என் மலர்

  ஆரோக்கியம்

  மாணவர்களின் சாதனை... ஆசிரியருக்கு பெருமை...
  X
  மாணவர்களின் சாதனை... ஆசிரியருக்கு பெருமை...

  மாணவர்களின் சாதனை... ஆசிரியருக்கு பெருமை...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நூலகம், ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியோடு பெருமையும், தனித்துவமும் கிடைக்கும்.
  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

  பகவன் முதற்றே உலகு

  என்பதனை திருக்குறளின் முதல் குறளாக அமைத்துள்ளார் திருவள்ளுவர். என் போன்ற மாணவர்களின் அகவிருள் அகற்றி அறிவொளி ஏற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு இந்த ஆசிரியர் தினத்தில் எம் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ஆசிரியர்கள் இல்லாத மனித வாழ்வு என்பது இருக்க இயலாது. படித்து பட்டம் பெற்றவனுக்கும், படிக்காமல் பட்டறிவு பெற்றவனுக்கும் என்றும் மூலதனம் அவன் பெற்ற ஆசிரியர்கள்தான். ஆசிரியருக்கு மட்டும் என்றும் அந்த தனித்தன்மையுண்டு. மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கம், படிப்பு என அறிவுக்கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே.

  ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுக்கின்றவர்கள் ஆசிரியர்கள். உலகில் உள்ள பெரிய மனிதராக இருக்கட்டும், சிறியளவில் வாழ்பவராக இருக்கட்டும் இருதரப்பிற்கும் வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் ஆவார் என்று கூறியவர் மக்கள் குடியரசுத்தலைவர் என்று போற்றப்பட்ட அப்துல்கலாம் அவர்கள், வகுப்பறையை குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.

  “நாட்டின் மிகச்சிறந்த அறிவு வகுப்பறையின் கடைசி இருக்கையில் இருக்கலாம் என்று.

  ஒன்றுமற்ற ஒரு கல்லை ஒரு சிற்பி செதுக்கி எவ்வாறு அழகிய சிலையை வடிவமைக்கிறானோ, அவ்வாறே மண்ணாக இருந்த எம்மை மாணிக்க கல்லாக மாற்றியது தலைசிறந்த சிற்பிகாளக்கிய ஆசிரியர்களே. எனவே தான் நான் உயிரோடு இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் மாவீரன் அலெக்சாண்டர்.

  ஆசிரியரின் பெருமை

  ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நூலகம், ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியோடு பெருமையும், தனித்துவமும் கிடைக்கும். உண்மையில் ஒரு மாணவனுக்கு தனது திறனை அடையாளம் காட்டுபவராக, வாழ்வின் அர்த்தங்களை உணர்விக்கின்றவராக இருப்பவர்தான் ஆசிரியர். மாணவ-மாணவிகளின் முதுகெலும்பாக விளங்குகின்ற ஆசிரியரை கவுரவப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும், முனைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

  அவரது வேண்டு கோளுக்கு இணங்க 1962-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடப் பட்டு வருகிறது. இவ்வண்ண மயமான நாளில் வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் தெரிவித்து ஆசிரியர் தினத்தை கொண்டாடுவோம்.
  Next Story
  ×