என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பெரும்பாலும் குழந்தைகள் இந்த சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்படும் போது அதை சொல்ல தெரிவதில்லை. அம்மாக்கள் கவனித்து கண்டறிந்தால் மட்டுமே இந்த தொற்றை கவனிக்க முடியும்.
    வளரும் குழந்தைகளுக்கு சிறுநீர்த்தொற்று வருவது பொதுவானதுதான். இது எளிதான ஆன்டி பயாடிக் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். அரிதாக இது தீவிரமான பிரச்சனையின் காரணமாகவும் இருக்கலாம்.

    சிறுநீர்ப்பாதை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் சிறுநீர் பாதை சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பை வரை இயங்கும் மென்மையான குழாய் அமைப்பு உண்டு. கீழ் பாதையில் சிறுநீர்ப்பை மற்றும் வெளிப்புறம் வரை வரக்கூடிய சிறுநீர்ப்பை குழாய் அடங்கும். இந்த சிறுநீர்த்தொற்று ஏன் உண்டாகிறது என்பது குறித்து அம்மாக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

    குழந்தைகளில் யுடிஐக்கான காரணங்களில் பொதுவாக சொல்லப்படுவது மலச்சிக்கல் சிறுநீர் முழுமையாக கழிக்காமல் தேக்கிவைப்பது தான். ஆண் பிள்ளைகளை காட்டிலும் பெண் பிள்ளைகள் தான் அதிகமாக சிறுநீர்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஏனெனில் பெண் பிள்ளைகளின் சிறுநீர்க்குழி குறைவாக இருப்பதோடு ஆசனவாயிலிருந்து வெளிவரும் பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பாதை மற்றும் யோனிக்குள் நுழைந்து இரண்டு பகுதிகளிலும் தொற்றை உண்டாக்குகிறது.

    வெகுஅரிதாக சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் பிறப்பு குறைபாடுகள் உள்ள குழந்தைகள் அதிகமாக இந்த யுடிஐ பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். மேலும் சிறுநீர்ப்பாதை குறுகலாக இருந்தாலும் அது சிறுநீரை தடுப்பதோடு அங்கு கிருமிகளை அதிகரிக்க செய்து நோய்த்தொற்றுகளை வளர செய்யலாம்.

    நீண்ட நேரம் டயபர் மாற்றாமல் இருப்பது, அவ்வபோது சிறுநீர் கழித்தாலும் சுத்தமாக பராமரிக்காதது, மோசமான உணவுகளும் கூட காரணமாகலாம்.

    குழந்தைகள் யுடிஐ தொற்றால் பாதிக்கப்படும் போது உண்டாகும் அறிகுறிகள் குறித்து பார்க்கலாம். பிள்ளைகள் சிறுநீர் கழிக்கும் போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். சமயங்களில் சிறுநீரில் இரத்தம் கலந்து வரும். சிறுநீர் கழித்த பிறகு துர்நாற்றம் வீசக்கூடும். சிறுநீர் அடர்த்தியாக கலங்கலாக இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க ஓடுவார்கள்.

    சிறுநீர் சொட்டு சொட்டாக பிரியலாம். மிகச்சிறிதளவு மட்டுமே வரலாம். சிறுநீர் வந்த பிறகு கழிப்பறைக்கு செல்வதற்குள் வேகமாக வரக்கூடும். சமயங்களில் இரவில் படுக்கையை நனைக்கலாம். சிறுநீர் கழிப்பதற்கு முன்பு அல்லது பின்பு அந்த இடத்தில் எரிச்சல் வந்தாலும் அது சிறுநீர் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். பிள்ளைகள் அடிக்கடி முதுகு பக்கங்களிலும் அடி வயிற்றிலும் வலியை உணர்வார்கள்.

    பிள்ளைகளுக்கு காய்ச்சல், குமட்டல் உணர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவையும் இருக்க கூடும். இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் போது கவனித்து வந்தால் ஆரம்ப நிலையில் சிகிச்சை அளிக்கலாம்.

    ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் டயபர் பயன்படுத்துபவர்களாக இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி டயபர் மாற்றிவிடுங்கள். முடிந்தால் டயபர் அணியாமல் விடுங்கள். அடிக்கடி உள்ளாடை மாற்றினால் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம். காற்றோட்டமான இடமாக இருப்பதால் இங்கு பாக்டீரியாக்கள் வளர்வது தடுக்கப்படுகிறது.

    பிள்ளைகளுக்கு அதிகமாக பழச்சாறு தண்ணீரை பழக்குங்கள். ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பிறகும் அவர்களது உறுப்பை சுத்தம் செய்து விடுங்கள். கடினமான காரமான, மசாலா அதிகம் நிறைந்த உணவுகள், துரித உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றை தவிர்த்து மென்மையான உணவுகளை மட்டுமே கொடுத்து பழகுங்கள். சரியான சிகிச்சையோடு, உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்தினால் மீண்டும் இந்த சிறுநீர் தொற்று வராமல் தடுக்கலாம்.
    ஊட்டச்சத்து நிறைந்த கொலாஜன் ஹேர் மாஸ்க் முடி வளர்ச்சியை சிறப்பாக ஊக்குவிக்க கூடியவை. வீட்டிலேயே இந்த எப்படி செய்துகொள்வது என்று பார்க்கலாம்.
    கொலாஜன் புரதமானது முடி பராமரிப்புக்கு அதிக நன்மைகளை தருகிறது. ஆரோக்கியமான உச்சந்தலை பகுதிக்கும் முடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவக்கூடியது. முடி உதிர்தலுக்கு காரணமான மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

    கொலாஜன் நிறைவாக இருந்தால் அதிக வலுவான மயிர்க்கால்களை பெறுவதன் மூலம் முடி அடர்த்தியாக வலுவாக பெறலாம். மேலும் கொலாஜன் உற்பத்தி சீராக இருந்தால் முடி உதிர்தலும் முடி மெலிதலுக்கான சிக்கல்களும் வராமல் தடுக்க முடியும். கொலாஜன் வலுவான கூந்தலை ஊக்குவிக்கும் வகையில் ஆரோக்கியமான நன்மைகளை பெறுகிறது.

