என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    எலும்பு மூட்டு சிதைவு நோயால் ஏற்படும் குறைபாடுகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்து சோழமண்டலம் எலும்பியல் சங்க தலைவர் பேராசிரியர் டாக்டர் நீலகிருஷ்ணன், செயலாளர் டாக்டர் நடராஜன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
    எலும்பு மூட்டு சிதைவு நோயால் ஏற்படும் குறைபாடுகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்து சோழமண்டலம் எலும்பியல் சங்க தலைவர் பேராசிரியர் டாக்டர் நீலகிருஷ்ணன், செயலாளர் டாக்டர் நடராஜன் ஆகியோர் கூறுகையில், இந்தியாவில் 2012-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு 4-ந் தேதி எலும்பு மூட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு எலும்பு மூட்டு சிதைவு நோயால் ஏற்படும் குறைபாடுகளை தவிர்ப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய எலும்பியல் சங்கம் மற்றும் தமிழ்நாடு எலும்பியல் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மூட்டு சிதைவு என்பது முழங்கால், கணுக்கால், முதுகெலும்பு ஆகிய பகுதிகளில் சிதைவு மட்டுமின்றி, வலியையும் உண்டு பண்ணுகிறது. இதை தவிர்க்கும் வகையில் ஆகஸ்டு முதல் வாரத்தில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தும், மருத்துவமனைகளில் விளம்பர பதாகைகள் வைத்தும், பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    எலும்பு மூட்டு சிதைவு நோய் பாதிக்காமல் இருக்க அனைவரும் சராசரி உடல் எடையை பராமரிப்பது அவசியம். தினமும் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. போதுமான விட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ள ஆரோக்கியமான உணவு வகைகளை உண்பது, உடற்பயிற்சிகள் மூலம் தசைகளின் வலிமையை மேம்படுத்துவது, மூட்டுகளை அதிகமாகவும், தவறாகவும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவரிடம் சிகிச்சையும், ஆலோசனையும் பெற வேண்டும். விளையாட்டு மற்றும் பணிகளின்போது காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் மூட்டு சிதைவு ஏற்படுவதை தவிர்க்க வழிவகை செய்யலாம். குறிப்பாக சுய மருத்துவம் மற்றும் நாட்டு மருத்துவத்தை தவிர்க்க வேண்டும் என்றனர்.
    உடலளவிலும், மனதளவிலும், சுற்றுப்புறத்தை அணுகும் விதத்திலும் மாறுபட்டுக் காணப்படுகிற, வெவ்வேறு குணாதிசயங்களைக்கொண்ட ஆணும், பெண்ணும் இல்லறத்தில் ஒன்றாக இணைவது சாதாரண விஷயம் இல்லை.
    திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண்கள்கூட முதலிரவை நினைத்து கொஞ்சம் கலங்கவே செய்கிறார்கள். ‘அது பலருக்கு மோசமான இரவாகி இருக்கிறது’ என்று நண்பர்கள் முன்பு சொன்ன கிளர்ச்சியூட்டும் திகில் கதைகள் எல்லாம், திருமணம் செய்துகொள்ளப்போகும் காலகட்டத்தில் நினைவுக்கு வந்து அவர்களுக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். முதல் இரவில் ஏற்படும் கசப்பு சில தம்பதிகளை விவாகரத்து வரை கொண்டு சென்றிருப்பதாகவும் கேள்விப்பட்டு அவர்கள் பெருங்குழப்பத்திற்கு ஆளாகிவிடுவதும் உண்டு.

    மணவாழ்க்கையில் இணையும் ஆணும், பெண் ணும் முதலில் எதிர்மறையான சம்பவங்களை நினைத்து மனக்குழப்பம் அடைவதை தவிர்க்கவேண்டும். ‘எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்ற நம்பிக்கையை மனதிற்குள் விதைக்கவேண்டும். தன்னம்பிக்கையும், மனஅமைதியுமே வெற்றிகரமான முதல் இரவுக்கு அடிப்படை தேவை.

    திருமணம் என்பது எங்கெங்கோ பிறந்து வளர்ந்த ஆணையும், பெண்ணையும் வாழ்க்கையில் ஒன்றாக இணைக்கிறது. கலாசாரம், பண்பாடு, வளர்ப்பு முறை, பழக்க வழக்கங்கள், நடை உடை பாவனைகள் என எல்லாவற்றிலும் வேறுபட்ட அவர்கள் இருவரும் திருமணத்தின் மூலம் ஒன்று சேர்ந்து இல்லறத்தை ஆரம்பிக்கிறார்கள்.

