என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கர்ப்பிணிகளை கொரோனா பாதித்தாலும், முதியவர்களுக்கு ஏற்படுவது போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பது இதுவரை நடந்த மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
    கர்ப்பிணிகளை கொரோனா கூடுதலாக தாக்கும் என்று கூறுவது சரியா? இல்லை! ஆனால் சராசரி பெண்களுக்கு ஏற்படுவது போன்ற கொரோனா பாதிப்பு கர்ப்பிணிகளுக்கும் உண்டு. கர்ப்பிணிகளை கொரோனா பாதித்தாலும், முதியவர்களுக்கு ஏற்படுவது போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பது இதுவரை நடந்த மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

    கொரோனா பாதித்த கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்களுக்கு மிதமான அறிகுறிகளே தென்பட்டிருக்கின்றன. ஆனால் கர்ப்பிணிகள் 7-ம் மாதத்திற்கு பின்பு மிக கவனமாக இருக்கவேண்டும். அப்போது கொரோனா தாக்கினால் அதன் பாதிப்பு ஒருவேளை அதிகமாக இருக்கலாம். அதனால் 7-ம் மாதத்திற்கு பின்பு கர்ப்பிணிகள் உடல் நலனில் மிகுந்த அக்கறைகாட்டவேண்டும்.

    கர்ப்பிணிகள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். மாஸ்க் அணிவதிலும், சோப்பிட்டு கைகளை கழுவுவதிலும் மிகுந்த அக்கறை செலுத்துவது அவசியம். பயணங்களை தவிர்த்திடுவது நல்லது. கட்டாயம் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்றால், சொந்த வாகனங்களை பயன்படுத்தவேண்டும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், உறவினர்கள் வந்து பார்ப்பதையும் தவிர்த்திடலாம்.

    அந்தந்த காலகட்டங்களில் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். டாக்டரை சந்திப்பதை தள்ளிப்போடுவது ஆபத்தை உருவாக்கும். லேசான உடல் உபாதைகள் இருந்தால் டாக்டரை போனில் அழைத்து ஆலோசனை பெற்றால் போதுமானது.

    கொரோனா அறிகுறிகள் இருப்பதாக உணர்ந்தால் முன்பின் யோசிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக டாக்டரை சந்திக்க செல்லவேண்டாம். முதலில் உங்கள் மகப்பேறு டாக்டருக்கு தகவலைத் தெரிவியுங்கள். அவர் உங்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை ஏற்பாடுகளை செய்த பின்பு அங்கு செல்லுங்கள். ஆனால் இதில் காலதாமதமும் ஏற்பட்டுவிடக்கூடாது.

    பயணங்கள் செய்திருந்தாலோ, உடன் இருந்தவர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ சுகாதார அலுவலர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொன்னால், அதை முழுமையாக ஏற்று தனிமையில் இருங்கள். உங்களோடு சேர்ந்து உங்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை யையும் பாதுகாக்கவேண்டியது இருக்கிறது. அதனால் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் போன்றவை எடுக்கும் சூழ்நிலை ஏற்படும்போது நீங்கள் கர்ப்பிணி என்பதை முதலிலே கூறிவிடுங்கள். வயிற்றில் இருக்கும் சிசுவின் பாதுகாப்பிற்கு இது மிக அவசியம்.

    தாயை கொரோனா தாக்கினால் அது அவரது வயிற்றுக்குழந்தையையும் பாதிக்கும் என்பதற்கோ, சிசுவின் வளர்ச்சியை தடுக்கும் என்பதற்கோ இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா தாக்கினால் கருச்சிதைவு ஏற்படும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. பிரசவ நேரத்தில் தாய் கொரோனாவால் பாதித்திருந்தால், வைரஸ் தாய் மூலம் குழந்தையை தாக்கலாம். ஆனாலும் இதுவரை உள்ள மருத்துவ ஆய்வுத் தகவல்கள்படி, பாதுகாப்பு முறைகளை சரியாக கடைப்பிடித்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதில்லை என்றே தெரியவந்திருக்கிறது. அதே நேரத்தில் ஒருசிலருக்கு மாதம் முழுமை அடையும் முன்பே குழந்தை பிறந்திருக்கிறது. சிசேரியனும் தேவைப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

    சமச்சீரான சத்துணவுகளை உண்பது, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, மன மகிழ்ச்சியை பேணுவது போன்றவைகளில் கர்ப்பிணிகள் கவனம் செலுத்தவேண்டும். தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். வைட்டமின், கால்சியம் மாத்திரைகளையும் டாக்டரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்.

    பெண்கள் புகட்டும் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு கொரானோ பரவும் என்று சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் தாய்- குழந்தை இரண்டு பேருக்கும் இடையே தாய்ப்பால் புகட்டுவது மூலம் நெருக்கமான உடல்தொடர்பு ஏற்படுகிறது. தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பால்புகட்டும்போது குழந்தையுடன் உடல்ரீதியான தொடர்பு ஏற்படுவதால், குழந்தைக்கு அது பரவக்கூடும். அதனால் முன்எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும். தாய்ப்பாலில் பெருமளவு நோய் எதிர்ப்புசக்தி இருந்தாலும், தாய் தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டால் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தாலே போதுமானது.

    தாய்க்கு இருமலோ, தும்மலோ இருக்கும்போது குழந்தையை சற்று விலக்கிவைப்பது நல்லது. குழந்தையை தொடுவதற்கு முன்பும், பால் புட்டி- பிரெஸ்ட் பம்ப் போன்றவைகளை தொடுவதற்கு முன்பும் சோப்பிட்டு நன்றாக கைகளை கழுவிக்கொள்ளவேண்டும். 
    குடும்பத்தில் கணவனோ, மனைவியோ ஒருவர் இன்னொருவர் மீது அதிகாரம் செலுத்தினால், அந்த வீட்டில் இருந்து பாசம் படியிறங்கிசென்றுவிடும்.
    அதிக சக்தி நிறைந்தது அன்பான வார்த்தைகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அன்பின் சிறப்புகளை பற்றி மணிக்கணக்கில் பேசுபவர்கள்கூட தங்கள் சொந்த வாழ்க்கையில் பல தருணங்களில் கட்டளையிட்டு காரியம் சாதிப்பவர்களாகவே இருக்கிறார்கள். பொதுவாக பலரும் சிறுவயதில் இருந்தே கட்டளையிடுவதற்கு பழகிக்கொள்கிறார்கள். வேலைக்காரர்கள் முதல் வீட்டில் உள்ளவர்கள் வரை அனைவரிடமும் கட்டளையிட்டால்தான் காரியம் நடக்கும் என்ற எண்ணம் அவர்கள் அடிமனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது.

