search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெற்றோர்களே குழந்தைகளுக்கு சமைக்க கற்றுத் தாருங்கள்
    X
    பெற்றோர்களே குழந்தைகளுக்கு சமைக்க கற்றுத் தாருங்கள்

    பெற்றோர்களே குழந்தைகளுக்கு சமைக்க கற்றுத் தாருங்கள்

    சுவைக்கும் திறனை வீட்டிலிருக்கும் பெரியவர்கள், இளஞ்சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களது திறனை வளர்த்து விடும் முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும்.
    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சிந்தனைகளை சிதற விடாமலும், அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையிலும் பல பொழுதுபோக்கு நிகழ்வுகளில் அவர்களை ஈடுபடுத்தி அவர்களின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும்.

    இப்போதைய வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் சிறுவர்களுக்கு கற்பிக்கும் முறை எளிமையாகி விட்டது. நிகழ்நிலை வகுப்புகள் எடுக்கப்படுகின்றன, நிகழ்நிலைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன, மருத்துவ அலோசனைகள், நிகழ்நிலை வழியாக கொடுக்கப்படுகின்றன. அதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பங்கெடுக்க வைத்து, அவர்கள் நேரத்தை இனிமையானதாகவும் உபையோகமுடையதாகவும் மாற்றி அமைக்கலாம். சிறுவர்களுக்கு அதிக நேரம் கணிணியோ கைப்பேசியோ குடுக்காதவாறு வகுப்புகளை சீர்படுத்திக் கொள்ளவேண்டும்.

    கலாச்சாரமும் பேச்சும் ஊருக்கு ஊர் மாறுபட்டிருப்பதைப் போல சமையல் திறனிலும் தனித்துத் தெரிபவர்கள் நம் தமிழர்கள். ”செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்பதற்கேற்ப சமையல் கலையின் அறுசுவைகளான காரம், இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகியவற்றை சுவைக்கும் திறனை வீட்டிலிருக்கும் பெரியவர்கள், இளஞ்சிறுவர்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் சொல்லிக் கொடுத்து, அவர்களது திறனை வளர்த்து விடும் முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும். 

    இதை கற்பிக்கும் வழியாக உணவின் முக்கியத்துவம், உணவை சமைப்பதில் இருக்கும் மகிழ்ச்சி, ஒவ்வொரு உணவிற்கும் உள்ள மருத்துவகுணங்கள், சமைக்கும் போது கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், உணவை வீணடிக்காமல் தேவைக்கேற்ப சமைத்து உண்ணுதல் ஆகியவற்றை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நல்லொழுக்கத்தை  மேம்படுத்தலாம்.

    Next Story
    ×