    உடலளவிலும், மனதளவிலும், சுற்றுப்புறத்தை அணுகும் விதத்திலும் மாறுபட்டுக் காணப்படுகிற, வெவ்வேறு குணாதிசயங்களைக்கொண்ட ஆணும், பெண்ணும் இல்லறத்தில் ஒன்றாக இணைவது சாதாரண விஷயம் இல்லை. அந்த இணைப்பு வெற்றிபெற வேண்டும் என்றால், இரண்டு தரப்பிலுமே அபரிமிதமான புரிதலும், அனுசரித்துப்போகும் தன்மையும், அசாத்தியமான பொறுமையும் வேண்டும்.

    மனம்விட்டுப் பேசுவதுதான் புரிதலுக்கான எளிய வழி. அப்படிப் பேசுவதற்காகத்தான் ‘சாந்தி முகூர்த்தம்’ என்ற நிகழ்வை ஒரு கலாசாரமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதனால் கணவனும், மனைவியும் அப்போது மனம்விட்டுப்பேசி இருவரது மனங்களையும் முதலில் இணைக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான தம்பதிகள் முதலிரவு என்பது கணவனும், மனைவியும் தாம்பத்ய உறவு கொள்வதற்கான இரவு என்று தான் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்களது சிந்தனை முழுவதும் பாலுறவைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கும். திருமணத்தில் ஆணையும் பெண்ணையும் இணைப்பது இனப்பெருக்கம் என்னும் இயற்கையான பாலியல் உணர்ச்சிதான். ஆனால், இந்த உணர்ச்சியை மட்டுமே மையமாக வைத்து இணைந்தவர்கள் முழுமையான இன்பத்தை எட்டுவதில்லை என்ற உண்மை புது மணத்தம்பதிகளுக்கு தாமதமாகத்தான் புரியவரும்.

    முதலிரவு அறை என்பது போர்க்களம் இல்லை, அது பூக்களம். புரிந்துகொண்ட தம்பதிகளுக்கு அங்கு தோல்வி ஒருபோதும் இல்லை. எல்லா இரவுகளிலும் வெற்றிதான் அவர்களுக்கு கிடைக்கும். ஒருவரை ஒருவர் உடலாலும் மனதாலும் உணர்ந்துகொண்டு, இருவரும் தங்களுக்கான திருப்தியை தேடி அடைவதில்தான் முதலிரவின் வெற்றி அமைந்திருக்கிறது. அதனால் பயம், பதற்றம், தவறான நம்பிக்கை, தெளிவின்மை, அவநம்பிக்கை, முரட்டுத்தனம் போன்றவைகளை அன்று அறைக்கு வெளியே நிறுத்திவிட்டு நீங்கள் அன்பை மட்டும் மனதில் ஏந்திக்கொண்டு புன்னகையோடு முதலிரவு அறைக்குள் அடியெடுத்து வையுங்கள.் அங்கு இருவருக்குமே சிறந்த புதிய அனுபவங்கள் கிடைக்கும். 
    இரும்புசத்து , மெக்னீசியம், தாதுக்கள், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்த பெப்பர்மின்ட் எண்ணெய் உங்கள் அழுகு பொருட்களில் இருக்க வேண்டிய ஒன்று.
    உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் புதினா பல ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது. புதினா எண்ணெயால் அதிக நலன்கள் உள்ளது. இரும்புசத்து , மெக்னீசியம், தாதுக்கள், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்த பெப்பர்மின்ட் எண்ணெய் உங்கள் அழுகு பொருட்களில் இருக்க வேண்டிய ஒன்று.
     
    முடி வளர்வதை அதிகரிக்கும் முடி கொட்டும் பிரச்சனை உங்களுக்கு அதிகமாக இருந்தால் நிச்சயம் இந்த எண்ணெய் உங்களுக்கு தேவை படும். அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதால் உங்கள் முடி துளைக்குள் சென்று முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். மேலும் எண்ணெய் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

    இரவில் தூங்க விடாமல் தலையில் அரிப்பு எடுக்கிறதா? பெப்பர்மின்ட் உங்களுக்கு நிச்சயம் உதவும். இதில் ஈரப்பதமூட்டும் பண்பு இருப்பதால் உங்கள் தலையின் ஈரப்பசையை காத்து அரிப்பை நீக்கும். நீங்கள் தினமும் பயன்படுத்தும் எண்ணெய்யில் கொஞ்சமாக பெப்பர்மின்ட் எண்ணெய்யை சேர்த்து தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து கழுவவும். இது உங்கள் கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும்.

