என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. மேலும் பொடுகு, முகப்பரு பிரச்சனைகளுக்கும் பூண்டு தீர்வு தருகிறது.
    முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள் மறைய பூண்டை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின் அதில் தேன் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இப்படி செய்து வர முகப்பருக்களின் அளவு குறைந்து அப்படியே மறைவதைக் காணலாம். பூண்டை இடித்துக்கொள்ளுங்கள். பின் ஆலிவ் எண்ணெயை கடாயில் ஊற்றி காய்ச்சி அதில் இடித்த பூண்டுகளையும் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த எண்ணெய்யை வடிகட்டி தலையின் வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை அலசுங்கள்.இப்படி தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்.

    பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட தன்மைகள் காரணமாக, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. அவை,

    1. பூண்டில் ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை எதிர்த்து போராட உதவுகிறது.

    2. பூண்டு , நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், தலை முடி உதிர்விற்கு காரணமான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது

    3. பூண்டில் உள்ள செலெனியம் என்னும் கூறு, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

    4. முடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்து, அடைப்பைப் போக்குகிறது, இதனால் முடியின் வலிமை அதிகரிக்கிறது.

    5. தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் பூண்டு சிறந்த தீர்வைத் தருகிறது.

    கூந்தல் ஆரோக்கியத்திற்கு, தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய் எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது. இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்து தடவவும். அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும்.

    பூண்டுடன் தேன் சேர்த்து முடி உதிர்வுக்கான சிகிச்சையில் பயன்படுத்தலாம். 8 பல் பூண்டை எடுத்து மசித்து, இரண்டு ஸ்பூன் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் உச்சி முதல் நுனி வரை தடவவும்.

    பிறகு 20 நிமிடங்கள் ஊற விடவும். 20 நிமிடம் கழித்து, வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இந்த தீர்வைப் பின்பற்றுவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். 
    சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. ஆவாரம்பூவின் பூ, இலை, காய், வேர் அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது.
    தேவையான பொருட்கள்

    ஆவாரம்பூ பொடி - 2 டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    நெய் - 1/4 டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்.

    ஆவாரம்பூ

    செய்முறை

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி விழுதை போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.

    பின்பு அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், ஆவாரம்பூ பொடி போட்டு வதக்கி உப்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    கொதித்ததும் இறக்கி நெய் விட்டு, பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    தோல்வி என்பது வெற்றியை சரியான கண்ணோட்டத்தில் அணுகுவதற்கு வழிகாட்டும் என்பார்கள். பெண்களே இனி தோல்வியை சந்திக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்று அறிந்து கொள்ளலாம்.
    தோல்வி என்பது வெற்றியை சரியான கண்ணோட்டத்தில் அணுகுவதற்கு வழிகாட்டும் என்பார்கள். இனி தோல்வியை சந்திக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை கற்றுக்கொடுக்கும். ஒருசிலருக்கு வாழ்க்கையில் நடப்பது எல்லாமே எதிர்மறை விஷயங்களாகவே தோன்றும். அதுபோல் தோல்வி நிரந்தரமாகி விடாது. தோல்வியை எதிர்கொள்பவர்கள் அந்த கடினமான காலகட்டத்தில் இருந்து மீண்டு வருவதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது முக்கியம். அதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள் குறித்து பார்ப்போம்.

    ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கும்போது இடையூறு ஏற்படும். இனி அதனை செய்து முடிக்க முடியாது என்ற நிலை உருவாகும். அப்போது கடும் வருத்தம் உண்டாகும். கவலை, பதற்றம், பயம், கோபம், சோகம் இவற்றுள் ஏதாவது ஒருசில உணர்வுகள் மனதை வாட்டும். அந்த உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். வலியையும், வேதனையும் முழுமையாக மனம் உணர்வதற்கு அனுமதிக்க வேண்டும். அடுத்த முறை ஒரு செயலை செய்யும்போது இடையூறு ஏற்பட்டால் அப்போது வெளிப்படும் உணர்ச்சிகளை கையாளுவதற்காக செயல்முறையை வகுக்க வேண்டும். என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது? எத்தகைய மனத்துயரங்களை எதிர்கொள்ள நேர்ந்தது என்பதை நோட்டில் எழுதி வையுங்கள். அவை அடுத்த முறை வெற்றியை தேடித்தருவதற்கு வழிகாட்டும்.

