என் மலர்
ஆரோக்கியம்
கானல் நீராகி, காணக்கிடைக்காத பொக்கிஷம்போல் மாறிக்கொண்டிருக்கும், மகிழ்ச்சியை மேம்படுத்துவது பற்றி நாம் இப்போது உரையாடுவோம்.
பேனாவை எடுத்துக்கொள்ளுங்கள். இன்று உங்களை சந்தோஷம் கொள்ளவைத்த பத்து சம்பவங்களை நினைவுபடுத்தி எழுதுங்கள். சரியான நேரத்தில் விழித்தது, மனைவியிடம் இருந்து முத்தம் பெற்றது, தேவையான அளவு உடற்பயிற்சி செய்தது, நண்பர்களின் அரட்டை, வாட்ஸ் -அப் மற்றும் பேஸ்புக்கில் பார்த்தது, படித்தது.. இப்படி எதுவானாலும் இருக்கலாம். உங்களுக்கு எவை சந்தோஷம் தந்திருந்தாலும், அவைகளில் பத்து விஷயங்களை எழுதுங்கள்.
எழுதிவிட்டீர்களா? சரி.. எவ்வளவு நேரத்தில் அந்த பத்து விஷயங்களை எழுதினீர்கள்? அந்த கால அளவையும் குறித்துக்கொள்ளுங்கள். பேப்பரையும், பேனாவையும் ஐந்து நிமிடங்கள் அப்படியே தள்ளிவைத்துவிட்டு, அடுத்த கேள்விக்கு விடை எழுத நீங்கள் தயாராகுங்கள்.
இன்று, மேலே எழுதிய அதே நேரத்திற்குள் நீங்கள் சந்தித்த பத்து எரிச்சல், வருத்தத்திற்குரிய விஷயங்களை எழுதுங்கள். வாஷ்பேஷினை திறந்தபோது தண்ணீர் வராததோ, செல்போனில் தேவையற்ற அழைப்பு வந்ததோ, இட்லிக்கு சட்னி ருசியில்லை என்று கோபப்பட்டதோ, குழந்தைகளை திட்டியதோ.. எதுவாகவும் இருக்கலாம். அவைகளில் பத்து எதிர்மறையான விஷயங்களை எழுதுங்கள்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். இரண்டு கேள்விகளில், எந்த கேள்விக்கு குறைந்த நேரத்தில் நீங்கள் விடை எழுதினீர்கள்?
முதல் கேள்விக்கு நீங்கள் வேகமாக பதில் எழுதியிருந்தால் நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் அல்லது அந்த வாழ்க்கை வாழ விரும்புகிறவர்கள் என்ற வரிசையில் நிற்கிறீர்கள். அதாவது உங்கள் மனதில் மகிழ்ச்சியான விஷயங்களே பதிந்துபோய் இருக்கின்றன.
இரண்டாவது கேள்விக்கு நீங்கள் விறுவிறுவென்று விரைவாக பதில் எழுதியிருந்தால், உங்கள் மனது முழுக்க காயங்களும், கசப்புகளும்தான் நிறைந்து கிடக்கின்றன. உங்களின் மகிழ்ச்சிக்கு அவை மாபெரும் தடையாக இருந்துகொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் உணரவேண்டும்.
மனம் ஒரு அழகான பாத்திரம். கோபதாபம், எரிச்சல், கவலைகளால் அந்த பாத்திரம் எப்போதும் நிரப்பப்பட்டிருந்தால், மகிழ்ச்சியை அங்கே வைக்க இடமிருக்காது. சோகங்கள், துக்கங்கள், எதிர்மறையான எண்ணங்கள் வெளியேற்றப்பட்டு, மனப்பாத்திரம் காலியாக இருந்தால்தான் மகிழ்ச்சியை நிரப்ப முடியும்.
உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கவேண்டும் என்றால், நீங்கள் செய்யும் செயலில் மனம் முழுமையாக ஈடுபடவேண்டும். உங்கள் மனம் எதில் முழுமையாக ஈடுபடுகிறதோ அதில் எல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.
உங்கள் குழந்தையிடம் காமெடி கதாபாத்திரம் நிறைந்த சித்திரக் கதை புத்தகம் ஒன்றை கொடுங்கள். உற்சாகமாக அதை பெற்று, படித்துக்கொண்டிருக்கும். அதை வாங்கிவிட்டு பள்ளிப்பாடப் புத்தகத்தை கொடுங்கள்; உடனே அதன் முகம் சோர்ந்துவிடும்.
உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுங்கள் என்றால் அதில் உற்சாகம் வந்துவிடும். அலுவலக வேலையை அதே உற்சாகத்துடன் உங்களால் செய்ய முடிவதில்லை. காரணம் என்ன, மன ஈடுபாடுதான்.