    கொலாஜன் உணவுக்கு பிறகு செயற்கை முறையில் கூந்தலுக்கு பயன்படுத்தப்படும் கொலாஜன் ஹேர் மாஸ்க் முடி வளர்ச்சிக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

    கொலாஜன் ஹேர் மாஸ்க்

    தேவையான பொருட்கள்

    ஆலிவ் எண்ணெய் -2 டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கொலாஜன் -1 டீஸ்பூன்

    மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். எண்ணெயோடு கொலாஜன் நிறைவாக கலந்திருக்க வேண்டும். கூந்தலை சிக்கில்லாமல் சீவை வையுங்கள். இப்போது இதை எடுத்து உச்சந்தலை பகுதி முழுவதும் தடவி மிதமாக மசாஜ் செய்யவும். கூந்தலின் மேல் முதல் அடிவரை தடவி விடவும். பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் வரை விட்டு இலேசான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி எடுக்கவும்.

    முடி பராமரிப்புக்கு இயல்பாகவே மாதம் ஒரு முறை இந்த மாஸ்க் பயன்படுத்துங்கள். முடி உதிர்வு குறையும். முடி வளர்ச்சி அதிகரிக்க செய்யும். முடி உதிர்வு அதிகம் இருப்பவர்கள் மாதம் இருமுறை இந்த மாஸ்க் போடுவதன் மூலம் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

    கொலாஜன் ஹேர் மாஸ்க் கூந்தலின் நிறத்தை பாதுகாக்க செய்கிறது. மயிர்க்கால்களின் நிறத்தை பலப்படுத்துவதால் நரைமுடி பிரச்சனை தள்ளி வைக்கிறது. மேலும் இது கூந்தலின் சாம்பல் நிறத்தை தடுத்து கருமை நிறத்தை உண்டாக்குகிறது.

    முடி வறட்சி அடைவதாலும் முடியின் ஈரப்பதம் குறைந்து முடி உதிர்வு அதிகரிக்க செய்யும். கொலாஜன் ஹேர் மாஸ்க் முடிக்கு ஈரப்பதம் அளிக்க செய்கிறது. முடியை வலுவாக பளபளப்பாக வைத்திருக்க செய்கிறது. முடி உடைவு, முடி பிளவு போன்றவற்றை தடுத்து முடியின் நுனி வரை பளபளப்பை தருகிறது.

    உலர்ந்த கூந்தல், எண்ணெய்பசை கூந்தல், முடி உதிர்தல், முடி பிளவு என எல்லா பிரச்சனைகளுக்கும் கொலாஜன் தீர்வு அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. முடியின் சேதத்தை தவிர்த்து முடி வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக அதிகரிக்கும் கொலாஜன் ஹேர் மாஸ்க் நீளமான அடர்த்தியான முடிக்கு சிறப்பாக உதவும். ஒரு முறை பயன்படுத்தினாலே கூந்தலின் வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள்.
    உங்க கூட்டத்தில் இருக்கும் நம்பத்தகாத நண்பரை எப்படி அடையாளம் காண்பது, அவர் உங்களுக்கு துரோகம் விளைவிப்பதை எப்படி அறிந்து கொள்வது வாங்க தெரிஞ்சுக்கலாம்.
    ஒருவர் உங்களுக்கு நம்பத்தகாத நண்பராக இருந்தார் என்றால் அவர் உங்கள் மீது அதீத பொறாமை கொண்டவராக இருப்பார். உங்களை விட்டுக் கொடுக்க தயங்க மாட்டார். அவை உங்க ரகசியமாகக் கூட இருக்கலாம். ஆனால் அவரை உங்க கூட்டத்தில் இருந்து அடையாளம் காண்பது என்பது கடினம். அதனால் தான் இந்த மாதிரி தந்திரமான நண்பரை எப்படி அடையாளம் காணலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

    அவர்கள் தவறே செய்தாலும் அதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எப்பொழுதும் மறுக்கும் நிலையிலேயே இருப்பார்கள். அவர்கள் பேசுவது ஒன்றாக இருக்கும். ஆனால் செய்வது ஒன்றாக இருக்கும். எப்பொழுதும் நேர்மாறாக நடந்து கொள்வார்கள். உதாரணமாக, அவர்கள் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஆதரிக்கிறார்கள் என்று சொல்வார்கள், உண்மையில் அவர்களின் நடத்தை வேறுபட்டு இருக்கும்.

    அவர்கள் எப்போதும் மற்றவர்கள் மீது குற்றச்சாட்டை வைத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் குற்றம் சாட்டுவதில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். எப்போதும் மற்றவர்களை நோக்கி விரல் காட்டுவது, குற்றஞ்சாட்டுவது போன்ற வேலைகளை செய்து கொண்டே இருப்பார்கள். நீங்கள் குற்றச்சாட்டு செய்வது தவறு என்று அவர்களிடம் எடுத்துரைத்தால் அவர்கள் தங்கள் நடத்தையை வெளிக்காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

    இத்தகைய நபர்கள் குறைவான பரிவுணர்வு கொண்டவர்களாகவும், கடினமான சூழ்நிலையில் ஒருவரிடம் எவ்வாறு உணர்திறன் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை நாகரீகம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். மிக மோசமான ஒன்று என்னவென்றால், அவர்கள் மற்றவர்கள் வலியைத் தூண்டியதற்கும் காயப்படுத்தியதற்கும் கூட, அவர்கள் மன்னிப்பு கேட்கவோ அல்லது எளிமையாக ‘மன்னிக்கவும்’ என்று சொல்லவோ மாட்டார்கள். மற்றவர்களை மதிக்க மாட்டார்கள்.

    ஒருவரின் ரகசியத்தை காப்பேன் என்று கூறி சத்தியம் செய்தால் கூட காக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் மற்றவரின் வாழ்க்கை எந்தளவுக்கு கலங்கப்பட்டு உள்ளது என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதை மறந்து மற்றவரிடம் எல்லாவற்றையும் சொல்ல தொடங்கி விடுவார்கள். இதனால் ரகசியமான விஷயங்கள் பரவத் தொடங்கி விடும்.

