என் மலர்
ஆரோக்கியம்
உலர் ஆப்ரிகாட் பழம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடல்லாமல், பலவகையான நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தியையும் உடலுக்கு வழங்க வல்லவை.
ஆப்ரிகாட் பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை எவ்வகையிலும் பாதிக்காமல், அதன் நீர்ச்சத்துக்களை மட்டும் ஆவியாக்கி உலர வைப்பதால் கிடைப்பது தான் உலர் ஆப்ரிகாட் பழங்கள். இப்பழங்களின் ஊட்டச்சத்துக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாததினால், மேலும் பலவித நன்மைகளை உலர் ஆப்ரிகாட்களிலிருந்து நீங்கள் பெறலாம்.
இப்பழங்களில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் உலர் ஆப்ரிகாட்டில் சுமார் 158 மைக்ரோகிராம் அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளது. இந்த உலர் பழம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடல்லாமல், பலவகையான நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தியையும் உடலுக்கு வழங்க வல்லவை.
இரும்புச்சத்து நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக்கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக்கூடியதான செம்பும் இதில் நிறைந்துள்ளது. தினசரி உணவில் உலர்ந்த ஆப்ரிகாட்களை சேர்த்துக் கொள்வது, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கினால் அவதிப்படும் பெண்களுக்கு நன்மை பயக்கக்கூடியதான இரத்த சிவப்பணு உற்பத்திக்கு மிகவும் நல்லது.
உலர் ஆப்ரிகாட் பழங்களில் பெக்டின் உள்ளது. மேலும் இதில் மிதமான மலமிளக்கியான செல்லுலோஸும் நிறைந்திருப்பதால், இது மலச்சிக்கலை குணப்படுத்தவல்லதாகும். மலச்சிக்கலின் போது செல்லுலோஸ் கரையாத நார்ச்சத்து போல் இயங்கும். அதே வேளையில் பெக்டின் பொருட்கள், உடலில் உள்ள நீரின் அளவை குறைய விடாமல் காக்கும்.
செரிமான சக்தியை அதிகமாக்கும் பொருட்டு உலர் ஆப்ரிகாட்கள் உணவுக்கு முன்னதாக உட்கொள்ளப்படுகின்றன. அமிலங்களை மட்டுப்படுத்தக்கூடிய காரமானி இதில் இருப்பதே இதற்கு காரணமாகும்.
உலர் ஆப்ரிகாட்கள் காய்ச்சலை குறைக்க உதவும். ஆகவே சாறாகவோ அல்லது தேனுடன் சிறிது நீர் சேர்த்து திரவமாகவோ தயரித்துக் கொள்ளுங்கள். இத்திரவம் உங்களுக்கு தாக சக்தியையும் கொடுக்கும்.
உலர்ந்த ஆப்ரிகாட் பழங்கள் மிதமான மலமிளக்கியாக செயல்பட்டு, தேவையற்ற கழிவுகளை அகற்றி செரிமானக் குழாயை சீராக்க உதவுகின்றன. இது உடலின் ஜீரணத் திரவங்களுடன் எதிர்வினையாக செயலாற்றி, ஆல்கலைன் சூழலை உருவாக்கி, அதன் மூலம் செரிமானக்குழாயை சுத்திகரிக்க உதவுகிறது.
உலர்ந்த ஆப்ரிகாட், நீண்ட காலமாக கர்ப்ப கால மூலிகை மருந்தாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. இது குழந்தையின்மை, இரத்தக்கசிவு, வலிப்பு போன்றவற்றை குணமாக்குவதற்கும் உபயோகிக்கப்படுகிறது. இந்த உலர் பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட கூழ், பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை போக்கவல்லது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதனை மிதமான அளவு உட்கொள்வது நன்மையளிக்கும். கர்ப்ப காலத்தின் போது, இனிப்புகள் மற்றும் இதர நொறுக்குத்தீனிகளை உண்பதைக் காட்டிலும், உலர் ஆப்ரிகாட் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.
உலர் ஆப்ரிகாட்கள் பொட்டாசியத்தின் மிகச்சிறந்த மூலாதாரமாக விளங்குகின்றன. தாதுப்பொருளான பொட்டாசியம், திரவ சமநிலையை சீராக்கக்கூடிய எலக்ட்ரோலைட்டாகத் திகழ்வதோடு, தசை செயல்பாடு மற்றும் இதயத்துடிப்பை ஒழுங்காக்குவதற்கும் உதவுகிறது
உலர் ஆப்ரிகாட்கள் கூர்மையான கண்பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ போன்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ளன. சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆன வைட்டமின் ஏ சத்து, கட்டற்ற மூலக்கூறுகளை அகற்றுவதோடு, உயிரணுக்கள் மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்தை பேணி காப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. கட்டற்ற மூலக்கூறுகளின் அழிவு, மனித கண் விழியாடியை பாதித்து, கண்புரை நோய்கள் அல்லது வேறு ஏதேனும் வகையில் கண்களுக்கு பாதிப்பு உண்டாக்கும். உலர் ஆப்ரிகாட் உட்கொள்வது கண்புரை நோய் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறை கணிசமாகக் குறைக்கும்
உலர் ஆப்ரிகாட்கள் இரத்தசோகையை குணப்படுத்தக்கூடிய இரத்த சிவப்பணு உற்பத்திக்கு உபயோகிக்கப்படுகின்றன. ஏனெனில், உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய தாதுப்பொருட்களான இரும்பு மற்றும் செம்பு ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருப்பதனால் தான்.
