search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்யாணவெங்கடேஸ்வரசாமி
    X
    கல்யாணவெங்கடேஸ்வரசாமி

    சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரசாமி கோவிலில் நாளை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

    சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 10-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 10-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

    அதையொட்டி இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை புண்யாகவாசனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    கோவிலில் தினமும் நடக்கும் வாகன வீதிஉலா விவரம் வருமாறு:-

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை மீன லக்னத்தில் கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 4-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 5-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா.

    6-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம் (மோகினி அவதாரம்), இரவு கருட வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉரலா, 9-ந்தேதி காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, இரவு குதிரை வாகன வீதிஉலா, 10-ந்தேதி மதியம் சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட வாகன வீதிஉலா தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் நடக்கிறது. 6-ந்தேதி இரவு 7.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி கருட வாகன வீதிஉலா நடக்கிறது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வருவார்.
    Next Story
    ×