கதைப்புத்தகத்தில் ஈடுபாடு காட்டுவதுபோல் பாடப்புத்தகத்திலும் உங்கள் குழந்தை ஈடுபாடு காட்டத் தொடங்கிவிட்டால், அது பாடப்புத்தகத்தையும் உற்சாகமாக படிக்கத் தொடங்கிவிடும். அங்கே அது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக மாறிவிடும். நீங்கள் விளையாட்டில் காட்டும் ஈடுபாட்டை வேலையிலும் காட்டத்தொடங்கினால், உங்களது அலுவலக வேலையும் மகிழ்ச்சிக்குாியதாகிவிடும். அலுப்பு ஏற்படாது.
‘இதோ இந்த நிமிடம் உங்கள் கையில் இருக்கிறது. இதுதான் வாழ்க்கை’ என்பதை நம்புங்கள். இது ஒரு தத்துவார்த்தமான விஷயம். இதை நீங்கள் நம்பும்போது நேற்று நடந்த சோகங்களும், கவலைகளும் உங்கள் மனதில் இருந்து மறைந்துவிடும். நாளை என்கிற எதிர்காலத்தை பற்றிய பயமும் போய்விடும். அப்போது இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் மனநிலை உருவாகும்.
வாழ்க்கையில் சின்னச்சின்ன ஏமாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். அவைகளை பொருட்படுத்தாமல் புறக்கணித்துக்கொண்டு வாழ்ந்தால்தான் மகிழ்ச்சியை வரவேற்கும் வாய்ப்பு உருவாகும். காலையில் சரியான நேரத்துக்கு கிளம்பிவிட்டீர்கள். இரு சக்கர வாகனத்தில் ஏறுகிறீர்கள். அப்போது கிளம்பிச்சென்றால், பத்து நிமிடங்கள் முன்னதாகவே அலுவலகம் சென்றடைந்திட முடியும். ஆனால் போகிற வழியில் உங்கள் வாகனத்தின் டயர் பஞ்சர் ஆகிவிட்டால் என்ன செய்வது? எப்படியும் தாமதம்தான். அந்த நேரத்தில் டென்ஷன் ஆகாமல் உங்களுக்கு பிடித்த ஜாலியான பாட்டு ஒன்றை மனதுக்குள் முணுமுணுத்தபடி, அடுத்து ஆகவேண்டியதை பாருங்கள்.
வண்டியை சபித்தோ, நேரத்தை சபித்தோ எந்த பலனும் இல்லை. பஞ்சர் ஆனது ஆனதுதான். திரும்பவும் பஞ்சர் ஒட்டித்தான் ஆகவேண்டும். அதை நினைத்து வேதனைப்பட்டு என்ன நடந்துவிடப்போகிறது? அந்த இடரைத் தவிர்த்து மனதை இயல்பாக்க, பாட்டுப்பாடி மனதை உற்சாகப்படுத்துங்கள். வீடு மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு மகிழ்ச்சியுடையதாக மாறும். வீடு மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால், கணவன்-மனைவி இருவரும் அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கிக்கொள்ள வேண்டும்.

‘டீன் ஏஜ்’க்குள் பெண்கள் அடியெடுத்து வைக்கும்போது, அவர்களுக்கு முகப்பரு ஏற்படுவதுண்டு. இது ‘டீன் ஏஜின்’ அடையாளமாக கணிக்கப்படுகிறது.
‘டீன் ஏஜ்’க்குள் பெண்கள் அடியெடுத்து வைக்கும்போது, அவர்களுக்கு முகப்பரு ஏற்படுவதுண்டு. இது ‘டீன் ஏஜின்’ அடையாளமாக கணிக்கப்படுகிறது. அவர்களது உடலில் உள்ள ‘ஆன்ட்ரோஜன்’ ஹார்மோன்கள் ‘செபேஷியஸ்’ சுரப்பிகளை தூண்டி பெரிதாக்கும். அப்போது அவைகளில் இருந்து ‘செபம்’ என்ற எண்ணெய் தன்மை கொண்ட பொருள் உற்பத்தியாகிறது.
அதுதான் முகப்பரு தோன்ற காரணம். முகப்பருவை கிள்ளிவிட்டுவிடக்கூடாது. ‘டவல்’ பயன்படுத்தி அழுத்தி துடைக்கவும் கூடாது. வீரியம் அதிகமுள்ள சோப்புகளை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
‘பேஸ்வாஷ்’ பயன்படுத்தி இளம் சுடுநீரால் முகத்தை கழுவினாலே போதும். குறிப்பிட்ட பருவத்தை கடந்ததும் முகப்பரு மறைந்துவிடும். அப்படி மறையாமல் இருந்தால் மட்டும் சருமநோய் நிபுணரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
கொசம்பரி என்பது பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்ந்த சுவை மிகுந்த சாலட் ஆகும். நிறைய கொசம்பரி வகைகள் இருந்தாலும் இந்த ஸ்வீட் கார்ன் கொசம்பரி அற்புதமான சுவையை தருவதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களை நமக்கு தரக் கூடியது.
