என் மலர்
ஆரோக்கியம்
காலையில் எளிய முறையில் சத்தான சுவையான உணவு செய்ய நினைத்தால் அவல் பொங்கல் செய்யலாம். இன்று அதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அவல் – 1 1/2 டம்ளர்,
பாசிப்பருப்பு – 1/2 டம்ளர்,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம் – சிறிதளவு,
கொத்தமல்லி – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள் :
எண்ணெய் – 1 தேக்கரண்டி,
நெய் – 2 தேக்கரண்டி,
மிளகு – 1 தேக்கரண்டி,
சீரகம் – 1 தேக்கரண்டி,
பச்சைமிளகாய் – 2,
இஞ்சி – 1 துண்டு,
முந்திரிப்பருப்பு – 2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை – 1 தேவைக்கு.
செய்முறை :
இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 5 நிமிடம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடித்து விட்டு தனியாக வைக்கவும். பாசிப்பருப்பை உதிரும் அளவில் வேக வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும். பின்னர் அவல் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வேக வைத்து வைத்துள்ள பாசிப்பருப்பினை சேர்த்து அதனுடன் உப்பு, காயம் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து வேக விடவும்.
பொங்கல் தயாரானதும் இன்னும் சிறிது நெய் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
டேஸ்டி, ஹெல்தி அவல் பொங்கல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ஆய்வறிக்கையில் பெண்களை மையப்படுத்தி ஐந்து முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ஆய்வறிக்கையில் பெண்களை மையப்படுத்தி ஐந்து முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 17 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் இந்த கணக் கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. மாதவிடாய் சுகாதாரம், ஸ்மார்ட்போன் பயன்பாடு, ஊதியம், சொத்து உரிமை, முடிவெடுக்கும் சுதந்திரம் போன்ற விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.
1. மாதவிடாய் கால சுகாதாரம்: மிசோரமை தவிர பெரும்பாலான மாநிலங்களில் மாதவிடாயின்போது பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் மாதவிடாய் கால சுகாதாரத்தை முழுமையாக பின்பற்றுவது குறைவாகவே இருக்கிறது. பீகாரில் மாதவிடாய் சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் அங்கு ஒட்டுமொத்தமாக 58.8 சதவீத பெண்கள்தான் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனர். அதிகபட்சமாக திரிபுராவில் 68.8 சதவீத பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக அசாம் (66.3 சதவீதம்), குஜராத் (65.8 சதவீதம்), மேகாலயா (64.9 சதவீதம்) போன்ற மாநிலங்கள் உள்ளன.
2. ஸ்மார்ட்போன் பயன்படுத்துதல்: ஜம்மு காஷ்மீரில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 22 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆந்திராவில் 48.9 சதவீத பெண்கள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள். கோவாதான் ஸ்மார்ட்போனை அதிகம் உபயோகிக்கும் பெண்களை கொண்ட மாநிலமாக விளங்குகிறது. அங்கு 91.2 சதவீத பெண்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக சிக்கிம் மாநிலத்தில் 88.6 சதவீத பெண்கள் ஸ்மார்ட்போன் பயன் படுத்துகிறார்கள்.
3. ஊதிய மாறுபாடு: பெரும்பாலான துறைகளில் ஆண்கள் பார்க்கும் அதேவேலையை பெண்களும் செய்கிறார்கள். ஆனாலும் ஆண் களோடு ஒப்பிடும்போது பெண்களின் சம்பள விகிதம் குறைவாகவே இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் பார்க்கும் வேலைக்கு ஊதியமாக பணத்திற்கு பதிலாக பொருட்களை பெறும் நிலையும் இருக்கிறது. லட்சத்தீவில் 10.9 சதவீத பெண்களே ஊதியத்தை பணமாக பெறுகிறார்கள். அதுபோல் ஊதியம் பெறும் பெண்களின் எண்ணிக்கை ஜம்மு காஷ்மீரில் 18.4 சதவீதமாகவும், பீகாரில் 12.6 சதவீதமாகவும், அசாமில் 19 சதவீதமாகவும் இருக்கிறது.
4. சொத்து உரிமை: கணக்கெடுப்பு நடந்த பெரும்பாலான மாநிலங்களில் சொத்துக்களின் உரிமையாளர்களாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இந்த நிலை வடகிழக்கு மாநிலங்களில் நீடிக்கிறது. திரிபுராவில் சொத்து வைத்திருந்த பெண்களின் எண்ணிக்கை 57.3 சதவீதத்தில் இருந்து ஒரு ஆண்டுக்குள்ளாகவே 17.2 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதுபோல் மிசோரமில் 20.8 சதவீதம் பெண்கள்தான் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடுபவர்களாக இருக்கிறார்கள். சொத்துரிமை சட்டம், ஆண் களுக்கும்-பெண்களுக்கும் சம உரிமைகளை அளிக்கிறது. ஆனாலும் நிலத்தையோ, வீட்டையோ பெண்கள் பெயரில் பதிவு செய்யும் வழக்கம் குறைவாக இருப்பதை தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. லடாக்கில் 72.2 சதவீதம் பெண்கள் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடுபவர்களாக இருக்கிறார்கள். அதற்கு அடுத்த படியாக கர்நாடகாவில் 67.6 சதவீதம் பெண்கள் நிலம் அல்லது வீட்டிற்கு உரிமையாளராக இருக்கிறார்கள்.
