என் மலர்
ஆரோக்கியம்
நாம் வழக்கமாக நமது ஆடைகளை சுத்தம் செய்வதை போல குழந்தைகளின் மென்மையான பொம்மைகளையும் கழுவ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் குழந்தைகளுக்கு ரைனிடிஸ் (Rinitis alergica)ஏற்படலாம்..!
நாம் வழக்கமாக நமது ஆடைகளை சுத்தம் செய்வதை போல குழந்தைகளின் மென்மையான பொம்மைகளையும் கழுவ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் குழந்தைகளுக்கு ரைனிடிஸ் ஏற்படலாம்..!
மென்மையான பொம்மைகளுடன் (Soft Toys) சேர்ந்து தூங்கும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. பல குழந்தைகள் இந்த பொம்மைகள் இல்லை என்றால் சாப்பிடுவதில்லை. அவர்கள் மென்மையான பொம்மைகளுடன் நெருக்கமான உணர்வு மிக்கவர்கள், அதை யாருடனும் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்புவாதில்லை. ஆனால், இந்த மென்மையான பொம்மைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அவற்றை நாம் அடிக்கடி கழுவப்பட வேண்டும். இல்லையெனில் உங்கள் குழந்தைகளுக்கு ரினிடிஸ் பிரச்சினை இருக்கலாம்.
ரினிடிஸ் பிரச்சனை என்றால் என்ன?
அடிக்கடி தும்மல், மூக்கில் நீர்வாடிதல், மூக்கு, கண்கள் மற்றும் உள்ளங்கைகளில் அரிப்பு ஆகியவை ரைனிடிஸின் அறிகுறிகளாகும். ரினிடிஸின் உண்மையான ஆதாரம் தூசி மற்றும் மண் ஆகும். வானிலை மாற்றத்துடன் ரைனிடிஸ் ஏற்படலாம். நாம் வழக்கமாக நமது ஆடைகளை சுத்தம் செய்வதை போன்று, குழந்தைகளின் மென்மையான பொம்மைகளையும் கழுவ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் குழந்தைகளுக்கு ரைனிடிஸ் பிரச்சினை ஏற்படலாம். அழகிய மென்மையான பொம்மைகளிலிருந்து குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படலாம். இது குழந்தைகளுக்கு விரைவான தொற்றுநோய்களுக்கு ஆளாகக்கூடும்.
மென்மையான பொம்மைகளால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்...
தூசி மற்றும் மண், முதலில், இந்த மென்மையான பொம்மைகளில் விழுகின்றன. நாம் அவற்றை தவறாமல் சுத்தம் செய்வதில்லை. இது இந்த உண்ணிகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை ஏற்படுத்தும். இந்த தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மூக்கில் பொம்மைகளுடன் படுத்துக் கொள்ளும்போது மூக்கில் அடைப்பு ஏற்படுகிறது.
இந்த பொம்மைகள் எவ்வளவு சுத்தமாக செய்யலாம்...
- மென்மையான பொம்மைகளை இயந்திரத்தால் கழுவ முடிந்தால், வாரத்திற்கு ஒரு முறை கழுவி நன்கு உலர வைக்கவும். உலர வெயிலில் வைக்கவும்.
- மென்மையான பொம்மைகளை துவைக்க முடிந்தால், அவற்றை சவர்க்காரத்துடன் சூடான நீரில் போட்டு, துடைப்பால் சுத்தம் செய்யுங்கள்.
- வெற்றிடமாகவோ அல்லது உலர்ந்த சுத்தமாகவோ முடியும்.
- குழந்தைகளுக்கு மென்மையான பொம்மை மற்றும் தூக்க முறை இருந்தால், அவர்கள் படுக்கைக்குச் சென்றதும் பொம்மையை மெதுவாக்குங்கள்.
- ஓரிரு பொம்மைகளை மட்டும் கொடுங்கள். மீதமுள்ள பொம்மைகளை ஒரு பிளாஸ்டிக் தாளில் அடைக்கவும்.
- அவர்களின் கவனத்தை மென்மையான பொம்மையிலிருந்து மற்ற நடவடிக்கைகளுக்குத் திருப்பவும்.

மணப்பெண் அலங்காரத்திற்கு தயாராகும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பிரபல அழகுக்கலை நிபுணர் அளித்திருக்கும் பதில்கள்...
திருமணத்திற்கு தயாராக இருக்கும் அனைத்து பெண்களுக்குமே மணப்பெண் அலங்கார கனவு ஒன்று மனதுக்குள் இருந்துகொண்டிருக்கும். திருமணம் பேசி முடித்து, அவர்கள் மணப்பெண்ணாகுவார்கள். முகூர்த்த நாளில் அந்த தனித்துவமான அலங்காரத்தில் ஜொலிக்க ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுகிறார்கள்.
மணப்பெண் அலங்காரத்திற்கு தயாராகும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பிரபல அழகுக்கலை நிபுணர் அளித்திருக்கும் பதில்கள்:
அலங்காரத்துக்கு தயாராகும் முன்பு மணப்பெண் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன?
திருமணத்திற்கு முன்பு வழக்கமாக செய்யும் பேஷியல், கிளன் அப் போன்றவைகளை செய்தால்போதும். வழக்கத்திற்கு மாறாக முகத்தில் ஏதாவது மேக்கப் முறைகளை கையாண்டால் அது பருவோ, வேறுவிதமான பாதிப்புகளோ உருவாக காரணமாகிவிடும். அதனால் திருமணத்திற்கு முன்பு தேவையற்ற அழகுப் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. மணப்பெண் அலங்காரம் செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். ஒயிட் ஹெட்ஸ் போன்றவை இருந்தால் அதையும் சுத்தப்படுத்தவேண்டும்.
மணநாள் மணப்பெண்ணுக்கு மிக முக்கியமான நாள் என்பதால் அன்று மேக்கப்பில் கூடுதலாக என்னவெல்லாம் செய்யலாம்?
