என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் திருவோண நட்சத்திரத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் திருவோண நட்சத்திரத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் பட்டாடை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு திருக்கல்யாணத்தையொட்டி பட்டாடையை சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர் சாமி மாட வீதிஉலா நடைபெற்றது. இதில் முன்னாள் பண்ருட்டி நகர சபை தலைவர் பன்னீர்செல்வம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள ரத சப்தமி விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 25 ஆயிரம் தரிசன டிககெட் ஆன்லைனில் வெளிடப்பட்டுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று அதிகாலையில் இருந்து இரவு வரை 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
ரத சப்தமி விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 25 ஆயிரம் தரிசன டிககெட் ஆன்லைனில் வெளிடப்பட்டுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமணத் தடை உள்ளவர்கள், கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர் பூங்குழலியம்மை உடனாய திருநோக்கிய அழகியநாதர் ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், நன்மைகள் நடைபெறும்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை உடனாய திருநோக்கிய அழகியநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள இறைவனை, தன்னுடைய குறைகளை போக்க வேண்டும் என்று இறைவி, துளசி இலைகளால் வழிபட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே திங்கட்கிழமை தோறும் இத்தல ஈசனுக்கு, துளசி இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்கிறார்கள். திருமணத் தடை உள்ளவர்கள், கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், நன்மைகள் நடைபெறும்.

மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலின் அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினர்.
மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலின் அழகர்மலை உச்சியில் நூபுரகங்கை தீர்த்தம் வற்றாத புனித நீரூற்றாக எப்போதும் வழிந்து கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 11 மாத காலமாக இங்கு நீராட தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அரசு வழி காட்டுதல்படி கடந்த 1-ந் தேதி முதல் நீராட பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து நேற்று தை மாத அமாவாசையையொட்டி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நூபுரகங்கையில் புனித நீராடினர். மேலும் சர்வ அலங்காரத்தில் காட்சி தந்த ராக்காயி அம்மனுக்கு விளக்கேற்றி தரிசனம் செய்தனர். தை மாதத்தில் அழகர்மலை தீர்த்தத்தில் நீராடினால் புதுப்பாதை திறக்கும் என்பது பல வருடமாக இருந்து வரும் ஐதீகமாகும்.
மேலும் சோலைமலை முருகன் கோவிலில் உற்சவர், மூலவர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இங்கும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர், பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவிலிலும் நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தந்தார். முன்னதாக விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைச்சல் பெற்ற நெல் உள்ளிட்ட தானிய வகைகளை கள்ளழகர் கோவிலில் காணிக்கையாக செலுத்தினர்.
தை அமாவாசை விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா, உள்துறை அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் தை மாத அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி ஏராளமானோர் அங்கு குவிந்தனர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் இறந்துபோன தனது தந்தை, தாய் மற்றும் அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதனையொட்டி நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து 10 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக சரவண பொய்கை தர்ப்பணம் செய்தவர்களால் களைகட்டியது.

