்களில் கிடைக்கின்றன. உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப அவைகளை பயன்படுத்தி பொட்டுகளை வரைந்துகொள்கிறார்கள்.
சதுர வடிவ முக அமைப்பு கொண்டவர்களுக்கு அதிக நீளமில்லாத, சற்று அகலமுள்ள பொட்டு கூடுதல் அழகு தரும். நீளமான, அகலம் குறைந்த பொட்டுகள் அவர்களது முகத்திற்கு எடுப்பாக இருக்காது. வட்டமான பொட்டுகளே அவர்களுக்கு பெரும்பாலும் பொருந்தும்.
உருண்டையான முக அமைப்பு கொண்டவர்களுக்கு நீண்ட பொட்டுகள் ஏற்றது. உருண்டை முகத்திற்கு இது வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்தும். சுருங்கிய நெற்றி அமைப்பு கொண்ட பெண்கள் புருவங்களுக்கு நடுவில் பொட்டு வைக்கவேண்டும்.
முட்டை வடிவ முகம் கொண்டவர்களுக்கு எல்லாவிதமான பொட்டுகளும் பொருத்தமாக இருக்கும். விசாலமான நெற்றி அமைந்தவர்களுக்கு நீளமான பொட்டுகள் கூடுதல் அழகு தரும். முக்கோண வடிவ பொட்டுகளும் பொருந்தும். விசாலமான நெற்றியை கொண்டவர்கள் புருவங்களில் இருந்து ஒரு செ.மீ. உயரத்திற்கு மேல் பொட்டுவைப்பது நல்லது.
இதய வடிவ முகம் கொண்டவர்களுக்கு நீண்ட பொட்டுகள் பொருந்தும். முக வடிவத்திற்கு ஏற்ப பொட்டுவைக்கும்போது அது சரும நிறத்திற்கும் பொருந்தும் விதத்தில் இருக்கிறதா என்றும் கவனிக்கவேண்டும். உடுத்தும் உடையின் நிறத்திற்கும், பொட்டின் நிறத்திற்கும் பொருத்தம் இருக்கவேண்டும். கோதுமை நிற பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் நன்றாக இருக்கும். பொட்டு முகத்திற்கு கூடுதல் பொலிவு தருவதால் அதற்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

எந்த நோயும் இல்லாமல் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் இளைஞர்களையும் கொரோனாவுடன் சேர்ந்து, திடீர் மாரடைப்பும் தாக்குகிறது.
கொரோனா ஊரடங்கின் தொடக்க காலம் பலருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்தது. அது விடுமுறை காலம் போன்று ஜாலியாகத்தான் கழிந்தது. ஆனால் மாதக்கணக்கில் ஊரடங்கு நீடித்ததும, வேலை இழப்பு, பணநெருக்கடி, எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற நிலை போன்றவைகள் உருவானதும் கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளானார்கள். அது குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல நோய்கள் உருவாக காரணமாகிவிட்டது.
உலகம் முழுவதையும் வேறு எந்த நோயும் கொரோனா அளவுக்கு உலுக்கியதில்லை. இந்த நெருக்கடியான நேரத்தில் நோயாளிகளில் பலர் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதற்கும், மருத்துவ உதவியினை பெறுவதற்கும் தயங்குகிறார்கள். அதனால் இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், சுவாசப் பகுதி நோய் கொண்டவர்கள, நோயின் வீரியமான தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துபோகும் சூழல் உருவாகிறது. அதே நேரத்தில் எந்த நோயும் இல்லாமல் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் இளைஞர்களையும் கொரோனாவுடன் சேர்ந்து, திடீர் மாரடைப்பும் தாக்குகிறது. இது பற்றிய ஆய்வுகள் எதுவும் பெரிய அளவில் இதுவரை நடத்தப்படவில்லை.
கொரோனா சாதாரண காய்ச்சல் மூலம் தொடங்குகிறது. இரண்டு மூன்று நாட்களில் இருமல் உருவாகிறது. ஒரு வாரம் கடக்கும்போது சுவாசப்பகுதியை தாக்குகிறது. இந்த நேரத்தில் ஆக்சிஜன் அளவு குறைவதால் மூச்சுத்திணறல் தோன்றுகிறது.
