என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    2030 வரையிலான புதிய பத்தாண்டு பெண்களுக்கானது. கடந்த நூறு ஆண்டுகளில் நடந்ததைவிட அதிக மாற்றங்கள் பெண்களின் உலகத்தில் வருகிற பத்தாண்டுகளில் தோன்றும்.
    2030 வரையிலான புதிய பத்தாண்டு பெண்களுக்கானது. கடந்த நூறு ஆண்டுகளில் நடந்ததைவிட அதிக மாற்றங்கள் பெண்களின் உலகத்தில் வருகிற பத்தாண்டுகளில் தோன்றும். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அறிவும், ஆற்றலும், தன்னம்பிக்கையும் நிறைந்த பெண்களுக்கான காலமாக இந்த பத்தாண்டுகள் இருக்கும்.

    அதில் பெண்கள் உலகம் சந்திக்கும், சாதிக்கும் விஷயங்கள் என்னென்னவாக இருக்கும் என்பது தெரியுமா?

    வருகிற பத்தாண்டுகளில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய எந்திர மனிதர்கள் உருவாக்கப்பட்டு விடுவார்கள். அதற்கான ஆராய்ச்சிகள் உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றன. மனிதர்கள் காட்டுவதை போன்ற அன்பு, கருணை, கோபம், மகிழ்ச்சி போன்றவைகளை ரோபோட்டுகளும் வெளிப்படுத்தி, மனிதர்களோடு கலந்து மனிதர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருப்பார்கள். சில நேரங்களில் சிலர் அதனை தங்கள் வாழ்க்கைத்துணை போன்றும் பாவிக்கலாம். அந்த துணை மது அருந்தாத, சிகரெட் புகைக்காத, ஆரோக்கியத்தை கொண்டதாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு எதிர்மறையான முடிவுகளை எடுக்காமல், மனிதர்களைவிட திறமை கொண்டதாகவும் அந்த எந்திரங்கள் இருக்கலாம். அதனால் அவைகளுக்கு மவுசு அதிகரிக்கும்.

    பெற்றோர் தங்கள் மகளிடம் ஒரு இளைஞனை குறிப்பிட்டு அவனை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தும்போது அவள், ‘அவனை திருமணம் செய்து என் வாழ்க்கையை கெடுத்துக்கொள்வதற்கு பதில், நான் ஒரு எந்திர மனிதனை திருமணம் செய்துகொண்டால் நிம்மதியாக வாழ்வேன்’ என்றுகூட சொல்லும் நிலை பத்தாண்டுகளில் உருவாகலாம்.

    நவீன தொழில்நுட்பங்கள் பெண்களை சமையல் அறையில் இருந்து இந்த பத்தாண்டுகளில் வெளிக்கொண்டு வந்துவிடும். சமையல்வேலை மற்றும் அலுவலக வேலை இரண்டையும் சேர்த்து செய்யும் பெண்களை 2030-ல் பார்ப்பது ஓரளவு சிரமமானதாக இருக்கலாம். குடும்பத்தலைவிகளையும் வீட்டையும் நவீன தொழில்நுட்பத்தால் இணைத்துவிடுவார்கள். பெண்கள் அலுவலகத்தில் இருந்து ஆன்லைன் வழியாக வீட்டையும், சமையல் அறையையும் இயக்கிக்கொண்டிருப்பார்கள். வீட்டில் இருந்து அலுவலகத்தை இயக்குவார்கள். இரண்டு இடத்திலும் இல்லாமல், இன்னொரு இடத்தில் இருந்து எல்லாவற்றையும் இயக்கியும் சாதித்துக்காட்டுவார்கள்.

    ஆரோக்கியம் முழுவதையும் நவீன தொழில்நுட்பம் தன்வசம் எடுத்துக்கொள்ளும். உடல், தொழில்நுட்ப ‘சென்ஸாருடன்’ இணைக்கப்பட்டுவிடும். பெண்களுடைய உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் எல்லா மாற்றங்களையும் அது வெளிப்படுத்தும். ரத்த அழுத்தமோ, இதயபாதிப்போ, கர்ப்ப காலத்து மாற்றங்களோ எல்லாவற்றையும் அதுவே உணர்த்திவிடும்.

    பெண்களுக்கு அடுத்த பத்தாண்டுகளில் தங்களுடைய உடல் மீது அதிக விழிப்புணர்வு தோன்றும். இப்போது பெண்கள் அதிகம் சாப்பிட்டு உடல்குண்டானவர்களாக இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும். பெண்கள் உணவிலும், உடல் தோற்றத்திலும் கூடுதல் அக்கறை செலுத்துவார்கள். பெண்கள் இளமையை தக்கவைத்துக்கொள்ள புதிய விஞ்ஞானபூர்வமான விஷயங்களை கையாளத் தொடங்கிவிடுவார்கள். அதற்கு ஸ்டெம்செல் தெரபி கைகொடுக்கும். இந்த துறையில் ஏராளமான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அழகோடும், இளமையோடும் வாழ இதனை பல பெண்கள் 2030-களில் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள்.

    குழந்தைகளுக்காக ‘ஸ்மார்ட் சாக்ஸ்’ உருவாக்கப்பட்டுவிடும். அந்த சாக்ஸை பொருத்திவிட்டால் போதும், குழந்தைக்கு காய்ச்சலோ, சுவாசப் பிரச்சினையோ ஏற்பட்டால் அந்த சாக்ஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதிலுள்ள விவரங்கள் அனைத்தும் ஒரு ‘ஆப்’க்கு செல்லும். பெற்றோர்களுக்கு குழந்தையின் உடல்நலம் பற்றி என்னவெல்லாம் தெரியவேண்டுமோ அவைகளை எல்லாம் அந்த ‘ஆப்’ அறிவிக்கும்.