    இப்படியே அவர்களிடம் வளர்ந்து வரும் அந்த பழக்கம் திருமணமாவதற்கு முன்பு வரை பெரிய அளவில் குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தாது. அப்போது அவர்களுக்கு கட்டளையிடுதலின் வீரியமும் புரியாது. திருமணத்திற்கு பின்புதான் கட்டளையிடுதல் குடும்பத்தில் பெரும் களேபரத்தை உருவாக்கும். கணவன்-மனைவி இருவருமே கட்டளையிடும் பழக்கத்தை கைவிட வேண்டும். கட்டளைக்கு பதில் கனிவாகப் பேச திருமணமான புதிதில் இருந்தே அவர்கள் முன்வரவேண்டும்.

    ‘நான் இன்று சீக்கிரமாக அலுவலகத்திற்கு செல்லவேண்டும். இன்னும் அரை மணி நேரத்தில் எனக்கு காலை உணவை தயார் செய்’ என்று காலைநேரத்தில் கட்டளையிடும் கணவன்மார்களில் பெரும்பாலானவர்களுக்கு தோசை சுடுவதற்குகூட தெரியாது என்பது, அவர்களது மனைவிமார்கள் மட்டுமே அறிந்த ரகசியமாகும். ‘இத்தனை வயதாகியும் உனக்கு சட்னிகூட தயார் செய்யத் தெரியலை. அதை சுவையாக தயார் செய்ய கற்றுக்கொள்’ என்று சொல்வதுகூட கட்டளைதொனிதான். அப்படி கட்டளையிடும் பெரும்பாலான கணவன்மார்களுக்கு சட்னியில் என்னவெல்லாம் சேர்க்கப்படுகிறது என்பதுகூட தெரியாது.

    மனைவியிடம் எந்த விஷயத்தையும் கட்டளைபோட்டு கற்பிக்க முன் வரக்கூடாது அநாகரிகமாக விமர்சனம் செய்யவும் கூடாது. அதுபோல் மிரட்டுவதையும் தவிர்க்கவேண்டும். ‘மிரட்டினால்தான் காரியம் நடக்கும். அன்பாக சொன்னால் தனது கருத்துக்கு யாரும் தலைவணங்க மாட்டார்கள்’ என்று பலரும் கருதுகிறார்கள். அந்த எண்ணம் தவறானது. அன்பாக பேசுவதில்தான் உண்மை இருக்கும். மிரட்டும்போது அன்பின் இடத்தை அதிகாரம் கைப்பற்றிக்கொள்ளும். குடும்பத்தில் கணவனோ, மனைவியோ ஒருவர் இன்னொருவர் மீது அதிகாரம் செலுத்தினால், அந்த வீட்டில் இருந்து பாசம் படியிறங்கிசென்றுவிடும். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், அதிகாரம் செலுத்தும் தம்பதியரிடையே வளர்ந்து வரும் குழந்தைகளும் அதைதான் பின்பற்றுவார்கள். சிறுவயதில் இருந்தே அவர்களும் அதிகாரத்தை நிலைநாட்டுபவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கும் அன்பின் மாண்பு தெரியாமல் போய்விடும்.

    ‘திருமணம் முடிந்ததும் தங்கள் சுதந்திரம் பறிபோய்விட்டதாக’ புலம்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இப்படி புலம்புவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாத அவர்களில் பெரும்பாலானவர்கள், நினைத்த நேரத்தில் வெளியே செல்வதையும்-கண்டபடி பணத்தை செலவுசெய்வதையும்-இஷ்டத்துக்கு சில காரியங்களை செய்து முடிப்பதையும்தான் அவர்கள் சுதந்திரம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நினைத்த உடனே எங்கேயாவது கிளம்பிச் சென்றுவிடுவது, கண்டநேரத்துக்கு வீடு திரும்புவது போன்ற பழக்கங்கள் கல்யாணத்துக்கு முன்பு இருந்திருக்கலாம். கல்யாணத்துக்குப் பிறகு இருவருக்கும் ஒத்துப்போகிற வாழ்க்கைக்கு இருவருமே இறங்கிவர வேண்டும். சுதந்திரம் என்ற வார்த்தையை தூக்கி தூரவைத்துக்கொண்டு, விட்டுக்கொடுத்தல் என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

    திருமணத்திற்கு பிறகு சுதந்திரம் பறிபோய்விட்டதாக ஒருவர் கூறுகிறார் என்றால், அவர் திருமணத்திற்கு முன்பு மனம்போன போக்கில் வாழ்ந்திருக்கிறார் என்று அர்த்தமாகிவிடும். திருமணத்திற்கு பிறகும் அதுபோல் வாழநினைப்பது சரியான வாழ்க்கை அல்ல. அவர்கள் முறையான வாழ்க்கை என்கிற கட்டுக்குள் திரும்பி வந்துவிட்டால், வாழ்க்கை இனிக்கும். அதுவே குடும்பத்திற்கும் நலம் பயக்கும். வாழ்க்கை இனிக்க, வசந்தம் வீச கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் மதிப்பதும், மரியாதை செலுத்துவதும் அவசியமாகும்.
    சமைக்கும்போது காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருட்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வெளியேறிவிடுவதை தவிர்க்கவேண்டும். எப்படி தெரியுமா?
    சமைக்கும்போது காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருட்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வெளியேறிவிடுவதை தவிர்க்கவேண்டும். எப்படி தெரியுமா?

