என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கன மழை, அதனால் அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் நீர் தேங்குவதன் காரணமாக பல்வேறு சரும தொற்றுகளுக்கு ஆளாகக்கூடும். மழைக் காலங்களில் ஏற்படும் சரும பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.
    உடலை வருத்தி எடுக்கும் கடுமையான கோடை வெப்பத்தில் இருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை மழைக்காலம் வழங்கினாலும் ஆரோக்கியத்திற்கு சில அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தும். கன மழை, அதனால் அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் நீர் தேங்குவதன் காரணமாக பல்வேறு சரும தொற்றுகளுக்கு ஆளாகக்கூடும். பொதுவாக கைகள், முதுகின் மேல் பகுதி, உச்சந்தலை, தொடைப்பகுதிகளில் வலி மற்றும் வீக்கம், சிறு கொப்பளங்கள் ஏற்படலாம். மழைக் காலங்களில் ஏற்படும் சரும பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

    முகப்பரு: முகப்பரு, சொறி போன்றவை பெரும்பாலானோர் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். சருமத்தின் வகையை பொறுத்து அவற்றின் வீரியம் அமைந்திருக்கும். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால் பாதிப்பு அதிகமாகும். சருமத்தில் அதிகப்படியாக எண்ணெய் சுரப்பு இருந்தால் பருக்கள் உண்டாகும். எண்ணெய் தன்மை இல்லாத இயற்கை சோப் மற்றும் முகம் கழுவும் கிரீமை உபயோகிக்கலாம்.

    வியர்வை: மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வியர்வை குறைவாக வெளிப்படும். அதனால் மாய்ஸ்ச ரைசர்கள் மற்றும் லோஷனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண் டும். சாப்பிடும் உணவும் சருமத்திலும், உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே எண்ணெய்யில் பொறித்த, வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சரும அழற்சி: மழைக்காலத்தில் சருமம் தொடர்பான நோய்கள் அதிகம் ஏற்படும். சருமத்தில் அரிப்பு, அழற்சி, சிவத்தல், தடிப்புகள் போன்ற தொற்றுக்கள் தோன் றும். சருமத்தில் எரிச்சலும் உண்டாகும். ‘சென்சிடிட்டிவ் ஸ்கின்’ கொண்டவர்களுக்கு இந்தவகை தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    வறண்ட சருமம்: பொதுவாக வறண்ட சருமம் கொண்டவர்கள் சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகள் தோன்றுதல், சரும செல்கள் உதிர்தல், அரிப்பு ஏற்படுதல் போன்ற பிரச்சினையை எதிர்கொள்வார்கள். இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்கு நல்ல மாய்ஸ்சரைசரை பயன்படுத்த வேண்டும். ரசாயனங்களை கொண்ட லோஷன்கள் பாதிப்பை அதிகப்படுத்தும் என்பதால் சரும பராமரிப்பு பொருட்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    பூஞ்சை தொற்றுகள்: தொடைகள், அக்குள், மூட்டுகள் போன்ற மடிப்பு கொண்ட பகுதிகளில் தொற்றுகள் உருவாகும். உச்சந்தலை, நகங்களில் பூஞ்சை தொற்றுகள் உண்டாகும்.

    மயிர்க்கால்கள்: இவை உடலை பாதுகாப்பதற்காகவே உள்ளன. தலையில் மட்டுமின்றி உடலில் பல பகுதிகளிலும் மயிர்க்கால்கள் உண்டு. வியர்வை, பூஞ்சை, பாக்டீரியா போன்றவை காரணமாக மயிர்க்கால்கள் பாதிப்புக்குள்ளாகும்.