    பிரா, என்றதும் பெண்களின் மார்பழகை மேம்படுத்த பயன்படும் உள்ளாடை என்றுதான் நாம் கருதுவோம். அடுத்த பத்தாண்டுகளில் ‘ஸ்மார்ட் பிரா’ உருவாக்கப்பட்டுவிடும். அது அணிந்திருக்கும் பெண்ணின் இதய துடிப்பு, உடல் இயக்கம், உடல் ஆரோக்கியம், சுவாச கட்டமைப்புகளின் செயல்பாடு போன்ற அனைத்தையும் அளவீடு செய்துவிடும். உடல் இயக்கத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் பிராவில் இருக்கும் இன்டிகேட்டர் அதற்குரிய அதிர்வை வெளியிட்டு எச்சரிக்கை செய்யும். அதோடு ஏதாவது ஒரு மருத்துவமனை நிர்வாகத்தையும் தொழில் நுட்ப உதவியோடு இணைத்துவைத்திருந்தால், ‘உங்கள் பிரா இன்னென்ன பிரச்சினைகள் இருப்பதாக அறிவிக்கிறது. ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம். உடனே மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள்’ என்ற அழைப்பு மருத்துவமனையில் இருந்து வரும்.

    இப்போது பெருமளவு பெண்கள் குழந்தையின்மையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு 2030-க்குள் புதிய விடிவு கிடைத்துவிடும். பிரசவத்தை தள்ளிப்போடும் பெண்கள் தங்கள் சினைமுட்டை தரமாக இருக்கும் இளம் பருவத்திலே அவைகளை எடுத்து பிற்காலத்தில் பயன்படுத்தும் அளவுக்கு சேமிப்பது பெருமளவு அதிகரித்துவிடும். அவர்கள் எப்போது தாய்மையடைய விரும்புகிறார்களோ அப்போது எடுத்து பயன்படுத்திக்கொள்வார்கள். கருப்பை மாற்று ஆபரேஷனும் நவீன வழிமுறைகளில் கையாளப்படும் சூழ்நிலைகள் உருவாகும். அதனால் மெனோபாஸ் காலகட்டத்திற்கு பின்பும் பெண்கள் செயற்கைமுறையில் தாய்மையடைந்து பிரசவிப்பது அதிகரிக்கும். இதுபோன்ற பலவிதமான மாற்றங்கள் 2030-க்குள் நிறையவே நடக்கும். அதில் பல நம்மை ஆச்சரியப்படவைக்கும்.
    இயற்கையாகவே இளமையாகவும் அழகாகவும் ஜொலிப்பதற்கு மாம்பழ மசாஜ் உதவும். மாம்பழங்களை கூழாக்கி மசாஜ் செய்வது பற்றி பார்ப்போம்.
    இயற்கையாகவே இளமையாகவும் அழகாகவும் ஜொலிப்பதற்கு மாம்பழ மசாஜ் உதவும். மாம்பழங்களை கூழாக்கி மசாஜ் செய்வது பற்றி பார்ப்போம்.

    மாம்பழம், பாதாம், ஓட்ஸ் மூன்றையும் பயன்படுத்தி சருமத்திற்கு மசாஜ் செய்யலாம். இவை இறந்த சரும செல்களின் அடுக்கை அகற்றி, சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருப்பதற்கு வழிவகை செய்யும். ஒரு மாம்பழத்தை எடுத்து கூழாக்கிக்கொள்ளவும். அதனுடன் தலா ஒரு டேபிள்ஸ்பூன் பாதாம் தூள், ஓட்ஸ் சேர்த்து கலக்கவும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலரவிட்டு, காட்டன் துணியால் துடைக்கவும். பின்னர் நீரில் முகத்தை கழுவுங்கள்.

    மாம்பழத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை பழத்தையும் பயன்படுத்தலாம். மாம்பழத்தை கூழாக்கி அதனுடன் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவிவிட்டு நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். முகப்பரு பிரச்சினை கொண்டவர்களுக்கு இது பலன் தரும்.

    மாம்பழத்துடன் முல்தானி மெட்டியையும் உபயோகிக்கலாம். கோடைகாலத்தில் முல்தானி மெட்டியை நிறைய பெண்கள் பயன்படுத்துவார்கள். அது சருமத்தை மிருதுவாகவும் ஈரப்பத்தத்தன்மையை குறைய விடாமலும் பார்த்துக்கொள்ளும். மாம்பழக் கூழுடன் ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டியையும், சிறிதளவு தயிரையும் கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி கால் மணி நேரம் உலரவிட்டுவிட்டு சாதாரண நீரில் கழுவிவிடலாம்.
    பெண்மையின் இலக்கணமான மார்பகத்தில் தான் பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். இன்று பெரும்பாலான மார்பக பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்து விட்டன.
    பெண்மையின் இலக்கணமான மார்பகத்தில் தான் பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். இன்று பெரும்பாலான மார்பக பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்து விட்டன.

    நீண்ட கால்கள், ஒரு மெல்லிய இடுப்பு மற்றும் அழகான மார்பு ஆகியவை மூன்று அடிப்படைக் கருத்துகளாகும், அவை ஒரு சிறந்த பெண் உருவத்தை உருவாக்குகின்றன. முதல் இரண்டு சந்தேகங்கள் இல்லை, ஆனால் மூன்றாவது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரிடமும் நிறைய சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

    பெண்களைப் பிரியப்படுத்த, பெண்கள் எந்த தந்திரங்களுக்கும் செல்கிறார்கள். அவர்கள் தலைமுடிக்கு சாயம் போடுகிறார்கள், ஒப்பனை செய்கிறார்கள், வண்ண லென்ஸ்கள் உதவியுடன் கண்களின் நிறத்தை மாற்றுகிறார்கள், மார்பளவு அளவை அதிகரிக்கிறார்கள் அல்லது மார்பகங்களைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் மார்பகக் குறைப்பு சாத்தியம் என்பது அனைவருக்கும் தெரியாது. இதைச் செய்ய, பல்வேறு உணவுகள், மசாஜ், உடற்பயிற்சி உள்ளன. இந்த கட்டுரையில், அறுவை சிகிச்சை இல்லாமல் மார்பகங்களை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி குறிப்பாக பேசுவோம்.

