என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கொரோனா பரிசோதனை வசதி இல்லை, பரிசோதனை தாமதம் போன்றவற்றை காரணம்காட்டி பிரசவம் மற்றும் அவசரகால சிகிச்சைகளை தாமதப்படுத்தக்கூடாது.
    கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான பரிசோதனை தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * தனிநபர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப கேட்டுக்கொள்ளும்பட்சத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். ஆனால் மாநிலங்கள், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த அணுகுமுறையில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

    * வெளிநாடுகளுக்கோ அல்லது வெளிமாநிலங்களுக்கோ செல்ல விரும்பும் தனிநபர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்துவது கட்டாயம் ஆகும். தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர்களை அனுமதிக்க வேண்டும்.

    * நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், குறிப்பாக தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் துரித பரிசோதனை (ஆன்டிஜன் பரிசோதனை) நடத்தப்படவேண்டும்.

    * கொரோனா பரிசோதனை வசதி இல்லை, பரிசோதனை தாமதம் போன்றவற்றை காரணம்காட்டி பிரசவம் மற்றும் அவசரகால சிகிச்சைகளை தாமதப்படுத்தக்கூடாது.

    * தாய்க்கு கொரோனா உறுதியானால் முக கவசம் அணிந்து கொள்ளுமாறும் குழந்தையை தூக்கும் முன் கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

    * நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படவேண்டும். நுழைவுப்பகுதியில் உடல்வெப்ப பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    * கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீண்டகால நோய் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

    * கொரோனா பரவலுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * பரிசோதனையை பொறுத்தமட்டில் முதலில் துரித பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அதன்பிறகு ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * துரித பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்த போதிலும் நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் மறுபடியும் துரித பரிசோதனையோ அல்லது ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையோ செய்து கொள்ள வேண்டும்.

    * ஆபரேஷன் செய்து கொள்ள இருக்கும் நபர்கள், நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆபரேஷனுக்கு முன்பு 14 நாட்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    * கடந்த 14 நாட்களில் வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    மேற்கண்டவை உள்ளிட்ட பல அம்சங்கள் அதில் இடம்பெற்று உள்ளன.
    இன்றைய தினம் தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு கடன்களை அள்ளி தருகின்றன.
    தொழில் வளர்ச்சியில் வங்கிக்கடன் பெரும் பங்கு வகிக்கிறது. இன்றைய தினம் தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு கடன்களை அள்ளி தருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கொடுக்கப்படாத கடன் பயனற்றதாகி விடும். இதை அனைத்து வங்கி மேலாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடன் பெற வருபவரிடம் தவணை முறையில் சந்தேகங்களை எழுப்பாமல் ஒரே நேரத்தில் அலுவல்களை முடிக்க வேண்டும்.

    வங்கியில் நுழைந்ததும் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கிக்கடன் பெறுவது இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும். வங்கிகள் பல்வேறு திட்டங்களை தீட்டினாலும், அதனை செயல்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் கிளை மேலாளர்கள் ஆவர். இவர்கள் தங்கள் செயல்பாட்டு திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    வங்கிகளில் வேளாண் வளர்ச்சி அதிகாரி மற்றும் தொழில் வளர்ச்சி அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து நிறுவனங்களை தேடிச்சென்று தொழில்கடன்களை வழங்கவேண்டும். கடன் கோருபவரின் தொழில் திட்டம் பயனுடையது? தொழில் திட்டம் பயனுடையதா? தொழில்நுட்ப ரீதியாக வெற்றி பெறக்கூடியதா? என்பதை கண்டறிந்து கடன்களை உடனடியாக ஒதுக்க வேண்டும். சிலர் கடன் கிடைத்தவுடன் ஏ.சி., கார், அலுவலக தளவாடங்கள் என ஆடம்பர செலவுகளை மேற்கொள்கிறார்கள்.

    இதனால் கடன் பெறுவதற்கான நோக்கம் சிதைந்து தொழில் நசிந்து விடுகிறது. இதனை தவிர்த்தால், கடன் தொகையை திருப்பி செலுத்தும் அளவிற்கு தொழில் வெற்றியடையும். கடன் தொகையை முறையாக திருப்பி செலுத்தினால் தொடர்ந்து வங்கிகள் கடன் அளிக்கும். பணப்பற்றாக்குறை, நிர்வாக சீர்கேடு, தொழில்நுட்பத்தில் குளறுபடி, நடைமுறை சிக்கல்கள், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் எந்த தொழில் நிறுவனமும் தோல்வி அடையாது. கடன் தொகையை திருப்பி செலுத்துவதில் சிக்கலா? உடனடியாக வங்கி மேலாளரை அணுகி விளக்கம் அளிக்க வேண்டும்.

    மருத்துவர், வழக்கறிஞரிடம் வெளிப்படையாக பேசுவது போல், வங்கி மேலாளரிடமும் வெளிப்படையாக சிக்கலை விவாதியுங்கள். வங்கி உங்களுக்கு உதவ முன்வரலாம். ஆனால் வங்கிகளிடம் இருந்து கண்மறைவாய் ஒளியும்போது தான் வங்கி கோபமடைகிறது. வங்கி மேலாளருக்கும், கடனாளிக்கும் இடையே சரியான புரிந்துணர்வு இருக்க வேண்டும். உண்மை பேசி, வெளிப்படையாக சிக்கலை அணுகினால் இரண்டாவது முறையும் கடன் அளிக்க வங்கிகள் தயாராக இருக்கின்றன. தொழிலில் லாபம் சம்பாதித்தாலும் சிலர் கடன் தொகையை ஏய்க்க முயற்சி செய்து வருகிறார்கள். இதை தவிர்க்க வேண்டும்.