    நட்பில் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். ஆனால் அந்த பிணைப்பு உடையும் போது அது உங்க மனதை புண்படுத்த ஆரம்பித்து விடும். அவநம்பிக்கை, முரண்பாடு மற்றும் சிக்கலான மனப்பான்மை ஆகியவை மிகவும் பொதுவானவை ஆகும். இந்த மாதிரியான நண்பர்கள் ஒரு விஷயத்தில் கூட உங்களுடன் ஒட்டியிருக்க மாட்டார்கள். உங்களுடன் எப்பொழுதும் முரண்பாட்டில் ஈடுபடுவார்கள்.
    பலர் முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பது தெரியாமல் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். சரியான முறையை கடைப்பிடிக்கவில்லையென்றால் முகக்கவசம் அணிவதில் பயனிருக்காது..
    கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்திக் கழுவுதல் மற்றும் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்திக் கழுவுதல் ஆகியவற்றுடன் முகக்கவசம் அணிவதும் கட்டாயம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். பலர் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் உள்ளனர். சிலர் முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பது தெரியாமல் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். சரியான முறையை கடைப்பிடிக்கவில்லையென்றால் முகக்கவசம் அணிவதில் பயனிருக்காது.. 

    சிலர் முகக்கவசத்தை சரியாக அணியாமல் இருப்பர். ஒரு காதில் அதை மாட்டிக்கொண்டு மறுபுறம் இன்னொரு காதில் மாட்டாமல் தொங்கவிட்டபடி சிலர் இருக்கின்றனர். சிலர், மூக்குக்குக் கீழே இருக்கும்படி அணிந்துள்ளனர். இப்படி முகக்கவசம் அணிவதால் எந்தப் பயனும் இல்லை. முகக்கவசத்தை இரு காதுகளில் மாட்டி, வாய் மற்றும் மூக்கு முழுவதுமாக மறைந்திருக்கும்படி அணியவேண்டும். இன்னும் சிலர் கூட்டமான பகுதிகளுக்குச் செல்லும்போது மட்டும் முகக்கவசத்தை அணிகின்றனர். மற்றவர்களிடமிருந்து நமக்கு SARS-CoV-2 கிருமி பரவாமல் இருக்கவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கவும் முகக்கவசத்தை சரியான விதத்தில், எப்போதும் அணிவது அவசியம். 

    பல முகக்கவசங்கள் மேற்புறம் குறுகியதாகவும் கீழே விரிந்ததாகவும் இருக்கும். குறுகிய மேற்புறத்தை மூக்கின்மேல் வைத்து அழுத்தினால் அது சரியாக மூக்கின்மேல் பொருந்திக்கொள்ளும். கீழ்ப்பாக்கம் வாயை மூடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அப்படிப்பட்ட முகக்கவசத்தை சிலர் அவசரத்தில் மாற்றி அணிந்து கொள்கின்றனர். இது முகத்தில் சரியானபடி பொருந்தாது. ஆகவே, அதனால் பயன் இராது. 

    சர்ஜிக்கல் மாஸ்க் எனப்படும் மருத்துவ முகக்கவசங்களை அணியும்போது, எது வெளிப்புறம் வரவேண்டும் என்று கவனித்து அணியவேண்டும். சிலர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பக்கம் முகத்தில்படும்படி அணிகின்றனர். வெளியே இருக்கக்கூடிய பக்கம் உள்ளே வரும்படி மாற்றி அணிந்தால் கிருமி தொற்றியிருக்கும் வெளிப்புறம் நேரடியாக மூக்கு மற்றும் வாய்மீது படுவதால் கிருமி பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, முகக்கவசத்தின் பக்கங்களை மாற்றி அணிந்துவிடாமல் கவனமாக இருக்கவேண்டும்.. 

    சிலர் முகக்கவசத்தை அடிக்கடி கையினால் தொட்டுச் சரிப்படுத்திக்கொண்டே இருப்பர். அப்படிச் செய்வது தவறு. முகக்கவசத்தின் வெளிப்புறத்தை கைகளால் தொடும்போது கிருமியைத் தொடுவதற்கான வாய்ப்பு உண்டு. ஆகவே, அடிக்கடி முகக்கவசத்தை சரி செய்வது மற்றும் கழற்றி திரும்பவும் அணிவது ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். தவிர்க்கமுடியாமல் சரிசெய்ய நேரிட்டால், காதுகளில் அணியக்கூடிய பட்டையை இழுத்துச் சரிசெய்யலாம். ஆனால், உடனடியாக கைகளைச் சோப்பு பயன்படுத்தி அல்லது சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்யவேண்டும்.. 

    பலர், முகக்கவசத்தை வேண்டா வெறுப்பாக அணிகின்றனர். ஒருமுறைக்குமேல் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள், வீடுகளில் துணிகளால் செய்த முகக்கவசங்கள் ஆகியவற்றைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் டிடர்ஜெண்ட் பயன்படுத்திக் கழுவி, நல்ல வெயிலில் உலர்த்தி பின்னரே அணிய வேண்டும். . 
    குளிர் காலம் வந்தாலே பல பயங்கள், சந்தேகங்கள் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. குளிர்காலத்தில் அடிக்கடி தலைக்கு குளிக்கலாமா? என்பதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.
    குளிர் காலம் வந்தாலே பல பயங்கள், சந்தேகங்கள் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. சிலருக்கு உடல் சூடு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது அவர்கள் உட்கார்ந்து எழுந்து இடத்தில் சூடாக இருப்பதாக மற்றவர்கள் உணருவார்கள். 

    அப்படிப்பட்ட உடல் கொண்டவர்கள், குளிர்ச்சியான காற்று, மழை, பனி விழும் சமயத்தில் வீட்டுக்கு வெளியே இருந்தால் மூக்கடைப்பு, தும்மல், நீர்கோத்து தலைவலி போன்றவை வரும். இவற்றைப் பீனிச பாதிப்பு என்பர். முன்னால் குனிந்தால் நீர் ஓடுவதுபோல் பாரம் இருந்தால், சைனஸிட்டிஸ் இருக்கக்கூடும். 