தேவையான பொருட்கள்
ஸ்வீட் கார்ன் - 1 கப்
எண்ணெய் - தாளிப்பதற்கு
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய் - 1
மாதுளை - 1/4 கப்
லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் -1/2 கப்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஸ்வீட் கார்ன், உப்பு, மாதுளை, தேங்காய் துருவல் என எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்துஅதில் நுனிக்கிய மிளகுத்தூள், லெமன் ஜூஸை மேலே தூவி விட வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்.
இன்னும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொத்தமல்லி இலைகளை அதன் மேல் தூவி பரிமாறுங்கள்.
ஸ்வீட் கார்ன் - 1 கப்
எண்ணெய் - தாளிப்பதற்கு
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய் - 1
மாதுளை - 1/4 கப்
லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் -1/2 கப்
உப்பு - சுவைக்கேற்ப
மிளகு (நுனிக்கியது) - 1 டீஸ்பூன்

செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஸ்வீட் கார்ன், உப்பு, மாதுளை, தேங்காய் துருவல் என எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்துஅதில் நுனிக்கிய மிளகுத்தூள், லெமன் ஜூஸை மேலே தூவி விட வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்.
இன்னும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொத்தமல்லி இலைகளை அதன் மேல் தூவி பரிமாறுங்கள்.
சுவையான ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி ரெடி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் பெரும்பாலான கர்ப்பிணி பெண்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
கர்ப்பகாலத்தில் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் பெரும்பாலான கர்ப்பிணி பெண்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. பொதுவாகவே கர்ப்பகாலத்தில் பெண்கள் மிகுந்த கவனமுடன் செயல்படுவார்கள். எனினும் தற்போதைய சூழ்நிலையில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமானது. சமூக விலகலை கடைப்பிடிப்பதும், வீட்டிலேயே தங்கி இருப்பதும் பாதுகாப்பானது.
கொரோனா ஏற்படுத்தி இருக்கும் அச்சம் காரணமாக பெரும்பாலானோர் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லும் வழக்கத்தை கைவிட்டுவிட்டார்கள். எல்லோருமே சமூக சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதற்கு பழகிக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும் மற்றவர்களைவிட கர்ப்பிணி பெண்களின் மனநிலை மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகும். ஏனெனில் இந்த நோய் தொற்று தொடர்பான பல்வேறு சிந்தனைகள் மனதை வருத்தும். வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் நேர்ந்துவிடக்கூடாது என்ற கவலை மனதை வாட்டி எடுக்கும்.
“இந்த காலகட்டத்தில் கர்ப்பிணி பெண்களின் எண்ண ஓட்டங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும். உங்களையும், வயிற்றில் வளரும் கருவையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக மன ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். எந்தவொரு சூழலிலும் மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியமானது. இல்லாவிட்டால் கர்ப்ப காலம் கடினமாக இருக்கும். நெரிசலான இடங்களில் இருந்து விலகி உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டிலேயே அதிகமான நேரம் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். சுகாதாரத்தையும் முறையாக கடைப்பிடித்து வாருங்கள். கொரோனாவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது கர்ப்ப காலம் வித்தியாசமாகவும், கடினமாகவும்தான் இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் பபிதா. சில வழிமுறைகளை பின்பற்றுவதற்கும் பரிந்துரை செய்கிறார்.
தினசரி கால அட்டவணை ஒன்றை உருவாக்குங்கள். அதில் உணவு பழக்கம், தியானம், யோகா, சரும பராமரிப்பு, போதுமான தூக்கம், வழக்கமான பரிசோதனை உள்ளிட்ட பட்டியலை தயார் செய்யுங்கள். அவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுத்துங்கள்.
கர்ப்ப காலத்தில் சரியான நேரத்தில் பரிசோதனை செய்வது தாய்க்கும், சேய்க்கும் மிகவும் முக்கியமானது. ஆன்லைன் மருத்துவ சேவை மூலம் மகளிர் மருத்துவ நிபுணருடன் தொடர்பில் இருங்கள். பிரசவ நேரம் நெருங்கிவிட்டால் பிரசவம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிந்தைய தேவைகள் பற்றி தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். உடலையும், மனதையும் நெகிழ்வாக வைத்திருங்கள்.