5. முடிவெடுக்கும் சுதந்திரம்: சுயமாக முடிவெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் சர்வேயில் தெரியவந்துள்ளது. பீகாரில் 86.5 சதவீத பெண்கள் எந்த தலையீடும் இல்லாமல் முடிவுகளை எடுக்கிறார்கள். அது மிசோரமில் 98.8 சதவீதமாகவும், நாகலாந்தில் 99 சதவீதமாகவும் இருக்கிறது. உடல் நலம், வீட்டுக்கு தேவையானவற்றை வாங்குவது, உறவுகளை சந்திப்பது போன்றவற்றை மையப் படுத்தி இந்த சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது.
சுவைக்கும் திறனை வீட்டிலிருக்கும் பெரியவர்கள், இளஞ்சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களது திறனை வளர்த்து விடும் முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சிந்தனைகளை சிதற விடாமலும், அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையிலும் பல பொழுதுபோக்கு நிகழ்வுகளில் அவர்களை ஈடுபடுத்தி அவர்களின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும்.
இப்போதைய வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் சிறுவர்களுக்கு கற்பிக்கும் முறை எளிமையாகி விட்டது. நிகழ்நிலை வகுப்புகள் எடுக்கப்படுகின்றன, நிகழ்நிலைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன, மருத்துவ அலோசனைகள், நிகழ்நிலை வழியாக கொடுக்கப்படுகின்றன. அதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பங்கெடுக்க வைத்து, அவர்கள் நேரத்தை இனிமையானதாகவும் உபையோகமுடையதாகவும் மாற்றி அமைக்கலாம். சிறுவர்களுக்கு அதிக நேரம் கணிணியோ கைப்பேசியோ குடுக்காதவாறு வகுப்புகளை சீர்படுத்திக் கொள்ளவேண்டும்.
கலாச்சாரமும் பேச்சும் ஊருக்கு ஊர் மாறுபட்டிருப்பதைப் போல சமையல் திறனிலும் தனித்துத் தெரிபவர்கள் நம் தமிழர்கள். ”செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்பதற்கேற்ப சமையல் கலையின் அறுசுவைகளான காரம், இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகியவற்றை சுவைக்கும் திறனை வீட்டிலிருக்கும் பெரியவர்கள், இளஞ்சிறுவர்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் சொல்லிக் கொடுத்து, அவர்களது திறனை வளர்த்து விடும் முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும்.
இதை கற்பிக்கும் வழியாக உணவின் முக்கியத்துவம், உணவை சமைப்பதில் இருக்கும் மகிழ்ச்சி, ஒவ்வொரு உணவிற்கும் உள்ள மருத்துவகுணங்கள், சமைக்கும் போது கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், உணவை வீணடிக்காமல் தேவைக்கேற்ப சமைத்து உண்ணுதல் ஆகியவற்றை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நல்லொழுக்கத்தை மேம்படுத்தலாம்.
பூட்டிய அறைக்குள் ஒருவர் மட்டும் 4 மணி நேரம் தூங்கினாலே அந்த அறையிலுள்ள ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். இப்படி தூங்கினால் ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இன்று பலரும் 10-க்கு 10 அடி அளவு கொண்ட சிறிய அறையில் கதவு, ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு ஏசி போட்டு தூங்குகிறார்கள். ஏசி இல்லாதவர்கள் கூட கொசுக் கடிக்கு பயந்து கதவு, ஜன்னல் எல்லாவற்றையும் சிக்கென்று அடைத்து தூங்குகிறார்கள். இப்படி தூங்கினால் ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். பூட்டிய அறைக்குள் ஒருவர் மட்டும் 4 மணி நேரம் தூங்கினாலே அந்த அறையிலுள்ள ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும்.
பொதுவாக காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது. இந்த அளவு பூட்டிய அறைக்குள் ஒருவர் நான்கு மணி நேரம் தொடர்ந்து உறங்கும்போது 10 சதவீதத்திற்கும் கீழே குறைந்து போகிறது. அப்படி குறையும்போது நுரையீரலால் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவை சரியாக வைக்க முடியாத நிலை ஏற்படும். இது தொடர்ந்தால் மனிதன் மூர்ச்சையாகி விடுவான். உடலில் உள்ள உயிர் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம். அதனால் ஆக்சிஜன் தேவை அதிகரிக்க, அதிகரிக்க சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய தொடங்கும்.