    * சமைப்பதற்கு முன்பு அரிசி, பருப்பு போன்றவைகளை நீரில் ஊறவைக்கவேண்டும். கடைசியாக அவைகளை அலசும் நீரை வீணாக்கக்கூடாது. அவற்றை ஏதாவதொரு வழியில் சமையலுக்கு மீண்டும் பயன்படுத்தலாம். அதன் மூலம் ஊறவைக்கும்போது வீணாகும் ஊட்டச்சத்தை பாதுகாக்க முடியும். அரிசி ஊறவைத்த தண்ணீரை கிரேவிகளில் சேர்ப்பது நல்லது.

    * பருப்பை பிரஷர் குக்கரில் வேகவையுங்கள். அது சமையல் நேரத்தை குறைக்க உதவும். சமைப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் பருப்பை நீரில் ஊறவைத்தால், எளிதில் வெந்துவிடும். எரிபொருள் செலவு குறையும்.

    * பருப்புடன் பேக்கிங் சோடா சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அது பருப்பில் உள்ள வைட்டமின் பி உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்களை விரையமாக்கிவிடும்.

    * பழங்கள் மற்றும் காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு கழுவ வேண்டும். அவற்றை வெட்டிய பிறகு கழுவினால் சத்துக்கள் வெளியேறிவிடும்.

    * கூடுமானவரை காய்கறிகளின் வெளிப்புற தோல் பகுதியை நீக்காமல் வேகவைப்பது நல்லது. அப்படி செய்வது காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை கிடைக்கச்செய்யும்.

    * காய்கறிகள் மற்றும் இறைச்சியை அதிக வெப்பநிலையில் விரைவாக வேகவைத்துவிடுவது நல்லது. அவ்வாறு செய்தால் சுவையும், சத்தும் கிடைக்கும்.

    * பச்சை இலை காய்கறிகளை சமைக்கும்போது முதல் ஐந்து நிமிடங்கள் பாத்திரத்தை திறந்துவைக்க வேண்டும். அதன் மூலம் சுவையும், நிறமும் பாதுகாக்கப்படும்.

    * சமைக்கும்போதுதான் காய்கறிகளை நறுக்க வேண்டும். முன்கூட்டியே காய்கறிகளை நறுக்கி பிரிட்ஜுக்குள் வைப்பதை தவிர்த்திடலாம். அதிக நேரம் நறுக்கிவைத்துவிட்டு சமைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிவிடும். அதுபோல் பழங் களையும் சாப்பிடும்போதுதான் வெட்ட வேண்டும். துண்டுகளாக நறுக்கிய பழங்களை பதப்படுத்தி சாப்பிடுவதும் நல்லதல்ல.

    * காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்குவதையும் தவிர்க்க வேண்டும். சிறிய துண்டுகளாக வெட்டுவதன் மூலம் அதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் வெளியேறக்கூடும். ஊட்டச்சத்துக்களையும் இழக்க நேரிடும்.
    பெண்களின் நெற்றியில் சுருக்கம் இருந்தால் அது பளிச்சென தெரியும். நெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம்.
    பெண்களின் நெற்றியில் சுருக்கம் இருந்தால் அது பளிச்சென தெரியும். முக அழகையும் அது கெடுக்கும். வயிற்றுக்கு அழுத்தம் கொடுத்தபடி தலையணையில் முகம் பதித்து தூங்குபவர்களுக்கு மற்றவர்களை விட நெற்றியில் சுருக்கங்கள் அதிகம் தோன்றும். முகம் தலையணையில் அழுத்தமாக பதியும்போதும் சுருக்கங்கள் ஏற்படக்கூடும். 

    இது தவிர மன அழுத்தம், கவலை, நீர்ச்சத்து குறைபாடு, சூரியன் அல்லது புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்பு, ஹார்மோன் மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்றவையும் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன. நெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்!

    * ஒரு கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ், ஒரு டீஸ்பூன் பாதாம் விழுது, ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு சாறு, அரை டீஸ்பூன் கோதுமை எண்ணெய் போன்றவைகளை சேர்க்கவும். அதனை நன்றாக கலந்து நெற்றியில் பூசி, அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம்.

    * ஒரு வாழைப் பழத்தை நன்றாக பிசைந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் முல்தானி மெட்டி சேர்க்கவும். பின்பு இரண்டு டீஸ்பூன் பால், 5 துளிகள் தேன் கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். அதனை நெற்றியில் தடவிவிட்டு கால் மணி நேரம் கழித்து கழுவிவிடலாம்.

    * எண்ணெய் மசாஜ் செய்வதும் நெற்றியில் உள்ள சுருக்கங்களை போக்க உதவும். ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய், அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 4 சொட்டு கோதுமை எண்ணெய் ஆகியவற்றை கலந்து நெற்றியில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் நன்றாக உறிஞ்சப்படும் வரை மசாஜ் செய்துவிட்டு தூங்க செல்லலாம்.

    * உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதும் சுருக்கத்தை தடுக்க உதவும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும்.
    வெள்ளரிக்காய் பச்சடி ஒரு மெல்லிய புளிப்பு சுவை கொண்ட அருமையான உணவு வகையாகும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெள்ளரிக்காய் - 2
    துருவிய தேங்காய் - 1 கப் 
    எண்ணெய் - 2 தேக்கரண்டி 
    சீரகம் - 1 தேக்கரண்டி 
    கடுகு - 1 தேக்கரண்டி 
    கறிவேப்பிலை - தேவையான அளவு 
    பச்சை மிளகாய் - 6
    பெருங்காயம் - தேவையான அளவு 
    உப்பு - தேவையான அளவு 

    செய்முறை

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெள்ளரிக்காயை துருவிக்கொள்ளவும்.

    துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு பேன் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

    துருவிய வெள்ளரிக்காய் மற்றும் அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    இதில் ஏற்கனவே தாளித்து வைத்திருக்கும் பொருட்களை சேர்த்து கலக்கவும்.