நெல்லை டவுன் உள்ள 5 பெருமாள் கோவில்களில் பெருமாள்களும் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் மகிழ்வண்ணநாதபெருமாள், லட்சுமி நரசிங்கப்பெருமாள் கரியமாணிக்கப் பெருமாள், திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி பெருமாள், கீழதிருவேங்கடநாதபுரம் வரதராஜ பெருமாள் ஆகிய 5 பெருமாள் கோவில்களில் நேற்று காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.
மாலை 6 மணிக்கு 5 பெருமாள்களும் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் டவுன் நான்கு ரத வீதிகளிலும் கருடசேவை வீதிஉலா நடந்தது. இரவு 9 மணிக்கு தேரடி திடலில் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தை அமாவாசையை முன்னிட்டு நேற்று திரளான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் ராஜகோபுரத்தின் முன்பு தேங்காய் உடைத்து, தீபமேற்றி வழிபட்டனர்.
பின்னர், தீபம் ஏற்றும் இடத்தில் நெய் விளக்கேற்றினர். மேலும் மாவிளக்கு எடுத்தும், கரும்புதொட்டிலில் குழந்தைகளை சுமந்தும், முடிகாணிக்கை கொடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
அதைத்தொடர்ந்து அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொருவராக கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர். இணை ஆணையர் அசோக்குமார் அறிவுரையின்படி கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பக்தர்களை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் சமயபுரத்துக்கு வந்திருந்தனர். வழக்கமாக வருகின்ற பக்தர்களின் கூட்டத்தை விட அதிக அளவு பக்தர்கள் வந்ததால் சமயபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு போன்ற குற்றங்களை தடுக்க, சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி அருகே உள்ளது, ஜனதா நகர். இங்கு பிரசித்தி பெற்ற வேம்படி சுடலைமாடன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்
கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி அருகே உள்ளது, ஜனதா நகர். இங்கு பிரசித்தி பெற்ற வேம்படி சுடலைமாடன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் சிவனணைந்த பெருமாள், வேம்படி சுடலை மாடன், பிரம்மசக்தி, பலவேசக்காரன், கருப்பசாமி, சத்திராதி முண்டன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.
இந்தக் கோவிலின் தலவிருட்சம் வேப்ப மரம் ஆகும். வேம்படி சுடலை மாடன், சிவனணைந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தீராத நோய்கள் தீருவதுடன், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் செய்வினை கோளாறு, பேய், பிசாசு தொல்லைகள் நீங்குவதுடன் தொழில் வளமும் பெருகும். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 3-வது செவ்வாய்க்கிழமையன்று கொடை விழா நடத்தப்படுகிறது.
இதையொட்டி சீவலப்பேரி, ஆறுமுகமங்கலம், தாமிரபரணி, திருச்செந்தூர், கோவை வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகிய இடங்களில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு வேம்படி சுடலை மாடனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்படும். இரவு 7 மணியளவில் பேச்சியம்மன், பிரம்ம சக்திக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், கும்மியடித்து பாட்டுப்பாடி முளைப்பாரியை கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.
இதனைதொடர்ந்து சுவாமி வரலாற்றை கூறும் விதமாக கணியான் கூத்து, வில்லிசை ஆகியவை நடத்தப்படும். நள்ளிரவு 12 மணியளவில் வேம்படி சுடலை மாடன், பலவேசக்காரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிடப்படும். அதன்பிறகு சுவாமி வேட்டைக்கு செல்வார். அப்போது வாணவேடிக்கை நடைபெறும். இதையடுத்து பக்தர்களுக்கு சுவாமி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த வேம்படி சுடலை மாடன் கோவிலில், தை மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை (இன்று) வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி பகல் 12 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 8 மணியளவில் வேம்படி சுடலை மாடன், சிவனணைந்த பெருமாள், பலவேசக்காரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடக்கிறது.
திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மாசித்திருவிழா இன்று (வியாழக்கிழமை) பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகிறது.
இதையடுத்து நாளை (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா, 14-ந்தேதி சாமி சாட்டுதல், 16-ந்தேதி திருவிழா கொடியேற்றம், 27-ந்தேதி தசாவதார நிகழ்ச்சியும், அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியிறக்கம், 2-ந்தேதி தெப்ப உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.
இதில் நாளை ஸ்ரீஐயப்பன் பூச்சொரிதல் குழு சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இதையொட்டி கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் காலை 9.30 மணிக்கு ஏகதீப ஜோதி தரிசனம் நடக்கிறது. பின்னர் குழு ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி நாகராஜ் தலைமையில் தெய்வீகவாழை கற்பூர பூஜை, தெய்வரூப ஆகாய தீபதரிசனம், பூஜை நடக்கிறது.
இதையடுத்து 10 நிமிடம் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. அதன்பின்னர் காலை 10 மணிக்கு பூத்தேர் வீதிஉலா தொடங்குகிறது. அப்போது பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பின்னர் கோவிலில் இருந்து தொடங்கும் பூத்தேர் வீதிஉலா மேற்கு ரதவீதி, பென்சனர்தெரு, கோபாலசமுத்திரம் மேற்கு கரை, சத்திரம் தெரு, கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைகிறது. இந்த பூத்தேர் வீதிஉலாவின் போது பக்தர்கள், பூக்களை காணிக்கையாக செலுத்துவார்கள். அந்த பூக்களை கொண்டு கோட்டை மாரியம்மனுக்கு பூஜைகள் நடத்தப்படும். அதன்பின்னர் மாலையில் பூத்தேர் வீதிஉலா தொடங்கி தாலுகா அலுவலக சாலை, பழனி சாலை வழியாக ஸ்ரீதுர்க்கை பூஜை மண்டபத்தை சென்றடைகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனைத்து கோபுர வாசல்கள் வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும். மேலும் பூஜை பொருட்களை கொண்டு செல்ல முடியாததால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதனால் கோவிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். கொரோனா தொற்று காரணமாக, இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி வழியாகவும், கட்டணம் செலுத்தி செல்லும் பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 2 வாசல்கள் வழியாக மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி என்பதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது.
இது குறித்து கேட்டால் கொரோனா காரணமாக அரசு அறிவுறுத்தலின்படி தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். தற்போது அரசு பல்வேறு தளர்வுகளை வெளியிட்டுள்ளதாலும், கொரோனா நோய் தொற்று குறைந்து விட்டதாலும் பல்வேறு கோவில்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கோவில்களில் பூஜை பொருட்கள், அர்ச்சனை பொருட்களை கொண்டு செல்ல பக்தர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை.
ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மட்டும் பூஜைக்கான பொருட்கள் உள்ளிட்ட எவ்வித பொருட்களையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே அரசின் உத்தரவுக்காக காத்திருக்காமல் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தரிசனத்திற்கு அனைத்து கோபுர வாசல்கள் வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை கோவிலுக்குள் கொண்டு செல்லவும், பூஜை நேரங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதி வழங்க வேண்டும்.
மேலும் அனைத்து சன்னதிகளிலும் அர்ச்சனை செய்யவும், தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கோவில் நிர்வாகம் இதற்கான அனுமதியை உடனே வழங்கிட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தை அமாவாசை 10-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தது.
சிகர நிகழ்ச்சியான தை அமாவாசை 10-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு உருகு பலகை தரிசனம், பல்வேறு அபிஷேகங்கள் நடக்கின்றது. மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மதிருக்கோலக்காட்சியும், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும் நடக்கிறது.

