என் மலர்
ஆரோக்கியம்
புதிய கூந்தல் அலங்காரம் என்பது பெண்களுக்கு அழகை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் தருகிறது. அதனால் பெண்கள் வித்தியாசமான கூந்தல் அலங்காரங்களை விரும்புகிறார்கள்.
பெண்கள் கூந்தலை பேணிப் பாதுகாத்து, அடர்த்தியாக வளர்ப்பதே விதவிதமாக அலங்காரம் செய்துகொள்வதற்காகத்தான். புதிய கூந்தல் அலங்காரம் என்பது பெண்களுக்கு அழகை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் தருகிறது. அதனால் பெண்கள் வித்தியாசமான கூந்தல் அலங்காரங்களை விரும்புகிறார்கள். அது விரைவாக செய்து முடிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
முடியில் சிறிதளவு ‘சீரம்’ தேய்த்து நன்றாக சீவுங்கள். பின்பு நடுவில் உச்சி எடுத்து, கூந்தலை மூன்று பிரிவாக பிரியுங்கள். பிரித்து முடித்ததும், நெற்றியில் இருந்து நான்கு அங்குல பகுதியில் மீ்ண்டும் வகிடு எடுத்தால் பார்க்க அழகாக இருக்கும். இருபுறமும் கூந்தல் காதுகளை மறைத்தபடி தோளில்புரளும்.
கூந்தலை மூன்று பாகங்களாக்குங்கள். அதன் பின் பகுதி முடியில் ஒரு ‘பன்’ பயன்படுத்தி, சிறிது உயர்த்தி இறுக்கமாக கட்டுங்கள். மீதி முடியை இருபுறங்களாக சம அளவில் பிரித்துவிடலாம். இது மற்றவர்களை திரும்பிப்பார்க்கவைக்கும். உடைக்கு பொருத்தமாக அமையும்போது கூடுதல் அழகுதரும்.
முன்பகுதி முடியை சிறுசிறு பகுதிகளாக பிரித்து, பின்னோக்கி இழுத்து ‘பின்’ செருகுங்கள். ஒரு அங்குல கனத்தில் பிரிக்கவேண்டும். மொத்த முடியையும் இப்படி ‘பின்’ செய்த பின்பு ‘பன்’ உபயோகித்து ‘போனிடைல்’ போட்டுக்கொள்ளலாம்.
இது ஒரு வித்தியாசமான அலங்காரம். படத்தில் இருப்பதுபோல் கூந்தலை சீவி, பிரித்து, பின்னால் கட்டி கொண்டை போடுங்கள். இது அதிக வேலைப்பாடுகொண்டது. மாடர்ன் டிரஸ்க்கு மட்டுமின்றி, பாரம்பரிய உடைகளுக்கும் இது பொருத்தமாக இருக்கும். இந்த கூந்தல் அலங்காஇஇரத்த ின்போது பொருத்தமான காதணிகள் அணிந்தால், அழகில் ஜொலிக்கலாம்.

சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மிளகு சீரக இடியாப்பம் செய்து சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இடியாப்பம் - 6
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
நல்லெண்ணெய் - சிறிதளவு

செய்முறை
இடியாப்பத்தை நன்றாக உதிர்த்து கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள்,பெருங்காயத்தூள், சிறிது உப்பு போட்டு இடியாப்பத்தை சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.

உப்பு - தேவையான அளவு

சூப்பரான மிளகு சீரக இடியாப்பம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொரோனா நோய்த் தொற்றால் ஏராளமான வேலை இழப்புகள் பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், வேலை இழந்த ஒவ்வொருவருமே அடுத்த வேலை தேடலில் தீவிரமாக இருப்பார்கள்.
கொரோனா நோய்த் தொற்றால் ஏராளமான வேலை இழப்புகள் பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், வேலை இழந்த ஒவ்வொருவருமே அடுத்த வேலை தேடலில் தீவிரமாக இருப்பார்கள். முன்பை விட இப்போது சூழல் மோசமாக இருப்பதால், கிடைக்கும் வேலை என்பது அவர்களுக்கு மிக மிக முக்கியம். அதற்காக அவர்களுக்குப் பொருந்தாத வேலையில் சேர்ந்துவிட முடியாது.