அது நம் உடலிலுள்ள தண்ணீரில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்யும். தண்ணீரில் இரு மடங்கு ஆக்சிஜனும், ஒரு பங்கு நைட்ரஜனும் இருக்கிறது. இந்த நீரில் இருந்து உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சிறுநீரகம் பிரித்து கொடுக்கிறது. அதனால்தான் சிறுநீரகத்தை மனிதனின் 'இரண்டாவது நுரையீரல்' என்று அழைக்கிறார்கள்.
சிறுநீரகம் இந்த வேலையை செய்ய தொடங்கியவுடன் அதுவரை அது செய்து கொண்டிருந்த வேலையான ரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலையை நிறுத்திவிடும். நமது உடலில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்தவுடன் அது கழிவுநீராக மாறிவிடும். அந்த கழிவுநீரை வெளியேற்ற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். மீண்டும் புதிய ஆக்சிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனால் சிறுநீரகம் அதிக வேலைப்பளுவுடன் தள்ளாடுகிறது.
இந்த தள்ளாட்டத்தால் சிறுநீரகத்தில் அழுக்கு சேர்வதுடன், ரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அசுத்தங்களும் அதிகரிக்கின்றன. மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன. சிறுநீரகத்திலும் இந்த படிமம் படிகிறது. ரத்தத்திலும் இந்த அமிலப் படிவங்களால் தடிமன் அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மூட்டு வலி தோன்றுகிறது.
ஏசி அறையிலோ அல்லது கொசுக்கு பயந்து பூட்டிய அறையிலோ இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது இத்தனை உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனை நமது பழந்தமிழர் மருத்துவத்தில் 'காற்று தீட்டு' என்று அழைத்தார்கள். அதனால் காற்று தீட்டு இல்லாத காற்றோட்டமான அறையில் தூங்குவோம். ஆரோக்கியத்தை பேணுவோம். சிறுநீரகத்தை காப்போம்.
பெண்களை ஈர்க்க ஆண்கள் செய்யும் இந்த முட்டாள்த்தனமான செயல்கள் பெண்களுக்கு வெறுப்பைதான் உண்டாக்கும். அந்த செயல்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஒருவரிடம் ஈர்க்கப்படுவதைப் பற்றி உணரும்போது, ஒவ்வொரு நபருக்கும் அவரவர் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் உள்ளன. சிலர் உடல் அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், மற்றவர்கள் ஆழமான கெமிஸ்ட்ரியை நம்பியிருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் மற்றும் பெண்களின் அடிப்படை நோக்கம் தங்கள் எதிர்பாலினத்தை ஈர்ப்பதாகும்.
ஆண், பெண் இருவருமே தங்கள் எதிர்பாலினத்தை ஈர்ப்பதற்காக சில தனிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பதாக நினைப்பார்கள். ஆனால் உங்களின் எண்ணங்கள் தவறாக பல வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் பெண்களை கவர்வதாக நினைத்து செய்யும் சில செயல்கள் பெரும்பாலும் பெண்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும். இந்த பதிவில் ஆண்களின் அந்த முட்டாள்த்தனமான செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
நல்ல ஷேப்பில் இருப்பது
நீங்கள் ஒரு பெண்ணை ஈர்க்க விரும்பும் போது நிச்சயமாக தோற்றம் மற்றும் உடற்பயிற்சி விஷயம்தான். ஆனால் ஒரு உறவைப் பெறுவதற்கு வாரத்திற்கு ஆறு முறை உடற்பயிற்சி செய்யும் ஒருவரைப் போல நீங்கள் உண்மையில் இருக்க வேண்டியதில்லை. ஒரு பெண்ணை ஈர்ப்பது ஒரே விஷயம் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் மனதில் தயாரிக்கப்பட்ட உருவத்தைப் போல நீங்கள் இருக்க வேண்டியதில்லை. உங்கள் உடலில் நம்பிக்கையுடன் இருங்கள், அது போதுமானதாக இருக்க வேண்டும். இது உங்கள் உணவில் ஆரோக்கியமற்றதாக இருப்பது சரியில்லை என்று அர்த்தமல்ல. ஒர்க்அவுட், டயட் மற்றும் பொருத்தமாக இருங்கள், ஆனால் உங்கள் சுயத்திற்காக, ஒரு பெண்ணை ஈர்க்கும் நோக்கத்துடன் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.
கெட்டவனாக இருப்பது
பெண்கள் மோசமான ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள் என்று ஆண்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க தவறாகும். நீங்கள் ஈர்க்க முயற்சிக்கும் பெண்ணிடம் நீங்கள் இழிவாக அல்லது முரட்டுத்தனமாக நடந்து கொள்ளப் போகிறீர்கள் என்றால் நீங்கள் நினைப்பதை விட அவர் விரைவில் உங்களை வெறுக்கத் தொடங்குவார். மேலும் பெண்ணை ஈர்க்க மட்டும் நல்லவர் போல நடிக்கவும் வேண்டாம். உண்மையிலேயே நல்லவளாகவும், கனிவானவனாகவும், பெண்ணிடம் மரியாதைக்குரியவனாகவும் இருந்தால் கண்டிப்பாக அந்த பெண் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்.
