என் மலர்
ஆரோக்கியம்
இந்த துவையல் தலைசுற்றல், வாந்தி, வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுண்டடைக்காய் வற்றல் - கால் கப்
பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல்- சிறிதளவு
மிளகு - கால் டீஸ்பூன்
சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
மிக்சியில் சுண்டைக்காய் வற்றல், பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, உப்பு, சிறிது தண்ணீல் சேர்த்து துவையல் பதத்தில் அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து துவையலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சத்தான சுண்டைக்காய் வற்றல் துவையல் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நீங்கள் உங்கள் குழந்தையை ஏசி அறையில் உறங்க வைக்கின்றீர்கள் என்றால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
உடல் முழுவதும் பரவிய ஆடையை உங்கள் குழந்தைக்கு அணிவித்து விடுங்கள். கால்களுக்கு சாக்ஸூம் கைகளுக்கு கிளவுஸும் அணிந்து விடுங்கள். அல்லது உங்கள் குழந்தையின் முகத்தைத் தவிர்த்து உடல் முழுவதையும் போர்த்தி விடுங்கள்.
தொடர்ந்து ஏசியை பயன் படுத்துவதால், அதற்குள் பல தூசிகள் படிந்திருக்கும். அதனால் அவ்வப்போது ஏசியின் மேல் பாகத்தைக் கழட்டி பில்டரை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் தூசி படிந்த ஏசி காற்றின் மூலமாகக் குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு விடும்.
உடனே சூடான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம். குழந்தையை நீங்கள் ஏசி அறையில் இருந்து எடுத்துச் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். உடனே அதிக வெயில் படும் இடத்திற்காே அல்லது சூடான இடத்திற்கோ எடுத்துச் செல்லக்கூடாது. திடீர் தட்பவெப்ப நிலை மாற்றம் குழந்தையின் உடலைப் பாதிக்கும்.
தினம் ஏசி பயன்பாட்டிற்கு முன்னர், குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அறையில் உள்ள கதவுகள் ஜன்னல்கள் மற்றும் திரைச் சீலைகளை முழுவதுமாக நீக்கி வையுங்கள்.இதனால் பழைய காற்று வெளியேறி புதிய சுத்தமான காற்று அறையின் உள்ளே பரவும். கூடுதலாக போதிய சூரிய வெளிச்சம் அறையில் பரவ சாத்தியம் ஏற்படும். இதனால் அறையில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும்.

பெண்களின் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி நிரந்தர தீர்வு காண முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 1
செய்முறை :
ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை தனியாக எடுத்து, அதில், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பிரகாசமாக இருக்கும்.
* எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.
* எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
* ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
* ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.

‘பெண்களிடம் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும், ஆண்களைவிட பெண்களிடம் மதுவால் ஏற்படும் ஆபத்து உயர்ந்து கொண்டிருப்பதாகவும்’ ஆய்வுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மதுப் பழக்கம் பெண்களிடம் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் பற்றி அதிர்ச்சிகரமான ஆய்வுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ‘பெண்களிடம் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும், ஆண்களைவிட பெண்களிடம் மதுவால் ஏற்படும் ஆபத்து உயர்ந்துகொண்டிருப்பதாகவும்’ அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நெருக்கமானவர்கள் கட்டாயப்படுத்துவதாலோ, கவலையாலோ, ஜாலிக்காகவோ பெண்கள் மது அருந்த தொடங்குவதாக தெரியவருகிறது. பின்பு நெருக்கமான அந்த கூட்டமும், அந்த பழக்கமும் அவர்களது வழக்கமாகிவிடுகிறது. அதன் பாதிப்புகளை உணர்ந்து அதில் இருந்து மீள முயற்சிக்கும் நேரத்தில் ஏராளமான பாட்டில் மது அவர்களது உடலுக்குள் சென்று, வாழ்க்கை கைவிட்டு போகும் சூழ்நிலை உருவாகிவிடுகிறது.
‘கம்யூனிட்டி எகென்ஸ்ட் டிரங்கன் டிரைவிங்’ என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் ‘இந்திய பெண்களின் மது பயன்பாடு எழு வருடங்களில் 38 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகவும், அடுத்த ஐந்து வருடங்களில் 25 சதவீதம் வரை அதிகரிக்கும்’ என்றும் குறிப்பிட பட்டிருக்கிறது. ‘எய்ம்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை ‘டெல்லியில் 40 சதவீதம் ஆண்களும், 20 சதவீதம் பெண்களும் மது அருந்துபவர்களாக இருக்கிறார்கள்’ என்று கூறுகிறது. அதாவது டெல்லியில் கிட்டத்தட்ட 15 லட்சம் பெண்கள் மது அருந்துவதாக குறிப்பிடுகிறது.
பெண்கள் மது அருந்துவதற்கான காரணங்கள் என்ன என்பதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்களில் 43.7 சதவீதம் பேர் மதுவை ருசித்துப்பார்த்துவிட வேண்டும் என்ற உந்துதலால் அந்த பழக்கத்திற்கு அறிமுகமாகிறார்கள். 31 முதல் 45 வயது வரை உள்ள பெண்களில் 41.3 சதவீதத்தினர் வேலை மற்றும் சமூக நிகழ்வுகளால் மதுப்பழக்கத்தை தொடங்குகிறார்கள். 46 முதல் 60 வயது வரையுள்ள பெண்களில் 39 சதவீதத்தினர் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு விரக்தியான சூழ்நிலைகளால் போதையின் பாதையில் அடியெடுத்து வைக்கிறார்கள்’ என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இதயம் மற்றும் ஈரல் தொடர்புடைய நோய்கள், மனஅழுத்தம், உறக்கமின்மை, குடும்பத்தினரை சந்தேகப்படுதல், வன்முறை எண்ணம் போன்றவை அவர்களிடம் அதிகமாக தோன்றுகிறது. தாய்மையடைய தயாராக இருப்பவர்களும், கர்ப்பிணிகளும் முழுமையாக மது அருந்துவதில் இருந்து விடுபடவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் விரைவாக அவர்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும்.