தனக்குப் பிடித்த வேலையில் சேர பல இடங்களில் விண்ணப்பிப்பார்கள். அதற்கான நேர்காணலுக்கான ஈமெயில் வந்திருக்கும். பல இடங்களில் ஆன்லைனிலேயே இண்டர்வியூ செய்யப்படுகிறது. எது எப்படியாகினும் இந்த இண்டர்வியூ முக்கியமானது. அதை எளிதாக எதிர்கொள்ள இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
இண்டர்வியூக்குச் செல்லும் முதன்நாளே நீங்கள் விண்ணப்பித்திருக்கும் நிறுவனம் பற்றிய அப்டேட்களைத் தெரிந்துகொள்ளுங்கள். அங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் பற்றி மட்டுமல்ல, அந்த நிறுவனம் பொதுமக்களுக்கு உதவும்படி ஏதேனும் செய்து வருகிறதா… உள்ளிட்ட விஷயங்களையும்தான்.
எல்லோரும் சொல்வதைப் போலவே first impression best impression. அதனால் மிக தேர்ந்தெடுத்த டீசண்டான ஆடைகளை அணிந்துச்செல்லுங்கள். சட்டைக்கு ஏற்ற பேண்ட், சூ போன்றவற்றை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
இண்டர்வியூ நடக்கும் இடத்திற்கு, ஃபிக்ஸ் செய்திருக்கும் நேரத்திற்கு அரைமணி முன்பு செல்வதுபோல உங்கள் பயணத்தை அமைத்துக்கொள்ளுங்கள். சில நேரம் டிராஃப்பில் மாட்டினால் என்ன செய்வது என்ற யோசனையும் மனதில் இருக்கட்டும். அப்போதுதான் உண்மையில் டிராஃபிக் ஜாம் ஏற்பட்டுவிட்டால் உடனே அடையும் பதற்றம் இல்லாமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள்.
நீங்கள் இண்டர்வியூ செல்லும் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் யாரேனும் இருந்தால், அந்நிறுவனத்தின் நடைமுறைகள் பற்றியும் பங்கு தாரர்கள் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில், இண்டர்வியூவில் உதாரணத்திற்கு என்று அந்நிறுவனத்தில் பங்கு தாரரின் நிறுவனம் பற்றி தவறுதலாகச் சொல்லிவிடக்கூடாது அல்லவா.
இண்டர்வியூ இடத்திற்குச் சென்றதும் இனி தேவையில்லை என்ற நிலை வந்ததும் உங்களின் மொபைலை சைலண்ட் அல்லது ஏரோப்ளைன் மோடில் போட்டுவிடுங்கள். உள்ளே அழைக்கும்வரை மொபைலையே பார்த்துக்கொண்டிருந்தால் பதற்றத்தால் அப்படியே சென்றுவிடக்கூடும்.
இண்டர்வியூ அறைக்குள் சென்றதும் அங்கிருக்கும் நபர்களைப் பார்த்து நட்புடன் புன்னகை செய்யுங்கள். அது உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை உருவாக்கும். இப்போதைய சூழலில் கைக்குலுக்குவதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் உட்காரச் சொன்னதும் இயல்பாக அமருங்கள்.
உங்கள் ஃபைலைக் கொடுத்ததும், அவர்கள் அதைப் பார்ப்பதற்கு சற்று நேரம் கொடுங்கள். நீங்களாக அது இது என்று விளக்க வேண்டாம். ஏதேனும் ஒன்றைப் பற்றி விளக்கம் கேட்டால் சுருக்கமாகப் பதில் சொல்லுங்கள்.
பிறகு அவர்கள் கேட்கும் கேள்வியை நன்கு உள்வாங்கிக்கொள்ளுங்கள். அதற்கான பதிலைத் தெளிவான உச்சரிப்பில் குழப்பாமல் சொல்லுங்கள். தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பிரயோகியுங்கள். அதற்காக பதில் சொல்ல நீண்ட நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். பொருத்தமான பதிலை சுருக்கமாகச் சொல்லுங்கள்.