பெண்ணை அவமதிப்பது
கண்டிப்பாக இதனை செய்யக்கூடாது. தோழர்களே ஒரு பெண்ணின் மீது சிறிய தீய வார்த்தைகளை கூட வீச முயற்சிக்கும் செயல் மிக மிக மோசமானது என்று அழைக்கப்படுகிறது, அது மிகவும் அழகற்றது, எனவே அதைப்பற்றி நினைக்கவே வேண்டாம். பெண்களை வேண்டுமென்றே அவமதிக்கும் வகையில் பேச வேண்டாம். ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள், விளையாட்டுத்தனமாக பெண்களை கலாய்க்கும் ஆற்றல் ஒரு பெண்ணுக்கு கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. கிண்டல் செய்வதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது கவர்ச்சியானது. ஆனால் ஒரு பெண்ணை வெறுமனே அவமதிப்பது மற்றும் அதை வேடிக்கை என்று அழைப்பது தவறானது மற்றும் அழகற்றது.
நன்றாக சம்பாதிப்பது
நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பதைப் பற்றிக்கூட பெரும்பாலான பெண்கள் கவலைப்படுவதில்லை. நீங்கள் ஒரு பணக்காரராக இருக்கலாம், ஆனால் நீங்கள் பாதுகாப்பற்றவராக இருந்தால், ஒரு பெண்ணை ஈர்க்க உங்கள் பணத்தை பயன்படுத்த முயற்சித்தால் அது கொஞ்சமும் வேலை செய்யாது. உண்மையில் உங்களை விரும்பும் பெண்ணுக்கு பதிலாக உங்கள் பணத்தை விரும்பும் பெண்ணைத்தான் பெறுவீர்கள். நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ பணத்தை சம்பாதியுங்கள், உங்கள் பணத்தை காண்பிப்பதன் மூலம் ஒரு பெண்ணின் ஈர்ப்பை வாங்கலாம் என்று நினைப்பதை நிறுத்துங்கள்.
புத்திசாலித்தனம் மற்றும் ஆணவம்
இந்த இரண்டு குணாதிசயங்களும் கவர்ச்சிகரமானவை என்று ஆண்கள் தவறாக நினைக்கிறார்கள். ஒரு திமிர்பிடித்த ஆண் யாரும் தன்னை நினைப்பதைப் பொருட்படுத்தவில்லை. ஒரு நம்பிக்கையுள்ள மனிதன் மற்றவர்களின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்வான், ஆனால் ஒப்புதல் பெற மட்டும் தனது நடத்தையை மாற்ற மாட்டான். ஒரு புத்திசாலி ஆண் தனது சாதனைகளைப் பற்றி வாய் ஓடுகிறான். ஆனால் நம்பிக்கையுள்ள மனிதர் தனது உணர்ச்சிகளைப் பற்றி பேசுவார். பெண்கள் மட்டுமல்ல அனைவருமே இவர்களால் ஈர்க்கப்படுவார்கள். எனவே நீங்கள் ஒரு பெண்ணை ஈர்க்க விரும்பினால் திமிராகவும், ஆணவமாகவும் இருப்பதை நிறுத்துங்கள், அதற்கு பதிலாக நம்பிக்கையுடன் இருக்கத் தொடங்குங்கள்.
முகத்தில் கோடுகள், மோசமான செயல்பாடு மற்றும் பொருத்தமில்லாத ஷேடுகள் போன்ற பாதிப்புகளை தவிர்க்க, நீங்கள் செய்யும் பவுண்டேஷன் தவறுகளை அறிந்து திருத்திக்கொள்ளுங்கள்.
இயற்கையாக தோன்றக்கூடிய மேக்கப் போடுவது மேக்கப் கலையில் மிகவும் முக்கியமானதாகும். கோடுகள், மோசமான செயல்பாடு மற்றும் பொருத்தமில்லாத ஷேடுகள் போன்ற பாதிப்புகளை தவிர்க்க, நீங்கள் செய்யும் பவுண்டேஷன் தவறுகளை அறிந்து திருத்திக்கொள்ளுங்கள்.
பவுண்டேஷனை பூச கைவிரல்களை பயன்படுத்துவது, வேகமான வழியாக தோன்றலாம். ஆனால் இது சருமத்தின் கோடுகளை உண்டாக்கும். இத்தகைய பயன்பாடு உங்கள் அடிப்படை மேக்கப் சீரில்லாமல் தோன்றச்செய்யும். இதற்கு மாறாக பியூட்டி பிலெண்டர் அல்லது பவுண்டேஷன் பிரெஷ் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். முழு கவரேஜ் பவுண்டேஷன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் கழுத்துப்பகுதியிலும் பயன்படுத்த மறக்க வேண்டாம். பொதுவாக உங்கள் கழுத்து உங்கள் முகத்தை விட, சற்று நிறம் குறைவாக இருப்பதால், கழுத்துப்பகுதியில் பவுண்டேஷன் பயன்படுத்தாமல் இருந்தால், முகம் மற்றும் கழுத்து இடையே பளிச் என வேறுபாட்டை எடுத்துக்காட்டும்.