மது அருந்தும் பெண்களின் உடல் குண்டாகிவிடும். பின்பு உடல்பருமன் கொண்டவர்களுக்கு ஏற்படும் பலவிதமான நோய்கள் அவர்களுக்கு ஏற்பட்டு உடலை பலகீனமாக்கிவிடும். புற்றுநோய் உருவாகும் வாய்ப்பும் அவர்களுக்கு அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக மார்பக புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
கர்ப்பிணிகள் மது அருந்தினால் பிரசவ காலத்தில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகுவார்கள். பிறக்கும் குழந்தையும் உடல்ரீதியான, மனோரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகும். சிறுநீரக பாதிப்பு, இதயநோய் பாதிப்பு, எலும்பு வளர்ச்சி குறைபாடு போன்றவைகளும் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புண்டு.
மது அருந்தும் பழக்கம்கொண்ட பெண்களை அதில் இருந்து மீட்க அவர்களது குடும்பத்தினர் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அவர்களை மனோதத்துவ கவுன்சலிங்குக்கு உள்ளாக்கி தேவை யான சிகிச்சைகளை வழங்கவேண்டும்.
இது பற்றி மனநல நிபுணர் நீது கூறுகிறார்:
“மது அருந்தும் பழக்கத்தில் இருந்து விடுபட விரும்பி நிறைய பெண்கள் கவுன்சலிங் பெற வருகிறார்கள். அவர்களில் ஒருசிலர்தான் தனியாக வருகிறார்கள். மற்றவர்களை நண்பர்களோ, குடும் பத்தினரோ வற்புறுத்தித்தான் அழைத்து வருகிறார்கள். பெற்றோரிடம் குடிப்பழக்கம் இருந்தால், பிள்ளை களிடமும் வந்துவிடுகிறது. அதுபோல் பெற்றோரால் புறக்கணிக்கப்படும் பெண்களும் மது பழக்கத்திற்கு உள்ளாகிறார்கள். ‘சோஷியல் டிரிங்கிங்’ என்ற பெயரில்தான் பெரும்பாலான பெண்கள் மதுப்பழக்கத்திற்கு அறிமுகமாகிறார்கள். அதுதான் மிக ஆபத்தானதாக இருக்கிறது. பெண்கள் மதுப்பழக்கத்திற்கு தைரியமாக ‘நோ’ சொல்லவேண்டும்” என்கிறார், அவர்.

கொரோனா தாக்கிவிட்டு சென்ற பிறகு ஏற்படும் பல பக்க விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று டாக்டர்கள் சொல்லும் தகவல்கள் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.
கொரோனா வந்து சென்ற பிறகு ஏற்படும் பக்க விளைவுகளை கேட்டால் உறைய வைக்கிறது!
இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 38 லட்சம் பேர். அவர்களில் மரணத்தை தழுவியவர்கள் 63 ஆயிரம் பேர்தான்.
8 லட்சம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். 30 லட்சம் பேர் குணம் அடைந்து விட்டார்கள் என்பது இன்றைய கணக்கு!
அதாவது பாதிப்பை விட குணம் அடைபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.
எனவே கொரோனாவை நினைத்து அச்சப்பட தேவை இல்லை.
ஒருமுறையாவது குணமானால் உடலில் எதிர்ப்பு சக்தி வந்துவிடும். அதன் பிறகு கவலை இல்லை.
எனவே எத்தனை நாளைக்கு தான் பயந்து முடங்கி கிடப்பது? கொரோனாவோடு வாழப் பழகி கொள்வோம் என்ற எண்ணத்துக்கு அரசும் வந்துவிட்டது. மக்களும் வந்துவிட்டனர்.
அதனால்தான் கொரோனாவை விட வேகமாக இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருக்கிறது.
இந்த கணிப்பும், முடிவும் சரிதானா...? இல்லை. நிச்சயமாக இல்லை.
ஜப்பானில் அணுகுண்டு வீச்சில் அந்த கணமே செத்தவர்களைவிட அதன்பிறகு ஏற்பட்ட பாதிப்புகளால் தினம் தினம் செத்துக் கொண்டிருப்பவர்கள்தான் ஏராளம்.
அதே போல்தான் கொரோனா தாக்கிவிட்டு சென்ற பிறகு ஏற்படும் பல பக்க விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று டாக்டர்கள் சொல்லும் தகவல்கள் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.
முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் ஆஸ்பத்திரிக்கு கடந்த சில நாட்களில் வந்த சில நோயாளிகளிடம் இருந்து டாக்டர்கள் பார்த்த சில நோய்கள் அவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய ஒரு நோயாளி கை வலி தாங்க முடியவில்லை என்று வந்திருக்கிறார்.