    பெரும்பாலும் உணர்ச்சிவசப்படும்போது உடல் உடனடியாக நமது உணர்வுகளை வெளிக்காட்டும். ஆதலால் தலையில் இருந்து கால் வரை உடல் உறுப்புகளை மனத்திரையில் ஸ்கேன் செய்யுங்கள். தோல்வி அடைந்த விரக்தியை வெளிப்படுத்தும்போது கைகளை தளர்வுபடுத்திவிட்டு ஆழமாக சுவாசியுங்கள். வாய் வழியாகவும் சுவாசிக்கலாம். தோல்வியை சகிக்கமுடியாத கோபத்தில் நிறைய பேர் பற்களை கடிப்பார்கள். தாடையை அங்கும் இங்கும் அசைத்து பற்களை உராய்ந்துகொண்டிருப்பார்கள். அந்த சமயத்தில் தசைகளுக்கு ஓய்வு கொடுத்துவிட வேண்டும். நாக்கை வாயின் அடிப்பகுதிக்கு கொண்டு சென்று ஓய்வெடுக்கவிட வேண்டும். கழுத்து, தோள்பட்டை, மார்பு பகுதியில் ஏதேனும் இறுக்கத்தை உணர்ந்தால் மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும். கால்கள் உணர்வற்ற நிலைக்கு செல்வதை தவிர்க்க கால் விரல்களை அசைத்துக்கொண்டிருக்க வேண்டும். பிடித்தமான நிறத்தை மனத்திரையிலோ, நேரிலோ பார்த்து மனதை இலகுவாக்க வேண்டும்.

    தோல்வி அடையும் சமயத்தில் எதிர்மறை உணர்ச்சிகள்தான் மனதை அலைபாயவிட்டுக்கொண்டிருக்கும். அதனால் அந்த சமயத்தில் வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்கக்கூடாது. மனதை அமைதிப்படுத்திவிட்டு நிதானமாக இருக்க வேண்டும். ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு தோல்வியை சந்தித்தபோது வெளிப்பட்ட மன உணர்ச்சிகளை எழுதி வைத்த நோட்டை எடுத்து படியுங்கள். ஒவ்வொரு எதிர்மறை சிந்தனைக்கும் நீங்கள் எழுதி இருக்கும் விஷயங்களை படித்து பார்த்துவிட்டு ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள். ‘என்னால் எப்படி தோல்வி அடைய முடிந்தது’ என்று எழுதி இருந்தால், ‘அடுத்த முறை இந்த வீழ்ச்சியை எப்படி எதிர்கொண்டு சாதிக்கலாம்’ என்பது பற்றி எழுதிவையுங்கள். அதன்படி செயல்பட தொடங்குங்கள்.

    எதிர்மறையான சிந்தனைகள், கேள்விகள் தலைதூக்கும்போதெல்லாம் நேர்மறையான பதிலை சொல்வதற்கு முயற்சியுங்கள். ஏற்கனவே செய்து முடித்திருக்கும் நேர்மறையான விஷயங்களை நினைவுப்படுத்திப்பாருங்கள். அவை மன ஆறுதலை தரும். நேர்மறையான சிந்தனை கொண்ட நபர்களுடன் தொடர்பில் இருங்கள். அது துயரத்தை போக்க உதவும்.

    தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று, அடுத்தமுறை அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதான். வாழ்க்கையில் ஏதாவதொரு சூழலில் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மன உளைச்சலை அனுபவிக்க வாய்ப்புள்ளது. அதற்குத் தயாராக இருக்க பழகிக்கொள்ளுங்கள். அந்த சமயத்தில் மகிழ்ச்சியான தருணங்களை நிழலாடவிடுங்கள். மகிழ்ச்சியான செயல்பாடுகளை பட்டியலிடுங்கள், மனதுக்கு பிடித்தமான பாடல்களை கேட்பது, பாடுவது, புத்தகங்கள் படிப்பது என கவனத்தை திசைதிருப்புங்கள். தோல்வி அடைந்து பின்னர் மீண்டும் வெற்றி பெறும்போது எதிர்கொண்ட சிக்கல்கள், பிரச்சினைகள், அவற்றை எப்படி சமாளித்தீர்கள் என்பது பற்றி நோட்டில் எழுதி வையுங்கள். அடுத்தமுறை தோல்வி அடையும்போது அது வழிகாட்டும். 
    இந்த கொரோனா காலகட்டத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மன அமைதியுடனும், மன வலிமையுடனும் இருப்பதற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும்.
    ஊரடங்கு, கொரோனா பீதி, பள்ளி விடுமுறை இவை மூன்றும் குழந்தைகளின் அன்றாட செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் சூழலால் கவலை, பீதி, மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். இந்த காலகட்டத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மன அமைதியுடனும், மன வலிமையுடனும் இருப்பதற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் மன அழுத்தத்திற்கு ஆளாகுவதற்கு அவர்களிடம் தனிப்பட்டக் காரணங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பது மன நல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    அதிகப்படியான அழுகை, அடிக்கடி எரிச்சல்படுவது, சின்ன விஷயத்திற்கு கூட கவலைப்படுவது, வழக்கத்திற்கு மாறாக படுக்கையில் சிறுநீர் கழிப்பது, சரியாக தூங்காமல் இருப்பது, கவனக்குறைபாடு, விரும்பி விளையாடும் விளையாட்டுகள் மீது கூட ஆர்வம் இல்லாமல் இருப்பது, அடிக்கடி தலைவலி ஏற்படுவது, உடல் வலியால் அவதிப்படுவது போன்றவை குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப் பதற்கான அறிகுறிகள் ஆகும்.