    சப்பாத்தி அல்லது சாதத்துடன் இந்த கலவையை பரிமாறலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    கர்ப்பகாலத்தில் வாயிலிருந்து வரக்கூடிய துர்நாற்றம் பொதுவானது. உடலில் உண்டாகும் மாற்றத்தால் இது நிகழ்கிறது. இதற்கு பொதுவான காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.
    கர்ப்பகால மசக்கையில் கர்ப்பிணிகள் வாந்தி எடுப்பது பொதுவானது. காலை நோய் மற்றூம் குமட்டலுடன் வாந்தியெடுத்தல் பிரச்சனையை கொண்டிருக்கிறார்கள். இதனால் வாந்தி எடுக்கும் போது அமில சூழல் உண்டாகிறது. இந்த நேரத்தில் புளிப்பு மிகுந்த அமிலம் வாயின்னுள் வருவதால் பல் அரிப்பு உண்டாகலாம்.

    இது பற்களின் இடையில் நுழைந்து தேங்கி அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. இதை தவிர்க்க வாந்தி எடுக்கும் போதெல்லாம் வாய் கொப்புளிப்பது அவசியம். இதன் மூலம் அமிலம் வெளியேற்றப்படுகிறது.

    கர்ப்பகாலத்தில் வயிற்றீல் வளரும் கருவுக்கு கால்சியம் நிறைவாக கிடைக்க வேண்டும். இது தாயிடமிருந்துதான் பெறப்படுகீறது. கால்சியம் பற்றாக்குறை இருக்கும் கர்ப்பிணி போதுமான சத்தை குழந்தைக்கு வழங்காத போது வயிற்றில் வளரும் கருவுக்கு தேவையான கால்சியத்தை கர்ப்பிணியின் எலும்பு மற்றும் கால்சியம் இருக்கும் இடத்திலிருந்து உறிஞ்சுகொள்கிறது.

    அப்போது தாயின் ரத்தம் மற்றும் எலும்புகள் பற்களிலிருந்து கால்சியம் வெளியேறூகிறது. இது பற்களை பலவீனப்படுத்துகிறது. இதனால் பற்களுக்கு இடையில் துவாரங்கள் உண்டாவதும் சிதைவதும் பற்களின் துர்நாற்றத்தை அதிகரிக்க செய்கிறது.

    கர்ப்பிணி பெண் அதிகமாக வாந்தி எடுப்பதால் உடலில் நீரிழப்பு உண்டாகிறது. மேலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துகுறையக்கூடும். அதனால் தான் கர்ப்பிணிகள் அதிகமாக நீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நீர்ச்சத்து குறைபாடு இருக்கும் பொது வாயில் வறட்சி உண்டாகலாம்.

    இது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அதிகரித்து வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் உணவுக்கு பிறகு சுத்தமான நீரில் வாய் கொப்புளிப்பதும் பற்களில் உள்ள உணவை வெளியேற்ற உதவும்.

    கர்ப்பிணிகள் கருவுற்ற முதல் மூன்று மாதங்கள் உணவின் மீது வெறுப்பை கொண்டிருப்பார்கள் என்றாலும் அடிக்கடி வாந்தி எடுப்பது நீரிழப்பு போன்ற நேரங்களில் பசி உணர்வை அதிகரிப்பார்காள். அப்போது அதிகமாக சிற்றூண்டி வகைகளை தேடுவார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் அப்போது அவர்களது வாயிலிருந்து மேலும் துர்நாற்றம் வீசக்கூடும். அதிலும் மோசமான உணவு பழக்கங்கள்நிச்சயம் வாய் துர்நாற்றத்தை உண்டாக்க செய்யும்.

    கர்ப்பிணிக்கு அதிக உமிழ்நீர் சுரப்பது போலவே சிலருக்கு உமிழ்நீர் சுரப்பு குறைவாக இருக்கும். இது வாயை உலர செய்து செரிமானத்தை தாமதப்படுத்தி துர்நாற்றத்தை உண்டாக்க கூடும். 

    கர்ப்பகாலத்தில் மோசமான உணவுகள் போன்று சில ஆரோக்கியமான உணவுகளும் வலுவான மணம் கொண்டவை. இவையும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்க கூடும். குறிப்பாக பூண்டு, வெங்காயம் போன்றவை வலுவான மணம் கொண்டவை என்றாலும் இதை பச்சயாக அரை வேக்காட்டில் சாலட்டில் சேர்த்து சாப்பிடும் போது ஏற்கனவே இருகக் கூடிய வாய் துர்நாற்றத்தை பன்மடங்கு அதிகரிக்க செய்யும்.

    இவை தவிர கெட்ட வாடையுடன் மூச்சு இருப்பது சுவாசக்குழாய்களில் நோய்த்தொற்றுகளுக்கான அறிகுறியாக இருக்கலாம். காது, மூக்கு, தொண்டை நோய்த்தொற்றுகள், நீரிழிவு, கல்லீரல், இரைப்பை, குடல் நோய்கள், நாளமில்லா சுரப்பி நோய்கள், வளர்சிதை மாற்ற கோளாறூகள் போன்றவை கூட கெட்ட வாடையோடு கூடிய மூச்சுக்கான காரணங்களாக இருக்கலாம்.

    இயன்றவரை கர்ப்பகாலத்தில் உணவில் கவனம் செலுத்துவது போன்று வாய் சுகாதாரம், பல் சிதைவு, பல் அழற்சி , ஈறு அழற்சி போன்ற பிரச்சனைகள் உண்டாகாமல் தடுத்துவிடுவது நல்லது. கர்ப்பகாலத்தில் பல் சுத்தம் மிக மிக அவசியம்.
    பேர குழந்தைகளின் மீது அன்பை செலுத்தும் அதே நேரத்தில், தாத்தா-பாட்டிகள் தேவையான கண்டிப்பையும் காட்டினால்தான் குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்தெடுக்க முடியும்.
    தாத்தா, பாட்டிகளின் அருகாமை தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அந்த பழைய தலைமுறையினரின் பாதுகாப்பும், பராமரிப்பும் தங்களுக்கு அவசியம் என்பதை குழந்தைகளும் புரிந்துகொண்டிருக்கத்தான் செய்கிறார்கள். தாத்தா-பாட்டிகள் குழந்தைகளை வழிநடத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். சில குழந்தைகள் பெற்றோரை ஏமாற்றவும், திசைதிருப்பவும் தங்கள் தாத்தா-பாட்டிகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள். 