கொரோனா ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தை அமாவாசையையொட்டி இன்று கன்னியாகுமரி கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு தை அமாவாசை விழா இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆடி அமாவாசை அன்று கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடைவிதிக்கப்பட்டது. இப்போது கொரோனா ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தை அமாவாசையையொட்டி இன்று கன்னியாகுமரி கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4 மணியிலிருந்து பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடல் பகுதியில் புனித நீராடி ஈரத்துணியுடன் வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த வேத மந்திர ஓதுவார்கள் மற்றும் புரோகிதர்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து வாழை இலையில் பச்சரிசி, எள்ளு ,பூ, தர்ப்பை புல் மற்றும் புனித நீர் ஊற்றி பலிகர்ம பூஜை செய்தார்கள். அதன் பிறகு அந்த பூஜை செய்த பொருட்களை இலையில் வைத்து தலையில் சுமந்து கொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் புனித நீராடினார்கள்.
அதன் பிறகு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்கள். தை அமாவாசையையொட்டி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும்,விஸ்வரூதரிசனமும்நடந்தது.

ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், ‘தில ஹோமம்’ செய்வது மற்றும் தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்தைப் போக்கும். பித்ரு தோஷ பரிகார தலங்கள் எதுவென்று அறிந்து கொள்ளலாம்.

* இந்தியா முழுவதும் பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள ராமேஸ்வரம். இங்குள்ள ராமநாதர் கோவில் பித்ரு வழிபாட்டிற்கு உகந்த தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமபிரான், சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் இது. ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. இதில் அக்னி தீர்த்தம் என்பது, ராமேஸ்வரம் கடலைக் குறிக்கும். இது பித்ரு தோஷத்தை போக்கும் ஆற்றல் கொண்ட தீர்த்தமாக கருதப்படுகிறது.
* ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், ராமேஸ்வரம், திருப்புல்லாணி ஆகிய இடங்களில் ‘தில ஹோமம்’ செய்வது மற்றும் தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்தைப் போக்கும்.
* ‘திலம்’ என்பதற்கு ‘எள்’ என்று பொருள். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் என்ற ஊர் இருக்கிறது. இங்கிருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் சென்றால், ‘திலதர்ப்பணபுரி’ என்ற ஊர் வரும். இங்கு முக்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில்தான் ராமபிரான், தனது தந்தை தசரதர் மற்றும் கழுகு பறவையான ஜடாயு ஆகியோருக்கு தர்ப்பணம் கொடுத்ததாக தல புராணம் சொல்கிறது. இதன் காரணமாகவே இந்த ஊர் ‘திலதர்ப்பணபுரி’ என்றானது. இந்தியாவில் பித்ரு தலங்களாக, ஏழு தலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு மற்றும் திலதர்ப்பணபுரி ஆகும். ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும், திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன.
* வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்.’ இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், ‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை ஆகும். இது ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. இந்த பவானி கூடுதுறையில் கோவில் கொண்டிருப்பவர் சங்கமேஸ்வரர். பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சிறப்புமிக்க தலங்களில் இதுவும் ஒன்று. ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம்.
* வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள சவுந்திரநாயகி உடனாய புஷ்பவனேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. முன் காலத்தில் சுச்சோதி என்ற மன்னன், தன்னுடைய முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். இங்கு இறந்தவர்களின் அஸ்தியைக் கரைத்தால், அவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்குமாம். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று.