    இந்த எண்ணெயில் பொல்கோன் மற்றும் மெண்டோன் இருப்பதால் முடியின் வேரை வலுப்படுத்தி முடி உதிர்தலை குறைக்கும். உச்சந்தலையில் அடிக்கடி தேய்த்து வந்தாலே போதும்.

    மென்தால் இருப்பதால் நல்ல வாசனையையும் புத்துணர்வையும் பெப்பர்மின்ட் எண்ணெய் கொடுக்கும். இந்த வாசனை பேன்களை ஒன்று கூந்தலுக்கு விடுதலை தருகிறது. இரவு தூங்கும்முன் எண்ணெய் தேய்த்து காலையில் அலசினால் போதும். உங்கள் பிரச்னை தீரும். 
    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது ஓட்ஸ். இன்று ஓட்ஸ் வைத்து சூப்பரான சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - அரை கப்
    பாசிப்பருப்பு - அரை கப்
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய் தூள் - 1/4 மேஜைக்கரண்டி
    வெங்காயம் - 1 சிறியது
    தக்காளி - 1
    கேரட் - 1
    பச்சை பட்டாணி - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    ப.மிளகாய் - 2
    உப்பு - சுவைக்க
    கூடுதல் விர்ஜின் ஆலிவ் எண்ணெய் - 1/2 மேஜைக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு

    ஓட்ஸ் பாசிப்பருப்பு கிச்சடி

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கேரட், இஞ்சி. கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்பு வேக வைத்து கொள்ளவும்.

    ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்துகொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.

    பிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், பச்சை பட்டாணி சேர்த்து வேக விடவும்.

    காய்கறிகள் நன்று வெந்ததும வேகவைத்த பாசிப்பருப்பு, ஓட்ஸ், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். 8 நிமிடங்களுக்கு வேக வைத்தால் போதும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.

    சூப்பரான ஓட்ஸ் பாசிப்பருப்பு கிச்சடி தயார்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நிலத்தில் முதலீடு செய்வதுதான் இன்றைக்கு நல்ல முதலீடாக கருதப்படுகிறது. ஆனால், அசையாத இந்த சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன.
    நிலத்தில் முதலீடு செய்வதுதான் இன்றைக்கு நல்ல முதலீடாக கருதப்படுகிறது. ஆனால், அசையாத இந்த சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை நேரடியாக வாங்க முடியாது. நீதிமன்றத்தின் அனுமதி கட்டாயம் தேவை.

    அதிகாரம் பெற்ற முகவரிடம் (பவர்) சொத்து வாங்குவதாக இருந்தால், நிலத்தை அல்லது சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். சில நேரம் விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் ஒருவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கலாம். எனவே, ஆவணத்தைக் கவனமாகப் படிக்கவும். அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இல்லையென்றால், அந்த அதிகாரம் செல்லுபடியாகாது.

    நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்துடன் சொத்து விற்கப்படுகிறதா என்று பார்க்கவும். வாரிசுச் சான்றிதழ் மூலம் யாரெல்லாம் வாரிசுகள் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். வாரிசுதாரர்களில், சொத்துக்கு உரிமையுள்ளவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உயர் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மூலம்தான் சொத்து பரிமாற்றம் நிகழ வேண்டும்.

    எப்போதும் சொத்தின் மூல ஆவணத்தை மட்டுமே நம்ப வேண்டும். எனவே, மூல ஆவணத்தை பார்க்காமல் முன்பணம் செலுத்த வேண்டாம். மூல ஆவணம் இல்லை என்றால் சொத்து அடமானத்தில் வைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும்கூட, நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்பட அனைத்து விதமான அனுமதிகளையும் சரிபார்க்க வேண்டும்.

    அனுமதி பெற்ற வரைபடத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருந்தால், பின்னாளில் பிரச்சினைகள் எழும். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அரையடி அதிகம் இருந்தாலும் பிரச்சினைதான். பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனைத்தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தையும் குறிப்பிட வேண்டும். அதேபோல வில்லங்கச்சான்றிதழ் 13 ஆண்டுகளுக்கு போதுமென்றாலும், 30 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்வது உத்தமம்.