    ரிங்வோர்ம்: இது பொதுவாக சருமத்தில் வட்ட வடிவத்தில் காணப்படும். சிவப்பு நிறத்தில் தடிப்புகளாகவோ, கொப்பளங் களாகவோ இருக்கும். இது பூஞ்சை காரணமாக ஏற்படும். சில சமயங்களில் உச்சந்தலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    நகங்கள்: தேங்கி நிற்கும் மழைநீர் மட்டு மின்றி ஷூ சாக்ஸும் தொற்றுக்கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கின்றன. அதனால் காலணிகள் அணிந்து வீடு திரும்பிய பின்பு கால் விரல்கள், நகங்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
    ‘உண்மையான நண்பர்கள், தோழிகள் ஒருபோதும் பிரிவை சந்திப்பவர்கள் அல்ல. ஒருவேளை தூரத்தில் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் இதயத்தில் இருந்து விலகி இருப்பதில்லை’ என்று சொல்வதுண்டு. நீண்ட தூரத்தில் இருக்கும் நீண்ட கால நட்பை தக்கவைத்துகொள்ள செய்வதற்கான விஷயங்கள்.
    வருடத்தில் ஒரு முறையாவது நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி பேசுவதற்கு திட்டமிட வேண்டும். அப்போது தங்களுடைய தற்போதைய நிலையை பற்றி அதிகம் பேசுவதை தவிர்த்துவிட வேண்டும். அதுதான் தாழ்வுமனப்பான்மைக்கு வித்திடும். அதே வேளையில் நண்பர்களின் தொழில் ரீதியான வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கலாம்.

    பள்ளிப்பருவம் தொடங்கி கல்லூரி காலகட்டம் வரை நட்பை வலுப்படுத்திக்கொள்ளும் நண்பர்கள் வாழ்வின் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கும்போது பிரிவை எதிர்கொள்கிறார்கள். நெருங்கி பழகிய தோழிகள் திருமணத்திற்கு பிறகு தங்கள் நட்பை தொடர்வது சவாலான விஷயமாகவே இருக்கிறது. ‘உண்மையான நண்பர்கள், தோழிகள் ஒருபோதும் பிரிவை சந்திப்பவர்கள் அல்ல. ஒருவேளை தூரத்தில் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் இதயத்தில் இருந்து விலகி இருப்பதில்லை’ என்று சொல்வதுண்டு. டிஜிட்டல் யுகமும் நட்புக்கு பாலமாக அமைந்திருக்கிறது. நெடுந்தொலைவில் இருந்தாலும் இணையத்தின் தொடர்புடனோ, குறுஞ்செய்திகள் வாயிலாகவோ நட்பை வலுப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அதனை முறையாக பின்பற்றும் விஷயத்தில்தான் பலவீனம் ஏற்படுகிறது. நீண்ட தூரத்தில் இருக்கும் நீண்ட கால நட்பை தக்கவைத்துகொள்ள செய்வதற்கான விஷயங்கள்:

    * டிஜிட்டல் யுகத்திலும் நண்பர்களை கண்டுபிடித்து நட்பை பலப்படுத்துவது கடினமானதாகவே இருக்கிறது. சிலர் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க விரும்ப மாட்டார்கள். மற்ற நண்பர்களை விட நாம் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கிறோமோ என்ற தாழ்வு மனப்பான்மை அவர்களுக்குள் இருந்து கொண்டிருக்கும்.

    * நெருங்கிய நண்பர்களுக்குள் தாழ்வு மனப்பான்மைக்கோ, ஈகோவுக்கோ இடமில்லை. பள்ளி பருவ காலங்களில் நெருங்கி பழகிய நண்பர்கள் குடும்ப சூழலுக்கு மாறிய பிறகு விலகி இருந்தால் அவர்களை நேரில் சந்தித்து பழைய நினைவுகளை மனம்விட்டு பேசலாம். நல்ல நட்புக்கு எந்தவொரு எதிர்பார்ப்புகளும் இருக்காது என்பதை புரிய வைக்கலாம். அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினாலே நாளடைவில் இருவருக்கும் இடையேயான இடைவெளி குறைந்துபோய்விடும். நல்ல நட்பு மீண்டும் துளிர்விட தொடங்கிவிடும்.

    * வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக ஊடகங்கள் வழியாக தொடர்பில் இருங்கள். மிகவும் நெருங்கி பழகாத நண்பர்களாக இருந்தால் அவர்களின் பிறந்தநாள், திருமண நாள் போன்றவற்றுக்கு சமூக ஊடகங்கள் வழியாக வாழ்த்து சொல்வதுடன் நிறுத்திவிடாதீர்கள். நேரில் சந்தித்தோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டோ வாழ்த்துகளை பரிமாறுங்கள். அது நட்பை மேலும் வலுப்படுத்த உதவும்.

