என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    உடலுக்குள் சென்ற வைரஸ் எப்படி நம் உடலில் உள்ள ஒவ்வொரு நோய் எதிர்ப்பு உயிர் அணுக்களையும் (செல்) பல கோணங்களில் தாக்கி அழித்து முக்கிய உடல் உறுப்புகளை எப்படி செயல் இழக்கச் செய்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஒரு இடத்தை தொட்டால், அந்த இடத்தை மற்றொருவர் தொடும் போது அவருக்கு நோய்க்கிருமி பரவுகிறது. அப்படி உடலின் வெளிப்புறத்தில் பரவிய கொரோனா வைரஸ் கண், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றின் மூலம் தொண்டை குழாய் வழியாக உடலுக்குள் செல்கிறது.

    அந்த வைரஸ் மூக்கும், வாயும் சேரும் இடத்தில் சில நாட்கள் தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் அறிகுறிதான் தொண்டை வலி. தொண்டை வலி வந்தவுடன் உரிய சிகிச்சை மூலம் வைரசை அழிக்க வேண்டும். அப்படி அழிக்கவில்லை என்றால் அது மூச்சுக்குழாய் வழியாக உடலுக்குள் சென்று விடும்.

    உறுப்புகளை செயல் இழக்கச் செய்கிறது

    உடலுக்குள் சென்ற வைரஸ் எப்படி நம் உடலில் உள்ள ஒவ்வொரு நோய் எதிர்ப்பு உயிர் அணுக்களையும் (செல்) பல கோணங்களில் தாக்கி அழித்து முக்கிய உடல் உறுப்புகளை எப்படி செயல் இழக்கச் செய்து கொல்கிறது என்பது பற்றி ‘பிராண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்’ என்ற அறிவியல் இதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த இதழில் கூறியிருப்பதாவது:-

    மனிதர்களுக்கு நோய் ஏற்பட்டால் அதை எதிர்த்து போரிடுவதற்கு நம் உடலில் ஏராளமான நோய் எதிர்ப்பு உயிர் அணுக்கள் உள்ளன. ஆனால் அந்த உயிர் அணுக்களை கொரோனா வைரஸ் புதுமையான முறையில் அழிக்கிறது. அதற்கு ‘சைட்டோகைன் புயல்’ என்று பெயர்.

    நம் உடலில் நன்மை விளைவிக்கும் ஒரு உயிர் அணுவை மற்றொரு நல்ல உயிர் அணு அழிப்பதுதான் சைட்டோகைன் புயல் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

    உடலில் நோய்களை எதிர்த்து போராடும் அதிகப்படியான ‘லிம்போ சைட்ஸ்’ மற்றும் ‘நியூட்ரோபைல்ஸ்’ என்று அழைக்கப்படும் ரத்த வெள்ளை அணுக்களை ஒன்றோடொன்று தாக்கிக் கொள்ள கொரோனா வைரஸ் தூண்டுகிறது. இதனால் அவை அழிந்து போய் விடுகின்றன. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரத்த வெள்ளை அணுக்கள் இறந்த பின்னர் கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் எளிதாக ஊடுருவி சேதத்தை ஏற்படுத்துகிறது.

    ரத்தக்கசிவு

    அடுத்து சைட்டோகைன் புயல் என்ற நிகழ்வு உடலில் அதிகப்படியான காய்ச்சலை உருவாக்கி ரத்த அணுக்களில் கசிவை ஏற்படுத்தி ரத்தத்தை உறையச் செய்கிறது. இதுதவிர குறைந்த ரத்த அழுத்தத்தை உண்டாக்கி ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி, ரத்தத்தில் அமிலத்தன்மையை உருவாக்குகிறது. இதனால் நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

    மேலும் கொரோனா வைரஸ் ரத்த வெள்ளை அணுக்களை தவறாக வழிநடத்தி ஆரோக்கியமான திசுக்களை தாக்கி வீக்கத்தை உருவாக்குகிறது. இதனால் நுரையீரல், இதயம், குடல், கல்லீரல், சிறுநீரகம், பிறப்பு உறுப்புகள் செயல் இழந்து விடுகின்றன. இப்படி பல உடல் உறுப்புகளை செயல் இழக்கச் செய்து நுரையீரலின் செயலை கொரோனா வைரஸ் முடக்கி விடுகிறது. இதனால் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

    இறப்பை தடுக்க முடியும்

    இது எதனால் ஏற்படுகிறது என்றால் கொரோனா வைரஸ் கொன்ற உயிர் அணுக்கள், புரதங்களின் கழிவுகள் ஆகியவை நுரையீரலில் தேங்கி விடுவதால் ஆக்சிஜனை உள்ளிழுக்கும் திறனை நுரையீரல் இழந்து விடுகிறது. எனவே தான் கொரோனா பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் பெரும்பாலானவர்கள் மூச்சுச் திணறி இறக்கிறார்கள்.

    கொரோனா வைரசை அழிக்க மருந்து இல்லாத காரணத்தினால் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் அதை எதிர்த்து போரிடுவதற்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் உடல் உறுப்புகளை அதி தீவிரமாக கண்காணித்து செயல்பட வைப்பதின் மூலமே இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். இது எப்படி சாத்தியமென்றால், கல்லீரலில் உள்ள ரத்தத்தை செயற்கை முறையில் எப்படி சுத்திகரிக்கிறோமோ அல்லது சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தை சுத்திகரிக்க டயாலிசிஸ் முறையை எப்படி பயன்படுத்துகிறோமோ அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை செயற்கையாக செயல்பட வைத்து இறப்பை தடுக்க முடியும்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    கொரோனா தாக்கத்தினால் நுரையீரல் செயலிழந்து விட்டால், அதற்கு மாற்றாக தொண்டை குழாய் வழியாக செயற்கை சுவாச எந்திரத்தை(வென்டிலேட்டர்) இணைக்காமல் செயற்கை காற்று குழாய் மூலமாக இளஞ்சூடான ஈரப்பதமிக்க ஆக்சிஜனை மூக்கு வழியாக செலுத்தினால் உயிர் பிழைக்க வைக்க முடியும். இதனால்தான், கொரோனா வைரஸ் உடல் உறுப்புகளை தாக்கி செயல் இழக்கும் அளவுக்கு அதை வளர விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

    கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காத்துக் கொள்ள வேண்டுமென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். இதன் மூலம் இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் மோசமடைவதை தடுக்கலாம்.