காய்ச்சல் தொடங்கிய ஒரு வாரத்திற்கு பிறகு இதயம் தொடர்புடைய பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. அது இதய தசைகளில் நீர்க்கட்டு உருவாகுவதாகவோ, திடீரென்று இதய செயல்பாட்டை முடக்குவதாகவோ அமையலாம். இந்த காலகட்டத்தில் உடலுக்கு முழு ஓய்வும், மனதுக்கு நிம்மதியும் தேவை. உடனடியாக மருத்துவ சிகிச்சையும் அவசியம். சிலருக்கு வென்டிலேட்டர் அல்லது டயாலிசிஸ் தேவைப்படும். இதில் 70 சதவீதம் நோயாளிகளுக்கு எந்த அறிகுறியும் இருக்காது என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ளவேண்டும்.
கொரோனா பாதித்த நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடுகள் துரிதமாக நடக்கும். அப்போது ஸைட்டோகினின் போன்ற ரசாயனங்கள் உடலில் உற்பத்தியாகும். அவை வைரசை மட்டும் அழிக்காமல், சில தருணங்களில் உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் ஆபத்தை உருவாக்கிவிடும். அது மட்டுமின்றி கொரோனா வைரஸ் இதயத்தில் உள்ள எய்ஸ் ரெஸிப்டேர்ஸ்களுடன் ஒட்டிப்பிடித்து மாரடைப்பை உருவாக்க காரணமாகிவிடுகிறது. சிலர் இதய தமனிகளில் தடைகள் ஏற்படாமலே இதய செயலிழப்புக்கு உள்ளாகியிருக்கவும் செய்கிறார்கள். இது பற்றிய கூடுதல் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. உடற்பயிற்சி செய்யாதவர்கள் இதயநோய், சர்க்கரை நோய் போன்றவைகளோடு உடல்பருமனாலும் பாதிக்கப்படுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதிக உடற்பயிற்சியும் இதய செயலிழப்புக்கு காரணம் என்பது பலருக்கும் தெரியாது.
உடலின் பொதுவான ஆரோக்கிய நிலை, வயது போன்றவைகளை கருத்தில்கொண்டு எந்த உடற்பயிற்சியை செய்யவேண்டும்? எவ்வளவு நேரம் செய்யவேண்டும்? என்பதை தீர்மானிப்பது அவசியம். உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போதே உங்களால் பேசமுடியவேண்டும். முணுமுணுத்தபடி ஒரு பாடலை மெதுவாக பாடவும் முடியவேண்டும். இவைகளை செய்வதில் நெருக்கடி ஏற்பட்டால் உடனே உடற்பயிற்சியை நிறுத்திவிடவேண்டும். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதே போதுமானது.
உடற்பயிற்சியே செய்யாதவர்கள் திடீரென்று கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. கனமான பொருட்களை தூக்குவது போன்ற செயல்களையும் செய்யக்கூடாது. அதனால் திடீர் இதய செயலிழப்பு உருவாகிவிடக்கூடும். ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை வந்த பின்பு பத்து நாட்கள் வரை கவனமாக இருக்கவேண்டும். அந்த காலகட்டத்தில் ஆரோக்கியமானவர்களைகூட ஐந்து முதல் பத்து சதவீதம் அளவுக்கு இதயநோய்கள் தாக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அதனால் அந்த பத்து நாட்களும் பளு நிறைந்த வேலைகளை செய்யாமலும், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமலும் உடலை பாதுகாக்கவேண்டும்.

காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்க முடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.
மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன.
செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக் கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக் குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. அதே சமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்க முடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால் தான் என்கின்றனர் நிபுணர்கள். காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல் பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.
காம உணர்வுகள் அதிகரிக்கும் முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம். அதே போல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம்.
ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத் தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம். ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம்.
அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம். அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.