    பொதுவாக ஒரு சொத்து வாங்குவதற்கு முன், விற்பனை ஆவணம், மூல ஆவணங்கள், வில்லங்கச் சான்றிதழ், வாரிசு சான்றிதல், பட்டா, சொத்து வரி ரசீதுகள் ஆகியவற்றை உரிமையாளரிடம் இருந்து பெற்று சரிபார்க்க வேண்டும். சில சொத்துகள் மற்றும் உரிமையாளரை பொருத்து, கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம்.
    உங்கள் குழந்தை டூத்பேஸ்ட்டை பல்துலக்க பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதிகமாக அதனை உட்கொள்ள விரும்புகிறார்களா? ஆம், என்றால் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.
    உங்கள் குழந்தைக்கு டூத்பேஸ்ட் பிடிக்குமா? அதாவது அதனை பல்துலக்க பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதிகமாக அதனை உட்கொள்ள உங்கள் குழந்தைகள் விரும்புகிறார்களா? ஆம், என்றால் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    அளவுக்கு அதிகமாக, தேவைக்கு அதிகமான அளவு டூத் பேஸ்ட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு, அவர்கள் பெரியவர்களாகும்போது “டென்டல் ப்ளுரோசிஸ்” என்னும் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    உங்கள் குழந்தை பருவத்தின் முதல் எட்டு ஆண்டுகளில், அதிகரித்த ப்ளுரைடு வெளிப்பாட்டின் காரணமாக உங்கள் பற்கள் பாதிக்கப்படும் நிலையை ப்ளுரோசிஸ் என்று அடிப்டையில் கூறுகின்றனர். ப்ளுரைடு என்பது ஒரு கனிமம் ஆகும். இது தண்ணீர் மற்றும் மண்ணில் அதிகமாகக் காணப்படும்.

    தண்ணீர் அதிக அளவு பருகும் மனிதர்களுக்கு ப்ளுரைடு அளவு இயற்கையாகவே அதிகமான அளவில் இருப்பதாகவும் அவர்களுக்கு குறைந்த அளவு பற்குழிகள் இருந்ததாகவும் 70 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக, டூத்பேஸ்ட், மவுத் வாஷ், குழாய் நீர் மற்றும் இதர பொருட்களில் ப்ளுரைடு சேர்த்து தயாரிக்கப்பட்டது.

    குழந்தைப் பருவத்தில், பற்கள் உருவாகும் நிலையில், அதிகரித்த ப்ளுரைடு பயன்பாடு, டென்டல் ப்ளுரோசிஸ் அல்லது பற்களில் கோடுகள் உண்டாவது அல்லது பற்களில் திட்டுக்கள் தோன்றுவது போன்றவற்றிற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

    பொதுவாக ஒரு பட்டாணி அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவது போதும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்தாலும், 3-6 வயது குழந்தைகள் பெரும்பாலும் ஒரு முழு பிரஷ் அல்லது பாதி பிரஷ் அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    “ப்ளுரைடு என்பது பல அற்புத நன்மைகளைக் கொண்டது, இருந்தாலும் அதனை கவனமாகக் கையாள வேண்டும்”, என்று சிகாகோவில் உள்ள குழந்தைகளுக்கான டென்டிஸ்ட் மேரி ஹேஸ் டெய்லி மெயில் பத்திரிகைக்கு கூறினார்.

    அதிக டூத்பேஸ்ட் பயன்பாட்டால் எத்தனை குழந்தைகளுக்கு பற்களில் பாதிப்பு, திட்டுக்கள், கோடுகள் ஆகியவை இருந்தது என்பது கூறப்படவில்லை என்றாலும், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு அரிசிமணி அளவிற்கு டூத் பேஸ்ட் பயன்படுத்துவது போதுமானது என்றும், 3-6 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு பட்டாணி அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவது போதுமானது என்றும் கூறுகின்றனர்.

    மேலும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பேஸ்டில் சுவை அதிகம் இருப்பதாகவும் கூறுகின்றனர். அதனால் குழந்தைகள் தங்கள் விருப்பம் போல் டூத்பேஸ்ட் பயன்படுத்துகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினா்.