உங்கள் பதிலில் குறுக்கு கேள்விகள் கேட்பார்கள். அப்படிக் கேட்பது உங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதுபோல காட்டிக்கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் ஏற்கெனவே கூறிய ஒன்றையே திரும்ப கேட்பார்கள்.முன்பே சொல்லிவிட்டனே என்று சொல்லாதீர்கள். அந்தப் பதிலையே வேறு வார்த்தைகளால் திரும்பச் சொல்லுங்கள். உங்களின் இசை, பாடல், விளையாட்டுத் தொடர்பான ஆர்வத்தை சரியான இடத்தில் சொல்ல மறக்காதீர்கள்.
பாசிட்டிவ் பதில் கிடைத்தால் மகிழ்ச்சி. ஆனால், கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது அல்லவா… அதனால், கொஞ்சம் யோசிக்கிறேன் என்றால் உடனே தளர்வை உங்கள் முகத்தில் காட்டாதீர்கள். நன்றி சொல்லி வெளியே வாருங்கள்.ஒரு இண்டர்வியூவை எதிர்கொள்ள இதெல்லாம் அடிபடை விஷயங்கள். ஆனால் ஒவ்வொன்றும் முக்கியமானவை. அவற்றில் உங்களின் தனித்தன்மையைக் காட்டுங்கள்.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பாடங்களை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவியது முதல் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் வாழ்க்கையையும் புரட்டி போட்டு விட்டது. ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவ-மாணவிகள் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே திட்டமிட்டு, அட்டவணைப்படி வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. அதற்கு மாணவர்களும் தங்களை தினமும் தயார்படுத்திக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த (2020-21) கல்வி ஆண்டு இதுவரை இல்லாத புதுவிதமான ஒன்றாக அமைந்து இருக்கிறது. எந்தவித திட்டமிடலுக்கும் உட்படாத ஒன்றாக மாறி இருக்கிறது. அதற்கு கொரோனா வைரஸ் காரணமாகி விட்டது. அதுவே, கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் கல்வி முறையாக படிப்படியாக மாறி வருகிறது. இது ஆசிரியர்களுக்கு எளிதாக இருந்தாலும், பாடங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது பெரிய சவாலாக இருப்பதை மறுக்க முடியாது.
கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஆனாலும் படிப்பு தடைபட கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் வகுப்பறைகள் இல்லை. சக தோழர்கள் இல்லை. விளையாட்டு மைதானம், சந்திப்பு, கலைந்துரையாடல் ஆகிய எதுவும் இல்லை. அதை எல்லாம் விட நேரடியாக ஆசிரியர்களின் பார்வை இல்லை என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதை எல்லாம் மீறி மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. எனவே மாணவ-மாணவிகள் படிப்பதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியம். அது இல்லை என்றால் ஆன்லைன் கல்வி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறி விடும்.
எனவே பெற்றோரின் பங்களிப்பால் தான் ஆன்லைன் கல்வியில் அனைத்து மாணவர்களும் இணைய முடிகிறது. அதற்கு செல்போன், இணையதள இணைப்பு ஆகியவை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நவீன உலகில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தொழில்நுட்ப சாதனங்கள் மாணவர்களின் கைகளில் தவழ தொடங்கி உள்ளது. எனவே அதை பயன்படுத்தவும் மாணவ-மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.
ஆசிரியர்கள், மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு தயார்படுத்த வேண்டும். அதில் பாடங்களை படிப்பது, எழுதுவது, அதை புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டியதில் உள்ள நுட்பங்களை தெரியப்படுத்த வேண்டியது இருக்கிறது. வீட்டுக்குள் வகுப்பறை சூழலை ஏற்படுத்துவது என்பது நடைமுறையில் இயலாத ஒன்றுதான். எனவே குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த வைப்பது என்பது பெற்றோருக்கு பெரிய சவாலாக மாறி இருக்கிறது. தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் நோட்டு, புத்தகம், பள்ளிச்சூழல், தேர்வு, சிறப்பு வகுப்பு, ஆசிரியரின் கண்காணிப்பு போன்றவற்றில் இருந்து மாணவர்கள் விடுபட்டு உள்ளனர். இதனால் அவர்களுக்கு கற்றலுடன் ஒரு தொடர்பற்ற ஒரு நிலை இருக்கிறது. அதில் தொடர்பை ஏற்படுத்தி நாட்டத்தை ஏற்படுத்துவது முதல் கடமையாகிவிட்டது.