    வங்கிகளில் விவசாய கடன்களிலும் புது நடைமுறையை கடைப்பிடிக்கலாம். கடன் தொகையை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக முதல் பயிர் தோல்வி அடைந்தால், இரண்டாவது பயிருக்கு கடன் அளிக்கலாம். அதன் மூலம் சிக்கலில் இருந்து விடுபடலாம் அல்லவா?. விவசாயிகளின் சிக்கலை தீர்க்க வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டுமே தவிர, தற்காலிக தீர்வுகளை தள்ளுபடி என்ற போர்வையில் தரக்கூடாது. இதனால் வேளாண்மை மட்டுமல்ல, விவசாயிகளும் பயனடைவர். அது மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு கல்வி அறிவு மிகவும் முக்கியம் ஆகும். “கடன் கொடுத்த வங்கியும் கடனை மறந்து விடுகிறது. கடனாளிகளும் கடனை மறந்து விடுகிறார்கள். கவனிக்காத பயிரும் பாழ், கேட்காத கடனும் பாழ்” என ஒரு பழமொழி உண்டு.

    கடன்களை வழங்குவதில் தனியார் வங்கிகள் கடைபிடிக்கும் நடைமுறைகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடைபிடிக்கலாம். ஆனால் கடன் தொகையை வசூலிப்பதில் அவர்களின் நடைமுறையை பின்பற்ற கூடாது. கடன்களை வழங்குவதற்கான நடைமுறையை மேலும் எளிமையாக்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சிக்கு கடன்களுக்கான வட்டியும் குறைவாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

    ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சியை அடைய வேண்டுமானால், தொழில், விவசாய மற்றும் சிறுகடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக குறைக்க வேண்டும். அதே போல் வைப்பு நிதிகளுக்கும் வட்டிவிகிதத்தை குறைக்க வேண்டும். தற்போது தொழில், விவசாய கடன்களில் விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடன் கொடுத்தல், வைப்பு நிதி பெறுதல் ஆகியவற்றின் மீதான வட்டியில் வங்கிகளுக்கு 3 சதவீதம் நிகர லாபம் இருந்தால் மட்டுமே வங்கி நிர்வாகம் சீராக அமையும்.

    கடனுக்கான வட்டி குறைவாக இருந்தால் கடன் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மறைமுகமாக நாட்டின் வளர்ச்சி உயர்ந்துகொண்டே இருக்கும். கடன் பெறுபவர்களும் முறையாக கடன் தொகையை திரும்ப செலுத்தினால் மீண்டும், மீண்டும் கடன் பெற்று தொழிலை பெருக்கலாம்.

    எனவே, வங்கியாளர்கள் மற்றும் கடன்பெறுவோர் இணைந்து செயல்படவேண்டிய காலகட்டத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். வங்கிகள் அணுகமுடியாத இடம் அல்ல. அது நம்முடைய தாய் வீடு என்ற உணர்வை ஏற்படுத்தவும், நண்பர்களிடம் கடன் கேட்பது போல் அவர்களை அணுகலாம்.
    இன்னும் எத்தனை மாதங்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டியது இருக்கும்? என்பது குறித்து மதுரை மருத்துவ அதிகாரி விளக்கம் அளித்தார்.
    ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதனால் பல மாதங்களுக்கு பிறகு மக்களின் இயல்பு வாழ்க்கையும் வேகமாக திரும்பி வருகிறது. இருப்பினும் மக்களுக்கு கொரோனா வந்து விடுமோ? என்ற அச்ச உணர்வு இருக்கத்தான் செய்கிறது. கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இதனால், தலைக்கவசம் போன்று உயிர்கவசமாக முகக்கவசமும் மாறி இருக்கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மதுரையில் கொரோனா இன்னும் முழுமையாக முடிந்துவிடவில்லை. இருப்பினும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். இதனால், எல்லா கடைகளிலும் விற்பனை களை கட்டி இருக்கிறது. நெரிசல் காரணமாக சிக்னல்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் மதுரை மீண்டும் வாகன நெரிசல் மதுரையாக மாறிவிட்டது.

    இந்த நெரிசல்தான் கொரோனா வைரசுக்கு மிகவும் பிடித்தமானது. வெளியில் செல்வோரில் ஒரு பகுதியினர் முகக்கவசம் அணிவது கிடையாது.

    சிலர் அணிந்திருக்கின்றனர், அதுவும் சரியாக அணிவதில்லை. சிலர் முகக்கவசத்தை கழற்றி விட்டு பொது இடங்களில் தும்முகின்றனர். இக்கட்டான காலகட்டத்தில் மக்கள் இதுபோல் அலட்சியம் காட்டக்கூடாது. அலட்சியம் காட்டினால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும்.

    நாம் அணியும் முகக்கவசம் கிழிந்து இருக்கக்கூடாது. மூக்கு, வாய்ப்பகுதி சரியாக மூடப்பட்டிருக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் முகக்கவசம் என்றால் அதனை குப்பை தொட்டியில் போடவேண்டும். துணி முகக்கவசம் என்றால் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த பின்னர் அதனை நன்றாக சோப்பு நீரில் அலச வேண்டும்.

    ஒருவர் குறைந்தபட்சம் 4 முகக்கவசங்களை வைத்து கொண்டு சுழற்சி முறையில் அதனை பயன்படுத்த வேண்டும். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் என்.95 மாஸ்க், சர்ஜிக்கல் மாஸ்க் ஆகியவற்றை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும். நம்மையும் பிறரையும் காப்பதற்கு முகக்கவசம் அணிவதே சிறந்த வழி.