    காது சீழ், டான்சிலிடிஸ் போன்ற எல்லாமே உடலின் மேல் பக்க உறுப்புகளைச் சார்ந்த சுவாச பிரச்சனைகள் எனப்படுகின்றன. இந்தப் பாதிப்பு உள்ளவர்கள், தலைக்குக் குளிக்கலாமா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. பலர் பயத்தில் தலைக்குத் தண்ணீர் ஊற்றுவதேயில்லை. கண்டிப்பாகத் தினமும் தலைக்குக் குளிக்கவேண்டும். 

    உடம்பு வலி இருக்கிறது; காய்ச்சல் இருக்கிறது என்றால் மட்டும் தலைக்குத் தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்க்கலாம். பல ஆண்டுகள் தலைக்குக் குளித்து பழக்கமில்லையென்றால் உடனடியாக குளிக்கவேண்டாம். சுக்குத்தைலம், நொச்சி தைலம், அரக்கு தைலம் போன்ற சித்த மருத்துவம் சார்ந்த தைலங்களைத் தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.. 

    தயிர் பச்சடியில் வெங்காய பச்சடி,வெள்ளரிக்காய் பச்சடி என பல வகை சமைக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் விதமாக அன்னாசிப்பழத் தயிர் பச்சடி எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..
    தேவையான பொருள்கள்:

    அன்னாசிப் பழம் - 1 கப் 
    தயிர் - 3/4 கப் 
    பச்சை மிளகாய் - 2 
    தேங்காய் துருவல் - 1/2 கப் 
    உப்பு - தேவையான அளவு 
    கடுகு- 2 ஸ்பூன் 
    எண்ணெய் -2 ஸ்பூன் 
    கறிவேப்பிலை - தேவையான அளவு 
    வெந்தயம் - 1/2 ஸ்பூன் 
    சீரகம் - 1 ஸ்பூன். 

    செய்முறை:

    அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சூடானதும் கடுகு,வெந்தயம் சேர்த்து தாளித்த பிறகு நறுக்கிய அன்னாசி பழம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம், தேங்காய்த்துருவல் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து தேவைபட்டால் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    கடைசியில் தயிர் சேர்த்து இறக்கி விட வேண்டும். 

    இதனை பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டாலே சுவை அள்ளும்.. 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவதற்கு பெரும்பாலும் கர்ப்பம் மட்டுமே காரணமாக இருக்கமுடியாது. மாதவிடாய் தள்ளிப்போவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன.
    பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவதற்கு பெரும்பாலும் கர்ப்பமே காரணமாக இருக்கமுடியும். மாதவிடாய் தள்ளிப்போவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன. இளம்பெண் பருவமடைந்த புதிதில் அல்லது மாதவிடாய் நிற்கப்போகும் (மெனோபாஸ்) வயதில் மாதவிடாய் தள்ளிப் போகக்கூடும். 28 நாள்கள் என்பதே சரியான மாதவிடாய் சுற்றாகும். பெண்களின் உடல் பல்வேறு மாற்றங்களை கடந்து செல்வதால் 21 முதல் 35 வரையிலான நாள்களும் ஆரோக்கியமாகவே கருதப்படுகிறது. 35 நாள்கள் கடந்துதான் மாதவிடாய் வருகிறதென்றால் அதை கவனிக்கவேண்டும். கருத்தரிப்பு உறுதியாகாத நிலையில் அடிக்கடி மாதவிடாய் தள்ளிச் சென்றால் அல்லது மாதவிடாயே வரவில்லையென்றால் அதற்குச் சில காரணங்கள் இருக்கக்கூடும். . 

    மாதவிடாய் தள்ளிப்போவதற்கு முக்கியமான காரணமாக ஹார்மோன் மாற்றம் இருக்கிறது. சினைப்பை நீர்க்கட்டி (பிசிஓடி) பாதிப்பு மாதவிடாய் தள்ளிப் போவதற்கும் சராசரி சுற்றின் அளவு நீண்டுபோவதற்கும் காரணமாகிறது. ஹார்மோன் சமச்சீராக இல்லாதபட்சத்தில் சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. சில பெண்களுக்கு ஆண்களில் இருக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருக்கும். அது மாதவிடாய் சுற்றிலும், கருத்தரிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும். வாழ்க்கை முறையை மாற்றுவது, சரியான மருந்துகளை சாப்பிடுவது ஆகியவை இப்பிரச்னையை தீர்த்து மீண்டும் மாதவிடாய் சுற்றை ஒழுங்காக்குவதற்கு உதவும்.. 

    மாதவிடாய் சுற்று ஒழுங்கற்று அமைவதற்கு மன அழுத்தமும் காரணமாகிறது. மிகுந்த மன அழுத்தத்தினூடாக செல்லும் பெண்கள் சிலருக்கு 2 மாதங்கள் கூட மாதவிடாய் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. மன அழுத்தம் ஹார்மோன் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் ஹைபோதலாமஸின் செயல்பாட்டில் மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. இந்தப் பாதிப்பு, உடல் பருமனாவதற்கு காரணமாகிறது.. இரத்த சோகை மற்றும் இரும்புச் சத்து குறைபாடு குழந்தை பேற்றுக்கான பருவத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இரத்தசோகை மற்றும் இரும்புச் சத்து குறைபாடு இருக்கும். உடலில் இரும்புச் சத்து கிரகிக்கப்படுவதில் குறைபாடு இருந்தால், இரத்த ஓட்டம் பாதிப்படையும். அதன் காரணமாக மாதவிடாய் தள்ளிப் போகக்கூடும்.. 

    சில பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்குபடுத்துவதற்காக குழந்தைப் பேற்றை தடுக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டின் இருப்பதால் ஹார்மோன் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி மாதவிடாயை 28 நாள் சுற்றாக மாற்றுகிறது. இம்முறையில் முதல் மூன்று வாரங்கள் வெளியாகும் ஹார்மோன்கள் கருத்தரிப்பை தடுக்கும். ஆகவே, மாதவிடாய் தள்ளிப் போகலாம். பிரசவத்தை தள்ளிப்போடும் மாத்திரைகளை நீண்டகாலம் சாப்பிடும் பெண்களுக்கும் மாதவிடாய் சுற்றில் பாதிப்பு ஏற்படலாம்..