    மார்பகங்களைக் குறைப்பதற்கான உணவோடு, மசாஜ் செய்யுங்கள், தோல் நெகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவும் முகமூடிகளைப் பயன்படுத்துங்கள்; மார்பகக் குறைப்பும் சாத்தியமாகும் அத்தியாவசிய எண்ணெய்கள். இந்த முறைக்கு, ஜோஜோபா எண்ணெய்கள் (தோராயமாக 25.0 மில்லி.) மற்றும் திராட்சை விதை (தோராயமாக 4.0 மில்லி.) கலவையைத் தயாரிப்பது அவசியம். இதன் விளைவாக கலவையில், நீங்கள் 4 சொட்டு ரோஸ் ஆயிலை சேர்க்கலாம். மார்பகத்தை குறைக்க, எண்ணெய் கலவையை உங்கள் நுரையீரலுடன் தோலில் தேய்க்கவும். வட்ட இயக்கங்களில். அத்தகைய மசாஜ் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்குப் பிறகு, நெகிழ்ச்சித்தன்மையை இழக்காமல், உங்கள் மார்பு அளவு குறைந்துவிட்டதைக் காணலாம்;

    மார்பகங்களை மசாஜ் செய்வதற்கென்று இப்போது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மசாஜ் எண்ணெய்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி மார்பகங்களை மசாஜ் செய்யலாம். அதே மாதிரி வெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் போன்றவற்றில் ஒன்றைக் கொண்டு மார்பகங்களைக் கீழிருந்து மேலாக, வட்ட வடிவத்தில் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெருக்கும்.

    அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்துவதும் மார்பகங்களைக் குறைக்க உதவும். இதைச் செய்ய, நீங்கள் பின்வரும் கலவையைத் தயாரிக்க வேண்டும்:

    ஜோஜோபா எண்ணெய் - 25.0 மில்லி.
    திராட்சை விதை எண்ணெய் - 4.0 மில்லி.
    ரோஸ் ஆயில் - 4 சொட்டுகள்.

    கலவையை ஒரு நாளைக்கு 2 முறை ஒளி வட்ட இயக்கங்களுடன் மார்பின் தோலில் தேய்க்கவும். ஒரு மாதத்திற்குப் பிறகு, நீங்கள் முதல் முடிவைக் காணலாம்.

    மார்பகங்கள் பெருக்க வேண்டுமானால் உணவில் கொழுப்பு அதிகமுள்ள வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி, அக்ரூட், பிஸ்தா, பால் போன்ற வற்றை நிறைய சாப்பிட வேண்டும். உடல் பெருத்தால் மார்பகங்களும் பெருக்கும்.

    வாரம் ஒரு முறை தலை முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து, ஊறிக் குளிக்க வேண்டும். மார்பகங்களுக்கும் மசாஜ் செய்ய வேண்டும். மாதுளம் பழம் நிறைய சாப்பிடலாம்.

    மாதுளம் பழத்தோலைக் காய வைத்து இடித்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் குழைத்து மார்கங்களின் மேல் தடவி, ஊறிக் குளிக்கலாம். தொடர்ந்து செய்து வர சிறுத்த, தளர்ந்து போன மார்பகங்கள் ஓரளவுக்குப் பெரிதாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட மாதத்திலிருந்தே வைட்டமின் ஈ எண்ணெயை மார்பகங்களில் தடவி வரலாம்.

    இதனால் பிரசவத்திற்குப் பிறகு மார்பகங்களில் ஏற்படும் தழும்புகளும், வெள்ளைக் கோடுகளும் தவிர்க்கப்படும்.
    விபத்தினால் பல்லில் அடிபடுமானால் பல் உடையலாம். பற்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு உள்ளனவோ அதைப் பொறுத்து சிகிச்சை அமையும்.
    பல் சொத்தை கடுமையாக இருந்தால் ஒரு கட்டத்தில் பொடிப் பொடியாகப் பற்கள் உடைந்துவிட வாய்ப்பு அதிகம். விபத்தினால் பல்லில் அடிபடுமானால் பல் உடையலாம். குழந்தைகள் விளையாடும்போது கவனக்குறைவாக காயம் பட்டாலும் பற்கள் உடைய வாய்ப்பு இருக்கிறது. சண்டை போடும்போது முகத்தைத் தாக்கினால் பற்கள் உடையும். இருளில் எங்காவது இடித்துக் கொள்ளும் போதுகூட பற்கள் உடையக்கூடும். தெற்றுப்பற்கள் உள்ளவர்களுக்கு சிறு விபத்து ஏற்பட்டாலும் பற்கள் உடைந்துவிடும்.

    பல்லில் அடிபட்டு முழு பல்லும் பெயர்ந்து விழுந்தாலும், பாதி பல் உடைந்தாலும், அந்தப் பல்லை ஒரு டம்ளர் பாலில் போட்டு மூடி, உடனடியாக பல் மருத்துவரிடம் அதைக்கொண்டு செல்லுங்கள். உடைந்த பல்லை மீண்டும் அதே இடத்தில் பொருத்திவிடவும் வழிகள் உள்ளன. பல்லின் உடைந்த பகுதியை ஒரு வகை சிமெண்ட் கொண்டு அடைப்பது, பல்லின் மேல் கேப்’ போட்டு மூடுவது, பல் முழுவதையும் எடுத்துவிட்டு, அந்த இடத்தில் ‘இம்பிளான்ட் சிகிச்சை’ மூலம் செயற்கை பல்லைப் பொருத்துவது எனப் பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பற்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு உள்ளனவோ அதைப் பொறுத்து சிகிச்சை அமையும்.

    சில நேரம் பல்லில் அடிபட்டு இருக்கும், ஆனால் உடைந்திருக்காது. இதனால் வலி இருக்காது. அதேநேரம் சில நாட்களில் பல்லின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக பழுப்பு நிறத்துக்கு மாற ஆரம்பிக்கும். இதற்குக் காரணம், பல்லுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்துவிட்டது, என்பதுதான். இந்த நிலையில் உடனடியாகப் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இல்லையென்றால், பல் முழுவதும் பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். பல்லையே அகற்ற வேண்டி வரலாம். இதைத் தவிர்க்கவே உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டியது அவசியம்.
    ஆண்கள் அணியும் காதணிகளில் இத்தனை மாடல்களா? என்று நம் புருவத்தை உயர்த்தும் அளவுக்கு பல்வேறு மாடல்கள் தங்கம், வெள்ளி மற்றும் வைரத்தில் மட்டுமல்லாது இமிடேஷன் நகைகளிலும் வந்து விட்டன.
    ஆண்கள் அணியும் காதணிகளில் இத்தனை மாடல்களா? என்று நம் புருவத்தை உயர்த்தும் அளவுக்கு பல்வேறு மாடல்கள் தங்கம், வெள்ளி மற்றும் வைரத்தில் மட்டுமல்லாது இமிடேஷன் நகைகளிலும் வந்து விட்டன.