    குறைந்தபட்சம் இன்னும் 5 மாதங்களுக்கு முகக்கவசம் அணிந்தபடி வெளியே சென்று வருவது நல்லது. பெரும்பாலும் குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்லக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ‘லெக்கிங்ஸ்’ பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை உபயோகிப்பது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.
    ‘ஏன்.. எப்போது பார்த்தாலும் ‘லெக்கிங்ஸ் அணிந்து வருகிறாய்?’ என்று சில பெண்களிடம் கேட்டால், ‘என் ‘வார்ட்ரோப்’பில் லெக்கிங்ஸ் மட்டுமே இருக்கிறது’ என்று பதில் சொல்லும் நிலை இருந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு ‘லெக்கிங்ஸ்’ பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை இளம் பெண்களிடம் மட்டுமே மவுசு பெற்றிருந்த இந்த ஆடை, தற்போது நடுத்தர வயது பெண்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிடுகிறது.

    லெக்கிங்ஸ் மேற்கத்திய நாட்டு பெண்களின் விருப்ப உடை. வருடத்தின் பெரும்பகுதி நாட்களை குளிரில் செலவிடும் அவர்கள் தங்கள் சருமத்தில் சூட்டை தக்கவைத்துக் கொள்வதற்காக லெக்கிங்சை அணிந்து வருகிறார்கள். உடற்பயிற்சிக்கும் அது ஏற்ற உடையாக கருதப்பட்டதால், எல்லா நாட்டு பெண்களும் அதனை விரும்பத் தொடங்கியதோடு எல்லா காலநிலையிலும், எப்போதும் அணிந்துகொண்டிருக்கிறார்கள். உடலோடு ஒட்டி இருப்பதால் பயணத்திற்கு ஏற்றதாகவும் பெண்கள் இதனை கருதுகிறார்கள். ‘பிட்-இன்-ஷேப்’ என்பது லெக்கிங்சின் அடிப்படையான விஷயமாக இருப்பதால், இளம்பெண்களின் அத்தியாவசிய தேர்வாகிவிட்டது.

    கணுக்கால் வரையுள்ள லெக்கிங்ஸ் அதிக அளவில் விற்பனையானாலும், கால்களில் பாதிவரை (அதாவது மூட்டுவரை) உள்ளவைகளும் பெண்களை கவஇரத்தான் செய்கின்றன. ‘ஸ்பான்டெக்ஸ்’, அதாவது ‘லைக்ரா’ என்ற பாலியூரித்தின் இழைகளில் லெக்கிங்ஸ் தயாராகிறது. இது நெகிழ்வுத்தன்மை (எலாஸ்டிக்) கொண்டது. ஐந்து மடங்கு அளவுக்கு நெகிழ்வதோடு மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். நைலான், காட்டன், சில்க், கம்பளி போன்றவைகளில் ஏதாவது ஒன்றில் ஸ்பான்டெக்ஸ் இழைகளை சேர்த்து லெக்கிங்ஸ் தயாராகிறது.

    பெண்களின் கால் வடிவமைப்பை அப்படியே எடுத்துக்காட்டும் தன்மையை அது கொண்டிருப்பதால், அவ்வப்போது ‘லெக்கிங்சை’ சுற்றி கவர்ச்சியான விவாதங்களும் தோன்றுகின்றன. ஆனால் இந்த கோடைகாலத்தில் இதனை உபயோகிப்பது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.

    கோடைகாலத்தில் பெண்களுக்கு அதிகம் வியர்க்கும். வியர்வையை ஓரளவு உறிஞ்சி எடுக்கும் தன்மை லெக்கிங்ஸ்க்கு இருந்தாலும், அது அதிக நேரம் உடலை இறுக்கிக்கொண்டிருப்பது, காற்றை சருமத்தில் புகவிடாமல் தடுத்துவிடுகிறது. இதனால் கால் களின் இடுக்குப்பகுதிகளில் வியர்வை தங்கி, பூஞ்சான் உருவாகும். இத்தகைய ‘பங்கஸ்’க்கு சிகிச்சை அளிக்கும்போது அந்த பகுதியில் காற்று பட வேண்டும் என்பது மிக அவசியமான ஒன்றாகும்.

    பெண்கள் கால் இடுக்குப் பகுதியில் ‘பங்கஸ்’ ஏற்படுவதை தவிர்க்க தொடர்ச்சியாக இதனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது பயன்படுத்தினாலும் பெண்கள் வீட்டிற்கோ, ஆஸ்டலுக்கோ திரும்பிய பிறகாவது சருமத்தில் காற்றுபடும்படியான தளர்வான ஆடைகளை அணியவேண்டும்.

    லெக்கிங்ஸ் தனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று கருதும் பெண்கள், அதனை தேர்ந் தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். பருத்தி இழைகள் சேர்த்தவைகளை தேர்ந்தெடுங்கள். இடுப்பு, பின்பகுதி, கால்கள் போன்றவைகளின் அளவுக்கு தக்கபடியானதை வாங்குவது நல்லது. குண்டான உடல்வாகு கொண்டவர்கள் அதிக இறுக்கம் கொண்ட லெக்கிங்சை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் நரம்பு இறுக்கம், சரும பாதிப்பு, தசைவலி போன்றவை தோன்றும்.