    “குழந்தைகளும், பதின்ம வயதை கடந்தவர்களும் பெற்றோர், தங்களை சுற்றி இருக்கும் பெரியவர்களின் அணுகுமுறைகளின் ஒரு பகுதியை பின்பற்றுகிறார்கள். இந்த சமயத்தில் கொரோனா நோய் தொற்று சார்ந்த விஷயங்களை நம்பிக்கையுடனும், அமைதியாகவும் கையாள வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கும் ஆதரவாக இருக்க முடியும். குழந்தைகள் முன்னால் கொரோனா பற்றிய கவலையை வெளிப்படுத்த வேண்டாம். பீதியுடனும் இருக்க வேண்டாம். துணையுடன் பகிரங்கமாக சண்டை போடவோ, வாதாடவோ கூடாது. எல்லா வகையிலும் வீட்டில் அமைதியான சூழலை உருவாக்க வேண்டும். அவைதான் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தும்” என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.

    முககவசம் அணியாவிட்டால் கொரோனா தாக்கிவிடும் என்பது போன்ற அச்ச உணர்வை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்திவிடக்கூடாது. முககவசம் அணிவது எந்த அளவுக்கு பாதுகாப்பானது? எந்த அளவுக்கு நோய் தொற்றுவில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பதை விளக்கமாக சொல்லி புரிய வைக்க வேண்டும். ஒருவித பயத்துடன் முககவசத்தை அணிவது மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். குழந்தைகளை அதிக நேரம் டி.வி. பார்க்கவோ, இணையதளங்களை பார்வையிடவோ அனுமதிக்கக்கூடாது. கொரோனா நோய்த்தொற்று பற்றிய விஷயங்களை அவர்கள் தவறாக புரிந்துகொள்ளக்கூடும். அது அவர்களிடத்தில் கவலையை அதிகரிக்கச்செய்துவிடும். வீண் பதற்றத்தையும் ஏற்படுத்தும். கொரோனா பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு பதிலாக நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவோ, அவர்களுடன் ஆன்லைனில் அரட்டை அடிக்கவோ குறிப்பிட்ட நேரத்தை செலவிட அனுமதிக்கலாம்.

    பள்ளிக்கூடம் செல்லும் காலகட்டத்தில் எத்தகைய வழக்கத்தை பின்பற்றினார்களோ அதையே பின்தொடர வைக்கலாம். அது அவர்களை சுற்றியுள்ள தேவையற்ற குழப்பங்களை சமாளிக்க உதவும். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தாலும் புத்தகங்களை வாசிக்க ஊக்குவியுங்கள். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி குழந்தைகளுடன் அமர்ந்து பாடங்களை சொல்லிக்கொடுக்கலாம். ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் அதோடு தொடர்புடைய இணையதள விஷயங்களையும் கற்றுக்கொடுக்கலாம். அது அவர்களின் அறிவை மேம்படுத்த உதவும். சரியான நேரத்தில் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது என குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருங்கள். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுகளை வழங்க வேண்டிய காலகட்டம் இது. அதனால் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதற்கு கவனம் செலுத்துங்கள். 
    ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால், அதுதான் ரத்தம் உறையாமை நோய். ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தால் உயிரிழப்புகூட ஏற்பட்டுவிடும்.
    கையில் சிறிய காயம் ஏற்படுகிறது. உடனே ரத்தம் வழிகிறது. சில நிமிடங்களில் ரத்தம் வெளியேறுவது தானாகவே நின்றுவிடுகிறது, அல்லவா?

    அப்படி ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால், அதுதான் ரத்தம் உறையாமை நோய். ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தால் உயிரிழப்புகூட ஏற்பட்டுவிடும்.

    இது மரபியல் கோளாறு காரணமாக ஏற்படும் நோய். உலகில் பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு இந்நோய் ஏற்படுவதாகப் புள்ளி விவரங்களும் கூறுகின்றன. குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் ஏற்படலாம். எனவே, இதைப் பரம்பரை நோய் என்றும் கூறுகிறார்கள்.

    ரத்த உறவில் திருமணம் செய்வதன் மூலம், இந்நோய் அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    தாயின் கருவில் உருவாகும் குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிக்கும் குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடே இந்நோய் ஏற்படக் காரணம். இந்த நோய் உள்ளவர்கள் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். உடலில் எங்கும் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயம் காரணமாக ஏற்படும் ரத்தக்கசிவு சிக்கலை உண்டாக்கிவிடும். சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமல்கூட ரத்தக் கசிவு ஏற்படலாம் என்கிறார்கள், நிபுணர்கள்.

