என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கோவை அருகே வரதய்யங்கார்பாளையம் லட்சுமி கார்டனில் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சிவபதியில் அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தின விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
கோவை அருகே வரதய்யங்கார்பாளையம் லட்சுமி கார்டனில் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சிவபதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் அய்யா வைகுண்டர் அவதார தின விழா கொண்டாடப்படும்.அதன்படி அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தின விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
இதையொட்டி மாலை 4 மணிக்கு சரவணம்பட்டி பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து அய்யா வைகுண்டர் சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு மேள, தாளம் முழங்க அய்யா வழி பக்தர்களின் சூழ சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் அங்கிருந்து பக்தர்கள் அய்யாவின் திருக்கொடியை ஏந்தி, அய்யா சிவசிவ அரகரா என்ற திருமந்திரத்தை உச்சரித்து கொண்டு கோவிலை நோக்கி ஊர்வலமாக வருகிறார்கள். ஊர்வலத்தை கோவை நாடார் சங்க தலைவர் சூலூர் டி.ஆர். சந்திரசேகரன், பொதுச்செயலாளர் ஜி.இருதயராஜா, பொருளாளர் கணேசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் தொடங்கி வைக்கிறார்கள்.தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் 5.30 மணி வரை திருப்பள்ளி எழுச்சி, அய்யாவின் அவதார தின சிறப்பு பணிவிடை, செண்டை வாத்தியம் முழங்க அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருதல், காலை 7 மணிக்கு அன்னதானம், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு வாகன பணிவிடைக்கு பிறகு அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 11-ந் தேதி பூத்த மலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம் உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்று நேற்று காலையில் கொடி இறக்கம் நடந்தது. அதைத்தொடர்ந்து மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10 மணி அளவில் பால், பன்னீர், திருமஞ்சனம் உட்பட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
அதன்பிறகு மாலை 6 மணியளவில் அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி ஊஞ்சலில் அமர்ந்து இருந்தபடி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசி திருவிழாவின் கடைசி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் லட்சுமி அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

தொழிலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைளும் தீர இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த மஹாலக்ஷ்மி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து ஐஸ்வர்யம் பெருகும்.
மஹாலக்ஷ்மி அன்னையை மனதில் நினைத்து அனைத்து வெள்ளிகிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் கற்பூரம் ஏலக்காய் கலந்த காய்ச்சிய பால் மற்றும் வெற்றிலைபாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் போன்றவற்றை அன்னைக்கு படைத்து
“ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ”
என்னும் மந்திரத்தை உச்சரித்தால் தொழில் முன்னேற்றம் அடைந்து வளம் பெருகும்.
இந்த மந்திரத்தின் பொருளானது, "ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள உம்மை வேண்டுகிறேன்" என்பதாகும்.
இவ்வாறு விளக்கேற்றி தீபத்தை வணங்கி பூஜித்து தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொண்டு. தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருப்பு மையை நெற்றியில் இட்டுக் கொண்டால் சிறந்த பலன்களைத் தரும். மற்ற சாதாரண நாட்களில் தம்மால் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து ஐஸ்வர்யம் பெருகும்.

ஈத்தாமொழி அருகே தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை (2-ந்தேதி) காலை 7.35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஈத்தாமொழி அருகே தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை 2-ந்தேதி காலை 7.35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 3-ந்தேதி மாலை 5.50 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. 9-ந்தேதி மாலை 4.30 மணிக்கு காளத்தியப்பர், நடராஜராகவும், ஞான பிரசனாம்பிகை, சிவகாமியம்மாள் தோற்றத்திலும், பரிகார மூர்த்தியாக விளங்கும் ராகு கேது, சனீஸ்வரர் உள்பட நவ கிரகங்கள் வாகனமும் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.
10-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மகாபிரதோஷமும், 11-ந்தேதி மகாசிவராத்திரி விழாவும் நடக்கிறது. பகலில் அன்னதானமும், இரவு 11 மணிக்கு கண்ணப்பநாயனார் பூஜை செய்த தென்காளத்தியப்பருக்கு 14 வகை அபிஷேகமும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பஞ்ச விளக்கு தீபாராதனையும், ராகு-கேது சனீஸ்வர தோஷம் நீங்க 1,008 சிவார்ச்சனையும் நடைபெறும். 12-ந்தேதி மாலை கொடியிறக்கப்பட்டு, கால பைரவர் பூஜையும், அன்னாபிஷேகமும் நடைெ்பறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தென்காளஹஸ்தி திருப்பணி கமிட்டி தலைவர் ஏகாம்பரம் ஐ.ஏ.எஸ். மற்றும் தேவஸ்தான கமிட்டி தலைவர் ஆர்.கணேசன், மோகன்லால் பாபு, சிம்சன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 10-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 10-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
அதையொட்டி இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை புண்யாகவாசனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
கோவிலில் தினமும் நடக்கும் வாகன வீதிஉலா விவரம் வருமாறு:-
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை மீன லக்னத்தில் கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 4-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 5-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா.
6-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம் (மோகினி அவதாரம்), இரவு கருட வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉரலா, 9-ந்தேதி காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, இரவு குதிரை வாகன வீதிஉலா, 10-ந்தேதி மதியம் சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மேற்கண்ட வாகன வீதிஉலா தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் நடக்கிறது. 6-ந்தேதி இரவு 7.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி கருட வாகன வீதிஉலா நடக்கிறது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வருவார்.