    டூத்பேஸ்ட் என்பது ஒரு உணவு அல்ல, விரும்பிய அளவிற்கு உட்கொள்வதற்கு, எனவே, குழந்தைகளின் டூத்பேஸ்ட் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது பெற்றோர்களே என்று கூறி அவர்கள் ஆய்வை நிறைவு செய்தனர்.
    பெற்றோர்கள் பிறந்த பச்சிளம் குழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னவென்று விரிவாக அறியலாம்.
    கடும் அனலிலிருந்தும் வியர்வையிருந்தும் தப்பித்துக் கொள்ள அனைவரும் ஏசி-யை நம்பத் தொடங்கி விட்டனர். ஆனால் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இன்றைய பெற்றோர்கள் பிறந்த பச்சிளம் குழந்தைகளைக் கூட ஏசி அறையில் தூங்கவைக்கத் தொடங்கிவிட்டனர். அவ்வாறு செய்யலாமா? குழந்தையை ஏசியில் வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னவென்று விரிவாக அறியலாம்.

    பொதுவாக நாம் ஏசியை உபயோகப்படுத்தும் பொழுது, அதன் வெப்பநிலை 26 முதல் 30 டிகிரி செலசியஸ் அளவு இருப்பது நல்லது. இதற்குக் கீழே குறைக்கும் பொழுது,அறை அளவுக்கு அதிகமான குளிர்ச்சியடையும். இந்த குளிரைக் குழந்தைகளால் தாங்கிக் கொள்ள இயலாது. குழந்தைகளால் தங்களது நிலைமையை வாய்விட்டுச் சொல்லவும் இயலாது. அதனால் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருத்தல் அவசியம்.

    ஏசி அறையில் இருப்பதால் குழந்தைக்கு என்னென்ன நன்மைகள்

    குழந்தைகளை ஏசி வசதி கொண்ட அறையில் உறங்க வைப்பது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தை திடீர் இறப்பு நோய் அறிகுறி தடுக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். குழந்தைகளின் உடல் பெரியவர்களின் உடலைப் போல எல்லா தட்பவெப்ப நிலைக்கும் உடனே தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாது. அந்தவகையில் குளிர்சாதன(ஏசி) அறை குழந்தைகளுக்கு உதவுகின்றது. அதிக வெப்பத்தால் ஏற்படும் சூட்டுக் கொப்பளம், வேர்க்குரு, வெப்ப பக்கவாதம் போன்ற பாதிப்புகளிலிருந்து குழந்தைகள் தப்ப ஏசி அறை உதவுகின்றது. ஒருவிதமான சீரான தட்ப வெப்ப நிலையில் குழந்தை ஏசி அறையில் இருப்பதால், குழந்தைக்கு நல்ல உறக்கம் கிடைக்கின்றது.

    ஏசி அறையில் இருப்பதால் குழந்தைக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும்?

    குழந்தை அதிக நேரம் ஏசி அறையில் இருப்பதால், குழந்தையின் உடலும் மனமும் அந்த தட்பவெப்பநிலைக்குப் பழகிப் போய் இருக்கும். திடீரென்று நாம் குழந்தையை வெளி நிகழ்ச்சிகளுக்கு அல்லது வேறு பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல நேரிடுகையில் குழந்தையால் அந்த தட்பவெப்ப நிலையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால் குழந்தைக்குத் தலைவலி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.

    வெப்பத்தால் வியர்வை வரும் போது குழந்தை அழத் தொடங்கும். இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் சிக்கலான விஷயம். அதனால் பெற்றோர்கள் இயன்றவரைக் குழந்தைகளை ஏசிக்கு பழக்கப்படுத்தாமல் இருப்பதே நல்லது. பாதுவாகவே ஏசி அறையில் அனைத்து ஜன்னல்களும் கதவுகளும் மூடியிருக்கும். வெளிக்காற்று மற்றும் சூரிய ஒளி உள்ளே பரவ இயலாது. இதனால் குழந்தை சுவாசித்த காற்றையே சுவாசிக்க நேரிடும். போதிய ஆக்சிஜன் அதில் கிடைக்காமல் போகலாம். இது சரியானது இல்லை. மேலும் மூடிய ஏசி அறையில் சில சமயம் துர்நாற்றம் ஏற்படும். இது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகலாம்.