    ஐம்பது ஆண்டுகள் முன்னோக்கி சென்றால் அனைத்து ஆண்களும் காதுகளில் காதணிகளை அணிந்து கொண்டுதான் இருந்தார்கள். நாகரீக வளர்ச்சியால் ஆண்கள் காதணிகளை அணிவதை முற்றிலும் நிறுத்தி விட்டார்கள். இந்தியாவில் ஒரு சில சமூகத்தில் மட்டும் ஆண்கள் இன்றளவும் காதணிகளை அணிகிறார்கள்.

    எந்த நாகரீக வளர்ச்சியால் காதணிகளை அணிவதைத் தவிர்த்தார்களோ அதே நாகரீக வளர்ச்சியின் காரணமாக மறுபடியும் ஆண்கள் காதணிகளை அணியத் தொடங்கி விட்டார்கள்.

    ஆண்கள் அணியும் காதணிகளில் இத்தனை மாடல்களா? என்று நம் புருவத்தை உயர்த்தும் அளவுக்கு பல்வேறு மாடல்கள் தங்கம், வெள்ளி மற்றும் வைரத்தில் மட்டுமல்லாது இமிடேஷன் நகைகளிலும் வந்து விட்டன.

    தங்கத்தில் ஹூப் மாடலானது முன்புறம் அரை வட்ட வடிவில் கட்டிங்குகளுடனும், டிசைன்களுடனும் அழகாக உள்ளன. சிறியதாகவும், பெரியதாகவும் பல்வேறு அளவுகளில் வருகின்றன.

    பாலி மாடல் எனப்படும் வட்ட வடிவமானது ரிங் டைப்பில் அகலமாக உள்ளது. ஆண்களின் பாலி மாடல் காதணியானது காதை ஒட்டி இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தங்கம் மற்றும் வெள்ளியிலும் இந்த மாடலானது கிடைக்கின்றது.

    காதே குத்தாமல் அணியக்கூடிய டப்ஸ் மாடல் காதணிகளானது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் பல நிறங்களில் வருகின்றன.

    ஒரே ஒரு கல் வைத்த ஸ்டட் மாடலும் பல ஆண்களாலும் விரும்பி அணியப் படுகின்றது. முதலில் கண்களுக்குத் தெரியாத ஒற்றைக் கல்லை மட்டுமே அணிந்து வந்தவர்கள் இப்பொழுது பெரிய ஒற்றைக் கல் (டைமண்ட், அமெரிக்கன் டைமண்ட்) கம்மலை அணியத் துவங்கி இருக்கிறார்கள்.

    கோல்ட் இயர் ரிங்ஸ் மெலிதாகவும், அகலமான ஹ்யூஜி ஹூப் காதணிகள், தங்க முலாம் பூசப்பட்ட அலாய் பாலி இயர் ரிங்ஸ், வைரக் கற்கள் முழுவதுமாகப் பதித்த ஹூப் இயர் ரிங்ஸ், வொயிட் கோல்ட் மற்றும் நார்மல் கோல்ட் கலந்து வரும் இயர் ரிங்ஸ் எனப் பல மாடல்கள் வந்துள்ளன.

    வட்ட வடிவில் முன்புறமும், பக்கவாட்டிலும் கற்கள் பதித்த ஹிப் ஹாப் காதணிகள் அருமையாக உள்ளன. வட்ட வடிவில் மட்டுமல்லாமல் டயமண்ட் ஷேப் மற்றும் சதுர வடிவத்திலும் ஒன்பது கற்கள், பதினாறு கற்கள் பதித்தது போன்ற காதணிகளும் கவர்ச்சிகரமாக உள்ளன. வெள்ளைக் கற்கள் மட்டுமல்லாது பல வண்ணக் கற்கள் மற்றும் நவரத்தினக் கற்கள் பதித்த காதணிகளையும் ஆண்கள் விரும்பி அணிகிறார்கள்.

    டம்பில் காதணிகளை அணிந்து கொள்வதை சிறு வயது ஆண்கள் பெரிதும் விரும்புகிறார்கள். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் கோல்டு சில்வர் பூச்சுகளில் இந்தக் கம்மல்கள் நடுவில் கருமை நிற பட்டன் போன்ற அமைப்புடன் பார்க்க அழகாக உள்ளன.

    ஓம் வடிவக் கம்மல், சிலுவைக் கம்மல், மேல் கம்மலிலிருந்து செயினானது தொங்க அதன் கடைசியில் சிலுவையானது இருப்பது போலவும், ட்ராகன் கோல்டு சர்ஜிகல் ஸ்டட், அமைதி அடையாளத்தைக் குறிக்கும் லோகோவுடன் வந்திருக்கும் ஸ்டட், ஸ்டர்லிங் சில்வர் பிளெயின் ஸ்மால் ஹூப் ஹ்யூஜி இயர் ரிங்ஸ், கோல்டு ஸ்டார் டிசைன் காதணிகள், ஸ்க்ரூ மாடல் கோல்டு ஸ்டார் டிசைன் காதணிகள், ஸ்க்ரூ மாடல் காதணிகள் எனப் பல கணக்கிலடங்காத டிசைன்களில் ஆண்களின் காதணிகள் வந்துள்ளன.

    14 எம்.எம்., 12 எம்.எம்., 9 எம்.எம்., 7 எம்.எம். அளவுகளில் ஸ்க்ரூ டைப் காதணிகள் வருகின்றன. கோல்டு நக்கட் காதணிகள் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளன. இன்பைனைட் டிசைன் காதணிகள், ஏழு கல் வைரக்கம்மல், பர்சனாலிட்டி காதணிகள், ஸ்பைக் பங்க் காதணிகள், நாட்டிகல் இயர் ரிங்ஸ், வின்டேஜ் காதணிகள் எனப் பல மாடல்களில் பெண்கள் காதணிகளுடன் போட்டி போடும் அளவுக்கு ஆண்கள் காதணிகளும் வந்து விட்டன.