    இவ்வாறு அந்த இதழில் கூறப்பட்டு உள்ளது.
    முகத்தில் உள்ள பல பிரச்சனைகளை போக்க இந்த பேஸ் பேக்குகள் பயன்படுகின்றன. இப்போது வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை கொண்டு பேசியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
    முகத்திற்கு தகுந்த பராமரிப்புகளை கொடுத்து வர வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாகும். முகத்தில் உள்ள பல பிரச்சனைகளை போக்க இந்த பேஸ் பேக்குகள் பயன்படுகின்றன. நாம் இன்றைக்கு இருக்கும் மாசடைந்த சூழ்நிலையில், முகம் சீக்கிரமாக கருமையடைய ஆரம்பித்துவிடுகிறது. முகத்தில் இறந்த செல்கள் எளிதாக உருவாகிவிடுகின்றது. இதனால் முகம் அதன் இயற்கை அழகினை இழந்து கருமையாக தோற்றமளிக்கிறது. எனவே மாதம் ஒருமுறை கண்டிப்பாக பேசியல் செய்ய வேண்டியது அவசியமாகும்.

    அதிமதுரம் உங்களது சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. சூரியனால் உண்டான கதிரால் உண்டான கருமையை போக்க உதவுகிறது. அதிமதுரம், முல்தானிமெட்டி மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் பளிச்சென்று இருக்கும்.

    உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, அதனை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் இதனுடன் சிறிதளவு கடலைமாவு மற்றும் தேன் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு பாருங்கள். முகம் பேசியல் செய்தது போன்ற ஒரு அழகை பெறும்.

    உருளைக்கிழங்கை நன்றாக துருவிக் கொள்ளுங்கள். பின் இந்த துறுவலை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பால் கலந்து முகத்திற்கு பேக் போடுங்கள். இதனால் முகம் பளிச்சிடும் வெண்மை பெறுவது உறுதி.

    பாலில் சிறிதளவு கோதுமை மாவை கலந்து முகத்திற்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த மசாஜ்ஜை 10 நிமிடங்கள் வரை செய்ய வேண்டியது அவசியம். அழுத்தமாக மசாஜ் செய்ய கூடாது. இதனால் உங்களது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.

    சிறிதளவு தயிரை எடுத்துக் கொள்ளுங்கள், அதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு பீட்ரூட் ஜூஸை கலக்க வேண்டும். இந்த க்ரீமை நன்றாக முகத்திற்கு 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் உங்களது முகம் மிருதுவாகி நல்ல நிறத்தை பெறும்.

    கடலை மாவு, கோதுமை மாவு, பீட்ரூட் ஜூஸ், சிறிதளவு மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட வேண்டும். பின்னர் இதனை 20 நிமிடங்கள் உலர வைத்து கழுவி விட வேண்டும். இதனால் உங்களுக்கு பேஸியல் செய்தது போன்ற தோன்றம் கிடைக்கும்.
    இன்றைய நவீன உலகில் பெற்றெடுத்த குழந்தைக்கு மட்டுமல்ல, தத்தெடுத்த குழந்தைக்கு கூட தாய்ப்பால் கொடுக்கும் அளவிற்கு தீர்வுகள் வந்துவிட்டன.
    ஆகஸ்டு மாதத்தின் முதல் வாரம் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகிறது. அந்த கால கட்டத்தில், உலகெங்கிலும் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை கொரோனா தாக்கத்தினால், தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தாய்ப்பால் ஊட்டுதலுக்கு தனி விழிப்புணர்வு தேவையா?, எதற்காக இந்த முயற்சி?, ஆண்டுதோறும் நடத்தப்பட்டும் விழிப்புணர்வு போதவில்லையா?... போன்ற பல கேள்விகள் நம் மனதில் எழுந்தாலும், இவை அனைத்திற்குமான விடை டீனா அபிஷேக்கிடம் கிடைத்தது. சென்னையை சேர்ந்தவரான இவர், பால் ஊட்டுதல் ஆலோசகராக பணியாற்றுகிறார். அவர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் இதோ...

    * ‘உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம்’ ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் விழிப்புணர்வு போதவில்லையா?

    இப்படி ஒரு நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. உலக அளவிலும் நடக்கிறது. தாய்மை அடைந்தவர்களுக்காகவே நடக்கிறது. ஆனால் பெரும்பாலான தாய்மார்களுக்கு இப்படியொரு நிகழ்வு நடப்பதும், நடைபெற இருப்பதும் தெரிவதில்லை. அதனால்தான், ஆண்டுதோறும் நடத்தப்பட்டும் போதிய விழிப்புணர்வு உருவாகுவதில்லை.

    * இந்த விஷயத்தில் வீட்டில் இருக்கும் பெரியோர்களின் அறிவுரைகள் போதுமானதாக இருக்காதா? பிரத்யேக விழிப்புணர்வு தேவையா?

