என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    இரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால் அதுவே பல்வேறுவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டுவிடும். இரவு நேரத்தில் கூந்தல் பராமரிப்பில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை சரிசெய்யும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
    பெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கூந்தலை அலங்கரிப்பதற்கு காண்பிக்கும் அக்கறையை வீட்டில் இருக்கும்போது காண்பிப்பதில்லை. அதிலும் பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை. இரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால் அதுவே பல்வேறுவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டுவிடும். இரவு நேரத்தில் கூந்தல் பராமரிப்பில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை சரிசெய்யும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.

    * பெண்கள் நிறைய பேர் இரவில் தூங்கும்போது கூந்தலை இறுக்கமாக கட்டிக்கொள்ளும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். அது தவறானது. அப்படி இறுக்கமாக கூந்தலில் கொண்டை போட்டுக்கொள்வது மயிர்கால்களை கடுமையாக பாதிக்கும். கூந்தலின் அடிப்பகுதியில் இருக்கும் வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்காது. அதனால் கூந்தல் முடிகள் பாதிப்புக்குள்ளாகும்.

    * இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கூந்தலை நன்றாக சீவுவதும் நல்லது. அப்படி செய்தால் கூந்தல் முடியில் சிக்கல் விழாமல் இருக்கும். இரவில் தூங்கும்போது சிக்கல்கள் விழுந்தாலும் எளிதில் சரிப்படுத்திவிடலாம். அதைவிடுத்து சிக்கல் முடியுடன் தூங்க சென்றால் அதன் பாதிப்பு அதிகமாகி விடும். அதனால் முடியின் அடர்த்தியும், வலிமையும் குறையும். முடி கொட்டுதல் பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும்.

    * இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பின்னந்தலையில் வியர் வையோ, ஈரப்பதமோ படிந்திருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியமானது. ஏனெனில் அப்படி ஈரப்பதம் இருந்தால் அது மயிர்கால்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பொடுகு தொல்லை, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். இரவில் குளித்தால் கூந்தலை நன்றாக உலரவைத்துவிட்டுத்தான் தூங்க வேண்டும்.

    * இரவு நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்த்து மயிர்கால்களுக்கு மசாஜ் செய்துவிடுவது நல்லது. அதன் மூலம் மயிர்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். மயிர்கால்கள் வலுப்படுவதால் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். இரவில் மசாஜ் செய்துவிட்டு தூங்கினால் காலை யில் எழுந்ததும் தலைக்கு குளித்துவிடுவது நல்லது.

    * தலையணை உறைகளை வாரத்திற்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும். ஏனெனில் தினமும் அதில் தலையை வைத்து படுக்கும்போது அதில் அழுக்குகள் சேர்ந்துவிடும். தலையில் இருக்கும் எண்ணெய்யும் தலையணை உறையில் படிந்து அழுக்குடனும் சேர்ந்துவிடும். அதில் தொடர்ந்து தலைவைத்து படுப்பது முடிக்கு பாதிப்பாகிவிடும்.
    ‘டீன் ஏஜ்’ பெண்கள் ஆர்வம் செலுத்தாமலே இருந்தாலும் அடிப்படையான ஆரோக்கிய பாடங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துதான் ஆகவேண்டும்.
    ‘டீன் ஏஜ்’ பெண்கள் ஆர்வம் செலுத்தாமலே இருந்தாலும் அடிப்படையான ஆரோக்கிய பாடங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துதான் ஆகவேண்டும். சொல்லிக்கொடுப்பதோடு நிறுத்தாமல் அதை அவர்கள் கடைப்பிடிக்கவும் தாய்மார்கள் தொடர்ந்து வற்புறுத்தவேண்டும். அதனை அவர்கள் வாழ்வியல் பாடமாக ஏற்றுக்கொள்ளும் வரை கண்காணிப்பது தாய்மார்களின் பொறுப்பாகும்.

    இன்றைய மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பள்ளிகளில் கழிவறை சுத்தம் இல்லாமல் இருந்தால், அதனை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுகிறார்கள். டாய்லெட் செல்வதற்கு வருத்தப்பட்டு தண்ணீர் பருகுவதையும் தவிர்க்கிறார்கள். காலை முதல் மாலை வரை சிறுநீர் கழிக்காமலே இருந்தால் ‘யூரினரி இன்பெக்‌ஷன்’ தோன்றும். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் பருகுவதும், அடக்கிவைக்காமல் சிறுநீர் கழிப்பதும் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும்.

    மாதவிலக்கு நாட்களில் சுத்தத்தில் அதிக அக்கறை தேவை. தினமும் 3 முதல் 5 பேடுகள் மாற்றவேண்டும். பள்ளியில் வைத்து பேடு மாற்றுவதற்கு தயங்கி காலை முதல் மாலை வரை ஒரே பேடு பயன்படுத்தினால் அது தொற்றுக்கு வழிவகுத்துவிடும்.

