என் மலர்

  ஆரோக்கியம்

  அவியல்
  X
  அவியல்

  ஓணம் சத்யா: சத்தான சுவையான அவியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓணம் சத்யாவில் இடம்பெறும் உணவுப் பட்டியல் நீளமானது. அதில் முக்கியமான உணவுகளை நீங்களும் உங்கள் வீடுகளிலே தயார் செய்து உண்ணலாம்.
  தேவையான பொருட்கள் :

  சேனைக்கிழங்கு (இரண்டு அங்குல நீளத்தில் நறுக்கியது) - ஒரு கப்
  வெள்ளரிக்காய் (இரண்டு அங்குல நீளத்தில் நறுக்கியது)- இரண்டு கப்
  முருங்கைக் காய்- 50 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
  கேரட் - 20 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
  பூசணிக்காய்- 20 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
  புடலங்காய்- 10 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
  மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி
  மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி
  உப்பு- தேவைக்கு
  புளிப்பு மாங்காய் (அதே அளவில் நறுக்கியது)- 20 கிராம்
  தேங்காய் துருவல்- ஒன்றரை கப்
  பச்சை மிளகாய்- நான்கு
  கறிவேப்பிலை- தேவைக்கு
  தேங்காய் எண்ணெய்- ஒரு மேஜைகரண்டி

  செய்முறை:


  சேனைக்கிழங்கு, வெள்ளரிக்காய், முருங்கைக்காள், கேரட், பூசணிக்காய், புடலங்காயை நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு முக்கால் பாகத்திற்கு வேகவையுங்கள்.

  அதில் உள்ள நீரை வடிகட்டி வெளியேற்றிவிட்டு, காய்கறிகளில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, புளிப்பு மாங்காய் சேர்த்து வேகவிடுங்கள்.

  வெந்ததும், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை அதில் இடித்து சேர்த்து சூடாக்கி, மேலே தேங்காய் எண்ணெய்யை ஊற்றி மீண்டும் சூடாக்குங்கள்.

  தீயை அணைத்த பின்பு அதே பாத்திரத்தில் பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து பரிமாறுங்கள்.

  சூப்பரான அவியல் ரெடி.

  புளிப்பு மாங்காய்க்கு பதில் புளித்த தயிர் பயன்படுத்தலாம்.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×