    * பிறந்தநாள், திருமண நாட்களுக்கு பரிசுகளையும் அனுப்பி வைக்கலாம். இருவரும் நெருங்கி பழகிய சமயத்தில் மகிழ்ச்சியாக கழித்த நாட்களை நினைவூட்டும் புகைப்படங்களை அனுப்பி வைக்கலாம். அல்லது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங் களை கடிதங்களாக எழுதி அனுப் பலாம். சந்தோஷ தருணங்களை போல் நண்பர் துயரத்தில் வாடும் சமயத்திலும் அவருக்கு உற்றதுணையாக இருக்க வேண்டும். ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளை பேசி வருத்தத்தை போக்க முன்வர வேண்டும். அவைதான் உண்மையான நண்பர்களை அடையாளம் காட்டும்.

    * நீண்டகாலமாக நேரில் சந்திக்காத நண்பர்களை திடீரென்று சந்தித்து பேசலாம். எதிர்பாராத சந்திப்பு நட்பை மேலும் வலுவாக்கும். எந்தவொரு சூழலிலும் நீண்ட கால நண்பர்களுடனான தொடர்பை இழக்காதீர்கள்.
    வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள குரோமியம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய வெங்காயம் - 4,
    பூண்டுப் பற்கள் - 4,
    பச்சைமிளகாய் - 2,
    கெட்டியான தேங்காய்ப்பால் - அரை கப்,
    வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,  
    நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது - ஒரு டீஸ்பூன்,
    சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

    இதில், மூன்று கப் நீர் விட்டு மசாலா, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும்.

    வெந்ததும் சிறிது ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், கரைத்த சோள மாவு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.

    ஒரு கொதி வர ஆரம்பிக்கும்போது, தேங்காய்ப்பாலை ஊற்றி, கொதிக்கவிட்டு  கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்க வேண்டும்.

    சூப்பரான சத்தான வெங்காய சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஸ்மார்ட்போன்களில் ஆன்லைன் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பயனுள்ள அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொடுங்கள். அவர்களின் கல்வி அறிவு அதிகரிக்கும். கூடவே பொது அறிவும் கூடும்.
    ஸ்மார்ட்போன்களில் ஆன்லைன் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பயனுள்ள அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொடுங்கள். அவர்களின் கல்வி அறிவு அதிகரிக்கும். கூடவே பொது அறிவும் கூடும்.

    டாக்டர் பாண்டாஸ் ஐஸ் கிரீம் டிரக்(Dr.Panda’s Ice Cream Truck)

    ஐஸ்கிரீம் பிடிக்காத சுட்டிகள் உண்டா? அதனால்தான் ‘உங்களுக்குப் பிடித்த பிளேவர்களில் நீங்களே ஐஸ்கிரீமை உருவாக்குங்கள்’ என்கிறது, ‘டாக்டர் பாண்டா’ ஆப்ஸ்.

    டாக்டர் பாண்டா, ஒரு தள்ளுவண்டி மூலம் ஐஸ்கிரீம் விற்பவர். அவரிடம் இருக்கும் பொருட்களைக்கொண்டு, விதவிதமான ஐஸ்கிரீம்களை நீங்களே உருவாக்கலாம். ஐஸ்கிரீம் மட்டுமல்ல, இன்னும் பல வற்றைக் கற்றுத்தரும்படியான பல அப்ளிகேஷன்ஸ், டாக்டர் பாண்டா ஆப்ஸில் இருக்கிறது.

    கிளவுட் மேக்கர் (Cloud Maker)

    வானத்தில் உலாவும் மேகங்களில், விதவிதமான உருவங்களைக் கண்டுபிடித்து ரசிப்பது, சுவாரசிய மான விளையாட்டு. அப்படி, உங்கள் கற்பனையை வளர்க்கும் அழகு ஆப்ஸ் இது. இதில் வரும் மேகங்களை உங்கள் விருப்பப்படி மாற்றி, பட்டாம்பூச்சி, பறவை, குதிரை என விதவிதமான உருவங்களை உருவாக்கலாம்.