    தொங்கும் காதணிகளை அணிந்து கொள்வதையும் ஆண்கள் விரும்புகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கம்மலிலிருந்து ருத்ராட்சம் தொங்கும் காதணியும், ரிங்கிலிருந்து சிறிய ஹார்ட்டின்கள் தொங்குவது போல் வந்திருப்பவையும் ட்ரெண்டியாக உள்ளன. கத்தரிக்கோல் வடிவக் கம்மலும், கைத்துப்பாக்கி வடிவக் கம்மலும் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன.

    காது குத்துவதால் ஏற்படும் நன்மைகள், ஆரோக்கிய நலன்கள்

    * காது குத்துவதால் கண் பார்வை கூர்மையாகின்றது.

    * மூளை வளர்ச்சிக்கு காது குத்துவது பெருமளவில் உதவி புரிகின்றது.

    * இனப்பெருக்க உறுப்புகளைப் பராமரித்து மாதவிடாய் சுழற்சியானது சரியாக வருவதற்கு உதவுகின்றது.

    * காதுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

    * பதட்டம் மற்றும் ஓசிடி போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன.

    * செரிமான அமைப்புகளைத் தூண்டி அவற்றைச் சரியாக வேலை செய்ய உதவுகின்றன.

    ஆண் குழந்தை என்றால் முதலில் வலது காதையும், பெண் குழந்தை என்றால் முதலில் இடது காதைக் குத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
    ஓணம் சத்யாவில் இடம்பெறும் உணவுப் பட்டியல் நீளமானது. அதில் முக்கியமான உணவுகளை நீங்களும் உங்கள் வீடுகளிலே தயார் செய்து உண்ணலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேனைக்கிழங்கு (இரண்டு அங்குல நீளத்தில் நறுக்கியது) - ஒரு கப்
    வெள்ளரிக்காய் (இரண்டு அங்குல நீளத்தில் நறுக்கியது)- இரண்டு கப்
    முருங்கைக் காய்- 50 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
    கேரட் - 20 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
    பூசணிக்காய்- 20 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
    புடலங்காய்- 10 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
    மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி
    மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி
    உப்பு- தேவைக்கு
    புளிப்பு மாங்காய் (அதே அளவில் நறுக்கியது)- 20 கிராம்
    தேங்காய் துருவல்- ஒன்றரை கப்
    பச்சை மிளகாய்- நான்கு
    கறிவேப்பிலை- தேவைக்கு
    தேங்காய் எண்ணெய்- ஒரு மேஜைகரண்டி

    செய்முறை:


    சேனைக்கிழங்கு, வெள்ளரிக்காய், முருங்கைக்காள், கேரட், பூசணிக்காய், புடலங்காயை நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு முக்கால் பாகத்திற்கு வேகவையுங்கள்.

    அதில் உள்ள நீரை வடிகட்டி வெளியேற்றிவிட்டு, காய்கறிகளில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, புளிப்பு மாங்காய் சேர்த்து வேகவிடுங்கள்.

    வெந்ததும், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை அதில் இடித்து சேர்த்து சூடாக்கி, மேலே தேங்காய் எண்ணெய்யை ஊற்றி மீண்டும் சூடாக்குங்கள்.

    தீயை அணைத்த பின்பு அதே பாத்திரத்தில் பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து பரிமாறுங்கள்.

    சூப்பரான அவியல் ரெடி.

    புளிப்பு மாங்காய்க்கு பதில் புளித்த தயிர் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண் தொழில் முனைவோர்கள் தொழிலுக்கு தேவையான திறமைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் தொழிலில் வெற்றிபெற முடியும்.
    பெண் தொழில் முனைவோர்கள் தொழிலுக்கு தேவையான திறமைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் தொழிலில் வெற்றிபெற முடியும். அதற்கு இதோ சில ஆலோசனைகள்.

    * தொழிலுக்கு தேவையான செயல்களை மற்றவர்கள் சுட்டிக்காட்டும் முன்பாக செய்து முடித்து விட வேண்டும்.

    * நமது குறிக்கோளை அடைவதற்கு ஏற்படும் தடைகளை விடாமுயற்சியுடன் தகர்த்தெறிய வேண்டும். கடின உழைப்போடு விடாமுயற்சி வேண்டும்.

    * தொழில் சார்ந்துள்ள புதிய கண்டுபிடிப்புகள் புதிய நுட்பங்களை அறிந்து அதை உடனே உபயோகப்படுத்தி கொள்ளும் திறன் அவசியமாகும்.

    * உற்பத்தி செய்யும் பொருளின் தரத்தை மேம்படுத்த புதிய தொழிற்நுட்பங்களை அறிமுகப்படுத்தியும் அதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தக்க தீர்வு காணும் ஆர்வமோடு இருக்க வேண்டும்.

    * முறையான திட்டமிடல் 50 சதவீத வெற்றியை அளித்து விடும். நமது குறிக்கோளை அடைய ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிட்டு செயலாற்றுவது அவசியமாகும்.

    * குறைந்த செலவில் தரமான பொருட்களை உற்பத்தி செய்து தொழிலில் வெற்றி பெறும் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.

    * உற்பத்தி பல்வேறு கட்டிடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அரசு நிறுவனங்கள் முதலியவற்றை ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய திறன் படைத்திருக்க வேண்டும்.

    * தொழிலாளர்கள் மேற்பார்வையாளர் உள்ளிட்ட மற்றவர்களை ஊக்கப்படுத்தியும், கொடுத்தப்பணியை நிறைவேற்றி விட்டார்களா என்கின்ற கண்காணிப்பும் அவசியம். அவர்கள் செய்த தவறுகளைச்சுட்டிக்காட்டி சரியான முறையில் வழி காட்டும் திறமை அதி முக்கியமாகும்.

    * தொழில் முனைவோர்களுக்கு தன் மீது தனது திறமையின் மீதும் அசைக்க முடியாது தன்னம்பிக்கை இருக்க வேண்டும். தோல்வி ஏற்பட்டாலும் துவண்டு விடாமல் மீண்டும் முயற்சி செய்ய தன்னம்பிக்கை தான் அடிப்படையாகும்.

    * பணி செய்வோர் உற்பத்தியில் ஈடுபடுவோர் வாடிக்கையாளர் இவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு திட்டமிட்டு நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். அப்போது தான் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் நமக்கு கிடைக்கும்.

