என் மலர்
ஆரோக்கியம்
திருமணத்திற்கு பின் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் புரிந்து கொண்டு, அதில் மாற்றங்களை கொண்டு வந்தால் நிச்சயம் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
தற்போது நிறைய தம்பதியர்களால் கருத்தரிக்கவே முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, உணவுப்பழக்கவழக்கம், அதிகப்படியான வேலைப்பளு என்று பல உள்ளன. அதுமட்டுமின்றி, கருத்தரிக்க முடியாமல் இருப்பதற்கு பெண்கள் தான் காரணமாக சொல்லப்பட்டு வந்தனர். ஆனால் பெண்களை விட ஆண்கள் தான் முக்கிய காரணமாக உள்ளனர். ஆகவே யாராக இருந்தாலும், திருமண வயது நெருங்க ஆரம்பித்தால், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவது மிகவும் நல்லது.
இங்கு திருமணத்திற்கு பின் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் புரிந்து கொண்டு, அதில் மாற்றங்களை கொண்டு வந்தால் நிச்சயம் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
தினமும் சரியாக தூங்காமல் இருந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது குறைந்துவிடும். இப்படி உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருந்தாலும், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். எப்படியெனில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருப்பதால், நோய்த்தொற்றுகள் அதிகம் ஏற்படும். இதனால் இனப்பெருக்க மண்டலமும் பாதிப்படைந்து கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படக்கூடும்.
பெண்கள் அளவுக்கு அதிகமாக அல்லது அளவுக்கு குறைவான எடையுடன் இருந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். எனவே அவ்வப்போது உடல் எடையை பார்ப்பதுடன், அதனைப் பராமரிக்கவும் செய்ய வேண்டும்.
நிறைய ஆய்வுகளில் விந்தணுக்களின் பாதிப்பிற்கும், தொழில்நுட்பத்திற்கும் நிறைய தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எப்படியெனில் பெரும்பாலும் ஆண்கள் தங்களின் மொபைல் போனை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், இனப்பெருக்க உறுப்புகளானது, போனில் இருந்து வெளிவரும் கதிர்களால் பாதிக்கப்படுகிறது. அதேப்போல் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதாலும் பாதிக்கப்படுகிறது.
பிரஷ் செய்த பின்னர் உங்களின் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா? அதுமட்டுமின்றி, உங்களின் ஈறுகள் சிவப்பாகவும், வீங்கியும் உள்ளதா, அப்படியெனில் ஈறுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம். இதனால் ஈறுகளை தாக்கியுள்ள கிருமிகளானது உடலினுள் சென்று, இனப்பெருக்க மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, கருத்தரிப்பதில் பிரச்சனையை ஏற்படுகிறது. எனவே பெண்கள் ஈறுகளில் பிரச்சனை இருந்தால், அதனை சாதாரணமாக எண்ணாமல் மருத்துவரை சந்தித்து போதிய ஆலோசனையைப் பெற்று பின்பற்றுங்கள்.
பிசிஓஎஸ் பிரச்சனை இருந்தால் கருத்தரிப்பதே மிகவும் கடினமாகிவிடும். ஏனெனில் இந்த பிரச்சனை வந்தால், ஓவுலேசனானது சரியாக நடைபெறாமல் போவதோடு, கருப்பையில் கருமுட்டை தங்காமல் போய்விடும். ஆனால் ஆய்வு ஒன்றில் பிசிஓஎஸ் இருந்தால், அதனை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறது. அதற்கு சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை தவறாமல் தினமும் பின்பற்றி வர வேண்டும்.
பொதுவாக நாம் சமைக்கப் பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.
பொதுவாக நாம் சமைக்கப் பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. அது பற்றி பார்ப்போம்:-
வெங்காயம்
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலித்தீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நாம் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
பூண்டு
பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாகப் பிரித்து எடுத்து வைக்கலாம்.
உருளைக் கிழங்கு
உருளைக்கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.