    அந்த நாட்களில் சிறுநீர் கழித்ததும் உறுப்பு பகுதியை தண்ணீரால் சுத்தம் செய்வது அவசியம். உறுப்பு பகுதியில் சொறி ஏற்படுவதும், வாடை வீசும் விதத்தில் வெள்ளைப்படுதல் ஏற்படுவதும் தொற்று உருவாகியிருப்பதின் அறிகுறியாகும். எல்லாவிதமான வெள்ளைப்படுதலும் தொற்றின் அறிகுறியல்ல. சினைமுட்டை வெளிப்படும் காலகட்டத்திலும், மாதவிலக்கு தொடங்குவதற்கு முன்பும் இயற்கையாகவே வெள்ளைப்படுதல் உருவாகும். உறுப்பு பகுதியில் சுடுநீரை பயன்படுத்தி கழுவக்கூடாது. அது நல்ல பாக்டீரியாக்களையும் கொன்றுவிடும். அதனால் எப்போதுமே உறுப்பு பகுதியை தண்ணீரால் மட்டுமே கழுவவேண்டும். குளிக்கும்போது மட்டும் வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்தி கழுவலாம். ஆனால் உறுப்பு பகுதியை அடிக்கடி சோப் பயன்படுத்தி கழுவக்கூடாது.

    உள்ளாடைகளை துவைத்து சூரிய ஒளியில் காயவைத்து பயன்படுத்தவேண்டும். தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. டாக்டர் பரிந்துரைக்கும் ‘ஆன்டி பங்கல் கிரீம்’ பூசுவதும், ‘வஜைனல் வாஷ்’ உபயோகிப்பதும் தொற்றை நீக்கும். சிறுநீர் கழிக்கும்போது வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுதல், சிறுநீர் நிறம் மாறுதல், அடிவயிற்றில் வலி ஏற்படுதல் போன்றவை சிறுநீர் தொற்று ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாகும்.

    அதிக அளவில் உடல்பருத்து காணப்படுதல், அதிக ரோம வளர்ச்சி, நெஞ்சுப் பகுதியில் ரோமம் வளருதல், அதிக அளவில் முடி உதிர்தல் போன்றவை இருந்தால், அது ஒருவேளை பி.சி.ஓ.டி. பாதிப்பாக இருக்கலாம். வாழ்க்கை முறை மாற்றங்களால் பெரும்பாலான டீன்ஏஜ் பெண்கள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். மகப்பேறு டாக்டரை சந்தித்து இதற்கான ஆலோசனைகளை பெறவேண்டும்.

    தற்போது குண்டான உடல்வாகுவை கொண்ட பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். துரித உணவுகள், பேக்கரி பலகாரங்கள், கலோரி அதிகமுள்ள பதார்த்தங்களை சாப்பிடுதல் போன்றவைகளால் உடல் குண்டாகிறது. வறுத்த, பொரித்த உணவுகளையும் தவிர்க்கவேண்டும். ஒரு நேரம் உணவே சாப்பிடாமல் இருப்பதும், இன்னொரு தடவை அதிகமாக சாப்பிடுவதும்கூட உடல் குண்டாக காரணமாகிவிடும். பல நிறங்களை கொண்ட பழங்களும், காய்கறிகளும் உணவில் அதிகம் சேர்க்கப்படவேண்டும்.

    வாரத்தில் மூன்று நாட்களாவது டீன்ஏஜ் பெண்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கைப்பந்து, பேட்மிண்டன் போன்ற ஏதாவது ஒரு விளையாட்டிலும் அவர்களை பங்குபெற செய்ய வேண்டும். சிறுமிகளுக்கு 12-வது வயதில் கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது நல்லது. கருப்பை பகுதியோடு தொடர்புடைய புற்றுநோய்கள் எதிர்காலத்தில் உருவாகுவதை இது தடுக்கும்தன்மைகொண்டது. டீன்ஏஜ் பெண்கள் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
    தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.
    உடலில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்வதிலும் புளியின் பங்களிப்பு முக்கியமானது. தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

    தேவையான பொருட்கள்

    புளிச் சாறு - அரை கப்
    நாட்டு சர்க்கரை அல்லது தேன் - தேவையான அளவு
    எலும்பிச்சை துண்டுகள் - 1
    தண்ணீர் - விருப்பத்திற்கு ஏற்ப

    செய்முறை

    புளியங் பழத்தில் கொடைகளை நீங்கி விட்டு புளிச்சாற்றை பிழித்து அதை நாட்டு சர்க்கரை அல்லது தேனோடு கலந்து கொள்ள வேண்டும்.

