என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    உடல் எடையை குறைக்க சப்பாத்தி சாப்பிடுபவர்கள் வெள்ளிரிக்காய் சேர்த்து செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். இன்று இந்த சப்பாத்தி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெள்ளரிக்காய் -   1
    கோதுமை மாவு - 1 கப்
    கொத்தமல்லி இலை - தேவையான அளவு
    பச்சை மிளகாய் - 3
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    வெள்ளரிக்காய் மசாலா ரொட்டி
     
    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, துருவிய வெள்ளரிக்காய், கொத்தமல்லி தழை, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போ சூடான ரொட்டியுடன் உங்க விருப்பத்துக்கேத்தபடி சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிடுங்க.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொரோனாவால் அரிய வகை நோய் சிறுவர்களை தாக்குவதாகவும், இதனால் பெற்றோர் விழிப்புடன் இருக்கும்படியும் டாக்டர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
    கொரோனா பாதிப்பில் இருந்து குணமான மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த 7 வயது சிறுவன் கடந்த 10-ந் தேதி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். அவனுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி பிரச்சினை இருந்தது. மேலும் அவனது இதய துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தம் குறைவானது. இதனால் அவனது உடல்நிலை மோசமானது.

    இதையடுத்து நடந்த சோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ‘‘ஹைப்பர் இன்பிலேமட்டரி சின்ட்ரோம்’’ என்ற அரியவகை நோய் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் மூலம் சிறுவன் அந்த பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளான்.

    இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘‘முதல் கட்ட சிகிச்சையின் போது சிறுவனின் உடல் சோடியம் குளோரைடு, ஆக்சிஜன், இருதய அழுத்தத்தை அதிகரிக்கும் பல்வேறு மருந்துகளை ஏற்று கொண்டது. அதன்பிறகு அவனுக்கு ஸ்டெராய்டு கொடுக்கப்பட்டது. எனினும் சிறுவனின் இருதயம், நுரையீரல், வயிறு, கல்லீரலில் பாதிப்புகள் இருந்தன. இறுதியில் சிறுவனுக்கு டோசிலிசுமாப் மருந்து செலுத்தப்பட்டது. அதன்பிறகு அவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது’’ என்றார்.

    வழக்கமாக இந்த அரிய வகை பாதிப்பு கொரோனாவால் சிறுவர்களை தாக்கி வருகிறது. எனவே சிறுவர்களை கொரோனா தாக்கும் போது பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த பாதிப்பை விரைவில் கண்டறிந்தால் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற முடியும் எனவும் டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.
    இந்திய குடிமகன் ஒவ்வொருவரது பண பரிவர்த்தனைகளும் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க உதவுவது பான் கார்டுதான்.
    பான் கார்டு ஏன் எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். பான் கார்டு குறித்து அறிந்தவர்கள் கூட அது வருமான வரி கணக்கு தேவைக்குத்தான் என்று நினைத்துக் கொள்கின்றனர். வரி கட்டாதவர்கள் நமக்கு அது எதற்கு என்று அதைப் பொருட்படுத்துவது இல்லை. ஆனால் இது வருவான வரி செலுத்துவதற்கான எண் மட்டுமல்ல, அல்லது வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மட்டும் தேவையான விஷயமும் கிடையாது. இந்திய குடிமகன் ஒவ்வொருவரது பண பரிவர்த்தனைகளும் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க உதவுவது பான் கார்டுதான்.