    * தொழிலில் ஈடுபடும் தொழில் முனைவோர் கட்டுக் கோப்பான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது முக்கியம். காலம் தவறாமை, நேர்மை, சொன்ன வாக்கை காப்பாற்றுதல் போன்ற பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைபிடித்து வர வேண்டும். சுறுசுறுப்போடு பணியாற்றும் தொழில்முனைவோர்கள் வெற்றி பெற முடியும். சோம்பலின்றி உற்சாகத்தோடு உழைப்பவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

    * உயர்ந்த சிந்தனைகளோடு கூடிய வளமான எண்ணங்கள் வெற்றிக்கு அவசியமாகும். எந்த அளவிற்கு உயர்ந்த சிந்தனை மனதில் விதைக்கிறோமோ அதற்கேற்பதான் அறுவடை செய்ய முடியும். பெரிய சாதனை படைத்தவர்கள் அனைவரிடத்திலும் உயர்ந்த எண்ணங்கள், சிந்தனைகள் அதை சார்ந்த செயல்பாடுகள் அமைந்திருக்கும். நல்ல வளமான எண்ணங்கள் சிந்தனைகளாகும். சிந்தனைகள் செயல்பாடுகளாக மாறும் செயல்பாடுகள் தான் நம் குணத்தை நிர்ணயிக்கும். எனவே, நல்லதையே சிந்தியுங்கள்.

    மாரியப்பன், அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
    ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நூலகம், ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியோடு பெருமையும், தனித்துவமும் கிடைக்கும்.
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

    பகவன் முதற்றே உலகு

    என்பதனை திருக்குறளின் முதல் குறளாக அமைத்துள்ளார் திருவள்ளுவர். என் போன்ற மாணவர்களின் அகவிருள் அகற்றி அறிவொளி ஏற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு இந்த ஆசிரியர் தினத்தில் எம் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆசிரியர்கள் இல்லாத மனித வாழ்வு என்பது இருக்க இயலாது. படித்து பட்டம் பெற்றவனுக்கும், படிக்காமல் பட்டறிவு பெற்றவனுக்கும் என்றும் மூலதனம் அவன் பெற்ற ஆசிரியர்கள்தான். ஆசிரியருக்கு மட்டும் என்றும் அந்த தனித்தன்மையுண்டு. மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கம், படிப்பு என அறிவுக்கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே.

    ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுக்கின்றவர்கள் ஆசிரியர்கள். உலகில் உள்ள பெரிய மனிதராக இருக்கட்டும், சிறியளவில் வாழ்பவராக இருக்கட்டும் இருதரப்பிற்கும் வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் ஆவார் என்று கூறியவர் மக்கள் குடியரசுத்தலைவர் என்று போற்றப்பட்ட அப்துல்கலாம் அவர்கள், வகுப்பறையை குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.

    “நாட்டின் மிகச்சிறந்த அறிவு வகுப்பறையின் கடைசி இருக்கையில் இருக்கலாம் என்று.

    ஒன்றுமற்ற ஒரு கல்லை ஒரு சிற்பி செதுக்கி எவ்வாறு அழகிய சிலையை வடிவமைக்கிறானோ, அவ்வாறே மண்ணாக இருந்த எம்மை மாணிக்க கல்லாக மாற்றியது தலைசிறந்த சிற்பிகாளக்கிய ஆசிரியர்களே. எனவே தான் நான் உயிரோடு இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் மாவீரன் அலெக்சாண்டர்.

    ஆசிரியரின் பெருமை

    ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நூலகம், ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியோடு பெருமையும், தனித்துவமும் கிடைக்கும். உண்மையில் ஒரு மாணவனுக்கு தனது திறனை அடையாளம் காட்டுபவராக, வாழ்வின் அர்த்தங்களை உணர்விக்கின்றவராக இருப்பவர்தான் ஆசிரியர். மாணவ-மாணவிகளின் முதுகெலும்பாக விளங்குகின்ற ஆசிரியரை கவுரவப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும், முனைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    அவரது வேண்டு கோளுக்கு இணங்க 1962-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடப் பட்டு வருகிறது. இவ்வண்ண மயமான நாளில் வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் தெரிவித்து ஆசிரியர் தினத்தை கொண்டாடுவோம்.
    சிகரெட் மட்டும்தான் என்றில்லை, பீடி, பான் பொருட்கள், புகையிலை என அனைத்து வகை போதை பொருட்களும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன.
    உலகில் எக்குத்தப்பாக எகிறிக்கொண்டிருக்கிறது புகைக்கும் பழக்கம். இதனால் வரும் நோய்கள் காலம்காலமாக உயிரை காவு வாங்கிக்கொண்டிருக்கின்றன. இது ஒரு புறம் இருக்க, புகைப்பவர்கள் விடும் புகையைச் சுவாசித்து பாதிப்புகளுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெண்கள் பலரும் புகைக்க ஆரம்பித்திருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருமாறி வருகிறது. புகைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள், நோய்கள் பற்றி உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டு உள்ளது.

    சிகரெட் மட்டும்தான் என்றில்லை, பீடி, பான் பொருட்கள், புகையிலை என அனைத்து வகை போதை பொருட்களும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் புகைக்கும் பழக்கம் 60 லட்சம் பேரை கொல்கின்றது. இதில் 50 லட்சம் பேர் நேரடியாக புகைப்பவர்கள். 6 லட்சம் பேர் புகைப்பவர்கள் விடும் புகையைச் சுவாசிப்பதால் இறப்பவர்கள்.

    புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும் என்றும் கூறுகிறார்கள். புகைக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழை, வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள். உலக அளவில் 10 சதவீத வருவாய் புகையிலை சார்ந்த பொருட்கள் மூலம்தான் கிடைக்கிறது.

    பொருளாதார ரீதியில் இது நல்லதாகப் பார்க்கப்பட்டாலும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம், தேவையற்ற மருத்துவச் செலவு, மனித உழைப்பு வீணடிப்பு ஆகியவற்றையும் சேர்த்தே இந்த பிரச்சினையைப் புரிந்துகொள்ள வேண்டும். புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய் இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு வருகிறது. புகையிலையால் உருவாகும் புற்றுநோய்களில் இதுவே அதிகம்.