    ‘நான் விளையாடச் சென்றதையோ, கடைகளுக்கு சென்று உணவுப் பொருட்கள் வாங்கி சாப்பிட்டதையோ அப்பா, அம்மாவிடம் சொல்லக்கூடாது. சொன்னால் நான் உங்கள் இருவரிடமும் பேசவே மாட்டேன்’ என்று உணர்ச்சிபூர்வமாக மிரட்டவும் செய்கிறார்கள். அதற்கெல்லாம் தாத்தா-பாட்டிகள் செவிசாய்த்துவிடக்கூடாது. அவர்கள் அன்பை செலுத்தும் அதே நேரத்தில், தேவையான கண்டிப்பையும் காட்டினால்தான் குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்தெடுக்க முடியும்.

    பேரன்-பேத்திகளை வழிநடத்தும் விஷயத்தில் தாத்தா-பாட்டிகள் கடைப்பிடிக்கவேண்டிய புதிய அணுகுமுறைகள்:

    முதுமையடைந்துவிடும் தாத்தா-பாட்டிகள் மீண்டும் இளமைக்கு திரும்ப பேரன்-பேத்திகள் காரணமாக இருப்பார்கள். அவர்களோடு பொழுதுபோக்குவது, விளையாடுவது, வெளி இடங்களுக்கு செல்வது போன்றவை முதியோர்களை மனதளவில் இளமைக்கு திரும்ப வழிவகை செய்யும். குழந்தைகளுக்குதக்கபடி அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு, அவர்களிடம் நண்பர்கள் போன்று பழக முன்வரவேண்டும். பெற்றோர்களிடம் சொல்லத் தயங்கும் விஷயங்களைகூட தாத்தா பாட்டியிடம் சொல்லலாம் என்ற எண்ணம் வரும் அளவுக்கு குழந்தைகளிடம் நடந்துகொள்ளவேண்டும். குழந்தைகளாக இருக்கும்போது மட்டுமல்ல, அவர்கள் பெரியவர்களான பின்பும் அத்தகைய சிறந்த உறவை மேற்கொள்ளும் அளவுக்கு தாத்தா- பாட்டிகள் நம்பிக்கைக்குரியவர்களாகத் திகழவேண்டும்.

    தாத்தா-பாட்டிகளுக்கு பழைய கால அனுபவங்கள் நிறைய இருக்கும். ஆனால் அவர்கள் வாழ்ந்தகாலம் வேறு. அதனால் அவர்களது அனுபவங்கள் மட்டுமே சிறந்தது என்று கருதாமல் தாத்தா-பாட்டிகள் காலத்திற்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்வது மிக அவசியம். காலத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் தக்கபடி அவர்கள் மாறினால் மட்டுமே பேரன்-பேத்திகளுடனான உறவை சிறப்பாக பேணமுடியும். இன்றைய கால மாற்றத்தையும், இன்று குழந்தைகள் வளர்ந்துவரும் சூழ்நிலைகளையும் முதியோர்கள் கவனத்தில்கொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் மகன், மகள்களை வளர்த்த சூழ்நிலை வேறு. தனது பிள்ளைகளை கட்டுப்படுத்தி வளர்த்ததுபோல், தனது பேரன் பேத்திகளை கட்டுப்படுத்தி வளர்க்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். தேவையான சுதந்திரத்தை கொடுத்தால் மட்டுமே சிறுவர்-சிறுமியர்களிடம் இணக்கமாக செயல்படமுடியும். சிறுவர்- சிறுமியர்களை புரிந்துகொண்டு செயல்பட்டால் மட்டுமே அவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க முடியும்.

    மனித சுபாவங்கள் வித்தியாசமானவை. சில தம்பதிகள் தாங்கள் பெற்றோராக இருந்த காலகட்டத்தில் குழந்தைகளை கவனிக்காமல் எப்போதும் வேலை வேலை என்று சுழன்றிருப்பார்கள். அதனால் ‘குழந்தைகளோடு இருந்து அவர்களை வளர்த்து அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்காமல் விட்டுவிட்டோமே’ என்ற ஏக்கம் அவர்களிடம் இருந்துகொண்டிருக்கும். அந்த பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணமாகிவிட்ட நிலையில் தாத்தா பாட்டியாகும் அவர்கள், பழைய குறைகளை போக்கும் விதத்தில் பேரன் பேத்திகளை அருகில் இருந்து வளர்த்து, அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

    அப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால் அவர்கள் அளவுக்கு மீறிய அன்பை வெளிப்படுத்தி பேரன் பேத்திகளை சோம்பேறிகளாகவோ, பொறுப்பற்றவர்களாகவோ வளர்த்துவிடக்கூடாது. அதுபோல் தனது குழந்தைகளை அதிக கண்டிப்புடன் வளர்த்த பெற்றோரும் தனது பேரக்குழந்தைகளுக்கு அதிக அன்பை கொடுத்து வளர்க்க விரும்புகிறார்கள். அது நல்ல பழக்கம் இல்லை. அன்புக்கும் அளவுகோல் அவசியம். குழந்தைகளுக்கு அன்பும் சுதந்திரமும் கொடுத்து வளர்ப்பதுபோல், அவசியம் ஏற்படும்போது தவறுகளை சுட்டிக்காட்டி லேசான தண்டனைகளை கொடுத்தும் திருத்தவேண்டும்.