    நிரந்தர கணக்கு எண் கொண்ட பான் கார்டு 10 எழுத்துக்களை கொண்ட ஒரு குறியீடு. இந்த எண் நிரந்தரமானது. அடிக்கடி மாற்றத்தக்கது அல்ல. முகவரி மாறினாலோ அல்லது வேறு மாநிலத்திற்கு சென்றால்கூட இந்த எண்ணை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலும் பான் கார்டு அவசியம்.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.எஸ்.டி.எல். அமைப்பு இந்த பான் எண்ணை வழங்குகிறது. பான் கார்டு பயன்படுத்துவதன் மூலம் வங்கி, பணம், வரி பரிவர்த்தனைகள், கடன், முதலீடு, பண மதிப்பு கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் ஒரு கண்காணிப்பில் அரசு கொண்டு வருகிறது. இதன் மூலம் வரி ஏய்ப்பு மறைமுகமாக தடுக்கப்படுகிறது. தவிர இந்திய குடிமகன் என்பதற்கான அடையாள ஆவணமாகவும் பல இடங்களில் பான் கார்டு பயன்படுகிறது. தனிநபர் அல்லது நிறுவனம், குடும்ப அமைப்பு என யார் பெயருக்கு வேண்டுமானாலும் பான் கார்டு வாங்கலாம். ஆனால் ஒருவர் பெயரில் அல்லது ஒரு நிறுவனம் பெயரில் வாங்கப்பட்ட பான் கார்டை வேறொருவருக்கு மாற்ற முடியாது. பான் கார்டு வழங்கும் முறை மிக துல்லியமானது. தவறான தகவல்கள், ஆவணங்கள் கொடுத்து ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாக கருதப்படும்.

    பான் கார்டு வாங்கும் நடைமுறையும் எளிதானது. பான் எண் வாங்குவதற்கு என்று வயதுவரம்பு கிடையாது. வருமான வரி கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த நிறுவனத்திலும் பணியாற்ற வேண்டும் என்கிற தேவையும் இல்லை. ஆதார் அடையாள அட்டை போல, அங்கீகாரம் பெற்ற அரசின் அமைப்பு வழங்கும் வரிக்கணக்கு எண். பிறந்த குழந்தைக்குக்கூட பான் எண் வாங்க முடியும். குறிப்பிட்ட வயது வரை பெற்றோர் அல்லது பாதுகாவலர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
    கொரோனா பரவலை தடுப்பதில், ஹாண்ட் சானிடைசர் மற்றும் சோப்பு நீர் இரண்டில் எது சிறப்பாக செயல்படும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
    கொரோனா பரவல் அதிகரித்தாலும், ஒரு பக்கம் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது. மெதுவாக பல துறைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. எனவே கூடுதல் எச்சரிக்கை தேவை.

    சுத்தமாக இருப்பதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் தான், கொரோனாவில் இருந்து தப்பிக்க நமக்கு இருக்கும்  சிறந்த வழி என்று கூறலாம்.

    வெளியிடங்களுக்கு போக்கும் போது தொற்று பரவாமல் இருக்க, COVID-19 தொற்றிலிருந்து தப்பிக்க, நமது கைகளை அடிக்கடி, சோப்பு நீரினால் சுத்தம் செய்யுங்கள் அல்லது ஆல்கஹால் உள்ள சானிடைஸரை பயன்படுத்துங்கள் என அறிவுறுத்துகின்றனர்.

    சானிடைசர் vs சோப்பு நீர் இதில் எதை பயன்படுத்தலாம் என பார்க்கும் போது, நிச்சயம் சானிடைஸர் தான் வசதியானது. ஏனென்றால், தண்ணீர் இல்லாத இடத்திலும் நாம் கைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும். ஆனால், சோப்பு நீர் தான் சானிடைஸரை விட சிறந்தது என வல்லுநர்கள் கூறுகின்றனர். அது கைகளில் உள்ள கிருமிகளை அகற்றுவதோடு, கைகளில் உள்ள அசுத்தம், பிசுக்கு ஆகியவற்றையும் போக்குகிறது.