    பெண்களில் சிலர் ஜீன்ஸ் துணியில் தயார் செய்யப்படும் ‘லெக்கிங்ஸ்’ வகையான ‘ஜெக்கிங்ஸ்’ அணிகிறார்கள். முடிந்த அளவு அதனை தவிர்க்கவேண்டும். இது பல்வேறுவிதமான ஆரோக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும். எந்த வகையான ‘லெக்கிங்ஸ்’ ஆக இருந்தாலும் அதனை அடிக்கடி துவைத்து நன்றாக உலரவைத்து, குறிப்பிட்ட நேரம் மட்டும் அணிந்து கொள்ள பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அதுதான் உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

    இறுகிய ஜீன்ஸ் அணிவதும் பெண்களின் உடலுக்கு ஏற்றதல்ல. அது அவர்களது இனப்பெருக்கத்திறனை பாதிக்கும். வியர்வை உறிஞ்சப்படாததால் பூஞ்சை தொற்று ஏற்படுவதும் அதிகரிக்கும். வளரிளம் பருவ பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால், அது அவர்களது உடல் வளர்ச்சிக்கே கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். நாள் முழுவதும் தொடர்ச்சியாக அதை அணிவதை தவிர்ப்பதோடு அவ்வப்போது துவைத்து, உடுத்தவும் பழகிக்கொள்ளுங்கள். ஜீன்ஸ், லெக்கிங்ஸ் இருவகை ஆடை களையும் துவைப்பதிலும் கவனம் தேவை. வாஷிங் மெஷினில் இவைகளை போட்டு துவைக்கும்போது அவைகளில் இருக்கும் சோப் துகள்கள் முழுவதும் நீங்காது. முழுவதும் நீங்காத நிலையில் உள்ள ஆடைகளை உடுத்துவது நல்லதல்ல. அதனால் ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்றவைகளை வாஷிங் மெஷின் அலசிய பின்பு, மீண்டும் வெளியே எடுத்து இருமுறை நன்றாக தண்ணீரில் அலசி, உலர வைத்து பயன்படுத்துங்கள்.
    ரோஜா மலர்கள் கூந்தலை அலங்கரித்து அழகை ஆராதிப்பதோடு அல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
    ரோஜா மலர்கள் கூந்தலை அலங்கரித்து அழகை ஆராதிப்பதோடு அல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ரோஜாவின் அழகும், மணமும் மனதிற்கு உற்சாகம் தரும். நோய் தொற்றுக்களில் இருந்தும் பாதுகாக்கும். மலச்சிக்கல், கருவளையம், மாதவிடாய் போன்ற பிரச்சினைகளை சமாளிக்கவும் உதவும். சிவப்பு ரோஜா இதழ்களில் உள்ளடங்கி இருக்கும் ஐந்து ஆரோக்கிய நன்மைகள்:

    ரோஜா இதழ்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினையை தவிர்க்கலாம். ரோஜா இதழ்கள் சிலவற்றை ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். இரவு தூங்க செல்லும்போது அதனை பாலுடன் கலந்து பருகவும். காலையில் எழும்போது வயிறு இதமாக இருக்கும். தொடர்ந்து சில நாட்கள் ரோஜா இதழ்கள் கலந்த பால் பருகிவந்தால் மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம்.

    சிலர் சிறுநீர் பாதையில் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவார்கள். ரோஜா இதழ்கள், பாக்டீரியா நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. யோனி அல்லது சிறுநீர் பாதையில் படிந்திருக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி நோய் தொற்று பரவாமல் குணப்படுத்த உதவும். ரோஜா இதழ்களை கொதிக்கும் நீரில் வேகவைத்து வடிகட்டி பருகலாம்.

    சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. சில சமயங்களில் முன்கூட்டியோ அல்லது தாமதமாகவோ மாதவிடாய் சுழற்சி இருந்து கொண்டிருக்கும். மாதவிடாய் செயல்முறையை சீராக்கி இயல்பு நிலையை தக்கவைப்பதற்கு ரோஜா இதழ்கள் துணைபுரியும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்கவும் உதவும். தினமும் காலையிலும், மாலையிலும் ரோஜா இதழ்கள் சிலவற்றை சாப்பிட்டு வந்தால் போதும்.

    கண்களுக்குக் கீழே தோன்றும் கருவளையங்களால் அவதிப்படுபவர்களுக்கும் ரோஜா இதழ்கள் நன்மை பயக்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி சிறந்த ஆக்சிஜனேற்றியை போல் செயல்படக்கூடியது. கண்களில் படர்ந்திருக்கும் கருவளையங்களை குணப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றும். ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து பசைபோல் குழப்பி கருவளையங்கள் மீது தடவி அரைமணி நேரம் உலர வைத்துவிட்டு கழுவலாம். ரோஜா இதழ்களை அரைத்து பாலில் கலந்து முகத்திலும் தடவலாம். சருமம் பளிச்சிடும்.

    ரோஜா இதழ்களை உட்கொள்வதன் மூலம் சளி, இருமல் போன்ற பருவகால நோய் தொற்றுகளை தவிர்க்கலாம். ரோஜா இதழ்களை நன்றாக கழுவி தினமும் சாப்பிடலாம். மில்க் ஷேக்கில் கலந்தும் பருகலாம்.
    இந்த ரசம் குமட்டல், வாந்தி, சோர்வு, மயக்கத்தைப் போக்கும். பசியைத் தூண்டும். உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    வேப்பம்பூ - 2 டேபிள்ஸ்பூன், 
    காய்ந்த மிளகாய் - 4, 
    புளி, துவரம் பருப்பு - தலா 100 கிராம், 
    கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, 
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:  

    துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். 

    புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். 