ஆன்லைன் முறையிலான புதிய கற்றல் முறைக்கு மாணவர்களை மனரீதியாக தயார்படுத்த வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றை கையாளுவதையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றில் ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை படித்து மாணவர்களே கற்றுக்கொள்வார்கள் என்று விட்டு விட கூடாது. அவர்கள் மீது உரிய அக்கறையையும், கண்காணிப்பையும் காட்டி கற்றலில் மேம்பட துணையாக இருக்க வேண்டும்.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பாடங்களை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தங்களின் குழந்தைகள் பாடங்களை எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்ற கவலை பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படுவதை காண முடிகிறது. மேலும் பாடம் தொடர்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பெற்றோரும் நேரம் செலவிட வேண்டியது இருக்கிறது.

எந்த குற்ற உணர்வும் இல்லாமல், எந்த பயமும் இல்லாமல், எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க உண்மையாகவே நினைத்து வாழும் வாழ்க்கைதான் மகிழ்வான வாழ்க்கை.
நமது மனதை குதூகலமாக மகிழ்வுடன் வைத்துக் கொண்டால் நம் வாழ்க்கை எப்போதும் இனிமை தருவதாகவே இருக்கும்.
சரி மனதை எப்படி மகிழ்வாக வைத்துக்கொள்வது? மகிழ்வான மனது என்பது என்ன? உண்மையில் எந்த குற்ற உணர்வும் இல்லாமல், எந்த பயமும் இல்லாமல், எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க உண்மையாகவே நினைத்து வாழும் வாழ்க்கைதான் மகிழ்வான வாழ்க்கை. இத்தகைய மனம் கொண்டவர்களுக்கு உடலில் இயல்பாகவே நல்ல எதிர்ப்பு தன்மை இருக்கும்.
காரணம் நாம் பயப்படும்போது தான் நம் உடல் படபடபுக்கு உள்ளாகி தேவையற்ற கவலைகள் உள்புகுந்து உடலின் உள்ளுறுப்புக்கள் நரம்பு மண்டலம் என அனைத்தையும் சோர்வாக்கி விடும். இத்தகைய சூழ்நிலையில் மிக எளிதாக நோய் தொற்று பரவும். ஆனால் எப்போதும் தைரியமாகவும் உறுதியான மனதுடனும் மகிழ்ச்சியாக இருக்கும்போது நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூச்சு நன்றாக இயங்கும் உடலுக்குத் தேவையான பிராண வாயு சிறப்பாக எடுத்துக்கொள்ளப்படும். இந்த சூழலில் எந்த வகையான நோய்த் தொற்றையும் நம் உடல் மிக எளிதாக எதிர்த்து நம்மை பாதுகாக்கும்.
மேலும் நாம் போதுமான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றை முறைப்படி தினமும் செய்தால் நம் உடலும் மனமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.நம்முடைய தினப்படி உணவோடு கூடுதலான சத்துப் பொருட்களை குறிப்பாக நோய் எதிர்ப்பை வளர்க்கக் கூடிய உணவுகளை மருத்துவர்களின் ஆலோசனையுடன் சேர்த்துக் கொள்வது மேலும் நன்மை பயக்கும்.
முளைக்கட்டிய பயிறு கீரைவகைகள் பழங்கள் பச்சை காய்கறிகள் போன்றவற்றை நம்முடைய தினப்படி உணவுகளில் சேர்ப்பது நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்து மனதுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் சர்க்கரை சாப்பிடுவது ஆபத்தானது...இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சர்க்கரையை உங்கள் மாதவிடாய் காலங்களை மோசமாக்கும் என்பதற்கான 4 வழிகள் இதோ..!