    சில நல்ல விஷயங்களும், சில நம்பக்கூடாத விஷயங்களும் ஆண்டாண்டு காலமாக அறிவுரைகளாக உலா வருகின்றன. அதில் எது உண்மை? எது பொய்? என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியமாகின்றன.

    * அப்படி என்னென்ன விஷயங்கள் உலா வருகின்றன?

    தாய்ப்பால் சுரப்பிற்கு உடம்பில் இருக்கும் சில ஹார்மோன்களே காரணமாகின்றன. எந்தவித மருந்தும், உணவும் இதற்கு தீர்வாகாது. ஆனால் அம்மா அதிகமாக பால் குடித்தால், அதிக தாய்ப்பால் சுரக்கும் என்ற கருத்தும், சூடாகவோ-குளிர்ச்சியாகவோ சாப்பிட்டால் கர்ப்பப்பை பாதிக்கப்படும் என்ற கருத்தும் நம்பக்கூடாதவை. அதே போல குழந்தை பிறந்த உடனே, அதீத தாய்ப்பால் சுரந்துவிடும் என்ற கருத்திலும் உண்மை இல்லை. பிறந்த குழந்தைக்கு முதல் மூன்று நாட்களுக்கு 3 முதல் 5 மி.லி. பாலே உணவாக தேவைப் படுகிறது. ஆரம்பத்தில் இந்த அளவு பால் சுரந்தாலே போது மானது. நாட்களின் எண் ணிக்கை அதிகரிக்கும்போதுதான், தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கும். இயல்பான இந்த விஷயத்தை பல குடும்பங்கள் பூதாகரமாக மாற்றிவிடுகின்றன. சிலர் பாக்கெட் பால் கொடுக்கும் அளவிற்கு இந்த விஷயத்தை பெரிதாக்கி விடுகிறார்கள்.

    * தாய்ப்பால் சுரப்பின்மைக்கு தீர்வு உள்ளதா? விளக்குங்கள்?

    இருக்கிறது. இன்றைய நவீன உலகில் பெற்றெடுத்த குழந்தைக்கு மட்டுமல்ல, தத்தெடுத்த குழந்தைக்கு கூட தாய்ப்பால் கொடுக்கும் அளவிற்கு தீர்வுகள் வந்துவிட்டன.

    தாய்ப்பால் இல்லாவிட்டாலும், தாய்ப்பால் சுரப்பது போல் எண்ணி குழந்தையை மார்பின் மீது வைத்து பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். இந்த உந்துதல் மூலம் பால் சுரக்க ஆரம்பிக்கும்.

    குறைந்தது ஒரு தினத்திற்கு 10 முதல் 12 முறையாவது இதை பின்பற்ற வேண்டும். அதோடு கங்காரூ கேர் (Ka-n-g-a-r-oo Care) என கூறப்படும் வழிமுறையையும் பின்பற்றவேண்டும். தாயின் ஸ்பரிசத்தில் குழந் தையை தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் இருக்கச் செய்வதன் மூலம், ஹார்மோன்கள் தூண்டப்பட்டு இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பு நிகழும். இதுபோல பல இயற்கை வழிமுறைகளினால் தாய்ப்பால் சுரப்பின்மைக்கு தீர்வு காணலாம்.

    * கொரோனா நோயாளிகள் தாய்ப்பால் கொடுக்கலாமா? ஏதாவது பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையா?

    தாராளமாக கொடுக்கலாம். தாய்ப்பால் மூலமாக கொரோனா நோய் தொற்று பரவாது என்ற கருத்திற்கு உலக மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கூடவே, நோய் தாக்கத்தில் இருந்து குழந்தையை காக்க, விஷேச நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் சுரக்கும் வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். அதனால் பாதுகாப்பு நடைமுறைகளுடன், தாய்ப்பால் வழங்கலாம். மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் பால் சேகரிப்பானில் தாய்ப்பாலை சேமித்து, உறவினர் மூலமாக தாய்ப்பால் ஊட்டலாம்.

    தாய்ப்பால் ஊட்டுதலில் இழைக்கப்படும் தவறுகள் என்ன?

    பிறந்தது முதல் அடுத்த 6 மாதங்களுக்கு குழந் தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். அதை தவிர்த்து, வேறு எதை ஊட்டினாலும் அது தவறுகள் பட்டியலில்தான் சேரும். குறிப்பாக சர்க்கரை தண்ணீர் ஊட்டுவது, தேன் கொடுப்பது, தண்ணீர் குடிக்க கொடுப்பது, வசம்பு தேய்ப்பது போன்றவை எல்லாம் கட்டாயம் தவிர்க்கவேண்டிய விஷயங்கள். குழந்தைக்கு எது கொடுக்க நினைத்தாலும், அதை தாய்க்கு சாப்பிட கொடுத்து, தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு கொடுங்கள். அதுவே சிறந்தது.
    சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெற்றிலை, துளசி சேர்த்து சூப் தயாரித்து பருகலாம், இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தண்ணீர் - 1 கப்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    மிளகு பொடி - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள்ப் பொடி - 1 டீஸ்பூன்
    துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு
    வெற்றிலை - 6 இலைகள்
    தூதுவளை இலை - ஒரு கைப்பிடி அளவு
    புளி கரைசல் - ஒரு டீஸ்பூன்
    இஞ்சி - ஒரு துண்டு
    தக்காளி - ஒன்று
    சிவப்பு மிளகாய் - ஒன்று
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    துளசி, வெற்றிலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, சூடானவுடன், மஞ்சள் பொடி, துளசி இலை, வெற்றிலை, தூதுவளை இலை, புளி கரைசல், இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதி வைக்கவும்.

    நன்றாக கொதித்து சாறு நன்றாக இறக்கியதும் வடிகட்டி மிளகுப் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து சூடான சூப்பைப் பரிமாறவும்.