கர்ப்ப காலத்தில் சரும பராமரிப்பு என்பது தாய்மையின் முக்கிய அங்கமாகும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருங்கள். அவ்வப்போது மசாஜ் செய்து வாருங்கள். அதன் மூலம் கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளும் சரும பிரச்சினைகளை தவிர்க்கலாம். மசாஜ் செய்வதற்கு பொருத்தமான எண்ணெய்யைப் பயன்படுத்துங்கள். அது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்யும். எதை உபயோகித்தாலும் அவை ரசாயன கலப்பில்லாத மூலிகை தயாரிப்புகளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
தினமும் சுவாச பயிற்சி மேற்கொள்ளுங்கள். அது தேவையற்ற பதற்றத்தை போக்கி மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். இசைக்கருவிகள் வாசிக்கலாம். மனதிற்கு பிடித்தமான பாடல்களை கேட்டு ரசிக்கலாம். புதிய மொழியை கற்றுக்கொள்ளலாம்.
தாய்ப்பால் கொடுப்பதற்காக மார்பகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பும், பின்பும் மார்பகத்தை சுத்தம் செய்யுங்கள். குழந்தையின் கைகளையும் அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.
கொரோனா வைரஸ் பற்றிய அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக கொரோனா பற்றிய எதிர்மறையான செய்திகளை படிக்காதீர்கள். அது தேவையற்ற பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்திவிடும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். அது மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.

கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தி இருக்கும் அச்சுறுத்தல் கல்வி திட்டத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளிப்பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் வித்திட்டிருக்கிறது.
கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தி இருக்கும் அச்சுறுத்தல் கல்வி திட்டத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளிப்பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் வித்திட்டிருக்கிறது. பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் நிறைய பள்ளிக்கூடங்கள் ஆன்லைன் வழியாக பாடம் நடத்தும் நடைமுறையை பின்பற்ற தொடங்கி இருக்கின்றன. வகுப்பறையில் நேருக்கு நேர் மாணவர்களை அமர்த்தி பாடங்களை விளக்கி புரியவைப்பதற்கு பதிலாக வீடியோக்கள் வழியாக வீடுகளில் அமர்ந்திருந்தே கல்வி போதிக்கும் நடைமுறையை கையாளுகிறார்கள். இத்தகைய இணையவழி அணுகுமுறை மாணவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும், கற்றல் வழியிலும் புதிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.
“மாணவர்கள் அணுகக்கூடிய டிஜிட்டல் வழி கற்பித்தல் முறை கிராமப்புற மாணவர்கள் மத்தியில் சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். டிஜிட்டல் நுட்பங்களை கையாள்வதற்கு சிறுவர் களுக்கு கிடைக்கும் சலுகை பெண் குழந்தைகளுக்கு கிடைத்திருக்காது” என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
“இந்தியாவில் தொழில்நுட்பங்களை கையாளும் விஷயத்தில் பெரும்பாலும் பெண் கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்வி ஆராய்ச்சி அதிகாரி ரியானான் மூர் கூறுகிறார். இதே கருத்தை மூத்த கல்வி ஆராய்ச்சியாளர் லிடியா மார்ஷலும் முன்வைக்கிறார். மேலும் அவர்கள் இருவரும் கூறுகையில், “இந்தியா முழுவதும் வீடு மற்றும் இருப்பிடத்தை பொறுத்து டிஜிட்டல் வழி அணுகுமுறை கணிசமாக வேறுபடுகிறது. பாலின சமத்துவமின்மையும் நிலவுகிறது. சிறுவர்கள் தங்கள் சகமாணவிகளை விட கணினி, ஸ்மார்ட்போன் போன்ற பிற தொழில்நுட்பங்கள் வழியாக இணையத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தியாவில் கிராமப்புறங்களில் ஐந்தில் நான்கு பேர் இணையதளத்தை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஐந்தில் மூன்று பேர் கம்ப்யூட்டர் பயன்படுத்தாத நிலையில் இருக்கிறார்கள். வசதியானவர்கள் அல்லது நகர்ப்புற வீடுகளில் வசிக்கும் சிறுவர் சிறுமிகளை விட கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழ்மையான சிறுவர்-சிறுமியர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த அறிவு குறைவாகவே இருக்கிறது” என்கிறார்கள்.
தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.கோவிந்தா கூறுகையில், “கொரோனாவுக்கு பிறகு பள்ளிப்படிப்பு மாறப்போகிறது. டிஜிட்டல் தலையீடுகள் காரணமாக, எதிர்காலத்தில் கிராமப்புறங்களில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழில்நுட்பம் பணக்காரர்களுக்கோ அல்லது நடுத்தர வர்க்கத்துக்கோ வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம். வகுப்பில் ஒரு ஆசிரியரின் நேரடி பயிற்சிக்கு மாற்றாக வேறு எதுவும் இருக்க முடியாது. நேருக்கு நேர் பாடம் கற்பிக்கும் பயிற்சிக்கு மாற்றுமுறையை டிஜிட்டல் நுட்பத்தால் தரமுடியாது” என்கிறார்.