    சானிடைஸர் கொரோனா வைரஸை கொல்லும் என்றாலும், சருமத்தில் வியர்வை அல்லது ஈரம் இருந்தால், அது சனிடைஸரை நீர்த்து போக செய்வதால், அது திறன்பட செயல்படமால் போகும் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதோடு, சானிடைஸரில் உள்ள உட்பொருட்கள் சரியான அளவில் சேர்க்கபடவில்லை என்றாலும், அல்லது கலப்படம் உள்ள சானிடைஸர் என்றாலும் அது திறன்பட வேலை செய்யாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

    அதை மனதில் வைத்து பார்க்கும் போது, குறைந்தது 20 வினாடிகளுக்கு சோப்பு நீரினால் கைகளை கழுவது, தான் சிறந்த வழி என வல்லுநர்கள் நம்புகின்றனர்.
    திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது.
    இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பே மனம் விட்டு பேசும் சந்தர்ப்பங்கள் வாய்ப்பதால் மணமகனும், மணப்பெண்ணும் தங்கள் அபிலாஷைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். துணையின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகளையும் அறிந்து கொள்கிறார்கள். அதனால் திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் இடையே ஓரளவு பரஸ்பர புரிதல் உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது.

    தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறீர்களோ அதே அளவுக்கு பிடிக்காத விஷயங்களையும் எடுத்துக்கூறிவிட வேண்டும். பழக்கவழக்கங்கள், விருப்பு, வெறுப்புகளை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வது அவசியம். அது திருமணத்திற்கு பின்பு எழும் பிரச்சினைகள், நடைமுறை சிக்கல்களை எளிதாக தீர்ப்பதற்கு உதவும். சமையல், பயணம், படிப்பு போன்றவற்றில் இருந்து துணையின் வாழ்க்கை முறையை பற்றி அறியவும் முயற்சிக்கலாம்.

    திருமணத்திற்கு பிறகு மனைவி வேலைக்கு செல்கிறாரா? இல்லையா? என்பதையும் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திவிட வேண்டும். இந்த விஷயத்தில் துணை யின் விருப்பம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப முடிவு எடுக்கவேண்டும். அப்போதுதான் இருவருக்கும் இடையே தவறான புரிதல் ஏற்படாது.

    திருமணத்திற்கு பிறகு துணைக்காக உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். அது இருவரின் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். கூடுமானவரை இப்போது கடைப்பிடிக்கும் உணவுப்பழக்கத்தை தொடர்ந்து பின்பற்ற அனுமதிப்பதுதான் சரியானது. அன்பும், ஆரோக்கியமும் வேறுபட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். துணை, அசைவ பிரியராக இருந்தால் தான் விரும்பாவிட்டாலும் அவருக்கு பிடித்தமானதைவாங்கிக்கொடுப்பதுதான் சிறப்பானது. இதுபற்றி முன்கூட்டியே பேசி தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

    திருமணத்திற்கு முன்பு துணை நன்றாக சமையல் பழகிவிட்டாரா? என்பதை கேட்டறிந்து கொள்வதில் தவறில்லை. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல விரும்பும் பட்சத்தில் சமையல் வேலையில் சின்ன சின்ன உதவிகளை செய்வதற்கும் முன்வர வேண்டும். குறிப்பாக குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தில் பக்கபலமாக இருக்க வேண்டும். துணை ஒருபோதும் பசியுடன் இருப்பதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.

    திருமணத்திற்கு பிறகு நண்பர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழல் உண்டாகும். குறிப்பாக பெண்கள் ஆண் நண்பர்களிடம் இருந்து முழுவதுமாக விலக வேண்டிய நிர்ப்பந்தம் எழும். ஏனெனில் பெரும்பாலான கணவர்கள் அதை விரும்புவதில்லை. திருமணத்திற்கு முன்பே வருங்கால கணவரிடம் அதுபற்றி பேசிவிடுவது நல்லது. தோழமையை தொடரவிரும்பும் பட்சத்தில் துணையிடம் அதுபற்றி விவாதித்து விடுவது நல்லது.

    திருமணத்திற்கு பிறகு சிலர் குழந்தை பிறப்பை சில காலம் தள்ளிப்போட விரும்புவார்கள். இதுபற்றி இருவரும் மனம்விட்டு பேசிவிட வேண்டும். குழந்தை பிறப்பை தள்ளிப்போட விரும்பினால் எவ்வளவு காலம்? அதற்கான காரணம் பற்றியும் விவாதிக்க வேண்டியது அவசியம்.