    டோகா லேப்(Toca Lab)

    வேதியியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கான அசத்தல் ஆப்ஸ் இது. தனிம வரிசை அட்டவணையில் உள்ள அனைத்துத் தனிமங்கள் பற்றியும் இதில் அறியலாம். முதலில், ஒரே ஒரு தனிமம் வழங்கப்படும். அதன் மூலம் பல சோதனைகள் செய்யும்போது, உங்களின் ஆய்வு முடிவுகள் வெளியாவது செம ‘த்ரில்லிங்’காக இருக்கும். உண்மையான ஆய்வகங்களைப் போல விபத்துக்கள் எதுவும் ஏற்படாது என்பதால், தைரியமாகச் செய்துபார்த்து, உங்கள் வேதியியல் அறிவை வளர்த்துக்கொள்ள லாம்.

    பிக்கபூ யூ.எப்.ஓ(Peekaboo UFO)

    ஐந்து வயதுக்குக் குறைவாக இருக்கும் சுட்டிகளின் கவனிப்புத்திறனை வளர்க்கும் விளையாட்டு ஆப்ஸ் இது. வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்திருக்கும் கிரகவாசிகள், நமது சுற்றுப்புறத்தில் ஒளிந்திருப்பார்கள். மரங்கள், பறவைகள், விலங்குகள், கட்டிடங் கள் மத்தியில் கலந்திருக்கும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலம், நமது பூமியில் உள்ள உயிரினங்கள் மற்றும் பொருட்களின் வடிவங் கள், எளிதாக மனதில் பதியும். 
    மார்பக பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம்.
    மார்பக புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். காலதாமதமாக திருமணம் செய்வது, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது போன்றவையும் இதற்கு காரணங்கள்.

    புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவே, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ந் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் புற்றுநோய் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றுவதே இதன் கருப்பொருளாகும். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம்.

    இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இவர்களில் 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 5.5 லட்சம் பேர் பெண்கள், 4.5 லட்சம் பேர் ஆண்களாகும். பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 6 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்றுநோயால் குறிப்பாக மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய காரணம்.

    மார்பக பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதேபோல ஆண்கள் தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு புகைப்பதே முக்கிய காரணம். தொண்டை புற்றுநோய் வருவதற்கு முன்பு குரலில் மாற்றம் ஏற்படும்.
    பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
    பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

    பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    வியர்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும், ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.

    பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.  பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

    இதய அடைப்பை நீக்கும், நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும், ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்கி, வீரியம் அதிகரிக்கச் செய்யும். பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றி விடும். தொண்டை சதையை நீக்கும்.
    கொரோனா நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டாலும், அதனால் ஏற்பட்ட வேலையிழப்பு அபாயகரமானதாக இருக்கிறது. இதில் பெண்கள் பெருமளவு வேலையிழப்பில் இருந்து தப்பித்து வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். ஆண்கள் வேலையிழப்பில் சிக்கியிருக்கிறார்கள்.
    அம்மா என்றால் வீட்டில் இருந்து குழந்தைகளை வளர்க்கவேண்டும். அப்பா வெளியே சென்று வேலை செய்து வருமானம் ஈட்டவேண்டும் என்பது முந்தைய நியதியாக இருந்தது. பின்பு அந்த நிலைமாறியது. அப்பா, அம்மா இருவருமே வெளியே சென்று வேலை செய்தனர். இருவர் வருமானத்தில் குடும்பம் இயல்பாக நடந்துகொண்டிருந்தது. அந்த இயல்புநிலையை கொரோனா தலைகீழாக மாற்றிவிட்டது. கொரோனா நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டாலும், அதனால் ஏற்பட்ட வேலையிழப்பு அபாயகரமானதாக இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பெண்கள் பெருமளவு இந்த தற்காலிக வேலையிழப்பில் இருந்து தப்பித்து வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். ஆண்கள் வேலையிழப்பில் சிக்கியிருக்கிறார்கள்.