    சூப்பரான வெற்றிலை துளசி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த நாளில் ஓர் ஆ‌ண் தனது கையில் ரக்‌ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாக பாவித்து அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும்.
    உடன் பிறவாவிட்டாலும், சகோதர அன்பை பரிமாறிக் கொள்ள, ஆண்களின் கைகளில் ராக்கி கட்டும் ரக்ஷாபந்தன் விழாவை இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாட்டு இந்தியர்களிடையேயும் சகோதர அன்பை பகிர்ந்துக் கொள்ள அன்பின் பிணைப்பாக கட்டப்படுவது, ராக்கி. ராக்கி கயிறுகளை ஆண்களின் கைகளில் பெண்கள் கட்டுவார்கள். இதன் மூலம் அந்த ஆண், ராக்கி கட்டிய பெண்ணுக்கு சகோதரன் முறையாகிவிடுகிறான்.

    வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழா, தமிழகத்திலும் சமீபக்காலமாக பிரபலமடைந்து வருகிறது. ஆவணி மாத துவக்கத்தில் வரும் பவுர்ணமி அன்று இது கொண்டாடப்படுகிறது. ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    அதாவது, மகாபலியின் தீவிர பக்தியில் அகம் குளிர்ந்த விஷ்ணு, என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு மகாபலி, தனது நாட்டை விஷ்ணு தான் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தான். அதையேற்றுக் கொண்ட விஷ்ணு, வைகுண்டத்தில் இருந்து இறங்கி வந்துவிட்டார். கணவனை காணாத லட்சுமி, மகாபலியின் நாட்டிற்கு வந்தார். அங்கு காவலனாக இருந்த கணவனை காப்பாற்ற லட்சுமி ஏழை பெண்ணாக உருமாறினார். பின்னர் மகாபலியிடம் சென்று ஒரு கயிறை கட்டிவிட்டு, தனது நிலையை கூறியுள்ளார். இதில் மகிழ்ச்சியடைந்த மகாபலி, விஷ்ணுவை அனுப்பி வைத்தான்.

    இந்த கயிறே பின்னாளில் ராக்கி கயிறாக மாறியதாக கூறப்படுகிறது. ராக்கி கட்டும் போது, சகோதரரின் சுக வாழ்விற்காக சகோதரிகள் சாமியை வேண்டுகின்றனர். அதன்பின், சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டுகின்றனர். கயிறு கட்டும் போது, சகோதரிகளுக்கு அன்பின் காணிக்கையாக பணம், நகை, பரிசுப் பொருட்களை சகோதர்கள் அளிக்கின்றனர். ஜாதி,மாத, இன, மொழி என எல்லாவற்றை கடந்து, ராக்கி காட்டும் பழக்கம் சகோதர அன்பை தெரிவிப்பதன் ஒரு முக்கிய வெளிப்பாடாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சகோதர பந்தத்தை எடுத்துக்கூறும் இந்த ரக்ஷா பந்தன் தினம் இந்துக்களின் பண்டிகை என்பதைத் தாண்டி பாசத்தைக் காட்டும் ஒரு சமூக விழாவாகவே இருந்து வருகிறது. ரக்ஷா பந்தன் என்றால் 'பாதுகாப்பு பிணைப்பு' என்றும், பாதுகாப்பு பந்தம் என்றும் பொருள். இந்த நாளில் ஓர் ஆ‌ண் தனது கையில் ரக்‌ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாக பாவித்து அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும்.

    இன்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு பல வீடுகளில் சகோதரர்களுக்கு சகோதரிகள் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து ராக்கி கயிறு கட்டி வாழ்த்துக்களை பரிமாறினர். கயிறு கட்டிய சகோதரிகளுக்கு சிலர் பரிசுகளை கொடுத்து வாழ்த்தினர். திருமணம், கல்வி, வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் பிரிந்திருந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலரும் சந்திக்க முடியாமல் போனாலும் இந்த நாளில் சகோதர சகோதரிகளை பாசத்துடன் நினைவுகூர்ந்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வோம்
    ஆசிரியர்கள், மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு தயார்படுத்த வேண்டும். அதில் பாடங்களை படிப்பது, எழுதுவது, அதை புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டியதில் உள்ள நுட்பங்களை தெரியப்படுத்த வேண்டியது இருக்கிறது.
    ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவர்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே திட்டமிட்டு, அட்டவணைப்படி வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. அதற்கு மாணவர்களும் தங்களை தினமும் தயார்படுத்திக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த (2020-21) கல்வி ஆண்டு இதுவரை இல்லாத புதுவிதமான ஒன்றாக அமைந்து இருக்கிறது. எந்தவித திட்டமிடலுக்கும் உட்படாத ஒன்றாக மாறி இருக்கிறது. அதற்கு கொரோனா வைரஸ் காரணமாகி விட்டது. அதுவே, கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் கல்வி முறையாக மாறவும் வாய்ப்பாகி இருக்கிறது. இது ஆசிரியர்களுக்கு எளிதாக இருந்தாலும், பாடங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது பெரிய சவாலாக இருப்பதை மறுக்க முடியாது.

    கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஆனாலும் படிப்பு தடைபட கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் வகுப்பறைகள் இல்லை. சக தோழர்கள் இல்லை. விளையாட்டு மைதானம், சந்திப்பு, கலந்துரையாடல் ஆகிய எதுவும் இல்லை. அதை எல்லாம் விட நேரடியாக ஆசிரியர்களின் பார்வை இல்லை என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதை எல்லாம் மீறி மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. எனவே மாணவ மாணவிகள் படிப்பதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியம். அது இல்லை என்றால் ஆன்லைன் கல்வி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறி விடும்.