    வயதுக்கு ஏற்ற உடல் எடை இல்லையென்றால் கரு முட்டை வெளியேறுவதில் பாதிப்பு உண்டாகும். அதிக எடை இருந்தாலும் இதில் பாதிப்பு ஏற்படும். சரியான வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் மாதவிடாய் சுற்று சீரற்று போவதற்கு காரணமாகலாம்.. 

    நீரிழிவு மற்றும் அழற்சி போன்ற குறைபாடுகள், வயிற்று பிரச்னை இருப்போருக்கு ஹார்மோன் பாதிப்பும், மாதவிடாயில் சீரற்ற தன்மையும் இருக்க வாய்ப்புண்டு. அதிர்ச்சி தரும் நிகழ்வுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மன அழுத்தத்தின் காரணமாக மாதவிடாய் தள்ளிப்போகக்கூடும்.. 

    தைராய்டு சுரப்பி, உடலின் வளர்சிதை மாற்றத்தில், ஹார்மோன் தூண்டுதலில், இனப்பெருக்க மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. தைராய்டு சுரப்பி குறைவாகவோ அல்லது மிகுதியாகவே செயல்பட்டால் பெண்களின் மாதவிடாய் சுற்று பாதிக்கப்படலாம். 

    உடல் எடை குறைவாக இருப்போருக்கு உடல் செயல்பாட்டிலும் மாதவிடாய் சுற்றிலும் பாதிப்பு ஏற்படுவதுபோல, மிகுதியான உடல் எடையும், பருமனும் கொண்டவர்களுக்கும் ஹார்மோன் பிரச்னை இருக்கும். அதிகப்படியான உடல் எடை, அழற்சி (inflammation) ஏற்பட காரணமாகிறது. உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு ஆஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கக்கூடும். இதன் காரணமாக மாதவிடாய் தள்ளிச் செல்வதை மருத்துவர் கண்டுபிடித்தால், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை அறிவுறுத்தி மீண்டும் மாதவிடாயை சரியான சுற்றுக்கு கொண்டு வர உதவுவார்.. 
    குழந்தைகளின் மூளை நன்கு வளர்ச்சி பெறவும் தூண்டப்படுவதற்கு ஏற்றதான பயிற்சிகளை விளையாட்டு மூலம் கொடுக்கலாம்.
    குழந்தைகள் தங்களின் ஐந்து வயதை அடைவதற்குள் 90% அளவுக்கு மூளை வளர்ச்சி பெற்றுவிடும் என ஆய்வார்கள் தெரிவிக்கின்றனர். இந்த வயதில் குழந்தைகளுக்கு மூளைக்கான பயிற்சிகளைக் கொடுத்து குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும். வெறும் படிப்பு மட்டுமே குழந்தைகளுக்கு போதாது. இன்னும் நிறைய நல்ல விஷயங்களைக் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும். 

    பில்டிங் பிளாக்ஸ் விளையாட்டு : ஒரு வயது முடிந்த குழந்தைகளுக்கு தருகின்ற எளிமையான விளையாட்டு இது. வெவ்வேறு தோற்றத்தில், பல நிறங்களில் காணப்படும் இந்த பிளாக்ஸால் உருவத்தைக் கட்டமைக்க வேண்டும். தங்களின் சொந்த கற்பனையால், படைப்பாற்றல் திறமையால் குழந்தைகள் பில்டிங் பிளாக்ஸ் வைத்து ஏதோ ஒரு உருவத்தை செய்வார்கள். இது மூளைக்கு சிறந்த பயிற்சியாகும். மூளை தூண்டப்படும்.

    வார்த்தை விளையாட்டு : ஃப்ளாஷ் கார்டில் உள்ள வார்த்தைகளைப் பார்த்து, அதற்கு ஏற்ற படத்துடன் பொருத்துவது போன்ற விளையாட்டு இது. சிங்கம், புலி, மான், மயில் என விலங்குகளின் பெயரை வைத்துப் படத்தை பொருத்துவது, படத்தை வைத்து பெயரை பொருத்துவது போன்ற விளையாட்டு. எழுத்து திறமை மேலோங்கும். நினைவு திறன் அதிகரிக்கும்

    கண்டுபிடி கண்டுபிடி : ஏதாவது ஒரு பேப்பரில் பந்து என எழுதிவிட்டு அதைக் குழந்தையிடன் காண்பிக்கவும். அந்தப் பந்தை வீட்டில் தேடி கண்டுபிடிக்க சொல்லலாம். இதுபோல வார்த்தை வைத்து பொருளை கண்டுபிடிக்கும் விளையாட்டால் குழந்தைகள் வார்த்தைகளை அதன் சொல் அமைப்பை நன்றாகவே கற்றுக் கொள்வார்கள்.

    போர்ட் கேம்ஸ் : பாம்பு - ஏணி, லூடோ, செஸ் போன்ற போர்டில் விளையாடும் விளையாட்டுகளால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். பிரச்னையை கையாளும் திறன் மேலோங்கும். பொறுமை, வெற்றி, தோல்வி ஆகியவற்றைப் புரிந்து கொள்வார்கள்.

    ரைம்ஸ் பாடி ஆடுதல் : ரைம்ஸ் பாடல்களை போட்டு பாடிக்கொண்டே நடனமாட சொல்லலாம். குதிப்பது, இடுப்பு ஆட்டுவது, கைகளை அசைப்பது போன்ற உடல் தொடர்பான பயிற்சியாகவும் அமையும். மகிழ்ச்சியான மனநிலை குழந்தைகளுக்கு கிடைக்கும்.

    எண் விளையாட்டு : இசையை ஒலிக்க செய்துவிட்டு, 1 முதல் 100 வரை சொல்ல வேண்டும். பாட்டை நிறுத்திய உடனே எந்த எண்ணில் இருக்கிறார்களோ அந்த எண்ணை எழுதி காண்பிக்கலாம். ஒவ்வொரு முறை பாட்டை நிறுத்தும்போது ஒவ்வொரு குழந்தையும் எண்ணை மாற்றி மாற்றி சொல்லி கொண்டே இருப்பார்கள். இசை நிறுத்தியவுடன் எந்த எண்ணில் விட்டார்களோ அந்த எண்ணை எழுதி காண்பிக்கலாம். குழுவாக விளையாடும் திறன் மேலோங்கும். எண் பற்றிய அறிவு கிடைக்கும்.