    மஞ்சள்தூள் மற்றும் வேப்பம்பூவைச் சேர்த்து வறுக்கவும். 

    இதில், கரைத்த புளியை ஊற்றி, கொதிக்கவிடவும். 

    வேகவைத்த துவரம்பருப்பில், தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும். 

    பொங்கி வரும்போது, பெருங்காயத்தூளைச் சேர்த்து இறக்கவும். 

    கடைசியில், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவவும். 

    சூப்பரான வேப்பம்பூ பருப்பு ரசம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டில் இருந்து வேலை செய்வது தவிர்க்கமுடியாத நிலையில் பல நிறுவனங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி இருக்கின்றன.
    கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் நெருக்கடி காரணமாக, வீடுகளில் இருந்தே வேலை பார்க்க வேண்டிய சூழல் தவிர்க்கமுடியாததாகி விட்டது. ஐ.டி.துறை நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் பெரும்பாலானோரை வீடுகளில் இருந்தே பணி செய்வதற்கு அனுமதித்து இருக்கின்றன. இந்த சூழலில் வீடுகளில் இருந்தே வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் வீட்டில் இருந்து பணி செய்யும் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்திருப்பதும், ஏராளமான பெண்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. டெல்லி, பெங்களூரு, சென்னை, மும்பை, ஐதராபாத், புனே உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.

    இது குறித்து பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம் ஒன்றின் தலைவர் நேகா கூறுகையில், “வீட்டில் இருந்து வேலை செய்வது புதிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது. இது பெண்களுக்கு சாதகமான அம்சமாகவே இருக்கிறது. தங்கள் தொழில் வாழ்க்கையை தொடங்குவதற்கு நிறைய பெண்களுக்கு இந்த காலகட்டம் வழிவகை செய்திருக்கிறது. திருமணம் காரணமாகவோ, குழந்தை பிறப்புக்கு பிறகோ, குடும்ப சூழல் காரணமாகவோ வேலையை கைவிட்ட பெண்கள் மீண்டும் வேலைவாய்ப்பை பெறும் எண்ணிக்கையும் ஆச்சரியப்படும் வகையில் உயர்ந்திருக்கிறது” என்கிறார்.

    வீட்டில் இருந்து வேலை செய்வது தவிர்க்கமுடியாத நிலையில் பல நிறுவனங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி இருக்கின்றன. கல்வி, ஐ.டி. துறை, இணைய தளம், ஆன்லைன் தொழில் தளமான இ-காமர்ஸ், டெலி காலிங், வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட துறைகளில் பெண் தொழில் வல்லுனர்களுக்கு வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. கடந்த ஆண்டை ஒப் பிடும்போது வேலை தேடுபவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழல் பெண்களுக்கு சாதகமாகவும் இருக்கும் என்பதும் பல நிறுவனங்களின் கருத்தாக இருக்கிறது.
    பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சுபவர்கள் பெரும்பாலும் இடதுபுற தோளில்தான் குழந்தைகளை அரவணைப்பார்கள். குழந்தைகளும் அதைத்தான் விரும்பும்.
    பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சு பவர்கள் பெரும்பாலும் இடதுபுற தோளில்தான் குழந்தைகளை அரவணைப்பார்கள். தாயும் குழந்தையை இடது புற தோள்பட்டையில்தான் வைத்திருப்பார். குழந்தைகளும் அதைத்தான் விரும்பும். குழந்தைகளை அப்படி இடதுபுறத்தில் தூக்கி வைப்பவர்கள் பெரும்பாலும் வலது கை பழக்கம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தையை தூக்குவதற்கு வலது கையை பயன்படுத்தினாலும் வலது தோள்பட்டையில் அரவணைப்பதில்லை. அது குழந்தையை வைத்திருப்பதற்கு சவுகரியமாக இருக்காது என்று கருதினாலும் அறிவியல் ரீதியாக அதற்கு காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது.

    1960-ம் ஆண்டிலேயே ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றிய ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். 40 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 72 சதவீதம் பேர் இடது தோள்பட்டையில்தான் குழந்தைகளை வைத்திருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வலது கை பழக்கம் கொண்டவர்கள். அவர்களுடைய மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்ததில் அது உணர்வு ரீதியான பந்தத்தை வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டது. கர்ப்ப காலத்திலேயே பாதுகாப்பான மற்றும் உணர்வு ரீதியான தொடர்பை தாய்க்கும், சேய்க்கும் இடையே உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிப்பதும் தெரியவந்துள்ளது.

    அதாவது இதயம் உடலின் இடது பகுதியில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தாயின் இதயத் துடிப்பு தெரியும். அந்த துடிப்புடன் நெருக்கமாக இருக்க விரும்பும். குழந்தை அழும்போது தாய் தூக்கி இடது பக்கத்தில் வைக்கும்போது சில நிமிடங்களில் அமைதியாகி விடும். இடது தோள்பட்டையில் சிறிது நேரம் வைத்திருந்தால் தூங்கியும் விடும். தாயின் அரவணைப்பில் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளும். தாயின் உணர்வுகளையும், சமிக்ஞைகளையும் புரிந்து கொள்ளும். அதுவே குழந்தையின் மொழி சமிக்ஞைக்கும் அடித்தளம் அமைத்து கொடுக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
    உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. உலர் பழங்களை பழக்கமாகக் கொண்டால் உடலில் சக்தி அதிகரிக்கும். சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம்.
    உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச்செய்து, உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள்கெடாமல் இருக்கும். உலர்த்துவதன் மூலம் ஒரு பருவ காலத்தின் பழங்களை மற்றொரு பருவ காலத்தில் உண்ண முடிகிறது. உலர் பழங்களின் சுவையும், மணமும் வெகு நாட்களுக்கு இருக்கும்.