    எனவே பெற்றோரின் பங்களிப்பால் தான் ஆன்லைன் கல்வியில் அனைத்து மாணவர்களும் இணைய முடிகிறது. அதற்கு செல்போன், இணையதள இணைப்பு ஆகியவை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நவீன உலகில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தொழில்நுட்ப சாதனங்கள் மாணவர்களின் கைகளில் தவழ தொடங்கி உள்ளது. எனவே அதை பயன்படுத்தவும் மாணவ மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

    ஆசிரியர்கள், மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு தயார்படுத்த வேண்டும். அதில் பாடங்களை படிப்பது, எழுதுவது, அதை புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டியதில் உள்ள நுட்பங்களை தெரியப்படுத்த வேண்டியது இருக்கிறது. வீட்டுக்குள் வகுப்பறை சூழலை ஏற்படுத்து வது என்பது நடைமுறையில் இயலாத ஒன்று தான். எனவே குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த வைப்பது என்பது பெற்றோருக்கு பெரிய சவாலாக மாறி இருக்கிறது. தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் நோட்டு, புத்தகம், பள்ளிச்சூழல், தேர்வு, சிறப்பு வகுப்பு, ஆசிரியரின் கண்காணிப்பு போன்றவற்றில் இருந்து மாணவர்கள் விடுபட்டு உள்ளனர். இதனால் அவர்களுக்கு கற்றலுடன் ஒரு தொடர்பற்ற ஒரு நிலை இருக்கிறது. அதில் தொடர்பை ஏற்படுத்தி நாட்டத்தை ஏற்படுத்துவது முதல் கடமையாகி விட்டது.

    பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பாடங்களை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தங்களின் குழந்தைகள் பாடங்களை எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்ற கவலை பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படுவதை காண முடிகிறது. மேலும் பாடம் தொடர்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பெற்றோரும் நேரம் செலவிட வேண்டியது இருக்கிறது. ஆன்லைன் முறையிலான புதிய கற்றல் முறைக்கு மாணவர்களை மனரீதியாக தயார்படுத்த வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றை கையாளுவதையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றில் ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை படித்து மாணவர்களே கற்றுக்கொள்வார்கள் என்று விட்டு விட கூடாது. அவர்கள் மீது உரிய அக்கறையையும், கண்காணிப்பையும் காட்டி கற்றலில் மேம்பட துணையாக இருக்க வேண்டும். 
    மனித உடல் எண்ணற்ற அதிசயங்கள் நிறைந்தது. கீழே மனித உடல் பற்றிய அரிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்று அறிந்துகொள்ளலாம்.
    * ஒரு நாளில் இதயம் ஒரு லட்சம் முறை துடிக்கிறது.

    * மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் ரிப்ஸ்.

    * புதிதாக பிறந்த குழந்தையின் சராசரி எடை 2 கிலோ கிராம்.

    * இதயம் கார்டியக் தசைகளால் உருவானது. இதைச் சுற்றியுள்ள சவ்வின் பெயர் பெரிகார்டியம்.

    * ‘நியூரான்’ நரம்பு செல்களால் ஆனது. மூளையில் 1400 நியூரான்கள் உள்ளன.

    * இதயத்துடிப்பை உண்டாக்கும் வேதிப்பொருள், அசிட்டிக் சோலைன்.

    * மருத்துவ அறிவியலின் தந்தை ஹிப்போகிரேடஸ். மரபணுவியலின் தந்தை கிரிகோர் மெண்டல்.

    * இதயத்தை சுற்றியுள்ள சவ்வில் காணப்படும் திரவத்தின் பெயர் பெரிகார்டியல் பாய்மம்.

    * ‘சைலன்ட் கில்லர்’ என்று அழைக்கப்படும் நோய், ரத்த அழுத்த நோய்.

    * ரத்தம் வடிதல் போன்றவற்றால், குறையும் வைட்டமின், வைட்டமின் கே.

    * செரித்தல் திரவத்தில் உள்ள அமிலத்தால், வரும் நோய் பெப்டிக் அல்சர்.

    * நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் தான் உள்ளது.

    * ‘இம்மியூனிட்டி’ என்பது நோய் எதிர்ப்பு சக்தி.

    * ‘ஓபன்சோர்’ என்றால் அல்சர் என்று பொருள்.

    * ‘பாராமென்சியா’ என்றால் மிகச் சிறந்த ஞாபகம் என்று பொருள்.

    * மனித உடலில் வாழும் ஒட்டுண்ணியின் பெயர், கோலோன்.

    * ‘அப்பாகிக் கண்கள்’ என்பது குறுக்குப் பார்வை உடைய கண்கள்.

    லாவண்யா, 9-ம் வகுப்பு, மங்களூரு.
    மனிதனின் உடல் உள் உறுப்புக்கள் பழுதடைந்தால், ஒழுங்காக இயங்கவில்லை என்றால் அது முதுகெலும்பில் வலியாக உணர்த்துகின்றது. கழுத்து முதுகுவலி ஏற்பட்டால் இதயம், நுரையீரல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம்.
    மனிதனுக்கு அழகு எது? முதுகெலும்புதான். யாராவது நம் வாழ்வில் அதிகம் உதவி செய்தால் இவர்தான் என் வாழ்க்கையின் முதுகெலும்பாகத் திகழ்கிறார் என்று கூறுவது வழக்கம். மனிதன் ஒருவனே தனது முதுகெலும்பை தரையில் படுக்கவைத்து உறங்கும் நிலையைப் பெற்றுள்ளான். மற்ற விலங்கினங்கள் எதுவுமே தனது முதுகெலும்பை தரையில் படுக்க வைத்து உறங்க முடியாது.

