search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள்
    X
    மழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள்

    மழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள்

    கன மழை, அதனால் அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் நீர் தேங்குவதன் காரணமாக பல்வேறு சரும தொற்றுகளுக்கு ஆளாகக்கூடும். மழைக் காலங்களில் ஏற்படும் சரும பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.
    உடலை வருத்தி எடுக்கும் கடுமையான கோடை வெப்பத்தில் இருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை மழைக்காலம் வழங்கினாலும் ஆரோக்கியத்திற்கு சில அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தும். கன மழை, அதனால் அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் நீர் தேங்குவதன் காரணமாக பல்வேறு சரும தொற்றுகளுக்கு ஆளாகக்கூடும். பொதுவாக கைகள், முதுகின் மேல் பகுதி, உச்சந்தலை, தொடைப்பகுதிகளில் வலி மற்றும் வீக்கம், சிறு கொப்பளங்கள் ஏற்படலாம். மழைக் காலங்களில் ஏற்படும் சரும பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

    முகப்பரு: முகப்பரு, சொறி போன்றவை பெரும்பாலானோர் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். சருமத்தின் வகையை பொறுத்து அவற்றின் வீரியம் அமைந்திருக்கும். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால் பாதிப்பு அதிகமாகும். சருமத்தில் அதிகப்படியாக எண்ணெய் சுரப்பு இருந்தால் பருக்கள் உண்டாகும். எண்ணெய் தன்மை இல்லாத இயற்கை சோப் மற்றும் முகம் கழுவும் கிரீமை உபயோகிக்கலாம்.

    வியர்வை: மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வியர்வை குறைவாக வெளிப்படும். அதனால் மாய்ஸ்ச ரைசர்கள் மற்றும் லோஷனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண் டும். சாப்பிடும் உணவும் சருமத்திலும், உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே எண்ணெய்யில் பொறித்த, வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சரும அழற்சி: மழைக்காலத்தில் சருமம் தொடர்பான நோய்கள் அதிகம் ஏற்படும். சருமத்தில் அரிப்பு, அழற்சி, சிவத்தல், தடிப்புகள் போன்ற தொற்றுக்கள் தோன் றும். சருமத்தில் எரிச்சலும் உண்டாகும். ‘சென்சிடிட்டிவ் ஸ்கின்’ கொண்டவர்களுக்கு இந்தவகை தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    வறண்ட சருமம்: பொதுவாக வறண்ட சருமம் கொண்டவர்கள் சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகள் தோன்றுதல், சரும செல்கள் உதிர்தல், அரிப்பு ஏற்படுதல் போன்ற பிரச்சினையை எதிர்கொள்வார்கள். இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்கு நல்ல மாய்ஸ்சரைசரை பயன்படுத்த வேண்டும். ரசாயனங்களை கொண்ட லோஷன்கள் பாதிப்பை அதிகப்படுத்தும் என்பதால் சரும பராமரிப்பு பொருட்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    பூஞ்சை தொற்றுகள்: தொடைகள், அக்குள், மூட்டுகள் போன்ற மடிப்பு கொண்ட பகுதிகளில் தொற்றுகள் உருவாகும். உச்சந்தலை, நகங்களில் பூஞ்சை தொற்றுகள் உண்டாகும்.

    மயிர்க்கால்கள்: இவை உடலை பாதுகாப்பதற்காகவே உள்ளன. தலையில் மட்டுமின்றி உடலில் பல பகுதிகளிலும் மயிர்க்கால்கள் உண்டு. வியர்வை, பூஞ்சை, பாக்டீரியா போன்றவை காரணமாக மயிர்க்கால்கள் பாதிப்புக்குள்ளாகும்.

    ரிங்வோர்ம்: இது பொதுவாக சருமத்தில் வட்ட வடிவத்தில் காணப்படும். சிவப்பு நிறத்தில் தடிப்புகளாகவோ, கொப்பளங் களாகவோ இருக்கும். இது பூஞ்சை காரணமாக ஏற்படும். சில சமயங்களில் உச்சந்தலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    நகங்கள்: தேங்கி நிற்கும் மழைநீர் மட்டு மின்றி ஷூ சாக்ஸும் தொற்றுக்கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கின்றன. அதனால் காலணிகள் அணிந்து வீடு திரும்பிய பின்பு கால் விரல்கள், நகங்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
    Next Story
    ×