டோனட்ஸ் மீது எப்போதாவது தீவிரமான ஏக்கம் இருந்ததா அல்லது நீங்கள் உங்கள் மாதவிடாய் காலகட்டத்தில் இருக்கும்போது உங்களுக்கு பிடித்த முழு தொட்டியையும் சாப்பிட்டீர்களா?... ஆனால், மாதவிடாயின் பொது நாம் அதிகமாக இனிப்பு உட்கொண்டால் நமது உடலுக்கு அது பாதுகாப்பானது இல்லை. அது நமக்கு தீங்கை விளைவிக்கும்.
“சர்க்கரை இயற்கையில் அழற்சி மற்றும் இது உங்கள் கருப்பையில் இரத்த விநியோகத்தை அதிகரிக்கிறது. இது பெரிய நீர் தக்கவைப்புக்கு வழிவகுக்கிறது, இது வயிற்று வலிக்கு மேலும் வழிவகுக்கிறது. மேலும், உங்களுக்கு பிற பி.எம்.எஸ் அறிகுறிகள் இருந்தால், சர்க்கரை சில சந்தர்ப்பங்களில் அவற்றை மோசமாக்கும்.
சர்க்கரையை உங்கள் மாதவிடாய் காலங்களை மோசமாக்கும் என்பதற்கான 4 ஆதாரங்கள் இதோ:
1. சர்க்கரை ஒரு அழற்சி பொருள்
சர்க்கரை இயற்கையிலேயே அழற்சி வாய்ந்தது. இது உங்க கருப்பையில் இரத்த விநியோகத்தை அதிகரிக்கிறது. இதனால் நீர் தேக்கநிலையை ஏற்படுத்தி நமக்கு வயிற்று வலி பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே மாதவிடாய் கால அறிகுறிகளை மேலும் மோசமாக்குகிறது என்று மகளிர் நல மருத்துவர் கூறுகிறார். சர்க்கரையால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
2. மாதவிடாய் பிடிப்புகளை மோசமாக்கும்
பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் இன்சுலின் அளவிற்கு தவறாக செயல்படுகிறது. அதனால் தான் இந்த கால கட்டத்தில் பெண்கள் இனிப்புகளை விரும்புகிறார்கள். ஆனால் இந்த கால கட்டத்தில் நீங்கள் அதிகமான சர்க்கரையை எடுத்துக் கொண்டால் மாதவிடாய் பிடிப்புகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

நம் பண்பாட்டின் சாளரங்களாக விளங்கும் பண்டிகைகளிலும் பெண்களே முதலிடம் பெறுகின்றனர். வாசலில் போடப்படும் கோலம் முதல் கொண்டாட்டத்தின் அனைத்து அம்சங்களிலும் அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்பதே நிதர்சனம்.
மனித சமூகம் முன்னேற வேண்டுமானால், அங்கே ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவம் நிலவ வேண்டும். சாதிகள் அற்ற நிலையும், பாலின சமத்துவமும் எங்கே இருக்கின்றனவோ அந்த இடத்தில் தன்னிறைவு தானாகவே ஏற்படும். இந்த இரு சமத்துவங்களும் நமது தமிழரிடையே ஆதிகாலந்தொட்டே நிலவி வருகிறது. அதிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நம்மிடம் பழங்காலத்திலேயே இருந்துள்ளது.
அவ்வையார் போன்ற புலவர் பெருமக்கள், குந்தவை நாச்சியார் முதலான அரசியல் ஆசான்கள், வேலு நாச்சியார், ராணி மங்கம்மா போன்ற வீராங் கனைகள் என தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பாலின சமத்துவத்தை நிலைநாட்டி வந்துள்ளது.
நாகரிகம் செறிந்த மேலைநாடுகளில் பெண்களுக்கான ஓட்டுரிமை ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்புதான் கிடைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் குடவோலை காலந்தொட்டே பெண்கள் ஓட்டளித்து வந்துள்ளனர்.