அவரை ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எஸ்.சரவணன் பரிசோதித்து பார்த்தபோது கையில் உள்ள ரத்த நாளத்தில் ரத்தம் உறைந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
மருத்துகளால் கரைக்க முடியாத நிலை உருவானதும் ஆபரேஷன் மூலம் ரத்த நாளத்துக்குள் உறைந்திருந்த ரத்த கட்டியை அகற்றி இருக்கிறார். அதன் பிறகு சீராக அந்த நோயாளி குணம் அடைந்து விடு திரும்பி இருக்கிறார்.
இது அரிதாக வரவில்லை. இதேபோல் 7 கேசுகளை டாக்டர் சரவணன் பார்த்துள்ளார்.
அவர்களின் கால், கைகளில் இதேபோல் உறைந்த ரத்த கட்டியை அகற்றி குணப்படுத்தி இருக்கிறார்.
லண்டனில் ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணராக பல ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் வாய்ந்த டாக்டர் சரவணன், கொரோனா வைரஸ் தாக்கத்தின் அடுத்த கட்டம் உடலில் உள்ள உறுப்புகளில் ரத்தம் உறைதல் என்ற மோசமான நிலைக்கு கொண்டு செல்வதாக எச்சரிக்கிறார்.
கொரோனா வைரஸ் இப்போதுதான் நம் நாட்டில் அதிகமாக பரவி வருகிறது
குணம் அடைந்து ஓரிரு வாரங்களுக்கு பிறகுதான் இந்த பிரச்சினை வருகிறது. பொதுவாக மனித உடலில் இருந்து ரத்தம் வெளியேறினால்தான் உறையும் தன்மை பெறும்.
ஆனால் இந்த வைரஸ் தாக்கத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் உடல் உறுப்புகளில் ரத்தத்தை உறைய வைத்து விடுகிறது.
கால், கை, மூளை நரம்புகளில் ரத்தம் உறைதல் நிகழ்கிறது. இதனால் கால், கை, கடுமையாக வலிக்கும். மரத்து போகும் உணர்வு ஏற்படும். உடனே ரத்த நாளம் தொடர்பான மருத்துவர்ளை அணுகி விட வேண்டும். கண்டு கொள்ளாமல விட்டால் ரத்த ஓட்டம் தடைபட்டு காலோ, கையோ அழுகும் நிலை ஏற்படும். அதன்பிறகு துண்டிப்பதை தவிர வழியே கிடையாது.
நான் சிகிச்சை அளித்த 7 நோயாளிகளையும் சோதித்த போது உறைந்திருந்த ரத்தம் வழக்கமாக ரத்த நாளங்களில் உறையும் ரத்தத்தை விட மிகவும் அடர்த்தியாக இருந்தது. மருந்துகளால் கரைக்க முடியவில்லை. எனவே அறுவை சிகிச்சை மூலம் அகற்றினேன்.
கொரோனா வைரஸ் தொற்றியதால் உடலில் ஏற்பட்ட அதிகமான எதிர்ப்பு தன்மை மற்றும் உடலுக்குள் வைரஸ் இருக்கும் போது அது பெருகாமல் இருப்பதற்காக அதை சுற்றி உருவாகும் ‘பைபர்’ காரணமாக இவ்வாறு ரத்தம் உறையலாம் என்பது கருதப்படுகிறது.
அமெரிக்காவில் இந்த மாதிரி கொரோனாவில் இருந்து மீண்டு கை, கால்களை பலர் இழந்து இருக்கிறார்கள்.
மூளையில் ரத்தம் உறைந்தால் கால், கை செயலற்றுவிடும்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் நுரையீரலை கண்காணிப்பது மட்டுமல்ல. இந்த மாதிரி ரத்த உறைவதால் கை, கால்களில் வலி ஏற்பட்டாலோ, மரத்துப்போனாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அறிகுறி தெரிந்த 4 முதல் 24 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் உறுப்புகளை காப்பாற்றிவிடலாம்.
சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்டாலும் அவர்களுக்கு இந்த மாதிரி ரத்தம் உறைதல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே கவனம் தேவை.
இவ்வாறு டாக்டர் சரவணன் கூறினார்.
பாழாய் போன கொரோனா வந்திட்டு போனாலும் விடாது போலிருக்கே... கேட்டாலே மனதை உறைய வைக்கிறதே!

திருமண பந்தத்தில் வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை. அதனால் மனைவியிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும்.
திருமண பந்தத்தில் வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை. அற்புதமான உறவை உருவாக்கும் அல்லது சிதைக்கும் தன்மை வார்த்தைகளுக்கு உண்டு. அதனால் மனைவியிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும்.
ஒருவருடைய உணர்வுகளை மற்றவர் ஒருபோதும் தவறாக மதிப்பிடக்கூடாது. ஏதாவதொரு வகையில் அவரவர் தரப்பில் நியாயம் இருக்கும். அதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அதை விடுத்து மனைவியின் உணர்வுகளை கணவர் கேலி, கிண்டலாக பாவித்துவிடக்கூடாது. விளையாட்டுக்காக கூட உணர்வுகள் விஷயத்தில் விளையாடக்கூடாது.
குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ, நல்ல விஷயங்கள் நடக்க இருந்தாலோ மனைவியிடம் அதுபற்றி விளக்கமாக பேச வேண்டும். மூன்றாம் நபரிடம் பேசுவது போல் மேலோட்டமாக பேசக்கூடாது. மனைவியின் கருத்தை கேட்க யோசிக்கக்கூடாது. குடும்பத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுவிடக்கூடும்.