    இந்த நோயை எப்படிக் கண்டுபிடிப்பது?

    பிறந்த குழந்தைக்குத் தொப்புள்கொடி விழுந்த பிறகு ரத்தம் நிற்காமல் வெளியேறுவது, பல் விழுந்த பிறகு அல்லது பல் எடுத்த பிறகு தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்படுவது, உடலில் எங்கேயாவது காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு நிற்காமல் இருப்பது, உடலில் நீல நிறத் தழும்புகள் தோன்றி மறைவது, கால் மூட்டுகள் மீண்டும் மீண்டும் வீங்கி வலிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் ரத்தம் உறையாமை நோய் இருக்கலாம். இந்நோயை குணப்படுத்துவது மிகவும் கடினம். ரத்தம், பிளாஸ்மா செலுத்துவது மற்றும் உறை நிலை மருந்துகளைச் செலுத்துவது என முறையான சிகிச்சையின் மூலம் மட்டுமே இந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்பது, மருத்துவர்களின் அறிவுரை.
    முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம். காபி குடிக்கும் பழக்கமும் முகப்பருவிற்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    முகப்பரு அற்ற தெளிவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது. இன்றைய சுற்றுச்சூழல், வெப்பம் எனப் பல காரணிகளுடன் போராடி சருமத்தை காப்பாற்ற பல முயற்சிகளும் நாம் எடுக்கிறோம். முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம்.

    பால் பொருட்கள், காரசார உணவுகள், ப்ரெட், பொரித்த உணவுகள் போன்ற பலதரப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் முகப்பருவுக்கு காரணம். காஃபி கூட உங்கள் முகப்பருவுக்குக் காரணம் எனச் சொன்னால் ஆச்சர்யமாவீர்கள் தானே? ஆம். நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள். "அதிகமாக காஃபி உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு முகப்பரு வரும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ஹார்மோனின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருவின் அடிப்படைக் காரணி. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை ஆகியவற்றை உணவில் தவிர்த்தல் வேண்டும். சுத்தமான பழங்கள், காய்கறிகளை உட்கொள்ளுதல் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

    தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். காஃபியில் உள்ள வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை தூண்டிவிடுகிறது. அதுவே தேவையற்ற கலோரிகளை உடலில் சேரவும் வழிவகுத்து முகப்பருவுக்கு காரணமாகிவிடுகிறது.

    தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

    தோலின் ஆரோக்கியத்திற்கு நிறைய தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம் என நாம் அனைவரும் அறிவோம். உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் போனாலும் சரும பிரச்சனைகள் ஏற்படும். "காஃபி விரைவில் கழிவாகி சிறுநீர் வழியாக வெளியேறும். அதிக காஃபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும் போது இயல்பாகவே நம் உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். இப்படி உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் போவது கூட முகப்பருவுக்கு காரணமாக அமையும்.

    எனவே, காஃபி தானே என்று அலட்சியம் அதிலும் அளவோடு இருந்தால் தேவையற்ற முகப்பருக்கள் தானாகவே தடுக்கப்படும்.
    பெண்களின் தாய்மையில் கருப்பை முக்கிய பங்காற்றுகிறது. நாமெல்லாம் முதலில் கண்ணுக்குத் தெரியாத கருவாகத் தான் தாயின் கருப்பைக்குள் சென்றிருப்போம்.
    மனித உடலை இயற்கை மிக அற்புதமாக வடிவமைத்திருக்கிறது. முக்கியமான உறுப்புகளை எல்லாம் கவசம் போன்று நேர்த்தியாக எலும்புக்கூடுகள் பாதுகாக்கும் அளவுக்கு உருவாக்கியிருக்கிறது. மூளையை மண்டை ஓடு, இதயத்தையும்- நுரையீரலையும் மார்புக்கூடு எலும்புகள் பாதுகாப்பதுபோல், மனித இனம் தழைப்பதற் காக பெண்ணுக்குள் இருக்கும் முக்கியமான பாலின உறுப்புகளை எல்லாம் பெல்விஸ் எனப்படும் ‘கூபகம்’ எலும்பு பாதுகாக்கிறது. இது மனிதர்களுக்கு உணர்ச்சிகளை உணர வைக்கும் முள்ளெலும்புக் கோர்வையின் கீழ்ப்பகுதியில் இரண்டு இடுப்பு எலும்பு களுடன் இணைந்து காணப்படுகிறது.

    இந்த ‘பெல்விஸ்’ தான் மனித இனத்தின் நுழைவாயில். தாயின் கருப்பையில் உருவாகி வளரும் குழந்தை, இந்த எலும்புக்கூட்டின் திறப்பு வழியாகத்தான் வெளியே வந்து உலகை எட்டிப்பார்க்கிறது. பிரசவத்தின்போது ‘பெல்விஸ்’ இணைப்பு எலும்புகள் சற்று விரிந்துகொடுக்கும் அளவுக்கு இயற்கை அதனை வடிவமைத்திருக்கிறது.