    தேவையான அளவு குளிர்ந்த நீரை அந்த கரைசலில் சேர்க்க வேண்டும்

    எலுமிச்சை துண்டுகளை அதில் பிழிந்து விட்டு, ஐஸ் க்யூப்களை கலந்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது சத்தான புளி ஜூஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எதிரில் இருப்பவர்கள் எதை பேசினாலும், எப்படி பேசினாலும் அவைகளை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு நமது மனதை சலனப்படுத்தி வேதனைக்கு உள்ளாக்குகிறது.
    நம்மில் பலரும் எதிர்மறையாக ஏதாவது ஒன்று நடந்து முடிந்துவிட்ட பின்பு அதைப்பற்றி அதிகமாக சிந்திக்கிறோம். பேச கூடாத ஏதாவது ஒன்றை ஆத்திரத்தில் பேசிவிட்டு, ‘அப்படி நாம் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கக்கூடாது’ என்றும், பார்க்கக்கூடாத ஒன்றை பார்த்துவிட்டு, ‘அதை பார்த்தது தவறாகிவிட்டதே’ என்றும், கேட்கக்கூடாத செய்தி எதையாவது கேட்டுவிட்டு, அதை நினைத்தும் புலம்பிக்கொண்டிருப்போம்.

    கண்கள் பார்க்கும். காதுகள் கேட்கும். வாய்கள் பேசும். அந்த உறுப்புகளுக்கு தெரியுமா, எது நல்லது எது கெட்டது என்று?

    தெரியாது!

    நாம் தேவையற்றதை பார்க்கக்கூடாது. தேவையற்றதை பேசக்கூடாது. தேவையற்றதை கேட்கக்கூடாது என்றால், நமக்கு புலனடக்கம் தேவை. நம்மிடம் ஐந்து புலன்கள் இருக்கின்றன. நாம் இடும் கட்டளைகளின்படி இயங்கவேண்டிய அந்த புலன்கள் இன்று, சூழ்நிலை என்ற எதிராளியின் வசப்பட்டு நமக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால் எதிரில் இருப்பவர்கள் எதை பேசினாலும், எப்படி பேசினாலும் அவைகளை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு நமது மனதை சலனப்படுத்தி வேதனைக்கு உள்ளாக்குகிறது.

    நாம் வார்த்தைகளால் ஒருவரை கண்டபடி பேசிவிடுகிறோம் என்றால், பேசிய வாய் ஒரு ஜடப் பொருள். ஆனால் அவரை வேதனைப்படுத்திய சக்தி, அந்த வார்த்தைகளில்தான் இருக்கிறது. நாம் பார்க்கும் காட்சியால் மனது சலனப்படுகிறது என்றால், அதை பார்க்கும் கண்களால் அந்த சலனம் உருவாகவில்லை. அதை பார்த்து நமக்குள் உருவாகும் கண்ணோட்டத்தால்தான் அந்த சலனம் உருவாகிறது. தகவல்களை கேட்கும் காதுகளுக்கும் எந்த சக்தியும் இல்லை. அதன் வழியே உள்வாங்கிக்கொள்ளும் தகவல்களுக்குத்தான் நம் எண்ணங்களிலும், நம்பிக்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இருக்கிறது.

    நமது ஐந்து புலன்களும் குதிரைகளாக ஓடிக்கொண்டிருந்தாலும் அவைகளோடு பிணைக்கப்பட்டு கண்களுக்கு தெரியாத கடிவாளங்களாக செயல்படுவது நம் மனமும், புத்தியும்தான். அந்த கடிவாளங்கள்தான் நம் கட்டுப்பாட்டிற்குள்ளும், நம் கைகளுக்குள்ளும் இருக்கவேண்டியவை.

    புலனடக்கத்தின் மூலம் நாம் சூட்சுமமாக செயல்படும் கண்களுக்கு புலப்படாத மனதை அடக்கவேண்டும். நமது மனதிற்கு கண்கள் இல்லாமல் பார்க்கும் சக்தியும், காதுகள் இல்லாமல் கேட்கும் சக்தியும், வாய் இல்லாமல் நினைத்ததை வெளிப்படுத்தும் சக்தியும் இருக்கிறது. ஆனால் அந்த சக்தியை நாம் உணருவதில்லை. மேம்படுத்துவதுமில்லை.

    இந்த இயந்திரமயமான உலகத்தில் அடிக்கடி நாம் சுய கட்டுப்பாட்டை இழந்து விடுகிறோம். ‘தெரியாமல் பேசிவிட்டேன்’ என்பதன் மூலமும், ‘தேவையற்றதை பார்த்துவிட்டேன்’ என்பதன் மூலமும், நம் கட்டுப்பாட்டை மீறி அனைத்தும் நடந்துகொண்டிருப்பதை ஒத்துக்கொள்கிறோம். சிந்தித்து செயல்படுவது என்ற நிலை தலைகீழாக மாறி, செயல்பட்டுவிட்டு சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

    இதை படிக்கும்போது, ‘ஒரு சம்பவம் திடீரென்று நடந்துவிடும் போது சிந்திக்க நேரம் இருக்காதே! உடனடியாக செயல்படவேண்டிய கட்டாயம் அப்போது ஏற்படுமே?’ என்று உங்களுக்குள்ளே ஒரு கேள்வி எழுவது நியாயம்தான்.