முகத்தில் மேக் அப் போடாதவர்களுக்கு அவ்வப்போது சன்ஸ்கிரீன் தடவுவது சுலபமான ஒரு காரியம் தான். ஆனால் முகத்தில் மேக் அப் போட்டிருப்பவர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மேக் அப் கலையாமல் சன்ஸ்கிரீன் தடவுவது சற்று கடினம் தான்.
சூரிய கதிர்களால் நம் சருமத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும். முகத்தில் தோன்றும் சருக்கங்கள், மங்கு, கரும்புள்ளிகள், சரும புற்றுநோய் ஆகியவை சூரிய கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகள். சன் ஸ்கிரீன் பயன்படுத்தும் போது இதிலிருந்து நாம் தப்பித்து கொள்ளலாம். இது மட்டும் இல்லாமல் சருமத்தை புத்துணர்ச்சியாக வைக்கவும் சன்ஸ்கிரீன் உதவுகிறது.
காலையில் வெளியே கிளம்புவதற்கு முன்பாக சன்ஸ்கிரீன் தடவி கொண்டால் நாள் முழுவதும் போதும் என்பது கிடையாது. எந்த ஒரு சன்ஸ்கிரீனாக இருந்தாலும் அதன் பயன் வெறும் இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே இருக்கும். அதன் பிறகு மீண்டும் சன்ஸ்கிரீன் தடவ வேண்டும். முகத்தில் மேக் அப் போடாதவர்களுக்கு அவ்வப்போது சன்ஸ்கிரீன் தடவுவது சுலபமான ஒரு காரியம் தான். ஆனால் முகத்தில் மேக் அப் போட்டிருப்பவர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மேக் அப் கலையாமல் சன்ஸ்கிரீன் தடவுவது சற்று கடினம் தான். நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இதற்கு சுலபமான இரண்டு வழிமுறைகள் உண்டு. அதனை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் மேக் அப் போடாதவராக இருக்கும் பட்சத்தில் சன்ஸ்கிரீன் தடவுவது உங்கள் கடைசி வேலையாக இருக்கும். இதுவே நீங்கள் மேக் அப் போடுபவராக இருந்தால் சன்ஸ்கிரீனை முதலில் தடவி கொள்ள வேண்டும். முதலில் ஷிறிதி 30 கொண்ட நல்ல ரக சன்ஸ்கிரீனை தடவி கொள்ளுங்கள். இப்போது மேக் அப் போட்டு முடித்த பிறகு ஷிறிதி கொண்ட ஃபேஸ் மிஸ்டை தடவுங்கள். இப்போது நாம் பார்க்க இருக்கும் முதல் முறை வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு, இரண்டாவது முறை எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு ஆகும்.
முறை-1:
இதனை செய்வதற்கு உங்களுக்கு சிறிதளவு சன்ஸ்கிரீன் மற்றும் ஹார்டு ஃபேஸ் ஸ்பான்ஜ் தேவை. ஹார்டு ஃபேஸ் ஸ்பான்ஜ் முகத்தில் உள்ள பொருட்களை எடுக்காமல் நமக்கு வேண்டியதை தடவி கொள்ளலாம். சன்ஸ்கிரீன் தடவ வேண்டிய நேரம் வரும்போது ஆங்காங்கே முகத்தில் சன்ஸ்கிரீனை புள்ளி புள்ளியாக பரப்பி கொள்ளுங்கள். இப்போது பொருமையாக ஹார்டு ஃபேஸ் ஸ்பான்ஜ் கொண்டு கிரீமை தடவி கொள்ளலாம். இதனை சுலபமான முறையில் செய்து விடலாம்.
முறை-2:
முறை ஒன்றை காட்டிலும் இது சுலபமானது. ஆனால் அதிகப்படியான வறண்ட சருமம் கொண்டவர்கள் இதனை தவிர்க்கவும். இதனை செய்வதற்கு ஷிறிதி 30 கொண்ட பவுடர் காம்பாக்ட் தேவை. ஒவ்வொரு 2 – 3 மணி நேரத்திற்கு ஒரு முறை உங்களை புத்துணர்ச்சி செய்து கொள்ளவும், சன்ஸ்கிரீன் தடவவும் இந்த பவுடர் காம்பாக்டை பயன்படுத்தி கொள்ளுங்கள். மேக் அப் கலையாயல் சன்ஸ்கிரீனை தடவி கொள்ளுங்கள்.