    மொழி திறன் :உங்களுக்கு தெரியுமா? குழந்தைகளால் தங்களது 3-5 வயதுக்குள்ளேயே 2-3 மொழிகளைக் கற்கும் திறன் இருக்கும். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளை வீட்டில் பேசினால், இரண்டையுமே கற்று கொள்ளும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என எந்த மொழியையும் சுலபமாக குழந்தைகளால் கற்க முடியும்.

    உடலுக்குப் பயிற்சி தரும் விளையாட்டு : ஓடுதல், ஸ்கிப்பிங் விளையாடுதல், குதித்தல், ஓடிப் பிடித்து விளையாடுதல், பந்தை பிடித்தல், கொகோ விளையாடுதல் எனப் பல்வேறு விளையாட்டுகளால் பல்வேறு நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்கும். உடற்பயிற்சி, மனபயிற்சி இவை.
    மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பயந்து மதிய குட்டித்தூக்கத்தை தவிர்க்கவேண்டாம் என்று சொல்கிறது புதிய ஆராய்ச்சி.
    மதியம் சாப்பிட்டு முடித்ததும் சிலருக்கு கண்களை மூடும் அளவுக்கு லேசான கிறக்கம் ஏற்படும். அப்படியே குட்டித் தூக்கம் போடலாம் என்ற நிலைக்கு உடல் தயாராகும். ஆனால் மனமோ, அலுவலக நேரத்தில் தூங்கக்கூடாது என்று எச்சரிக்கும். அதனால் அருகில் உள்ளவர்களிடம் பேசுவது, ஆன்லைனில் ஏதாவது வீடியோ பார்ப்பது என்று தூக்கத்திற்கு கடிவாளம் போட முயற்சிப்பார்கள். ஆனால் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பயந்து மதிய குட்டித்தூக்கத்தை தவிர்க்கவேண்டாம் என்று சொல்கிறது புதிய ஆராய்ச்சி.

    `மதிய உணவுக்கு பிந்தைய லேசான தூக்கம் நல்லது. தூங்கி எழுந்ததும் உற்சாகமாக செயல்பட்டு வேலையில் நேர்த்தியை காட்ட முடியும். பிரச்சினைக்குரிய செயல்களுக்கு கூட தீர்வு காணும் அளவுக்கு மூளை உற்சாகமாக வேலைசெய்யும்' என்று இங்கிலாந்தில் உள்ள ப்ரிஸ்டோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மதியம் ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் இடையில் இந்த தூக்கத்தை மேற்கொள்ளலாம் என்கிறார்கள். இரவில் விழித்து பணி செய்பவர்கள், இரவில் வாகனம் ஓட்டிச்செல்கிறவர்கள் இதை கடைப்பிடிப்பது அவசியம் என்றும் சொல்கிறார்கள். குட்டித்தூக்கமான அந்த `பவர் நாப்' முடிந்து எழுந்ததும் ஒரு கப் காபி அல்லது டீ பருகினால் உற்சாகம் இரட்டிப்பாகும் என்பதும் அவர் களது கருத்தாக இருக்கிறது. ஆனால் இதில் கவனிக்கத்தகுந்த விஷயம் என்னவென்றால், அந்த தூக்க நேரம் 30 நிமிடத்தை கடந்துவிடக் கூடாது. கடந்தால், அது நீண்ட உறக்கமாகி அழகு, ஆரோக்கியத்தை பாதிக்கவும் செய்யுமாம்.

    நமது செல்போனை சுவிட் ஆப் செய்வது போன்று நமது உடலை சுவிட் ஆப் செய்ய முடியாது. நாம் தூங்கும்போதும் மூளையும், உடலும் பிசியாக இயங்கிக்கொண்டுதான் இருக்கும். நினைவுகளை பாதுகாப்பது, எலும்புகளை பலப்படுத்துவது, புதிய செல்களை உருவாக்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீரமைப்பது போன்று ஏராளமான பணிகளை அது செய்துகொண்டேதான் இருக்கும். அதனால் மூளையின் செயலுக்கு உத்வேகம் கொடுக்க 30 நிமிட பகல் உறக்கம் அவசியம் என்கிறது ஆராய்ச்சி.
    குளிர்காலத்தில் தண்ணீர் தாகத்தை பெரும்பாலும் உணரமுடியாது. அதனால் பருகும் தண்ணீர் அளவை குறைத்துவிடக்கூடாது.
    குளிர்காலத்தில் தண்ணீர் தாகத்தை பெரும்பாலும் உணரமுடியாது. அதனால் பருகும் தண்ணீர் அளவை குறைத்துவிடக்கூடாது. சிலர் பசிக்கும், தாகத்திற்கும் வித்தியாசம் தெரியாமலும் தடுமாறுவார்கள். போதுமான இடைவெளியில் தண்ணீர் பருகினால் அதிக பசி உணர்வு தோன்றாது. அதனால் தாகம் எடுக்கவில்லை என்றாலும் தண்ணீர் பருகிவிடுவது நல்லது. அது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.

    காலை உணவுடன் நார்ச்சத்து, புரதம் அடங்கிய உணவு பதார்த்தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய உணவுகள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். அடிக்கடி பசிக்கவும் செய்யாது. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை எரிக்கவும் துணை புரியும்.

    குளிர் காலத்தில் டீ, காபிக்கு மாற்றாக கிரீன் டீ பருகலாம். அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அத்துடன் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவும். உடலில் செலவிடப்படாத கலோரிகளையும் வேகமாக எரித்து உடல் எடையை கட்டுக்குள் வைத் திருக்கவும் துணைபுரியும்.

    குளிர் காலத்தில் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் ஒரு டீஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். அது வயிற்றுக்கு இதமளிக்கும். நோயெதிர்ப்பு சக்தியையும் உருவாக்கும். உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.

    குளிர் காலத்தில் நடைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். தினமும் அரை மணி நேரத்திற்கு மேலாக நடப்பது உடல் எடை அதிகரிப்பதை தடுத்துவிடும். நடைப்பயிற்சியை போல் அரை மணி நேரம் நடனமும் ஆடலாம். அது உடல் தசைகளை இலகுவாக்கவும் உதவும். தியானம் செய்வதும் நல்ல பலனை தரும்.