    சிலர் ராணுவ கட்டுப்பாட்டோடு வளர்க்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் பிற்காலத்தில் தாத்தா பாட்டியானதும் அதே கட்டுப்பாடுகளை தங்கள் பேரன் பேத்திகளிடமும் திணிக்கப்பார்ப்பார்கள். அதில் அடக்குமுறையும், கட்டுப்பாடும் மட்டுமே இருக்கும். அன்பு இருக்காது. இப்படி வளர்க்கப்படுபவர்களிடம் குழந்தைப் பருவத்தில் பெரிய பிரச்சினை எதுவும் தோன்றாது. ஆனால் அவர்கள் இளமைப் பருவத்தை எட்டும்போது மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகுவார்கள். மற்றவர்களிடம் அவர்களால் இயல்பாக பழக முடியாது. எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வார்கள். வன்முறை குணமும் உருவாகலாம். ராணுவ கட்டுப்பாடு போன்ற முறைகளில் வளர்ந்த முதியோர்கள் தனது அடுத்தடுத்த தலைமுறையும் அதுபோல் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. காலத்திற்கு ஏற்றபடி முதியோர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும்.

    சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளை திருத்தும் விதத்தில் அவர்களுக்கு தண்டனை கொடுக்க முன்வருவார்கள். அப்போது அந்த குழந்தைகள் தாத்தா-பாட்டியின் பின்னால் போய் ஒளிந்துகொள்ளும். அந்த தருணத்தில் முதியோர்கள் குழந்தைகளுக்கு ஆதரவாகப் பேசினால், அவர்கள் செய்யும் தவறுக்கு ஆதரவளித்ததுபோல் ஆகிவிடும். சில முதியோர்கள் ஒரு படி மேலே சென்று, ‘உன் மகன் செய்த இந்த தவறுக்கே இப்படி குதிக்கிறாயே. இதைவிட எத்தனையோ பெரிய தவறுகளை எல்லாம் நீ செய்திருக்கிறாயே..!’ என்று கூறி வக்கலாத்து வாங்கி, குழந்தை செய்ய தவறுகளை நியாயப்படுத்தி, மகனையே மட்டம்தட்டிவிடுவார்கள். இது தவிர்க்கப்படவேண்டியது. இப்படிப்பட்ட தாத்தா பாட்டிகளால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, அந்த குடும்பத்தின் கட்டுறுதியும் சிதைக்கப்பட்டுவிடும்.

    நவீன காலத்திற்கு ஏற்றபடி தாத்தா-பாட்டிகள் தங்கள் விஞ்ஞான அறிவையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். இப்போது குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். சமூக வலைத்தள செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். அவைகளை பற்றிய அறிவை ஓரளவாவது தாத்தா பாட்டிகள் பெற்றிருக்கவேண்டும். பெற்றிருந்தால் மட்டுமே இந்த காலத்து குழந்தைகளை அவர்களால் பாதுகாக்கவும், பராமரிக்கவும் முடியும்.
    கண்களுக்கு எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லை. அதனால் கண்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ...
    சூரியனிடம் இருந்து வெளிப்படும் அதிக வெப்பம் சருமத்திற்கு மட்டுமல்ல கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். சூரிய ஒளிக் கதிர்கள் கண்களின் மேற்பரப்பில் படும்போது எரிச்சல் உண்டாகும். தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது ‘போட்டோகெராடிடிஸ்’ எனப்படும் நோய் பாதிப்பு உண்டாகும். குறிப்பாக கண் இமைகள், கார்னியா மற்றும் கண்ணின் முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும். 

    இதுபற்றி கண் நிபுணர் மஹிபால் சிங் சச்தேவ் கூறுகையில், ‘‘வெப்பத்தின் வெளிப்பாடு அதிகரிக்கும்போது கண் இமைகள் மற்றும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். சூரியனால் சருமத்தை விட கண்கள்தான் அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும். சருமம் இயற்கையாகவே புற ஊதாக்கதிர்வீச்சுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. மெலனின் எனும் நிறமி அதற்கு உதவுகிறது. அதுபோல் கண்களுக்கு எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லை. அதனால் கண்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது’’ என்கிறார்.

    கண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    * புற ஊதாக்கதிர்களிடம் இருந்து கண்களை பாதுகாப்பதற்கு சன் கிளாஸ் அணிந்துகொண்டு வெளியே செல்வது நல்லது. அதுபோல் கண்கள், கழுத்து பகுதியை மறைக்கும் விதமாக அகலமாக தொப்பியை அணிந்து கொள்வதும் பாதுகாப்பானது.

    * சன் கிளாஸ் கண்களுக்கு மிக நெருக்கமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிலிருக்கும் லென்ஸ்கள் பல கோணங்களில் இருந்து கண்களை பாதுகாக்க உதவும்.

    * பச்சை, சிவப்பு நிறங்களை கொண்ட சன்கிளாஸ்கள் அணிவது நல்லது. அதில் இருக்கும் இருள் தன்மை கொண்ட லென்ஸ்கள் புற ஊதாக்கதிர் களிடம் இருந்து பாதுகாப்பு வழங்கும்.

    * வீட்டின் ஜன்னல்கள், கார் கதவுகள் போன்றவற்றில் புற ஊதாக்கதிர் வீச்சை தடுக்கும் பிலிம்களை ஒட்டுவதும் நல்லது. அதுவும் கண்களுக்கு பாதுகாப்பு தரும்.
    நீங்கள் நேரடி உறவில் ஈடுபடும் போது சில விதிகளை பின்பற்றுவது உங்களுக்கு நன்மை அளிக்கும். இது உங்க உறவை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைக்க உதவி செய்யும்.
    உங்கள் எதிர்பார்ப்புகளையும் வாக்குறுதிகளையும் பற்றி விவாதிக்கவும், இது எதிர்காலத்தில் திருமணத்திற்கு வழிவகுக்குமா இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்கவும். இது உங்க இருவருக்கிடையே ஒரு தெளிவை ஏற்படுத்தும். நீங்கள் இருவரும் உறவில் சிக்கித் தவிப்பதை இதன் மூலம் தடுக்கலாம்.