காசநோய், ஆஸ்துமா மற்றும் மார்புச்சளி உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளை நிவர்த்திக்கக்கூடிய ஆற்றல், உலர் ஆப்ரிகாட்களின் ஆரோக்கிய நற்பலன்களுள் ஒன்றாகும்.
உலர் ஆப்ரிகாட் சாறு, வேனிற்கட்டி, சருமப்படை மற்றும் சொறி, சிரங்கு ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய அரிப்பை குணப்படுத்த உபயோகிக்கப்படுகிறது. ஆப்ரிகாட் ஸ்கரப், பெரும்பாலும் சருமத்தின் இறந்த செதில்களை அகற்றுவதற்கு உபயோகிக்கப்பட்டு வருகின்றது.

ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோர் வீட்டிலேயேதான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். வைரஸ் தொற்றுவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு வீடு தான் பாதுகாப்பான இடமாக அமைந்திருக்கிறது.
‘வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்’ என்பது கொரோனா வைரஸ் கற்றுக்கொடுத்த வாழ்க்கை பாடமாக மாறிவிட்டது. ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோர் வீட்டிலேயேதான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். வைரஸ் தொற்றுவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு வீடு தான் பாதுகாப்பான இடமாக அமைந்திருக்கிறது. அதற்கேற்ப வீட்டை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிப்பது அவசியமானது.
சுவாசிக்கும் காற்றும் தூய்மையாக இருக்க வேண்டும். ஏனெனில் காற்று மாசுபாடு என்றதும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, நச்சுக்கழிவுகள், வாகனங்கள் வெளியேற்றும் புகை, குப்பைக்கூளங்களில் இருந்து வெளியேறும் துர்நாற்றம்தான் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வரும். ஆனால் வீட்டிற்கு உள்ளே உருவாகும் காற்று மாசுவை பலரும் கவனத்தில் கொள்வதில்லை.
இதில் உண்மை என்னவென்றால் உட்புற காற்று மாசு வெளிப்புற காற்று மாசுவை விட 10 மடங்கு மோசமானது. உலக அளவில் பெரும்பாலானோர் தங்கள் அன்றாட வாழ்க்கையின் பெரும் பகுதியை வீடு, வேலை செய்யும் இடம், பள்ளிக்கூடங்களில்தான் செலவிடுகிறார்கள். கொரோனா தொற்று வீட்டிற்குள் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வைத்துவிட்டது. அதனால் கூடுதல் பாதுகாப் புடன் வீட்டிற்குள் இருக்க வேண்டியது அவசியமானது.
வீட்டின் உள்புற காற்று மாசுபடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. கிராமப்புறங்களில் சமைப்பதற்கு மரத்துண்டுகள் பயன்படுத்துவது, மண்ணெண்ணெய் விளக்குகள் உபயோகிப்பது காற்று மாசுபாட்டுக்கு வழி வகுக்கக்கூடும். நகர்ப்புறங்களில் நெரிசலான இடங்களில் வசிப்பது, மோசமான காற்றோட்ட வசதி, குளிர்சாதனங்களை சரியாக பராமரிக்காதது போன்றவை காற்று மாசுபாடுடன் தொடர்புடையவை. ஊதுவத்திகள், அறை யில் நறுமணம் வீசுவதற்காக பயன்படுத்தப்படும் ‘ரூம் பிரெஷ்னர்கள்’, கொசு விரட்டிகள் போன்றவை ஆவியாகும் கரிம சேர்மங்களை கொண்டிருக்கின்றன. எல்.பி.ஜி. கியாஸ் வெளியிடும் புகை, சமையலறை புகை, தூசுகள், வீட்டை சுத்தம் செய்யும் கிளனர்கள் போன்றவைகூட காற்று மாசுபாடுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் ஆண்டுதோறும் 26 லட்சம் பேரின் மரணத் திற்கு வீட்டின் உள்புற காற்று மாசுவும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கிறது. இது எய்ட்ஸ், மலேரியாவை விட பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, நாள்பட்ட நுரையீரல் கோளாறு (சி.ஓ.பி.டி) மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உட்புற காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. வீட்டில் காற்றின் தரம் குறைந்து மாசுபட்டிருந்தால் இருமல், தொண்டையில் எரிச்சல், கண் எரிச்சல், கண் உலர்வடைதல், தலைவலி, குமட்டல் மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். வீட்டினுள் காற்றின் தரத்தை மேம் படுத்துவதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
குளியல் அறையை காற்றோட்ட வசதியுடன் வைத்திருப்பது அவசியமானது. அங்கு காற்றை சீரமைப்பதற்கு ‘எக்ஸாஸ்ட் பேன்’ நிறுவுவது நல்லது.
வீட்டை சுத்தப்படுத்த பயன்படுத்தும் ரசாயனப்பொருட்களும் காற்றில் கலந்து மாசுவை உருவாக்கும். அதனால் வீட்டை சுத்தம் செய்யும்போது முக கவசம் அணிந்துகொள்வது நல்லது.