    பெண்களின் தாய்மையில் கருப்பை முக்கிய பங்காற்றுகிறது. நாமெல்லாம் முதலில் கண்ணுக்குத் தெரியாத கருவாகத் தான் தாயின் கருப்பைக்குள் சென்றிருப்போம். நமது உறுப்புகள் ஒவ்வொன்றையும் உருவாக்கி, வளர்த்தெடுத்து, நம்மை குழந்தையாக்கி இந்த உலகிற்கு தந்தது கருப்பைதான். அதன் செயல்பாடுகளை நினைத்துப்பார்க்கும்போதே வியப்பு ஏற்படும்.

    பெல்விஸ் எனப்படும் இடுப்பு எலும்புக் கூட்டின் உள்ளே மிக பாதுகாப்பாக பேரிக்காய் அளவில் அமைந்திருக்கும் தசைப்பகுதிதான் கருப்பை. ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது அவளது கருப்பை 2.5 முதல் 3.5 செ.மீ. நீளமாக இருக்கும். பூப்படைந்து, திருமணமாகும் பருவத்தில் 6 செ.மீ. முதல் 8 செ.மீ. நீளம் வரை வளர்ந்திருக்கும். திருமணமாகி இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அது 9 முதல் 10 செ.மீ. அளவில் பெரிதாகிவிடும். பருவமடைந்த பெண்ணின் கருப்பை 50 முதல் 70 கிராம் எடையுடன் காணப்படும். அவள் கர்ப்பமடையும் காலத் தில் குழந்தையைத் தாங்கி வளர்ப்பதற்காக அது 1100 கிராம் அளவுக்கு எடை அதிகரித்து விடும். கர்ப்பகாலத்தில் அதன் கொள்ளளவும் 500 முதல் 1000 மடங்காகி விடும். பெண் களின் கருப்பை இந்த அளவுக்கு அதிசயங் கள் நிகழ்த்துவதற்கு அதன் தசைகளின் அமைப்பும், பெண்களுக்குள் சுரக்கும் பாலின ஹார்மோன்களின் செயல்பாடுகளும் தான் காரணம்.
    இந்த சாலட் உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி இந்த சாலட்டை சாப்பிடலாம். இன்று இந்த சாலட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முள்ளங்கி - 2
    வெள்ளரிக்காய் - 2
    கொத்தமல்லி தூள் - சிறிதளவு
    சீரகத்தூள் - சிறிதளவு
    தக்காளி - 1
    தயிர் - 1 கப்
    சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு

    முள்ளங்கி, வெள்ளரிக்காய்

    செய்முறை:

    முள்ளங்கி, வெள்ளரிக்காயை துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

    கடைந்த தயிருடன் கொத்தமல்லி தூள், சீரகத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.

    பின்னர் முள்ளங்கி, வெள்ளரிக்காய், தக்காளி கலந்து பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளை குறிப்பிட்ட நேரத்தில் காலையில் தினமும் உணவு சாப்பிட பழகிவிட்டால், அடுத்தடுத்த நாட்களில் அதே நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும்.
    பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் 7 முதல் 8 மணிக்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த நேரத்தில் வயிறு பசிக்கவில்லை என்று கூறி, நிறைய குழந்தைகள் சாப்பிடாமல் செல்வார்கள். ஆனால் காலை உணவுதான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். சாப்பிட்ட பின்பு அதுவே அஜீரணத்திற்கும் காரணமாகிவிடும்.

    குறிப்பிட்ட நேரத்தில் காலையில் தினமும் உணவு சாப்பிட பழகிவிட்டால், அடுத்தடுத்த நாட்களில் அதே நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும். எனவே குழந்தைகள் காலையில் சாப்பிட மறுத்தாலும் சில நாட்களுக்கு கட்டாயமாக சாப்பிடவைத்தால் பிறகு தானாகவே காலை 7 மணிக்குள் வயிறு பசிக்கத் தொடங்கிவிடும்.

    உணவை நன்கு மென்று நிதானமாக சாப்பிட வேண்டும். அப்போதுதான் ஜீரணம் எளிதாக நடைபெறும். உணவானது உமிழ் நீருடன் சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம். மீதி செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அதனால் அவசரமாக சாப்பிட்டாலும் அஜீரணம் தோன்றும்.

    காலையில் பள்ளி வேனை பற்றிய பயம் எல்லா பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இருந்து கொண்டிருக்கிறது. வேனை பிடிக்கும் அவசரத்தில் உணவை அள்ளி விழுங்கிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். அல்லது ‘பள்ளி வேன் வந்துவிட்டது’ என்று கூறி, காலை உணவை தவிர்க்கிறார்கள். இதனால் பள்ளிக் குழந்தைகள் பெரும்பாலும் ஜீரணக்கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

    கோதுமை மற்றும் கோதுமை உணவுகள், பால் மற்றும் பால் உணவுகளில் ‘குளூட்டின்’ என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய் ‘செலியாக்’ எனப்படுகிறது. இந்த நோய் தாக்கினால் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் வாடை வீசும். வயிறு வீங்கி, வலித்ததுபோல் இருக்கும். இந்த அறிகுறிகளை கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின் உடல்வளர்ச்சி தடைபடும். உடல் எடையும் குறையும்.

    அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் வயிற்றுப்போக்கு குறிப்பிடத்தக்கது. உணவு சாப்பிடும் பழக்கத்தில் ஏற்படும் முரண்பாடு மற்றும் சீதோஷ்ணநிலை மாறுபாடு ஆகியவை வயிற்றுப்போக்கிற்கு காரணமாகிறது. கோடைகாலத்தில்தான் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோடையில் சுத்தம், சுகாதாரமற்ற பழச்சாறு, பானங்கள் பருகுவது, சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவை வயிற்றுப்போக்கை உருவாக்குகிறது.

    பால் மற்றும் பால்வகை உணவுப் பொருட்கள் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். பாரம்பரியமாகவே சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. அவர்கள் பசும்பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சோயா பால் பருகலாம்.
    நமது பெற்றோருக்கு, பொருத்தமான ஒரு சிறந்த காப்பீடு எடுப்பதன் மூலம், நாம் நிம்மத்தியாக இருக்கலாம். பெற்றோர்களுக்கும் தேவைப்படும் போது சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கலாம்.
    வயதான பெற்றோருக்கான பொருத்தமான சிறந்த மருத்துவ காப்பீடு என்பது அவர்களுக்கான சிறந்த பரிசு என்றால் மிகையாகாது. நாம் வசிக்கும் இடத்தை கருத்தில் கொண்டு மருத்துவ காப்பீட்டு தொகை நிர்ணயிப்பது சிறந்தது. ஆட்டோ ரென்யூவல் முறையை தேர்வு செய்வதால், புதுப்பிக்கும் தேதியை தவற விடும் வாய்ப்பு இருக்காது. வரி சேமிப்பு மற்றும் வருடாந்திர உடல நல பரிசோதனைகள் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன

    நம்மை ஆளாக்கிய பெற்றோர்கள் என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள்.  பெரும் தியாகங்களை செய்துதான் பெற்றோர்கள் குழந்தைகளை ஆளாக்குகின்றனர். அவர்கள் முதுமை காலத்தில் அவர்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது நமது கடமை.

    அதே சமயம் மருத்துவ செலவுகள், நடுத்தர வர்த்தகத்தினர் சமாளிக்க முடியாத அளவில் தான் உள்ளது. நகரத்தில் மருத்துவ மனைக்குள் நுழைந்தாலே நமது சேமிப்புகள் அனைத்தும் காலியாகி விடும்.

    அப்படிப்பட்ட நிலையில் நமது பெற்றோருக்கு, பொருத்தமான ஒரு சிறந்த காப்பீடு எடுப்பதன் மூலம், நாம் நிம்மத்தியாக இருக்கலாம். பெற்றோர்களுக்கும் தேவைப்படும் போது சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கலாம்.

    நமது வாழ்க்கையையே நமக்காக அர்பணித்த பெற்றோருக்கு, நாம் செய்யும் சிறந்த உதவி இதுவாகத்தான் இருக்கும்.

    நமது வயதான பெற்றோர்களுக்கு மருத்துவ காப்பீடு எடுக்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    1. நாம் தேர்ந்தெடுக்கும் மருத்துவ காப்பீட்டு நிறுவனம், நம்பிக்கைக்கு உரிய நிறுவனமாக இருக்க வேண்டும். அதாவது அவசர காலத்தில் சேவை வழங்குவதிலும், க்ளைகளை செட்டில் செய்வதிலும் பிரச்சனை ஏதும் ஏற்படுத்தாத மருத்துவ காப்பீட்டு நிறுவனமாக இருக்க வேண்டும்.

    2. வயது அதிகம் ஆக ஆக, மருத்துவ காப்பீட்டை தொடங்குவது கடினம், பல காப்பீட்டு நிறுவனங்கள்  அதிக வயதானவர்களுக்கு புதிதாக காப்பீடு வழங்குவதில்லை. அதனால் நமது பெற்றோருக்கு, சிறிது முன் கூட்டியே மருத்துவ காப்பீட்டை எடுத்து விட வேண்டும். அது தான் பாதுகாப்பானது.

    3. மருத்துவ காப்பீட்டை சரியான நேரத்தில் புதுப்பிக்க வேண்டும். அதை தவற விடக்கூடாது. அப்பொழுது தான் அவர்கள் வாழ் நாள் முழுவதற்கும் அந்த காப்பீட்டை தொடர முடியும். தேவைப்பட்டால், ஆட்டோ ரென்யூவல் முறையை தேர்வு செய்யவும். இதனால் காப்பிட்டை புதுப்பிப்பதை தவற விடும் வாய்ப்பு இல்லை.  