    குழந்தை பெற்றெடுத்ததும் அவர்களுக்கான கல்வி, வளர்ப்பு பற்றிய செலவுகள் குறித்தும் திட்டமிட்டு செயல்படுவதும் முக்கியமானது.

    இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் வீட்டு வேலை சுமை பெண்கள் மீதுதான் விழும். திருமணத்திற்கு பிறகு வீட்டு வேலைகளுக்கு உதவியாக பணிப்பெண் தேவை என்றால் அதுபற்றி முன்கூட்டியே துணையிடம் பேசி விடுவது நல்லது.

    தற்போது அணியும் ஆடை கலாசாரத்தையே திருமணத்திற்கு பிறகும் பின்பற்ற நிறைய பெண்கள் விரும்புவார்கள். அதுபற்றி முன்கூட்டியே துணையிடம் பேசிவிடுவது நல்லது. துணை ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் உங்கள் விருப்பத்தை விளக்கி கூறுங்கள். மேற்கத்திய ஆடைகள் மீது மோகம் இருந்தால் அவற்றை கண்ணியமாக அணிவதை துணையிடம் தெளிவுபடுத்திவிடுங்கள்.

    பணப்புழக்கம் பெண்கள் விஷயத்தில் முக்கியமானது. திருமணத்திற்கு முன்பே நிதி நிலைமை பற்றி வெளிப்படையாக பேசிவிட்டால் திருமணத்திற்கு பிறகு தேவையற்ற செலவுகளை தவிர்த்துவிடலாம். இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் யார் எவ்வளவு செலவிட வேண்டும்? சேமிப்புக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பது பற்றி கலந்தாலோசித்துவிடுங்கள். ஏனெனில் பண விஷயம்தான் குடும்பத்தில் நிலவும் அதிக பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. 
    12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது.
    உலக நாடுகளையெல்லாம், உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து கதி கலங்க வைத்து வருகிறது. 2 கோடியே 32 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 8 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர். ஆனாலும் கொரோனாவில் மரணப்பசி தீரவில்லை. அதே வேளையில் இன்னும் அதை தடுத்து நிறுத்த தடுப்பூசியோ, சிகிச்சைக்கான மருந்துகளோ சந்தைக்கு வந்தபாடில்லை.

    ஆனால் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் இந்த புள்ளிவிவரங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கக்கூடும், போதுமான அளவுக்கு உலக நாடுகளில் பரிசோதனைகள் நடத்தப்படாததும், அறிகுறிகள் அற்று கொரோனாவால் பாதிப்பு ஏற்படுவதாலும், உண்மையான பாதிப்பு விவரம் இன்னும் தெரியவில்லை என்றே சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

    தற்போது கொரோனா தென்கொரியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் லெபனானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.

    இந்த நிலையில், 12 வயது மற்றும் அதற்கு அதிகமான வயது குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது.

    குறிப்பாக மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்துக்காவது இடைவெளி உத்தரவாதம் தர முடியாதபோது, கண்டிப்பாக கொரோனா பரவும் நிலை உள்ளதால் கண்டிப்பாக இந்த வயது குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டும்.

    6 முதல் 11 வயது குழந்தைகளை பொறுத்தமட்டில், அவர்கள் பகுதியில் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பதையும், முதியவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்களுடன் குழந்தைகள் தொடர்பில் இருக்கிற நிலை உள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. இத்தகைய குழந்தைகள் முக கவசத்தை அணிந்து கொள்ளவும், அகற்றவும் பெரியவர்கள் உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

    60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது அடிப்படை உடல்நல பிரச்சினை உடையவர்கள் கண்டிப்பாக மருத்துவ முக கவசம் அணிதல் வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் சொல்லி இருக்கிறது.