    எப்போதும் அமைதி தவழும் குளம் போன்று நிதானத்தோடு இருந்தால் எந்த சம்பவத்தாலும் நம்மை சலனப்படுத்த முடியாது. என்ன நடந்தாலும் நாம் அமைதியாக இருப்போம். அப்போது நாம் சிந்தித்துதான் செயல்படுவோம். சிந்தித்து செயல்படும் பக்குவம் நமக்கு வந்துவிட்டால், அடுத்து சரியாக சிந்திக்கும் தெளிவு வந்துவிடும்.

    தெளிவாக சிந்தித்து தெளிவாக செயல்பட நமக்கு சுய பயிற்சி தேவை. அந்த பயிற்சியை எப்படி செய்யவேண்டும் தெரியுமா?

    ‘அடுத்தவர்களை வலிக்கவைக்கும் வார்த்தைகளை எந்த நேரத்திலும் பயன்படுத்தமாட்டேன்’

    ‘எனக்கு எதிராய் யார் எப்படி நடந்து கொண்டாலும் குரலை உயர்த்தி கோபத்தை வெளிப்படுத்தமாட்டேன்’

    ‘யார் என்ன செய்தாலும் என் கையே நீ கட்டுப்பாட்டில் இரு. நீ ஓங்கக்கூடாது’

    ‘எவ்வளவுதான் அவமானம் சூழ்ந்தாலும் அடுத்தவர்களை அவமானப்படுத்தும் காரியத்தில் இறங்கமாட்டேன்’

    என்று உங் களுக்குள்ளே கூறி, இந்த விஷயங்களை அடி மனதில் ஆழமாக பதித்துவிடவேண்டும்.

    நமது மனதும் ஒரு கம்ப்யூட்டர்தான். அதில் மேற்கண்ட நல்ல விஷயங்களை ‘புரோகிராம்’ போன்று பதித்து விடுங்கள். அப்போது கீபோர்டு போன்ற உங்கள் கண், காது, வாய்க்கு எந்த சக்தியும் இருக்காது. என்ன நடந்தாலும் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் அமைதியான புரோகிராம் தான் வெளிப்படும். அதன் மூலம் உங்கள் செயல்களில் தெளிவு ஏற்படும். நீங் கள் தவறானவைகளை கேட்கவோ, பார்க்கவோ பேசவோ மாட்டீர்கள்!
    குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் பூச்சி இருப்பதாக அர்த்தம். இப்பிரச்சனைகள் இருக்குமெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.
    வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் நீங்கள் உண்ணும் உணவு செரிமான மண்டலத்துக்குள் செல்லாமல் வயிற்று போக்கை ஏற்படுத்தக்கூடும். அத்துடன் வாயு தொல்லை, குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் ஒருவித எரிச்சலும் காணப்படும். நார்ச்சத்து உணவை குழந்தைகளுக்கு தருவதன் மூலம் பிரச்சனையை போக்கலாம். ஒருவேளை நார்ச்சத்து உணவையும் எடுத்துக்கொண்டு இப்பிரச்சனை இருக்குமெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.

    மலவாயில் அரிப்பு ஏற்பட இதனால் இரவில் தூக்கம் கெட்டு தேவையில்லாத களைப்புடன் ஒருவர் காலையில் காணப்படவும் கூடும். குழந்தைகளுக்கு இப்பிரச்சனை பெரிதும் காணப்படுவது வழக்கம். அப்படி என்றால் அவர்கள் வயிற்றில் பூச்சுக்கள் இருக்கிறது என அர்த்தமாகும். வயிற்றில் புழுக்கள் இருந்தால் எவ்வளவு தான் நாம் சத்தான உணவை சாப்பிட்டாலும் அதை உறிஞ்சி ஒருவித சோர்வை உங்கள் குழந்தைகளுக்கு தருகிறது. வாரத்திற்கு ஒரு முறை வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க வேண்டியது அவசியமாகும்.

    பசி எடுக்காமல் இருப்பதோடு, உங்கள் எடையும் குறைய ஆரம்பித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம். அதாவது புழுக்கள் நம் வயிற்றில் அதிகளவில் பெருகி இருக்க அப்போது சாப்பிடும் சாப்பாடு என்பது செரிமான மண்டலத்தை எட்டாது. இதனால் பசி என்பது அற்று உங்கள் குழந்தையின் உடல் காணக்கூடும். புழுக்கள் உடலில் இருந்தால் பற்களை கொறிப்போம். இதற்கு காரணம் உடலில் தேங்கிய வழியும் புழுக்களால் தேவையற்ற மன அழுத்தம் கொண்டு நாம் பற்களை என்ன செய்வதென அறியாது செய்வோம். 