    முதுகுத்தண்டின் நீளம் பதினாறரை அங்குலம். இது நரம்பு நாளங்களால் ஆனது. இதிலிருந்து 12 இணை நரம்புகள் மூளைக்குச் செல்கிறது. மேலும் முப்பத்தாறு இணை நரம்புகள் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. அதனால் முதுகுத்தண்டு மனிதனின் இரண்டாவது மூளை என அழைக்கப்படுகின்றது.
    மூளைக்கும், உடலின் உறுப்புகளுக்கும் இணைப்பு நிலையமாக திகழ்வது இந்த முதுகுத் தண்டு தான். மேலும் இதயம், நுரையீரல், இரைப்பை, குடல் முதலிய உறுப்புகளின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதும் இந்த முதுகுத்தண்டு தான்.

    மனித உடலில் நடுப்பகுதியான முதுகில் 33 முதுகெலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக நேர் வரிசையில் அடுக்கப்பட்டு அற்புதமாக இந்த உடல் கட்டப்பட்டுள்ளது. இந்த முதுகெலும்பு வழியாகத் தான் முதுகுத் தண்டுவடம் உள்ளே செல்கின்றது. இந்த முதுகெலும்பில் 24 எலும்புகள் தனித் தனியானவை. அசையும் தன்மை வாய்ந்தது. மற்ற ஒன்பது எலும்புகள் இணைந்து இரண்டு அசையா எலும்புகளாக பெரியவர்களாக வளரும் பொழுது இடுப்புக்கு அடியில் மாறிவிடும்.

    முதுகுவலி உணர்த்துவது என்ன?

    மனிதனின் உடல் உள் உறுப்புக்கள் பழுதடைந்தால், ஒழுங்காக இயங்கவில்லை என்றால் அது முதுகெலும்பில் வலியாக உணர்த்துகின்றது. அடிமுதுகு வலி ஏற்பட்டால் நமது உடலில் கோணாடு சுரப்பி ஒழுங்காக இயங்கவில்லை. அதனால் சிறுநீரகம் சம்பந்தமான வியாதி வருவதற்கு ஒரு அறிகுறிதான் அடிமுதுகு வலி. இதேபோல் நடுமுதுகு வலி ஏற்பட்டால் சிறுகுடல், பெருங்குடல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம். கழுத்து முதுகுவலி ஏற்பட்டால் இதயம், நுரையீரல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம்.

    முதுகுவலி வரக் காரணங்கள்

    உடல் பயிற்சி செய்யாமல், நன்றாக அதிகம் சாப்பிட்டு தொப்பை போடுபவர்களுக்கு அடிமுதுகுவலி வரும். சிறுநீரகப் பிரச்சினை இருக்கும். இவர்களுக்கு நடுமுதுகுவலியும் வரும். சிறுகுடல், பெருங்குடல் பிரச்சனை இருக்கும். அதிக நேரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு அடி முதுகுவலி வரும்.
    தொடர்ந்து அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற் பயிற்சி செய்யாதிருந்தால் முதுகுவலி (கழுத்து முதுகுவலி) வரும்.
    ஒரே இடத்தில் பல மணி நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படும்.

    அடிக்கடி சளி பிடித்தல், மூக்கடைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு கழுத்து, முதுகுவலி ஏற்படும். நுரையீரல் பழுதடைவதால், கழுத்து முதுகுவலி வருகின்றது.
    அதிகம் கவலைப்படுபவர்களுக்கு இதயம் பாதிப்பால் கழுத்து முதுகுவலி ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகி அதனால் அடிக்கடி காய்ச்சல் வருபவர்களுக்கு முதுகு முழுவதும் வலி இருக்கும்.

    காய்ச்சல் எல்லாம் நோயல்ல கழிவுகள் வெளியேற்றம்தான். ஏதாவது ஒரு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிமுதுகுவலி, கழுத்து முதுகு வலி ஏற்படும்.
    எதிர்பாராத விபத்தினாலும், முதுகில் பலம் வாய்ந்த எடையுள்ள பொருட்கள் விழுந்தாலும் அடி முதுகில் வலி ஏற்படுகின்றது. இனி கவலையை விடுங்கள். முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அற்புத யோகக்கலையினை பயிலப் போகின்றோம்.

    மனித உடல்

    நம் உடல் எப்பொழுதும் தன்னைக்காப்பாற்றிக் கொள்ள முயன்று கொண்டேயிருக்கும். அதற்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை. இந்த உடல் தன்னை பாதுகாக்க தானாக ஒவ்வாத உணவை வெளித்தள்ளுகின்றது. எங்காவது பறவை, நாய், பூனை, தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி மருத்துவரிடம் சென்றதைப் பார்த்துள்ளீர்களா? இயற்கையோடு இயற்கையாக வளரும் பிராணிகளுக்கு நோய் வராது. வந்தாலும் தானே சரி செய்துவிடும். ஒவ்வொரு விலங்கிற்கும், மனித உடலுக்கும் அந்த பண்பு உண்டு.

    ஏன் இதை இங்கு தெரிவிக்கிறேன் என்றால் எனக்கு முதுகுவலி வந்துவிட்டது என்று யாரும் வருந்த வேண்டாம். பயப்பட வேண்டாம். அவசரப்பட்டு ஒரு மருத்துவர் கூறினார் என்று உடன் அறுவை சிகிச்சைக்கு சென்றுவிடாதீர்கள். முதுகெலும்பில் கத்தியே வைக்கக்கூடாது. அதற்கு நம் புத்தியைக் கூர்மையாக்கி இனிவரும் யோகக்கலையினை பயில்வோம்.