வீட்டிற்குள்ளோ, குளியல் அறையிலோ புகைப்பிடிப்பதை தவிர்ப்பதும் நல்லது. அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு உள்புற காற்றையும் மாசுபடுத்தும். அதனால் வீட்டில் இருக்கும் மற்ற நபர்களும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.
சமைக்கும் போது, ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். அல்லது ‘எக்ஸாஸ்ட் பேன்’ மூலம் சமையல் அறை புகையை வெளியேற்றுங்கள்.
வீட்டை சுத்தம் செய்தாலோ, வேறு வேலைகள் செய்தாலோ ஜன்னல்களை திறந்தே வைத்திருங்கள். வெளிக்காற்று அறைக்குள் ஊடுருவி காற்றின் தரத்தை மேம்படுத்தும்.
சாலையோரமாகவோ, மாசு அதிகம் கொண்ட பகுதி யிலோ வசித்தால் காற்றை சுத்திகரிக்கும் செடிகளை உள் அறைகளில் வளர்ப்பது நல்லது. காற்றை சுத்திகரிக்கும் கருவியையும் வீட்டில் நிறுவலாம்.

அதிக இனிப்புச்சத்துள்ள உணவுகளை உண்பது சருமத்தில் வீக்கம், பருக்கள், சோரியாசிஸ் தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
உணவில் நாம் சேர்த்துக்கொள்கிற அதிகப் படியான சர்க்கரை, ரத்தத்தில் கலந்து, நம் சருமத்தின் இரண்டாம் அடுக்கான டெர்மிஸில் உள்ள எலாஸ்டின் மற்றும் கொலாஜென் செல்களுடன் சேரும். அப்போது கிளைகேஷன் என்ற ரசாயன மாற்றம் நிகழும். அப்போது ஏஜிஈ (AGE- Advanced Glycation End Products) எனப்படும் தேவையற்ற மூலக்கூறுகள் வெளியேற்றப்படும். இவை மெள்ள மெள்ள டெர்மிஸ் லேயரில் படியத் தொடங்கும். எலாஸ்டின் மற்றும் கொலாஜென் திசுக்களின் வேலையே சருமத்தை மீள்தன்மையோடு இறுக்கமாக வைத்திருப்பதுதான்.
ஏஜிஈ படிவது அதிகரிப்பதால் எலாஸ்டினும் கொலாஜெனும் சருமத்தின் எலாஸ்டிக் தன்மையைத் தக்கவைக்கும் திறனை இழக்கின்றன. சருமம் தொய்வடைந்து, களைப் புடனும் முதிர்ச்சியுடனும் மாறும். இதைத் தவிர்க்க லோ கிளைசெமிக் இண் டெக்ஸ் உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
ஓர் உணவை உண்ணும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவானது எவ்வளவு சீக்கிரம் அதிகரிக்கிறது என்பதைக் காட்டுவதே கிளைசெமிக் இண்டெக்ஸ். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்த்த, மாவுச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவை அதிக கிளெசெமிக் இண்டெக்ஸ் கொண்டவை. பழுப்பு அரிசி, நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலமுள்ள உணவுகள் போன்றவை குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டவை.
அதிக இனிப்புச்சத்துள்ள உணவுகளை உண்பது சருமத்தில் வீக்கம், பருக்கள், எக்ஸீமா எனும் பிரச்னை, சோரியாசிஸ் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சீக்கிரமே ஏற்படும் முதுமைத்தோற்றம், இனிப்பு உணவுகளின் மீதான தொடர் ஈர்ப்பு, காரணமற்ற உடல் உப்புசம் போன்றவற்றை உணர்ந்தால் நீங்கள் அதிக இனிப்பு உணவுகளை உண்பதாக அர்த்தம். மேலும், உடலின் நோய் எதிர்ப்புத்திறன் குறையும். தூக்கமின்மை பிரச்னை வரும். தொடர்ச்சியாக பருமனும் அதிகரிக்கும். இவை எல்லாம் நீங்கள் அதிக சர்க்கரைச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் அறிகுறிகள்.

சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த கற்பூரவள்ளி, சுக்கு சேர்த்து ரசம் வைத்து சாப்பிடலாம். இந்த ரசம் விரைவில் நிவாரணம் தரும்.
தேவையான பொருட்கள் :
கற்பூரவள்ளி இலை - 5
சுக்கு - ஒரு சிறிய துண்டு
மிளகு - அரை டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
தக்காளி சாறு - 2 கப்

செய்முறை:
கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக அரைக்கவும்.
இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
மற்றொரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
கற்பூரவள்ளி இலை - 5
சுக்கு - ஒரு சிறிய துண்டு
மிளகு - அரை டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
தக்காளி சாறு - 2 கப்
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக அரைக்கவும்.
இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
மற்றொரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
சுவையான ஆரோக்கியம் தரும் கற்பூரவள்ளி சுக்கு ரசம் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சிளம் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டும்தான் இருக்கிறது.
பச்சிளம் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்காவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அந்த பருவத்தில் தாய்ப்பால் மட்டும்தான் உணவாக கருதப்படும். குழந்தைகளின் தசை உருவாக்கத்திற்கு தாய்ப்பால் உதவும். ஆனால் தாய் பால் புகட்டுவதற்கு வாய்பில்லாத சந்தர்ப்பங்களில் புட்டிப்பால் அல்லது பால் பவுடரில் இருந்து பால் தயாரித்து வழங்குவார்கள். குழந்தைகளுக்கு கொதிக்க வைத்த நீரில் பால் பவுடரை கலந்து கொடுப்பது பாதுகாப்பானதா? அதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து பார்ப்போம்.
குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்குவகிப்பதில் தாய்ப்பாலுக்கு மாற்றாக வேறு எதுவும் இருக்க முடியாது. இருப்பினும் தாய்ப்பால் கொடுக்க முடியாத பட்சத்தில் பவுடர் பால் கொடுக்கலாம். திரவநிலையில் இருக்கும் பாலை ஆவியாக்குவதன் மூலம் செயற்கையாக பால் பவுடர் தயாரிக்கப்படுகிறது. இதில் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவை யான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கலந்திருக்கும். மேலும் குழந்தைகளை நோய்த்தொற்று மற்றும் ரத்தசோகையில் இருந்து பாதுகாக்கவும் உதவும்.
பொதுவாகவே குழந்தைக்கான ஊட்டச்சத்து தாய் சாப்பிடும் உணவை பொறுத்து அமையும். சத்தான உணவுகளை சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு பவுடர் பால் கொடுக்கும் பட்சத்தில் தாய், உணவுக்கட்டுப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்காது.
வெளி இடங்களுக்கு செல்லும்போது தாய்ப்பால் கொடுப்பதற்கு சிரமப்படும் பட்சத்தில் பவுடர் பாலை தயக்கமின்றி கொடுக்க முடியும்.
தாய் மிகக் கடுமையான ஒரு சில நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி இருந் தால் தாய்ப்பால் கொடுக்கும்போது தாயிடம் இருந்து குழந்தைக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் டவுடர் பால் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
தாய்க்கு மார்பகத்தில் காயமோ, வலியோ இருந்து கொண்டிருந்தால் தாய்ப்பால் கொடுப்பதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் பவுடர் பால் கொடுக்கலாம்.
பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்படும். தாய்ப்பாலில் ஆண்டிபாடிகள் உள்ளன. அவை குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். பல்வேறு தொற்றுகளில் இருந்து குழந்தைக்கு பாதுகாப்பு வழங்கும். ஆனால் டவுடர் பாலில் ஆண்டிபாடிகள் இல்லை. அவை குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தாது.
பவுடர் பால் செயற்கையாக தயாரிக்கப்படுவதால் குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகாமல் போகலாம். செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் ஆகலாம். சில சமயங்களில் பால் குடித்த உடனே குழந்தை வாந்தி எடுக்கும். அதற்கு பவுடர் பால் ஒத்துக்கொள்ளாததுதான் காரணமாகும்.
பவுடர் பாலை கலக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். பவுடர் தூளின் அளவுக்கு ஏற்ப சரியான அளவில் சூடுநீர் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது. தாய்ப்பால் இயற்கையாகவே தாயின் உடலில் உற்பத்தி செய்யப்படுவதால் சரிவிகிதத்தில் ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கும். ஒருபோதும் தாய்ப்பாலுக்கு ஈடாக மற்றொன்றை கருதமுடியாது. தாய்ப்பால் சுரப்பு தடைபடும் பட்சத்தில் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்க வேண்டும்.

பெற்றோர் படிப்பு மட்டுமின்றி நீச்சல், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்ட பிற தனித்திறன்களையும் தங்கள் குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஒவ்வொரு பெற்றோரும் மற்ற குழந்தைகளை விட தங்கள் குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள். படிப்பு மட்டுமின்றி நீச்சல், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்ட பிற தனித்திறன்களையும் தங்கள் குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் ஒரு சில பயிற்சிகளை குறிப்பிட்ட வயதில் மேற்கொள்வதுதான் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்த வயதில் எந்த பயிற்சியை தொடங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
கால்பந்து: 3 முதல் 5 வயதுக்குள் கால்பந்து விளையாடுவதற்கு பயிற்சி பெற தொடங்கலாம். இந்த வயதுகளில்தான் குழந்தைகள் ஓட வும், குதிக்கவும், கால்பந்து அல்லது வேறு எந்த பந்தையும் வீசி எறிந்து விளையாடுவதற்கான சமநிலையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த வயதுகளில்தான் அவர்களின் பார்வை வளர்ச்சி அடையும் நிலையில் இருக்கும்.
கராத்தே: பெரும்பாலான குழந்தைகள் தற்காப்பு கலை பயிற்சிகளை 3 வயதில் பழக தொடங்குகிறார்கள். இருப்பினும் குழந்தைகளின் உடல் திறன் மற்றும் பள்ளிகளை பொறுத்து வயது மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் தற்காப்பு கலைகள் வெகுவிரைவிலேயே பயிற்றுவிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே பயிற்சி யைத் தொடங்குவது உடல் சமநிலை, கேட்கும் திறன், அடிப்படை தற்காப்பு திறன், கை, கண்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
இசை: 4 முதல் 7 வயது, இசைக்கருவிகளை கையாள்வதற்கும், கற்றுக்கொள்ள தொடங்குவதற்கும் ஏற்றது. குழந்தைகளின் கைகளும், மனமும் இசையின் அடிப்படைகளை புரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்கும்.