ரத்தசோகையை போக்குவதற்கு மருந்து, மாத்திரைகள் உட்கொண்டாலும் சத்துணவுகளை சாப்பிடுவதே சிறந்தது. ரத்தசோகைக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும் உணவுகளில் ‘முட்டை முருங்கை கீரை ஆம்லெட்’ குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பெண்களும், சிறுவர்- சிறுமியர்களும் ரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அதிக சோர்வு, உற்சாகமின்மை, எதிலும் கவனமற்றபோக்கு போன்றவை தோன்றும். ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது அன்றாட வேலைகளைகூட செய்யமுடியாமல் தடுமாறிப்போகிறார்கள். அவர்களது உடலில் போதுமான அளவு சத்துக்கள் இல்லாததால் பல்வேறு நோய்கள் தாக்கும் சூழ்நிலைகளும் உருவாகிறது. ரத்தசோகையை போக்குவதற்கு மருந்து, மாத்திரைகள் உட்கொண்டாலும் சத்துணவுகளை சாப்பிடுவதே சிறந்தது. ரத்தசோகைக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும் உணவுகளில் ‘முட்டை முருங்கை இலை ஆம்லெட்’ குறிப்பிடத்தக்கது. அதனை தயார்செய்து சுவையுங்கள்.
தேவையான பொருட்கள்
முட்டை - 3
முருங்கை கீரை - 1 கைப்பிடி
பால் - 2 மேஜைகரண்டி
பெரிய வெங்காயம் - 1
ப.மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 3 மேஜைகரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள், மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
பாலில் முட்டையை உடைத்து ஊற்றி நுரைவரும் அளவுக்கு நன்றாக அடித்து கலக்குங்கள்.
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போன்றவைகளை சிறிதாக நறுக்குங்கள்.
நறுக்கிய பொருட்களோடு தேங்காய் துருவல், சீரகம் போன்றவைகளை சேர்த்து மிக்சியில் போட்டு அரையுங்கள்.
அரைத்த மசாலாவில் முருங்கை இலை, மசாலா தூள் சேருங்கள். அத்துடன் மீதமிருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து மீண்டும் லேசாக மிக்சியில் ஓடவிடுங்கள். அதில் முட்டை கூழையும், உப்பையும் சேர்த்து நன்றாக கலக்குங்கள்.

*தோசைக் கல்லை சூடாக்கி கலவையை ஊற்றி ஆம்லெட்டாக சுட்டு சுவையுங்கள்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உறவினர்களோடும், பள்ளி நண்பர்களோடும், தெரியாத நபர்களோடும் உணவு சாப்பிடும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். அவை என்னென்ன? என்பதை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்வோம்.
நம் வீட்டில் பெற்றோருடன் சாப்பிடுவதற்கும், வெளி இடங்களில் பலர் முன்னிலையில் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நம் வீட்டில் ஆடி-ஓடி, உருண்டு-புரண்டு உணவு சாப்பிட்டாலும் அதில் தவறில்லை. ஆனால் வெளி இடங்களில், அதுவும் பலர் முன்னிலையில் உணவு சாப்பிட ஒரு வரைமுறை இருக்கிறது. அதைதான் ‘டேபிள் மேனர்ஸ்’ என்கிறார்கள். உறவினர்களோடும், பள்ளி நண்பர்களோடும், தெரியாத நபர்களோடும் உணவு சாப்பிடும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். அவை என்னென்ன? என்பதை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்வோம்.