டெல்லி பல்கலைக்கழக கல்வியாளர் பேராசிரியர் அமிதா ராம்பால், “ஊடரங்குக்கு பிறகு சுமார் 20 சதவீத பெண் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கூடம் செல்லமாட்டார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெரும் பாலான குழந்தைகள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாவார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் தவறான நடைமுறையும் உருவாக வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்.

நமது உடலுக்குள்ளேயே இயற்கையாகவே ஒரு மருத்துவர் உருவாகி இருக்கிறார். அவர் எப்போதும், அதாவது 24 மணி நேரமும் நமது உடல் இயக்கத்தை கண்காணித்து கொண்டே இருக்கிறார்.
நமது உடலுக்குள்ளேயே இயற்கையாகவே ஒரு மருத்துவர் உருவாகி இருக்கிறார். அவர் எப்போதும், அதாவது 24 மணி நேரமும் நமது உடல் இயக்கத்தை கண்காணித்து கொண்டே இருக்கிறார். நாம் நமது உடலுக்கு செய்யும் நல்லது, பொல்லாததுகளை உற்று கவனிக்கிறார். எங்கே கோளாறு ஏற்பட்டாலும் அடுத்த கணமே, அந்த இடத்துக்குத் தன் படைபட்டாளத்தோடு கிளம்பி விடுகிறார். உடனடியாக அந்த கோளாறை சரி செய்வதற்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்த நடவடிக்கையை எடுத்து விடுகிறார்.
தானாகவே நம்முடைய உடலியக்கம் இடையறாது நடப்பதற்கு, அவரால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார். அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர் செய்துகொண்டிருக்கும் நலமாக்கல் முயற்சிகள் எதையும் தடுக்காதீர்கள், குழப்பாதீர்கள். முடிந்தவரை உடலுக்குள் இருக்கும் மருத்துவர் செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.
நம்முடைய உடலானது நோயில் இருந்து விடுபட்டு நலமடைவதற்குச் செய்யும் முயற்சிகள் எவை என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய சமூகப் பழக்கவழக்கம், வேலை, ஆர்வக்கோளாறு, நம் உடல் மீதுள்ள அதீத நம்பிக்கை போன்றவற்றால் உடலுக்கு ஒவ்வாத பல செயல்களைப் பல நேரம் நாம் செய்கிறோம். நாம் மனம் உவந்து செய்கிற காரியங்களை, உடலால் தடுக்க முடியாது. சில நேரம் தடுக்க முயற்சிக்கும்.
புகைக்க பழக ஆரம்பிக்கும்போது இருமல், நெஞ்செரிச்சல், சளி கட்டுதல் போன்றவை வரும். மது அருந்தப் பழகும்போது உமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, உணவுப் பாதையில் எரிச்சல், தலைவலி, உடல்சூடு, நீர்ச்சத்து குறைவதால் உடல் உலர்தல் என்று பல வழிகளில் நம்முடன் உடல் பேசிப் பார்க்கிறது, மன்றாடுகிறது. ஆனால், விடாமல் பழகி உடல் இயக்கத்தின் ஆதாரங்களான கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், நரம்பு மண்டலம், எல்லாவற்றையும் பல நேரம் பாழ்படுத்தி விடுகிறோம். இது ஒரு பக்கம் என்றால், கெட்டுப்போன உணவு உடலுக்குள் விஷமாக மாறி உடல்நலத்துக்கு நிரந்தரமாகத் தீமை செய்துவிடக் கூடாதென்று உடலின் மருத்துவர் உடனடியாக நடவடிக்கையில் இறங்குவார்.
அதிகமான நீர்ச்சத்தைச் சிறுகுடல், பெருங்குடலுக்கு அனுப்புகிறார். கெட்டுப்போன அந்த விஷத்தைக் குடல் உறிஞ்சி விடும் முன்பு எச்சரிக்கை செய்கிறார். வயிற்றில் வலியை ஏற்படுத்துகிறார். வயிறு கடமுடா என்று இரைகிறது. காலையிலேயே எழுப்பி விடுகிறது. இப்படி உடலை மாய்ந்து மாய்ந்து காப்பாற்றுவதுதான் உடலுக்குள் இருக்கும் அந்த மருத்துவரின் பிரதான வேலை ஆகும்.

கர்ப்பகாலத்திலோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ உடல்நலக்குறைபாடுகளால் தாய்மார்கள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கர்ப்பகாலத்திலோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ உடல்நலக்குறைபாடுகளால் தாய்மார்கள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிரசவத்தை தொடர்ந்து கடுமையான ரத்தப்போக்கு அல்லது தொற்றுநோய்களால் தாய்மார்கள் இறப்பது அதிகரிக்கிறது என்று யுனிசெப் அமைப்பு கூறுகிறது.
கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு போன்றவை காரணமாகவும் இறப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் தாய்மார்களின் இறப்பு விகிதம் 2015 முதல் 2017-ம் ஆண்டு காலகட்டத்தில் 122 ஆக இருந்தது. பின்பு 113 ஆக குறைந்துள்ளது. தாய்வழி இறப்பு விகிதம் என்பது பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில் எத்தனை தாய்மார்கள் இறக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக்கொண்டு கணக்கிடப்படுகிறது. சராசரியாக இந்தியாவில் தாய்வழி இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் வட மாநிலங்களில் இறப்பு விகிதம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தாய்வழி இறப்பு விகிதம் 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் 141 ஆக இருந்திருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இறப்பு விகிதம் 159 ஆக உயர்ந்திருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இறப்பு விகிதம் 89-ல் இருந்து 99 ஆக உயர்ந்திருக்கிறது. அதுபோல் பஞ்சாப் மாநிலத்தில் 122-ல் இருந்து 129 ஆக வும், மேற்கு வங்காளத்தில் 94-ல் இருந்து 98 ஆகவும் அதிகரித்திருக்கிறது. அசாம் மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரு லட்சம் பேரில் 229 பேர் மரணத்தை தழுவும் நிலை இருக்கிறது. குறைந்தபட்சமாக கேரளாவில் இறப்பு விகிதம் 42 ஆக இருக்கிறது. இந்தியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்பின்படி தாய்வழி இறப்பு விகிதம் 7.4 சதவீதம் குறைந்திருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தாய்வழி இறப்பை தொடர்ந்து குறைத்து வருகின்றன.

சிலர் வெளியில் பயணம் மேற்கொள்ளும் போது தங்களுடைய ஆவணங்களை தொலைத்து விட நேரிடலாம். தொலைத்த ஆவணங்களை திரும்பப்பெறுவது எப்படி என்று அறிந்து கொள்ளலாம். இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டு நண்பர்களுடன் பகிரவும்.

1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..? பாலிசியை விநியோகம் செய்த கிளையை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல். எவ்வளவு கட்டணம்? ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.
2.மதிப்பெண் பட்டியல்!
பள்ளி மற்றும் கல்லூரி) யாரை அணுகுவது..? பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது. எவ்வளவு கட்டணம்? உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505. கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள். நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
3.ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை எவ்வளவு கட்டணம்? புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும். நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
4.டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண். எவ்வளவு கட்டணம்? கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்). கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம். நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.
5.பான் கார்டு!யாரை அணுகுவது?

6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது? சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள். நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
7.கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20ரூபாய். கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும். நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடம் இருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
8.டெபிட் கார்டு!யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? கணக்குத் தொடர்பான விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ரூ.100. கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள். நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
9 மனைப் பட்டா! யாரை அணுகுவது..?
வட்டாட்சியர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.? நகல் பட்டா கோரும் விண்ணப்பம். எவ்வளவு கட்டணம்? ரூ.20. கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும். நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
10.பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம். எவ்வளவு கட்டணம்? ரூ.4,000. கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும். நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
11.கிரெடிட் கார்டு!
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். யாரை அணுகுவது? நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்). கால வரையறை: 15 வேலை நாட்கள்.
நடைமுறை : தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்சான்று காண்பித்து வாங்க வேண்டும். இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டு நண்பர்களுடன் பகிரவும். நன்றி.

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்? அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய். கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள். நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது? சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள். நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
7.கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20ரூபாய். கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும். நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடம் இருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
8.டெபிட் கார்டு!யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? கணக்குத் தொடர்பான விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ரூ.100. கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள். நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
9 மனைப் பட்டா! யாரை அணுகுவது..?
வட்டாட்சியர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.? நகல் பட்டா கோரும் விண்ணப்பம். எவ்வளவு கட்டணம்? ரூ.20. கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும். நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
10.பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம். எவ்வளவு கட்டணம்? ரூ.4,000. கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும். நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
11.கிரெடிட் கார்டு!
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். யாரை அணுகுவது? நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்). கால வரையறை: 15 வேலை நாட்கள்.
நடைமுறை : தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்சான்று காண்பித்து வாங்க வேண்டும். இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டு நண்பர்களுடன் பகிரவும். நன்றி.