    உங்கள் குழந்தைகள் இரவில் படுக்க செல்லும்போது பற்களை கொறித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம். அதேபோல் உடலில் ஏற்படும் இரத்த சோகை போன்றவை ஏற்பட காரணம், உருளை புழுக்கள் உங்கள் குழந்தைகள் சாப்பிடும் இரும்பு சத்து, வைட்டமின் அடங்கிய உணவை உறிஞ்சுவதாலே ஆகும். உடலில் ஒட்டுண்ணிகள் இருந்தால் சரும அரிப்பு மற்றும் எரிச்சல் கூட சில சமயத்தில் ஏற்படும். இந்த அறிகுறிகளெல்லாம் உங்களுக்கு காணப்படுமாயின் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
    சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் இருவகை தேநீரைப் பற்றியே உடல் தகுதியை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பேசுகின்றனர். அவை பிளாக் டீ மற்றும் கிரீன் டீ என்பவையாகும்.
    களைப்பாகவோ, சோம்பலாகவோ உணரும் நேரங்களில் புத்துணர்ச்சியை அளிக்கும் பானம் தேநீர். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் இருவகை தேநீரைப் பற்றியே உடல் தகுதியை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பேசுகின்றனர். அவை பிளாக் டீ மற்றும் கிரீன் டீ என்பவையாகும். 

    கிரீன் டீ தயாரிப்பில் பறிக்கப்பட்ட இலைகள் சேகரிக்கப்பட்டு, உலர்த்தப்படுகிறது. அதன் பிறகு தட்டில் போடப்பட்டு சூடாக்கப்படுகிறது அல்லது ஆவியில் உலர்த்தப்படுகிறது. இம்முறைகள் மூலம் இலையில் ஆக்ஸிஜன் சேருவது தடுக்கப்பட்டு இலையின் நிறமும் சுவையும் தக்கவைக்கப்படுகிறது. 

    பிளாக் டீ தயாரிக்க தேயிலையானது பறிக்கப்பட்டபின், உலர்த்தப்பட்டு, அரைக்கப்படுகிறது. பல்வேறு வழிமுறைகளால் ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது. இலையிலுள்ள நொதிகள் (என்சைம்) ஆக்ஸிஜனேற்றத்தால் கறுப்பு மற்றும் பழுப்பு நிறம் கிடைக்கிறது. நறுமணம் கூடுகிறது. 

    கிரீன் டீ முற்றிலும் இயற்கையானது. பிளாக் டீ நொதித்தலும் ஆக்ஸிஜனேற்றமும் அடைந்ததாகும். 

    கிரீன் டீயின் நன்மைகள் 

    கிரீன் டீயில் EGCG என்ற ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் உள்ளது. இது இருதய நோய்களை எதிர்த்து செயலாற்றக்கூடியது. கிரீன் டீ உடலிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றி, சருமத்திற்கு பளபளப்பை அளிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை கிரீன் டீ ஊக்குவிப்பதோடு உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. பிளாக் டீயை விட கிரீன் டீயில் அமிலத்தன்மை குறைகிறது. ஒரு கப் காஃபியில் உள்ள காஃபைனின் அளவில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே கிரீன் டீயில் உள்ளது. 

    பிளாக் டீயின் நன்மைகள் 

    பிளாக் டீயில் எல் தியானைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது நாம் செய்பவற்றில் கவனம் செலுத்த உதவுவதோடு இளைப்பாறுதலையும் அளிக்கிறது. மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்களை குறைக்கிறது. பிளாக் டீயில் அமிலத்தன்மை அதிகம். இது இருதயத்தின் ஆரோக்கியத்தை காக்கிறது. இருதயம் மற்றும் இரத்தநாளங்களை பாதுகாக்கும் தியாஃப்ளேவின் என்ற பிளாக் டீ யில் உள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் கொலஸ்ட்ராலின் அளவை தியாஃப்ளேவின் கட்டுப்படுத்துகிறது. ஒரு கப் காஃபியில் உள்ள காஃபைனின் அளவில் மூன்றில் ஒரு பங்கு பிளாக் டீயில் உள்ளது. காஃபைனின் அளவை பொறுத்து எந்த டீ தேவையோ அதை பருகலாம்.. 

    தாம்பத்திய உறவு முடிந்ததும், ஆண் துணை 'குட் நைட்' என்று கூறிவிட்டு புரண்டுபடுத்தால் பெண்கள் அதிகம் ஏமாற்றமடைகிறார்கள்.
    ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாவது உடலுறவின்போதுதான். உடலுறவினை குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளன; அவற்றில் புதிய புதிய உண்மைகள் வெளிவருகின்றன. 

    உடலுறவின்போது மனதுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய எண்டார்பின் வெளிப்படுகிறது. ஆகவே, உடலுறவு இன்பம் மிக்கதாக திகழ்கிறது. தாம்பத்திய உறவு முடிந்ததும், ஆண் துணை 'குட் நைட்' என்று கூறிவிட்டு புரண்டுபடுத்தால் பெண்கள் அதிகம் ஏமாற்றமடைகிறார்கள். பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணர்கிறார்கள். 

    உடலுறவுக்கு முன்பான நேரம், உடலுறவு நிகழும் நேரம் இவற்றை காட்டிலும் உறவு முடிந்த பொழுதையே பெண்கள் முக்கியமானதாக உணர்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். உடலுறவில் உச்சநிலையை அடையும்போது பெண்கள் துணையின்மீது பெரிய நம்பிக்கை கொள்கிறார்கள். 