மாய்ஸ்சரைசர் பயன்படுத்திய உடன் அது உலர்வதற்கு போதிய நேரம் அளிக்க வேண்டும். இல்லை எனில், மேக்கப் சீரற்று தோன்றும். பவுண்டேஷனை பயன்படுத்துவதற்கு முன் மாய்ஸர்ரைசர் முழுவதுமாக உலர சில நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும். உங்களுக்கு எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், பவுடர் பவுண்டேஷன் சரியான தேர்வு போல தோன்றலாம்.
ஆனால், அவ்வாறு இல்லை என சொல்ல விரும்புகிறோம். பவுடர் பவுண்டேஷன் சருமத்தை உலர வைத்து, சாக் தன்மை அளித்து, சருமத்தில் படிந்து, புகைப்படங்களில் இயல்பில்லாமல் அமைகிறது. உங்களுக்கு எண்ணெய் பசை சருமத்தால் கவலை உண்டானால், உங்கள் முகத்தில் இருந்து கூடுதல் பளபளப்பை அகற்ற மேட்டே பவுண்டேஷனை பயன்படுத்தவும். இறுதியில் மேக்கப்பை சீராக்க மறக்க வேண்டாம்.
பவுண்டேஷனுக்கு முன் கன்சீலர் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்படுவது தவறானது. பவுண்டேஷன் போதுமானதாக இல்லாத போது கூடுதல் கவரேஜ் அளிப்பது தான் கன்சீலரின் நோக்கம். எனவே, பவுண்டேஷனை முதலில் பயன்படுத்திவிட்டு பின்னர் குறைகளை சரி செய்ய கன்சீலரை பயன்படுத்துவதே சரியான வழியாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் சோர்ந்து போகிறார்கள். சோர்வில் இருந்து மீள என்ன செய்யலாம்? என்று அறிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் சோர்ந்து போகிறார்கள். மன நிலை மாற்றம், உடல் அசதி, அதிக பசி உணர்வையும் எதிர்கொள்வார்கள். கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவது சோர்வுக்கு காரணமாக அமைகிறது. சோர்வில் இருந்து மீள என்ன செய்யலாம்?
தூக்கம்: கர்ப்ப காலத்தில் போதுமான நேரம் தூங்க வேண்டும். கால்களுக்கும் போதுமான ஓய்வு கொடுக்க வேண்டும். தாயின் ஓய்வு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நல்லது. தினமும் குறிப்பிட்ட இடைவெளியில் சிறிது நேரம் தூங்கும் வழக்கத்தை பின்பற்றினால் சோர்வு மறைந்து உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
உடற்பயிற்சி: டாக்டர்கள் ஓய்வெடுக்குமாறு பரிந்துரைத்திருந்தால் கர்ப்பிணிகள் அதை முழுமையாக பின்பற்றவேண்டும். அதேவேளையில் யோகா, நடைப்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபடலாம். அது உடலுக்கு போதுமான ஆற்றலை வழங்கும். தினமும் இத்தகைய உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது தாய்க்கும், சேய்க்கும் நலம் சேர்க்கும்.
புரத உணவு: வயிற்றில் வளரும் கருவுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அவசியமானது. ஆதலால் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளடங்கிய சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக முட்டை, இறைச்சி, பால், பாலாடைக்கட்டி, பீன்ஸ் போன்ற புரத உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். தூக்க சுழற்சியையும் சீராக்கும். சீரான இடைவெளியில் ஊட்டச்சத்துமிக்க ஏதாவதொரு உணவு, பலகாரங்களை உட்கொண்டு வந்தால் நாள் முழுவதும் உற்சாகம் நீடிக்கும்.
தண்ணீர்: கர்ப்ப காலத்தில் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பது சோர்வை போக்கும். தேவையான அளவு தண்ணீர் பருகாவிட்டால் சோர்வு ஏற்படுவதோடு, செரிமான அமைப்பும் பாதிப்புக்குள்ளாகும்.
உணவின் அளவு: கர்ப்ப காலத்தில் மூன்று வேளை உட்கொள்வதற்கு பதிலாக ஐந்து, ஆறு தடவைகளாக உணவை பிரித்து சாப்பிடலாம். இந்த வழக்கம் உடலை ஆற்றலுடன் வைத்திருக்க உதவும். ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வழிவகுக்கும்.
