search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    துணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே...
    X
    துணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே...

    துணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே...

    எண்ணங்களை தவறவிடாமல், சிந்தனைகளை சிதறவிடாமல் எடுத்துவைக்கும், ஒவ்வொரு அடியும் குழப்ப மற்றது என்று உணர்ந்து எதையும் நல்வழியில் ஏற்றுக்கொண்டு துணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே...!
    அன்று தொடங்கி இன்றும் இவள் மனதில் பல எண்ணங்கள், பல யோசனைகளுடன் அன்றாட வாழ்வை நகர்த்துகிறாள். இவள் பொழுதுகளை கண்காணிக்கவும் யாருமில்லை. கலந்து பேசவும் எவருமில்லை. கஷ்டங்களையே கருவூலமாய் கொண்டு காலங்கள் கடக்கிறாள். இன்றும் கண்கள் கலங்கி நிற்கின்றன. பாறைகளாக நினைக்கும் ஒவ்வொரு கற்களும் சிப்பி கல்லாகியது இவள் வாழ்வில், செதுக்கப்பட்ட ஒவ்வொரு நொடிகளும் வலியும் வேதனையுமே நிறைந்து வழிந்தன.

    பலநாள் தூங்காமல் பெற்ற விடியல் போல் ஒருநாள், வாழ்க்கையை திருப்பும் தருணமாய் அந்த நாள். அன்று அவள் உணர்ந்தாள். தன்மேல் குற்றமும், பிழையும் இருப்பதை எண்ணி அல்ல, தன்னை அறிந்தவர்கள் அவர்களின் உள்ளத்திலே அழுக்காறுகளும், பிழைகளும், தவறான கண்ணோட்டமும் இருக்கிறது என்று.

    அன்று அவள் உறுதிகொண்டாள். தன்னை செதுக்கியவர்கள் முன் சிற்பமாய் திகழ வேண்டும் என்று, அவர்கள் ஏறெடுத்து பார்க்கும் அளவிற்கு உயர வேண்டும் என்று, இனிவரும் நாட்களில் தன் கஷ்டங்களை, கருத்தில் கொண்டு வாழ ஆரம்பித்தாள். ஒவ்வொரு நாளும் தன் வளர்ச்சி எண்ணியே நொடிகளை நகர்த்தினாள். தன் தடங்களை பல இடங்களில் பதிக்க தொடங்கினாள்.

    இன்று, இவள் மலர் மலர்ந்து மணம் வீசுகிறாள். இதற்கு பெற்றோரின் வியர்வை துளிகளே காரணம். நம் வாழ்க்கையை மாற்றும் ஒவ்வொரு வழியும் பல வலிகளிலே அமைந்துள்ளன. அதை காண ஆரம்பித்தாலே எந்த ஊக்குவிப்பும் தேவையில்லை. ஆயிரம் இன்னல்கள் இவள் அறிந்திருந்தாலும், மிளிரும் ஒவ்வொரு தருணத்தையே கணக்கில் கொண்டாள். விழுவது என்றும் வீழ்வதற்கல்ல என்று திறமாய் சிந்திப்பாள். எதுவும் புதிதாக தோன்றாது. இருப்பதை தெளிவாக உணர்ந்தாலே போதுமானது. எண்ணங்களை தவறவிடாமல், சிந்தனைகளை சிதறவிடாமல் எடுத்துவைக்கும், ஒவ்வொரு அடியும் குழப்ப மற்றது என்று உணர்ந்து எதையும் நல்வழியில் ஏற்றுக்கொண்டு துணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே...!
    Next Story
    ×