தேன்
உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுவை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
பூசணிக்காய்
பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.
முலாம்பழம்
கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம்பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய முலாம்பழத்தை டப்பாவிலோ பாலித்தீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.
இதேப்போல, அன்னாசி, பிளம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் பொரியல் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 10
இட்லி மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் - தேவையான அளவு
தாளிக்க
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நெல்லிக்காயின் விதைகளை நீக்கி ஆவியில் வேக விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து... வெந்த நெல்லிக்காய் துண்டுகள், உப்பு இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சத்தான நெல்லிக்காய் பொரியல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இன்றைய நவீன சூழலில் ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர் அதிகம். அப்படிப்பட்டவர்கள், தங்கள் குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமானவைகள் என்னவென்று பார்க்கலாம்.
இன்றைய நவீன சூழலில் ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர் அதிகம். அப்படிப்பட்டவர்கள், தங்கள் குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமானவைகள் என்னவென்று பார்க்கலாம். 1. அக்கா, தம்பி என உடன்பிறந்தவர்களுடன் வாழும் குழந்தைகளைவிட, வீட்டில் ஒற்றைக் குழந்தையாக வளர்கிறவர்களுக்கு எண்ணங்களை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ( கூட்டுக்குடும்பத்தில் வாழும் ஒற்றைக் குழந்தையை இதில் சேர்க்கக்கூடாது. அவர்கள் நிலை வேறு.) அவர்கள், சகோதர உறவுகளுடன் இணைந்து வாழ்வதால் ஒற்றைக் குழந்தை என்று நினைக்க வேண்டியதில்லை. அதுவே, மற்றவர்களுடன் தன்னுடைய உணர்வுகளையும், உடமைகளையும் கூட்டுக்குடும்பத்தில் வாழும் ஒற்றைக் குழந்தை பகிர்ந்துகொள்ளப் பழகியிருக்கும். 2. தனிக்குடும்பத்தில் வாழும் ஒற்றைக் குழந்தை அம்மா, அப்பா என அதன் உடமைகள் எதையும் பகிரவேண்டிய அவசியம் இருக்காது. எனவே, அக்குழந்தை பள்ளியிலோ, வெளியிடங்களிலோ பகிர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அந்த குழந்தை மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதனால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும். 3. இரண்டு அல்லது மூன்று வயதில், பெற்றோர், குழந்தை பராமரிப்பாளர் ஆகியோருடன் இதனுடைய கலந்துரையாடுதல் குறைவாகக் காணப்படும். தனியாக வளரும் குழந்தைகளுக்குத்தான் உதவி தேவைப்படும். எனவே பெற்றோர் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். 4. ஒரே குழந்தை என்ற அக்கறையில் டான்ஸ், பாட்டு என பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிடுவதில் தவறு இல்லை. ஆனால், குழந்தைக்குத் தேவையற்ற அழுத்தம் தரக்கூடாது. அதற்குப் பதிலாக அதனுடன் கலந்துரையாட வேண்டும். அந்தந்த வயதுக்கு என்னென்ன தேவையோ, அதை பெற்றோர் முழுமையாக குழந்தைக்கு கிடைக்க செய்ய வேண்டும். 5. ‘ஒரு குழந்தை போதும்’ என முடிவெடுக்கும் பெற்றோர் அக்குழந்தையை மிகவும் கண்டிப்பாக வளர்ப்பார்கள். இது தவறு. இதனால் சமூகத்தில் சேர்ந்து வாழமுடியாமல் அந்தக் குழந்தை எதிர்காலத்தில் கஷ்டப்பட நேரிடும்.
உங்கள் அனைத்து கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக கூடிய மற்றும் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை உடனடியாக மாற்றிக்காட்டும் ஆற்றலும் கொண்ட ஒரு அற்புத பொருள் தான் நெல்லிக்கனி.