    இப்பொழுது நீங்கள் இருவரும் இணைந்து ஒரு வீட்டை நடத்தி வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எனவே அதை நிர்வகிக்க நிதிப் பொறுப்புகளை ஏற்க ஒரு திட்டத்தை வரைபடமாக்கி சாத்தியமான செலவுகள் மற்றும் சேமிப்புகள் பற்றி விவாதிக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் அனைத்து நிதி விளைவுகளையும் கண்காணிக்க முடியும். பிறகு எதிர்காலத்திற்கு என்று சிறந்த திட்டமிடுபவர்களாகவும் இருங்கள்.

    வீட்டில் வேலைகளை உங்கள் இருவருக்குள் சமமாக பிரித்து கொள்ளலாம். நீங்கள் வீட்டை துடையுங்கள், நான் பாத்திரம் கழுவுகிறேன் என்று பொறுப்புகளை பிரித்துக் கொள்ளுங்கள். வீட்டு வேலைகள் மற்றும் கடமைகளை அவர்கள் மட்டுமே செய்கிறார்கள் என்று ஒருவர் உணரக்கூடாது. எனவே வீட்டு பொறுப்புகளை இருவரும் பிரித்து செய்வது உங்களுக்கு நன்மை அளிக்கும். மற்ற நபர் சுத்தமாகவும் சோம்பலாக இருந்தால் நீங்கள் இருவரும் சமரசம் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படி வேலைகளைப் பிரித்து செய்யும் போது உங்களுக்கான நேரம் கிடைக்கும்.

    ஆரம்ப நாட்களில், உங்க உறவு மலர்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கலாம். ஆனால் காலப்போக்கில், வாதங்கள், சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் உயரும்.ஒவ்வொரு சண்டையையும் முதிர்ச்சியுடனும் அமைதியாகவும் கையாள கற்றுக் கொள்ளுங்கள் . ஒரு சண்டைக்குப் பிறகு அவசரமாக உடனே வெளியேற வேண்டாம். எப்போதும் ஒன்றாக இருக்கத் தேர்ந்தெடுப்பது நல்லது. அவர்கள் கூறும் வார்த்தைகள் உண்மையில் இதயத்தைத் துளைக்கலாம் மற்றும் தற்செயலாக ஒரு பிணைப்பை அழிக்கக்கூடும்.

    தம்பதிகள் ஒன்றாக இருக்க வேண்டிய கால அளவை தீர்மானிக்க வேண்டும். இது நீண்ட காலமாகிவிட்டால், அவர்களில் ஒருவர் திருமணத்திற்கான முடிவு ஏன் இன்னும் வரவில்லை என்று எதிர்பார்க்கவும் யோசிக்கவும் வைத்து விடும். திருமணமான தம்பதியர் என்ற அடையாளம் இல்லாமல் இந்த சமூகத்தில் வாழ முடியாது. எனவே சமூக பேச்சுகளையும், துன்புறுத்தும் சமுதாயத்தையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள்.

    ஒன்றாக வாழும் போது உங்களுக்குள் நெருக்கம் இருக்கலாம். எனவே எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள். பாதுகாப்பு விஷயங்களை கையாளுங்கள். ஏனெனில் தேவையற்ற கர்ப்பம் என்பது உங்களுக்கு நிறைய சிக்கல்களை தர வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் உறுதியாக இருந்தால் அந்த பிரச்சனை உங்களுக்கு வராது.

    உங்க உறவுக்கு தடையில்லாத நட்பு, தீர்ப்பு இல்லாத சமூகத்தை தேர்வு செய்ய முயற்சி செய்யுங்கள்.
    புளி சாறு இதயத்திற்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இது கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
    பெரும்பாலான இந்தியர்கள் புளிப்பு சுவையை விரும்புகிறார்கள். இதனால்  இது நாடு முழுவதும் பல சமையலறைகளில் கிடைக்கிறது. இந்தியா கலாச்சார ரீதியாக தெளிவானது மற்றும் வித்தியாசமானது என்றாலும், நாட்டின் நீளம் மற்றும் அகலம் முழுவதும் உணவு ஆர்வலர்களை ஒன்றிணைக்க அறியப்பட்ட சில விஷயங்களில் புளி ஒன்றாகும்.

    இது இந்தியில் ‘இம்லி’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் சுவையை விட, புளி பல ஆரோக்கிய நன்மைகளால் விரும்பப்படுகிறது. இது ஏற்கனவே உங்கள் சமையலறையின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால், இதனை உடனடியாக உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில காரணங்கள் இங்கே உள்ளன. மேலும் புளி அதன் சாறு வடிவில் உட்கொள்ள வேண்டும். 
     
    * இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. எனவே, செரிமான அமைப்பு பிரச்சினைகள் உள்ளவர்கள் அதை உட்கொள்ள வேண்டும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு, செரிமானம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அஜீரணம், மலச்சிக்கல், பிடிப்புகள் மற்றும் / அல்லது வீக்கத்திற்கு, புளி சாறு லேசான டையூரிடிக் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இது உங்களுக்கு உதவும்..

    * சிறிது எடை குறைக்க விரும்புவோருக்கு புளி சாறு ஏற்றது. முன்னர் குறிப்பிட்டபடி, இது லேசான டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும். நார்ச்சத்து நிறைந்த, புளி உங்களை சில மணிநேரம் முழுதாக உணர வைக்கும்.  மேலும் உங்கள் உடலை  உள்ளே இருந்து சுத்தம் செய்ய கூட உதவும்.
     
    * புளி சாறு சருமத்திற்கும் நல்லது என்று நம்பப்படுகிறது. வெளிப்புறமாக நாம் பலவற்றைப் பயன்படுத்தலாம். சருமத்தை கவனித்து ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுப் பொருட்களுடன் உணவளிக்காவிட்டால், அது விரும்பிய பலனைத் தராது. எனவே, இந்த சாறு நுகர்வு அவசியம். இது வைட்டமின் சி நிரம்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது உங்கள் சருமத்தின் அமைப்பை மேம்படுத்தும்.