    பெண்களில் இந்த நம்பிக்கையுணர்வு தோன்றுவதற்கு ஆக்ஸிடாக்சின் என்ற ஹார்மோன் காரணமாகிறது. ஆனால், ஆண்களில் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, ஆக்ஸிடாக்சினை மேற்கொண்டுவிடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆகவே, உடலுறவுக்கு பின்பு ஆண்களின் எதிர்பார்ப்பும், பெண்களின் எதிர்பார்ப்பும் முற்றிலும் வேறுபட்டவையாய் உள்ளன. பெண்கள் உடலுறவை உணர்வுரீதியானதாக கருதுகிறார்கள். 

    உடலுறவை உள்ளம் சார்ந்த அர்ப்பணிப்பு சார்ந்ததாக பெண்கள் கருதுகிறார்கள். ஆகவே, உடலுறவின் பின்பு உரையாடாவிட்டால் அது மனம் சார்ந்த உறவாக அல்லாமல் வெறுமனே உடல் இச்சையை தணிப்பதாக மட்டுமே அவர்களுக்குத் தோன்றுகிறது. பெண்கள் உடலுறவை உணர்வோடு தொடர்புடையதாக நோக்குகிறார்கள். 

    உடலுறவுக்குப் பின் துணைவர் தன்னுடன் நன்றாக பேசவேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு. அவர்கள் நம்பும் விஷயங்கள், அவர்களது விருப்பங்கள், மன அழுத்தத்தை தரக்கூடிய விஷயங்கள் உள்ளிட்டவற்றை குறித்து பேசும் மற்றும் பேசுவதை கவனிக்கக்கூடியவராக துணைவர் இருக்கவேண்டும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பாகும். 

    உடலுறவில் உச்ச இன்பத்தை அடைய தனக்கு உதவும் ஆண், உறவு முடிந்த பின்னர் தன்னுடன் மனம்விட்டு பேசவேண்டும்; தான் மனம் விட்டு பேசுவதை பொறுமையாக கேட்கவேண்டும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு. ஜஸ்ட் 'குட் நைட்' என்று கூறிவிட்டு திரும்பி படுத்தால் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள் என்பதே ஆராய்ச்சியாளர்களின் முடிவாகும்.. 
    பெண்கள் தெளிவான முகத்தையே விரும்புவார்கள். சரி வாங்க காபி குடிப்பதால் என்ன சரும பிரச்சனைகள் உண்டாகிறது என்பதை பார்ப்போம்.
    பெண்கள் தெளிவான முகத்தையே விரும்புவார்கள். ஆனால் இப்பொழுது இருக்கும் வெப்பம், காற்று மாசு ஆகியவற்றால் முகத்தில் பரு, கரும்புள்ளிகள் இடம்பெறுகிறது. சரி வாங்க காபி குடிப்பதால் என்ன சரும பிரச்சனைகள் உண்டாகிறது என்பதை பார்ப்போம். 

    காபினால் முகம் பாதிக்கப்படுமா? ?என்று அனைவரின் மனதில் குழப்பம் இருக்கும். ஆமாங்க அதிக காபி குடித்தால் முகத்தில் பருக்கள் வரும். பெரும்பாலும் ஹார்மோன் சமநிலையில் இல்லையென்றால் முகப்பரு உண்டாகும். இதனை சரி செய்ய அதிக காய்கறிகள், பழங்கள் உண்டாகவேண்டும். 

    அப்பொழுது தான் தெளிவான சருமம் கிடைக்கும். தினமும் குடிக்கும் காபியின் அளவை குறைத்து கொள்ளுங்கள். காபியில் உள்ள வேதி பொருள்கள் மன அழுத்தம் ஏற்படுகின்ற ஹார்மோனை அதிகமாக தூண்டிவிடுவதால் சருமத்தில் முகப்பரு உண்டாகிறது. தோல்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதிக தண்ணீரை குடிக்க வேண்டும். 

    காபியை அதிகமாக குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்போம். இதனால் உடம்பில் உள்ள முழு தண்ணீரும் வெளியேறிவிடும். இதனால் முகப்பரு உண்டாகிறது. எனவே காபி தான் என்று அலட்சியமாய் இல்லாமல் பிடித்த காபியை அளவோடு பருகுங்கள்... 
    அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பொருள்களான ஒன்பது பொருள்களை காலையில் குடிக்கும் டீயில் கலந்து குடித்தால் எந்த நோயும் நம்மை நெருங்காது.
    தேவையான பொருள்:

    இஞ்சி - 1 கப் 
    கிராம்பு, பட்டை - 10 
    அன்னாசிப்பூ -5 
    ஏலக்காய் - 5 கிராம் 
    துளசி - ஒரு கைப்பிடி 
    மிளகு - 5 கிராம் 
    அதிமதுரம் - 2 ஸ்பூன் அளவு 
    அஸ்வகந்தா - 1/4 ஸ்பூன் 

    செய்முறை:

    இஞ்சியை தோல் சீவி தண்ணீரில் நன்றாக அலசி கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 

    பிறகு அதை வெயிலில் தண்ணீர் உலரும் வரை காய வைக்கவும். 