    என்னதான் உடற்பயிற்சியையும், உணவு பழக்கத்தையும் சிறப்பாக கடைப்பிடித்தாலும் போதுமான நேரம் தூங்கி ஓய்வெடுப்பதும் அவசியம். நன்றாக தூங்காவிட்டால் உடல் சோர்ந்துபோய்விடும். குளிர்காலத்தில் அதிக சோம்பல் காணப்படும். அதனால் நொறுக்குத்தீனிகளை பலரும் சாப்பிட விரும்புவார்கள். அது உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு, உடல் எடையையும் அதிகரிக்கச் செய்துவிடும்.
    தாம்பத்திய விஷயத்தில் மனைவியின் விருப்பங்களை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பொதுவாக படுக்கை அறையில் செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா?
    பாலியல் விஷயத்தில் மனைவியின் விருப்பங்களை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மனைவியை முறையாக அணுகத் தெரியாதவர்களாகவும், வாழ்க்கையை ருசிக்கத் தெரியாதவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பொதுவாக படுக்கை அறையில் செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா?

    தவறு: மனைவி எப்போதுமே கணவரிடம் அன்பையும், பாசத்தையும் தான் எதிர்பார்ப்பார். பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் கொள்வதில்லை.

    நிஜம்: கணவருக்கு பாலியல் ஆர்வம் இருப்பதுபோல் மனைவிக்கும் இருக்கும். பசி, தாகம் போன்று பாலியல் செயல்பாடும், திருப்தியும் மனைவிக்கு அத்தியாவசியமானதுதான். அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமை கணவருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் அன்பும், பாசமும்தான் பாலியல் செயல்பாடுகளுக்கான எரிபொருள் போன்றது. அதனால் அன்பு நிறைந்த தம்பதியினரே பாலியல் செயல்பாடுகளின் எல்லையை அடிக்கடி எட்டுகிறார்கள்.

    தவறு:பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட அதிகமான தயாரெடுப்புகள் ஆண்களுக்கு அவசியம்.

    நிஜம்: மனைவியுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட அதிகமான தயாரெடுப்புகள் ஆண்களுக்கு தேவையில்லை. தம்மால் இயலாமல் போய்விடுமோ என்ற பதற்றமே அதிக தயாரெடுப்பிற்குரிய காரணமாக இருக்கும். போட்டித் தேர்வுக்கு போன்று இதற்கும் தயாராகவேண்டியதில்லை. பதற்றம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இயல்பான அணுகுமுறையே முழுமையான தாம்பத்யத்திற்கு தேவை. ஆண்களின் தேவையற்ற தயாரெடுப்புகள் முரண்பாடான சூழலை உருவாக்கி, மனைவியை படுக்கையில் மனங்கோண வைத்துவிடும்.

    தவறு:மனைவியுடன் படுக்கையில் படுத்துக்கொண்டே அதிக நேரம் செல்போனை துழாவிக்கொண்டிருப்பது மற்றும் சாட்டிங் செய்வது.

    நிஜம்: படுக்கை அறை சூழல், தம்பதிகளின் சுவாரஸ்யமான பேச்சு, அவர்களது தோற்றப்பொலிவு போன்ற அனைத்துமே நிறைவான தாம்பத்ய தொடர்புக்கு மிக அவசியம். மனைவி பாலியல் விருப்பத்தோடு நல்ல மனநிலையில் இருக்கும்போது கணவர் செல்போனில் கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தால் அது படுக்கை அறை சூழலை கெடுத்துவிடும். மனைவிக்கு எரிச்சலும், சந்தேகமும் தோன்றிவிடும். பெரும்பாலான குடும்பங்களில் மகிழ்வான தாம்பத்யத்திற்கு செல்போன் பெரும் இடைஞ்சலாக இருந்துகொண்டிருக்கிறது.

    தவறு:தாம்பத்யத்தில் மனைவியின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டியதில்லை.

    நிஜம்: பாலியல் செயல்பாட்டில் கணவன்- மனைவி இருவரின் உடலும்- மனமும் ஒன்றிணைகிறது. ஒவ்வொரு முறை இணைவதும் வசந்தமான நினைவுகளாக இருக்கும். கட்டிப்பிடித்தலில் இருவரும் சமநிலையை கடைப்பிடிக்கிறார்கள். இருவரும் சமமாக இணைந்தால்தான் கட்டிப்பிடித்தல் முழுமைபெறும். ஆனால் பாலியல் செயல்பாட்டின்போது அந்த சமநிலையில் ஏற்றத்தாழ்வு உருவாகிவிடுகிறது. மனைவியின் உணர்வுகளுக்கும், விருப்பங்களுக்கும் உரிய மதிப்பை அளிக்காமல், "என் உடல்.. எனது ஆசை.. எனது இன்பம்..எனக்கு மட்டுமே திருப்தி.." என்ற நிலைக்கு கணவன் சென்றுவிடக்கூடாது. இப்படிப்பட்ட மனோநிலை கொண்டவர்கள் தாம்பத்யத்தில் மனைவியின் விருப்பங்களுக்கு உரிய மரியாதையை வழங்கமாட்டார்கள். தாம்பத்ய செயல்பாடுகளில் நிர்பந்தம், திணிப்பு, அடிமைத்தனம், அறுவறுப்பு, சுயநலம் போன்ற எதற்கும் ஆண்கள் இடம்கொடுத்துவிடக்கூடாது.