    தன் உடலே தன்னைப் பாதுகாக்க முயலும் பொழுது, நீங்கள் இயற்கையான மருந்தில்லா மருத்துவமான யோக்கலைகளை செய்தால் உடல் மிக நன்றாக ஒத்துழைக்கும். விரைவில் பலன் கிடைக்கும். இன்றைய அவசரமான உலகில் முதுகுவலி உள்ளவர்களும், இல்லாதவர்களும் கீழ்கண்ட யோகப் பயிற்சியை தினமும் காலை மாலை பத்து நிமிடங்கள் செய்யுங்கள். வலி இருந்தால் படிப்படியாகக் குறையும். முதுகுவலி இல்லாதவர்களுக்கு நிச்சயமாக பிற்காலத்தில் வராமல் தடுக்கும்.
    பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்ற வாறு இறந்த செல்களை நீக்குவதுதான் சரியான முறை.
    மாதத்திற்கு ஒருமுறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்ற வாறு இறந்த செல்களை நீக்குவதுதான் சரியான முறை.

    இறந்த செல்களை செயற்கையாக பணம் கொடுத்து ரசாயனக் கலப்புகளுடன் இருக்கும் அவற்றை பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அடிக்கடி உங்கள் சருமத்திற்கு இவ்வாறான செயற்கை ரசாயனம் ஊட்டப்பட்ட கலவையை தருவது உங்கள் சருமத்தின் இயல்பை மாற்றி வறண்டு சுருக்கங்கள் வர வைத்து விடும்.

    க்ளென்சிங் முறைக்கு காய்ச்சாத பால் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்கள், எலுமிச்சை சாறு இரண்டு சொட்டுக்கள், கிளிசரின் 10 சொட்டுக்கள் இதனை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இதனை பஞ்சின் மூலம் தொட்டுக்கொண்டு அழுத்தமாக முகத்தை துடைக்கவும். இதுவே எளிமையான க்ளென்சிங் முறை.

    ஸ்க்ரப்பிற்கு பழுத்த பப்பாளி பழம், அன்னாசி பழம், ஸ்டராபெரி பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்

    எண்ணெய்பசைக்காரர்களுக்கு ஸ்டராபெரி நல்லது. இதனை மிக்சியில் போட்டுக் கூழாக்கவும். தண்ணீர் விட வேண்டாம். அதனுடன் இரண்டு சிட்டிகை பட்டைத்தூள் மற்றும் 1/4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்ட வடிவில் தேய்க்கவும். இதனால் இறந்த செல்கள் எளிதாக நீங்கும். முகம் பளபளக்கும். இதனை கைகள் கால்கள் என எல்லா இடத்திலும் தேய்க்கலாம்.

    மேலே குறிப்பிட்ட மூன்று பழங்களான பப்பாளி, அன்னாசி மற்றும் ஸ்டராபெரி பழங்கள் இறந்த செல்களை நீக்கும் என்சைம்களை மூலமாகக் கொண்டவை. வாரம் இருமுறை இப்படி ஸ்கரப் செய்வதால் முகப்பொலிவு மேம்படும். கரும்புள்ளிகளும் மறையும். 
    கருவுற்ற காலத்தில் வெளித் தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை. உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது.
    கருவுற்ற காலத்தில் வெளித் தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை.  உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது.

    இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பி விடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்த பட்சம் ஆறு வார காலம் ஆகும்.

    சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும். குழந்தை பிறந்ததும், ‘‘சூடா காஃபி சாப்பிடக் கூடாது..! பச்சைத் தண்ணில கை வைக்காதே..!

    குழந்தைக்குப் பால் கொடுக்கும் போது மல்லிகைப்பூ ஆகாது! மாம்பழமா. கூடவே கூடாது!’’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். உண்மையில் இதெல்லாம் தேவையில்லாத பயங்கள் தான்! இன்னும் சில வீடுகளில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணுக்குத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் பிரெட் மட்டும் தான் சாப்பிடக் கொடுப்பார்கள்.

    இதெல்லாம் ரொம்பத் தவறான விஷயம். பிரசவமான பெண்ணுக்கு சாதாரண மாக, நாம் வீட்டில் சாப்பிடும் உணவு வகைகளைக் கொடுப்பது தான் சிறந்தது.
    அப்படிக் கொடுத்தால் தான் அம்மாவுக்கு இயல்பாக தாய்ப்பாலும் சுரக்கத் தொடங்கும். நார்மலான டெலிவரிக்கே சில சமயங்களில், வஜைனாவின் வாய்ப் பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். சிசேரியனுக்கோ சொல்லவே வேண்டாம்.

    இப்படிக் காயப்பட்ட பெண்களுக்குத் தண்ணீரே கொடுக்கக் கூடாது. அப்படியே கொடுத்தாலும் தொண்டையை நனைக்குமளவுக்குக் கொடுத்தால் போதும் என்று பல வீடுகளில் சொல்வார்கள். தண்ணீர் அதிகம் குடித்தால் காயத்தில் சீழ் பிடித்து விடும் என்பது அவர்களின் விளக்கம்.

    இந்தத் தண்ணீர்க் கட்டுப்பாடு சில நாட்கள் தான் என்றில்லை... சில மாதங்கள் வரைகூட தொடரும்! இதுவும் மிகவும் தவறான விஷயம். உண்மையில் இந்தச் சமயத்தில்தான் தாய் நிறைய, தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி நிறைய தண்ணீர் குடித்தால் தான் தாய்க்கு நீர்க்கடுப்பு (யூரினரி இன்ஃபெக்ஷன்) போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

    குழந்தை பிறந்தவுடனேயே அத்தனை நாளும் பெரிதாகி, குழந்தையைத் தாங்கி ஏந்திய தாயின் கர்ப்பப்பை மெதுமெதுவாக பழைய நிலைக்கு வந்து விடும். அந்தச் சமயத்தில் ரத்தப் போக்கு வருவது இயற்கை. 4_5 வாரங்கள் வரைக்கும் இந்த ரத்தப் போக்கு நீடிக்கும். அதற்குமேல் போனால் தவறு. தாயின் கர்ப்பப்பையில் நோய்த் தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால் இப்படி ஆகலாம்.