    புகைப்பவர்கள் புகையை மட்டும் விடுவதில்லை. அதோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான நச்சுகளையும் வெளியிடுகின்றனர். இந்த நச்சுகளில் 250 நச்சுகள் அதிக தீங்கு விளைவிப்பவை. 69 நச்சுகள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. சிகரெட்டில் நோயை உண்டாக்கக் கூடிய கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. தொடர்ந்து புகைப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப்பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்று நோய் ஏற்படலாம். மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காச நோய், மலட்டுத் தன்மை என மற்ற பாதிப்புகளும் உருவாகலாம்.
    இன்று பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம். உடல், மனநலத்தை சீராக்கவும் பலமாக்கவும் என்ன செய்வதென்று இக்கட்டுரையில் பார்க்கலாம்.
    நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியான நிறைவான மனம், சிறந்த உடல் எதிர்ப்பு சக்தி போன்றவைகள் எல்லாம் வாழ்வின் வரங்கள். இந்த வரங்கள் ஒருவருக்கு சிறப்பாக அமைந்து விட்டால் வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் முழுமையாக அனுபவிக்கவும், வாழ்வின் கஷ்டங்களை தைரியமாக எதிர்கொள்ளவும் பேருதவியாகவும் இன்றியமையாததாகவும் இருக்கும். இன்று பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள்.

    அவசயமின்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே முழுநேரமும் இருப்பதால் அதிகளவில் உட்கார்ந்து இருப்பதும், நொருக்கு தீனிகளை கொறித்து உடல் எடை அதிகரித்து விடுவதும், மனதில் எரிச்சல், சோர்வு, விரக்தி, ஆர்வமின்மை போன்றவை ஏற்படுவதும் சகஜமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம். உடல், மன நலத்தை சீராக்கவும் பலமாக்கவும் என்ன செய்வதென்று இக்கட்டுரையில் பார்க்கலாம்.

    உடல் நலத்திற்கு

    உணவு: உடல் உழைப்பு குறைவாக இருக்க கூடியவர்கள் மாவு சத்து உணவுகளை ஓரளவிற்கு தவிர்த்து புரதம் மற்றும் காய்கறி கீரைவகைகளை பெரிதும் உணவில் சேர்த்து கொள்ளலாம். எண்ணெயில் பொறித்த உணவுகளுக்கு பதிலாக நிறைய பழங்களை வெட்டி, தேனோ, உப்பு காரப்பொடி சேர்த்தோ சாப்பிடலாம். நன்கு பசித்த பின் சாப்பிடுவதும் சாப்பாட்டை நன்கு நிதானமாக மென்று சாப்பிடுவதும் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் இருக்க உதவும்.

    உடற் பயிற்சி:- ஏரோபிக்ஸ், யோகாசனம், மொட்டை மாடியில் எட்டு போல் வரைந்த அதில் நடப்பது, தாய்சீ நடனம், ஜீம்பா. நடனம் போன்ற மனதிற்கு பிடித்த உடற்பயிற்சியை தினமும் குறைந்தது அரைமணி நேரமாவது செய்வது நல்லது. வீட்டில் சின்ன சின்ன வேலைகளை செய்வதும் குழந்தைகளுடன் விளையாடுவதும் கூட மனதிற்கு உற்சாகத்தை கொடுத்து உடல் நலத்தை கூட்டுவதாக அமையும். உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் ‘என்டார் ஃபின்ஸ்’ என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இது நம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஹார்மோன் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாய்விட்டு சிரித்தால்: தினமும் ஒரு அரைமணி நேரமாவது கார்ட்டூன் பார்ப்பது, நகைச்சுவை காட்சிகளை பார்ப்பது என்பதை வழக்கமாக கொள்ளவேண்டும். அல்லது நண்பர்களுடன் மனம் விட்டு பேசி சிரிப்பதும் நல்லது. வாய் விட்டு சிரிக்கும் போது நம் உடலில் என்டார்ஃபின்ஸ் மற்றும் டோபமின்’ ஹார்மோன்கள் சுரக்கின்றன இவை நம் மனதை மகிச்சியாகவும் உற்சாகமாகவும் வைக்க உதவும்.

    ஒத்து உதவி வாழ்தல்: வீட்டில் இருக்கும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தன்னால் முடிந்த சிறு உதவிகளை செய்வதும் அவர்களுக்குக்குத் தேவையான தகவல்களை சேகரித்து தருவதும் மற்றவர்களின் சிறு தவறுகளை மன்னித்து அனுசரித்தும் போகும் போது நம் உடலில் செரடோனின் போன்ற ஹார்மோன்கள் சுரக்கிறது. இது நம் மனதிற்கு புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்து மனச்சோர்வை போக்குகிறது.

    தியானம் செய்தல்: தியானம் செய்யும் போது நம் மனதின் அலைச்சுழல் குறைகிறது. மனம் அமைதியாக இருக்க பழகுகிறது. இதனால் நிறைய வேலைகளை திறமையாக செய்யமுடிகிறது. சிறிய இடத்திலோ, ஒரே இடத்திலோ இருப்பதால் ஏற்படும் விரக்தி மனப்பான்மையை போக்கி, பல புதிய விஷயங்களில் மனத்தை ஈடுபடுத்த இது உதவுகிறது. தியானம் செய்யும் போது சுரக்கும் ‘மெலட்டோனின்’ ஹார்மோன் நம் மனதை அமைதிபடுத்தி இந்த பலன்களை நமக்கு அளிக்கிறது.

    எனவே பெரியவர்கள் மட்டுமின்றி வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும் மேற்கூறியவற்றை கடைபிடிக்க வைத்தால் குடும்பமே மகிழ்சிச்சியாகவும் குதூகலமாவும் மாறிவிடுவதை உணரமுடியும். Work at home Health Tips
    சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானது தான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும்.
    மூல நோய்… இந்த நோய் வந்தாலோ அல்லது இந்த நோய் அறிகுறிகள் இருந்தாலோ பெரும்பாலும் இதை வெளியில் யாரும் சொல்வது இல்லை. சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானது தான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மூல நோய் வருவதாக சொல்லப்படுகிறது. மூல நோய் பிரச்னையை சரி செய்யும் வழிகளைப் பார்க்கலாம். சரியாக மலக் கழிக்காத குழந்தைகள், இளம் பருவத்தினர், 40 வயதைக் கடந்த ஆண், பெண் இருப்பாலினருக்கும் ஆசனவாயில் மூன்று பிரச்னைகள் வருகின்றன.