    தவறு:ஆண்கள் டென்ஷனை தீ்ர்க்கும் மருந்து போல் மனைவியை பாலியலுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

    நிஜம்: ஆண்களுக்கு ஏற்படும் பல பாதிப்புகளுக்கு திருமணம்தான் தீர்வாக இருக்கும் என்ற தவறான கருத்து சமூகத்தில் நிலவியதுண்டு. தினசரி வாழ்க்கையில் அனுபவிக்கும் பிரச்சினைகளுக்கும் மருந்துபோல் பாலியல் இன்பம் தீர்வு தரும் என்ற நம்பிக்கையும் சிலருக்கு இருக்கிறது. சிலர் தூக்கத்திற்கான மருந்துபோல் பாலியல் செயல்பாட்டை பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் கணவன்-மனைவி இடையேயான அன்பை பெருக்கவும், வாழ்க்கையில் ஆனந்தத்தை ஏற்படுத்தவும் அத்தியாவசியமான தேவையாக பாலியல் இருக்கிறது. அதே நேரத்தில் நெருக்கடிகளில் இருந்து மனதை மீளவைக்கும் சக்தியும், கணவன்-மனைவி இடையேயான சின்னச்சின்ன சண்டைகளை தீர்த்துவைக்கும் சக்தியும் பாலியல் செயல்பாட்டிற்கு இருக்கிறது. மருந்தை நோய் வந்தால் மட்டுமே பயன்படுத்துவோம். அதுபோல் கணவர் தாம்பத்யத்தை கசப்பு மருந்துபோல் ஆக்கி மனைவியை முகம் சுளிக்கவைத்துவிடக்கூடாது. தம்பதிகளுக்கு எல்லா காலகட்டத்திலும் பாலியல் இன்பம் தேவை.

    தவறு:உடல் சுத்தம் இல்லாமல் படுக்கை அறையில் மனைவியை அணுகுவது.

    நிஜம்: பெரும்பாலான ஆண்கள் உடல் சுத்தத்தோடு படுக்கை அறைக்கு செல்வதில்லை. உடல் சுத்தம் என்பது காலையில் அலுவலகத்திற்கு செல்லும்போது மட்டுமே அவசியம் என்று நினைக்கிறார்கள். படுக்கைக்கு செல்லும்போது உடல் சுத்தமும், மனஉற்சாகமும் மிக அவசியம். ஆண்கள் அலட்சியத்தால்தான் உடல் சுத்தத்தை பேண மறுக்கிறார்கள். ஆண்களில் பெரும்பகுதியினர் ‘‘படுக்கைக்கு வரும்போது நான் இப்படித்தான் இருப்பேன். நீதான் சுத்தமாக குளித்து அலங்காரம் செய்துகொண்டு அசத்தலாக வரவேண்டும்’’ என்பதுபோல் மனைவியிடம் பேசுகிறார்கள். மனைவி அழகாக இருக்கவேண்டும் என்று கணவர் விரும்புவதுபோல், கணவர் அழகாக இருக்கவேண்டும் என்று மனைவியும் விரும்புவார் என்ற நிஜம் பெரும்பாலான ஆண்களுக்கு புரிவதில்லை. இதில் இருக்கும் கசப்பான உண்மை என்னவென்றால், உடல் சுத்தம் இல்லாத கணவரை மனைவி அரைகுறை மனதோடுதான் அனுசரிப்பார். அது முழு இன்பம் தராது.
    அழகான முக அமைப்பிற்குரிய முக்கியமான அடையாளமாக மூக்கு திகழ்கிறது. மூக்கில் இருக்கும் சிறிய குறைபாடுகளை போக்க, அதற்குரிய மசாஜ் செய்யலாம்.
    அழகான முக அமைப்பிற் குரிய முக்கியமான அடையாளமாக மூக்கு திகழ்கிறது. அதனால் தான் அதற்கு கூடுதல் அழகூட்டி மெருகேற்ற விரும்புகிறோம். பெண்கள் மூக்கை அழகு படுத்தவே மூக்குத்தி அணிந்துகொள்ளவும் செய்கிறார்கள். மூக்கில் இருக்கும் சிறிய குறைபாடுகளை போக்க, அதற்குரிய மசாஜ் செய்யலாம்.

    * வயது அதிகரிக்கும்போது எலும்புகள் மற்றும் தசைகளின் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படும். மசாஜ் செய்வதன் மூலம் அவற்றின் இயல்புத் தன்மையை சீராக பராமரிக்கலாம். அதனை கருத்தில் கொண்டுதான் பச்சிளம் குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. குழந்தைகளை குளிப்பாட்டும் போதும், எண்ணெய் மசாஜ் செய்யும்போதும் மூக்குக்கும் மசாஜ் செய்வது வழக்கம். அவை மூக்குக்கு நல்ல வடிவம் பெற்றுக்கொடுக்கும். குழந்தைகள் மட்டுமின்றி மற்றவர்களும் அவ்வப்போது மூக்குக்கு மசாஜ் செய்வது நல்லது. விரல் களால் மூக்கை கீழ்நோக்கியும், மேல்நோக்கியும் அசைத்து மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

    * வலமிருந்து இடமாக மூக்கை அசைத்து மசாஜ் செய்வதும் மூக்குக்கு நல்ல வடிவத்தை ஏற்படுத்தி கொடுக்கும். அத்துடன் ஒற்றை தலைவலி, சைனஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறவும் உதவும்.

    * மூச்சை நன்றாக உள் இழுத்துக்கொண்டு இடமிருந்து வலமாகவும் மசாஜ் செய்ய வேண்டும். தினமும் சிறிது நேரம் இவ்வாறு மசாஜ் செய்து வரலாம். இது மூக்குக்கு நல்ல வடிவம் கொடுப்பதோடு நாசி தசைகளுக்கும் வலு சேர்க்கும்.

    * மூக்குக்கு மசாஜ் செய்யும்போது அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. மூக்கு எலும்புகள் மென்மையானவை. அவற்றுக்கு அழுத்தம் கொடுத்தால் காயமடைந்துவிடக்கூடும்.

    * மூக்கின் இரு புறமும் விரலைவைத்து லேசாக அழுத்தியும் மசாஜ் செய்யலாம். அப்படி செய்யும்போது மூக்கின் தடிமன் குறையும். இரு கை விரல்களையும் பயன்படுத்தி இந்த மசாஜை செய்ய வேண்டும். மூக்கின் அழகுக்கான மேக்கப் போடுவதை விட மசாஜ் செய்வது எளிதானது.

    * நன்றாக மூச்சை உள் இழுத்து ஒரு துவாரத்தை விரலை கொண்டு அடைத்துவிட்டு மற்றொரு துவாரம் வழியாக மூச்சை வெளியே விட்டு மூச்சு பயிற்சி செய்தால் ஆரோக்கியம் கிடைப்பதோடு மூக்கு அழகும் மேம்படும்.
    ×