    உலர் பழங்களுக்கு கலோரிகள் அதிகம். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன. உலர் பழங்கள் வெகு எளிதில் செரிமானமாகக்கூடியவை. ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. பலவீனமானவர்கள் உலர் பழங்கள் உண்டால் விரைவில் இயல்பான ஆரோக்கியத்தை அடையலாம்.

    உலர் பழங்களில் உள்ள இனிப்பு தனித்துவமான சுவை கொண்டது. நாவிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது. உலர் பழங்களை பழக்கமாகக் கொண்டால் உடலில் சக்தி அதிகரிக்கும். உலர் பழங்கள் தோல் சுருக்கங்களை நீக்கிச் சருமத்தை அழகாக்கக்கூடியவை. மலச்சிக்கலை போக்க வல்லது. அதுமட்டுமல்ல நினைவாற்றலையும் பெருக்கும். இதயத்திற்கும் நல்லது. உலர்ந்த திராட்சை புரதச் சத்தும் நிறைந்தது. வேர்க்கடலையில் நார்ச் சத்தும் பேரீச்சம்பழத்தில் தாதுச் சத்தும் உள்ளன. இவ்வளவு சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம்.
    தம்பதிகளிடையே உறவு மேம்பட்டால்தான் மோதல் இல்லாமல் இருக்கும். உறவு மேம்பட, நீங்கள் உங்கள் கணவர் மனதில் எந்த அளவுக்கு இடம் பிடித்திருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வது அவசியம்.
    கொரோனாவால் அங்கே இங்கே அசைய முடியாமல் எல்லோரும் ஒன்றாக வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்படும் மோதல் உலகம் முழுவதுமாக அதிகரித்திருப்பதாக தகவல். தம்பதிகளிடையே உறவு மேம்பட்டால்தான் மோதல் இல்லாமல் இருக்கும். உறவு மேம்பட, நீங்கள் உங்கள் கணவர் மனதில் எந்த அளவுக்கு இடம் பிடித்திருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

    உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை அளவிட இதோ இங்கே தரப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:-

    நீங்கள் போக வேண்டும் என்று விரும்பிய இடத்துக்கு, ஒரு வார கால சுற்றுலா செல்ல உங்கள் தோழிகள் திட்டமிடுகிறார்கள். ஆனால் உங்கள் கணவருக்கு அதில் விருப்பமில்லை. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

    அ. ‘ஒரு வார காலமா? அவ்வளவு நாட்கள் ஒதுக்க முடியாது. எங்கள் இருவருக்குமே அது சாத்தியமில்லை’ என்று நாசுக்காக ஒதுங்கிவிடுவேன்.

    ஆ. உடனடியாக சுற்றுலாவுக்கு ஒப்புக்கொள்வதோடு, கணவரையும் சுற்றுலாவுக்கு வர ஊக்கப்படுத்துவேன்.

    இ. கணவர் வந்தாலும், வராவிட்டாலும் நான் மட்டும் தனியாக சுற்றுலா கிளம்பிவிடுவேன்.

    உங்கள் உறவினர்கள், நண்பர்கள் கூடும் இடத்தில் உங்களைவிட உங்கள் கணவருக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதை விரும்புவீர்களா?

    அ. விரும்பமாட்டேன். ‘என்னைவிட உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பது எனக்கு பிடிக்கவில்லை’ என்று கூறிவிடுவேன்.

    ஆ. என் கணவருக்கு அங்கு எவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கிறது என்று கவனிப்பேன். ஆனால் அவசியப்பட்டால் ஒழிய அதில் தலையிட மாட்டேன்.

    இ. இதற்கெல்லாம் அலட்டிக்கொள்கிற ஆள் நானில்லை. கணவருக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தால் கிடைக்கட்டும் என்று விட்டுவிடுவேன்.

    உங்கள் உறவினர்களில் எத்தனை பேருக்கு உங்கள் கணவரைப் பற்றி நன்கு தெரியும்?

    அ. அனைவருக்குமே அவரைப் பற்றி தெரியும்.

    ஆ. எனது குடும்பத்தினருக்கும், சில நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

    இ. என் கணவரைப் பற்றி முழுமையாக புரிந்தவர்கள் யாரும் இல்லை.

    உங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கு நெருக்கமானவர்களின் கருத்து என்ன?

    அ. ‘பொருத்தமான துணை’ என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

    ஆ. ‘சுதந்திர விரும்பி’ என்று பலர் கூறியிருக்கிறார்கள்.

    இ. வெளியே சொல்கிற மாதிரி அதில் திருப்தியான விஷயம் இல்லை.

    நீங்கள் ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டால், அது உங்கள் கணவருக்கும் சேர்த்துதான் என்று நினைப்பீர்களா?

    அ. நிச்சயமாக. நான் அப்படித்தான் நினைப்பேன்.

    ஆ. மிகவும் நெருக்கமானவர்கள் விருந்துக்கு அழைத்தால், அதை இருவருக்கும் சேர்த்துத்தான் என்று நினைத்துக்கொள்வேன். சும்மா பெயரளவுக்கு அழைக்கிறார்கள் என்றால், இரண்டு பேரில் யார் சொல்ல வேண்டும் என்று தெளிவுபடுத்திக்கொள்வேன்.

    இ. கணவரை அழைத்துவரும்படி கூறாவிட்டால், நான் மட்டுமே செல்வேன்.