    துளசியை தண்ணீரில் அலசி அதையும் நன்றாக வெயிலில் உலர விட வேண்டும். 

    பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் மிளகு மற்றும் ஏலக்காயை வறுத்து கொள்ளவும். 

    அடுத்து அதில் வெயிலில் உலர்ந்த இஞ்சி, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகிவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். 

    வறுத்த கலவையை ஆறவைத்து மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். 

    பிறகு அரைத்த பொடியில் அதிமதுரம் மற்றும் அஸ்வகந்தா பொடியை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

    இதை தினமும் காலையில் குடிக்கும் தேநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் உடலுக்கு எந்த வித நோயும் அண்டாது. 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தை பருவத்தில் இருந்தே பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்வது பிற்காலத்தில் நல்ல உணவு பழக்கத்தை பின்பற்ற வைக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    குழந்தை பருவத்தில் இருந்தே பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்வது பிற்காலத்தில் நல்ல உணவு பழக்கத்தை பின்பற்ற வைக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் லின் எல்.மூரே கூறுகையில், ‘‘பாலர் பருவத்தில் தினமும் ஒன்றரை கப் பழச்சாறு அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழ ஜூஸ்களை வீட்டிலேயே தயாரித்து உட்கொண்டவர்கள், அரை கப்புக்கும் குறைவாக பருகிய குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இளமைப்பருவத்தில் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். 

    அத்துடன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை பருவத்தில் இருந்தே தினமும் பழச்சாறு பருகிய குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை. அவர்களை எடை அதிகரிப்பு பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடிவதில்லை. எந்தவிதமான பக்கவிளைவையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை. 

    பழங்கள் சாப்பிடுவது, ஆயுட்காலம் முழுவதும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆரம்ப காலங்களில் பழச்சாற்றைத் தவிர்ப்பது உணவு பழக்கவழக்கங்களில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்’’ என்கிறார். 
    எண்ணங்களை தவறவிடாமல், சிந்தனைகளை சிதறவிடாமல் எடுத்துவைக்கும், ஒவ்வொரு அடியும் குழப்ப மற்றது என்று உணர்ந்து எதையும் நல்வழியில் ஏற்றுக்கொண்டு துணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே...!
    அன்று தொடங்கி இன்றும் இவள் மனதில் பல எண்ணங்கள், பல யோசனைகளுடன் அன்றாட வாழ்வை நகர்த்துகிறாள். இவள் பொழுதுகளை கண்காணிக்கவும் யாருமில்லை. கலந்து பேசவும் எவருமில்லை. கஷ்டங்களையே கருவூலமாய் கொண்டு காலங்கள் கடக்கிறாள். இன்றும் கண்கள் கலங்கி நிற்கின்றன. பாறைகளாக நினைக்கும் ஒவ்வொரு கற்களும் சிப்பி கல்லாகியது இவள் வாழ்வில், செதுக்கப்பட்ட ஒவ்வொரு நொடிகளும் வலியும் வேதனையுமே நிறைந்து வழிந்தன.

    பலநாள் தூங்காமல் பெற்ற விடியல் போல் ஒருநாள், வாழ்க்கையை திருப்பும் தருணமாய் அந்த நாள். அன்று அவள் உணர்ந்தாள். தன்மேல் குற்றமும், பிழையும் இருப்பதை எண்ணி அல்ல, தன்னை அறிந்தவர்கள் அவர்களின் உள்ளத்திலே அழுக்காறுகளும், பிழைகளும், தவறான கண்ணோட்டமும் இருக்கிறது என்று.

    அன்று அவள் உறுதிகொண்டாள். தன்னை செதுக்கியவர்கள் முன் சிற்பமாய் திகழ வேண்டும் என்று, அவர்கள் ஏறெடுத்து பார்க்கும் அளவிற்கு உயர வேண்டும் என்று, இனிவரும் நாட்களில் தன் கஷ்டங்களை, கருத்தில் கொண்டு வாழ ஆரம்பித்தாள். ஒவ்வொரு நாளும் தன் வளர்ச்சி எண்ணியே நொடிகளை நகர்த்தினாள். தன் தடங்களை பல இடங்களில் பதிக்க தொடங்கினாள்.