எல்லா நாள் பிரதோஷத்தையும் விட சனிப் பிரதோஷம் மிகவும் மகிமையானது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்யும் மகரம், கும்பம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், சனி தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும்.
வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும், திரயோதசி திதி அன்று சூரியன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தையே ‘பிரதோஷ காலம்’ என்பார்கள். இந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடு, பலகோடி மடங்கு புண்ணியத்தைத் தரும். சிவனுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமானது ‘பிரதோஷ விரதம்’ ஆகும். பிரதோஷ நேரத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம், பிரதோஷ நேரம்தான்.
சனிக்கிழமைகளில் சனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எல்லா நாள் பிரதோஷத்தையும் விட சனிப் பிரதோஷம் மிகவும் மகிமையானது. இந்த நாளில் வழிபாடு செய்யும் மகரம், கும்பம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், சனி தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். ஜாதகத்தில் சனி நீச்சம், அஸ்தமனம், வக்ரம் பெற்றவர்களுக்கு தொழில் முடக்கம் தீரும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சை, குலதெய்வ குற்றம் அகலும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்களுக்கு நலம் கிடைக்கும்.
வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை அகலும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கர்ம வினைதாக்கம் குறையும். தீராத நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். முன்னோர்கள் செய்த பாவத்தையும், குலத்திற்கு ஏற்பட்ட சாபத்தையும் போக்கும். முந்தைய ஏழு பிறவிகளில் செய்த பாவம், முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமா பாதகங்கள் அழிந்துவிடும். இழப்புகள், விரயங்கள் ஏற்படாது. மனக்கவலைகள், வறுமை நிலை, இயற்கையால் வரும் பாதிப்பு அறவே நீங்கும். மேலும் பலனை அதிகரிக்க அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த பச்சரிசியை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம் வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை அய்யாவழி மக்கள் வைகுண்டசாமி அவதார தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு 189-வது அவதார தினவிழா வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
அவதார தின விழாவை முன்னிட்டு அன்று காலை நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு நோக்கி அவதார தினவிழா ஊர்வலம் நடைபெறுகிறது.
அவதார தினவிழாவின் முன் தினமான மார்ச் 3-ந்தேதி காலை 6 மணிக்கு திருச்செந்தூர், செந்தூர் பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி ஒன்று புறப்படுகிறது.
இந்த பேரணி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, திசையன்விளை, உடன்குடி, கூடங்குளம், செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. இதேபோல் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வடக்கு நடையில் இருந்து மற்றொரு வாகன பவனி நாகர்கோவிலை நோக்கி புறப்படுகிறது. இந்த வாகன பவனி திருவனந்தபுரம், பாறசாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை அடைகிறது.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியிலிருந்து ஆதலவிளைக்கு மகாதீப ஊர்வலம் நடக்கிறது.
அன்று இரவு 8 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திருமண மண்டபத்தில் மாசி மாநாடு நடக்கிறது. அதில், திருஏடு வாசிப்பு, அய்யாவழி அறிஞர்களின் சமய சொற்பொழிவு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அய்யா வைகுண்டசாமியின் 189-வது அவதார தினவிழா ஊர்வலம் மறுநாள்(4-ந்தேதி) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது. ஊர்வலத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்குகிறார். ஊர்வலமானது நாகர்கோவில், கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமை பதியை சென்றடைகிறது. ஊர்வலம் வரும் வழிகளில் பல மதத்தவர்கள் மற்றும் அய்யாவழி மக்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுக்கின்றனர். அன்றிரவு சாமிதோப்பில் வாகன பவனி, அன்னதானம், அய்யாவழி மாநாடு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
ஊர்வலத்தில் பங்கு கொள்ளும் பக்தர்கள் அனைவரும் கொரோனா தொற்று காரணமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பாலபிரஜாபதி அடிகளார் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருகிற 4-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடப்பதையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருகிற 4-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.
அதையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நேற்று பகல் 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை நடந்தது. கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, கொடிமரம், பலிபீடம், தரை தளம், தூண்கள், மாடங்கள், மண்டப மேற்கூரை மற்றும் துணைச் சன்னதிகள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, சுகந்த திரவியம் பூசப்பட்டது. அத்துடன் பூைஜக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டன.
தூய்மைப் பணி முடிந்ததும் மூலவருக்கு சிறப்புப்பூைஜகள், நைவேத்தியம் நடந்தது. இதையடுத்து மாலை 3 மணியில் இருந்து கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தில் துணை அதிகாரி சுப்பிரமணியம், சூப்பிரண்டு பூபதி, கோவில் ஆய்வாளர் ரெட்டிசேகர், கோவில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு அம்மன் தங்கக்குதிரை வாகனத்தில் வீதிஉலா வருவார்.
நாளை மறுநாள் (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