மணமகளின் சருமத்தின்தன்மை மற்றும் அவரது விருப்பத்தை பொருத்தே அலங்கார முறைகளை தீர்மானிக்கவேண்டும். அழகுக்கலை நிபுணரின் தனிப்பட்ட விருப்பங் களுக்கு செவிசாய்த்துவிடக்கூடாது. முதலில் ஒரு முறை டிரையல் மேக்கப் செய்து பார்க்கலாம். மணப்பெண்ணின் முகம் மற்றும் முக உறுப்புகளின் தன்மைக்கு ஏற்ப டிரையல் மேக்கப்போட்டு நிறைகுறைகளை அறிந்த பின்பு, முழு அலங்காரத்திற்கு தயாராகலாம். மணப்பெண் அலங் காரத்தில் கூடுதலாக என்னவெல்லாம் செய்யலாம் என்பதைவிட சிறப்பாக எப்படி செய்யலாம் என்றுதான் சிந்திக்கவேண்டும்.
திருமண நாளன்று மேக்கப் அதிக நேரம் நிலைத்து நிற்க என்ன செய்யலாம்?
சீதோஷ்ணநிலை, நேரம் போன்றவைகளை கருத்தில்கொண்டு அதற்கு தக்கபடிதான் அழகுக்கலை நிபுணர் மேக்கப் செய்வார். பவுண்ட்டேஷன் ஸ்ட்ராங்காக கொடுத்து, மேக்கப் செய்து முடித்து ‘பிக்ஷிங் ஸ்பிரே’யும் கொடுத்தால் அதிக நேரம் மேக்கப் நிலைத்து நிற்கும்.
மணப்பெண் அலங்காரத்தில் புதிய டிரென்ட் என்ன?
காலத்திற்கு ஏற்ப டிரென்ட் மாறிக்கொண்டிருக்கிறது. இந்து மதத்தை சேர்ந்த மணப்பெண்கள் கண் அலங்காரத்தில் ‘டார்க்’கை கடைப்பிடிக்கிறார்கள். நியூடு லிப்ஸ் அலங்காரத்தை விரும்புகிறார்கள். கிறிஸ்தவ மணமகள்கள் நியூடு ஐ மேக்கப்பும், டார்க் லிப்ஸ் அலங்காரமும் செய்கிறார்கள். முஸ்லிம் சமூக மணப்பெண்கள் அரபிக் டச் கொண்ட மேக்கப்பை தேர்ந்தெடுக்கிறார்கள். முன்பு நீட் அண்ட் கிளன் ஆன ஹேர்ஸ்டைலை விரும்பினார்கள். இப்போது மெஸ்ஸி ஹேர்ஸ்டைலை பெண்கள் அதிகம் தேர்வுசெய்கிறார்கள்.
மணப்பெண் அலங்காரம் செய்யும்போது முக்கியமாக கவனிக்கவேண்டிய அம்சங்கள் என்ன?
அதிகம் வியர்க்கும் தன்மைகொண்ட பெண்களும், அலர்ஜியை ஏற்படுத்தும் சென்சிடிவ் ஸ்கின் கொண்ட பெண்களும் முதலிலே அழகுக்கலை நிபுணரிடம் கூறி தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் மேக்கப் போட்டு முடித்த பின்பும் தனிக்கவனம் செலுத்துவது அவசியம். அவர்களுக்கு வியர்த்தால், கைக்குட்டை வைத்து துடைத்துவிடக்கூடாது. அதற்குரிய ஸ்பான்ஞ் போன்றவைகளை அழகுக்கலை நிபுணரிடமும் கேட்டு வாங்கி பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
கண்களுக்கு எத்தகைய மேக்கப் சிறந்தது?
இப்போது கிளிட்டர் லுக்கை பெண்கள் விரும்புவதில்லை. மேட் பினிஷ் இன் ஐ ஷேடோவை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். கண்மை தீட்டும்போது ஸ்மோக்கி லுக்கை விரும்புகிறார்கள். இவை சிறிய கண்களையும் சற்று பெரிதாக்கிக்காட்டும்.
முகத்திற்கு மேக்கப் செய்யும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன?
முகத்திற்கு மேக்கப் செய்யும்போது ஸ்கின் டோனுக்கு பொருத்தமான டோனை பயன்படுத்தவேண்டும். நல்ல நிறமாக தோன்ற விரும்பினால் ஒரு ஷேடை மட்டும் கூடுதலாக பயன்படுத்தலாம். யதார்த்தமான கலரைவிட அதிகமாக பளிச்சென்று காட்டினால் அது ஓவர் மேக்கப்ஆகிவிடும். சருமத்திற்கு பொருந்திவரக்கூடிய பவுண்ட்டேஷனை கொடுக்கவேண்டும். அதே ஷேடை கழுத்திற்கும், கைகளுக்கும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகளாலும், ஆராய்ச்சியாளர்களாலும், பல்துறை மருத்துவர்களாலும் நடத்தப்பட்டுதான், கொரோனாவைரஸ் பற்றிய புதிய தகவல்கள், உலகுக்கு வந்தவண்ணமாக உள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று புதிதான ஒன்று. இது குறித்த ஆராய்ச்சிகள் இன்றளவும் உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகளாலும், ஆராய்ச்சியாளர்களாலும், பல்துறை மருத்துவர்களாலும் நடத்தப்பட்டுதான், அந்த வைரஸ் பற்றிய புதிய தகவல்கள், உலகுக்கு வந்தவண்ணமாக உள்ளன.
இப்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளையும் கொரோனா வைரஸ் பாதிக்கும், கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகள் மார்பு தொடர்பான அறிகுறிகளுடன் முற்றிலும் தொடர்பு இல்லாததாகவும் இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
நிதி ஆயோக் ஒத்துழைப்புடன் நடைபெறுகிற வாராந்திர தேசிய மருத்துவ கிராண்ட் ரவுண்ட்ஸ் கலந்தாலோசனையின்போது, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, நரம்பியல் துறைத்தலைவர் டாக்டர் எம்.பி.பத்ம ஸ்ரீவஸ்தவா, இதயவியல் துறை பேராசிரியர் டாக்டர் அம்புஜ் ராய், மருத்துவ துறை இணை பேராசிரியர் டாக்டர் நீரஜ் நிசால் ஆகியோர் கலந்து கொண்டு இது தொடர்பான கருத்துகளை எடுத்து வைத்தனர்.