காபி: கர்ப்பகாலத்தில் காபி பருகுவது உற்சாகத்துடன் இருக்க செய்யும் என்று கருதலாம். முடிந்தவரை காபின் கலந்த பானங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை வளர்சிதை மாற்றத்தை குறைத்து செயலற்ற தன்மை கொண்டவர்களாக மாற்றிவிடும். மருத்துவர் ஆலோசனைபடி சமச்சீரான சத்துணவுகளை உண்பது மிக அவசியம்.
இட்லியில் பொடி இட்லி, ரவை இட்லி என பல வகைகள் உண்டு. இன்று சிறுகீரையை வைத்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருள்கள் :
இட்லி மாவு- 1 கிலோ
சிறுகீரை - 1 கட்டு
சிறுபருப்பு - 100 கிராம்
காய்ந்தமிளகாய் - 6
தக்காளி - 1
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 4 பல்
செய்முறை :
முதலில் கீரையை ஆய்ந்து நன்றாக தண்ணீரில் அலசி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு குக்கரில் தேவையான தண்ணீர் ஊற்றி சிறுபருப்பு, காய்ந்தமிளகாய், தக்காளி, வெங்காயம், பூண்டு மற்றும் சிறுகீரை ஆகியவை சேர்த்து 1 விசில் வரும் வரை விடவும்.
பின்னர் வெந்த கீரையை மிக்சியில் அரைத்து இட்லி மாவில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து மாவை ஊற்றி 15 நிமிடம் வேக வைத்தால் சுவையான.. அரோக்கியம் மிக்க சிறுகீரை இட்லி தயார்...
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மழைக்காலத்தில் சமச்சீரான உணவு வகைகளை உட்கொள்வது நல்ல பலன் தரும். மழைக்காலங்களில் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு குடிநீர் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மழைக்காலத்தில் எண்ணெய்யில் வறுத்த, பொரித்த உணவு பொருட்களையும், சூடான டீ, காபியையும்தான் பலரும் விரும்புவார்கள். மழைக்காலத்தில்தான் மலேரியா, டெங்கு, டைபாய்டு, உணவு விஷமாக மாறுவது, வயிற்றுப்போக்கு, வைட்டமின் டி குறைபாடு மற்றும் சரும நோய்த்தொற்றுகளின் பாதிப்புகள் அதிகரிக்கும். சமச்சீரான உணவு வகைகளை உட்கொள்வது நல்ல பலன் தரும்.
சீதோஷண நிலைக்கு ஏற்ப உணவுப்பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அப்படி செய்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். மழைக்காலங்களில் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு குடிநீர் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த பருவத்தில்தான் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பருக வேண்டும். குடிநீரை கொதிக்கவைத்து பருகுவது அதைவிட சிறந்தது.
கோடை காலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் வியர்வை பிரச்சினை தலைதூக்கும். ஈரப்பதம் சார்ந்த பிரச்சினையும் உருவாகும். அவற்றை ஈடு செய்வதற்கு திரவ உணவுகளை உட்கொள்வது பாதுகாப்பானது. சூடான சூப்கள், இஞ்சி டீ, மூலிகை டீ, மசாலா சேர்க்கப்பட்ட குழம்பு வகைகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
மழைக்காலத்தில் கிடைக்கும் பழங்களையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்றவை மழைக்காலங்களில் கிடைக்கும். இவை அனைத்தும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை. எனவே அவற்றை தவறாமல் சாப்பிடுங்கள். நட்ஸ் வகைகள், தானியங்கள், மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, துளசி, புதினா, எலுமிச்சை போன்ற மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை. அவை பருவமழைக்கால நோய்களைத் தடுக்க உதவும்.
மழைக்காலங்களில் ஒருசில உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. அவை நோய் பாதிப்புகளை அதிகரிக்கச்செய்யும் தன்மை கொண்டவை. பருவமழை காலத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை இரைப்பை, குடல் அமைப்பை பாதிக்கக்கூடும். எனவே இந்த பருவத்தில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். தவிர்க்கமுடியாத பட்சத்தில் குறைவாக சாப்பிடலாம். எண்ணெய் பலகாரங்கள் தயார் செய்வதற்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சமையலுக்கு உபயோ கிக்கக்கூடாது. மழைக்காலங்களில் நீர்நிலைகள் மாசுபடுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. அதனால் கடல் உணவுகளையும், வெளி உணவுகளையும் கூடுமானவரை தவிர்த்துவிடுவது நல்லது.
பருவமழை காலத்தில் மாறுபடும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக பச்சை இலை காய்கறிகளில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்ச்சி அடையக்கூடும். அதனால் காய்கறிகளை வாங்கி வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடுவது நல்லது. அதிக வெப்பநிலையில் சமைத்து சாப்பிடுவதும் அவசியமானது.
பாதாம் பருப்பு கலந்த பாலை குளிர்காலத்தில் அருந்துவதால் குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் குளிரைத் தாங்கக்கூடிய சக்தியைக் குழந்தையின் உடல் பெறுகின்றது.