உணவு மேஜைக்கு சுத்தத்தோடு வரவேண்டும்
டேபிள் மேனர்ஸின் முதல் விதியே சுத்தம் பற்றியதுதான். நமக்கான ‘உணவு அழைப்பு’ வரும்போது, கை-கால்களை சுத்தமாக கழுவுவதோடு, முகத்தையும் கழுவி வரவேண்டும். சாப்பிடும் உணவிற்கும், உணவு சமைத்தவருக்கும் நாம் அளிக்கும் மரியாதையாக இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒற்றுமையாக துணி விரிப்பை விரியுங்கள்
இது மிகவும் முக்கியமான பழக்கம். உறவினர் வீட்டு உணவு விருந்தில் இருப்பதாக நினைத்து கொள்ளுங்கள். 15 நபர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் நிலை வந்தால், விருந்து ஏற்பாட்டாளர் இருக்கையில் அமர்ந்து, துணி விரிப்பை விரிக்கும் வரை காத்திருங்கள். அவருக்கு பிறகுதான், நாம் நம் மடியில் துணி விரிப்பை விரித்து சாப்பிட தயாராக வேண்டும். இது விருந்து ஏற்பாட்டாளருக்கு நாம் வழங்கும் மரியாதை.
வாய் திறந்து உணவை மெல்லக்கூடாது
நம் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் பொது இடத்திலும், விருந்து நிகழ்ச்சியிலும் அடுத் தவர் முன்னிலையில் வாயை திறந்து மெல்லக்கூடாது. அது அடுத்தவர்களை அவமரியாதை செய்வதுபோல கணக்கிடப்படும்.
பிறர் பேசுவதை இடைமறித்து பேசாதீர்கள்
‘டைனிங் டேபிள்’ விருந்தில் பலருடன் சாப்பிடும்போது, சில சமயங்களில் பேச வேண்டிவரும். அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், அடுத்தவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து பிறகு பேசுங்கள். ஏனெனில் டேபிள் மேனர்ஸில், பிறர் பேச்சை இடைமறித்து பேசு வது, அநாகரிகமாக பார்க்கப்படும். அதனால்தான், காத்திருந்து பேசும்படி கூறுகிறோம்.
வேண்டிய உணவை கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்
உங்களுக்கு பிடித்த உணவு பலகாரம் ஒன்று, நீங்கள் அமர்ந்து உண்ணும் இடத்திற்கு வெகு தொலைவில் இருந்தால், பக்கத்தில் இருப்பவர்களிடம் அதை எடுக்க சொல்லி சாப்பிடவேண்டும். எல்லோர் முன்னிலையிலும், எழுந்து சென்று எடுத்து வந்து சாப்பிடுவது தவறான பழக்கமே.
சாப்பிட்டப்பின் துணி விரிப்பை நாற்காலியில் வைக்கவேண்டும்
சாப்பிடுவதற்கு முன்பு நம் மடியில் விரித்த துணி விரிப்பை, சாப்பிட்டு முடித்த பிறகு நாம் அமர்ந்திருந்த நாற்காலியில்தான் போடவேண்டும். சாப்பாட்டு தட்டிலும், உணவு மேஜையிலும் துணி விரிப்பை போடுவது தவறு.
நாற்காலியை பின்னால் இழுத்து போடுங்கள்
சாப்பிட்டு முடித்தபின், கை கழுவ தயாராகிவிட்டால், உங்கள் நாற்காலியை பின்னால் நகர்த்தி, எழுந்திருங்கள். அப்போதுதான், நீங்கள் சாப்பிட்டு முடித்தீர்கள் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும்.
சாப்பிட்ட தட்டை நாமே எடுக்கவேண்டும்
இதுதான் முக்கியமான பழக்கம். ஏனெனில் நாம் சாப்பிட்ட தட்டை நாமே எடுத்து செல்லும் பண்பை குழந்தைகளிடம் வளர்ப்பது நல்லது. ஒரு சில மேலை நாடுகளில், குழந்தைகளையே சாப்பாட்டு தட்டை எடுத்து செல்ல சொல்கிறார்கள். ஒரு சில நாடுகளில் சாப்பிட்ட தட்டை குழந்தைகளே கழுவி வைக்கிறார்கள். அதனால் நம் குழந்தைகளிடம், தட்டை கழுவும் இடத்தில் கொண்டு போய் போடும் பழக்கத்தையாவது வளர்க்கவேண்டும்.