அப்போது டாக்டர் ரன்தீப் குலேரியா கூறிய கருத்துகள் இவை-
“கடந்த 8 மாதங்களில் கொரோனா வைரஸ் பற்றிய நிறைய கற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப உத்திகள் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு வைரஸ் நிமோனியா என நாம் நினைத்ததில் இருந்து நுரையீரலுக்கு அப்பாலும் கொரோனாவால் பல வெளிப்பாடுகள் உள்ளன. இது பல கூடுதல் நுரையீரல் வெளிப்பாடுகளை ஏற்படுத்துகிறது. அடிப்படையில் இந்த வைரஸ் ‘ஏசிஇ2’ ஏற்பிகள் மூலம் செல்களுக்குள் நுழைகிறது என்பதையே இது அடிப்படையாக கொண்டது. அவை மேல் காற்றுப்பாதைகள், நுரையீரல்களில் ஏராளமாக இருந்தாலும், பல உறுப்புகளிலும் உள்ளன. இதனால் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.
பெரும்பாலான நுரையீரல் வெளிப்பாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. என்றாலும், கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் நுரையீரல் வெளிப்பாடுகளுடன் இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம்.
இந்த தொற்றுநோயின்போது, டாக்டர்களாகிய நாங்கள் எப்போது நோயாளியை சந்தேகிக்க வேண்டும், சிகிச்சை தர வேண்டும் அல்லது தனிமைப்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் அவர்களுக்கு நல்ல தரமான சிகிச்சையை அளிக்க முடியும்” என்கிறார் டாக்டர் ரன்தீப் குலேரியா.
இந்த கலந்தாலோசனையின்போது, மருத்துவ நிபுணர்கள், கொரோனா அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறிகளுடன் வந்த பலருக்கு பக்கவாதம், இதயத்தில் அடைப்புகள் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான வெளிப்பாடுகள் இருந்ததையும் எடுத்துக்கூறினர்.
மருத்துவ துறை இணை பேராசிரியர் டாக்டர் நீரஜ் நிசால் கூறும்போது, “ஆரம்பத்தில் கொரோனா, வைரஸ் நிமோனியாவாக தொடங்கியவை. இப்போது அது பல அமைப்பு நோயாக மாறி இருக்கிறது” என்கிறார். மேலும், சுவாச அறிகுறிகளின் அடிப்படையில் மட்டுமே வைரஸ் தொற்று லேசாக இருக்கிறதா, மிதமானதாக இருக்கிறதா, கடுமையானதாக இருக்கிறதா என்பதை வகைப்படுத்துவதை, மற்ற உறுப்பு தொடர்புகளுடன் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
35 வயதான ஒருவர் தலைவலி மற்றும் வாந்தியுடன் வந்ததாகவும், ஆனால் அவர் ‘கார்டிகல் வெயின் த்ரோம்போசிஸ்’ பிரச்சினையால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதையும் கண்டறிந்ததாகவும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போதைய வழிகாட்டும் நெறிமுறைகள்படி பார்த்தால் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதுமில்லை என கூறினார்.
டாக்டர் எம்.பி.பத்ம ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “சில நோயாளிகளில் மூளை சம்பந்தப்பட்டிருக்கிறது. அது ரத்த உறைதலுக்கு வழிநடத்தும். பக்கவாதம் ஏற்படலாம் அல்லது தொற்றுநோயை ஏற்படுத்தலாம். என்செபலிடிஸ் (மூளை வீக்கம்) அல்லது பிற சிக்கல்களுக்கு வழிநடத்தவும் கூடும்” என சுட்டிக்காட்டினார்.
டாக்டர் அம்புஜ் ராய், மிக குறைந்த துடிப்பு விகிதத்துடன் வந்த ஒரு நோயாளி பற்றி கூறினார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, இதயத்துடிப்பை மேம்படுத்த சில மருந்துகள் அளிக்கப்பட்டனவாம். வழக்கமாக அப்படிப்பட்டவர்களுக்கு பேஸ்மேக்கர் வைப்பது உண்டு. ஆனால் இந்த பிரச்சினை, கொரோனா வைரசால்தான் என உணர்ந்ததால், பேஸ்மேக்கர் வைக்கப்படவில்லை. மருத்துவ சிகிச்சை மூலமே அந்த நோயாளியின் இதயத்துடிப்பு படிப்படியாக மேம்படுத்தப்பட்டதாம்.
சில நேரங்களில், இதயத்தின் மின்துடிப்பு அமைப்பு, கொரோனாவால் பாதிக்கப்படலாம், இது சுய வரம்புக்கு உட்பட்டது. காலப்போக்கில் மேம்படுகிறது. எனவே வழக்கமாக நோயாளிகளுக்கு தேவைப்படுகிற பேஸ்மேக்கர் இந்த தருணத்தில் தேவைப்படுவதில்லை. இருப்பினும் இது தொடர்பாக கூடுதல் சான்றகள் தேவை என்கிறார் டாக்டர் அம்புஜ்ராய்.
இப்படி பல சிக்கல்களுக்கு வழிநடத்தக்கூடிய கொரோனா நம்மை நெருங்காமல் நாம் விவேகமாக தற்காத்துக்கொள்வதுதான் நல்லது.

இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். வறட்சியான தேகம், எண்ணெயில் பொரித்த உணவுகள். பாஸ்ட் புட் கலாச்சாரம் போன்றவைகள் இளமையிலேயே முகச்சுருக்கத்தை ஏற்படுத்திவிடும்.