விவாகரத்து என்ற வார்த்தைதான் குடும்பங்களை சிதைக்கும் காரணியாக இருக்கிறது. உறவுக்குள் நிச்சயமற்ற தன்மையையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும். ‘சைலெண்ட் தெரபி’ எனப்படும் அமைதி சிகிச்சைதான் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே வழி. இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டால் சில மணிநேரங்கள் விலகி இருப்பது அவசியம். அப்போது மனதை அமைதிப்படுத்தி நிதானமாக யோசித்து பார்ப்பதுதான் பிரச்சினையை குறைக்கும்.
ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மன உளைச்சலில் இருக்கும்போது மனைவி ஆறுதலாக பேச வரும்போது எரிச்சல் அடைந்து வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது. ‘ஒண்ணுமில்லை, நீ சும்மா இருக்கியா? உன் வேலையை மட்டும் பார்’ என்பது போன்ற வார்த்தைகள் மனைவியை மனம் நோகடிக்க வைத்துவிடும். மனைவியிடம் பேச முடியாத மனநிலையில் இருந்தால், ‘நான் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க விரும்புகிறேன். தனிமை சூழல் எனக்கு தேவைப்படுகிறது. பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று பக்குவமாக சொல்ல வேண்டும்.
கணவன்-மனைவி இடையேயான உரையாடலில் எந்த ஒரு சூழ்நிலையிலும் விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. எத்தகைய சண்டை-சச்சரவுகள் தோன்றினாலும் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க பழக வேண்டும். அப்போது விவாதம் தீவிரமாவதாக உணர்ந்தால் கணவர் பேசாமல் அமைதி காப்பதுதான் நல்லது. பிறகு பேசிக்கொள்ளலாம் என்று ஒதுங்கி இருப்பது மேலானது. அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டினால் உறவுக்குள் விரிசலை ஏற்படுத்திவிடும். விவாகரத்து சிந்தனைக்கு வழிவகுத்துவிடும்.
மற்றவர்களுடன் மனைவியை ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு பதிலாக துணையின் செயல்பாடுகளில் இருக்கும் குறைகளை வெளிப்படையாக விமர்சனம் செய் வது தவறில்லை. அதேநேரத்தில் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லும் மனநிலைக்கு ஆளாகிவிடக்கூடாது. தவறுகளை சரிப்படுத்தும் வாய்ப்பை கணவர் ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக மனைவி கருத வேண்டும்.
நண்பர்கள், உறவினர்களிடம் குடும்ப விஷயங்களை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. தம்பதியர் தங்களுக்குள் சாதாரணமாக கருதும் விஷயங்கள் மூன்றாம் நபர்கள் மூலம்தான் பிரச்சினையாக உருவெடுக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமானது.

அத்திப்பழம், ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் மெருகூட்டக்கூடியது. கூந்தலுக்கும் அத்திப்பழத்தை பயன்படுத்தலாம். எந்தெந்த வகைகளில் அத்திப்பழங்களை உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்.
அத்திப்பழம், ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் மெருகூட்டக்கூடியது. சில அழகு சாதனப் பொருட்களில் அத்திப்பழம் பயன்படுத்தப்படுகிறது. அது சரும பிரச்சினைகளை சரி செய்வதோடு புத்துயிர் பெறச்செய்யும் தன்மையையும் கொண்டிருக்கிறது. கூந்தலுக்கும் அத்திப்பழத்தை பயன்படுத்தலாம். எந்தெந்த வகைகளில் அத்திப்பழங்களை உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்.
சருமத்தில் சுருக்கம், கோடுகள், கருவளையம் போன்ற பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும்போது முகத்தின் அழகு பாதிப்புக்குள்ளாகும். சருமத்திற்கு பளபளப்பு ஏற்படுத்திகொடுக்கும் தன்மை அத்திப்பழத்திற்கு உண்டு. எப்போதும் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும். மெலனின் உற்பத்தியை குறைத்து சரும அழகை பேணிக்காக்கவும் வழிவகை செய்யும்.
சருமத்தில் திட்டுக்கள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் அத்திபழத்தை பயன்படுத்தலாம். அத்தி பழம் ஒன்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பின்னர் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் மென்மையாக தடவிவிட்டு உலர்ந்ததும் நீரில் கழுவி விடவும். வாரத்திற்கு இருமுறை செய்துவந்தால் சருமம் பிரகாசிக்க தொடங்கும்.
முகத்தில் கொப்பளங்களோ, முகப்பருக்களோ இருந்தால் அத்திப்பழத்தை நேரடியாகவே உபயோகிக்கலாம். மருக்களை நீக்கும் தன்மை அத்திப்பழத்திற்கு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்தி பழத்தை நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து மருவில் தடவிவிட்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம்.
முகம் சட்டென்று பளபளப்புடன் மின்னுவதற்கு அத்திப்பழத்தை உபயோகப்படுத்தலாம். ஒரு அத்திப்பழத்தை நன்றாக அரைத்து அதனுடன் சிறிதளவு தயிர், தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வழக்கத்தை விட சருமம் பிரகாசத்துடன் காட்சியளிப்பதை உணரலாம்.
ஊட்டச்சத்து குறைபாடுகள்தான் முடி உதிர்வதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது. அத்திப்பழத்தில் மெக்னீசியம், வைட்டமின் சி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முடி வளர்ச்சிக்கு அவசியமானவை. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்யும். கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் இந்த பழத்தை சாப்பிடலாம்.

மழலையர் பள்ளியில் பல்வேறு விதமான கல்வி முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் சில முக்கியமான கல்வி திட்ட அணுகுமுறைகள் குறித்து பார்ப்போம்.