    இதனால் இப்போது பல வீடுகளில் அம்மாக்கள் வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்பாக்கள் வீடுகளில் இருந்து குழந்தைகளை கவனித்துக்கொண்டு, குடும்பத்தையும் நிர்வகிக்கிறார்கள். இது தற்காலிகமான நிலைதான் என்றாலும், ஆண்கள் கடந்த மூன்று மாதங்களில் அதற்கு தயாராகிவிட்டார்கள் என்பது பெண்களின் கருத்தாக இருக்கிறது. “கொரோனா தாக்கம் தொடங்கியதும் சில மாதங்களாக குடும்பத்தினர் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிக்கிடந்தோம். அப்போது குடும்பத்தை நன்றாக புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் கிடைத்தது. சமையல் அறை வேலை, வீட்டை நிர்வகித்தல், குழந்தைகளை பராமரித்தல் போன்ற வேலைகளை அம்மா மட்டுமே செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதை எல்லோருமே புரிந்துகொண்டு முழுமனதோடு ஒத்தாசை செய்ததால், குடும்பத்தில் உள்ள அனைவருமே எல்லா வேலைகளுக்கும் பழகிக்கொண்டார்கள். அதனால் பெண்களாகிய நாங்கள் இப்போது வேலைகளுக்கு சென்றாலும், குடும்பத்தை கணவர் கவனித்துக்கொள்கிறார்” என்று குடும்பத்தலைவிகள் மகிழ்ச்சியாக சொல்கிறார்கள்.

    கொரோனாவால் இந்தியாவில் உருவாகியிருக்கும் இந்த மாற்றம் வளர்ந்த நாடுகளில் முன்பே ஏற்பட்டுவிட்டது. இங்கேயும், முன்பே சிலர் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர், புகழ்பெற்ற எழுத்தாளர் சேதன் பகத். வங்கியில் பணிபுரிந்து வந்த அவர் பணியை விட்டுவிட்டு தன் இரட்டை குழந்தைகளை பராமரிக்க வீட்டோடு இருந்துவிட்டார். ஓய்வு நேரத்தில் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய மனைவி உயர்ந்த பதவியில் இருந்ததால், அவரால் குடும்பத்தை கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக்க முடியவில்லை.

    சூழ்நிலைக்கு ஏற்றபடி நல்ல இல்லத்தரசராக மாறிக்கொண்ட சேதன் பகத் தன்னை ஒரு சிறந்த ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ என்று கூறி மகிழ்கிறார். அதை எல்லோரிடமும் பெருமையாக சொல்கிறார். அந்த உண்மையை ஒத்துக்கொள்வதில் தனக்கு தாழ்வுமனப்பான்மை ஒன்றும் இல்லை என்றும் கூறுகிறார்.

    இவரைப்போன்ற பிரபலமான மனிதர்கள் மட்டுமின்றி, இன்றைய சராசரி ஆண்கள்கூட மகிழ்ச்சியுடன் இல்லத்தரசர் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்.

    ஆனால் சில ஆண்களுக்கு இதில் வெளியே இருந்து வேறுமாதிரியான நெருக்கடிகளும் ஏற்படத்தான் செய்கின்றன. பெங்களூருவை சேர்ந்த கேசவ் சொல்கிறார்:

    “கொரோனாவால் நான் வேலையை இழந்துவிட்டேன். ஆனால் என் மனைவியோ மீண்டும் வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார். ‘வேலை இல்லாமல் போனதை பற்றி கவலைப்படாதீர்கள். எனது சம்பளத்தில் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும். இப்போது எந்த கவலையும் இன்றி குடும்பத்தை கவனித்துக்கொள்ளுங்கள்’ என்றார். எனக்கு அதுவும் சரியாகப்பட்டது. நான் இப்போது சமையல் உள்பட எல்லா வேலைகளையும் செய்துகொண்டு, என் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்.