அதேபோல் தேவையற்ற விசயங்களுக்கு கவலைப்படுவதும் முகச்சுருக்கம் ஏற்பட காரணமாகிறது. எனவே முகச்சுருக்கத்தைப் போக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள். காய்ச்சி ஆறவைத்த பால் உடன் இரண்டு டீஸ்பூன் அதனுடன் நான்கு துளி எலுமிச்சை சாறு கலந்து இரவு படுக்கும் முன்பு முகத்தில் சுருக்கம் உள்ள இடங்களில் பூசவும்.
காலை எழுந்த உடன் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சோப் போடக்கூடாது. இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்து வர சுருக்கம் போகும். கேரட் சாறு, தேன் ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் தேய்க்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து கழுத்திலும் முகத்திலும் தேய்க்கவும்.
20 நிமிடத்திற்குப் பிறகு ஒரு பிஞ்ச் சோடா பை கார்பனேட் கலந்த சுடுநீரில் பஞ்சை முக்கி துடைத்தால் எப்படிப்பட்ட சுருக்கங்களும் மாயமாகி விடும். பப்பாளி, பாதம் எண்ணெய் பப்பாளிப்பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும் பழுத்த பப்பாளியை நன்கு கூழாக்கி அதனை முகத்தில் தேய்ப்பது நல்ல பலன் தரும்.
பப்பாளி சதையை சாப்பிட்ட பின் அதன் தோலின் உட்பகுதியில் உள்ள பகுதியை தேய்த்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு பாதம் எண்ணெயை நன்றாக முகத்தில் தேய்த்து உறங்கவும். பின்னர் காலையில் எழுந்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ சுருக்கம் போயே போச்சு.
வைட்டமின் ஈ முகச்சுருக்கத்தை நீக்குவதில் ஈ வைட்டமினுக்கு முக்கிய பங்கு உண்டு. வைட்டமின் மாத்திரையை உடைத்து, அதனுடன் கிளிசரின் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். முகச்சுருக்கம் நீங்கும். நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.
ஆரஞ்ச் ஜூஸ் முகச் சுருக்கம் வராமல் தடுக்க வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கேரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும். துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தண்ணீர் குடிங்க தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிக அளவு தண்ணீர் குடிப்பதன்மூலம் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும். அது முகச்சுருக்கத்தை நீக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக பெண்கள் தினமும் குறைந்தது 1 1/2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமாம் இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்காமலே கணவன்-மனைவியாக பெயரளவுக்கு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் நம்மிடையே உண்டு. அப்படி மோதிக் கொள்ளும் தம்பதிகள் சண்டையின்றி வாழ, தரப்படுகின்ற ஆலோசனை இது!
ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்காமலே கணவன்-மனைவியாக பெயரளவுக்கு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் நம்மிடையே உண்டு. பார்த்தால் சண்டை வந்துவிடும் என்று கருதி கணவர் ஒரு ஷிப்டும், மனைவி இன்னொரு ஷிப்டுமாக வேலைக்கு சென்று ஒருவர் வீட்டில் தூங்கி எழும்போது, இன்னொருவர் தூங்குவதற்கு வீட்டிற்கு வந்த நிகழ்வுகளும் உண்டு. இப்படி ஒப்புக்கு சப்பாக வாழ்ந்து வந்த பலர், கொரோனா காரணமாக வீட்டில் ஒன்றாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. ‘அந்த நிலையிலும், அப்படிப்பட்ட தம்பதிகள் இடையே சண்டை நடப்பதாகவும், அது தொடர்பான புகார்கள் அதிகரிப்பதாகவும்’ புள்ளி விபரங்கள் வெளியாகின.
அப்படி மோதிக் கொள்ளும் தம்பதிகள் சண்டையின்றி வாழ, தரப்படுகின்ற ஆலோசனை இது!
திருமண வாழ்க்கையைச் சிதைக்கும் விஷயங்களில் சந்தேகம் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. கணவன், மனைவியை சந்தேகப்படுவது இதிகாச காலம் தொட்டே இருந்து வருகிறது. அது அவர்கள் பிறவி குணம். மனைவி, கணவரை சந்தேகப்படுவதும் சிலர் வாழ்க்கையில் நடந்து வருகிறது. சந்தேகத்திற்குரிய விஷயம் எதுவானாலும் நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. அப்படியே ஒருவேளை சந்தேகப்பட்டது உண்மை என்றாலும், தவறு நடந்த அந்த சம்பவத்தை மறந்து மீதி காலத்தை இனிமையாக்க முயற்சிப்பதுதான் புத்திசாலித்தனம்.
சில சந்தர்ப்ப சூழல்கள் தம்பதிகளிடையே இருக்கும் நம்பிக்கையைச் சிதறடித்துவிடும். அந்த நேரத்தில் உறுதியாக இருக்க வேண்டும். உண்மையான அன்பு, நம்பிக்கையின் அடித்தளத்தில் உருவாகிறது. அன்பை காப்பாற்றிக் கொள்ள நினைப்பவர்கள் நம்பிக்கையைச் சிதைக்கும் செயலை ஒருபோதும் செய்ய மாட்டார்கள் என்பதை நம்ப வேண்டும். கணவன்- மனைவியை பிரிக்க நினைக்கும் சக்திகள் முதலில் பிரயோகிப்பது நம்பிக்கைக் குலைவு எனும் அஸ்திரத்தைதான். எதேச்சையாக சில தவறுகள் நடக்கலாம். ஆனால் அதுவே எதிர்காலத்தைச் சிதைக்கும் விதமாக இருந்துவிடக்கூடாது.