மாண்டிச்சேரி
வித்தியாசமான வகுப்பறை, விளையாட்டு வடிவில் பாடத்திட்டம், வயது வித்தியாசம் இல்லாத வகுப்பு தோழர்கள்... என பட்டைய கிளப்புகிறது, மாண்டிச்சேரி கல்விமுறை. உலகம் முழுக்க 20 ஆயிரம் பள்ளிகளில் இந்தக் கல்வி முறை பின்பற்றப்படுகிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், சப்பாத்தி மாவு பிசைதல், காய்கறிகளை வெட்டுதல், பொருட்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற அன்றாட வேலைகளில் இருந்தும் கல்வி கற்பிக்கப்படும்.
வால்டோர்ப்
‘சிந்தனை செய், முயன்று பார், கற்றுக்கொள்’ என்பதுதான் வால்டோர்ப் முறையின் அடிப்படை. அதாவது குழந்தைகளுக்கு எதை கற்பிக்க இருக்கிறார்களோ, அதை பற்றி கற்பித்து, அதை காண்பித்து, அதை உணர்வுப்பூர்வமாக மனதில் பதியவைக்கிறார்கள். கல்வி மட்டுமின்றி, இசை, நடனம் போன்றவற்றுக்கும் இதில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். திங்கட்கிழமை இசை, செவ்வாய் கதை சொல்லுதல் என வகுப்பு ஜாலியாக நகரும்.
பேரண்ட் கோ-ஆப்ரேஷன்
பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து செயல்படுவதே இந்த கற்றல் முறையின் நோக்கமாகும். பெற்றோர் வகுப்பறையில் அமர்ந்து தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கும் இந்த கற்றல்முறை வழிவகை செய்கிறது. பெற்றோர் வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் சுழன்று பிள்ளைகள் பாடங்களை கவனிப்பதற்கு உதவுகிறார்கள்.
ரெஜியோ எமிலியா
சுய ஒழுக்கம், குழந் தைகளுக்கான பொறுப்புகள், சமூகம் ஆகிய மூன்றையும் மையப்படுத்தும் கல்விமுறைதான் ரெஜியோ எமிலியா. மற்ற குழந்தைகளுடன் சகஜமாக பழகவிட்டு, நட்புறவை வளர்த்து அதன்மூலம் கல்வியை கொண்டு செல்கிறார்கள். செயல்முறை கல்விக்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
ஹைஸ்கோப்
மாணவர்கள் தாங்கள் விரும்பிய திறன்களை அல்லது இலக்கை அடைய தாங்களாகவே திட்டமிடும் கல்விமுறை இது. இளம் மாணவர்களின் தேவைகளையும், கேள்விகளையும் புரிந்துகொள்வதற்கும் அவர்களின் கற்றலை சிறந்த முறையில் வழிநடத்துவதற்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த கல்வி முறை விளங்கும்.
பேங்க் ஸ்டிரீட்
ஒவ்வொருவரின் தனித்துவமான உணர்ச்சி, சமூக மற்றும் அறிவுசார் அம்சங்களை வளர்க்கும் வகுப்பறையை உருவாக்குவதே இந்த கல்வி முறையின் நோக்கமாகும். ஒவ்வொரு வயதிலும் நிகழும் உணர்ச்சி மற்றும் அறிவுசார் மாற்றங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு பாடத்தையும் எவ்வாறு அணுகுவது என்பதையும் குறிப்பிடுகிறது. உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அர்த்தமுள்ள வகையில் கல்வி கற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்த மழலையர் கல்வி திட்டங்கள் வெளிநாடுகளில் நடைமுறையில் இருப்பவை என்று எண்ணி விடாதீர்கள். நம் நாட்டிலும், நமக்கு அருகில் இருக்கும் பல பள்ளிக்கூடங்களிலும் இந்த கல்வி முறை நடைமுறையில் இருக்கிறது.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி பூரண குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினாலும் உடலில் மீண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டியது அவசியம்.
கொரோனா நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகி குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பூரண குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினாலும் உடலில் மீண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டியது அவசியம். ஏனெனில் ஊட்டச்சத்துக்கள்தான் உடல் ஆரோக்கியத்திற்கு முதன்மையானது. சாப்பிடும் திட, திரவ உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும் துணை புரியும்.
உலக சுகாதார அமைப்பு, இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மையம், இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவை கொரோனா தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் சமயத்தில் சாப்பிடும் உணவுகளை பரிந்துரை செய்துள்ளன. அந்த வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகும் சாப்பிடும் உணவில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
கலோரிகள்: உடலில் ஆற்றலை தக்கவைத்துக்கொள்வதற்கு கலோரிகள் முக்கியமானவை. எனவே கலோரிகளை அடர்த்தியாக கொண்ட உணவுகளை உட்கொள்வது ஆற்றலை மீட்டெடுக்க உதவும். உணவில் அரிசி, உருளைக்கிழங்கு, ரொட்டி, பாஸ்தா, முழு தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் கலோரிகள் குறைந்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். துரித உணவுகளையும் அறவே ஒதுக்கிவிட வேண்டும்.
புரதம்: தினமும் உடலுக்கு 75 முதல் 100 கிராம் வரை புரதம் தேவை. அதற்கேற்ப அதிக புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள். சைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் பயறு, பருப்பு வகைகள், பால் பொருட்கள், சோயா பொருட்கள், நட்ஸ் வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் கோழி இறைச்சி, முட்டை, மீன் சாப்பிடலாம்.