ஸ்வீட் கார்னில் வைட்டமின் ஏ, பி, சி, இ இருக்கிறது. அதேபோல மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் பொட்டாசியம் இருக்கிறது. பாலக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்:
பாலக் கீரை - ஒரு கட்டு
ஸ்வீட் கார்ன் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு துண்டு
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
பிரெட் க்ரம்ப்ஸ் - 5 டீஸ்பூன்

செய்முறை:
ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கு நன்றாக வேகவைத்து மசித்துகொள்ளவும்.
பாலக்கீரையை சுத்தம் செய்து 5 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.
வேக வைத்த சோளத்தை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த சோளத்துடன் பாலக்கீரையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
பின்னர், பிரெட் க்ரம்ஸ் சேர்த்து பிசைந்து பிரிட்ஜில் சுமார் 20 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு, சிறிது உருண்டைகளாக எடுத்து வடைப்போல் தட்டிக் கொண்டு மீண்டும் பிரிட்ஜில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், தட்டி வைத்த கலவையை போட்டு வறுத்து எடுக்கவும்.
பாலக் கீரை - ஒரு கட்டு
ஸ்வீட் கார்ன் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு துண்டு
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
பிரெட் க்ரம்ப்ஸ் - 5 டீஸ்பூன்
எண்ணெய் உப்பு

செய்முறை:
ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கு நன்றாக வேகவைத்து மசித்துகொள்ளவும்.
பாலக்கீரையை சுத்தம் செய்து 5 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.
வேக வைத்த சோளத்தை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த சோளத்துடன் பாலக்கீரையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
பின்னர், பிரெட் க்ரம்ஸ் சேர்த்து பிசைந்து பிரிட்ஜில் சுமார் 20 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு, சிறிது உருண்டைகளாக எடுத்து வடைப்போல் தட்டிக் கொண்டு மீண்டும் பிரிட்ஜில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், தட்டி வைத்த கலவையை போட்டு வறுத்து எடுக்கவும்.
சுவையான ஸ்வீட் கார்ன் பாலக்கீரை கட்லெட் ரெடி..!.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கால்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாக்டீரியாக்கள் படிந்து எளிதில் நோய் தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும். சில வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு கால்களை சுத்தம் செய்வது குறித்து பார்ப்போம்.
முகம் கழுவும்போதோ, குளிக்கும்போதோ நிறைய பேர் கால்களை நன்றாக கழுவமாட்டார்கள். கால்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாக்டீரியாக்கள் படிந்து எளிதில் நோய் தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும். கால்களில் படியும் வியர்வையை போக்குவதற்காகவும் நன்றாக கழுவ வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் துர்நாற்றம் வீசும். சில வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கால்களை சுத்தம் செய்வது குறித்து பார்ப்போம்.
* கால்களை சுத்தம் செய்வதற்கு பேக்கிங் சோடாவை உபயோகிக்கலாம். அது பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துவதோடு வியர்வையின் பி.எச். அளவையும் சீராக பராமரிக்கும் தன்மை கொண்டது. ஒரு லிட்டர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து அந்த நீரில் கால்களை கால் மணி நேரம் முக்கிவைக்க வேண்டும். இரவு பொழுதில் ஒருவாரம் தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் கால்கள் பளிச்சிடும்.
* சூடான நீரில் தேயிலை அல்லது டீ பேக்கை போட்டு ஊறவைக்கவும். சூடு குறைந்ததும் அந்த நீரில் அரை மணி நேரம் கால்களை ஊறவைக்கலாம். கால்கள் சுத்தமாகுவதோடு துர்நாற்றமும் நீங்கிவிடும்.
* 8 கப் சூடான நீரில் ஒன்றரை டீஸ்பூன் வினிகரை கலக்கவும். சூடு குறைந்ததும் கால்களை அதில் கால் மணி நேரம் நனைத்துவிட்டு கழுவிவிடலாம். வினிகர் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது.
* வெதுவெதுப்பான நீரில் சில துளி லாவண்டர் எண்ணெய் கலந்து கால்களை சிறிது நேரம் நனைக்கலாம். காலையும், மாலையும் இவ்வாறு செய்து வருவது கால்களுக்கு நன்மை பயக்கும்.
* கால்களில் படிந்திருக்கும் ஈரப்பதத்தை போக்குவதற்கு முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரையும் உபயோகிக்கலாம்.

குழந்தைகளின் சுவாசப்பாதையில் நாசிப் பகுதியை பிரிக்கும் குருத்து எலும்புகள் வலுவில்லாமல் இருந்தாலும் வாய் வழி சுவாசம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
குழந்தைகள் சில சமயங்களில் வாயை திறந்த நிலையில் வைத்தபடி தூங்கிக்கொண்டிருப்பார்கள். அப்போது சுவாசம் மூக்கு வழியாக உள்ளிழுக்கப்பட்டு வெளியாகுவதற்கு பதிலாக வாய் வழியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும். அப்படி தூங்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
சுவாச பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் மூக்கு வழியாக சுவாசிப்பதற்கு சிரமப்படுவார்கள். அதனால் வாய் வழியாக மூச்சுவிடலாம். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கும்போது சுவாசப் பாதை அடைப்பட்டு விடுகிறது. அப்போது சுவாசிக்க வாயை உபயோகிப்பார்கள்.