அவரவர் குடும்பத்தைப் பற்றிய பெருமை ஒவ்வொருவருக்கும் உண்டு. இதுவே அடுத்தவரை குறைசொல்லும் விதமாக அமைந்துவிடக் கூடாது. இதனால் ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மை ஒருவரை நிம்மதியாக வாழவிடாது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும்கூட அதை பெரிதுபடுத்திப் பேசிக்கொண்டிருக்கக்கூடாது. ‘இவ்வளவு உயர்ந்த நான் உன்மேல் இருந்த அன்பால் ஏற்றத்தாழ்வு பாராமல் உன்னை திருமணம் செய்து கொண்டேன்’ என்று சொன்னால் அது உண்மையான அன்பாக இருக்காது. அதனால் மனைவியிடம் எழும் மனக்குறை ஏதேனும் ஒரு விதத்தில் வாழ்க்கையை பாதிக்கும்.
கணவன்- மனைவி இருவரிடமும் அவசியம் இருக்க வேண்டியது, நேர்மை. திருமணத்துக்கு முன் இருந்த வாழ்க்கை வேறு. அந்த வாழ்க்கை, அன்றைய தவறுகள் எந்த காரணத்தைக் கொண்டும் நிகழ்காலத்தைப் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏதோ ஒன்றை மூடி மறைப்பது, ஒளிவுமறைவாகச் செய்வது இதெல்லாம் மிகப்பெரிய பிரச்சினையில் கொண்டுபோய் விட்டுவிடும். நேர்மை குறைந்தால் அதைத் தொடர்ந்து அன்பும் குறையும். அதன்பிறகு பேச ஒன்றுமே இல்லை. நேர்மை என்பது இருவருக்கும் இடையிலான ஒரு உறுதியான பிணைப்பு. அந்த பிணைப்பு குலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இருவரும் அன்பாக இருந்தாலும் சுற்றியிருக்கும் உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகள் இருவரையும் மோதவைக்கும். அவரவர் உறவினர்கள் அவரவருக்கு முக்கியம். வாழ்க்கைத்துணையின் உறவினர்களை தம் உறவாக மதிக்கும் மனப்பக்குவம் வராவிட்டாலும் மற்றவர் உறவுகளின் பலவீனங்களை குறைகூறிப் பேச முற்படாதீர்கள். விளைவுகள் விபரீதமாக இருக்கும். உறவினர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் யாரையும் ஒப்பிட்டு பேசி தரம் தாழ்த்த நினைக்காதீர்கள். உறவுகளால் உங்களுக்கு நேரடிப் பாதிப்பு இல்லாவிட்டாலும், கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட இது முக்கிய காரணமாக மாறிவிடக்கூடும். நீங்கள் திருமணப் பந்தத்தை மதிப்பவராக இருந்தால் மற்ற உறவினர்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இன்று நாம் அலட்சியப்படுத்தும் உறவுகள் நாளை நம் திருமண வாழ்க்கையை காப்பாற்றக்கூடியவராகவும் இருக்கலாம்.
தங்களிடம் இருக்கும் குணாதிசயங்களை கணவனோ, மனைவியோ உடனடியாக மாற்றிக்கொள்ள முடியாது. மாற்ற அவர்களே முயற்சித்தாலும் அதற்கு கால அவகாசம் தேவை. திருமணத்துக்கு முன்பு அந்தமாதிரியான குறைகள் கண்ணில் படுவதில்லை. ஆனால் திருமணத்துக்குப் பின் ‘நீ மாறினால்தான் உன்னோடு வாழ முடியும்’ என்ற ரீதியில் போய்விட்டால் அங்கே தாம்பத்யம் கேள்விக்குறியாகிவிடும். குறைகளை எடுத்துச்சொல்லி புரியவைத்து, மாறுவதற்கு அவகாசம் கொடுத்து, மனதுக்குப் பாதிப்பு வராத அளவுக்கு பழக்கங்களை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். எதிலும் சற்று நிதானம் தேவை. வெவ்வேறு கலாசாரத்தைக் கொண்டவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவரவர் கலாசாரத்தை புரிந்துகொள்ள அதிக காலம் தேவைப்படும். அதற்கு அதிகபட்சமான அன்பு தேவை.
முகத்துக்கு நேரே சொல்லும் குறைகளைவிட முகத்துக்குப் பின் சொல்லும் குறைகளுக்குத்தான் சக்தி அதிகம். அது நிச்சயம் வாழ்க்கை துணையின் மனதைப் புண்படுத்தும். இதனால் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். ஆகவே வாழ்க்கைத்துணை மீது குறை சொல்வதை நிறுத்திவிடுங்கள். குறைகள் என்றுமே நிறை களை உருவாக்காது. அதேநேரத்தில் குறைகளை தொடரவிடவும் கூடாது. நேரடியாக எடுத்து சொல்லி குறைகளைப் போக்க முயற்சி செய்யுங்கள். நாளடைவில் குறைகள் நீங்கலாம். வாழ்க்கையில் நிறைவு பெறலாம். காற்று அனுசரணையாக இருந்தால்தான் காற்றாடி வானில் பறந்து வட்டமடிக்கும். அன்பும் அப்படித்தான். அதுதான் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக்க உதவும்.
வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை மூன்றாவது மனிதர்கள் மூலம் தீர்க்க முயற்சிக்கும் தம்பதிகள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். உங்கள் பிரச்சினைகளை நீங்களே புரிந்துகொள்ள முடியாதபோது, மூன்றாவது மனிதர்கள் எப்படி உங்களுக்குத் தீர்வு சொல்ல முடியும்? அது வேறொரு புதுமாதிரியான பிரச்சினையை உருவாக்கிவிடும். மேலும் அது கவுரவப் பிரச்சினையும் கூட! உங்கள் வீட்டு கவுரவத்தை அடமானம் வைத்து தீர்வு தேடிக்கொள்ள முற்படாதீர்கள். மூன்றாவது மனிதரின் தலையீடு உங்கள் இருவரையும் பிரித்துவிடும். இவைகளை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, குறைகளை நீக்கி புதிய வாழ்க்கை வாழ முன் வாருங்கள். இந்த காலகட்டம் அதற்கு துணைபுரியும்.

