
தொடர்ந்து அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வருதல், அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் அம்மனை தரிசிக்க கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.