    சில குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்திருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் சரியான எடை அளவிற்குக் கீழ் பிறந்திருப்பார்கள். இந்த குழந்தைகளை ஏசி அறையில் படுத்து உறங்க வைப்பது நல்லதல்ல. ஏனென்றால் அவர்களின் உடலில் உள்ள உடல் வெப்பநிலை கட்டுப்பாடு மையம் போதிய வளர்ச்சியை அடைந்து இருக்காது. ஏசி அறையில் வெப்ப நிலை மிகவும் குறைவாகக் காணப்படும். இதனால் இவர்களின் கை கால் குளிர்ச்சி அடையும். காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இது மாதிரியான சூழலில் உள்ள குழந்தைகளுக்கு ஏசி அறை உகந்ததா என்பதை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து பரீசிலித்து கொள்வது நல்லது.

    பொதுவாகவே காலை நேரத்தில் சூரிய ஒளி அறையில் பரவுவது மிகவும் நல்லது. சூரிய ஒளி குழந்தை உடலில் உயிர்ச்சத்து டி உற்பத்திக்கு மிகவும் உதவுகின்றது. மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. முழுக்க முழுக்க ஏசி அறையில் இருக்கும் பொழுது இந்த வாய்ப்பு கிட்டாமல் போய்விடும். ஏசி அறையில் செயற்கையான குளிர்ச்சி கிடைப்பது என்பது உண்மைதான். ஆனால் சில குழந்தைகளுக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்படவும் செய்கின்றது. ஏசி அறையிலிருந்தால் ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளை அங்கே வைத்திருப்பது உகந்தது அல்ல.
    உடல் நலம் குறித்து பரிசோதனை செய்வதில் ஆண்களிடம் ஆர்வமின்மை நிலவுகிறது. வறுமை, அலட்சியம், நேரமின்மை போன்ற காரணங்களால் பலர் அதற்கான பரிசோதனையை செய்து கொள்வதில்லை.
    இலவச பரிசோதனை மையங்கள் இருந்தும் அவற்றை பயன்படுத்த ஆண்கள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என மருத்துவத் துறை புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. சுகாதார சீர்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம், உடல்நலத்தில் அக்கறையின்மை போன்ற பல காரணங்களால் மனிதர்களுக்கு தொற்றும், தொற்றாத நோய்கள் ஏற்படுகின்றன. ஆரம்ப கட்டத்திலேயே இவற்றை கண்டறிந்தால் நோய்களை குணப்படுத்திவிட முடியும். ஆனால் வறுமை, அலட்சியம், நேரமின்மை போன்ற காரணங்களால் பலர் அதற்கான பரிசோதனையை செய்து கொள்வதில்லை.

    இவற்றை தவிர்ப்பதற்காக தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்ட சில மருத்துவமனைகளில் தொற்றா நோய்களுக்கான இலவச பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஆண், பெண் என இருபாலருக்கும் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, கொழுப்பு அளவு, இ.சி.ஜி., சிறுநீரகம் தொடர்பான பரிசோதனைகள் போன்றவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல் பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த இலவச பரிசோதனைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக பெண்களைக்காட்டிலும் ஆண்கள் இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருப்பதாக மருத்துவத்துறை புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. உடல் நலம் குறித்து பரிசோதனை செய்வதில் ஆண்களிடம் ஆர்வமின்மை நிலவுகிறது. பெண்களை அழைத்துவரும் ஆண்கள், பெண்களை பரிசோதனை மையத்துக்குள் அனுப்பி வைத்துவிட்டு வீணாக வெளியே காத்திருக்கின்றனர். அந்த நேரத்தில் அவர்களும்கூட, தங்களுக்கான பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். அதில் ஏதேனும் நோய் இருப்பது கண்டறியப்பட்டால் மருந்து, மாத்திரைகள் மற்றும் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது.
    நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுவது தடுப்பூசிகள். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் போடக் கூடிய தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக அவசியமாகும்.
    நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுவது தடுப்பூசிகள். சரியான நேரத்தில் அவற்றைப் போடத் தவறுவது எவ்வளவு முக்கியமானதோ, அதை விட முக்கியமானது தவறான நேரத்தில் போடுவதும். குறிப்பாக கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் போடக் கூடிய தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக அவசியமாகும்.

    குழந்தை பிறந்ததும் 10 முதல் 12 மாதங்களுக்குள் எம்.எம்.ஆர் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

    தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, புட்டாலம்மை உள்ளிட்ட பல அம்மைத் தொற்றுகளுக்கு எதிராகப் போராடக் கூடியது இந்தத் தடுப்பூசி. ஒரு வேளை 10 முதல் 12 மாதங்களில் இந்த ஊசி போடாவிட்டால், 13 வயதுக்குள் போடப்பட வேண்டும்.

    பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியம். அதைத் தவிர்த்து, திருமண வயதில் போட நினைக்கக் கூடாது. தவிர்க்க முடியாமல் அப்படிப்போட நேர்ந்தால், அந்த ஊசியைப் போட்டதை அடுத்து, 4 மாதங்கள் முதல் 1 வருடம் வரை கருத்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    அந்தக் காலக் கட்டம் வரைக்கும் அந்தத் தடுப்பூசியின் தாக்கம் உடலுக்குள் இருக்கும் என்பதே காரணம். இந்த ஊசி போடாத பட்சத்தில் அந்தப் பெண்ணுக்குக் பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை பாதிப்பு, காது கேளாமை, மூளைக் காய்ச்சல், மூளை பாதிப்பு, வலிப்பு நோய் போன்றவை வரலாம்.

    நரம்பில் உருவாகும் செல்கள் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக பல நோய்களும் வரலாம். கர்ப்பிணிகள் தவிர்க்கக் கூடாத இன்னொரு ஊசி டெட்டனஸ் டாக்சைட். பிரசவ காலத்தில் ஏற்படுகிற டெட்டனஸ் தொற்றானது, நஞ்சுக் கொடியைத் தாக்கி, குழந்தை இறந்து போகும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். தாயின் உயிருக்கும் ஆபத்து உண்டு.

    கர்ப்ப காலத்தில் 2 டோஸ் போடக் கூடிய இந்த தடுப்பூசியானது பாதுகாப்பானது.  டைஃபாய்டு, நிமோனியா காய்ச்சல், ஹெபடை ட்டிஸ் பி போன்றவற்றுக்கான தடுப்பூசிகளை கர்ப்ப காலத்தில் போடவே கூடாது.

    கணவருக்கு ஹெபடை ட்டிஸ் பி தொற்று இருப்பது தெரிந்தால், அதன் மூலம் மனைவிக்கும் பாதிப்பு வரலாம். எனவே அதற்கெதிரான தடுப்பூசியை அந்தப் பெண் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த ஊசியையும் போட்டுக் கொண்டு 2 மாதங்களுக்கு கர்ப்பம் தரிக்காமலிருப்பது பாதுகாப்பானது.

    கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் வீட்டில், வேறு யாருக்காவது பறவைக் காய்ச்சல், அம்மை போன்ற தொற்று வந்தால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு தடுப்பூசி போட முடியாது. தொற்று ஏற்பட்டவர்களிடமிருந்து, கர்ப்பிணிப் பெண்ணைப் பிரித்து வைப்பது தான் தீர்வு.

    கர்ப்பிணிப் பெண்ணை நாய் கடித்தால், அதன் பாதிப்பிலிருந்து காப்பாற்ற, ரேபிஸ் ஊசி போடப்பட வேண்டும். அந்த நேரத்தில் கர்ப்பிணியின் உயிர்தான் பெரிதாகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர, கருவைக் காப்பாற்றும் எண்ண த்தில் ஊசியைத் தவிர்க்க நினைப்பது ஆபத்தானது...
    பீட்ரூட், பன்னீரில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைவாக உள்ளன. இன்று இவை இரண்டையும் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 200 கிராம்
    பன்னீர் - 100 கிராம்
    கோஸ் கேரட் - தலா 50 கிராம்
    கெட்டி தயிர் - தேன்
    உப்பு - தேவையான அளவு.

    பீட்ரூட் பன்னீர் சாலட்

    செய்முறை:


    பீட்ரூட்டை தோல் நீக்கி வட்டமாக வெட்டி நீராவியில் 5 நிமிடங்கள் வேகவிட வேண்டும்.

    பன்னீரை அதே அளவுக்கு மிக மெல்லியதாக வெட்டி பீட்ரூட் மேல் அடுக்கவும்.

    ஓர் அடுக்கு பீட்ரூட் எனில் அடுத்த அடுக்கு பன்னீர் என்ற ரீதியில் இருக்க வேண்டும்.

    கேரட் கோஸ் போன்றவற்றைச் சீவி அவற்றுடன் கெட்டி தயிர் தேன் சேர்த்துக் கலக்கி சாலட் மீது வைக்கவும்.