கேரளா திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான சத்தான உணவு பாசிப்பயறு கஞ்சி. இந்த கஞ்சி சத்தானதும் கூட. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம். மிகவும் சுலப...மேலும்
தேவையான பொருட்கள்
மட்டை அரிசி அல்லது பச்சரிசி அல்லது சிகப்பு அரிசி - ஒரு டம்ளர்
பாசிப்பயறு - அரை டம்ளர்
சின்ன வெங்காயம் - 4
ப. மிளகாய் - மூன்று
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவியது - தேவைக்கு
செய்முறை
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் முதலில் அரிசி, பச்சை பயறை சேர்த்து நன்றாகக் கழுவி விட்டு பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், வெந்தயம், உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வைக்கவும்.
விசில் அடங்கியவுடன் கரண்டியின் பின் பகுதியை வைத்து நன்றாக மசித்து விடவும். பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி விடவும்.
தண்ணியாக பிடிக்கும் என்றால் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவைக்கு ஏற்றவாறு துருவிய தேங்காயை அதனுடன் கலந்து பரிமாறலாம்.
கேரளாவில் இதனுடன் சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிடுவார்கள்.

சுவையான மற்றும் சத்தான கஞ்சி தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மருத்துவம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிற இன்றைய உலகில் குழந்தைப் பேறு என்பது எட்டாக் கனியே இல்லை. கவலை வேண்டாம்.
குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வருகிற பலரும் புலம்புகிற ஒரு விஷயம்... ‘நிறைய டாக்டர்களை பார்த்துட்டோம். ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லைங்கிறாங்க. பிரச்னையே இல்லைன்னா இந்நேரம் குழந்தை பிறந்திருக்கணும் தானே? அப்புறம் ஏன் அதுல தாமதம்?’ என்பது. பிரச்னையே இல்லாதது தான் பிரச்னையா? கருத்தரிப்பதில் தாமதம் ஏன்? - விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
‘உண்மை தான்... எல்லாமே நார்மல் என்றால் அவர்களுக்குக் குழந்தை உண்டாகியிருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் இன்னும் கருத்தரிக்க வில்லை. பொதுவாக இது போன்ற நேரங்களில் அடிப்படைப் பரிசோதனைகளை செய்து விட்டு, எல்லாம் நார்மல் என்று வந்தால் சிறப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்போம்.
இதன்படி, குழந்தை இல்லாத பட்சத்தில், கணவன் - மனைவி இருவருமே பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மனைவிக்கு பரிசோதனை செய்கையில் கீழ்க்கண்ட நான்கு விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
1. கர்ப்பப்பையின் உள்பக்கமும், வெளிப்பக்கமும் ஆரோக்கியமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். உள்புறம் கட்டியோ, சதை வளர்ச்சியோ (Polyp)
அல்லது தடுப்புகள்(Septum) போன்றவையோ இருக்கக் கூடாது. கர்ப்பப்பை சரியான நீள, அகலத்துடன் இருக்க வேண்டும்.
2. கரு இணைக்குழாய் ஆரோக்கியமாகவும், அடைப்பின்றியும் இருக்க வேண்டும்.
3. சூலகம் என்கிற முட்டைப்பை மாதம் ஒரு கருமுட்டையை சுழற்சி முறையில் வெளியேற்ற வேண்டும்.
4. கரு முட்டை உற்பத்திக்கான ஹார்மோன் சுரப்புகள் எஃப்.எஸ்.ஹெச்., எல்.ஹெச், டி.ஆர்.எல்., தைராய்டு போன்றவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
ஏன் கருத்தரிக்கவில்லை என்பதை 90 சதவிகித தம்பதியருக்கு மிகச் சரியாக ஒரு மாத ஆய்வில் கண்டுபிடித்துச் சொல்லி விட முடியும். கருத்தரிக்காத பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனை களை உரிய நேரத்தில் செய்தாக வேண்டும். அதன்படி...
* மாதவிடாயான இரண்டாவது நாளில் ஹார்மோன் சோதனையும், பெல்விக் ஸ்கேன் சோதனையும்.
* மாதவிடாயான ஏழாவது நாளில் ஹெச்.எஸ்.ஜி. மற்றும் எக்ஸ்ரே.
* மாதவிடாயான 21-வது நாளில் எஸ்.பி.4 எனப்படுகிற சீரம் புரொஜெஸ்ட் ரோன் சோதனை.
* மாதவிடாயான 7-வது நாள் தொடங்கி, கருமுட்டையின் சரியான வளர்ச்சியை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளும் ஃபாலிகுலர் ஸ்டடி.
கருமுட்டை சூலகத்திலிருந்து வெளிவரும் நிகழ்ச்சிக்கு, சினை முட்டை வெளிவருதல் (Ovulation) என்று பெயர். அந்த நேரத்தில் என்டோமெட்ரியம் எனப்படுகிற திசுவானது 8 மி.மீ. அளவு வளர்ச்சியுடன் இருந்தால் தான், உருவான கருவானது கருப்பையில் பதியும். இப்படி எல்லா வற்றையும் பார்த்து, எல்லா பரிசோதனை களும் நார்மல் என்று தெரிந்தால், டயக்னாஸ்டிக் ஹிஸ்ட்ரோ லேப்ராஸ்கோப்பி (Diagnostic Hystero Laproscopy) என்கிற மைனர் அறுவை சிகிச்சையை செய்ய வேண்டியிருக்கும்.
கர்ப்பப்பையின் கழுத்துப் பகுதியான செர்விக்ஸில் புண் ஏற்பட்டு, விந்தணு செல்கிற பாதை குறுகலாக இருந்தாலும் குழந்தைப் பேறு உண்டாவதில் தாமதமாகலாம். மனைவிக்கு மட்டுமே சோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம் என நினைக்காமல், கணவனும் அவற்றுக்குத் தயாராக வேண்டும்.
