search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில்
    X
    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில்

    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா இன்று நடக்கிறது

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தை அமாவாசை 10-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தது.

    சிகர நிகழ்ச்சியான தை அமாவாசை 10-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு உருகு பலகை தரிசனம், பல்வேறு அபிஷேகங்கள் நடக்கின்றது. மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மதிருக்கோலக்காட்சியும், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும் நடக்கிறது.
    Next Story
    ×