    சமீபத்தில் 11 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது குழந்தைகள் முக கவசம் அணிவதை பிரான்ஸ் கட்டாயம் ஆக்கி உள்ளதும், இங்கிலாந்தில் நிறைய பள்ளிக்கூடங்கள் இப்படிப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.
    அல்சர், வயிற்று புண்ணால் அவதிப்படுபவர்கள் இந்த சூப் செய்து பருகலாம். விரைவில் நல்ல பலனைத்தரும். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தேங்காய் பால் - 1 கப்
    பெரிய வெங்காயம் - 3
    இஞ்சி - சிறிய நெல்லிக்காய் அளவு
    எலுமிச்சை பழம் - பாதி பழம்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    பச்சைமிளகாய் - 6
    நல்லெண்ணெய் - தேவையான அளவு
    பசும்பால் - 1 கப்
    சோள மாவு - 2 ஸ்பூன்

    தேங்காய் பால்

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்யை விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் பால், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை சேர்த்து கொதிக்கும் கலவையுடன் ஊற்றவும்..

    நன்கு கொதி வந்த பின்பு தேங்காய் பால் சூப்புக்கு தேவையான அளவு உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான தேங்காய் பால் சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும்.
    நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ரீம்கள், ஆயின்மென்ட், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்கரப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
     
    1 நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.
     
     
    2. பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
     
    3. நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும்.
     
    4. கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நினைத்தால், நல்லெண்ணெயைப் பயன்படுத்துங்கள். அதுவும் பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.
     
    5. நல்லெண்ணெயை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.
     
    6. கோடையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் சருமம் கருமையாவது. இதைத் தடுப்பதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
     
    7. உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் தலைமுடியை நல்லெண்ணெய் பயன்படுத்தி பராமரியுங்கள். அதுவும் உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெயை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்
     
    8. உங்கள் கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? இதை நல்லெண்ணெய் கொண்டு சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிர செய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.
    கர்ப்பிணி தாய்மார்கள் கலோரிகள் அதிகம் கொண்ட உணவை சாப்பிடவேண்டிய தேவையோடு, வயிற்றை நிரப்பி எடையை அதிகரிக்காத உணவாக அவை இருக்கவேண்டிய தேவையும் உள்ளது.
    கர்ப்பிணி தாய்மார்கள் உணவு பழக்கத்தில் மேலதிக கவனத்தை செலுத்தவேண்டும். கலோரிகள் அதிகம் கொண்ட உணவை சாப்பிடவேண்டிய தேவையோடு, வயிற்றை நிரப்பி எடையை அதிகரிக்காத உணவாக அவை இருக்கவேண்டிய தேவையும் உள்ளது.
     
    குறிப்பாக புரோட்டின் வகை உணவுகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிக உகந்தது. இலகுவாக செமிபாடு ஆகுவதுடன், உடலுக்கு தேவையான கலோரிகளையும் கொண்டுவருகின்றது.
     
    இதனால் தான் கர்ப்பிணி தாய்மார்கள் 'பால்' வகை உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
     
    பழங்கள் சாப்பிட முடிவில்லை என்றால், நீங்கள் தனியே ஒரு க்ளாஸ் பால் அருந்தி வந்தாலே போதுமானது.
     
    கர்ப்பிணி தாய்மார்கள் நாள் ஒன்றுக்கு 350 இல் இருந்து 400 வரையான கலோரிகள் கொண்ட உணவை மேலதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது. ஆனால் அவை வயிற்றை மாத்திரமே நிரப்பும் உணவாக மாத்திரம் இருக்கக்கூடாது.
    டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் சந்தித்துவரும் முக்கியமான சவால்களில் ஒன்று வைரஸ்கள் மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்கள். தற்போது மக்களை மிரட்டும் கொரோனா வைரஸ் நம்மைத் தாக்கிவிடாமல் தடுக்க ஒரு நாளில் பலமுறை கை கழுவுவதுதான் மிகச்சிறந்த வழி என்கிறது மருத்துவ உலகம்.
     
    இருப்பினும் நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள் கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை இந்த வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்துஉள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். இவர்களில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தெளிவான புரிதல் இதுவரை இல்லாமல் இருந்தது.
     
    கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இறந்துபோன மற்றும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மீதான ஒரு சமீபத்திய ஒரு ஆய்வில் நீரிழிவு நோய் உள்ளவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவது ஏன் என்பதற்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளதாக லெய் பாங் தலைமையிலான சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
     
    சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நோயாளிகளில் பலருக்கு நீரிழிவு மற்றும் பெருமூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் (Cerebrovascular diseases) இருந்தது கண்டறியப்பட்டது.
     
    சீனாவில் நடந்த மற்றொரு ஆய்வில், கொரோனா வைரஸ் தாக்கிய 173 பேர்களில் சுமார் 41 நோயாளிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், சுமார் 28 நோயாளிகளுக்கு நீரழிவு நோய் இருந்தது என்றும், 10 நோயாளி களுக்கு இதய நோய் இருந்தது என்றும், 4 நோயாளிகளுக்கு பெரு மூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.
     
    இறுதியாக, மூன்றாவது ஆய்வில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுமார் 140 நோயாளிகளில், 42 பேருக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், 17 பேருக்கு நீரிழிவு நோய் இருந்ததும் கண்டறியப்பட்டது.
     
    இந்த மூன்று ஆய்வுகளிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் அனைவரும் ஒரு வகை மருந்துகளை (angiotensin-converting enzyme (ACE) inhibitors) எடுத்துக்கொண்டார்கள் என்பது கண்டறியப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, மனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸ்கள் ஒருவகையான என்சைம் (angiotensin-converting enzyme 2 (ACE2) மூலமாகவே மனித உயிரணுக்களைத் தாக்கி அவற்றினுள்ளே நுழைகின்றன என்றும், இந்த என்சைமை நுரையீரல், குடல், சிறுநீரகம் மற்றும் ரத்த நாளங்கள் ஆகிய அனைத்து உடல் பாகங்களும் உற்பத்தி செய்கின்றன என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
     
    முக்கியமாக, இந்த என்சைம் செயல்பாட்டை தடை செய்யும் மருந்தை உட்கொள்ளும் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் உடலில் இந்த என்சைம் உற்பத்தியானது மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உட்கொள்ளும் சில மருந்துகள் கொரோனா வைரஸ் மனித உயிரணுக்களுக்கு உள்ளே நுழைய உதவும் என்சைம் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
     
    ஆக மொத்தத்தில், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குகின்றன என்கிறது இந்த ஆய்வு. இது தவிர, நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள (ACE2) மரபணுவும் மாற்றங்களுக்கு உள்ளாகி என்சைம் (ACE2) உற்பத்தி அதிகமாகலாம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அதனால், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்க வேண்டுமானால், நீரிழிவு நோயாளிகள் தாங்கள் வழக்கமாக எடுக்கும் மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா என்று மருத்துவர்களை ஆலோசித்து முடிவு செய்தால் கொரோனா வைரஸ் தாக்குதலை அவர்களால் தவிர்க்க முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
    அழகைவிட, கம்பீரத்தைவிட ஆரோக்கியம் மிக அவசியமானது. அதனால் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். அணிய ஆசைப்பட்டாலும் ஒருசில மணிநேரம் மட்டுமே அணியுங்கள்.
    கால் பாதங்கள்.. இவை மனித உடலில் அற்புதமான படைப்பு. அந்த பாதங்களை பாதுகாக்க எல்லோரும் செருப்பு அணிகிறார்கள். ஆனால் சரியான செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். அளவு சரி இல்லாத செருப்புகளை அணிந்து, சிறிது தூரம் நடப்பதுகூட பாதங்களின் ஆரோக்கியத்தை பலமாக பாதிக்கும். இந்தப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதிலும் ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் உயர் குதிகால் செருப்பு அணிந்த பெண்களே, பாதிப்பின் உச்சத்தைத் தொடுகிறார்கள்.