ஆணுக்கு விந்தணுப் பரிசோதனை அவசியம். விந்தணு எண்ணிக்கை, குறைந்த பட்சம் 20 மில்லியன் இருக்க வேண்டும். அதில் 50 சதவிகிதம் வேகமான, உந்து சக்தியுள்ள உயிரணுக்களாக இருக்க வேண்டும். சில நேரங்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை போதுமானதாக இருந்தாலும், அந்த விந்தணுக்களுக்கு கருமுட்டையை கருத்தரிக்கச் செய்கிற சக்தி இருக்காது.
அதற்கும் சிறப்பு பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம். எனவே, மனம் தளராமல் சிறப்பு சிகிச்சைகளுக்கு உங்கள் கணவருடன் தயாராகுங்கள். மருத்துவம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிற இன்றைய உலகில் குழந்தைப் பேறு என்பது எட்டாக் கனியே இல்லை. கவலை வேண்டாம்.

கொரோனாவுக்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்? அவர்களது உடலில் கொரோனாவின் வாழ்நாள் எவ்வளவு காலம்? அது ஏற்படுத்தும் அறிகுறிகள்? என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த வேகத்தை கட்டுப்படுத்தி மனித குலத்தை மீட்பதற்காக கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளும், தடுப்பூசியும் உருவாக்குவதில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இப்படி மருந்துகளுக்கான தேடல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனா குறித்த ஆய்வுகளும் வேகமெடுத்து வருகின்றன. குறிப்பாக வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு, எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? எந்தெந்த நோயாளிகள் வைரசின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாண்டு விடுகிறார்கள்? என்பது போன்ற ஆய்வுகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடக்கின்றன.
இந்த வரிசையில் கொரோனாவுக்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்? அவர்களது உடலில் கொரோனாவின் வாழ்நாள் எவ்வளவு காலம்? அது ஏற்படுத்தும் அறிகுறிகள்? என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தென்கொரிய குழந்தைகளிடம் சோதனை
குறிப்பாக தென்கொரியாவின் 22 மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 91 குழந்தைகளிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 22 சதவீத குழந்தைகளுக்கு அறிகுறிகள் இல்லை. 20 சதவீதத்தினர் முதலில் அறிகுறி இல்லாமலும், பின்னர் அறிகுறி தென்பட்டவர்களும் ஆவர். மீதமுள்ள 58 சதவீதத்தினர் தொடக்கத்திலேயே அறிகுறி கொண்டவர்கள்.
சியோல் தேசிய மருத்துவப்பல்கலைக்கழகம், அமெரிக்காவின் தி ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகம் போன்ற மருத்துவ நிறுவனங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்ட பல நிபுணர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் ஜாமா குழந்தை மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன.
3 வாரங்களுக்கும் மேலாக...
அதன்படி, குழந்தைகளின் உடலில் எவ்வளவு நாட்கள் கொரோனா வைரஸ் இருக்கிறது? என்பதை கண்டறிவதற்காக குழந்தைகள் அனைவருக்கும் சராசரியாக 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் சராசரியாக 2½ வாரங்கள் வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில், அறிகுறியற்ற நோயாளர்களில் 5-ல் ஒரு பகுதியினருக்கும், அறிகுறியுள்ள நோயாளர்களில் பாதி பேருக்கும் 3 வாரங்களுக்கும் மேலாக வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு ஆளான குழந்தைகள் பல வாரங்களுக்கு அறிகுறிகளுடன் இருக்க முடியும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வைரஸ் மரபணுக்கள்
அதேநேரம் அறிகுறியற்ற குழந்தைகள் கூட தொடக்க கட்ட சோதனைக்குப்பிறகு நீண்ட நாட்களுக்கு வைரசின் கூடாரமாக இருந்துள்ளனர். இதனால் அவர்கள் நோய் பரப்பும் முக்கிய காரணிகளாக இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட்டா எல்.தெபியாசி உள்ளிட்ட நிபுணர்கள் கூறுகையில், ‘கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கலாம். ஏனெனில் அறிகுறி இல்லாமலோ, அறிகுறிகள் அனைத்தும் குணமடைந்த பின்னரோ, குழந்தைகளிடம் எதிர்பார்க்காத வகையில் நீண்ட காலத்துக்கு வைரஸ் மரபணுக்கள் இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளனர்.

வாயில் ஏற்படும் துர்நாற்றம் இந்த நோயின் தீவிர அறிகுறியாக இருக்கலாம். எனவே வாய்துர்நாற்றம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது.
அழகான முகத்துடன் பிரகாசமான பல் வைத்திருப்பதும் சிறப்பு. ஆனால் துர்நாற்றம் என்றால் யாரும் உங்களுடன் பேச விரும்ப மாட்டார்கள். இது உடல்நலம் தொடர்பான வேறு சில காரணங்களால் ஏற்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, வாயின் வாசனையும் நோயின் அறிகுறியாக இருக்கலாம். நீங்களும் இந்த பிரச்சனையுடன் போராடுகிறீர்களானால், கெட்ட மூச்சுக்கு என்ன காரணம், கெட்ட மூச்சுடன் அதை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள்?
வாய்வழி தொற்று, துரித உணவை அதிகமாக பயன்படுத்துதல், வாய் வறட்சி அல்லது எந்தவிதமான போதைப்பொருள் உள்ளிட்ட மோசமான வாய் துர்நாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. நம் வாயில் உள்ள உமிழ்நீர் நம் வாயை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது பல நோய்களிலிருந்து பற்களையும் பாதுகாக்கிறது. இருப்பினும், வாயில் உமிழ்நீர் இல்லாதது பற்களில் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
-நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், அதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். எதையாவது சாப்பிட்ட பிறகு அது மிகவும் துர்நாற்றம் வீசுகிறது என்று நீங்கள் நினைத்தால், முதலில் அதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- புகைபிடித்தல் பல வழிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் உங்களுக்கு மூச்சுத் திணறல் இருந்தால், அது உங்கள் பிரச்சினையை இரட்டிப்பாக்கும்.