பழங்கள்: பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்துக்கள், போலேட், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கின்றன. ஆப்பிள், வாழைப் பழங்கள் முதல் சுரைக்காய், பச்சை இலை காய்கறிகள் வரை அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி: பழங்கள், காய்கறிகள் மட்டுமின்றி மூலிகைகள் மற்றும் சில மசாலாப் பொருட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளன. அவற்றில் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் நிரம்பி யுள்ளன. மஞ்சள் கலந்த பால், கிரீன் டீ, ஹெர்பல் டீ போன்றவை சிறந்தது. இவைகளை தொடர்ந்து பருகி வரலாம்.
திரவ உணவுகள்: நோய்த்தொற்றுகள் உடலில் நீரிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றன. தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வரும்போது உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பது அவசியம். தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். ரசம், சூப் வகைகளை அன்றாட உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ள வேண் டும்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் உணவை விழுங்குவதற்கு சிரமப்படுவார்கள். அதனால் மென்மையான, நன்கு பிசைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. உணவு சமைக்கும்போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதும் முக்கியம். சரியான தூக்கமும், உடற்பயிற்சியும் இல்லாவிட்டால் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொண்டாலும் அது உடலுக்கு பயனற்று போகும். அதனால் ஓய்வுக்கும், உடற்பயிற்சிக்கும் போதுமான நேரம் செலவிட வேண்டியது முக்கியமானது.

உடல் இயக்க வளர்ச்சியை புரிந்து ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில், சமீப காலங்களில் சிறுமிகளின் மனோபாவத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக மகப்பேறு டாக்டர்கள் குறிப்பிடுகிறார்கள்.
உடல் இயக்க வளர்ச்சியை புரிந்து ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில், சமீப காலங்களில் சிறுமிகளின் மனோபாவத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக மகப்பேறு டாக்டர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது முந்தைய காலத்தில் சிறுமிகள், ‘விரைவில் வயதுக்கு வந்து பெரிய மனுஷி ஆகவேண்டும்’ என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததாகவும், இன்றைய சிறுமிகள் ‘வயதுக்கு வருவது தள்ளிப்போனால் நல்லது’ என்று எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார்கள். தங்கள் உடல் வளர்ச்சியை பற்றி அவர்கள் விஞ்ஞானபூர்வமாக உணர்ந்துகொள்ளாமல் இருப்பதுதான் அதற்கான காரணம் என்றும் சொல்கிறார்கள்.
சிறுமிகளின் அம்மாவோ, அக்காவோ, நெருக்கமான உறவுப்பெண்களே மாதவிலக்கு நாட்களில் சில அவஸ்தைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் வயிற்றுவலியால் அவதிப்படலாம். அந்த நாட்களில் தங்களது அன்றாட செயல்களை செய்ய முடியாத அளவுக்கு சோர்ந்துபோய் காட்சியளிக்கலாம். அதை எல்லாம் பார்க்கும்போது ஒருசில சிறுமிகளுக்கு மாதவிலக்கு பற்றிய எதிர்மறையான எண்ணம் தோன்றுகிறது. ‘பூப்படைந்தால் தாமும் இதுபோன்ற அவஸ்தைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் வயதுக்கு வருவது தள்ளிப்போனால் நல்லது’ என்ற எண்ண ஓட்டம் அவர்களுக்குள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமின்றி மாதவிலக்கு நாட்களில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவது, அதனை குறிப்பிட்ட கால அளவில் அப்புறப்படுத்தவேண்டியது, அந்தரங்க சுத்தத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டியிருப்பது போன்றவைகளும், சிறுமிகளிடம் பூப்படைதல் பற்றிய எதிர்மறை சிந்தனை உருவாக காரணமாக இருக்கிறது.
இந்த எதிர்மறை சிந்தனை சிறுமிகளிடம் ஏற்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பது டாக்டர்களின் கருத்து. எதிர்மறை கருத்தை போக்கி, பெண்களின் உடல்வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களின் இயற்கைத்தன்மையை விஞ்ஞானரீதியாக புரியவைப்பதில் தாய்மார்கள் முக்கிய பங்காற்றவேண்டும் என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள். அது பற்றி டாக்டர்களின் விளக்கம்:
ஒருசில பெண்கள் மாதவிலக்கை அசிங்கமானதாகவும், அழுக்கானதாகவும் நினைக்கிறார்கள். ஆனால் மாதவிலக்கு என்பது பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இனப்பெருக்கத்துக்கான பருவத்தை பெண் அடையும்போது, ஒவ்வொரு மாதமும் அவளுடைய கர்ப்பப்பையில் அதற்கான மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் கர்ப்பநிலையை அடையாதபோதுதான், கருப்பையில் இருந்து அவை மாதவிலக்கு உதிரமாக வெளியேறுகிறது. ஒரு பெண்ணின் உடல் இயற்கையான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பதற்கு பூப்படைதல் ஒரு முக்கியமான அடையாளமாகும். அதனால் பூப்படைதலை நேர்மறையான சிந்தனையுடன் சிறுமிகள் வரவேற்கவேண்டும்.
மாதவிலக்கு நாட்களில் பெண்களின் சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் சுரக்கும். அதை தொடர்ந்து கருப்பையின் உள்பக்கச் சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களால் ஆன என்டோமெட்ரியம் உருவாகும். ஒருவேளை, அவள் கருத்தரித்து குழந்தை உருவானால், குழந்தை பாதுகாப்பாக வளர்வதற்கான ஏற்பாடுகளை இந்த என்டோமெட்ரியம் படலம் செய்யும்.