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பாதாம் பருப்பை தருவது எதற்காக என்று அறிந்து கொள்ள வேண்டும். மூளையின் சக்தி பாதாம் பருப்புகளைச் சாப்பிடுவதால் அதிகரிக்கும். பொடியாக அரைத்த பாதாம் பருப்பைப் பாலில் கலந்து தினமும் பருகுவதால் குழந்தையின் உடலில் ஊட்டச்சத்தின் அளவு அதிகமாகச் சேர வாய்ப்புள்ளது. பாதாம் பருப்பு கலந்த பாலை குளிர்காலத்தில் அருந்துவதால் குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் குளிரைத் தாங்கக்கூடிய சக்தியைக் குழந்தையின் உடல் பெறுகின்றது.
பாதாம் பருப்பில் உள்ள புரதச் சத்தானது மூளையின் இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் நினைவாற்றல் மற்றும் மூளையின் சக்தியைப் பெருகுகின்றது. குழந்தையின் மூளையில் உள்ள செல்களில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்து, அவர்களைப் புத்திசாலியாக மாற்றுகின்றது.
குளிர் காலத்தில் சளி ,இருமல் போன்ற தொல்லைகள் குழந்தைகளுக்கு ஏற்படுவது இயல்புதான். இந்த மாதிரி நேரத்தில் பாதாம் கலந்த பாலை குழந்தைக்குத் தினமும் பருக தருவதன் மூலம், அவர்களின் உடலின் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த பால் சாப்பிடுவதன் மூலம் குழந்தைகள் எளிதில் குளிர்காலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாக முடியாது.
பாதாமில் நிறைந்துள்ள விட்டமின் ஏ சத்து கண்களின் வளர்ச்சிக்கு மிக மிக அவசியமானது. இதை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளுக்குக் கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாது. கண் பார்வை கூர்மை அடையும்.
பாதாம் பருப்பை இரவு நேரத்தில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள், பின் அதன் தோலை உரித்து, காய விடுங்கள். பிறகு இதனைக் குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுங்கள். ஒரு வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்குத் தரப் பாதாம் பருப்புகளை அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம்.இந்தப் பொடியைக் குழந்தைகளின் உணவுகளில் கலந்து கொடுக்கலாம்.சற்று பெரிய குழந்தை என்றால் சின்ன சின்ன துண்டுகளாகப் பாதாம் பருப்புகளை வெட்டி சாப்பிடக் கொடுக்கலாம்.இருப்பினும் குழந்தையின் தொண்டையில் பாதாம்பருப்பு சிக்க வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்கப் பால் அல்லது மற்ற உணவுகளில் சேர்த்துக் கொடுப்பது நல்லது.
தேனின் தரத்தை கண்டறிவதற்கு மிக எளிமையான, எல்லோராலும் செய்து பார்க்க முடிகிற சோதனை முறை இதுவாகும்.
கலப்படமில்லாத நல்ல தேனை தேர்ந்தெடுப்பது எப்படி? என கேட்கலாம்.
தேனின் தரத்தை கண்டறிவதற்கு மிக எளிமையான, எல்லோராலும் செய்து பார்க்க முடிகிற சோதனை முறை இதுவாகும். ஒரு பேப்பரில் இரண்டு துளி தேனை விட்டு பார்ப்பது. அதாவது, தண்ணீரை உறிஞ்சக்கூடிய எந்தக் காகிதத்திலும் தேனை விட்டு பார்க்கலாம்.
அப்படி செய்யும்போது தேன் அப்படியே இருந்தால் நல்ல தேன், காகிதத்தால் உறிஞ்சப்பட்டால் கலப்பட தேன். அதேபோல நீர் நிறைந்த கண்ணாடி டம்ளர் ஒன்றில் ஒரு தேக்கரண்டி தேனை மேலிருந்து ஊற்றினால், அது ஒரு கம்பியைப் போல கீழே இறங்கி அடிப்பகுதியைத் தொட வேண்டும். மாறாக, இடையிலேயே கரைய ஆரம்பித்தால், அது கலப்பட தேன். தேனில் மூன்று வகை உள்ளன. முதலாவது கொம்பு தேன். பாறைகள், மரங்களில், அதாவது வெளிச்சம் உள்ள பகுதிகளில் கூடு கட்டக்கூடியது இந்த தேனீ வகை. அதிலிருந்து குடம்குடமாக தேன் கிடைக்கும்.
2-வது பொந்து தேன். இது குகை, மர துவாரம் போன்ற இருட்டான இடங்களில் கூடு கட்டும் தேனீ வகை இது. இதைத்தான் பெட்டிகளில் வளர்க்கிறார்கள். இந்த வகை தேன் மிதமான அளவு கிடைக்கும். 3-வது வகை கொசுத் தேனீ என்ற சிறிய தேனீ மூலம் கிடைக்கும் தேன் ஆகும். இந்தத் தேன் கிடைப்பது கஷ்டம். ஆனால், இதில்தான் மருத்துவ மதிப்பு அதிகம்.