அதேபோல் அன்றாட வாழ்க்கையிலும், நம் பண்பாட்டின் சாளரங்களாக விளங்கும் பண்டிகைகளிலும் பெண்களே முதலிடம் பெறுகின்றனர். வாசலில் போடப்படும் கோலம் முதல் கொண்டாட்டத்தின் அனைத்து அம்சங்களிலும் அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்பதே நிதர்சனம். சித்திரைத் திருவிழாவும் பெண்களுக்கான பண்டிகையே.
இன்றைக்கு கல்வி, பொருளாதாரத் தன் னிறைவு போன்ற பல வழிகளிலும் தடம் பதித்துள்ள பெண்கள், அரசியலிலும் பெரும் பங்கு கேட்டுப் போராடி வருகிறார் கள். பொதுவாக சித்திரைத் திங்கள் மாம்பழ சீசன். ஆனால் இந்த சித்திரை பெண்களின் சீசனாக மலர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பிலோர் வெள்ளம் என திகழும் பெண்களின் கரங்கள் உலகை ஆளவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த சமுதாயம் கட்டமைத்துள்ள போலிச் சங்கிலிகளை தகர்த்து, ஆக்க சக்திகளாக பெண்கள் அவதரிக்க வேண்டும்.

வேப்ப எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துவதனால், தலைப் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் சீராக அமைந்து முடி வளர்ச்சிக்கும் உதவியாக அமையும்.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேப்ப இலையில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். தலைமுடி சரும பிரச்சனைகளால், முடி வேரிலும் பாதிப்பு அடையும். வேப்ப நீர் உபயோகித்து தலை அலசுவதினால், சுத்தம் ஆகும். முடி வளர்ச்சிக்கும் வேப்பம் பயன்படும்.
வேப்ப எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துவதனால், தலைப் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் சீராக அமைந்து முடி வளர்ச்சிக்கும் உதவியாக அமையும். வேப்ப எண்ணெய்யுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால், இன்னும் ஆரோக்கியமானது. வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், முடி வளர்ச்சி பெருகும்.
மால்ஸ்சேசியா என்ற பூஞ்சையல் ஏற்படும் பொடுகு பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொடுகு, தலையில் இருக்கும் பிசுப்பிசுப்பான எண்ணெய் தேகத்தில் இருக்கும். பொடுகு பிரச்சனைகளால் அரிப்பு ஏற்படும்.
வேப்ப எண்ணெய் உபயோகித்து, பொடுகுப் பிரச்சனையை போக்கலாம். தேங்காய் எண்ணெயுடன் வேப்ப இலைகள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின், சில எலுமிச்சை சாறு துளிகள் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை தலைமுடியில் தேய்த்து, இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவ வேண்டும். இன்னொரு முறையாக, வேப்ப பொடி மற்றும் இலை சேர்த்த கலவையை பயன்படுத்தி வந்தால், பொடுகு நீங்கும்.
பெடிகுலோசிஸ் காப்பிடிஸ் என அழைக்கப்படும் பேன், மனித தலைமுடிகளில் எளிதாக ஊடுறுவக் கூடியவை. பேன் தொல்லையில் இருந்து விடுபெற வேப்ப எண்ணெய் பெரிதும் உதவியாய் இருக்கும். வேப்ப எண்ணெயில் இருக்கும் அசாடிராக்டின் எனப்படும் மூலப்பொருள் பூச்சிகளை நீக்கும் குணம் கொண்டவை.
வேப்ப எண்ணெய்யை தலையில் தேய்த்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவ வேண்டும். இந்தியா மட்டும் இன்றி, உலகில் பல்வேறு நாடுகளில் வேப்ப மரத்தின் பயன்களை தெரிந்து வருகின்றன. எனவே, வேப்பத்தின் ஆரோக்கியத்தை பெற்று பயனடையவும்.

காலையில் சத்தான உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று அவல் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கெட்டி சிவப்பு அவல் - அரை கப்,
தேங்காய்ப்பால் - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.
வறுத்து பொடிக்க:

செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாக கழுவி தேங்காய்ப் பாலில் ஊறவிடவும்.