திருவிசநல்லூரில் சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவரை வழிபாடு செய்தால் சாப, பாப, தோஷங்கள், கடன் தொல்லைகள் குறையும்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் கற்கடேஸ்வரர் கோவில் சாலை சொர்ணபுரியில் இக்கோவில் அமைந்துள்ளது. (யோகிநாதசுவாமி திருக்கோவிலுக்கும் கற்கடேஸ்வரர் கோவிலுக்கும் இடையில்).
சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாடு என்பது வழிபடுபவரின் வாழ்க்கையில் தரித்திரம் தலை காட்டாது காத்து தன, தான்யம், சொர்ணம் முதலிய செல்வ செழிப்பை தரும் சிறப்பு கொண்டது. சொர்ணாகர்ஷன பைரவர், 64 பைரவர்களுக்கும் அப்பாற்பட்டவர். அஷ்ட லட்சுமிகளுக்கும், குபேரருக்கும் நவ நிதிகளையும் கொடுக்கும் அதிபதி. வீட்டு பூஜையறைகளிலும், வழிபாட்டு தலங்களிலும், தங்க, வைர நகை வியாபாரம் செய்யும் கடைகளிலும் வைத்து வழிபட மிகவும் உகந்தவர்.
இப்பெருமானை வீட்டில் வைத்து தினசரி மூன்று வேலைகளிலும் வழிபட்டு வர எந்த கஷ்டங்களும் நெருங்காது. கஷ்டங்களும் வராது. தொட்டது துலங்கும். சொர்ணம் கொழிக்கும். பவுர்ணமி தோறும் முறைப்படி உள்ளன்போடு இப்பெருமானை பூஜித்து மந்திரம் ஜெபித்து வர தலைமுறை தலைமுறையாக நீடித்து நிற்கக்கூடிய நிறை செல்வம் சேரும்.
திங்கட்கிழமை மாலை நேரங்கள், மாத பிரதோஷம், தினசரி பிரதோஷ காலங்கள், பவுர்ணமி மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்கள், திருவாதிரை நட்சத்திர நாட்கள் இவரை வழிபட மிகவும் உகந்த நாட்கள்.
அதேபோல் மாதப்பிறப்பு, பிறந்த நட்சத்திர நாட்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், வியாழக்கிழமை மாலை நேரம், தேய்பிறை அஷ்டமி, அமாவாசை நாட்களிலும், ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷ நட்சத்திர நாட்களிலும் இங்கு வந்து மஹா சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.
இனம் புரியாத பயம் தானாய் விலகும். சாப, பாப, தோஷங்கள், கடன் தொல்லைகள் குறையும். தீயவை அனைத்தும் விலகும். நல்லன அனைத்தும் நடக்கும். சனிக்கிழமைகளில் வழிபட சனிக்கிரக தோஷங்கள் யாவும் விலகும். சொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலை, வில்வ மாலை, சந்தன மாலை, மஞ்சள் செவ்வந்தி மாலை சாற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.

நத்தம் மாரியம்மன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது.
நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காவடி வகையறாக்கள் எடுத்து வரப்படும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது. இதையொட்டி காலையில் கழுகு மரம் ஊன்றப்படுகிறது. பின்னர் மாலையில் கழுகுமரம் ஏறிய பிறகு விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் இறங்குகின்றனர். அன்றிரவு கம்பம், அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்படும்.
மறுநாள் காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நடைபெறுகிறது. அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட வண்ண பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி நகர்வலம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், திருக்கோவில் பூசாரிகளும், விழாக்குழுவினரும் செய்து வருகின்றனர். பொது சுகாதாரம், குடிநீர் வசதிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகத்தினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை, நத்தம் போலீசாரும் செய்து வருகின்றனர்.

புகழ் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 8-வது ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் 8-வது ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறப்பு, நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அம்மனுக்கு அபிஷேகம், ஸ்ரீபலிபூஜை, கலசபூஜை, சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வருதல், அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் அம்மனை தரிசிக்க கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.