    உங்களின் பள்ளிக்காலத் தோழர்கள் அல்லது தோழிகள் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அந்த சந்திப்புக்கு உங்கள் கணவரையும் நீங்கள் அழைத்துச் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

    அ. எனது பள்ளிக்காலத் தோழர்கள், தோழிகளை எனது கணவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசைதான் அதற்கான காரணமாக இருக்கும்.

    ஆ. பள்ளிக்காலத் தோழர்கள் அல்லது தோழிகளில் எத்தனை பேர் ஜோடியை அழைத்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் முடிவெடுப்பேன். எனது பள்ளிக்கால தோழமை பற்றி எனது கணவர் தெரிந்து கொள்ளவேண்டியது அவ்வளவு அவசியமில்லை என்று நினைப்பேன்.

    இ. கணவர் தேவையில்லை. தனியாகப் போனால்தான் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்துவிடுவேன்.

    உங்கள் கணவரோடு நீங்கள் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்று இப்போது தெரிந்துகொள்ளலாம்..

    பதிலில் அதிகமாக ‘அ’ என்றால்:- நிச்சயமாக இந்த கொரோனா காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் உங்களுக்குள் மோதல் வராது. நீங்கள் நெருக்கமான ஜோடிதான். அதற்காக நீங்கள் சந்தோஷப்படலாம். இன்றைய உங்கள் வாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியாகவே இருக்கும். ஆனால் இந்த நெருக்கத்தைத் தாண்டி இருவருக்கும் சில ஆசைகள் இருக்கும். அதை மனம்விட்டுப்பேசி இருவரும் நிறைவேற்றிக்கொள்ள முன்வர வேண்டும்.

    அதிகமாக ‘ஆ’ என்றால்:- உங்கள் உறவில் நல்ல சமநிலை நிலவுகிறது. இதே நிலையைத் தொடர்ந்து பராமரிக்கலாம். அவ்வப்போது கணவ ரின் மனநிலையை உணர்ந்து, அவருக்கு தக்கபடி உங்களிடமும் தொடர்ந்து நல்ல மாற்றங்களை உருவாக்கி, இதே புரிதலை நிரந்தரமாக்குங்கள். இந்த கொரோனா காலம் உங்களுக்குள் நிம்மதியைத்தரும்.

    அதிகமாக ‘இ’ என்றால்:- நீங்கள் ஒரு தனிமை விரும்பி. எல்லாவற்றுக்கும் உங்கள் கணவரைப் பிடித்துக் கொண்டு தொங்காதது நல்ல விஷயம்தான். ஆனால் திருமணத்துக்குப் பின்னும் தனிநபராக நீங்கள் விலகியே இருப்பது சரிதானா என்று யோசிக்க வேண்டும். இந்த கொரோனா காலத்தில் உங்களுக்குள் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. உறவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.
    ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள்.
    மனிதனின் நாகரீகம் முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக நாம் உண்ணும் உணவில் பலவிதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதன் விளைவு ஆண்மை குறைவு. பல குடும்பங்கள் குழந்தை இல்லாமல் அவதிபடுகின்றனர். எனவே பிறகும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தாலுக் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வதே சிறந்தது. 

    எனினும் சிலர் தங்களுக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் என்று ஆசை படுவது உண்டு. அது போன்ற சமயங்களில் அவர்களது மனைவி அல்லது குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள்.

    வெளி நாடு நிறுவனம் ஒன்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களின் உடல் நிலையை ஆராய்ச்சி செய்து, ஆண் குழந்தை பிறப்பதற்கான 10 முக்கிய அறிகுறிகளை வெளியிட்டுள்ளது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவரது சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவர் ஆண் குழந்தையை சுமக்கிறார் என்று அர்த்தம். கர்ப்பமாக இருக்கும் பொது பெண்களின் மார்பகம் பெரிதாகும்.

    அதற்கு காரணம் குழந்தைக்கு தேவையான ஊட்டசத்துக்கள் சுரப்பதற்கு மார்பகங்கள் பெரிதாகும். வலது மார்பகம் இடது மார்பகத்தை விட பெரிதாக உள்ளதெனில் நீங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுக்க போகிறீர்கள். மேலும் கால் பாதங்கள் அதிக விறைப்புடனும், அதிக குளிர்ச்சியுடனும் இருந்தால் ஆண் குழந்தை பிறப்பது உறுதி. கர்ப்பமாக இருக்கும் பெண் இடது பக்கம் தூங்க விரும்பினால், அந்த பெண்ணனிற்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 

    பெண் கருவுற்றிருக்கும் போது கூந்தலின் வளர்ச்சி அதிகப்படியாக மற்றும் வேகமாகவும் இருந்தால் அந்த பெண் , ஆண் குழந்தையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பொதுவாகவே ஒரு பெண் கருத்தரித்திருந்தால் அந்த பெண்ணின் உடல் அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே !

    உங்களின் உடல் எடை சரிசமமாக உடலின் எல்லா பகுதிகளிலும் பரவியிருந்தால் நீங்கள் பெண் குழந்தையை கருவில் சுமப்பதாக அர்த்தம். இதுவே உங்களின் வயிற்று பகுதில் மட்டும் அதிகப் படியான சதை இருந்தால் நீங்கள் ஆண் குழந்தையை கருவில் சுமப்பதாக அர்த்தம்.