நிலக்கடலையை வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அவலையும் (தேங்காய்ப் பால் முழுவதையும் அவல் இழுத்திருக்கும்) போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும்போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள், மிளகாய்தூள் தூவிக் கிளறவும்.
கடைசியாக கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

காய்ந்த மிளகாய் - 4.

தேங்காய்ப்பால் சேர்ந்திருப்பதால் சாப்பிட ருசியாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொரோனா தாக்கம் பரவாமல் இருக்க “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”என்னும் முதுமொழிக்கேற்ப, நோய் நொடியின்றி இருக்கவும் சுத்தமும் சுகாதாரமும் அவசியம்.
சீனாவில் தொடங்கி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று, சீன நகரமான உகானில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. ஆனால் இதன் மூலம்(ஆரம்பம்) எது என்று அடையாளம் காண முடியவில்லை. இது ஒரு உயிர்க்கொல்லி என்பதாலும், இத்தொற்றால் லட்சக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் என்பது விலங்குகளிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் ஒரு நோய். இந்த நோய் தற்போது விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கும் பரவத் தொடங்கிவிட்டது. இந்த வைரஸ் கிருமி வட்ட வடிவில் உள்ளது. இதன் மேல் கிரீடம் இருப்பது போன்ற தோற்றம் கொண்டது. இதனால் தான் இதற்கு ‘கொரோனா‘ என்று பெயர் வைக்கப்பட்டது. கொரோனா தொற்றுநோய் பாதிக்கப்பட்டவுடன் சளி மற்றும் இருமல் தான் இருக்கும். இந்த நோயின் தாக்கம் வெளிப்படுவதற்கு 2 வாரங்கள் ஆகும்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”என்னும் முதுமொழிக்கேற்ப, நோய் நொடியின்றி இருக்க சுத்தமும் சுகாதாரமும் அவசியம். தற்போது கொரோனா என்னும் உயிரைக் குடிக்கும் வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க, கைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், கைக்குட்டை பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், இருப்பிடத்தை தூய்மையாக வைத்தல், காய்கறிகளை கழுவிய பின் சமைத்தல் ஆகிய செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்.
ஏனெனில், “காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா” என்று சித்தர்கள் உடலைப் பற்றி கூறியுள்ளனர். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை, “காயமே இது மெய்யடா, இதில் கண்ணும் கருத்தும் வையடா, நோயில்லாமல் காத்து நூறாண்டுகள் உய்யடா” என உடம்பின் மேன்மையை அக்கறையோடு விளக்கியுள்ளது நினைவு கூரத்தக்கது.
“சுத்தம் சோறு போடும்” என்ற மூத்தோர் வாக்கினை போல, நாமும் சுகாதார முறையில் இருந்து பிறழாமல் கடைப் பிடித்தால் எந்த வகை நோயினையும் எளிதில் வெல்லலாம்.

குழந்தைகளின் கல்வி அறிவை பலவழிகளில் மேம்படுத்தமுடியும். குறிப்பாக கருத்துள்ள திரைப்படங்களின் மூலமும் வளர்க்கமுடியும்
குழந்தைகளின் கல்வி அறிவை பலவழிகளில் மேம்படுத்தமுடியும். குறிப்பாக கருத்துள்ள திரைப்படங்களின் மூலமும் வளர்க்கமுடியும். அத்தகைய திரைப்படங்களை தொகுத்திருக்கிறோம். அவை என்னென்ன திரைப்படங்கள்? அவை எதற்காக தனித்துவமானவை என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
லயன் கிங் : காடுகள் பற்றியும், காட்டு விலங்குகளின் வாழ்க்கை பற்றியும் அழகாக விளக்கும் திரைப்படம் இது. விலங்குகளின் பெயர், அதன் குணாதிசயம், அவை சாப்பிடக்கூடிய உணவு வகைகள், வாழ்க்கை முறை பற்றி குழந்தைகளை கவரும் வகையில் படமாக்கி உள்ளனர். அதனால் வன உயிரியியல் பூங்காவிற்கு சென்று வந்த உணர்வை, ‘லயன் கிங்’ திரைப் படம் நிச்சயம் உண்டாக்கும்.