தேனை எப்படி எடுத்தாலும், அதில் உள்ள ஈரப்பதத்தை அகற்ற வேண்டும். அப்போதுதான் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். இதற்கு வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். ஆனால், அப்படி இயற்கையாக பதப்படுத்துவதற்கான காலம் அதிகமாகும் என்பதால், தேனை சூடுபடுத்தி விடுகிறார்கள். இப்படி செய்யும்போது தேனின் இயல்புதன்மை மாறிவிடுகிறது.
அது மட்டுமல்லாமல் தேனை பெருமளவில் உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள் அதனை பதப்படுத்தி விடுகிறார்கள். எனவே வணிகரீதியாக தேனை வாங்கும்போது, இந்த அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கொசுக்கள் இரவில் தூக்கத்தை கெடுப்பதோடு ஆரோக்கியத்திற்கு எதிரியாகவும் மாறிவிடும். சமையல் அறை பொருட்களை கொண்டே வீட்டுக்குள் கொசுக்களின் படை எடுப்பை கட்டுப்படுத்திவிடலாம்.
கொசுக்கள் இரவில் தூக்கத்தை கெடுப்பதோடு ஆரோக்கியத்திற்கு எதிரியாகவும் மாறிவிடும். மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற கொடிய நோய்களை பரப்பவும் செய்யும். சமையல் அறை பொருட்களை கொண்டே வீட்டுக்குள் கொசுக்களின் படை எடுப்பை கட்டுப்படுத்திவிடலாம்.
வேம்பு: வேப்ப எண்ணெய்யின் வாசம் கொசுக்களுக்கு ஒத்துக்கொள்ளாது. தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெய்யை சம அளவு கலந்து கை, கால்களில் தேய்க்கலாம். இந்த எண்ணெய்யின் வாசம் எட்டு மணி நேரம் வரை நீடிக்கும். கொசுக்கள் உடலை நெருங்காது. வீட்டின் ஜன்னல், கதவுகளில் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். கொசுக்கள் ஓட்டம் பிடித்துவிடும்.
கற்பூரம்: வீட்டில் சாமி கும்பிடும்போது நிறைய பேர் கற்பூரம் உபயோகிப்பார்கள். வழக்கத்தை விட சற்று கூடுதல் கற்பூரங்களை எரிய வைக்கலாம். கால் மணி நேரம் வரை கற்பூரங்களை எரிய விட்டால் கொசுக்கள் அண்டாது. கற்பூரத்தை நன்றாக அரைத்து அதனுடன் டர்பெண்டைன் எண்ணெய்யை கலந்து அறையில் ஆங்காங்கே தெளிக்கலாம். ஸ்பிரேயாகவும் உபயோகிக்கலாம். கொசுக்கள் ஓடோடிவிடும். கற்பூரத்தை எரிக்கும் எலக்ட்ரானிக் மெஷின்களும் புழக்கத்தில் இருக்கிறது. அதனையும் உபயோகிக்கலாம்.
லெமன் கிராஸ்: லெமன் கிராஸ் செடியையும், அதன் சாறையும் கொசுக்களை விரட்டும் மருந்தாக பயன்படுத்தலாம். இது பெரும்பாலும் கொசு விரட்டி சுருள்கள், திரவங் களில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் லெமன்கிராஸின் வாசத்தை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது குழந்தைகளின் ஆரோக் கியத்திற்கு ஏற்றதல்ல.
ரோஸ்மேரி: இந்த செடியும் கொசு விரட்டியாக செயல்படக்கூடியது. இது பெரும்பாலும் மூலிகையாகவும், மசாலா பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ரோஸ்மேரி செடியை உள் அலங்கார செடியாக வளர்க்கலாம். சமையல் அறையில் வைத்து பராமரித்தால் கொசுக்கள் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட்டுவிடலாம்.
மிளகுக்கீரை: புதினா வகையை சேர்ந்த மிளகுக்கீரை செடியும் கொசுக்களுக்கு எதிரியாக விளங்கும். இது வேகமாக வளரக்கூடியது. வீட்டில் வளர்ப்பதாக இருந்தால் கூடுதல் பராமரிப்பு அவசியம். இல்லாவிட்டால் புதர்போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும். செடியாக வளர்ப்பதற்கு பதிலாக மிளகுக்கீரை எண்ணெய்யை பயன்படுத்தலாம். அதன் வாசனை கொசுக்களின் வருகையை தடுத்து நிறுத்திவிடும்.
பூண்டு: கொசுக்களை விரட்டுவதற்கு பூண்டு மற்றும் வெங்காய செடியையும் பயன்படுத்தலாம். ஏனெனில் பூண்டு மற்றும் வெங்காய தண்டு பகுதியில் இருந்து வெளிப்படும் வாசம் கொசுக்கள், பூச்சி இனங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிரட்டி விடும்.