    * இந்த சாறு இதயத்திற்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இது கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
    உங்கள் உணவில் இதனை  சேர்க்க நீங்கள் விரும்பினால், முதலில் உங்கள் மருத்துவரை அணுகவும். ஏனெனில் அவர்கள் உங்கள் மருத்துவ வரலாற்றை கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் உங்களுக்கு சிறந்த வழிகாட்ட முடியும்.
    தாய் அதிக நேரம் தூங்குவது குழந்தையை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக தூங்குவது குழந்தையின் உடல் நலத்தை பாதிக்கும் என்கிறார்கள் மகப்பேறியியல் மருத்துவர்கள்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் இரவில் தூக்கத்தை இழக்கிறார்கள். நல்ல இரவு தூக்கம் என்பது அவர்களுக்கு கஷ்டமான விஷயமாக உள்ளது. இந்த கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தை குறைந்தது 7-8 மணி நேரம் வரையாவது தூங்க வேண்டும். பெரும்பாலும் முன்கூட்டிய குழந்தை பிறப்பு, வளர்ச்சி கட்டுப்பாடுகள் மற்றும் பல போன்ற மோசமான கர்ப்ப விளைவுகளுடன் சரியான ஓய்வு பெறாமல் இருப்பதும் தொடர்புடையது. இது ஒரு பக்கம் இருக்க தாய் அதிக நேரம் தூங்குவது குழந்தையை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக தூங்குவது குழந்தையின் உடல் நலத்தை பாதிக்கும் என்கிறார்கள் மகப்பேறியியல் மருத்துவர்கள்.

    வளர்ந்து வரும் வயிறு மற்றும் பதட்டம் காரணமாக உடல் ரீதியான அசெளகரியம் கர்ப்பிணிப் பெண்களிடையே தூக்கத்தை சீர்குலைக்க வழிவகுக்கும். இது ஒட்டுமொத்த தூக்க நேரத்தையும் அதிகரிக்கும். இப்படி அதிக தூக்கத்திற்கான வேறு சில பொதுவான காரணங்கள்

    பொதுவாக ஹார்மோன்கள் பெண்களுக்கிடையே தூக்கமின்மை பிரச்சினையை உண்டு பண்ணுகிறது. புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பது மற்றும் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுகளில் வீழ்ச்சி ஆகியவை சோர்வுக்கு வழிவகுக்கும். இதனால் பெண்கள் கர்ப்ப காலத்தில் தூங்க விரும்புகிறார்கள்.

    உணவுக்குழாயின் அடிப்பகுதியில் தளர்வான தசை வளையம் உள்ள பெண்களுக்கு இது ஒரு பொதுவான பிரச்சினையாகும். இது வயிற்றுக்குள் உணவைத் திறக்கும். இது உணவுகள் மற்றும் திரவம் மீண்டும் தொண்டைக்கு வர ஆசிட் ரிஃப்ளக்ஸ் க்கு வழிவகுக்கிறது. குறிப்பாக நீங்கள் படுத்துக் கொள்ளும் போது இது தூக்கத்தை சீர்குலைக்கிறது.

    இதனால் கர்ப்பிணிப் பெண்கள் சுவாசிப்பதில் சிரமத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு முழு இரவு தூக்கத்திற்குப் பிறகும் ஒரு பெண் குறட்டை மற்றும் சோர்வாக உணர்ந்தால், அவளுக்கு ஸ்லீப் மூச்சுத்திணறல் இருக்கலாம்.கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்ததால் அப்படி ஒரு பிரச்சினை உங்களுக்கு இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    தூண்டுதலால் சீர்குலைந்த தூக்கத்தை அனுபவிக்கின்றனர். ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதாலோ அல்லது ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து இல்லாததாலோ இது ஏற்படுகிறது.

    மருத்துவரின் உதவியை கொண்டு வழக்கமான உடல் செயல்பாடுகளில் நீங்கள் ஈடுபடலாம். உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது உங்களை சோர்வடையச் செய்து உங்களுக்கு நல்ல தூக்கத்தை தரும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கர்ப்பகால நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும், மேலும் நீங்கள் நிம்மதியாக தூங்கவும் உதவும்.

    தூக்கம் வராமல் இருக்கலாம். எனவே ஒரு நல்ல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது பலனளிக்கும். ஒரு தூக்க வழக்கத்தை உருவாக்குவது, தூங்குவது மற்றும் ஒரே நேரத்தில் எழுந்திருப்பது உங்களுக்கு நன்றாக தூங்க உதவுகிறது. நீங்கள் தூங்குவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் கேஜெட்களிலிருந்து விலகி இருங்கள்.

    அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக எழுந்திருக்க நேரிடும். இது உங்க தூக்கத்தை சீர்குலைக்கும். எனவே படுப்பதற்கு முன்பே சிறுநீர் கழித்து விட்டு தூங்குங்கள்.

    முதல் மற்றும் மூன்றாவது மாதங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதனால் கூட பல பெண்கள் நிம்மதியாக தூங்க முடியாது.வளர்ந்து வரும் குழந்தை சிறுநீர்ப்பையில் கூடுதல் அழுத்தத்தை கொடுப்பதால் இது நிகழ்கிறது. 
    சர்க்கரை நோய்க்கு உடனடியாக தீர்வு காண வேப்பம் டீயை குடித்து வாருங்கள். சரி வேப்பிலையை கொண்டு எப்படி டீ போடுவது என்பதை பார்ப்போம்.
    தேவையான பொருள்கள்:

    வேப்ப இலை தூள்-1 ஸ்பூன் 
    தண்ணீர்- 1 1/2 கப் 
    இலவங்கப்பட்டை தூள்-1/2 ஸ்பூன் 
    டீ தூள்-1 ஸ்பூன் 

    செய்முறை:

    முதலில் வெப்பங்கொழுந்தை மிக்சியில் தூளாக அரைத்து கொள்ள வேண்டும். 

    பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலை தூள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் ஆகியவை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 

    தேனீராக குடிக்க விரும்புபவர்கள் டீ தூளை தண்ணீரில் சேர்த்துக் கொதித்து வைக்கவும். 

    10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அனைத்து விட வேண்டும். 

    இந்த டீயை தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோயிக்கு உடனடி தீர்வு காணலாம்... 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×