நீச்சல்: 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நீச்சல் பயிற்சியை தொடங்கலாம் என்று அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ அகாடெமி பரிந்துரைத்துள்ளது. அந்த வயதுதான் நீச்சலுக்கு பொருத்தமான உடல் வளர்ச்சி கொண்டதாக கருதப்படுகிறது.
பரத நாட்டியம்: பெரும்பாலான குழந்தைகள் 5 முதல் 6 வயதில் பரத நாட்டியம் கற்கத் தொடங்குகிறார்கள். பரத நாட்டிய நடன வடிவத்தில் கடினமான உடல் அசைவுகள் இருப்பதால் அதற்கேற்ப உடல்வாகு அமையும் வரை காத்திருப்பது நல்லது என்பது பரதநாட்டிய கலைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எந்த பொருட்களின் மீது எத்தனை நாள்கள் உயிர் வாழும் என்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியை அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் SARS-CoV-2 என்ற கொரோனா வைரஸ், தும்மலின் போது வெளியாகும் நீர்துளிகளால் காற்றில் பரவும் வைரஸ் 3 மணி நேரம் வாழ கூடியவை என கூறப்பட்டுள்ளது.
மனித முடியை விட 30 மடங்கு சிறியதான வைரஸ், காற்றில் பல மணி நேரம் உயிர் வாழக் கூடியவை. இந்த வைரஸ், அட்டை பொருட்களின் மீது 24 மணி நேரம் வாழக்கூடியவை.
பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேற்புறங்களில் 2 முதல் 3 நாள்கள் வரை வாழக்கூடியவை. கண்ணாடி மீது 96 மணி நேரங்கள் உயிருடன் இருக்க கூடியவை.
கைப்பிடிகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட மற்றும் லாமினேட் செய்யப்பட்ட மேல்பரப்புகளில் அதிக நாள்கள் உயிருடன் இருக்கும். ஆனால், தாமிர தகடுகள் வைரசை 4 மணி நேரத்தில் கொல்லும் தன்மையுடையவை என கூறப்படுகிறது.
கிருமி நாசினி தெளிக்க முடியாத துணி வகைகளில், கொரோனா வைரஸ் எத்தனை நாள்கள் இருக்கும் என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேற்பரப்புகளை 62 முதல் 71 சதவிகிதம் ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை தெளிப்பதன் மூலம் கொரோனா வைரசை ஒரே நிமிடத்தில் அழித்து விடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் சோடியம் குளோரைட் கலந்த ஹைட்ரஜன் பெராக்சைட் பிளிச்சை கொண்டு தூய்மைப்படுத்துவதன் மூலமும் கொரோனா வைரசை விரைவாக அழிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேப்போல் 56 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் கொரோனா வைரஸ் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள கூறுகின்றனர். 56 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 15 நிமிடங்களில் 10 ஆயிரம் வைரஸ் துகள்கள் கொல்லப்படும்.

உடலுறவின் போது பெண்களுக்குக் கடுமையான வலி உண்டாகிறது எனில் அது சாதாரண விஷயம் எனக் கடந்துவிடாதீர்கள். அதற்குப் பின் பல காரணங்கள் இருக்கலாம்.
உடலுறவின் போது பெண்களுக்குக் கடுமையான வலி உண்டாகிறது எனில் அது சாதாரண விஷயம் எனக் கடந்துவிடாதீர்கள். அதற்குப் பின் பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னென்ன என தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கும் அதுபோன்ற அறிகுறி இருந்தால் கவனம் செலுத்துதல் அவசியம்.
கர்ப்பப்பை வாய் தொற்று : கர்ப்பப்பையின் வாய் பகுதி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலுறவின் போதோ அல்லது பின்பும் கடுமையான வலியை உண்டாக்கும்.
பெண்ணுறுப்பு வறட்சி : உடலுறவின் போது மென்மையாக இருக்க பெண்ணுறுப்பின் வாய்ப் பகுதியில் திரவம் வெளியேறவில்லை எனில் வலி ஏற்படும்.
முடி , காயம் : பிறப்புறுப்பில் முடியின் தொற்றால் பருக்கள் உண்டாகி உராய்வின் போது வலியை உண்டாக்கலாம். உட்புறத்தில் காயங்கள் இருந்தாலும் உராய்வினால் வலி ஏற்படலாம்.
தவறான நிலை : உடலுறவு நிலைகளை படத்தில் பார்த்துவிட்டு அப்படியே முயற்சி செய்யாதீர்கள். புதிதாக அந்த நிலைகளை மேற்கொண்டாலும், தவறாக செய்தாலும் வலி உண்டாகும்.
குழந்தை பெற்ற தாய் : சமீபத்தில் தான் குழந்தையை ஈன்றிருக்கிறீகள் என்றாலும் வலி உண்டாகும்
ஆக்ரோஷமான உடலுறவு : ஆக்ரோஷமாக உடலுறவு மேற்கொண்டாலும் அடி வயிற்றில் , பிறப்புறுப்பில் வலி உண்டாகும்.
பாலியல் தொற்று : பலருடன் உடலுறவு மேற்கொள்பவர் எனில் அதனால் தொற்று ஏற்பட்டிருந்தால் வலி உண்டாகலாம். ஒருவருடன் உடலுறவு வைத்துக்கொண்டாலும் சில நேரங்களில் தொற்று ஏற்படலாம்.