இந்த மிருதுவான படலம் தயார் ஆனதும், ஏதாவது ஒருபக்க சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறும். அது கருக்குழாயை அடையும். அப்போது, பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப்பாள். அந்தச் சமயத்தில் ஆணும் பெண்ணும் இணைந்தால், முட்டையோடு ஆணின் உயிரணு சேர வாய்ப்பு உண்டு. இதுதான் கருத்தரித்தல். கர்ப்பக்காலத்தின் தொடக்கமும் அதுதான்.
ஆணுடன் இணையாதபோது முட்டை கருத்தரிக்காது என்பதால் கருப்பையில் என்டோமெட்ரியம் அவசியமற்றதாகிவிடுகிறது. சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். இதன்விளைவாக, என்டோமெட்ரியம் உடைந்து சிதைந்து, மாதவிலக்கின்போது கருப்பையில் இருந்து வெளியேறும். இது மாதந்தோறும் உடலுக்குள் நடக்கும் விந்தையான விஞ்ஞான செயல்பாடாகும். இதுதான் மாதவிலக்கு. இது பெண் பூப்படைந்த பின்பு மாதந்தோறும் தொடரும் நடைமுறையாகும். இதை தாய்மார்கள், மகள் வயதுக்கு வரும் பருவத்தை அடையும்போது சொல்லிக்கொடுக்கவேண்டும்.

மனஅழுத்தம் நிறைந்த இடத்தில் இருந்து தப்பித்து மனதுக்கு பிடித்த இடத்திற்கு செல்ல சிலர் ஷாப்பிங்கை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
வீட்டிற்குள்ளே முடங்கிக்கிடந்து மனமகிழ்ச்சியின்றி தவிப்பவர்களுக்கு உற்சாகத்தை தர சிறந்தது, ஷாப்பிங் தெரபி. ‘ஷாப்பிங் என்றால் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதுதானே? பொருட்கள் வாங்கும்போது கையில் இருக்கும் பணமெல்லாம் கரைந்துவிடும் அல்லவா? அது எப்படி மகிழ்ச்சி தரும்?’ என்ற கேள்விகள் பலருக்குள்ளும் எழும். ஆனால் ஷாப்பிங்கை கலையாக ரசித்து செய்யத் தெரிந்தவர்கள், தேவையற்ற பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து வீட்டிற்குள் திணிக்கமாட்டார்கள். பல இடங்களில் பார்த்து தேவையான ஒரு பொருளை தேர்ந்தெடுப்பார்கள். அதனை தேர்ந்தெடுக்கையில் அவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும். நன்றாக பொழுதுபோகும். பல மனிதர்களை காண்பார்கள். அன்றாட அனுபவங்களில் நிறைய விஷயங்களையும் கற்றுக்கொள்வார்கள்.
“இந்த உலகம் வித்தியாசமான மனிதர்களை கொண்டது. மாறுபட்ட அழகினை பெற்றது. நாம் பார்க்கும் ஒவ்வொரு இடமும், ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு மனிதர்களும் வித்தியாசமானவர்கள்தான். ஷாப்பிங்கில் அவை அனைத்தையும் ரசிக்கலாம்.. பார்க்கலாம்.. பேசலாம். அதன் மூலம் எங்களுக்குள் இருக்கும் மனஅழுத்தத்தை வெளியேற்றி மகிழ்ச்சியடைகிறோம்” என்று இன்றைய இளையதலைமுறையினர் சொல்கிறார்கள். மக்களின் மனஅழுத்தத்தை போக்கி, உற்சாகத்தை தருவதால் அதற்கு ‘ஷாப்பிங் தெரபி’ என்று பெயர்.
மனஅழுத்தம் நிறைந்த இடத்தில் இருந்து தப்பித்து மனதுக்கு பிடித்த இடத்திற்கு செல்ல சிலர் ஷாப்பிங்கை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த ரகத்தினர்தான் ஒரு பொருளும் வாங்காமல், கடைகடையாக சுற்றிப்பார்த்துவிட்டு ‘வின்டோ ஷாப்பிங்’ செய்வார்கள். கடையில் இருக்கும் புதிய பொருட்களையும், அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் பொழுதுபோக்கு மனோபாவத்துடன் கண்டுகளித்தபடி நடந்துகொண்டே இருப்பார்கள். இது மனதில் இருக்கும் கவலையையும், பிரச்சினைகளையும் தற்காலிகமாக குறைத்து மனதுக்கு இதமளிக்கும். மனதை பாரமாக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த பொழுதுபோக்கு ஷாப்பிங் அனுபவத்தை பெற்றால் மனது இதமாகிவிடும்.
திருமண காலகட்டத்தில் மணப்பெண்ணும் அவரது குடும்பத்தினரும் அடிக்கடி ஷாப்பிங்குக்கு நேரத்தை ஒதுக்குவார்கள். அப்போது அவர்களை உற்றுக்கவனித்தால் ஒரு உண்மைபுரியும். ஷாப்பிங்குக்கு கிளம்பும்போதே அவர்களிடம் உற்சாகமான மனநிலை வந்துவிடும். எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் அதை எல்லாம் ஓரமாய் தூக்கிவைத்துவிட்டு கலகலப்பாகிவிடுவார்கள். அதே உற்சாகமான மனநிலையோடு ஷாப்பிங் செய்வார்கள். அந்த ஷாப்பிங் அவர்களது புதிய வாழ்க்கைக்கு துணைபுரிவதாக அமைவதால் கூடுதல் மகிழ்ச்சியடைவார்கள். அடுத்து சில நாட்கள் சோர்வில்லாமல் உழைப்பதற்கான சக்தியையும் அந்த ஷாப்பிங்கில் இருந்து பெறுவார்கள்.