    ஹை ஹீல்ஸ் செருப்பின் அழகும், வடிவமைப்பும் பெண்களை எளிதாக ஈர்த்துவிடுகிறது. இவ்வகை செருப்புகள், தங்களுக்கு கம்பீஇரத்தையும், தன்னம்பிக்கையையும் தருவதாக நம்புகிறார்கள். தங்களை குட்டையாக கருதிக்கொள்ளும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் குதிகால் செருப்பு மூலம் தங்கள் தாழ்வு மனப்பான்மை நீங்குவதாக கருதுவதும் ஒரு காரணம். இப்படிப்பட்ட எண்ணங்களால் உயர் குதிகால் செருப்பு அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதனோடு சேர்ந்து பாதங்களில் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன.

    வெகுகாலமாக உயர் குதிகால் செருப்பு அணிந்து நடக்கும் பெண்கள் கணுக்கால் வலியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் பாதங்களுக்கு தேவையான அளவு ஓய்வு கொடுக்கவேண்டும். அவர்கள் வலி ஏற்படும் பகுதியில் ‘ஐஸ் பேக்’ மூலம் ஒத்தடம் கொடுக்கலாம். வலி ஏற்பட்ட பகுதியில் சுடுநீரை ஊற்றுவதையும், எண்ணெய் மூலம் ‘மசாஜ்’ செய்வதையும் தவிர்க்கவேண்டும்.

    குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் ‘சோல்’ ரப்பரில் ஆனதுதானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல்தான், கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும். குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களில் லைனிங் செய்யப்பட்டிருக்கும். அது வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல், இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். தோல் செருப்புகளே ஈஇரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.

    அதிக உயரமான ஹீல்ஸ் செருப்புகளை தவிர்த்திடுங்கள். 2 அங்குல உயரம் கொண்ட செருப்புகளே பாதுகாப்பானவை. செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடி இருக்காமல் ஆங்காங்கே காற்று புகும்படி இருக்க வேண்டும். குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும்படி இருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது. குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்திடுங்கள். அதிகாலையில் ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும்.

    அழகைவிட, கம்பீரத்தைவிட ஆரோக்கியம் மிக அவசியமானது. அதனால் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். அணிய ஆசைப்பட்டாலும் ஒருசில மணிநேரம் மட்டுமே அணியுங்கள்.
    முடி பாதிப்படைய பொதுவான காரணங்களை தெரிந்துகொள்வதன் மூலம் அவை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம்.
    முடி உதிர்வதும், அது பாதிப்படையும் பொதுவான காரணங்கள் என்று சிலர் சொல்வதுண்டு. 3 பெண்களில் ஒருவர் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். முடி டேமேஜ் ஆவதும், முடி மெலிவு, முடிநுனி உடைதல், வழுக்கை, புழுவெட்டு, பொடுகு, முடி பிளவு, அதீத முடி உதிர்வு என்றும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். முடி பாதிப்படைய பொதுவான காரணங்களை தெரிந்துகொள்வதன் மூலம் அவை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். அன்றாட வாழ்க்கை முறையில் முடியை இழக்கும் ஒவ்வொருவரும் மன அழுத்தம் கொள்கிறார்கள். முடி டேமேஜ் ஆக்கும் பொதுவான காரணங்கள் குறித்து அறிவோம்.
     
    தலைக்கு குளித்ததும் முதலில் கூந்தலை ஈரமில்லாமல் சுத்தமாக துடைத்து எடுக்க வேண்டும். கூந்தலில் ஈரம் தங்கியிருந்தால் முடி ஈரத்தை உறிஞ்சுக்கொள்ளும். இதனால் முடியின் ஸ்கால்ப் பகுதியில் வீக்கத்தை உண்டாக்கும். இவை கூந்தலில் தங்கியிருந்து அவை முடி சேதத்துக்கு வழி வகுக்க கூடும். எப்போதும் கூந்தலை ஈரப்பதமாக வைத்திருக்கும் போதும் முடி உதிர்வு நடக்கிறது.
     