உங்கள் அனைத்து கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக கூடிய மற்றும் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை உடனடியாக மாற்றிக்காட்டும் ஆற்றலும் கொண்ட ஒரு அற்புத பொருள் தான் நெல்லிக்கனி. உங்கள் கூந்தலுக்கு எண்ணற்ற விதங்களில் உதவி செய்யக்கூடியதாக இருக்கிறது. தலைமுடி உதிர்வதை தடுப்பது முதல் பொடுகை போக்குவது வரை இந்த கனி உங்களுக்கு உதவி கூந்தலின் மங்கலான தன்மையை மாற்றி பளபளக்க வைக்க கூடியது. எப்படி என் பார்கக்லாம் வாருங்கள்...
* உங்கள் உச்சந்தலையை நெல்லிக்கனி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது தலைமுடியை வலுவாக்கி, முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். இது இரத்த ஓட்டத்தையும் சீராக்கி, உச்சந்தலைக்கு ஊக்கம் அளித்து, தலைமுடி வளர்ச்சியை அதிகமாக்குகிறது. இதன் கிருமி எதிர்ப்பு தன்மை பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பை கட்டுப்படுத்துகிறது. இந்த எண்ணெயை பயன்படுத்தும் முன், கொஞ்சம் சூடாக்கி, வாரம் இரு முறை உச்சந்தலையில் மசாஜ் செய்து கொள்ளவும்.
* தலைமுடியை வலுவாக்கும் மாஸ்க்கான நெல்லிக்கனி- யோகர்ட் மாஸ்க் உங்கள் கூந்தலில் மகத்தான மாற்றங்களை நிகழ்த்தக்கூடியது, இரண்டு ஸ்பூன் நெல்லி பொடியை எடுத்துக்கொண்டு அதில் சூடான நீர் ஊற்றி கலந்து கொள்ளவும். இப்போது ஸ்பூன் தேன் அல்லது 2 ஸ்பூன் யோகர்ட் ஊற்றி நன்றாக கலந்து கூந்தலில் பூசிக்கொள்ளவும். 30 நிமிடம் அப்படியே வைத்திருந்து பின்னர் இதமான நீரில் அலசவும்.
* உங்கள் மயிர்கால்களில் ஆம்லா சாறை பயன்படுத்துவது தலை முடியில் கொலாஜன் அளவை அதிகமாக்கி, தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையை ஐந்து நிமிடம் மசாஜ் செய்து கொள்ளவும். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு கொண்டு மிதமான நீரில் அலசிக்கொள்ளவும்.
* இப்போது முன்கூட்டியே நரை முடி தோன்றுவது சகஜமான பிரச்சனையாக இருக்கிறது. தலைமுடி நரைப்பதை சீராக்கி, மங்கலான கூந்தலை பளபளக்க வைக்கும் ஆற்றல் நெல்லிக்கனிக்கு இருக்கிறது. நெல்லிக்கனி துண்டு மற்றும் அதன் சாற்றை எடுத்துக்கொண்டு, தண்ணிர் கலந்து 30 நிமிடம் கொதிக்க வைக்கும். பின்னர் இந்த கலவையை குளிர வைத்து, அதில் உள்ள திடமான பொருட்களை நீக்கிவிட்டு, மிச்சமுள்ள கலவை கொண்டு கூந்தலை அலசவும்.
சில குறிப்பிட்ட காய்கறிகளில் உள்ள சத்துக்களையும், அந்த காய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும், புத்துணர்வையும் தரக்கூடியது.
வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி, சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.
பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், ரத்த சோகையை சரிப்படுத்தும்.
வெண்டைக்காய்: போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியை தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும்.
கோவக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றை நீக்கும்.
முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
சுண்டைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியை தூண்டும்.
சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.
குடை மிளகாய்: வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.
அவரைக்காய்: புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.