    உணவு கட்டுப்பாடுகளையும் சின்ன சின்ன யோகா பயிற்சிகளையும் ஓரிரு மாதங்கள் கடைபிடித்தால் கொரோனா தாக்கத்துக்கு பிறகு ஏற்படும் பிரச்சினைகளை நிச்சயமாக தவிர்க்க முடியும்.
    அட, என்னப்பா இது...? எங்கதான் ஓடி ஒளியுறது? என்ன பண்றது...? மாப்பு... ஒண்ணுமே புரியலையே...! என்றுதான் கிட்டத்தட்ட எல்லோருமே புலம்புறாங்க!

    கொரோனா வைரஸ் தாக்கி குணம் அடைந்தாலும் இனி பயமில்லை என்று இருக்க முடியாது. மீண்டும் சில நாட்கள் கழித்து வேறு விதமாக தனது வேலையை காட்ட தொடங்கி விடுகிறது. அதாவது கை, கால் மற்றும் மூளையின் ரத்த நாளங்களில் ரத்தத்தை உறைய வைத்து உறுப்புகளை செயல்படாமல் ஆக்கி விடுகிறது என்ற தகவல்தான் இப்போது உச்சகட்ட பீதியை உருவாக்கி உள்ளது.

    பத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்னையிலேயே இந்த மாதிரி தாக்குதலுக்கு உள்ளாகி இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    உலக அளவில் ஏராளமானவர்கள் கை, காலகளை இழந்தும், பக்கவாதத்தால் கை, கால்கள் செயலிழந்தும் வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே வந்த கொரோனாதான் போய்விட்டதே என்ற மெத்தனம் கூடாது என்பதுதான் மருத்துவ நிபுணர்கள் சொல்வது.

    ஆனால் நம் பாரம்பரிய வைத்திய முறையில் இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் வழிகள் இருக்கிறது என்கிறார். அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியை டாக்டர் தீபா!

    இது பற்றி டாக்டர் தீபா கூறியதாவது:-

    கொரோனா நோயாளிகளுக்கு இந்த மாதிரி ரத்த நாளங்களில் ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டிருப்பது உண்மைதான். அந்த மாதிரி ஒன்றிரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதற்காக கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்ட எல்லோரும் அச்சப்பட தேவையில்லை. நுரையீரல் அதிக அளவு பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் மீண்டவர்கள் மேலும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உடையவர்கள் ஒரு சிலருக்குத்தான் இந்த மாதிரி பிரச்சினை ஏற்படுகிறது.

    உடலுக்குள் எவ்வளவோ வேதி மாற்றங்கள் நிகழ்கின்றன. அதில் இரும்புசத்தை ரத்தத்தில் சீராக வைத்துக் கொள்வதும் ஒன்று. கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக இருப்பவர்களுக்கு இரும்புச் சத்து அதிகமாகி ரத்தத்தை உறைய வைக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் இது எல்லோரது உடலிலும் நிகழ்வதில்லை.

    இந்த பிரச்சினையை யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் உணவு முறைகளால் வராமல் தவிர்க்க முடியும்.

    உணவில் முடிந்தவரை அதிகமான நார்சத்துள்ள காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முளைகட்டிய பயிறு வகைகள், பசலைக்கீரை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது இரும்புசத்து அதிகமாவது தடுக்கப்படும்.

    சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் பசும்பால் மஞ்சள் பொடி போட்டு காய்ச்சி பருக வேண்டும். பாதாம், முந்திரி, வால்நட், அக்ரூட், உலர் திராட்சை போன்றவற்றை சாப்பிடலாம். பச்சை வேர்கடலை, ஊறவைத்த தேங்காய்பூ கலந்து சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தை தவிர்க்க வேண்டும்.

    முக்கியமாக தினமும் மூச்சு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    வாரம் ஒருமுறை ஜலநேத்தி செய்ய வேண்டும். இது மூக்கு, வாய், தொண்டை, வயிறு பகுதியை தூய்மை படுத்துவது.

    அதாவது வெது வெதுப்பான தண்ணீரில் கல் உப்பு போட்டு ஒரு மூக்கினுள் விட்டு மறு மூக்கு வழியாக வெளியேற்ற வேண்டும்.

    அதேபோல் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் மூக்கு, வாய், தொண்டை பகுதியில் படிந்திருக்கும் கோழை படிமத்தில் தங்கி இருக்கும் வைரஸ் வெளியேற்றப்படும்.

    மேலும் வயிறு நிரம்ப அதேபோல் உப்பு கலந்த தண்ணீரை குடித்து வாந்தி எடுக்க வேண்டும். அப்போது வயிற்றுக்குள் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். அல்சர் பாதிப்பு இருப்பவர்கள் இதை செய்யக்கூடாது.

    மஞ்சளில் இருக்கும் ‘குர்குமின்’ என்ற வேதி பொருள் ரத்தம் உறைவதை தடுக்கும். காலையில் நெல்லிக்காய் சாறு குடிப்பதும்,, மாலையில் அதிமதுரம், மஞ்சள், மிளகு, இஞ்சி கலந்த கசாயம் குடிப்பதும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கும். இயற்கையான எதிர்ப்பு சக்தியை தூண்டும் மூளையை சீராக செயல்பட வைக்கும்.

    இந்த மாதிரி உணவு கட்டுப்பாடுகளையும் சின்ன சின்ன யோகா பயிற்சிகளையும் ஓரிரு மாதங்கள் கடைபிடித்தால் கொரோனா தாக்கத்துக்கு பிறகு ஏற்படும் பிரச்சினைகளை நிச்சயமாக தவிர்க்க முடியும்.

    இவ்வாறு நம்பிக்கை தருகிறார் டாக்டர் தீபா.
    ×