என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி மாரியம்மன்
    X
    பழனி மாரியம்மன்

    பழனி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது

    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு அம்மன் தங்கக்குதிரை வாகனத்தில் வீதிஉலா வருவார்.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×