இவை டேபிள் மேனர்ஸின் ஒருசில பண்புகள்தான். இதுபோக நிறைய பண்புகள் இருக்கின்றன.
எப்படி ஸ்பூனை உபயோகிப்பது?, இறைச்சி உணவுகளை கூர்மையான கத்தி கொண்டு சாப்பிடுவது எப்படி?, விதவிதமான அளவுகளில் இருக்கும் ஸ்பூன்களை எது, எதற்கு பயன்படுத்தவேண்டும், ஸ்பூனில் சிந்தாமல் சாப்பிடுவது எப்படி?, நூடுல்ஸ் சாப்பிடும் முறை போன்றவற்றை பின்வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம்.

தமிழ்நாடு முழுவதும் புறநகர் பகுதிகளில் 25 ஆயிரம் ரூபாய், 35 ஆயிரம் ரூபாய் என மனைகள் கூறு போடப்பட்டு, அங்கீகாரம் பெற்ற மனை என்ற பெயரில் விற்கப்படுகின்றன. இப்படி விற்கப்படும் மனைகளில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் புறநகர் பகுதிகளில் 25 ஆயிரம் ரூபாய், 35 ஆயிரம் ரூபாய் என மனைகள் கூறு போடப்பட்டு, அங்கீகாரம் பெற்ற மனை என்ற பெயரில் விற்கப்படுகின்றன. அதுவும் 400 சதுர அடி, 500 சதுர அடிகளில் மனைகள் விற்கப்படுகின்றன. இப்படி விற்கப்படும் மனைகளில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் அங்கீகாரம். அதாவது அப்ரூவல் அல்லது அங்கீகாரம் பெற்ற மனை எனக் குறிப்பிடுவார்கள். இது பெரும்பாலும் பஞ்சாயத்து அங்கீகாரமாகவே இருக்கும். சென்னை மற்றும் சென்னையை ஒட்டிய காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதிகள் என்றால் சி.எம்.டி.ஏ. எனப்படும் பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் அங்கீகாரமாகவும், பிற தமிழகப் பகுதிகள் என்றால் டி.டீ.சி.பி. (நகர ஊரமைப்பு இயக்ககம்) அங்கீகாரமாகவும் இருக்க வேண்டும். பிற அங்கீகாரம் என்றால் பிற்காலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
இன்னொன்று 400 சதுர அடி, 500 சதுர அடியில் வாங்கப்படும் மனைகளில் வீடு கட்ட முடியுமா என்று பார்க்க வேண்டும். எப்போது ஒரு மனையில் வீடு கட்ட வேண்டும் என்றால் பக்கத்து மனைகளுக்கு இடையே இடம் விட வேண்டும். அப்படி இடம்விட்ட பிறகு எஞ்சிய மனை அளவில் வீடு கட்ட முடியுமா? அப்படிக் கட்டப்படும் வீட்டு வரைபடத்துக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பதையெல்லாம் தீர விசாரித்த பிறகே முடிவு எடுக்க வேண்டும். எனவே குறைந்த இடஅளவுள்ள மனைகளை வாங்கும்போது இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற புதிதாகக் காலி இடங்களையோ அல்லது விளை நிலங்களையோ மனைப் பிரிவுகளாகப் பிரிக்கும்போது மனைப் பிரிவுக்குள் சாலையைப் பிரிப்பார்கள். அப்படிப் பிரிக்கப்படும் சாலையின் அகலம் குறைந்தபட்சம் 23 அடி இருக்க வேண்டும். சில மனைப் பிரிவுகளில் 10 அடி, 8 அடி சாலை என்பதுபோல் லே அவுட் போட்டு விற்று விடவும் செய்கிறார்கள்.
