
காஞ்சி சங்கர மடாதிபதியான சங்கராச்சாரியாரின் அருள்வாக்கு படி இந்த விநாயகர் விக்ரகம் இங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அக்கோவிலே தற்போதிருக்கும் ஈச்சனாரி விநாயகர் கோவிலாக இருக்கிறது.
கோவில் சிறப்புகள்
ஈச்சனாரி விநாயகர் ஆலயம் கோவை மாவட்டத்தின் புகழ் பெற்ற ஒரு கோவிலாக இருக்கிறது. அஸ்வினி முதல் ரேவதி வரை இருக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் 27 விதமான அலங்காரங்கள் செய்து மேற்கொள்ளும் நட்சத்திர அலங்கார பூஜை இக்கோவிலுக்கே உரிய ஒரு விஷேஷ அம்சமாக இருக்கிறது. இந்த திருக்கோவிலின் தினப்படி ஒரு நாளைய பூஜைக்கு தேவைப்படும் பால், சந்தனம், குங்குமம், மலர், பன்னீர் மற்றும் அன்றைய தினத்திற்கான மின் கட்டணத்திற்கான அத்தனை செலவுகளும் கட்டளைதாரர்கள் எனப்படும் பக்தர்களே ஏற்கின்றனர்.
தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எத்தகைய காரியங்களையும் தொடங்கும் முன்பு இந்த விநாயகரை வழிபட்டு தொடங்குவதால், அக்காரியங்கள் தடைகள், தாமதங்களின்றி வெற்றி பெறுவதாக இக்கோவிலுக்கு வந்து பலனடைந்த பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் தங்களின் குழந்தைகள் கல்வி, கலைகளில் உயர்ந்த நிலைகளை அடையவும், தொழில் மற்றும் வியாபாரங்களில் மிகுந்த லாபங்கள் உண்டாகவும், வேலைகளில் பதவி உயர்வு கிடைக்கவும் வேண்டும் பக்தர்களுக்கு அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுவதாகவும் கூறுகினர் இங்கு வழக்கமாக வந்து வழிபடும் பக்தர்கள்.
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சிதறு தேங்காய் உடைத்தல், கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாற்றுதல், பாலபிஷேகம் செய்தல் போன்றவற்றின் மூலம் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கோவில் திருப்பணிகளுக்கான நன்கொடை அளிப்பது, கோவிலில் அன்னதானம் வழங்கல் ஆகியவற்றின் மூலமும் விநாயகருக்கு தங்களின் நன்றியை செலுத்துகின்றனர்.
கோவில் அமைவிடம்
ஈச்சனாரி அருள்மிகு விநாயகர் கோவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஈச்சனாரி என்கிற ஊரில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு செல்ல கோவை நகரிலிருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கிறது.
கோவில் முகவரி
அருள்மிகு விநாயகர் திருக்கோவில்
ஈச்சனாரி
கோயம்புத்தூர் – 641021