    இன்று, இவள் மலர் மலர்ந்து மணம் வீசுகிறாள். இதற்கு பெற்றோரின் வியர்வை துளிகளே காரணம். நம் வாழ்க்கையை மாற்றும் ஒவ்வொரு வழியும் பல வலிகளிலே அமைந்துள்ளன. அதை காண ஆரம்பித்தாலே எந்த ஊக்குவிப்பும் தேவையில்லை. ஆயிரம் இன்னல்கள் இவள் அறிந்திருந்தாலும், மிளிரும் ஒவ்வொரு தருணத்தையே கணக்கில் கொண்டாள். விழுவது என்றும் வீழ்வதற்கல்ல என்று திறமாய் சிந்திப்பாள். எதுவும் புதிதாக தோன்றாது. இருப்பதை தெளிவாக உணர்ந்தாலே போதுமானது. எண்ணங்களை தவறவிடாமல், சிந்தனைகளை சிதறவிடாமல் எடுத்துவைக்கும், ஒவ்வொரு அடியும் குழப்ப மற்றது என்று உணர்ந்து எதையும் நல்வழியில் ஏற்றுக்கொண்டு துணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே...!
    மனைவியிடம் காதலையும் ஈடுபாட்டையும் அவ்வபோது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தாமல் இருந்தால், காதல் மெல்ல வாடிப் போய்விடும். தினசரி இந்த தகவல்களை உங்கள் துணையிடம் கூறத் தொடங்குங்கள்.
    சில நேரங்களில் ஒரு உறவில், அதன் அடிப்படையாக உள்ள தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை நாம் மறந்து போய்விடுகிறோம். ஒரு உறவைத் தொடங்கி, ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகு, நீங்கள் ரொமான்டிக்கான எல்லா பேச்சுவார்த்தைகளையும் நடத்தி முடித்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள், உங்கள் இருவருக்குமான உறவை மிகவும் சலிப்பூட்டும், தினசரி வழக்கங்களுக்குள் சுருக்கிக் கொள்வீர்கள். 

    இவ்வாறு செய்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால், காதலையும் ஈடுபாட்டையும் அவ்வபோது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தாமல் இருந்தால், காதல் மெல்ல வாடிப் போய்விடும். அதனால், கூடுதலான சிக்கல்கள் ஏற்படக் கூடும். இதனால்தான் தகவல் பரிமாற்றத்திற்கு நீங்கள் கவனமாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சிகளுக்குத் தொடக்கமாக, தினசரி இந்த தகவல்களை உங்கள் துணையிடம் கூறத் தொடங்குங்கள்.

    ஒரு ரொமான்டிக் உறவில் மகிழ்ச்சிக்கு மிகவும் அடிப்படையாக, அஸ்திவாரமாக இருப்பது, கவனமுடன் பேசுவதைக் கேட்பதே ஆகும். அதனால், நீங்கள் அவ்வப்போது, “நீ சொல்வதை நான் (கவனமாக) கேட்கிறேன்”என்று சொல்லுங்கள்.  வேறுவகையில் விளக்கினால், ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்கிறீர்கள், ஒருவர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான வழியாக இது இருக்கும்.

    இந்த சொல், உங்களை நெருக்கமாக்குவதற்கு மிகவும் உதவக்கூடியது. உங்கள் துணைவர் உங்களுக்காக செய்யும் ஒவ்வொரு சிறிய அல்லது பெரிய செயல்களுக்கும் “நன்றி” சொல்ல மறக்காதீர்கள். உங்கள் நன்றியை வெளிப்படையாகக் கூறுவதற்கு போதுமான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். நிறைவான உறவுக்கு ஒருவரையொருவர் அங்கீகரித்து பாராட்டுவது முக்கியமானது.

    'நாம் அதை சரிசெய்து கொள்ளலாம்' இந்தச் சொற்கள், நீங்கள் ஒரு தம்பதியாக சேர்ந்து இருக்கிறீர்கள். அப்படியே தொடரப் போகிறீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டும். உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால் நீங்கள் ஒருவரையொருவர் விட்டு விலகி, தனிமையில் சிக்கலை எதிர்கொள்ள விட மாட்டீர்கள் என்று இது தெரிவிக்கிறது. உங்கள் இருவரில் ஒருவர் தவறு செய்தாலும், நீங்கள் சேர்ந்து பணியாற்றி சிக்கலைத் தீர்த்துக் கொள்வீர்கள் என்று இந்த சொற்கள் உறுதிப்படுத்தும்.

    வருத்தம் தெரிவித்தலும் மன்னிப்புக் கோருதலும் நீங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ள தயாராக இருக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறீர்கள். மேலும், பிடிவாதம் சந்தோஷத்தைத் தராது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பதையும் காட்டுகிறது. இந்த எளிமையான; ஆனால் சக்தி வாய்ந்த சொற்கள். இது, பல்வேறு உறவு சிக்கல்களைத் தீர்த்து வைத்திருக்கின்றன.

    இது வெளிப்படையான ஒன்றுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஒரு உறவின் வெளிப் படையான விஷயங்களை நாம் அடிக்கடி மறந்து போய்விடுகிறோம். முடிந்தவரை இப்படி அடிக்கடி சொல்லி வந்தால், உங்களுக்குள் மாயாஜாலம் மறையாமல் இருக்கும். உங்கள் துணைவரை பாராட்டுவது, கொஞ்சம் கிளுகிளுப்பாக பேசுவது போன்றவை எப்போதும் உற்சாகத்தை மீட்டுக் கொண்டு வரும்.

    ×