    ஆனால் உறவினர்களில் சிலர் ‘மனைவி சம்பாத்தியத்தில் சாப்பிடுகிறவன் என்ற பெயர் வந்துவிடுவதற்குள் வேறு வேலையை பார்த்து சென்றுவிடு. நீ வீட்டில் எவ்வளவுதான் உழைத்தாலும் அது கணக்கில் வராது. என்றாவது ஒருநாள் உன் மனைவியும், குழந்தைகளும்கூட உன்னை தரம்தாழ்த்தி பேசும்’ என்று பயமுறுத்துகிறார்கள். ஆயிரம்தான் இருந்தாலும் சம்பாதிக்கிறவங்க தான் வீட்ல பெரியவங்க. உன் மனைவி எஜமானர் போலவும் நீ வேலைக்காரன் போலவும் ஆகிவிடுவாய் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நான் அதை எல்லாம் கவனத்தில் கொள்வதில்லை. இப் போது நான் மட்டுல்ல, எங்கள் குடும்பமே மற்ற குடும்பத்தைவிட மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார், கேசவ்.

    அம்மாக்கள்தான் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கவேண்டும் என்பது காலங்காலமாக பின்பற்றப்படும் கருத்தாக இருக்கிறது. அதில் அவர்கள்தான் தனித்திறமை பெற்றவர்கள் என்றும் நம்பப்படுகிறது. அதனால், அதை இப்போது அப்பாக்கள் செய்கிறார்கள் என்கிறபோது வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.

    “ஒவ்வொரு குடும்பத்தையும் சிறப்பாக உருவாக்குவது அவரவர் பொறுப்பு. தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு நமது குடும்ப நிலவரம் புரியாது. சிலர் நம்மை விமர்சிப்பதையும், சிலர் பாராட்டுவதையும் நாம் கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. நமது வாழ்க்கைக்கு எது முக்கியமோ அதை மட்டுமே கவனத்தில்கொண்டு செயல்படவேண்டும்” என்று குடும்ப நல ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோமா..!
    ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 13-ம் நாள் உலக இடது கை பழக்கம் உள்ளவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில், இது கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோமா..!

    இடது கை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள்.

    வலது கை பழக்கமுள்ளவர்களோடு ஒப்பிடு கையில் சராசரி சதவீதத்தில் இடது கை பழக்கமுள்ளவர்கள் தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின், பில் கேட்ஸ், லியோனார்டோ டாவின்சி, ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின் என இந்த பட்டியல் நீள்கிறது. உடல் அளவிலும், மனதளவிலும் சமநிலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால்தான் இவர்கள் மேலோங்கி வளர்கிறார்களாம். அதேபோல வலது கை பழக்கமுள்ளவர்களால் இடது கையில் வேலை செய்வது கடினம். ஆனால், இடது கை பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்கிறார்கள் எனவும் கண்டறிந்துள்ளனர்.

    அறிவியல் ரீதியாகவே இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள செயின்ட் லாரன்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஐ.க்யூ அளவு 140-க்கு மேல் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இடது கை பழக்கம் உள்ளவர்கள்தான்.

    இடது கை பழக்கமுள்ளவர்களின் மூளை சிறப்பாக செயல்படுகிறதாம். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து விளங்குவார்கள். இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது. தண்ணீருக்கு கீழேயும் கூட, இவர்களுக்கு நல்ல பார்வை திறன் இருக்கும்.
    எல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளாது. அது சிலருக்கு சருமத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால் சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆபத்துக்களை குறைக்கலாம்.
    சூரியனிடம் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்திற்கும், உடல் பாகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனை தவிர்க்க சருமத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்குவது அவசியம். ஏனெனில் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக சருமத்தை தாக்குவது முன்கூட்டியே வயதான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். சரும புற்றுநோய் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய ஆபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு சன்ஸ்கிரீன் உபயோகமாக இருக்கும். ஆனால் எல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளாது. அது சிலருக்கு சருமத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    சன்ஸ்கிரீனில் சேர்க்கப்படும் ரசாயனக்கலவைதான் பக்கவிளைவுகளுக்கு காரணமாக அமையும். புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க தோல் பகுதியை சுற்றி பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது மிருதுதன்மை வாய்ந்த சருமம் கொண்டவர்களை பாதிக்கும். ஆனால் சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆபத்துக்களை குறைக்கலாம்.