கருத்தடை பயன்பாட்டில் சிக்கல் : ஆணுறையை சரியாக அணியவில்லை என்றாலும் பிறப்புறுப்பிற்குள் சென்று வலியை உண்டாக்கலாம்.
விருப்பமின்மை : உடலுறவில் விருப்பமில்லை எனில் பெண்களின் பிறப்புறுப்பு ஆண்களுக்கு இணைந்து கொடுக்காது. பிடிப்புடன் இருக்கும். அந்த சமயத்தில் நுழைய முடியாமல் வற்புறுத்தும்போது வலி ஏற்படும்.
பயம் , பதட்டம் : உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மை, பயம், பதட்டம் போன்றவை இருந்தாலும் அந்த உடலுறவை அசௌகரியமாக்கும். அந்த சமயத்தில் உடலுறவு மேற்கொண்டாலும் அது வலி கொண்டதாக இருக்கும்.

ஒருவர் தனது துணைக்கு சட்டப்படி வழங்க கடமைப்பட்டுள்ள நிதி ஆதரவைத்தான் ஜீவனாம்சம் என்று அழைக்கிறார்கள். பிரிவதற்கு முன்பாகவும் தரப்படலாம் அல்லது பிரிந்த பிறகு பராமரிப்பு செலவுக்காகவும் பெறப்படலாம்.
விவாகரத்து சுமூகமாக அமைய அது இரு தரப்பினருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் விதிகளை அறிந்திருக்க வேண்டும். சட்டப்படி உங்கள் உரிமைகள் எவை மற்றும் அவற்றை கோருவதற்கான வழிகள் பற்றி அறிந்திருந்தால் விவாகரத்து போன்ற சிக்கலான நேரங்களில் பணம் பற்றி பேசுவது எளிதாக அமையும்.
ஒருவர் தனது துணைக்கு சட்டப்படி வழங்க கடமைப்பட்டுள்ள நிதி ஆதரவைத்தான் ஜீவனாம்சம் என்று அழைக்கிறார்கள். பிரிவதற்கு முன்பாகவும் தரப்படலாம் அல்லது பிரிந்த பிறகு பராமரிப்பு செலவுக்காகவும் பெறப்படலாம். இதைப் பெறும் உரிமை என்பது திருமண மற்றும் விவகாரத்து சட்டங்களின் முக்கிய அம்சமாகும்.
வேலைக்கு செல்வதால் ஜீவனாம் சம் பெற முடியாது என சொல்லி யாரேனும் ஏமாற்ற முயன்றால் அவர்கள் முகத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி) 125வது பிரிவை தூக்கி வீசவும். “பணிபுரியும் பெண்ணாக இருப்பது ஒரு பெண் ஜீவனாம்சம் பெறுவதில் இருந்து தகுதி இழக்கச் செய்யவில்லை என இந்தப் பிரிவு தெரிவிக்கிறது. ஆனால், வேலை மூலம் மட்டுமே தன்னை பராமரித்துக்கொள்ள முடியாது என்றும் தன் சம்பளத்தைவிட கணவரது சம்பளம் அதிகம் என்றும் அவர் நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும்.
கணவரின் அந்தஸ்திற்கு ஏற்ப மனைவி வாழ வழிசெய்வதே இதன் நோக்கம்” என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பர்னாலி பஸக். மதம், சாதி, இனம், படிப்பு ஆகிய பேதங்கள் இல்லாமல் எந்த ஒரு பெண்னும், தன்னை பராமரித்துக்கொள்ள முடியாவிட்டால், அவரது கணவரால் ஆதரவு அளிக்க முடியும் என்றால் அவரிடம் இருந்து பராமரிப்பு கோரலாம். “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சமூக நீதி வழங்குவதே இந்த பிரிவின் முக்கிய நோக்கம்” என்கிறார் பர்னாலி. விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்யாவிட்டாலும் கூட நீங்கள் பராமரிப்பு கோர தகுதி உடையவர்.
ஒரு ஆண் அவரது மனைவிக்கு பராமரிப்பு வழங்க முடியுமா என்பதை தீர்மானிக்க, நீதிமன்றம் அவரது சொத்துக்கள், வருமான வழிகள் ஆகியவற்றை பரிசீலிப்ப துடன், ஆதரவு அளிப்பதற்கான அவரது ஆற்றலையும் பார்க்கிறது. “எனது கட்சிக்காரர் ஒருவரது கணவருக்கு டேராடூனில் பல ஏக்கர் நிலம் மற்றும் சொந்த வர்த்தம் இருந்தது.
ஆனால் ஜீவனாம்சம் என வந்தபோது, அவர் நீதிமன்றத்தில் தன்னை செல்லாக்காசாக அறிவித்துக்கொண்டார். மற்றொரு வழக்கில் எனது கட்சிக்காரரின் கணவர் அதிக வருவாய் அளித்த தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வேலைக்கு போகும் தனது மனைவியிடம் இருந்து ஜீவனாம்சம் கோரினார். ஆண்கள் சொத்துக்களை தங்கள் பெயரில் வாங்காமல் பெற்றோர் பெயரில் வாங்கும் வழக்கத்தையும் வைத்துக்கொண்டு, தங்கள் பெயரில் சொத்து இல்லாமல் பார்த்துக்கொள்கின்றனர்” என்று சொல்கிறார் பர்னாலி.