காரட்: உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
விவாகரத்து பெறும் சிக்கலான விஷயத்தை பண விவகாரம் மேலும் மோசமாக்கலாம். விவாகரத்து பற்றி பரிசீலிக்கும் போது, பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில பொதுவான கேள்விகள்:
விவாகரத்து பெறும் சிக்கலான விஷயத்தை பண விவகாரம் மேலும் மோசமாக்கலாம். விவாகரத்து சுமூகமாக அமைய அது இரு தரப்பினருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் விதிகளை அறிந்திருக்க வேண்டும். சட்டப்படி உங்கள் உரிமைகள் எவை மற்றும் அவற்றை கோருவதற்கான வழிகள் பற்றி அறிந்திருந்தால் விவாகரத்து போன்ற சிக்கலான நேரங்களில் பணம் பற்றி பேசுவது எளிதாக அமையும்.
ஒருவர் தனது துணைக்கு சட்டப்படி வழங்க கடமைப்பட்டுள்ள நிதி ஆதரவைத்தான் ஜீவனாம்சம் என்று அழைக்கிறார்கள். பிரிவதற்கு முன்பாகவும் தரப்படலாம் அல்லது பிரிந்த பிறகு பராமரிப்பு செலவுக்காகவும் பெறப்படலாம். இதைப் பெறும் உரிமை என்பது திருமண மற்றும் விவாகரத்து சட்டங்களின் முக்கிய அம்சமாகும். விவாகரத்து பற்றி பரிசீலிக்கும் போது, பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில பொதுவான கேள்விகள்:
வேலைக்கு செல்வதால் ஜீவனாம்சம் பெற முடியாது என சொல்லி யாரேனும் ஏமாற்ற முயன்றால் அவர்கள் முகத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி) 125வது பிரிவை தூக்கி வீசவும். “பணிபுரியும் பெண்ணாக இருப்பது ஒரு பெண் ஜீவனாம்சம் பெறுவதில் இருந்து தகுதி இழக்கச் செய்யவில்லை என இந்தப் பிரிவு தெரிவிக்கிறது.
ஆனால், வேலை மூலம் மட்டுமே தன்னை பராமரித்துக்கொள்ள முடியாது என்றும் தன் சம்பளத்தைவிட கணவரது சம்பளம் அதிகம் என்றும் அவர் நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும். கணவரின் அந்தஸ்திற்கு ஏற்ப மனைவி வாழ வழிசெய்வதே இதன் நோக்கம்.
மதம், சாதி, இனம், படிப்பு ஆகிய பேதங்கள் இல்லாமல் எந்த ஒரு பெண்னும், தன்னை பராமரித்துக்கொள்ள முடியாவிட்டால், அவரது கணவரால் ஆதரவு அளிக்க முடியும் என்றால் அவரிடம் இருந்து பராமரிப்பு கோரலாம். “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சமூக நீதி வழங்குவதே இந்த பிரிவின் முக்கிய நோக்கம். விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்யாவிட்டாலும் கூட நீங்கள் பராமரிப்பு கோர தகுதி உடையவர்.
கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி-யின் பங்கு நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, உங்கள் குழந்தைக்கான வைட்டமின் டி பிரத்யேகமாக தாயின் மூலமாக தான் பெறப்படுகிறது.
பொதுவாகவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி முக்கியமானது என்பது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். எலும்புகளுக்கு வலு சேர்ப்பதோடு மட்டும், வைட்டமின் டி-யின் நன்மைகள் நின்றுவிடாது. கோவிட்-19 தொற்றுநோய் பரவத் தொடங்கிய பின்பு, வைட்டமின் டி குறித்த பரபரப்பான விவாதங்கள் அதிகரித்து விட்டன என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இதுபோன்ற காலங்களில் சூரியனின் வெளிப்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. தொற்றுநோயில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே இருந்ததன் விளைவு தான் இது. வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் பாதிக்கக்கூடும். அது ஒட்டுமொத்த உடலுக்குமே தீங்கு விளைவிக்கும்.
கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் வைட்டமின் டி அளவானது, அவர்களின் குழந்தைகளின் ஐ.க்யூ உடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. கர்ப்பத்தில் அதிக வைட்டமின் டி அளவு இருந்தால், குழந்தைகளின் ஐ.க்யூ மதிப்பும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு தாயின் வைட்டமின் டி சத்து தனது குழந்தைக்கு கருப்பையின் மூலமாக அனுப்பப்படுகிறது. அதனால், மூளை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளை சீராக்க உதவுகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
வைட்டமின்-டி குறைபாடு சியாட்டில் குழந்தைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் குழந்தை சுகாதாரம், நடத்தை மற்றும் மேம்பாட்டுத் துறையின் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானியின் முதன்மை எழுத்தாளரான மெலிசா மெலோஃப் கூறுகையில், வைட்டமின் டி குறைபாடானது, பொது மக்களிடமும் கர்ப்பிணிப் பெண்களிடமும் பொதுவாக காணப்படக்கூடிய ஒரு பிரச்சனை. ஆனால், இந்த பிரச்சனையானது கறுப்பின பெண்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடும். ஏனென்றால், சருமத்தில் உள்ள மெலனின் என்ற நிறமி சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. ஆனால், அந்த நிறமி புற ஊதா கதிர்களையும் சேர்த்து தடுப்பதன் மூலம், சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தியையும் குறைக்கிறது. ஆய்வின் படி, அமெரிக்காவில் கறுப்பின கர்ப்பிணிப் பெண்களின் சுமார் 80 சதவிகிதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
வைட்டமின் டி நிறைந்த உணவுகள் அதிக அளவு வைட்டமின் டி நிறைந்த உணவுகளில் மீன், முட்டை மற்றும் பசுவின் பால் மற்றும் சீரியல்ஸ் போன்றவை அடங்கும். அது தவிர பின்வரும் உணவுகளிலும் வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி-யின் பங்கு நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, உங்கள் குழந்தைக்கான வைட்டமின் டி பிரத்யேகமாக தாயின் மூலமாக தான் பெறப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு காணப்படும் வைட்டமின் டி குறைபாடு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனென்றால், கர்ப்ப காலத்தில் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் எலும்புகள் வேகமாக வளரச்கூடும். கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் டி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு உதவக்கூடிய போதுமான அளவு வைட்டமின் டி-யை உட்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்.
குழந்தைகளுக்கு சத்தான உணவு செய்து கொடுக்க விரும்பினால் மிக்ஸ்டு ஃப்ரூட் சேர்த்து குழிப்பணியாரம் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - அரை கிலோ
வாழைப்பழம் - 2 (பெரியது)
ஸ்ட்ராபெரி - 1 கப்
தேன் - தேவையான அளவு
சப்போட்டா - 1 கப்
மாதுளம் பழம் - 1 கப்
ஆப்பிள் - 1 கப்
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஆப்பிள், மாதுளை மற்றும் சப்போட்டாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவில் தேவையான அளவு நீரை ஊற்றி கரைத்துக்கொள்ளவேண்டும்.
வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து, கரைத்து வைத்துள்ள கோதுமை மாவில் சேர்க்கவேண்டும்.
அடுத்ததாக தேவையான அளவு நாட்டு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக கரைத்து, ஊற வைக்கவேண்டும்.
பின்னர், மவை பணியாரக்க குழிக்குள் ஊற்றுவதற்கு முன்பாக ஏற்கனவே தயார் நிலையில் உள்ள ஆப்பிள், மாதுளை மற்றும் சப்போட்டாவை நறுக்கி தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மாவுடன் சேர்த்து பிசைந்துகெள்ளவேண்டும்.
பணியாரக்குழிக்குள் மாவை ஊற்றி பொன்னிறமாக வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான சத்தான மிக்ஸ்டு ஃப்ரூட் கோதுமை குழிப்பணியாரம் ரெடி.
