என் மலர்
ஆன்மிகம்

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் திருவோண நட்சத்திரத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் திருவோண நட்சத்திரத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் பட்டாடை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு திருக்கல்யாணத்தையொட்டி பட்டாடையை சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர் சாமி மாட வீதிஉலா நடைபெற்றது. இதில் முன்னாள் பண்ருட்டி நகர சபை தலைவர் பன்னீர்செல்வம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story