search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் முக கவசம் அணிவது கட்டாயம்
    X
    குழந்தைகள் முக கவசம் அணிவது கட்டாயம்

    குழந்தைகள் முக கவசம் அணிவது கட்டாயம் ஏன் தெரியுமா?

    12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது.
    உலக நாடுகளையெல்லாம், உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து கதி கலங்க வைத்து வருகிறது. 2 கோடியே 32 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 8 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர். ஆனாலும் கொரோனாவில் மரணப்பசி தீரவில்லை. அதே வேளையில் இன்னும் அதை தடுத்து நிறுத்த தடுப்பூசியோ, சிகிச்சைக்கான மருந்துகளோ சந்தைக்கு வந்தபாடில்லை.

    ஆனால் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் இந்த புள்ளிவிவரங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கக்கூடும், போதுமான அளவுக்கு உலக நாடுகளில் பரிசோதனைகள் நடத்தப்படாததும், அறிகுறிகள் அற்று கொரோனாவால் பாதிப்பு ஏற்படுவதாலும், உண்மையான பாதிப்பு விவரம் இன்னும் தெரியவில்லை என்றே சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

    தற்போது கொரோனா தென்கொரியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் லெபனானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.

    இந்த நிலையில், 12 வயது மற்றும் அதற்கு அதிகமான வயது குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது.

    குறிப்பாக மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்துக்காவது இடைவெளி உத்தரவாதம் தர முடியாதபோது, கண்டிப்பாக கொரோனா பரவும் நிலை உள்ளதால் கண்டிப்பாக இந்த வயது குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டும்.

    6 முதல் 11 வயது குழந்தைகளை பொறுத்தமட்டில், அவர்கள் பகுதியில் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பதையும், முதியவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்களுடன் குழந்தைகள் தொடர்பில் இருக்கிற நிலை உள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. இத்தகைய குழந்தைகள் முக கவசத்தை அணிந்து கொள்ளவும், அகற்றவும் பெரியவர்கள் உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

    60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது அடிப்படை உடல்நல பிரச்சினை உடையவர்கள் கண்டிப்பாக மருத்துவ முக கவசம் அணிதல் வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் சொல்லி இருக்கிறது.

    சமீபத்தில் 11 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது குழந்தைகள் முக கவசம் அணிவதை பிரான்ஸ் கட்டாயம் ஆக்கி உள்ளதும், இங்கிலாந்தில் நிறைய பள்ளிக்கூடங்கள் இப்படிப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.
    Next Story
    ×