ஷாப்பிங் செய்து ஒரு புதிய உடை வாங்கும்போது அது தொடர்புடைய கலர்கலரான கனவுகள் மனதிற்குள் அணிவகுத்து வந்துபோகும். அந்த உடை அணிந்தால் எப்படி இருக்கும்? அந்த நிகழ்ச்சியில் தனது அழகு எப்படி எல்லாம் எடுப்பாக இருக்கும் என்பதை எல்லாம் நினைத்துப்பார்த்து மகிழத்தொடங்கிவிடுவார்கள்.
ஷாப்பிங் பலருடைய தன்னம்பிக்கையையும் உயர்த்துகிறது. வேலைக்கான இன்டர்வியூவுக்கு செல்வதற்காக ஷாப்பிங் செய்து புதிய உடைகளை வாங்குவார்கள். அந்த உடை அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தர ஷாப்பிங்கே காரணமாக இருக்கிறது. பல நண்பர்களை ஒன்றிணைத்து சந்திக்கவைக்கும் இடமாகவும் பிரபலமான ஷாப்கள் அமைகின்றன.
ஷாப்பிங் மால்களை பொறுத்தவரையில் அவை கம்யூனிட்டி சென்டர்கள் போன்று அமைகின்றன. அவை ஷாப்பிங் அனுபவத்தை மட்டும் தராமல் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கும் நல்ல வாய்ப்புகளையும் உருவாக்கித்தருகிறது. அங்கிருந்து நண்பர்களோடு மணிக்கணக்கில் உரையாடுவது மனஅழுத்தத்தை போக்கும் நல்ல மருந்தாக இருக்கிறது. புதிய இடங்களுக்கு ஷாப்பிங் செய்யசெல்லும்போது அதிக நேரம் நடப்பார்கள். வித்தியாசமான பொருட்களையும், புதிய நபர்களையும் பார்த்துக்கொண்டே செல்லும்போது நடக்கும் தூரம் தெரியாது. அதனால் அது நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்துவிடுகிறது. உடல் இயக்கம் அதிகரிக்கும்போது அது உடலுக்கும், மூளைக்கும் கூடுதல் உற்சாகத்தை தரும்.
பொருட்களை வாங்குவதற்காக ஷாப்பிங் செய்வது நல்லவிஷயம்தான். ஆனால் ஷாப்பிங் தரும் சுகத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது. அது ஒரு போதைப்பழக்கம் போன்று உருவாகிவிட்டால், அதில் இருந்து மீள்வது கடினம்.

இந்த சூப் குடித்தால் குடல் புழுக்கள் நீங்கும். வயிற்றில் புண், கிருமித் தொற்று இருந்தால் சரியாகும். பசியைத் தூண்டி, செரிமான ஆற்றலைக் கொடுக்கும். உடலுக்கு புத்துணர்வைத் தரும்.
தேவையான பொருட்கள் :
வேப்பம்பூ - 4 டீஸ்பூன்,
கொள்ளு - 50 கிராம்,
மிளகு - 2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 2,
அன்னாசிப் பூ - 5 கிராம்,
நல்லெண்ணெய் - 25 மி.லி,
கடுகு, மஞ்சள் தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,

செய்முறை:
கொள்ளுவை நன்றாக வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
நல்லெண்ணெயில் வேப்பம்பூவை வறுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீரை, நன்றாகக் கொதிக்கவிடவும்.
இதில் மஞ்சள் தூள் சேர்த்து, கொள்ளுப் பொடியைக் கட்டி இல்லாமல் கரைத்துச் சேர்க்கவும்.
இதில், வறுத்த வேப்பம்பூ, உப்பு சேர்க்க வேண்டும்.
மிளகு, பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ இவற்றை நன்றாக அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பூண்டு, அரைத்த மிளகுக் கலவையைச் சேர்த்துக் கலக்கவும்.
இந்தக் கலவையைக் கொதிக்கும் சூப்பில் கொட்டி, கலக்கி இறக்கவும்.
வேப்பம்பூ - 4 டீஸ்பூன்,
கொள்ளு - 50 கிராம்,
மிளகு - 2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 2,
அன்னாசிப் பூ - 5 கிராம்,
நல்லெண்ணெய் - 25 மி.லி,
கடுகு, மஞ்சள் தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
பூண்டு - 50 கிராம்.

செய்முறை:
கொள்ளுவை நன்றாக வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
நல்லெண்ணெயில் வேப்பம்பூவை வறுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீரை, நன்றாகக் கொதிக்கவிடவும்.
இதில் மஞ்சள் தூள் சேர்த்து, கொள்ளுப் பொடியைக் கட்டி இல்லாமல் கரைத்துச் சேர்க்கவும்.
இதில், வறுத்த வேப்பம்பூ, உப்பு சேர்க்க வேண்டும்.
மிளகு, பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ இவற்றை நன்றாக அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பூண்டு, அரைத்த மிளகுக் கலவையைச் சேர்த்துக் கலக்கவும்.
இந்தக் கலவையைக் கொதிக்கும் சூப்பில் கொட்டி, கலக்கி இறக்கவும்.
சத்தான வேப்பம்பூ கொள்ளு சூப் ரெடி.