search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்துக்களை இழக்காமல் சமையல் செய்வது எப்படி?
    X
    சத்துக்களை இழக்காமல் சமையல் செய்வது எப்படி?

    சத்துக்களை இழக்காமல் சமையல் செய்வது எப்படி?

    சமைக்கும்போது காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருட்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வெளியேறிவிடுவதை தவிர்க்கவேண்டும். எப்படி தெரியுமா?
    சமைக்கும்போது காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருட்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வெளியேறிவிடுவதை தவிர்க்கவேண்டும். எப்படி தெரியுமா?

    * சமைப்பதற்கு முன்பு அரிசி, பருப்பு போன்றவைகளை நீரில் ஊறவைக்கவேண்டும். கடைசியாக அவைகளை அலசும் நீரை வீணாக்கக்கூடாது. அவற்றை ஏதாவதொரு வழியில் சமையலுக்கு மீண்டும் பயன்படுத்தலாம். அதன் மூலம் ஊறவைக்கும்போது வீணாகும் ஊட்டச்சத்தை பாதுகாக்க முடியும். அரிசி ஊறவைத்த தண்ணீரை கிரேவிகளில் சேர்ப்பது நல்லது.

    * பருப்பை பிரஷர் குக்கரில் வேகவையுங்கள். அது சமையல் நேரத்தை குறைக்க உதவும். சமைப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் பருப்பை நீரில் ஊறவைத்தால், எளிதில் வெந்துவிடும். எரிபொருள் செலவு குறையும்.

    * பருப்புடன் பேக்கிங் சோடா சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அது பருப்பில் உள்ள வைட்டமின் பி உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்களை விரையமாக்கிவிடும்.

    * பழங்கள் மற்றும் காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு கழுவ வேண்டும். அவற்றை வெட்டிய பிறகு கழுவினால் சத்துக்கள் வெளியேறிவிடும்.

    * கூடுமானவரை காய்கறிகளின் வெளிப்புற தோல் பகுதியை நீக்காமல் வேகவைப்பது நல்லது. அப்படி செய்வது காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை கிடைக்கச்செய்யும்.

    * காய்கறிகள் மற்றும் இறைச்சியை அதிக வெப்பநிலையில் விரைவாக வேகவைத்துவிடுவது நல்லது. அவ்வாறு செய்தால் சுவையும், சத்தும் கிடைக்கும்.

    * பச்சை இலை காய்கறிகளை சமைக்கும்போது முதல் ஐந்து நிமிடங்கள் பாத்திரத்தை திறந்துவைக்க வேண்டும். அதன் மூலம் சுவையும், நிறமும் பாதுகாக்கப்படும்.

    * சமைக்கும்போதுதான் காய்கறிகளை நறுக்க வேண்டும். முன்கூட்டியே காய்கறிகளை நறுக்கி பிரிட்ஜுக்குள் வைப்பதை தவிர்த்திடலாம். அதிக நேரம் நறுக்கிவைத்துவிட்டு சமைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிவிடும். அதுபோல் பழங் களையும் சாப்பிடும்போதுதான் வெட்ட வேண்டும். துண்டுகளாக நறுக்கிய பழங்களை பதப்படுத்தி சாப்பிடுவதும் நல்லதல்ல.

    * காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்குவதையும் தவிர்க்க வேண்டும். சிறிய துண்டுகளாக வெட்டுவதன் மூலம் அதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் வெளியேறக்கூடும். ஊட்டச்சத்துக்களையும் இழக்க நேரிடும்.
    Next Story
    ×