ஜீவனாம்சம் போன்ற சிக்கலான விஷயத்தில் நீதிமன்றங்கள் மிகவும் கவனமாக எல்லா அம்சங்களையும் பரிசீலிக்கின்றன. இரு தரப்பினரும், தங்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பட்டியலிட வேண்டும்.

தட்டப்பயறில் கலோரிகளும் கொழுப்பும் குறைவாகவே உள்ளது. தட்டை பயறுகளில் நார்ச்சத்து வளமையாக உள்ளதால், உடல் எடையை குறைக்க இது முக்கிய பங்கை வகிக்கிறது.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் - 1
தட்டப்பயறு - 50 கிராம்
தக்காளி - 1
சிவப்பு குடைமிளகாய் - 1
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
இந்துப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு

செய்முறை
தட்டப்பயறை வேக வைத்து கொள்ளவும்.
வெள்ளரிக்காய், தக்காளி, குடைமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த தட்டப்பயறை போட்டு அதனுடன் காய்கறிகளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அடுத்து அதில் உப்பு, மிளகுத் தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி கலந்து கலக்கிப் பரிமாறலாம்.
வெள்ளரிக்காய் - 1
தட்டப்பயறு - 50 கிராம்
தக்காளி - 1
சிவப்பு குடைமிளகாய் - 1
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
இந்துப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை
தட்டப்பயறை வேக வைத்து கொள்ளவும்.
வெள்ளரிக்காய், தக்காளி, குடைமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த தட்டப்பயறை போட்டு அதனுடன் காய்கறிகளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அடுத்து அதில் உப்பு, மிளகுத் தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி கலந்து கலக்கிப் பரிமாறலாம்.
சூப்பரான தட்டப்பயறு காய்கறி சாலட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மற்ற வேளைகளில் முகத்தை கழுவாவிட்டாலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும். அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
முகத்தை தண்ணீரில் அடிக்கடி கழுவுவது சரும பராமரிப்பின் ஒரு அங்கமாகும். அது அசுத்தங்கள், அழுக்குகளில் இருந்து சருமத்தை காக்க உதவும். நிறைய பேர் காலையில் எழுந்ததும் முகத்தை கழுவுவார்கள். அதன்பிறகு எப்போதாவதுதான் கழுவுவார்கள். பல்வேறு சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்வதற்கு முகத்தை அவ்வப்போது கழுவுவது அவசியமானது. மற்ற வேளைகளில் முகத்தை கழுவாவிட்டாலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும். அதற்கான காரணங்கள்:
வீட்டை விட்டு வெளியே சென்று வரும்போது சருமத்தில் அழுக்குகள், மாசுக்கள் படிவது தவிர்க்கமுடியாதது. அது சருமத்தை எதிர்மறையாக பாதிக்கும். முகத்தை கழுவும்போது அழுக்குகள் நீங்கும். சருமத்தில் இருக்கும் மாசுக்களின் வீரியம் குறைந்துபோகும்.
முகத்தில் படியும் அழுக்குகள் சரும துளைகளை அடைத்துவிடும். அதனால் பல்வேறு சரும பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருடைய முகத்தில் கருப்பு நிறத்திலோ, வெள்ளை நிறத்திலோ ஆங்காங்கே புள்ளி கள் தென்படும். அவை சரும துளைகள் அடைபடுவதால் ஏற்படுபவை. முகத்தை கழுவும்போது சரும துளைகள் சுவாசிக்கவும் வழிபிறக்கும்.
முகப்பரு ஏற்படுவதற்கு மோசமான சரும பராமரிப்பும் ஒரு காரணமாகும். சரும துளைகள் அடைப்பு, அழுக்குகள், தூசுக்கள் படிவது, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், வாழ்க்கை முறை போன்றவை இதர காரணங்களாகும். சருமத்தை தூய்மையாக பராமரிக்கும்போது முகப்பரு பிரச்சினை எட்டிப்பார்க்காது.
இரவில் தூங்க செல்லும் முன்பு சருமத்தை கழுவும்போது அதில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் சுவாசிப்பதற்கு வழிவகை ஏற்படும். குறிப்பாக மேக்கப்பை நீக்கி விடுவது அவசியமானது. இரவில் முகம் கழுவுவது முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அப்புறப்படுத்துவதற்கும் உதவும். புதிய செல்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுவதோடு சருமம் பிரகாசமாக ஜொலிப்பதற்கும் வழிவகை ஏற்படும்.

சில நேரங்களில் குழந்தையின் அழுகைக்கான காரணம் தெரியாமல் அம்மாக்களே தவித்துப்போவார்கள். ஆனால், பதற்றமடையாமல் குழந்தையின் அழுகையை நிதானமாக கவனித்தால், தாயாலே காரணத்தை எளிதாக கண்டறிந்துவிட முடியும். குழந்தைக்கு அழுகை தான் மொழி.
குழந்தைகள் எப்போது அழும் என்று யாருக்கும் தெரியாது. ஏன் அழுகின்றன என்ற காரணமும் பலருக்கு புரியாது. அதனால் சில நேரங்களில் குழந்தையின் அழுகைக்கான காரணம் தெரியாமல் அம்மாக்களே தவித்துப்போவார்கள். பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டும் குழந்தை அழுகையை நிறுத்தாதபோது, என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய் பரிசோதிக்கும் சூழ்நிலைகூட ஏற்பட்டுவிடும்.