    4. காப்பீடு எடுப்பதற்கு முன்னதாக இருக்கும் நோய்களுக்கு எந்த அளவிற்கு கவரேஜ் இருக்கும், அதற்கான விதிமுறைகள் என்ன என்பதை விரிவாக கேட்டு அறிய வேண்டும்.

    5. புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்கள் உணர்ச்சி ரீதியாக மட்டுமல்லாமல் நிதி ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் ஆகும். மேலும் இதற்கு நீண்ட கால பராமரிப்பு தேவைப்படுகிறது. எனவே, இதை  கருத்தில் கொண்டு அதற்கேற்ற வகையிலான காப்பீட்டை எடுப்பதன் மூலம் உங்களையும் உங்கள் பெற்றோர்களையும் மன உளைச்சலில் இருந்தும்  நிதிச் சுமையிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    6. நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, காப்பீட்டுத் தொகையை தேர்ந்தெடுக்கவும். பெருநகரத்தை பொருத்தவரை மருத்துவமனை செலவுகள் அதிகமாக இருக்கும்.  அதனை மனதில்வைத்துக் கொண்டு, காப்பீடு செய்யப்பட்ட தொகையை அதிகரித்து கொள்ளலாம்.  இதனால் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் நீங்கள்  நிம்மதியாக பெற்றோருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கலாம்.

    உங்கள் பெற்றோருக்கான பொருத்தமான சிறந்த காப்பிட்டு திட்டம் என்பது,  நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பரிசு என்றால் அது மிகையில்லை. இது அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வரி சேமிப்பு மற்றும் வருடாந்திர உடல நல பரிசோதனைகள் போன்ற பல்வேறு நன்மைகளையும் பெறலாம்.
    ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் சிறுநீரகங்கள், அட்ரினலின் சுரப்பிகள், மூளை, நரம்புமண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தச்சங்கிலி அமைப்பில் சிக்கல் ஏற்பட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
    மனித உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் வழியாக ரத்தம் ஓடுகிறது. அப்படி ரத்தம் இதயத்துக்கு வரும்போது குறிப்பிட்ட வேகத்தில் வரும். இதயத்தில் இருந்து வெளியே செல்லும்போது வேறொரு வேகத்தில் செல்லும். இந்த வேகத்துக்குப் பெயர்தான் ரத்த அழுத்தம். பொதுவாக ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. என்ற பாதரச அளவில் இருந்தால், அது இயல்பானது, பிரச்சினையில்லை.

    120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகிற அழுத்தம். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியே அனுப்பிய பிறகு, உடலில் இருந்து வருகிற ரத்தத்தைப் பெற்றுக்கொள்ளும். அப்போது ஏற்படுகிற ரத்த அழுத்தம் முன்னதைவிட குறையும். ரத்தம் அழுத்தம் என்பது எல்லோருக்கும் 120/80 மி.மீ. பாதரச அளவில் இருக்காது. எனவே, 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ.வரை உள்ள ரத்த அழுத்தத்தை ‘இயல்பானது’ என்று உலகச் சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் சிறுநீரகங்கள், அட்ரினலின் சுரப்பிகள், மூளை, நரம்புமண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தச்சங்கிலி அமைப்பில் சிக்கல் ஏற்பட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ரீ பைன்டு ஆயில் ஆகியவற்றைக் குறைந்த அளவில் பயன்படுத்துவது நல்லது. பாமாயில் வேண்டாம். ஆவியில் வேக வைத்த உணவு வகை மிகவும் ஏற்றவை. எப்போதாவது கோழிக்கறி அல்லது மீன் குழம்பைச் சாப்பிடலாம். காபி, தேநீருக்குப் பதிலாகப் பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீயைக் குடிக்கலாம். இவற்றில் நிறைந்துள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து உணவுகள் மிகவும் ஏற்றவை. இவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அத்துடன் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும், எடையையும் குறைக்கும். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், தக்காளி, கொய்யா, தர்பூசணி, மாதுளை, பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம்.

    பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்பதால் பால், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, இளநீர் ஆகியவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்குப் பூண்டு மிகவும் ஏற்றது. பூண்டில் உள்ள சத்துகள் ரத்தக் குழாயை விரிவடையச் செய்கின்றன. தமனிகளில் படியும் கால்சியம் தாதுக்களையும் தடுக்கின்றன.

    தலை சுற்றும்போது மட்டும், உயர் ரத்த அழுத்தம் இருக்குமோ என்று பலரும் சந்தேகப்படுவார்கள். அது மட்டுமல்ல தலைவலி, மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, காலில் வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவையும் உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகள்தான்.