    பலன்கள்: பீட்ரூட்டில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைவாக உள்ளன. இரும்புச் சத்தைக் கிரகிக்க வைட்டமின் சி அவசியம். இந்த சாலட்டில் இவை இரண்டும் நிறைவாக உள்ளன. வைட்டமின் சி நீரில் கரையும் வைட்டமின் என்பதால் இதை முடிந்தவரை சமைக்காமல் எடுத்துக்கொள்வது நல்லது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மருத்துவ செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.
    பொருளாதாரம் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மருத்துவமனை செலவுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கி நின்ற அனுபவம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கவே செய்கிறது. இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள்.

    மருத்துவ செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து கிடைக்கிறது.

    திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். வயதான பெற்றோருக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்பதால் இவர்களை புளோட்டர் பாலிசியில் சேர்க்காமல் தனிநபர் பாலிசி எடுத்துக் கொள்வதும் நல்லது. 3 மாத குழந்தை முதல் 86 வயது வரை இந்த பாலிசி அனுமதிக்கப்படுகிறது.

    நமது மருத்துவ தேவைகளை பொறுத்து மருத்துவ காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

    பாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப க்ளைம் செய்து கொள்ளலாம். மருத்துவ காப்பீட்டை அனுமதிக்கும் மருத்துவமனைகள் குறித்த விவரம் பாலிசிதாரர்களுக்கு கொடுக்கப்படும். இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு தொகையிலிருந்து மருத்துவ செலவுகளை கழித்துக் கொள்வார்கள். புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவை க்ளைம் செய்து கொள்ள முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக்கும் பட்சத்தில் இதற்கு ஆகும் செலவுகளையும் க்ளைம் செய்து கொள்ளலாம். சில நோய்களுக்கு புற நோயாளியாக தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்போம். சில நோய்களுக்கென மருத்துவ பரிசோதனை எடுக்க வேண்டியிருக்கும். மேலும் சில நோய்கள் மருத்துவமனையை விட்டு வந்த பிறகும் நீடிக்கும். இது போன்று நிலைமைகளில் பாலிசி அனுமதிக்கும் வரை க்ளைம் செய்து கொள்ள முடியும்.

    பாலிசி எடுப்பதற்கு முன் காப்பீடு நிறுவனத்திடம் சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக பாலிசி எடுப்பதற்கு முன்பே சில நோய்கள் இருந்துவரலாம். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலத்திற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறக்கூடிய நோய்கள் இவற்றின் உண்மை தன்மைகளை மறைக்காமல் குறிப்பிட வேண்டும். சில பாலிசிகள் மருத்துவ செலவுகளை மட்டும் ஏற்பதாகக் குறிப்பிடும். மருத்துவமனையில் தங்கும் கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில் அதற்கும் கவரேஜ் கிடைக்க வேண்டும். மேலும் மருத்துவமனையில் தங்கும் கட்டணங்கள் நாள் ஒன்றுக்கு இவ்வளவுதான் என வரம்பு வைத்திருக்கும். இதில் அதிக பட்சமாக தொகை க்ளைம் செய்வது போல பாலிசி எடுக்க வேண்டும்.

    சில பாலிசிகளில் மருத்துவ செலவுகளை நாம் செய்த பிறகு, ரசீதுகளை சமர்ப்பித்து க்ளைம் செய்து கொள்வதாக இருக்கலாம். இதற்கான காலம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முக்கிய மருத்துவமனைகள் அல்லது அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளுடன் காப்பீடு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொண்ட பிறகே காப்பீடு எடுக்க வேண்டும்.
    பாதங்களில் பருவநிலை மாற்றத்தினால் வெடிப்புகள், சொரசொரப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தால் இந்த சிம்பிளான பேக்கை போட்டு பாதத்தை புதுப்பொலிவடை செய்யலாம்.
    பாதங்களில் பருவநிலை மாற்றத்தினால் வெடிப்புகள், சொரசொரப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தால் இந்த சிம்பிளான பேக்கை போட்டு பாதத்தை புதுப்பொலிவடை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    ரோஜா- 3
    சந்தனப் பொடி- 1 ஸ்பூன்
    ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
    பால்- 1கப்

    செய்முறை:

    1.ரோஜாவை தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    2.அடுத்து, சந்தனப் பொடி, ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.

    இந்த பேக்கினை பாத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்த பின்னர் நன்றாக தொய்க்க வேண்டும். கொள்ளவும். அதன்பின்னர்,குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை செய்தால், பாதம் நன்கு பொலிவு பெறும்.
    ×