- உண்மையில் சிகரெட் அல்லது புகைபிடித்தல் உங்கள் வாயில் ஒரு துர்நாற்றத்தை உண்டாக்கி உங்கள் வாயை உலர வைக்கும். இது உங்கள் துர்நாற்றத்தை மோசமாக்கும்.
- உங்கள் வாயிலிருந்து வாசனை வருகிறதென்றால், சைனஸ், வாய் அல்லது தொண்டை தொடர்பான கடுமையான பிரச்சினை உங்களுக்கு இருக்கலாம். சைனஸ் நோய்த்தொற்றுகள், உடலில் நீரின் பற்றாக்குறை, நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, உங்கள் மேல் அல்லது கீழ் சுவாசக் குழாயில் தொற்று மற்றும் டான்சில்ஸ் இதன் விளைவாக வரலாம். இதன் பாக்டீரியா உங்கள் வாயின் வாசனையை ஏற்படுத்தும்.

ஒரே ஒருமுறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு.

ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம்.
ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை.
மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை.
முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே நிதர்சனம். பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள்.
85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.
சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.
எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.

வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் குழந்தைகளை வெளி இடங்களுக்கு அழைத்து சென்றால் குஷியாகிவிடுவார்கள். கடற்கரை, பூங்கா, தீம்பார்க் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்கள்தான் அவர்களின் உலகமாக இருக்கும்.
வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் குழந்தைகளை வெளி இடங்களுக்கு அழைத்து சென்றால் குஷியாகிவிடுவார்கள். கடற்கரை, பூங்கா, தீம்பார்க் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்கள்தான் அவர்களின் உலகமாக இருக்கும். ஆனால் லியோ - ஜெசிகா ஹால்டிங் தம்பதியரோ தங்களின் குழந்தைகளை சாகச பயணங்களில் ஈடுபடவைத்து அசத்தி இருக்கிறார்கள்.
மலையேற்றம் செய்வதுதான் இந்த தம்பதியருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மலையேற்றம் செய்ய சென்றுவிடுவார்கள். இவர்களுக்கு 7 வயதில் ப்ரேயா என்ற மகளும், 3 வயதில் ஜாக்சன் என்ற மகனும் இருக்கிறார்கள். அவர்களின் விடுமுறை காலம் மகிழ்ச்சியாக கழிய வேண்டும் என்று விரும்பியவர்கள், தங்களின் சாகச பயணத்திற்கு உடன் அழைத்து சென்று ஆனந்தப்படுத்தி இருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்து-இத்தாலி நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பிஸ் பாடிலே மலை சிகரத்திற்கு குடும்பத்துடன் மலையேற்றம் மேற்கொண்டிருக்கிறார்கள். சுமார் 11 ஆயிரம் அடி கொண்ட அந்த மலை சிகரத்தின் மீது தாயின் அரவணைப்புடன் சிறுவன் ஜாக்சன் பயமின்றி மலையேறும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. 15 கிலோ எடை கொண்ட ஜாக்சனை ஜெசிகா முதுகில் சுமந்து கொண்டு சர்வ சாதாரணமாக மலை ஏறுகிறார். தனக்கு முன்னால் மகள் ப்ரேயாவை கயிற்று முனையில் நடக்க விட்டு பின் தொடர்கிறார். ப்ரேயாவும் பயமின்றி தந்தைக்கும், தாய்க்கும் இடையே கயிற்றின் பிடியில் உற்சாகத்துடன் பயணத்தை தொடர்கிறார். லியோ பயணத்திற்கு தேவை யான உடமைகளை முதுகில் சுமந்து சென்றபடி மகளுக்கு வழிகாட்டுகிறார். மூன்றே நாட்களில் சாகச பயணத்தை முடித்து அசத்தி இருக்கிறார்கள். ஒரு நாள் இரவு மட்டும் மலையில் தங்கி இருக்கிறார்கள்.
“சில ஆண்டுகளாக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் கொஞ்ச நாட் கள் மலையேற்றம் செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் நெருங்கும்போது குழந்தைகள் பெரியவர்களாகிவிடுகிறார்கள். கடந்த ஆண்டுகளை விட தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்கிறார்கள். ஸ்லோவேனியாவில் உள்ள டிரிக்லாவ் மலை சிகரத்திற்கு சென்றிருக்கிறோம். ஆனால் அதனுடன் ஒப்பிடும்போது இந்த மலை சிகரம் சிரமமானது” என்கிறார், லியோ.

பச்சை பட்டாணி சேர்த்துசெய்யும் இந்த மோதகம் மிகவும் சத்தானது. இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு-1கப்,
தண்ணீர்-தேவையான அளவு,
ஏலக்காய்-சிறிதளவு,
நெய், உப்பு- சிறிதளவு,
மசித்த பச்சைப்பட்டாணி-1½ கப்,
துருவிய வெல்லம்-½ கப்,
கசகசா, முந்திரி, ஜாதிக்காய், சிறிதளவு.
செய்முறை:
தண்ணீரைக் கொதிக்க வைத்து உப்பை போட்டு அதில் அரிசி மாவைப் போட்டு கிளறி மிருதுவான பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி சிறிது ஆறியதும் நெய் சேர்த்துப் பிசைந்து தனியாக மூடி வைக்கவும்.
அதே போல் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் மசித்த பட்டாணி, வெல்லம் மற்றும் ஏலக்காய், ஜாதிக்காய் தூள், கசகசா, முந்திரி இவற்றைப் போட்டுக் கிளறி ஓரளவு கெட்டிப் பதத்தில் இறக்கி வைக்கவும்.
பின்பு மோதக அச்சில் நெய் தடவி அதில் கொழுக்கட்டை மாவைத் தடவி அதனுள்ளே பூரணத்தை நிரப்பி அழுத்தி எடுத்தால் அருமையான மோதகங்கள் தயார்.
இவற்றை இட்லிப் பாத்திரத்திலோ அல்லது ஸ்டீமரிலோ வைத்துப் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

வெந்த பிறகு மோதகங்களை ஒவ்வொன்றாக எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.