    குடும்பப் பின்னணியில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும், 30 வயதைக் கடந்தவர்களும் தொடர்ந்து உயர் ரத்த அழுத்த அளவை கண்காணித்துவர வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டால் மாத்திரை இல்லாமல் உணவுப் பழக்கம் மூலம் சமாளிக்க முடியும். அதேநேரம், இதயம், மூளை, சிறுநீரகம், கண் எனப் பிற உறுப்புகளைப் பாதிக்கும் தன்மை உயர் ரத்த அழுத்தத்துக்கு இருப்பதால், முறையான சிகிச்சை அவசியம்.
    எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாமல் இருக்க, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன வழி உள்ளது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
    ஒவ்வொரு பெண்ணுக்கும் சுத்தமாக இருப்பது தான் பிடிக்கும். அப்படி சுத்தம் என்று வரும் போது அதில் அனைத்துமே (பிறப்புறுப்பும்) அடங்கும்.  மேலும் பெண்கள் எப்போதுமே  தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால், அவ்விடத்தில் துர்நாற்றம் மட்டுமின்றி, தொற்றுகளும் ஏற்பட்டு தீவிரமான பிரச்சனையை சந்திக்கக் கூடும்.

    குறிப்பாக பெண்கள் உறவில் ஈடுபடும் போது தன் துணை முகம் சுளிக்குமாறு தன் மீது எந்த ஒரு துர்நாற்றமும் வரக் கூடாது என்று அதிக சுத்தத்தைப் பின் பற்றுவார்கள். இப்படி பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள நிறைய பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

    ஆகவே எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாமல் இருக்க, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன வழி உள்ளது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  எலுமிச்சை மிகவும் சிறப்பான துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருள். அத்தகைய எலுமிச்சையின் இலையைப் பயன்படுத்தி பிறப்புறுப்பை சுத்தம் செய்தால், துர்நாற்றம் வீசுவது நீங்கும். ஏனெனில் எலுமிச்சையின் இலையில் லிமோனின் என்னும் பொருள், பிறப்புறுப்பில் எவ்வித தொற்றுகளும் வராதவாறு நல்ல சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.

    மேலும் எலுமிச்சையின் இலை பிறப்புறுப்பில் pH-ன் அளவை சீராக பராமரித்து, பிறப்புறுப்பை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் பராமரிக்கும்.  ஆப்பிள் சீடர் வினிகரை பெரிய டப்பில் உள்ள குளிக்கும் நீரில் சிறிது கலந்து, அந்த நீரில் 15 நிமிடம் உட்கார வேண்டும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகர் பிறப்புறுப்பை சுத்தம் செய்து விடும். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிடிக் பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

    கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதனை 1 கப் நீரில் கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பிறப்புறுப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும். சீமை சாமந்தி எண்ணெய் கூட பிறப்புறுப்பில் வீசும் துர்நாற் த்தைப் போக்க உதவும். அதற்கு 2 கப் நீரில் 1 துளி சீமை சாமந்தி எண்ணெய் சேர்த்து கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும்.

    பேக்கிங் சோடாவும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும். அதற்கு குளிக்கும் டப்பில் உள்ள நீரில் 1/2 கப் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்த நீரில் 20 நிமிடம் உட்கார்ந்து வந்தால், பேக்கிங் சோடா உடலின் pH அளவை சீராக்கி, உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும். தினமும் தயிரை

    பிறப்புறுப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு. துர்நாற்றமும் குறையும்.

    வெள்ளை வினிகரை குளிக்கும் டப்பில் உள்ள நீரில் கலந்து, அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதன் மூலமும் துர்நாற்றத்தைப் போக்க முடியும். டீ-ட்ரீ ஆயிலும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும். அதற்கு ஒரு காது சுத்தம் செய்யும் பட்ஸை, ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது டீ-ட்ரீ ஆயிலில் நனைத்து, பிறப்புறுப்பினுள் வைத்து 1 மணிநேரம் ஊற வைத்து வர வேண்டும்.

    நெல்லிக்காய் சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம். இதனால் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு. துர்நாற்றமும் குறையும். வெள்ளை வினிகரை குளிக்கும் டப்பில் உள்ள நீரில் கலந்து, அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதன் மூலமும் துர்நாற்றத்தைப் போக்க முடியும். டீ-ட்ரீ ஆயிலும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும்.

    அதற்கு ஒரு காது சுத்தம் செய்யும் பட்ஸை, ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது டீ-ட்ரீ ஆயிலில் நனைத்து, பிறப்புறுப்பினுள் வைத்து 1 மணிநேரம் ஊற வைத்து வர வேண்டும். நெல்லிக் காய் சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம் வெந்தயம் பெண்களுக்கு மிகவும் நல்லது. இந்த வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலோ அல்லது வெந்தயத்தை ஊற வைத்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவினாலோ, .துர்நாற்றம் போய் விடும்.
    ×