சாலைக்காக மட்டுமல்ல கழிவு நீர் வடிகால்கள், தெரு விளக்குகள், பூங்கா, விளையாட்டு திடல், குடிநீர் தொட்டி போன்றவற்றை அமைக்கவும் இடம் ஒதுக்கிவிட்டுத்தான் லே அவுட் போட்டு மனைகளை விற்பனை செய்ய வேண்டும். நீங்கள் மனை வாங்கும்போது லேஅவுட்டில் இந்த விஷயங்கள் எல்லாம் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை சரி பார்த்துவிட்டு வாங்குவதே நல்லது. ஏனென்றால் மொத்த இடத்தில் சுமார் 30 சதவீத இடம் சாலை, பூங்கா அமைக்கவே போய்விடும் என்பதால் இதை கவனமாகப் பார்க்க வேண்டும். எனவே மனை வாங்கும்போது சாலையின் அகலம் மற்றும் மனையின் அளவைக் கவனிக்க மறந்துவிடாதீர்கள்.
இவற்றைவிட மிகவும் இன்னொரு முக்கிய விஷயம், பெரு நகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உள்பட்ட பகுதி என்றால் லே அவுட்டுக்கு அந்த அமைப்பின் அனுமதியும், டி.டீ.சி.பி.க்கு உட்பட்ட பகுதி என்றால் அந்த அமைப்பின் அனுமதியும் பெறப்பட்டுள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.

உணவுக்குழாயை சுற்றி இருக்கும் தன்னிச்சை தசைகள் வாயில் இருக்கும் உணவை விழுங்கியவுடன், உணவுக் கவளத்தின் பின்னிருந்து தசையை அழுத்தத் தொடங்குகின்றன.
உணவுக்குழாயை சுற்றி இருக்கும் தன்னிச்சை தசைகள் வாயில் இருக்கும் உணவை விழுங்கியவுடன், உணவுக் கவளத்தின் பின்னிருந்து தசையை அழுத்தத் தொடங்குகின்றன. இது ஒரு அலைபோல உருவாகி உணவு இரைப்பையைச் சென்றடையும் வரை தொடர்கிறது. இந்த அலைகளை ‘தசைச்சுருக்க அலைகள்’ என்று அழைக்கிறார்கள். நாம் விழுங்கிய உணவு அலையின் வேகத்தில் பயணிப்பதாலும் அல்லது அலையைவிட வேகமாகப் பயணிப்பதாலும், அந்த தசைச்சுருக்க அலை இரைப்பையை சென்றடைந்து விடுகிறது.
இடையே உணவு எங்கேனும் தேங்கி நின்றுவிட்டால், அதன் பின்னிருந்து இன்னொரு அலை புறப்பட்டு உணவை நகர்த்தி இரைப்பைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இந்த தசைச்சுருக்க அலையை மூளையின் அடித்தண்டு கட்டுப்படுத்துகிறது. உணவு நகர்ந்து விட்டதா, இல்லையா? என உணவுக் குழாயைச் சுற்றி இருக்கும் நரம்புகள் தொடர்ச்சியாக மூளைக்குத் தகவலை அனுப்பிக்கொண்டே இருக்கின்றன.
நாம் உண்ட உணவு இரைப்பையில் அமிலம், பிற நொதிகளுடன் கலந்து அரைக்கப்பட்டுக் கூழாக மாற்றப்படுகிறது. அதன் பின்னர் உணவுக் குழாயில் நடக்கும் தசைச்சுருக்கம் போன்ற, ஆனால் குறைந்த தொலைவு பயணிக்கிற தசைச்சுருக்க அலைகள் மூலம் சிறுகுடலுக்கு நகர்த்தப்படுகிறது. இது செரிமான மண்டலத்தில் மட்டும் அல்ல, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அமைப்பான நிணநீர் சுரப்பிகளில் இருந்து நிணநீர்க் குழாய்கள் சுற்றி இருக்கும் தசைகளின், தசைச்சுருக்க அலைகள் வழியாகவே உடலெங்கும் கடத்தப்படுகிறது. இந்த தசைச்சுருக்க அலை இருப்பதால்தான் விண்வெளியில், விண்வெளி வீரர்களால் உணவருந்த முடிகிறது. ஈர்ப்புவிசைதான் உணவை நகர்த்துகிறது என்றால் மனிதர்களால் விண்வெளியில் தாக்குப்பிடிக்கவே முடியாது.