    * எல்லா நேரமும் சன்ஸ்கிரீனை குறைவான அளவில்தான் உபயோகிக்க வேண்டும். குறைந்த அளவைக்கொண்டே வெயில் படும் அனைத்து பாகங்களிலும் தடவிவிட வேண்டும்.

    * சன்ஸ்கிரீனை பூசிக்கொண்ட உடனே வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சன்ஸ்கிரீனை பூசிக்கொள்ள வேண்டும்.

    * உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியாகிக்கொண்டிருந்தால் ஐந்து மணி நேரம் கழித்து மீண்டும் சன்ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும்.

    * முகப்பரு பாதிப்புக்கு ஆளானவர்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடலாம். ஏனெனில் அது முகப்பருவின் வீரியத்தை அதிகப்படுத்திவிடும். அவர்கள் எண்ணெய் பசை இல்லாத அழகு சாதன பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். அதுபோல் உடலில் காயம், தடிப்பு உள்ளிட்ட சரும பிரச்சினைகள் இருந்தாலும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கக்கூடாது.

    * சன்ஸ்கிரீனில் இருக்கும் ரசாயனங்கள் சிலருடைய சருமத்தை கடுமையாக பாதிக்கும். சருமம் சிவத்தல், வீக்கம், அரிப்பு, தடிப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். வாசனை திரவியங்களை உள்ளடக்கிய சன்ஸ்கிரீன்கள் சிலருக்கு ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்தும். சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு தோல் மருத்து வரிடம் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

    * கண்களுக்கு அருகே சன்ஸ்கிரீனை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கண்களில் எரிச்சல், அரிப்பு, வெளிச்சத்தை பார்த்தால் கண் கூச்சம் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும். சன்ஸ்கிரீனில் ரசாயனத்தன்மை அதிகம் இருந்தால் கண் பார்வைத்திறன் பாதிப்புக்குள்ளாகுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    * சன்ஸ்கிரீனில் உள்ள சில பொருட்கள் மார்பக செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    * குழந்தைகளின் சருமம் மிருதுவானது என்பதால் சன்ஸ்கிரீன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் குழந்தைகளுக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

    * சன்ஸ்கிரீனை பயன்படுத்தியதும் சருமத்தில் கொப்பளங்கள், வலி, தடிப்புகள் போன்ற அறிகுறிகள் சிலருக்கு தோன்றும். அவர்கள் சன்ஸ்கீரினை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
    சிவப்பு அரிசியில் புரதம், நார்ச்சத்து, போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அரிசி - ஒரு கப்
    உளுந்து - கால் கப்
    வெங்காயம் - ஒன்று
    கேரட் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

    சிவப்பு அரிசி

    செய்முறை:


    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    சிவப்பு அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவிட்டு தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு மணி நேரத்துக்குப் பிறகு... மாவுடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    தோசைக்கல்லைச் சூடாக்கி மாவை கனமாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு ஊத்தப்பமாக சுட்டு எடுக்கவும்.

    சட்னியுடன் பரிமாறவும்.

    சத்தான சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாதவிடாய் காலத்தின்போது வெளிப்படும் ரத்தத்தின் நிறத்தை கொண்டே பெண்களின் உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்துவிடலாம்.
    மாதவிடாய் காலத்தின்போது வெளிப்படும் ரத்தத்தின் நிறத்தை கொண்டே பெண்களின் உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்துவிடலாம். இதுதொடர்பாக அமெரிக்கன் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி ஆய்வு ஒன்றை நடத்தி இருக்கிறது. அதில் மாதவிடாயின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறம் குறித்தும், அவை வெளிப்படுத்தும் அறிகுறிகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    மாதவிடாயின்போது வெளிர் சிவப்பு நிறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. பொதுவாகவே இந்த நிறத்தில்தான் உதிரப்போக்கு இருக்கும். அது ஆரோக்கியமான மாதவிடாய் நிறம் என்று கூறப்படுகிறது.

    இளஞ்சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு இருப்பது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதை வெளிப்படுத்தும். ஓட்டப்பந்தைய வீராங்கனைகள் இந்த பிரச்சினையை எதிர்கொள்வார்கள். விளையாடுவது, குறிப்பாக ஓடுவதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு பிரச்சினைக்கான அறிகுறி யாகவும் இருக்கலாம்.