    சில சமயம் தாயின் கர்ப்பப் பையில் நஞ்சின் பாகங்கள் அல்லது சில திசுக்கள் வெளி வராமல் விட்டுப் போயிருந்தாலும் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படலாம்.
    கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அந்த வகையில் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - ஒரு கப்,
    வேக வைத்த பாசிப்பருப்பு - கால் கப்,
    மிளகு (ஒன்று இரண்டாக உடைத்தது) - அரை டேபிள் ஸ்பூன்,
    சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்,
    நெய் - 4 டேபிள் ஸ்பூன்,
    இஞ்சி - ஒரு துண்டு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    ப.மிளகாய் - 4
    உப்பு - தேவையான அளவு.

    கோதுமை ரவை மிளகு பொங்கல்

    செய்முறை:

    இஞ்சி துருவிக்கொள்ளவும்

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கோதுமை ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேக விடவும். அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

    இன்னொரு கடாயில் சிறிது நெய் விட்டு… சீரகம், மிளகு. இஞ்சி துருவல், ப.மிளகாய், சீரகம், கறிவேப்பிலை போட்டு வறுத்து கோதுமை கலவையில் கலந்து, மீதமுள்ள நெய் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

    சூப்பரான கோதுமை ரவை மிளகு பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெறுமனே, “இத்தனை ரூபாய் வாடகை. 5 மாதம் முன்பணம்“ என்று வாய் வார்த்தையில் இப்போது பேசி வீட்டை வாடகைக்குவிட முடியாது.
    வெறுமனே, “இத்தனை ரூபாய் வாடகை. 5 மாதம் முன்பணம்“ என்று வாய் வார்த்தையில் இப்போது பேசி வீட்டை வாடகைக்குவிட முடியாது. 20 ரூபாய் முத்திரைத் தாளிட்ட பத்திரத்தில் இரு தரப்பும் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நடைமுறைக்கு வந்துவிட்டது. அதுபோன்ற ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களின் பட்டியல் இது.

    இரு தரப்பினரும் வயது, விலாசம், பான் எண் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். வாடகைதாரர் மாதச்சம்பள வேலையில் இருந்தால், நிறுவனம், பதவி இவற்றையும் குறிப்பது நலம். வாடகையை நெப்ட் வழியாகத்தான் அனுப்புகிறார்கள். அதற்குத் தேவையான விவரங்களைக் கொடுத்துவிடுங்கள். ஆனால் சில வீடுகளில், வாடகையை வயதான பெற்றோர் கணக்கில் வரவு வைக்க கோருவார்கள். இதுபோன்ற சமயத்தில், அக்ரிமென்டிலும் இதுதொடர்பான தெளிவான விளக்கங்கள் இருக்க வேண்டும்.

    உங்களின் வீட்டில் என்னென்ன அறையில் என்னென்ன அறைக்கலன்கள் உள்ளன என்பது ஒப்பந்தத்தின் பட்டியலில் இடம்பெற வேண்டும். அவை யாவும் இயங்கும் நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். வாடகைக்கு வீட்டை விடும் முன், சொத்து வரி, மின் கட்டணம் போன்றவற்றை குறித்த காலத்தில் செலுத்துங்கள்.

    11 மாசத்துக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். வாடகை உயர்த்தப்படும் போன்ற வாசகங்கள் பொதுவாக ஒப்பந்தத்தில் இடம்பெறும். இவற்றைச் சில வாடகைதாரர்கள் மறுக்கலாம். விவாதித்து முடிவு எடுங்கள். வாடகைக்கு விட்ட பின்னர், ஏதாவது ஒரு சாக்கு வைத்துக் கொண்டு அடிக்கடி வீட்டைப் போய்ப் பார்ப்பது பண்பல்ல. வாடகைக்கு இருப்பவருக்கு தர்மசங்கடம் ஏற்படும். ஏதாவது சிக்கல் என்றால் மட்டும் வாடகைக்கு விட்ட வீட்டைக் கண்காணிப்பது நல்லது.

    வீடு, குடித்தனத்துக்காகத்தான், தொழில் நோக்கத்துக்காக இல்லை என்பதை மிகத் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிடுங்கள். தையல், டியூஷன் போன்றவை செய்தொழிலில் வரும். ஆனால் ஜெராக்ஸ் மெஷின் வைத்துக் கொள்வது, துணிகள் வாங்கி விற்பது போன்றவை வியாபாரமாகக் கருதப்படும் வாய்ப்புகள் உள்ளன. திருமணம் ஆகாத மூன்று, நான்கு பேர் வீட்டில் சேர்ந்து தங்குகிறார்கள் என்றால், ஒப்பந்தத்தை யார் பேரில் போட வேண்டும். யார் பொறுப்பு என்பதை கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

    வாடகைக்கான இடம் சற்று பெரியதாக இருந்தால், ஓர் அறையை மட்டும் உள் வாடகைக்கு விட வாய்ப்பு உண்டு. இதற்கான விதியும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். காலம் வேகமாக மாறிவருகிறது. அடுத்த வீட்டில் இருப்பவர்கள்கூட யாரென்று தெரியாத நிலைமை இருந்து வருகிறது. எனவே புது நபருக்கு வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன்பு, எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்வது அவசியம்.
    ×