    1. மூலம் (Piles)

    2.ஆசனவாய் வெடிப்பு(Fissure)

    3. மூன்றாவது, பௌத்திரம் (Fistula)

    உடலில் அசுத்த ரத்தம் செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் சரியான இடைவெளிகளில் வால்வுகள் இருக்கும். இவை தேவையில்லாமல் ரத்தம் தேங்கி நிற்பதைத் தடுக்கும். ஆனால், நம் உடலில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல ரத்தக் குழாய் வீங்குவதே ‘மூலநோய்’ என்கிறோம்.  

     ஆசன வாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்து இருப்பது ‘உள் மூலம்’. தொட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது. மருத்துவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெளிப்புறத்தில் தோன்றுவது ‘வெளி மூலம்’. இதைத் தொட்டுப் பார்த்தே கண்டு பிடிக்கலாம்.

    அறிகுறிகள்…

    மலம் கழிக்கையில் ரத்தம் சொட்டுவது மலத்துடன் ரத்தமும் வெளி வருதல் மலம் கழித்த பின் லேசாக ஆசன வாயில் வீக்கம்

    மலம் இறுகி எளிதில் வெளியேறாது

    அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.

    மூல சதை வெளித்தள்ளுதல்

    செரிமான பிரச்னை

    புளித்த ஏப்பம்

    யாருக்கெல்லாம் மூல நோய் வரலாம்?

    நீண்ட தூரம் பைக் ஓட்டுபவர்கள் காரமான உணவுகளை உண்பவர்கள் அதிகமாக நின்று கொண்டே இருப்பவர்கள் வெரிகோஸ் வெயின் பிரச்னை உள்ளவர்கள் உடல்பருமன் அதிக எடை தூக்குபவர்கள் மலம், சிறுநீர் அடக்குபவர்கள் உட்கார்ந்தே வேலை செய்யும் பணியாளர்கள்

    மூல நோய் வர என்ன காரணம்?

    இந்த வீக்கம் ஏற்பட பலக் காரணங்கள் உண்டு. அவற்றில், நாட்பட்ட மலச்சிக்கல் தான் மிக முக்கியமான காரணம். மலச்சிக்கல் இருக்கும் போது, முக்க வேண்டியுள்ளதால் ஆசன வாயுக்கு அதிக அழுத்தம் தரப்படுகிறது. இதனால் மூல நோய் வருகிறது.

    கர்ப்பிணி களுக்கு மூல நோய்…

    கர்ப்பிணிகளின் வயிற்றில் கரு வளர வளர அடிவயிற்று உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படும். ஆசனவாய் குழாய்களில் அழுத்தம் ஏற்படுவதால் வீக்கம் உண்டாகும். இதனால் சில கர்ப்பணிகளுக்கு அக்காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது. சிலருக்குப் மரபியல் மூலமாகவும் மூலநோய் வரலாம்.

    வீட்டு வைத்திய முறைகள்…

    ஆமணக்கு இலையை நெய் விட்டு இளஞ்சூடாக வதக்கவும். இரவு தூங்கும் முன்பு, மூலம் உள்ள இடத்தில் வைத்து உறங்கலாம். அரை ஸ்பூன் கடுக்காய் தூளை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து இரவில் குடிக்க வேண்டும். துத்திக் கீரையை நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு கடைய வேண்டும்.  

    வாரம் இரண்டு முறை மதிய உணவுக்குப் பின் சாப்பிட்டு வரலாம். நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். காலையும் மாலையும் துத்தி இலையை அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு விழுங்கிய வுடன் மோர் குடிக்கலாம். மதிய உணவில், 5 சின்ன வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாப்பிடும் பழக்கம் இருப்பவர் களுக்கு பைல்ஸ் வராது.  

    அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலை அதை நன்கு மென்று சாப்பிடவும். அந்த நீரையும் குடித்து விடுங்கள். மாதுளை தோலை சுத்தம் செய்து விட்ட பின் நீரில் போட்டு கொதிக்க விட்ட பின்னர் அதை வடிகட்டி அந்த நீரை குடித்து வரலாம்.

    மூலம் வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?

    தினமும், நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுங்கள். பச்சை நிற காய்கறிகள் அனைத்துக் கீரைகள் பீன்ஸ், அவரை புடலங்காய் வெண்டை காய் தினம் ஒரு கீரை சிவப்பரிசி சாதம், கைக்குத்தல் சாதம் 2-3 வகை பழங்கள் வாழைப்பழம் அவசியம் பப்பாளி சாத்துகுடி, கமலா பழம் 2- 3 லிட்டர் தண்ணீர்

    தவிர்க்க வேண்டியவை

    சப்பாத்தி, பரோட்டா இரும்பு சத்து மாத்திரைகள் காரம், புளிப்பு உணவுகள் அதிகமான அசைவ உணவுகள் பீட்சா, பர்கர் சீஸ் உள்ள பேஸ்டி உணவுகள் பசை போல இழுக்கின்ற உணவுகள் மைதா உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
    நீங்கள் வயதாகும் போது, உங்கள் சருமமும் வயதாகிறது. என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
    நீங்கள் வயதாகும் போது, உங்கள் சருமமும் வயதாகிறது. என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

    20களில்: உங்கள் சருமம் அதிகபட்ச பொலிவுடன் காணப்படும், பதின்பருவ பருக்களின் பாதிப்பு தொடரும். குழந்தை பிறப்புக் கட்டுப்பாடு அல்லது கருத்தரித்தல் சருமத்தைப் பாதிக்கலாம்.

    30களில்: மரபுரீதியாக நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், பெரிதாக மாற்றம் இருக்காது, ஆனாலும் கண்ணின் கீழ் பைகள், வாயை சுற்றிலும் சிரிக்கும் கோடுகள் போன்றவை ஏற்படக்கூடும்.

    40களில்: வயதாவதன் தெளிவான அறிகுறிகளை சருமம் காண்பிக்க தொடங்கும். நெற்றி சுருக்கங்கள், உள்ளங்கையின் பின்புறம் சுருக்கம், கழுத்து மற்றும் புறங்கைகளில் சுருக்கம், தொங்கும் சருமம் போன்றவை ஏற்படக்கூடும்.  
    ×