    எல்லோரும் கூந்தலை பராமரிக்கிறேன் என்று தொடர்ந்து தலைக்கு குளிப்பது உண்டு. இது கூந்தலுக்கு நல்ல வளர்ச்சியை தரக்கூடியது என்றாலும் கூட கூந்தலை நன்றாக உலர்த்துவதில் குறை இருக்க கூடாது. கோடையில் பலருக்கும் உச்சந்தலையில் அதிக வியர்வை சுரக்கும். அதனாலும் கூட கூந்தல் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்.
     
    சருமம் போன்று கூந்தலுக்கும் நேரடியான வெயிலின் தாக்கம் ஒப்புகொள்ளாது. புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தால் முடி பலவீனமடைவதை தடுக்க முடியாது. அதிக நேரம் வெயிலில் சென்றால் மட்டும் தான் கூந்தல் பாதிப்படையும் என்றில்லை. சில மணிநேரம் சென்று வந்தாலும் கூட வெயிலின் தாக்கத்தால் முடி பலவீனமாக கூடும்.
     
    அதோடு அதிகப்படியான மாசுவால் கூந்தலில் அழுக்குகளும் அதிகமாகவே சேர்ந்துவிடுகிறது. அவ்வபோது சுத்தம் செய்யாத போது கூந்தலில் பொடுகும், முடி உதிர்வும் சாத்தியமாகிறது.
     
    மன அழுத்தத்தால் உடல் நலமும் கூடவே கூந்தலும் கூட பாதிக்கப்படுகிறது. உடல் மற்றும் உளவியல் ரீதியாக முடி சேதத்தை உண்டாக்கிவிடுகிறது. மன அழுத்தம் இருப்பவர்களுக்கு உடலில் ஹார்மோன் சுரப்பு தடுமாற்றம் அடையக்கூடும். அதனால் தான் முடி உதிர்வும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. மன அழுத்தம் உண்டாகாமால் பார்த்துகொள்வது தான் மன அழுத்தம் இருந்தாலும் அதை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
     
    முடிக்கு ஹேர் கலரிங் செய்வது முடியின் அழகை அதிகரிக்கும் என்று நினைக்கலாம். ஆனால் இவை முடியின் அழகை கெடுக்கிறது என்பதே உண்மை. அவ்வபோது ஹேர் கலரிங் செய்வதன் மூலம் அவை முடி இழப்பை உண்டாக்கிவிடக்கூடும். கடுமையான முடி சேதத்தை உண்டாக்கும். ஏனெனில் கூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது அதில் இருக்கும் இரசாயனங்கள் முடிக்குள் ஊடுருவதன் மூலம் அவை முடியை பலவீனப்படுத்துகின்றன.
     
    ஹேர் கலரிங் செய்வது எல்லாமே தற்காலிக அழகுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாமல் ஹேர் கலரிங் செய்து கொண்டாலும் அடுத்து செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட இடைவெளி அவசியம். இயன்றவரை அதை தவிர்ப்பதே நல்லது.ஹேர் ப்ளீச் செய்வதும் கூட கூந்தலை பாதிப்புக்குள்ளாக்கும்.
     
    முடியின் இறுக்கத்தால் முடியின் வேர்ப்பகுதி பலவீனமடையும். கூந்தலின் அடர்த்தி குறையும். இறுக்கமான பின்னலும், அதிகப்படியான அலங்காரமும் கூந்தலுக்கு தொடர்ந்து செய்யும் போது கூந்தலின் வேர்கள் இழுக்கப்படுவதால் விரைவில் அவை உடைக்கப்படுகின்றன. முடி வளர்ச்சியைத் தடுத்து உதிர்வை வேகமாக ஊக்குவிக்கின்றன. நாளடைவில் வழுக்கை பிரச்சனையையும் கூட இவை உண்டாக்கிவிடுகின்றன.
     
    மேற்கண்ட ஐந்துமே கூந்தலை டேமேஜாக்குபவையே. இதில் கவனம் செலுத்தினாலே முடி டேமேஜ் ஆகாமல் பாதுகாக்க முடியும்.
    ×