பணியாரத்தை தேனில் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இது, பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வேட்டி... இது தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது.
வேட்டி... இது தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது. முன்பு தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி கட்டும் பழக்கம் இருந்தது. வேட்டியை ஒடிசாவில் தோத்தி, குஜராத்தில் தோத்தியு, அசாமில் சூரியா, மேற்கு வங்காளத்தில் தூட்டி, கர்நாடகாவில் கச்சே பான்ச்சே, கேரளாவில் முந்த்து, ஆந்திராவில் பன்ச்சா, மராட்டியத்தில் தோத்தர், பஞ்சாப்பில் லாச்சா, உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் மர்தானி என்று அழைக்கிறார்கள். கடல் தாண்டியும் வேட்டி அணியும் கலாசாரம் இலங்கை, வங்காளதேசம், மாலத்தீவு போன்ற நாடுகளிலும் இருந்தது. நாளடைவில், மேற்கத்திய உடை கலாசாரம் மேலோங்கியதால், தமிழகத்தில் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் வேட்டிக்கு மவுசு குறைந்துபோய்விட்டது.
இந்த நிலையில், உலக பாரம்பரியத்தை பறைசாற்றும் ‘யுனெஸ்கோ’ நிறுவனம், கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச வேட்டி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 6-ந்தேதி (இன்று) கொண்டாடப்படும் என்று அறிவித்தது. அதன்பிறகுதான் இன்றைய இளைஞர்களுக்கு வேட்டியின் மகத்துவம் தெரியத்தொடங்கியது. ஆனாலும், வேட்டியை முறையாக கட்டி பழக்கம் இல்லாததால், அதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை. சொல்லப்போனால், அரசியல்வாதிகளின் அடையாளமாக மட்டுமே வேட்டி இருந்து வருகிறது.
இதற்கிடையே, பல வேட்டி தயாரிக்கும் நிறுவனங்கள், இளைஞர்களை கவரும் வகையில், வேட்டியை ஒட்டிக்கொள்ளும் வகையிலும், செல்போன் வைக்க பைகளை வைத்தும், சட்டை நிறத்தில் வேட்டிக்கு ‘பார்டர்’ வைத்தும் விற்பனைக்கு கொண்டுவருகின்றனர். என்றாலும், வேட்டிக்கு எதிர்பார்த்த அளவு மவுசு கிடைக்கவில்லை. இன்றைக்கு சர்வதேச வேட்டி தினம் என்பதால், அலுவலகம் செல்லும் பலர் வேட்டி அணிந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
புதுச்சேரி அரசாங்கம், ஆண் ஊழியர்கள் வேட்டி அணிந்துவர வேண்டுகோள் விடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எது எப்படி என்றாலும், இன்று ஒரு நாள் மட்டும் ஆண்களின் ‘வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக வலைதள பக்கங்களில், வேட்டி அணிந்த படங்கள் அலங்கரிக்கப்போகின்றன. அதன்பிறகு, பழைய நிலையே தொடரும் என்றாலும், வேட்டி அணிவதை ஆண்கள் மிடுக்காக கருத வேண்டும். தமிழனின் அடையாளம் இது என்பதை உணர்ந்து, தொடர்ந்து அணிவதில் ஆர்வம் காட்ட வேண்டும். கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை கைதூக்கிவிட வேண்டும் என்றால், ஆண்கள் வேட்டி அணிவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். பெண்களும் அதற்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்புகள் நிச்சயம் உங்கள் குழந்தைக்கு நன்கு பசி எடுத்துச் சரியான நேரத்திற்கு முழுமையான உணவைச் சாப்பிடச் செய்ய உதவும் என்று நம்புகின்றோம்.
உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது என்பதைப் பற்றி இங்கே உங்களுக்கு சில எளிய குறிப்புகள் நிச்சயம் கிடைக்கும். தற்போது, எப்படி உங்கள் குழந்தையைச் சாப்பிட வைப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
* ஒரே சமயத்தில் அனைத்து உணவையும் கொடுத்து தட்டை நிரப்பிச் சாப்பிட அவனைக் கட்டாயப் படுத்தாமல், சிறிது சிறிதாகத் தந்து அவனைச் சாப்பிட ஊக்கப் படுத்துங்கள். மேலும், ஒரே சமயத்தில் நிறைய உணவைச் சாப்பிடச் சொல்வதை விட, அவ்வப்பாது சிறிது சிறிதாகச் சாப்பிட ஊக்கவிக்கலாம். இதனால் அவனுக்குப் பசியின்மை போய், சரியாகச் சாப்பிடத் தொடங்கி விடுவான்.
* எப்போதும் ஒரே வகையான உணவைச் செய்து தராமல், அவனுக்குச் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில், வகை வகையாக உணவைத் தினமும் சமைத்துக் கொடுங்கள். இந்த விசயம் அவனை விரும்பி சாப்பிட ஊக்கப்படுத்தும்.
* ஒரு குறிப்பிட்ட உணவுப் பட்டியலை மட்டும் பின்பற்றி தினமும் சமைக்காமல், உங்கள் குழந்தைக்காக, அவ்வப்போது புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்து சமைத்து தாருங்கள். இது அவனை நன்கு சாப்பிட ஊக்கவிக்கும். மேலும் அவனே உங்களிடம் ஏதாவது ஒன்றை புதிதாகச் செய்து தரச் சொல்லி சாப்பிடுவான்.
* உங்கள் குழந்தைக்கு பிடிக்கின்றதோ அல்லது பிடிக்கவில்லையோ, அவனை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். இது அவனுக்கு உணவின் மீது வெறுப்பை உண்டாக்கலாம். ஒருவித அன்பான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள்.
* உங்கள் குழந்தைக்குப் புரியும்படி, அவன் சாப்பிடும் உணவு எவ்வளவு சத்துக்கள் நிறைந்தவை, ஆரோக்கியமாக வாழ எவ்வளவு முக்கியமானவை என்று விளக்கிச் சொல்லுங்கள். உணவின் முக்கியத்துவத்தை அவனுக்கு எடுத்துக் கூறுங்கள். இதனால் அவனுக்கு உணவின் மீது மரியாதை வரும். அதனால் அவன் சரியாகச் சாப்பிடுவான்.
* எவை எல்லாம் உங்கள் குழந்தை சாப்பிடும் போது அவனது கவனத்தை ஈர்க்கின்றதோ, அவற்றை எல்லாம் அகற்றி விடுங்கள். அவன் சாப்பிடும் போது, உணவில் மட்டும் கவனம் வைக்கும்படி செய்யுங்கள். இது அவன் சரியாக சாப்பிட உதவும்.
* உங்கள் குழந்தை தினமும் சாப்பிடும் நேரத்திற்குச் சரியாகத் தானாக வந்து அமரும் படி அவனைச் சிறு வயதிலிருந்தே பழக்கப் படுத்துங்கள். இப்படிச் செய்வதால்,அவனுக்கு அந்த நேரம் வந்து விட்டாலே தானாகப் பசி எடுக்கத் தொடங்கி விடும்.அதனால் நன்கு சாப்பிடுவான்.
* உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்கிறான் என்றால், பொதுவாகக் காலை நேரங்களில் சரியாகச் சாப்பிட மாட்டான். இதற்கு நேரமின்மை, அவசரம் என்று பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், எந்த ஒரு சூழலிலும் காலை உணவைத் தவிர்க்காமல் அவனை முழுமையாகச் சாப்பிட வைத்துப் பழக்குங்கள். இது மிக முக்கியமான ஒன்று.
உங்கள் காதல் வாழ்க்கை தோல்வியடையும்போது, அதற்காக உங்கள் மனதைப் பாதிப்படைய விடாதீர்கள். அமைதியாக அதை கடந்து செல்ல என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.