    எந்த நிறமும் இல்லாமல் தண்ணீர் நிறத்திலோ அல்லது லேசான இளஞ்சிவப்பு நிறத்திலோ ரத்தம் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடுதான் அதற்கான காரணமாகும். கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

    அடர் பழுப்பு அல்லது அடர் சிவப்பு நிறமாக இருந்தால் கருப்பையினுள் பழைய ரத்தம் தேங்கி இருந்திருப்பதை குறிக்கும். ஆனால் இது சாதாரண விஷயமாக கருதப்படுகிறது.

    அடர் சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப்போக்கு இருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாகவும், புரோஜெஸ்ட்ரோன் அளவு குறைவாகவும் இருப்பதை குறிக்கும். கட்டிகள் பெரிய அளவில் இருந்தால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு இருப்பதாக அர்த்தம். தொடர்ந்து பெரிய கட்டிகள் வெளிப் பட்டால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

    கிரே மற்றும் கிரே கலந்த சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கருச்சிதைவு ஏற்பட்டாலோ அல்லது எஸ்.டி.டி, எஸ்.டி.ஐ. எனப்படும் பாலியல் நோய் தொற்றுகளுக்கு ஆளாகி இருந்தாலோ இந்த நிறத்தில் ரத்தம் வெளிப்படும். துர்நாற்றம் மற்றும் கடுமையான வலி ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.

    ஆரஞ்சு நிறத்தில் ரத்தம் இருந் தால் அதுவும் நோய்த்தொற்று இருப்பதை குறிக்கும். 
    பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகளுக்கு தாயார்தான் வீட்டுப் பாடம் சொல்லிக்கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. அதே நேரத்தில் சமீபகாலமாக கற்றல் விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகளுக்கு தாயார்தான் வீட்டுப் பாடம் சொல்லிக்கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த விஷயத்தில் தந்தை போதுமான ஈடுபாடு காட்டுவதில்லை என்ற மனக்குறை பிள்ளைகளிடமும் உருவாகி இருக்கிறது. அதே நேரத்தில் சமீபகாலமாக கற்றல் விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    மாணவர்களுக்கான ஆன்லைன் கற்றல் தளம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் 21.4 சதவீதம் பிள்ளைகள் தங்கள் படிப்பு விஷயத்தில் தந்தையின் ஈடுபாடு அதிகரித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். ஊரடங்கு கால கட்டத்திற்கு முன்பும் தந்தையின் பங்களிப்பு அதே மாதிரிதான் இருந்தது என்று 48.6 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள்.

    வீட்டுப்பாடம் செய்யும்போது டிஜிட்டல் தளங்களை கையாள்வதற்கும், புதிய தொழில்நுட்ப வசதிகள் மூலம் எளிமையாக கற்கும் யுக்தியை தெரிந்து கொள்வதற்கும் தந்தை உதவி செய்வதாக 34.1 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள். படிப்பில் தாங்கள் சாதிப்பதற்கு ஏதாவதொரு வகையில் தந்தையின் பங்களிப்பு இருப்பதாக 76.3 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆன்லைன் தளங்கள் வழியாக கல்வி சார்ந்த பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு தந்தை வழிகாட்டுவதாகவும் கூறி இருக்கிறார்கள். இதுகுறித்து, ஆய்வு செய்த ஆன்லைன் கற்றல் மையத்தின் தலைமை அதிகாரி ராஜேஷ் பைசானி கூறுகையில், “ஆன்லைன் கற்றல் தளங்கள் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களிடமும் பிரபலமடைந்து வருகின்றன. ஆன்லைன் கற்றல் தளங்கள் வழியாக பெற்றோர் கற்றுக்கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு எளிமையாக புரியவைக்கிறார்கள். பள்ளிகள் திறந்ததும் நேரடி பாடத்திட்ட முறையில் பாடம் பயில தொடங்கினாலும் ஆன்லைன் கற்றல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு தொடரும் என்று நம்புகிறோம்” என்கிறார்.
    ×