குழந்தைகளின் சுவாசப்பாதையில் நாசிப் பகுதியை பிரிக்கும் குருத்து எலும்புகள் வலுவில்லாமல் இருந்தாலும் வாய் வழி சுவாசம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மூக்கின் வழியாக சுவாசிப்பதுதான் நல்லது. ஏனெனில் மூக்கின் வழியாக உள்ளிழுக்கப்படும் காற்றில் படிந்திருக்கும் தூசுகளை நாசிப் பகுதி நீக்கி சுத்தம் செய்தே உள்ளே அனுப்பும்.
ஆனால் வாய் வழியாக சுவாசிக்கும்போது தூசுக்கள், அழுக்குகள், வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுக்கிருமிகள் நேரடியாக உள்ளிழுக்கப்பட்டுவிடும். அதனால் சுவாச பாதையில் தொற்றுகள் உருவாகக்கூடும். குழந்தைகள் எப்போதாவது வாய் வழியாக சுவாசித்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அடிக்கடி அவ்வாறு செய்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

சானிடைசர்களின் தேவை அதிகரித்திருப்பதால் தரம் குறைந்த சானிடைசர்களும் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. ஒருசில பரிசோதனைகள் மூலம் சானிடைசரின் தரத்தை அறிந்துகொள்ளலாம்.
கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் அச்சுறுத்தலால் வழக்கத்தை விட அதிக முறை கை கழுவும் பழக்கம் பலரிடமும் உருவாகி இருக்கிறது. நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை கொண்டிருப்பதால் சானிடைசர்களும் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி இருக்கின்றன.
வெளியே எங்காவது செல்லும்போது சோப்பு கொண்டு கைகழுவ முடியாத பட்சத்தில் சானிடைசர் பயன்படுத்துவதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குறைந்தபட்சம் 60 சதவீதம் ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை பயன்படுத்துவதுதான் நல்லது. அவை கைகளை சுத்தம் செய்வதோடு சருமத்திற்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்காது. சானிடைசர்களின் தேவை அதிகரித்திருப்பதால் தரம் குறைந்த சானிடைசர்களும் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. ஒருசில பரிசோதனைகள் மூலம் சானிடைசரின் தரத்தை அறிந்துகொள்ளலாம்.
டிஸ்யூ பேப்பரின் நடுப்பகுதியில் பால் பேனா கொண்டு வட்டம் வரைந்துகொள்ள வேண்டும். வட்டத்திற்குள் சானிடைசர் சில துளிகள் ஊற்றவும். அப்போது பேனா மை மங்கி திட்டுத்திட்டாக பரவினால் அந்த சானிடைசர் தரமானது அல்ல என்பதை கண்டறிந்துவிடலாம். சானிடைசர் தரமானதாக இருந்தால் வட்ட வடிவம் அப்படியே இருக்கும். சானிடைசர் தெளித்ததால் ஈரப்பதமாகி இருக்கும் டிஸ்யூ பேப்பரும் விரைவாகவே உலர்ந்துவிடும். அதனை கொண்டு அது தரமான சானிடைசர் என்பதை உறுதிபடுத்திக்கொள்ளலாம்.
ஹேர்டிரையர் கொண்டும் சானிடைசரின் தரத்தை பரிசோதிக்கலாம். சிறிய கிண்ணத்தில் சில துளிகள் சானிடைசர் ஊற்றிக்கொள்ளவும். அதனை ஹேர்டிரையர் கொண்டு உலர வைப்பதற்கு முயற்சிக்கவும். ஐந்து வினாடிகளுக்குள் ஈரப்பதம் ஏதுமின்றி சானிடைசர் துளிகள் உறிஞ்சப்பட்டிருந்தால் அது தரமான சானிடைசர். ஊற்றிய சானிடைசர் துளிகள் அப்படியே தண்ணீராக இருந்தால் அது தரமானது இல்லை என்பதை அறிந்துகொள்ளலாம்.
சிறிதளவு கோதுமை மாவில் சானிடைசர் சில துளிகள் ஊற்றி சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல் பிசையவும். சானிடைசர் துளிகள் மாவுடன் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மாறினால் அது தரமானது அல்ல. சானிடைசர் துளிகள் மாவுடன் கலக்காமல் திரிதிரியாக உதிர்ந்தால் அது தரமானது.