வாட்ஸ் ஆன் யுவர் பிளேட்:
ஆரோக்கியமில்லாத துரித உணவின் வரலாற்றையும், துரித உணவு சாப்பிடுவதால் ஏற்படும் உடல் சீர்கேட்டையும், இந்த ஆவணப்படம் விளக்குகிறது. அதுமட்டுமல்ல, குழந்தைகள் எந்த உணவுகளை அதிகமாக சாப்பிடவேண்டும், எதை தவிர்க்க வேண்டும், காய்கறி பழங்களில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன, எந்த குறைபாட்டிற்கு எந்த காய்கறி பழங்களை சாப்பிடவேண்டும் என்பது போன்ற பல ஆரோக்கிய விஷயங்களை இந்த படம் அழுத்தமாக பேசுகிறது.
அப் : ஒரு வீடு பலூன்களின் மூலம் வானில் பறந்தால் எப்படி இருக்கும்?, இதையே ‘அப்’ என்ற அனிமேஷன் திரைப்படமாக உருவாக்கி உள்ளனர். நகைச்சுவை காட்சி களுக்கு மத்தியில், குழந்தைகள் முதியவர்களிடம் எப்படி பழகுவது, குழந்தை-முதியோர்களுக்கான உறவு எப்படி இருக்கவேண்டும்... போன்ற பல உறவு எதார்த்தங்களை அப் திரைப்படம் விளக்குகிறது. கூடவே பல அறிவியல் விந்தைகளையும் சொல்லித்தருகிறது.
மார்ச் ஆப் பெங்குவின் : அண்டார்டிகா கண்டத்தின் நில அமைப்பு, அரிய வகை பெங்குவின்களின் வாழ்க்கை முறை, பனிப்பாறை பிளவு, வெப்பமயமாதல்... போன்ற பல விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க நினைத்தால், மார்ச் ஆப் பெங்குவின் திரைப்படத்தை போட்டுக்காட்டுங்கள். பூமி யில் இருக்கும் மற்றொரு உலகை இந்த படம் கலக்கலாக காட்டிவிடும்.
இது போல நிறைய திரைப்படங்கள் உள்ளன. இதன் மூலம் குழந்தைகளின் பொழுதை நல்லவிதமாக கழிக்கவும், கல்வி அறிவை வளர்க்கவும் முடியும்.

புரதச்சத்துமிக்க உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் ஏற்படுவது, மந்தமாக உணர்வது, வாயுத்தொல்லை ஏற்படுவது எல்லோருக்கும் சகஜம்தான். இதை தவிர்க்கும் எளிய வழிமுறைகளை அறிந்துகொள்ளலாம்.
புரதச்சத்துமிக்க உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் ஏற்படுவது, மந்தமாக உணர்வது, வாயுத்தொல்லை ஏற்படுவது எல்லோருக்கும் சகஜம்தான். இது நோயோ, பிரச்னையோ கிடையாது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
* அன்றைக்கு நீங்கள் சாப்பிட்ட உணவுக்கு ஏற்றபடி, உடலுழைப்பு இல்லையென்றால் வாயுத்தொல்லை வரும்.
* தூக்கத்தில் பிரச்னை இருப்பவர்களுக்கும், செரிமானப் பிரச்னையும் அதன் தொடர்ச்சியாக வாயுத்தொல்லையும் ஏற்படும்.
* உப்பு, காரம், மசாலா தூக்கலான ஹோட்டல் உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு புரதச்சத்துமிக்க உணவை கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிட்டாலும் வாயுத்தொல்லை வரலாம்.
* புரத உணவுகளை வேகவைத்துச் சாப்பிடும்போது வாயுத்தொல்லை வராது. எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் வரும்.
* புரத உணவுகளை அதிகம் சாப்பிடுகிற அன்று நார்ச்சத்துமிக்க காய்கறி சாலட் சாப்பிட்டால், செரிமானம் சுலபமாகி, வாயுத்தொல்லை ஏற்படாது.