ஒரு ஜோடியாக நீங்கள் பலகாலம் இருந்தால், ஒன்றாகவே எதையும் செய்யப்பழகிவிட்ட உங்களுக்கு, திடீரென்று பிரிவை சந்திக்கும்போது, கை ஒடிந்து போனது போல் உணர்வீர்கள். இருப்பினும், அதை போக்குவதற்கான உத்திகளை கொண்டு, இந்த தனிமையின் வாட்டத்தை போக்கி, மீண்டும் வசந்தத்தை அடைய முடியும்.
நீங்கள் தயாராவதற்கு முன்பே, மற்றவர்களுடன் பழகிக்கொள்ளவோ, டேட்டிங்கிற்கு நாள் குறிக்கவோ வேண்டாம். உங்கள் இழந்த காதலுக்காக சோகம் கொள்ள உங்களை விட்டு செல்ல அனுமதிக்கவும். சொந்தமாக விஷயங்களைச் செய்யப்பழகி, உங்கள் சொந்த துணையை ரசிக்கத் தொடங்குங்கள். உடனடியாக வேறொரு உறவை நாடுவதோ, அல்லது டேட்டிங் செய்ய முற்படுவதோ, எதிர்வினையை தரக்கூடும்.
உங்களை தொந்தரவு படுத்திக் கொண்டிருக்கும் என்பதால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் உங்களது முன்னாள் துணையைப் பற்றி பேசுவதற்கு அழுத்தம் தர வேண்டாம். நீங்கள் இருவரும் ஏன் பிரிந்தீர்கள் என்பதை அறிய பலரும் ஆர்வம் காட்டுவார்கள்; ஆனால் நீங்கள் யாருக்கும் விளக்கம் தர வேண்டியதில்லை. அவரை பற்றி பேச விரும்பவில்லை என்பதை, நீங்கள் அவர்களிடம் தயக்கமின்றி சொல்லிவிடலாம்.
உங்களின் துணை பற்றிய அனைத்து நினைவுகளையும் அகற்றுவதன் மூலம், அதிலிருந்து விடுபட உங்களுக்கு நீங்களே உதவுங்கள். பழைய புகைப்படங்கள், நினைவு பொருட்கள், உடைகள், பரிசுகள் அனைத்தையும் அப்புறப்படுத்துங்கள். இனி உங்களுக்கு அவற்றால் எந்த பயனும் இல்லை. இருப்பினும், இதில் மிக முக்கியமான விஷயம், அனைத்து சோஷியல் மீடியா தகவல் பரிமாற்றங்களையும் தொடர்புகளையும் குறைப்பதாகும். அவரை, எல்லா இடங்களிலும் முடக்கி, இணையம் வாயிலாக உங்களின் தூண்டுதலை கட்டுப்படுத்துங்கள்!
உங்கள் விருப்பத்தை கண்டுபிடித்து, அங்கு செல்வதற்கான பணியை பாருங்கள். வேறு யாரும் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி நீங்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை என்பதால், நீங்கள் விரும்பும் வழியில் வாழுங்கள், உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக அல்லது தைரியமாக தெரிவியுங்கள்!
ஒரு உறவில் இருப்பது என்பது, பெரும்பாலும் நம்மை மாற்றிக் கொள்ளவும், நம்மை நாமே குறைந்த கருத்துக்கூறவும் தூண்டுகிறது. எனவே, உங்களை வளர்த்துக் கொள்ள, இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள். புதிய பொழுதுபோக்குகளை வளர்த்துக் கொள்ளுங்கள், புதிய நண்பர்களை உருவாக்குங்கள், புதிய உலகை ஆராயுங்கள், நீங்கள் மீண்டும் டேட்டிங் போக முடிவு செய்தால், கடந்த கால தோல்விகளில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டதை பயன்படுத்தி, உறுதியாக மீண்டும் அதே தவறுகளைத் தவிர்க்க மறக்காதீர்கள்.