ஆனால், பதற்றமடையாமல் குழந்தையின் அழுகையை நிதானமாக கவனித்தால், தாயாலே காரணத்தை எளிதாக கண்டறிந்துவிட முடியும். குழந் தைக்கு அழுகைதான் மொழி. தகவல் தொடர்புக்கான மாற்றுவழி எதுவும் அதற்கு தெரியாததால், தனக்கு தெரிந்த அழுகை மொழி மூலமே தனது பசி, வலி, அசவுகரியம், நோய் போன்ற பலவற்றையும் குழந்தை வெளிப்படுத்தும். உற்றுக் கவனித்தால் அழுகை மூலம் குழந்தை வலியுறுத்தும் காரணத்தைக் கண்டறிந்து விடலாம்.
குழந்தையின் அழுகைக்கு பெரும்பாலும் பசிதான் காரணமாக இருக்கிறது. அழுகையோடு கை விரலை வாய்க்குள் கொண்டு செல்வது, பால்குடிப்பதுபோல் நாக்கை துழாவுவது போன்றவைகளை செய்தால் அப்படியே குழந்தையை அள்ளி எடுத்து மார்போடு அணைத்து பால் புகட்டினால் போதும், குழந்தை பசியாறி அழுகையை நிறுத்திவிடும்.
போதுமான அளவு குழந்தைகள் தூங்காவிட்டாலும் அழுதுகொண்டிருக்கும். அப் போது தாலாட்டு பாடியபடி லேசாக தட்டிக்கொடுத்தால் தூங்கிவிடும். எழுந்து நடந்து தோளில் போட்டு தட்டிக்கொடுத்தாலும் உடனே தூங்கும். தொட்டிலில் இட்டு பாடிக்கொண்டே ஆட்டினாலும் சீக்கிரமாக தூக்க நிலைக்கு சென்றுவிடும்.
சிறுநீர் கழித்து ‘டயாபர்’ நன்றாக நனைந்து தொங்கி அசவுகரியத்தை ஏற்படுத்தினாலும் அழும். உடனடியாக அந்த டயாபரை மாற்றிவிட்டால் அழுகை நின்றுபோகும்.
பால் குடித்து முடிந்ததும் வாயு மேல்எழும்பி வரும் தொந்தரவாலும் குழந்தைகள் அழும். பால் குடித்த உடனே குழந்தையை கீழே கிடத்தாமல், தோளில் படுக்கவைத்து தட்டிக்கொடுத்தால் ஏப்பம் வெளியேறி அழுகை நீங்கிவிடும்.
குழந்தை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதால், வாயுவால் வயிற்றுவலி ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளலாம். அப்போது வாயுத் தொந்தரவைப் போக்கும் மருந்தை குழந்தைக்கு புகட்டவேண்டியதிருக்கும். அதை கொடுத்த பின்பும் அழுகை நீடித்தால், மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறவேண்டும்.
பற்கள் வெளிப்படும்போது சில குழந்தைகள் அசவுகரியத்தை உணரும். அதனாலும் அழுவதுண்டு. நான்கு மாதத்தில் இருந்தே பற்கள் முளைக்கத் தொடங்கும். அப்போது கையில் கிடைப்பதை எல்லாம் வாய்க்கு கொண்டுசென்று கடிக்க முயற்சிக்கும். இந்த தருணத்தில் சுத்தமான காட்டன் துணியால் குழந்தையின் ஈறுகளை துடைத்துவிட்டுக் கொண்டிருக்கவேண்டும். குழந்தைகள் கடிப்பதற்கு ஏற்ற பொம்மைகளையும் வாங்கித்தருவது நல்லது.
மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு குழந்தையை கொண்டுசெல்லும்போது திடீரென்று அழுதால் அந்த சூழ்நிலை குழந்தைக்கு பிடிக்கவில்லை என்பதை உணருங்கள். போதுமான அளவு காற்று கிடைக்காமல் இருக்கலாம். அதிகமான சத்தம் இருந்துகொண்டிருக்கலாம். அதனால் குழந்தை அழும்போது முடிந்த அளவு சீக்கிரமாக அந்த பகுதியில் இருந்து வெளியேறிவிடுங்கள்.
குழந்தை தனிமையை உணர்ந்தாலும் திடீரென்று அழும். அது விளையாடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி தாய் வெளியேறிவிட்டால் உடனே அழும். தாய் அருகில் இருப்பதை உணர்த்தினால் அந்த அழுகை நின்றுவிடும். தொடுதலாலோ, சத்தத்தினாலோ தான் அருகில் இருப்பதை குழந்தைகளுக்கு தாய்மார்கள் உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டும்.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதையும் குழந்தை அழுகையால்தான் வெளிப்படுத்தும். எவ்வளவு ஆறுதல்படுத்தியும் விடாமல் தொடர்ச்சியாக, உச்சமான சத்தத்துடன் குழந்தை அழுதுகொண்டிருந்தால் நோயால் குழந்தைக்கு அசவுகரியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். காய்ச்சல், வாந்தி, எடைகுறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் குழந்தையை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தவேண்டும்.